Showing posts with label ...... Show all posts
Showing posts with label ...... Show all posts

Wednesday, October 26, 2022

1190. I SALUTE BRAHMINS ……



*

I SALUTE BRAHMINS ……

“இந்துக்களின் அறிவாளி வர்க்கமாக பார்ப்பனர்களே இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்பன சாதி. … மற்ற சாதியினர் மத்தியில் பெரும் மதிப்புக்குரிய வர்க்கமாகவும் இருக்கிறது. மற்ற சாதியினரைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் இது போன்ற ஓர் அறிவாளி வர்க்கம், சாதி சீர்திருத்தத்திற்கு எதிரியாக இருக்கும் போது, சாதி அமைப்பைத் தகர்த்தெறிவதற்கான இயக்கத்தில் வெற்றி வாய்ப்புகள் எட்டாக்கனி என்றே எனக்குத் தோன்றுகிறது.”
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்,
சாதியை அழித்தொழிக்கும் வழி)
வேற்றுமைகளை அங்கீகரிக்காமல், ஒற்றுமையைக் கடுகளவும் விரும்பாத தனித்த இனமாக தன்னை அது உச்சாணிக் கொம்பில் வைத்துக் கொள்கிறது. அப்படியான அடைப்பட்ட சமூகமாக (CLOSED COMMUNITY) பார்ப்பனர்கள் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்வதுதான் வியப்பளிக்கிறது.
----------------
பார்ப்பனியம் என்பது ஒரு வகையான தீவிர சக மனித வெறுப்பு மனநிலை. அந்த மனப்பிறழ்வு இங்கே ஓர் ஆதிக்க சித்தாந்தமாக இயங்கி நாட்டையே வதைக்கிறது.
----------------------
பிறப்பின் அடிப்படையில் தகுதிப்படுத்தும் சாதி எனும் கொடூர வழக்கத்தை உருவாக்கியது பார்ப்பனர்களே! அவ்வழக்கம் அழிந்து விடாதவாறு காலங்காலமாகக் கண்காணித்தும் காப்பாற்றியும் நியாயப்படுத்தியும் வருவதும் பார்ப்பனர்களே!
-----------------------
பார்ப்பனியம் என்பதற்கான நேரடிப் பொருள் பிரித்தாளும் சூழ்ச்சி. ... நாட்டின் பெரும்பான்மை தொல்குடிகளை படிநிலையில் கீழான, இழிவான இடத்திற்குத் தள்ளிய கொடுங்கோன்மைக்குப் பெயர்தான் பார்ப்பனியம். இந்தப் படிநிலை சமத்துவமின்மை கோட்பாட்டிற்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் பார்ப்பனர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒரே வேலை.
-------------------------
காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர் என்ற போதும், பார்ப்பனத் தீவிரவாதியாக அவர் என்றுமே அடையாளப்படுத்தப்படுவதில்லை.
------------------------
மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே அறிவாளி / முதலாளி வர்க்கமாக உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு இந்நாட்டின் அத்தனை அதிகாரங்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனால், வலுவான இந்த ஆளும் வகுப்பினரை இங்கே நடக்கும் பிரச்சனைகளோடும் தொடர்புபடுத்தாமல் அவர்களை பொறுப்புடைமியிலிருந்து நழுவ விடுகிறோம்.
-----------------------
பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் இந்துத்துவம், இந்துத்துவம் என கூச்சல் போட பழகிக் கொண்டோம்.
-------------------------
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆண்ட இடத்திலெல்லாம் பார்ப்பனர்களே முதல்வர்களாக்கப் பட்டனர்; அமைச்சர் பதவிகளைப் பிடித்தனர்.
----------------------
பார்ப்பனியம் சாதிகளால் உயிர் வாழ்கிறது. இந்து மதத்தின் பெயரால் காப்பாற்றப்படுகிறது.
--------------------
ஒரு பார்ப்பனர் முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக இருந்தால் கூட அதை ஊற்றும் ‘privilege’ மற்றொரு பார்ப்பனருக்குத்தான் உண்டு!!
-----------------------
INDIAN PENAL CODE என்பதை எல்லாம் தாண்டி, எப்பேர்ப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டாலும் பார்ப்பனர்களைத் தப்பிக்க வைக்கும் INDIAN பூணூல் CODE என்ற ஒன்று இங்கே இருக்கத்தான் செய்கிறது.
-------






*



Saturday, July 09, 2022

1171. என் வாசிப்பு THE ROOTS



*
                                                       Alex Haley  



Leon Uris  எழுதிய EXODUS  புத்தகம் பத்தி சொன்னியே ஏன் என்ன உட்டுட்டன்னு Roots: The Saga of an American Family எழுதின Alex Haley   சண்டைக்கு வந்துட்டார் (கனவுல). என்ன பண்றதுன்னு அவரைப் பத்தியும், அவரது புத்தகம் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம்னு நினைக்கின்றேன்.

பல வாரங்கள் best sellers listல இந்தப் புத்தகம் இருந்திருக்கு. இத வச்சி சீரியலும் எடுத்து ஓஹோன்னு ஓடியிருக்கு. சினிமாவா வந்துச்சான்னு தெரியலை.

ஹேலி ஒரு அமெரிக்க ஆப்ரிக்கன். (இப்படித்தான் அவங்களை சொல்லணுமாம். அப்டின்னா பிரான்சு நாட்டில், இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களை எப்படி சொல்லணும்னு நேத்து .. முந்தா நேத்து விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கும் போது ஒரு கேள்வி மனதிற்குள் வந்தது. பதில் தெரிஞ்சா சொல்லுங்க. தன்யமாவேன்.) இவர் அமெரிக்கப் படையில் பணியாற்றி, பின் அதிலேயே பதவி உயர்வெல்லாம் பெற்று ஓர் இதழியியலாளராக இருந்திருக்கின்றார். படைப் பதவிகளிலிருந்து வெளி வந்த பின் Readers’ Digest  இதழின்  Chief Editor ஆகவும் இருந்திருக்கிறார்.

தன் பரம்பரை எங்கிருந்து எப்படி வந்து, இப்படி ஆனோம்னு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார். ஏழு தலைமுறைக்கு முன்பு காம்பியா என்ற ஆப்ரிக்க நாட்டில் பறை செய்வதற்காக மரத்தில் ஏறி கம்பு வெட்டிக் கொண்டிருந்தவரை அடிமை வியாபாரிகள் அடித்து மயக்கமடையச் செய்து, கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு வந்து, விலைக்கு விற்கப்பட்டார் என்று ஆரம்பித்து தனது ஒவ்வொரு தலை முறையிலும் பல மாற்றங்கள் கண்ட கதையை மிக அழகாக, நம் மனத்தைக் கசக்கிப் பிழியும் வழியில் எழுதியிருப்பார்.

EXODUS வாசித்து முடித்ததும் என்னையறியாமலேயே ஒரு pro-Israelite ஆக மாறினேன் என்பது உண்மை. அதே போல் இந்த நூலை வாசித்ததும் இம்மக்கள் மீதான் அன்பும் கரிசனையும் அதிகமானதாக உணர்ந்தேன். இதேபோல் இன்னொரு வரலாற்று உண்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். Uncle Tom's Cabin; or, Life Among the Lowly  என்ற நாவலை Harriet Beecher Stowe என்ற பெண்மணி 1852 ஆண்டில் எழுதியுள்ளார். பத்தொன்பதாம்  நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்த படியாக விற்பனையான / வாசிக்கப்பட்ட புத்தகமாக இருந்திருக்கிறது. ஒரு அடிமையின் கதை. இந்த நாவல் வாசிச்த்ததும் மக்கள் பலரின் மனதில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக வைத்திருப்பது பற்றிய கேள்விகள் மனதில் எழுந்துள்ளன. அதன்பின் அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்பித்த உள்நாட்டுப் போரிற்கு இந்த நாவல் தான் விதை போட்டது என்பதும் ஒரு முக்கிய கருத்து. இதை வைத்தே அன்றைய அமெரிக்கன் பிரசிடென்ட் Abraham Lincoln  கூறியதை மேற்கோளிடுவார்கள் :  When Abraham Lincoln met Stowe in 1862 he supposedly commented, "So this is the little lady who started this great war.  … இதைச் சொல்லும் போது ஏன் யாராவது ஒருவர் நம் தலித் மக்களைப் பற்றியெழுதி, அது நம் மனசாட்சையை உலுக்கி எடுக்கும் என்றொரு நப்பாசை மனதில் எழுந்தது. ....ம்ம்...ம்... நாம் எங்கே மாறப்போகிறோம் .. எனக்கென்னவோ அந்த நம்பிக்கை சிறிதும் வரவில்லை இது வரை .... நாமென்ன திருந்துற ஜென்மங்களா ... இல்லியே ...


****

ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு  கேள்வி வழக்கமாக எழும்:

இவர்கள் நாய்களுக்கும் கீழாகவே அடிமைகளாக வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்டார்கள். இது உண்மையாக இருக்க, வெள்ளைக்காரர்களின் கிறித்துவ மதத்தின் பக்கம் அவர்கள் இழுக்கப்பட்டு விட்டனர். Uncle Tom's Cabin கதையில் வரும் டாம் பெரியதொரு கிறித்துவராகவே இருப்பார்.

 என் ஐயம்:

தங்களை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தும் போது ஆப்ரிக்கர்கள் எப்படி வெள்ளைக்காரர்களின் தெய்வத்தை ஏற்றுக் கொண்டார்கள்? அது எப்படி சாத்தியமாகும்? அவர்களை வெறுப்பது போல் அவர்கள் கடவுள்களையும் வெறுப்பது தானே சாத்தியம்?

நமது சமுதாயத்தில் முன்னோர் வழிபாடு மட்டும் இருந்தது மாறி, அனைவரும் இந்துக்கள் என்ற அடைப்புக்குள் வடநாட்டிலிருந்து வந்த மதத்திற்குள் சென்று விட்டோமல்லவாஅது போலவோ?  ….. இது இன்னொரு துணைக் கேள்வி.





*



Tuesday, April 21, 2020

1093. GEORGE





*

missing the trees for the lonely woman!

.... என்று மறைந்து போன ஜார்ஜின் முக நூலில் கடைசியாக வந்த படத்திற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். ஏனோ அவனை நினைக்கும் போதெல்லாம் இந்தப் படம் மனதிற்குள் மின்னல் வெட்டாக வந்து போகிறது.


நேரடி மாணவனாக இல்லாவிட்டாலும் காமிரா எங்களை இணைத்து வைத்தது. படிப்பு முடிந்த பின் அவன் எடுத்த படங்கள் அத்தனை நன்றாக இருந்தன. அதைச் சொல்லும் போதெல்லாம், “உங்களிடம் படித்தது, சார்” என்று சொல்வான். பெருமையாக இருந்தது.
மகாமுனி படத்திற்காகப் பாலக்காடு சென்ற போது பெரிய காமிராவோடு நின்றான். அவன் தான் அப்படத்திற்கான making the movie videographer என்றான். நான் அங்கிருந்த 3 நாளும் ஏறத்தாழ என்னோடு கூடவே இருந்தான். என்னையும் வைத்து சில bytes எடுத்தான். என்னை எனக்கே பிடிப்பது போல் அழகாக எடுத்துக் கொடுத்தான்.
எப்போதும் தொடர்பில் இருந்தோம். locked down ஆரம்பித்ததும் சில படங்களின் தொடுப்பு கேட்டிருந்தேன். அவன் சொல்லி ஐந்தாறு நல்ல படங்கள் பார்த்தேன். அதைப் பற்றியும் பேசினோம். வேறு சில படத்தலைப்புகள் சென்ற வாரம் சொன்னான்.
கொஞ்ச காலத்திற்கு மலையாளப் படங்கள் பார்க்க மனது வராது என்று நினைக்கின்றேன் .......


*
https://www.facebook.com/sam.george.946/posts/10219610815134206?__cft__[0]=AZWvgYo9QiDaCO5KcBcQhuyN3XU3uZDsVbpH_IIVUwCywP7Hvd8nQVzyRPLmU0NkklIxwBCxQTYvTm4MnWE6SosQCpPbFUp4mudPusX8DLQigVMrqob1meYtnlrTrV1jBIs&__tn__=%2CO%2CP-R



*


1092. GEORGE .........





*


just 47. left us in his sleep. so unbelievable. even last week sent me links for some movies. so happy when i came to know that he is the cinematographer for the movie, உக்கிரம், taken for film circuit. so sure that he would reach great heights soon.
my condolences ...so sorry,bob.


*
https://www.facebook.com/sam.george.946/posts/10219599829819580


*