பிற பதிவுகள்
https://dharumi.blogspot.com/2014/06/763-1.html
https://dharumi.blogspot.com/2014/06/764-2.html
https://dharumi.blogspot.com/2014/06/767-3.html
https://dharumi.blogspot.com/2014/06/768-4.html
https://dharumi.blogspot.com/2014/07/772-5.html
*
நமக்குத் தெரிந்த வரையில் பெரும் மன்னர்களின் வரலாற்றில் வெற்றி முழக்கங்களைக்
கேட்டு வந்துள்ளோம். ஆனால் பெற்ற ஒரு பெரும் வெற்றிக்குப் பின் ஒரு மன்னன் எவ்வாறு
அந்த வெற்றியைப் பெற்றோம் என்று நினைத்துப் பார்த்ததையோ, அப்படிப் பார்க்கும் போது
அவன் மனம் வெம்பி வேதனையடைந்ததையோ நாம் பார்த்திருக்க முடியாது. அசோகர் மட்டுமே வரலாற்றில்
அப்படிப்பட்ட ஒரே மனிதராக, நெடிதுயர்ந்த உயர்ந்த மனிதராக, நின்று கொண்டிருக்கிறார்.
தன் வெற்றியினால் தான் அனுபவித்த மனத் துயரங்களைக் கல்லிலே செதுக்கி வைத்து வரலாற்று
ஏடுகளில் ஒரு புதுமையான பக்கம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார்.
அம்மன்னனின் சில ஏடுகள் இங்கே சான்றாக …..
கலிங்க வெற்றிக்குப் பிறகு கடவுள்களின் அன்பிற்குரிய
மன்னனுக்கு தர்மத்தின் மீது பெரும் ஈர்ப்பு வந்தது.
உண்மையிலேயே, கடவுளின் அன்பிற்குரியவர், கொல்லப்பட்டமைக்காக
மிக வேதனையடைகிறார். தோல்வி காணாத ஒரு நாட்டை வெற்றி பெற்று அதனால் பலர் இறந்ததும்,
இடம் மாறியதும் வேதனையளிப்பவை. ஆனால் இதையெல்லாம் விட பிராமணர்களும், துறவிகளும், நாட்டில்
வாழும் பல சமயத்தினரும், மரியாதைக்குரிய பெரியவர்களும், தாய்,தந்தை, பெரும் மூத்தவர்களும்,
நன்னடத்தை உடையோரும், நண்பர்களோடு மிகுந்த நாணயம் கொண்டோரும், துணைவர்களும், உறவினர்களும்
பணியாளர்களும், உதவியாளர்களும் கடும் காயம் பட்டதாலும், கொல்லப்பட்டதாலும், தங்கள்
வாழுமிடங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டதாலும் கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பெரும்
வேதனையடைந்தார்.
இவ்வாறு நேரடியாகத் துன்பம் பெறாதவர்கள் கூட தங்கள் நண்பர்கள்,
துணைவர்கள், உறவினர்கள் படும் துன்பங்களால் வேதனையடைவார்கள். இதுபோன்ற துன்பங்கள் நடந்த
போரினால் விளைந்தது என்பதை அறியும்போது கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பெரும் வேதனையடைகிறார்.
******
எல்லோரும் என் குழந்தைகளே. என் குழந்தைகளுக்கு நான்
என்ன விரும்புகிறேனோ அவர்களின் நலமும் மகிழ்ச்சியும் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறு
வாழ்விலும் வேண்டியது போல் எல்லோருக்கும் அவை கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
எனது இந்த ஆசை எவ்வளவு பெரியதென்று உங்களுக்குத் தெரியாது,
அப்படியே யாருக்கும் தெரிந்திருந்தாலும் என் ஆசையின் தீவிரமும் முழுமையும் உயிர்களுக்குப்
புரியாது.
******
தர்மம்
கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு பேசுகிறார்:
தர்மம் மிக மிக நல்லது. ஆனால்
தர்மம் என்பது என்ன? அதில் சிறிது தீமை, நிறைய நல்லவைகள், அன்பு, தாராளம், உண்மை, புனிதம்
உள்ளன. நான் பல வெகுமதிகளைப் பல வழிகளில்
தந்துள்ளேன். இரண்டு கால் பிராணிகள், நான்கு கால் பிராணிகள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள் அனைத்துக்கும் இந்த வாழ்க்கையின் வெகுமதிகளைத்
தந்துள்ளேன். மேலும் பல நல்ல செயல்களைச்
செய்துள்ளேன்.
இப்போது கடவுள்களின் அன்பிற்குரியவர் தனது வெற்றிகளிலேயே தர்மம்
தன்னை ஆட்கொண்டதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறார். தர்மம் தன்னை வெற்றிகொண்டது தன்
நாடாகிய இங்கு மட்டுமல்ல, நாட்டின்
எல்லைகளைத் தாண்டி, அறுநூறு
யோஜன தூரத்தையும் தாண்டி, கிரேக்க
மன்னர் அன்டியோக்கஸ் ஆளும் நாடு, அந்த நாட்டையும் தாண்டி தாலமி, அன்டிகோனாஸ், மஹாஸ், அலெக்சாண்டர் என்ற
நான்கு மன்னர்கள் ஆளும் நாடுகள், மேலும் தெற்குப் பகுதியில் சோழர்கள், பாண்டியர்கள் மேலும் தாம்பிரபரணி நதி வரையுள்ள நாடுகள் போன்ற
எல்லைகள் வரை நீண்டது. ஆகவே
அரசனின் நாடும் கிரேக்கர்கள், சம்போஜகர்கள், நபக்கர்கள், நபா பம்கித்தவர்கள், போஜகர்கள், பித்நிக்கர்கள், ஆந்திரக்காரர்கள், பாளிதாக்கரர்கள் என்ற
இடமெட்டும் கடவுள்களின் அன்பிற்குரியவர் போதித்த தர்மமே மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள்களின்
அன்பிற்குரியவரின் தூதர்கள் இன்னும் செல்லாத இடங்களிலுள்ள மக்களும், தர்மத்தினைப்பற்றிக்
கேள்விப்பட்டும், கடவுள்களின்
அன்பிற்குரியவர் கொடுத்த கட்டளைகளையும், போதனைகளையும் கேட்டு அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் தொடர்ந்து
அதே போல் வாழ்ந்து வருவார்கள். இந்த வெற்றி எங்கும் பரவிவிட்டது.
*****
கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி கூறுகிறார்: எல்லா சமயங்களும் எல்லா
இடங்களிலும் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லா சமயங்களும் சுயக் கட்டுப்பாடு, தூய இதயம் இவைகளையே
விரும்புகிறது.
*****
கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு கூறுகிறார்:
தர்மத்தினைப் போன்ற வெகுமதி வேறெந்த வெகுமதியும் இல்லை. தர்மத்தினைப்
போன்ற அறிமுகம் போல் வேறொன்றும் அறிமுகமல்ல, பகிர்வதற்கு தர்மத்தினைப் போல் வெறெதுவும் பகிர்வதற்கில்லை, உறவுகளில் தர்மத்தைப்
போல் வேறொரு உறவுமில்லை.
எந்தத் தவறு செய்தவரையும் எப்போதெல்லாம் மன்னிக்க
முடியுமோ அப்போதெல்லாம் மன்னிக்க வேண்டும்.