*
இன்னும் கபாலி படம் இன்னும் பார்க்கவில்லை.
ஆனால் நாக்கு தள்ளும் அளவிற்கு ஊடகங்களில் அதைப் பற்றிய விமர்சனங்களை மூச்சு முட்ட வாசித்தாயிற்று.
சீக்கிரம் பார்க்கணும்
ரஞ்சித் அளித்த ஒரு காணொளி பார்த்தேன். மிக நீளமான காணொளி என்றாலும் பார்த்ததும் ரஞ்சித் பிடிச்சிப் போச்சு. மனுஷன் கட் அண்ட் ரைட்டா பேசியிருக்கார். பேச்சில் தன்மையும் ஆழமும் நிறைய இருக்கு. பேசிய விஷயங்கள் சரியாகப் பிடிச்சிது. இந்த காணொளி பார்த்த போது ரஞ்சித் மேல் மரியாதை வந்தது. நல்ல படம் எடுத்தும் மனுஷன் தளும்பவேயில்லை ….”இது தான் நான்” என்று அந்த காணொளியை முடித்தது அருமை …
மகிழ்ச்சி
அந்தக் காலத்தில் நடிக்க வர்ர நடிக நடிகையர்களிடம் ஊடகக்கார்ர்கள் - இப்போது மாதிரி தான் ... நல்ல கேள்வி கேட்கவே மாட்டார்கள் - ஒரு வழக்கமான கேள்வி கேட்பார்கள்.
“நீங்க ஏன்நடிக்க வந்தீங்க?”
அதற்கான வழக்கமான பதில்: “கலைத்தாய்க்கு சேவை செய்ய வந்தேன்.”
இப்படித்தான் ரொம்ப நாளா வண்டி ஓடிக்கொண்டு இருந்தது. நடுவில் ஒரு மனுஷன் – ரொம்ப வித்தியாசமான மனுஷன் – வந்தார். எம்.ஆர். ராதா. அவர் பணத்துக்காக நடிக்க வந்தேன் அப்டின்னார். ஏங்க கலைத்தாய்க்கு சேவை செய்ய வரலையான்னு கேட்டாங்க. அப்போ ஒண்ணு சொன்னார். அப்படி சொல்றவங்க எல்லாத்தையும் காசு வாங்காம நடிக்கச் சொல்லு பாப்போம். அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுன்னு சொன்னார். அன்னையிலிருந்து ஒருத்தரும் வாயைத் திறந்து கலைத்தாய் பத்தி பேசுறது இல்லை. அப்படி பேசுற பழக்கம் அவரால நின்னுது.
அது மாதிரி இப்போவும் ஒரு ஆளு வரணும். நானும் பாத்துட்டேன். ரஜினி கூட நடிக்கிறதே பெருசு மாதிரி சும்மா அளந்து விடுவாங்க. கூட கொஞ்சம் விளம்பரம் வேணும்னாலும் கிடைக்கலாம். அதோட சரி… அதுவும் அவர வச்சி டைரக்ட் பண்ணணும்னு நிலை வந்திச்சின்னு வச்சுக்குங்க… ஒரு கூடைப் பூவோட தான் அலைவாங்க. போன ஜன்மத்துப் புண்ணியம் அது இதுன்னு ஒரே டயலாக். கேட்டு காதே புளிச்சிப் போச்சு. சரி…அவர வச்சி டைரக்ட் பண்ற/ கூட நடிக்கிற…. பெரிய புண்ணியம்னு சொல்றல்ல .. காசு வாங்கம ..போன ஜன்மத்துப் புண்ணியத்தின் படி செஞ்சிட்டு போன்னு சொல்ல ஒரு ஆளு வரணும்.
ஆனால் ரஞ்சித் அந்த மாதிரி எதுவும் பேசாம புண்ணியம் கட்டிக்கிட்டாரு. ஆஹா.. ரஜனி படத்தில நடிக்கிறதே பெருசுன்னு எல்லோரும் ஒரே மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ல ரஞ்சித் அப்படியெல்லாம் பேசாததே பெரிய விஷயம். தனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவர் மேல் மதிப்பு உயர்கிறது.
அட …அதையெல்லாம் விட சிவாஜி அவ்வளவு பிடிச்சிருந்தாலும், இன்னும் புத்தியில்லாம இப்படி நடிச்சிக்கிட்டு இருக்கிறாரேன்னு அவருக்கு வயசானப்போ தோணுச்சு. அவர் காலத்தில பாலிவுட்ல அசோக்குமார் அப்டின்னு ஒரு நடிகர் இருந்தார். சிவாஜியை ஒட்டிய வயசு. வயசுக்கேத்த மாதிரி படங்கள் நடிச்சார். இது மாதிரி நம்ப ஆளும் growing majestically oldன்னு சொல்ற மாதிரி நடிக்க மாட்டேங்குறாரேன்னு கவலையா பேசிக்குவோம். அட அத உடுங்க ..அது பழைய காலத்துக் கதை. ஷோலே தவிர எந்த படத்திலும் பிடிக்காத அமிதாப் இப்போ நடிக்கிற படம் எல்லாம் பிடிக்குது. இன்னும் கமலும் ரஜினியும் டூயட் பாடிக்கிட்டே இருக்காங்களேன்னு நினச்சா எரிச்சல் தான் வரும்.
ஆனால் இந்தப் படத்தில் வயதுக்கேற்ற வேடம் என்பதாலேயே பிடித்தது அப்டின்னு ரஜினி சொன்னார் என்று சொன்னதைக் கேட்டதும், அப்படி ஒரு படத்தில் நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
இந்த இடத்தில் சுகுணா திவாகர் எழுதிய ஒரு கருத்தை இங்கே மேற்கோளிடுகிறேன்:
இன்றைக்கு ரஜினிக்குச் சவால் கமல் அல்ல. மாறியுள்ள தமிழ் சினிமா சூழலும் உலகின் எந்த நடிகர்களுக்கும் குறைவில்லாத அளவு நடிப்புத்திறமையை வழங்கும் தனுஷும் விஜய்சேதுபதியும்தான். ஆனால் 'கபாலி'யில் வழங்கியதைப் போன்ற நடிப்பை ரஜினி தொடர்ந்து வழங்கினால் தனுஷுக்கும் விஜய்சேதுபதிக்கும் முதல் சவாலே ரஜினிதான்.
இனிமேயாவது ரஜினி நல்ல படங்களில் நடிப்பார் என்று தோன்றியது. ஆனால் ஷங்கர் என்ற மோசமான, எல்லாத்துலயும் பெயிண்ட் அடிக்கிற ஒரு “பிரமாண்ட” டைரடக்கரின் பற்றிய நினைப்பும் வந்து வயிற்றைக் கலக்கியது.
*