Monday, December 31, 2007

246. மீண்டும் ஒரு வேண்டுகோள்

தொடர்பான முந்திய பதிவு

மத்திய அரசு குறை தீர்க்க அமைத்துள்ள இணைய தளத்தின் hit counter மிகவும் ஆச்சரியமான முறையில் வெகு வெகு வேகமாக கூடிக்கொண்டே போவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.(இந்த நிமிடம் எண்ணிக்கை சரியாக 6000) என் முந்திய பதிவு இடப்படுவற்கு முன் வெறும் 1300-களில் இருந்த எண்ணிக்கை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் 2100-களில் உயர்ந்தது பார்த்து - காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக (?) - மகிழ்ந்து போனேன். அந்த எண்ணூத்தி சொச்சம் பேரில் 5% மக்கள் மட்டுமேகூட பதிவிட்டிருந்தாலும் 40 பேருடைய விண்ணப்பங்கள் ஒரே கருத்துக்காக போய்ச் சேர்ந்திருக்கலாமேவென எண்ணினேன். (நெனப்புத்தான்!!!)
எல்லோருமே ஒரே குறையைப் பற்றி எழுதுவதை விடவும் பல குறைகளை எழுதி அவைகளில் சிலவாவது குறைதீர்க்கப் பட்டால் நல்லதுதானே என்ற எண்ணத்தில் இன்னொரு வேண்டுகோளை உங்களிடம் வைக்கின்றேன்.

அடுத்த குறையாக நமது தொடர்வண்டிகளில் இருக்கும் கழிப்பறைகளின் நிலை உங்களுக்குத் தெரியும்தானே; அதைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தை இந்த இணையதளத்திற்கு அனுப்பியுள்ளேன். ( Registration No. DARPG/E/2007/08851; நகல் கீழே). என் முந்திய பதிவில் இந்த இணைய தளத்திற்கு என் வேண்டுகோளுக்கிணங்கி முதலில் விண்ணப்பம் அனுப்பிய முதல் 5 பேரை மட்டும் இந்த விண்ணப்பம் சார்ந்த கருத்துக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்ப வேண்டுகிறேன். அவர்கள்:

1. தென்றல்
2. வவ்வால்
3. மாசிலா
4. தெக்ஸ்
5. நாகை சிவா


இப்படி விண்ணப்பம் அனுப்புவதில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ள மற்றோருக்கு என் வேண்டுகோள்:

நமக்கென்ன பிரச்சனைகளா இல்லை. அவைகளில் உங்கள் மனதில் தோன்றும் பிரச்சனைகளை நீங்கள் ஏன் பதியக் கூடாது? பலரும் பதிவீர்கள்; பதிவிடவேண்டுமென வேண்டுகிறேன்.

அப்படி நீங்கள் அனுப்பும் உங்கள் விண்ணப்பத்தின் நகல்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் இட்டால் நம் எல்லோரின் பார்வைக்கு அவைகள் வருவது நலமாயிருக்கும். விண்ணப்பங்களுக்கு வரும் பதில்களையும் (எல்லாமே ஒரு நம்பிக்கைதானே!) இங்கு மீண்டும் பின்னூட்டமாக இட்டால் நலமாயிருக்கும்.

என்னென்னமோ பண்ணியிருக்கோம்; இது பண்ண மாட்டோமா ...?


நான் இன்று அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்:

Recent media reports say that Indian Railways is one of the very few rail lines in the whole world not to have safe lavatories. What my teacher jokingly said half a century back – a man traveling from Tirunelveli to Delhi with an infected bowel would spread his ‘bug’ to the whole length of the country – still stands sadly true. And it is also a real shame to our growing nation.

IMMEDIATE AND TIME-BOUND STEPS SHOULD BE TAKEN AT THE EARLIEST TO INTRODUCE SAFE SANITARY SYSTEM IN OUR TRAINS. Mode of handling the waste should also be mechanical and safe.உங்கள் அனைவருக்கும் என் கனிவான

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wednesday, December 19, 2007

245. உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்

234. இதோ நம் கையில் ஓர் ஆயுதம் என்றொரு தலைப்பில் பதிவொன்று இட்டிருந்தேன். நம் குறைகளை மத்திய அரசின் துறை ஒன்றுக்கு (Dept. of Administrative Reforms & Public Grievances)அனுப்பினால் அதனை நிவர்த்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று தெரிந்து அத்துறைக்கு இரு குறைகளைப் பற்றித் தகவல் அனுப்பியிருந்தேன். இதுவரை ஏதும் பதில் இல்லாததால் 'சரி! அவ்வளவுதான்' என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்று ஒரு பதில் வந்துள்ளது.

THE WHEELS ARE REALLY TURNING

நான் வழக்கமாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை 'விபத்துப் பகுதி' என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அங்கு தாறுமாறாக விரையும் பேருந்துகளைக் கவனிக்கவோ மட்டுப் படுத்தவோ எவ்வித முயற்சியும் இல்லாமை பற்றியும் அதனால் அடிக்கடி நடக்கும் விபத்துகள் பற்றியும் எழுதியிருந்தேன். இதற்கு வந்த பதில் நம் அரசும், அரசு இயந்திரங்களும் 'உருண்டு கொண்டுதான்' இருக்கின்றன என்ற நல்ல செய்தி மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இன்று எனக்கு வந்த அந்த பதில்:

Reply for your e-mail dated 17.09.2007 about Samayanallur-Paravai-Madurai - Road - Reg.

Kindly refer your e-mail dated 17.09.2007 addressed to Govt. of India.

the Superintendent of Police, Madurai has been requested to instruct
the Highway Patrol Police officials to take immediate action against
drivers who are indulging rash driving in Samayanallur-Paravai-Madurai road.
இதில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், இன்றுவரை - 19.12.'07 - இத்தளத்திற்குச் சென்று (எட்டிப்) பார்த்தவர்களே வெறும் 1372 பேர் மட்டுமே என்பது கொஞ்சம் ஆச்சரியமாக (வேதனையாகவும் தான்) இருந்தது. இணைய பயனர்கள் மிகுந்து இருக்கும் நம் நாட்டில் இத்தகைய ஒரு நல்ல வசதியை - இணையத்தின் மூலமே நம் குறைகளைக் கூறும் எளிதான இந்த வசதியை - நம்மில் யாரும் பயன்படுத்தாதது ஏமாற்றமே.

என் இரண்டாவதாக முயற்சியாக, மனிதக் கழிவுகள் அகற்றும் வேளை அந்த வேலை செய்து கொண்டிருந்த மூன்று சுத்தித் தொழிலாளர்கள் சென்னையில் இறந்த ஒரு செய்தி பற்றிக் கூறி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலை மாற அது இயந்திரமாக்கப்பட வேண்டும்; அதற்குரிய முயற்சிகளை ஒவ்வொரு மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல் கடிதத்தைத் தொடர்ந்து மற்றொரு கடிதமும் ஏற்கெனவே அனுப்பியுள்ளேன். அதற்குப் பதிலும், பதிலைத் தொடர்ந்த காரியமாற்றலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.

நான் பதிவனாக சேர்ந்த புதிதில் இந்த விஷயம் பற்றிய ஒரு நெடும் விவாதம் பதிவுலகில் நடந்தது. பலரும் இதைப் பற்றி எழுதினார்கள். அப்போதே இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படியென்றெல்லாம் பேசினோம். இதோ இப்போது நம் கண்முன் உள்ள பாதையில் எல்லோருமாக ஒரு படி முன்னெடுத்தால் என்ன?

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்:

சீரியஸ் பதிவு, சீரியல் பதிவு, கும்மிப் பதிவு, மொக்கப் பதிவு என்று வகைவகையாக பதிவுகளைப் போட்டுக்கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என் ஒரு வேண்டுகோள். இயந்திரமாக்கப் படுதல் அவசியம் என் நீங்களும் நினைப்பின் ஏன் ஒரு மயில் இந்த முகவரிக்கு அனுப்பக் கூடாது?(http://darpg-grievance.nic.in)ஒருவேளை எழுத சோம்பேறித்தனப் பட்டால் உதவுவதற்காக நான் ஏற்கெனவே எழுதிய மயிலின் நகலை இங்கே தந்துள்ளேன் - வெட்டி ஒட்ட!

-----------------

It appears we have at last come out of the bracket of 'developing countries' and at the threshold of being among the developed countries. It is a pround moment for every one of us.

BUT how long we are going to make the dalits to clean and carry the human wastes?

A little money and some great will from our politicians and bureaucrats can make this condition completely changed if we introduce machanised system for doing such jobs.

Is it asking too much to request the governemnt to shell out some money for this and liberate the 'harijans' from this job thrusted on them for generations.

Sunday, December 09, 2007

244. என் பாலியல் கல்வியில் பால பாடம்

இப்பதிவு ஒரு மறுபதிவு - என் ஆங்கில வலைப்பூவிலிருந்து எடுக்கப் பட்டு இங்கு பதிவிடுகிறேன்.

செக்ஸ் என்றாலேயே முகஞ்சுழித்து அருவருப்பென ஒதுங்கும், அல்லது ஒதுங்குவது போல் நடிக்கும் நபர்களே நம்மில் அதிகம். செக்ஸ் கல்வி நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற பேச்சு பரவலாக நம் சமூகத்தில் இப்போது பேசப்படுகிறது. அதைக்கேட்டதுமே எல்லா கடவுளர்களையும் துணைக்கு அழைத்து 'ஐயோ! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா?' என்ற பிலாக்கணங்கள் பல இடத்திலிருந்து கேட்க ஆரம்பித்து விட்டன.

செக்ஸ் என்றதுமே புணரும் இரண்டு உருவங்கள் அவர்கள் மனத்தில் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன என்றே நினைக்கிறேன். இல்லையெனில் ஏனிந்த அருவருப்பு. குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி என்றதுமே ஏதோ வாத்சாயயனிரின் புத்தகம்தான் அவர்களூக்கெல்லாம் பாட நூலாக இருக்குப் போவது போல் மிரண்டு அச்சமும் அருவருப்பும் தெரிவிக்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கு good touch, bad touch என்று சொல்லித்தருவது அவசியம் இன்றைய சமூகத்தில். அதில் ஆரம்பித்து அவர்கள் வயதுக்கேற்றவாறு பாலியலைக் கல்வியாகத் தருவதில் என்ன தவறோ! நாம் பெற்ற பெண் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கு வரும்முன்பே மாதவிடாய், அதனோடு சேர்ந்த பிரச்சனைகளைச் சொல்லி அவர்களை அந்த புதிய நிலைக்குத் தயார் படுத்தவேண்டுமல்லவா? அதுவும் - அல்லது அதுதான் - அந்த வயதுக்குரிய பாலியல் கல்வி. வளரும் குழந்தையின் ஒவ்வொரு கால கட்டத்துக்கும் ஏற்றவாறு செக்ஸ் பற்றி அவர்களுக்குக் கற்றுத் தருவதே சரி.

இன்னும் சொல்லப் போனால் எந்த வயதிலும் பாலியல் அறிவு எல்லோருக்கும் இருந்து விடுவதாகச் சொல்லி விட முடியாது. என் நண்பர் இரண்டு குழந்தைகளின் தகப்பனாக ஆன பின்பும்கூட பெண்களுக்கும் orgasm இருக்குமென்பதைத் தெரியாதிருந்ததும், foreplay பற்றியும் அதிகம் தெரியாதிருந்ததும் மிக ஆச்சரியமாக இருந்தது. அவர் நடிக்கிறாரோ என்றுகூட நினைத்தேன். ஆனால் அவர் உண்மையிலேயே அவை பற்றிய முழுமையான விவரம் தெரியாதவராகவே இருந்தார் என்பது புரிந்தது. இதில் யாரையும் உடனே குறை கூறிடவும் முடியாது. நாம் வளர்ந்த வளர்ப்பு அப்படி. மூடி மூடி வைத்து, இல்லாத மர்மங்களைப் பொதிந்து வைத்து, செக்ஸை ஒரு அருவருப்பான அசிங்கமான விஷயமாக வைத்திருப்பதில் மதங்களுக்கு என்றுமே ஒரு தனியிடம் உண்டு. அதைத்தான் ஓஷோ 'செக்ஸ் என்பதே ஒரு தவறான விஷயம் என்பதாகவும், வறுமையையை கடவுளுக்குப் பிடித்ததாகக் காட்டுவதும் எல்லா மதங்களின் கூட்டுக் கொள்கை' என்று கூறி அவைகளை மறுக்கிறார்.

நாம் ஒவ்வொருவருமே நம் இளைய வயதில் செக்ஸ் பற்றி விநோதமான கருத்துக்களைக் கொண்டிருந்திருப்போம். இன்று திரும்பிப் பார்க்கையில் அவைகள் நமக்கே வேடிக்கையாகத் தோன்றும். அப்படி நான் சிறு வயதில் கொண்டிருந்த ஒரு தவறான, வேடிக்கையான விஷயம் பற்றி ஆங்கில வலைப்பூவில் எழுதிய ஒரு பதிவு:

MY EARLY SEX EDUCATION


In our days we did not have as much worldly knowledge as the modern day kids have. I think every present day kid of eight years is exposed to much ‘sex’ than what an adolescent was exposed in our days, thanks to the media. In a way it is good to know proper things in a proper way at the appropriate times.

I still remember how not only I but all guys of my age in those days never had any chance to know about ‘the secrets of sex’. There was no chance to see or to read or to hear anything about sex. It was all hush-hush thing among close friends. So it was mostly like the characters in the story of an elephant and four blind men. One blind leading another blind led only to more confusion. Especially puberty of girls was a great enigma for us. Talking about that brought goose pimples and we were thrilled to share our information with others. I got most of the gossip about sex from my rural friends, especially during my summer visits to my native village. Each one had his own theory about sex, puberty, menstruation, masturbation etc. We were totally a confused lot. This confusion made sex more and more a mystery and we had no chance to know about it. This made sex more enigmatic and mysterious and we always talked about these matters only with our very close friends. So naturally since we had our references from fellows of our own age, it was mostly like one blind leading another blind from one dark spot to another dark spot! We were very stupid. Hot discussion on the nature of genitals of the opposite sex happened often. There were times when we were not sure how a baby would come into this world. To make matters worse comparing a cow and a woman especially in the matter of their anatomy and mode of delivery was common. This state of affairs even continued to very late period of our adolescence. Such was our ignorance in those days!

I had a cousin. His father and my father were first cousins, and they had the very same name and worked in the same school. To avoid confusion people used to call my periyappa as senior so-and-so (periya ..) and my appa was known as junior so-and-so (chinna ..). Like our fathers we also had the same first name. He was just two years senior to me. But he played the role my ‘friend-philosopher-guide’. He was the one who was unraveling the mysteries of sex to me. His house was on my way to school and church, the two places around which my early life was revolving. So I used to go to his house on my way to school or church and then we would go together. He came out with so many newer things about anything and everything. I very submissively accepted all his ‘doctrines’. Never questioned them. Except the one time when he was explaining the ‘dirtiest thing’.


Whenever he came out with anything he used to always show an air of superiority which was quite right since I was too wet behind my ears for my age and what all he said were ‘scriptures’ to me. I never dared to question his statements. But one day on our way back from school he started giving me extraordinary information on sex. He told me with the same and usual air of superiority what a married man and wife would do in private to get a child. My God! It sounded so obscene and dirty that I thought there could not be an iota of truth in what he said. I said I did not believe what he said just then. He majestically told me that was the truth and nothing but truth. I kept silent for some time mulling over on what he said. I was simply flabbergasted by this unbelievable and dirty thing. For a few moments we were walking in silence.

Then I asked my cousin: “Then … er.. how about my father and mother?”

“Well, it has to be so”, he shot the answer without a moment of hesitation. He was very cool answering my question.

Few more moments of silence. I was still trying to digest what he had said. But I could not. A flash came and I asked him: “In that case, how about your father and mother?”

This time he took some moments. Hesitated a bit. But came out with an affirmative answer. But this time it was not as authoritative as it was for the previous question.

Still I could not believe it. Our own parents. This much dirty. Oh! No, I thought. I did not believe it and wanted to prove him utterly wrong.

My next question was very much pointed and poignant too. I asked him: “If it is so, is it the same way between Mother Mary and St. Joseph?”

He was thrown off balance by this question. Clean bowled. He was dumbfounded now. I was happy that I could at last nail him down to his utter lies. How could such a dirty act be true? Could any decent human being, leave alone the divine persons, do such nasty things?


I was waiting with batted breath for his answer. This time he did not have the guts to say yes.

Friday, December 07, 2007

243. ஆத்தா! நான் சிவாஜி பார்த்துட்டேன்.

இது ஒரு மறுபதிவு; எங்கள் பாசக்காரக் குடும்பத்திற்குப் பாத்தியப் பட்ட கும்மிப் பதிவில் நான் 20.11.07-ல் இட்ட இப்பதிவை just for the sake of record - இங்கே மீண்டும் பின்னூட்டங்களையும் சேர்த்தே இடுகிறேன்.*

எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்க தியேட்டர். டவுனுக்குள்ள 'ஆடி அடங்குன' படங்கள் மட்டும் வரும். தியேட்டரின் பார்ட்னர் கொஞ்சம் தோஸ்து. என்ன அந்தப் பக்கமே வரமாட்டேங்குறீங்க அப்டின்னாரு ஒரு தடவை. சிவாஜி வரட்டும்; வந்துருவோம் அப்டின்னேன். இந்த வாரம் போஸ்டர் பார்த்ததும் வார்த்தை தவறக்கூடாதேன்னு ஒரு நினப்புல தங்கமணியை வேண்டி ஒருவழியா சம்மதிக்க வச்சி வீட்ல இருந்து நாலுபேரா சினிமாவுக்குப் போய் பால்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம்.

அடுத்த பத்தியை நூத்துக் கணக்கில் காசு கொடுத்து போன மகராசங்களோ, வெள்ளி / டாலர் அப்டின்னு கொட்டிக் குடுத்து படம் பார்த்த பெரிய தனக்காரங்களோ படிக்காதீங்க; படிச்சா அல்சர் வரலாம்.

விஷயம் என்னன்னா, நமக்காக மட்டுமே படம் போட்டது மாதிரி நாங்க நாலுபேரு, இன்னொரு தம்பதிகள், அப்புறம் தனியா ஒருத்தர் ஆக நாங்க ஏழே ஏழுபேரு மட்டும் உக்காந்திருந்தோம். நான் மட்டும் 4 சீட் எடுத்துக்கிட்டேன்.- உக்கார ஒண்ணு; வலது கைக்கு ஒண்ணு; இடதுக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணு அப்டின்னு. கீழே ஒரு 50 பேரு இருந்திருப்பாங்க. நாங்க போன பால்கனி டிக்கட் எவ்வளவு தெரியுமா? பதினஞ்சு ரூபாயாக்கும் ! சும்மா சொல்லக் கூடாதுங்க .. எனக்கு செம ஃபீலிங் - எங்க 7 பேத்துக்காகவே போட்ட ப்ரி வ்யூ காட்சி மாதிரிதான் ஃபீலிங் இருந்தது.


படத்தில பிடிச்ச விஷயங்கள்:

* ஒரு விசயம் புரிஞ்சி போச்சி; அமெரிக்காவில இருக்கிற நம்ம மக்கள் எம்மாம் பெரிய பொய்யைச் சொல்லிக்கிட்டு இங்கன கிடக்குற எங்கள மாதிரி சொந்தக்கார மக்கள ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சி போச்சு. கதாநாயகன் அப்டின்னா கொஞ்சம் ஏத்திதான் நாம சொல்லுவோம். அவர் படிச்சார்னா ஸ்டேட் பர்ஸ்ட்தான் வாங்குவாரு. ஓடுனாருன்னா அதிலயும் மொதல்ல வருவாரு. அப்டியே தோத்துப் போய்ட்டா கடைசியா கதாநாயகிக்காகவே தோத்திருப்பாருன்னு தெரிய வரும். அதனால ரஜினி 20 வருஷத்தில 200 கோடி சம்பாதிச்சார்னா, என்ன ஒரு குறைஞ்ச கணக்குப் போட்டாலும் ...
அவரு வருஷத்துக்கு 10 கோடி சம்பாதிச்சிருக்காரா. அதில 10% வச்சுக்குவோம். அப்டி கொறச்சி வச்சிக்கிட்டாலும் அமெரிக்காவில பொட்டி தட்ற நம்ம மக்கள் வருஷத்துக்கு ஒரு கோடிக்கு மேல சம்பாதிச்சி, ஒரு கோடி ரூபாய் மிச்சம் பார்க்கிறாங்க அப்டின்ற உண்மை எங்களுக்கெல்லாம் புரிஞ்சி போச்சி. கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கி அப்டின்றது மாதிரி எங்க டாக்டர் ஷங்கர் (அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாச்சில்ல?)உண்மையை காண்பிச்சிட்டார். இனிமயாவது பொட்டி தட்ற கூட்டம் உண்மையா அவ்வளவு பணத்தை ப்ளாக்கில வச்சிக்கிட்டு இங்க பெத்தவங்க கிட்ட மத்தவங்க கிட்ட சொல்ற பொய்யை சொல்லாம இருங்க; சரியா?

* ஏழைக் குடும்பத்தில இங்கன நம்ம ஊர்க்காட்டில பொறந்தவரு அமெரிக்கா போயி (எப்போ போயிருப்பார்- ஒரு 25 வயசில?) 20 வருஷம் உழைச்சி 200 கோடி சம்பாரிச்சி மறுபடியும் ஒரு 30 வயசுக்கார ப்ரம்மச்சாரியாவே வர்ராரு. நல்ல திரைக்கதை. சுஜாதான்னா சும்மாவா?

* அட அவரு வயசுதான் அப்டின்னா, அவரு "டேய் மாமா"ன்னு கூப்பிடுறாரே அவரு எப்படி இவரவிட இளமையா இருக்காருன்னு பாத்தா, அது ரஜினியோட தாத்தா பண்ணின "தப்பு". அதுக்கு யாரு என்ன பண்ணமுடியும்? ஆனாலும் 'டேய்! மாமா" அப்டின்றது ரொம்ப நல்லா இருக்கு!

* ஒரு ரூபாயை வச்சி 100 கோடியை அலேக்கா ஆதிட்ட இருந்து தட்டிக்கிறாரா .. நல்லா இருக்கு. ஆனா 100 கோடியை வாங்க மாமாவோடு ஆட்டோவில தனியா வந்திர்ராரு. அவ்ளோ தில்லுங்க. ஆனா ஏறக்குறைய நூறு ஆளோடு ஆதி இறங்குனதும் சரி, நம்ம கதா நாயகரு ஏதாவது புத்திசாலித்தனமா பண்ணி தப்பிச்சி ஓடிருவாரு அப்டின்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். ஒத்தையா நின்னு அத்தனை பேரையும் துவம்சம் பண்ணுவாருங்க அப்போ ரொம்பவே ஃபீல் ஆயிட்டேன். என்னையறியாம விசில் அடிச்சிட்டேன்னா பாருங்களேன். தங்கமணி இதைத் தலைப்புச் செய்தியாக்கி ஊரு உலகத்துக்கே தம்பட்டம் அடிச்சிட்டாங்க. கோபால் பல்பொடிக்குக் சொல்றாப்ல, மதுரை, சென்னை, மும்பாய், பெங்களூரு, கல்ஃப், அமெரிக்கா அப்டின்னு எல்லா இடத்துக்கும் விசில் செய்தியை ரெண்டே நாள்ல பரப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்களேன்.

* எனக்கு ரொம்பவே பிடிச்ச directorial touch என்னன்னா, ஜாதகம் பற்றிய விசயம்தான். நீங்க ஜாதகம் நம்புற ஆளா - சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினி சாகுறது மாதிரி காண்பிச்சிர்ராங்க. அதென்ன, ஜாதகம் எல்லாம் சும்மா டுபாக்கூர் அப்டின்ற ஆளா நீங்க - சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினியை உயிரோடு கொண்டு வந்திர்ராங்க. என்ன ஆளுங்க இந்த டாக்டர் ஷங்கரும் சுஜாதாவும். பின்னிட்டாங்க இந்த விஷயத்தில; அப்டியே நெக்குருகிப் போய்ட்டேன். பாப்பையா பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி இல்லீங்களா ?!

* பாப்பையான்ன உடனே அவரு ஞாபகத்துக்கு வந்திர்ரார். பட்டிமன்ற தரத்தைத் தாழ்த்திய பெருமை எப்போதுமே அவருக்குண்டு. இப்போ he has added another feather in his cap. நல்லா இருக்கு அவரு ரோல். அட, ஒரு ரோல்மாடல்னே வச்சிக்கலாமே, இல்லீங்களா?

* எம்.ஜி.ஆர். ரோல்ல தலைவரு வருவாரில்ல; அப்ப அவரு மேனரிசமா தலையைத் தட்டுவாரு; தபேலாவோ மிருதங்கமோ வாசிச்ச சத்தம் வரும். அதுவும் ரொம்ப பிடிச்சிது. நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை. இங்கதான் ஷங்கர்-சுஜாதா செய்த சூட்சுமம் புரிஞ்சிது. உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.

* அப்புறம், லிவிங்ஸ்டனின் லக, லக (இது நிஜமாகவே) ரொம்பவே பிடிச்சிதுங்க.


பி.கு.

மக்கா ஒண்ணு சொல்ல மறந்து போச்சே!
// "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்"// இந்த வசனம் வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் பார்த்தப்போ "சிங்கம் தனியாகதான் வரும்" அப்டின்றதைக் காணோமே; பன்றி மட்டும்தான் வந்திச்சி.. ! தூக்கிட்டாங்களா? ஒருவேளை சுஜாதாவின் அறிவியல் ஒட்டையைச் சரி பண்றதுக்காக தூக்கிட்டாங்களோ?

Posted by தருமி at 8:32 PM70 comments: Anonymous said...

ஐயோ... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போச்சு professor.
இந்த விமரிசனத்தை கிளாஸ் ரூமில் காலேஜ் பசங்க கிட்ட சொன்னா எப்படி இருக்கும்?

November 20, 2007 9:58 PM
இலவசக்கொத்தனார் said...

ஐயா,
நாங்களும் சிவாசி பார்த்துட்டு ஒரு ஒத்த வரி விமர்சனம் போட்டோமில்ல. என்ன, ஆட்டோவிற்குப் பயந்து சில பின் குறிப்புகள் போட வேண்டியதாப் போச்சு.

இங்ஙன பாருங்க.

November 20, 2007 10:40 PM
தருமி said...

//...16 டாலர் குடுத்து பார்த்தது.

பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.//

ஆனாலும் இது ரொம்ப அநியாயம். உங்களுக்கு டிக்கெட் எடுத்தவருக்கு - அவரு பரம்ம்ம்ம்ம ரசிகராகத்தான் இருக்கணும் - உங்க விமர்சனம் பார்த்தா எம்மாங் கடுப்பா, வயித்தெரிச்சலா இருக்கும்.

பாவங்க அவரு .. ரொம்ப நல்லவருங்க ..

November 20, 2007 11:05 PM
இரண்டாம் சொக்கன்...! said...

துன்பம் வரும் வேளையில சிரிக்கச் சொல்லுவாங்களே...

அந்த டைப் பதிவு இது...

ஹி..ஹி...

November 20, 2007 11:09 PM
Boston Bala said...November 21, 2007 12:09 AM
மாசிலா said...

ஏனிந்த காழ்ப்புணர்ச்சி?

நான்கூட இப்பத்தான் பார்த்தேன். பொழுது போக்கு படம்கிற வகையில் கொஞ்சம் சுமாராவே போகுது.

அங்கவை சங்கவை விசயத்தை தவிர ஏதோ படம் கொஞ்சம் தேவலை போல.

விடலை பசங்களுக்கு தயாரிச்ச வியாபார பொழுதுபோக்கு படத்தை பாக்கறது நமக்குத்தான் வம்புன்னு நினைக்கிறேன்.

விமரிசனத்தை இரசித்தேன்.

நன்றி தருமி.

;-D

November 21, 2007 12:25 AM
இராம்/Raam said...

ஐயா,

இதை உங்களின் வலைப்பூவில் பதிவிட்டுருந்தால் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்று இருக்கலாம்....


இட்டது Kummi only'ன்னு இருக்கும் பொழுது எல்லாரும் சொல்லுவது போலே நானும் சொல்லிக்கிறேன்...... வைத்தது பதிவு.

வரலாற்று சிறப்புமிக்க பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...

November 21, 2007 12:30 AM
Thekkikattan|தெகா said...

நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை. இங்கதான் ஷங்கர்-சுஜாதா செய்த சூட்சுமம் புரிஞ்சிது. உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.//

:-)) வேற என்னாத்த சொல்றது... சரி காமெடிதான் போங்க!

என்னோட 8 டாலர் ஒரு மணி நேரத்திற்கு சம்பாதிப்பது சேமிக்கப் பட்டது

November 21, 2007 12:37 AM
நாகை சிவா said...

உலகமே பாத்து முடிச்ச படத்த இம்புட்டு லேட்டா பாத்ததே தப்பு... இதுல இப்படி நொண்ண நாட்டியம் வேற பாக்குறீங்களே தருமி அய்யா.. இது சரியா.. இது முறையா.. இது தகுமா....

சுட சுட நாண் சாப்பிட்டா தான் அதன் ருசி தெரியும்.. அது நல்லா ஆறி போன பிறகு சாப்பிட்டு என்னது இப்படி இழுக்குதுனு சொல்லுறது என்ன நியாயம்? அந்த சமயத்தில் சுவையாக இருக்க வேண்டும் என சேர்க்கப்பட்ட மசாலாக்கள் சூடு ஆறிய பிறகு தனித்து தான் நிற்கும். அது தான் உங்கள் கதையில் நடந்து இருக்கு...

ரஜினி படத்தை எல்லாம் பார்த்தா அனுபவிக்கனும் இப்படி ஆராயக் கூடாது பை தி பை.. ஸ்ரேயா பத்தி ஏதுவுமே நீங்க சொல்லலையே.. தங்கமணி கூட இருந்த காரணத்தாலா?

November 21, 2007 1:00 AM
துளசி கோபால் said...

ஊரு உலகமெல்லாம் சிவாஜியாலே நாலு காசு பார்த்தப்ப எனக்கு படம் போட்டதுலெ பயங்கர நஷ்டம்.

நம்ம தமிழ்ச்சங்கத்தின் ப்ரொஜெக்டர்தான் இருக்கே. அதுலே ஒரு காட்சி போட்டா நம்மாட்கள் எல்லாரும் கூடி இருந்து கும்மியடிக்கலாமுன்னு ஏற்பாடு செஞ்சோம்.

மொத்த வசூல் 43 டாலர். அந்த ஹாலுக்கு வாடகை 36 டாலர். ப்ரொஜெக்டர்க்கு வாடகைன்னு பார்த்தா 5 டாலர் தரலாம். நம்ம கண்ணீர்க் கதையைப் பார்த்துச் 'சரி. போ. இன்னிக்கு உனக்கு இலவசம்'னு சொல்லிட்டாங்க.

படம் வாங்குன க்ளப்க்கு வரவு ஏழே ஏழு டாலர். எங்கேபோய் முட்டிக்க?

பேசாம ரஜினியைத்தான் கேக்கணும் நஷ்ட ஈடு உண்டான்னு:-)

மத்தபடி படம்....?

கனவு சீன்கள் பிரமாதம்:-)

November 21, 2007 1:33 AM
Anonymous said...

I enjoyed reading your post. I laughed so hard. I agree with you about this movie.

Rumya

November 21, 2007 1:45 AM
Anandha Loganathan said...

ஐயா,

நீங்க ரஜினி படம் பார்க்க போயிருந்தீங்கனா இந்த மாதிரி எழுத மாட்டீங்க. ஆனா நீங்க மத்தவங்க feedback படிச்சுட்டு ரொம்ப எதிர்பார்ப்போட போன மாதிரி தெரியுது.
ரஜினி படங்களில் 100% குடும்ப்பத்துடம் போய் பார்க்கும் குதூகலத்துக்கு உத்திரவாதம். நீங்க கும்மி பதிவு போடனும்ன்னு போய் பார்த்த படம் மாதிரி தெரியுது.

அப்புறம் தமிழ் படங்களை பத்தி ஒருத்தர் சகட்டு மேனிக்கு எழுதிருக்கார். இதை லிங்க்போய் படித்தீங்கனா அப்புறம் தமிழ் படம் பத்தி கும்மி பதிவு போட மாட்டீங்க . லிங்க பார்த்ட்டு அடிக்க வராதீங்க சாமி.

November 21, 2007 2:06 AM
cheena (சீனா) said...

நண்பா, தருமி, விமர்சனம் நகைச்சுவை - வயித்தெரிச்சல் - கோபம் எல்லாம் கலந்து எழுதுப் பட்டிருக்கிறது. உண்மை. என்ன செய்வது

November 21, 2007 4:03 AM
தென்றல் said...

தருமி, "அடி பொலி""!!

அப்புறம்...

1. அது ஏன் தமிழ்செல்வினு பேரு...இதே மாதிரிதான் அருணாச்சலத்திலும் (வேதவள்ளி) படையாப்பாவிலும்.. தமிழ்பற்றோ?

2. நயன் தாரா நடிகை.... அது அவர்களுடைய தொழில். ஆனால் தமிழ்செல்வி அப்பாவா பேராசிரியர் ராஜா எதுக்கு? தொழிலை மாத்திட்டாரா?

3. சங்கவை, அங்கவை அப்பாவாக பேராசிரியர் சாலமன் பாப்பையா. 'பழகலாம் வாங்கனு' காமெடியாம்!? இது காமெடினு வச்சிகிட்டாலும் அதுக்கு எதுக்கு சாலமன் பாப்பையா? கவுண்டமணியோ.. செந்திலோ போதாதா?

4. "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" 'எழுத்தாளர்' சுஜாதாவின் வசனம்......(ரூம் போட்டு யோசிப்பாங்களோ!....)

5.சங்கரின் அபத்தங்களுக்கு ஒரு அளவே இல்லையா? ["காதலனி"ல் மகளின் கற்பை சந்தேகப்பட்டு டாக்டரிடம் சோதனை செய்ய சொல்வதில் இருந்து ஆரம்பமோ?...]

6. "உயர்ந்த மனிதன்" மாதிரி படங்கள்தந்த அதே AVMமா? அட கொடுமையே!!

7. இந்தப்படைத்தை பார்க்க மு.க, ஜெ., ப.சி., சந்திரபாபு நாயுடு ஆர்வமாக இருந்ததாகவும் இவுங்களுக்கெல்லாம் தனித்தனியா படத்தை போட்டு காண்பிச்சாங்கலாமே! பேஷ்..பேஷ்.. ரொம்ப நல்லா இருக்கு!!
[நமக்குதான் வேலை வெட்டி இல்லை... நம்ம முதல்வருக்கும், நிதி அமைச்சருக்குமா.... அட கடவுளே!!]

இப்படிலாம் நீங்க கேள்வி கேப்பிங்கனு பார்த்தேன்...ம்ம்ம்..?

November 21, 2007 5:33 AM
துர்கா|thurgah said...

நான் இன்னும் சிவாஜி பார்க்கவில்லை

டிவியில பார்த்த சில காட்சிகளில் எனக்கும் ஒன்னு புரியவில்லை.ரஜினியைக் கறுப்புன்னு சொன்னதும் விவேக் அப்படியே பொங்கி வசனம் எல்லாம் பேசுறார்.அங்கே அங்கவை சங்கவை மட்டும் பொங்க வைச்சுடாங்களே!!

ரஜினி ரசிகர்கள் எல்லாம் எனக்கு ஆட்டோ அனுப்ப கூடாது சொல்லிட்டேன்

November 21, 2007 7:37 AM
Baby Pavan said...

தாத்தா எங்க ஆத்தா மட்டும் 2 டைம் தியேட்டர்ல போய் படம் பாத்துட்டு வந்தாங்க ஆனா என்ன ஒரு தடவ கூட பாக்க விடல.

November 21, 2007 8:01 AM
Baby Pavan said...

நாங்களாம் ரஜினி ரசிகர் ஆகரது பிடிக்கல போல இருக்கு

ரஜினி படத்தை எல்லாம் பார்த்தா அனுபவிக்கனும் ஆராய்ச்சி பண்ண கூடாதுன்னு இம்சை கூட சிவா மாமா மாதிரி தான் சொல்றாங்க.

November 21, 2007 8:04 AM
ஜோ / Joe said...

என்னது ! 'சிவாஜி' படம் ரிலீஸ் ஆயிடுச்சா!!!

November 21, 2007 8:15 AM
தருமி said...

மக்கா ஒண்ணு சொல்ல மறந்து போச்சே!
// "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்"// இந்த வசனம் வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் பார்த்தப்போ "சிங்கம் தனியாகதான் வரும்" அப்டின்றதைக் காணோமே; தூக்கிட்டாங்களா? சுஜாதாவின் அறிவியல் ஒட்டையைச் சரி பண்றதுக்காக தூக்கிட்டாங்களோ?

இத பதிவிலும் பி.கு.வா சேர்த்திர்ரேன்.

November 21, 2007 11:23 AM
தருமி said...

இரண்டாம் சொக்கன், பாபா,
நன்றி.

November 21, 2007 11:57 AM
தருமி said...

மாசிலா,
//விடலை பசங்களுக்கு தயாரிச்ச ..//

ஆனாலும் நீங்க நம்ம பதிவர்கள் நிறையப் பேரை இப்படி மோசமா பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை; ஆமா, சொல்லிட்டேன்.

November 21, 2007 11:59 AM
தருமி said...

இராம்,
அப்போ அங்கன போட்டிருந்தா நீங்க வேற மாதிரி பின்னூட்டம் போட்டிருப்பீங்களோ? எனக்கு மட்டும்
சொல்லுங்களேன் அதை...

November 21, 2007 12:00 PM
தருமி said...

தெக்ஸ்,

//யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை//

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1.எம்.ஜி.ஆர்
2. ரஜினி
3. ஷங்கர்

November 21, 2007 12:02 PM
தருமி said...

நாகைசிவா,
//ரஜினி படத்தை எல்லாம் பார்த்தா அனுபவிக்கனும்//

'அனுபவிச்ச'தாலதான இப்படி எழுதியிருக்கேன்.

//ஸ்ரேயா பத்தி ஏதுவுமே நீங்க சொல்லலையே.. தங்கமணி கூட இருந்த காரணத்தாலா?//

அட அப்படில்லாம் இல்லைங்க .. ரெண்டு பேரும் சரவணா ஸ்டோர்ஸ் ஷ்ரேயாவை அடீக்கடி சேர்ந்து ரசிச்சிக்கிட்டு இருக்கிறதால இதில ஒண்ணும் தனியா ரசிக்கலை. அந்த அம்மா வாயைப் பார்த்தாலே பிடிக்கலை அப்டின்னு நான் சொன்னாலும் தங்கமணிக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சுங்க ..!

November 21, 2007 12:06 PM
தருமி said...

துளசி,
அடுத்து அழகிய தமிழ்மகன் போடுங்க.. வசூல் பிச்சிக்கும்...

November 21, 2007 12:07 PM
தருமி said...

ஆனந்த லோகநாதன்,
//மத்தவங்க feedback படிச்சுட்டு ரொம்ப எதிர்பார்ப்போட போன மாதிரி தெரியுது.//

ஏங்க நீங்க கொடுத்த லின்க்கைப் பிடிச்சி போனா ... அதை எழுதின மனுசன் அந்தமாதிரி எதிர்பார்ப்போடு இந்த மாதிரிப் படத்துக்கு போற ஆளு மாதிரியா தெரியுது?

ஆமா, அந்த பதிவுகளுக்கு வந்தா போனா ஒரு அட்டென்டன்ஸ் கூட குடுக்கிறதில்லையா?

November 21, 2007 12:12 PM
சீனு said...

//அதனால ரஜினி 20 வருஷத்தில 200 கோடி சம்பாதிச்சார்னா, என்ன ஒரு குறைஞ்ச கணக்குப் போட்டாலும் ...
அவரு வருஷத்துக்கு 10 கோடி சம்பாதிச்சிருக்காரா. அதில 10% வச்சுக்குவோம்.//

சாஃப்டுவேர்ல வேல செஞ்சா வேற தொழில் செஞ்சு சம்பாதிக்கவே முடியாதா? ஷேர்ல பணம் போட்டு கூடவா சம்பாதிக்க முடியாது? (சீரியஸா சொல்றேன்).

//ஒத்தையா நின்னு அத்தனை பேரையும் துவம்சம் பண்ணுவாருங்க//

அங்கனதாங்க லாஜிக் உதைக்கிது. அப்போ படம் நமக்கில்ல. ஹீரோ ஒரு அசகாய சூரனா இருக்கனுமாம்...

ஆனா, அது ஏன் என்னை தவிற யாருக்கும் இந்த படம் பிடிக்கலைன்னு தெரியல. ஒரு வேளை நான் அறிவு ஜீவி இல்லையோ என்னவோ?

November 21, 2007 12:14 PM
தருமி said...

தென்றல்,

- அந்த 'அடி பொலி' அப்டின்னா என்னாங்க?

- (2) ராஜா பேராசிரியர் இல்லை. வங்கியில் வேலை பார்க்கிறார். ஆனாலும் பேராசிரியர் என்பதாலேயே சினிமாவில் நடிக்கக்கூடாதென்பதில்லையே. என்ன, பாப்பையா மாதிரிதான் நடிக்கக்கூடாது.

- (4) இதுக்கு ஒரு பி.கு. போட்டுட்டேன். படிச்சிப்பாருங்க.

-//இப்படிலாம் நீங்க கேள்வி கேப்பிங்கனு பார்த்தேன்//
அய்யோடா! கேள்வி கேக்கணும்னா அதுக்கு முடிவே இருக்காதுங்களே..

November 21, 2007 12:19 PM
தருமி said...

ஆத்தா பவன்,
வா தாயி வா .. ஏதோ இந்தப் பதிவுக்காவது உங்க ஆத்தா வரவுட்டாங்களே, அதுக்கு சந்தோசப் படு.

எங்க நீ ரஜினி மாமான்னு சொல்றதுக்குப் பதிலா இந்தப் படத்தைப் பார்த்திட்டு ரஜினி தாத்தான்னு சொல்லிருவியோன்னு ரஜினி ரசிகைக்கு பயமா இருந்திருக்கும். அதான் உன்னைக் கூட்டிட்டு போகலை போலும்.

November 21, 2007 12:23 PM
தருமி said...

ஜோ!
நான் விழுந்து விழுந்து எழுதினதில இல்லாத எபெக்ட்டை எப்படி அய்யா ஒரே வரில கொண்டாந்திட்டீங்க.

செம !!November 21, 2007 12:24 PM
தருமி said...

நன்றி துர்கா

November 21, 2007 12:25 PM
தருமி said...

சீனு,

//(சீரியஸா சொல்றேன்).''

நானும்தான் சீரியஸா கேக்கிறேன். அப்படி ஏதாவது ஒரு லாஜிக் காண்பிக்கிறது; யாரு வேண்டான்னா? அட அதுகூட வேணாங்க. தலைவருக்கு திடீர்னு ஒரு லாட்டரியில ஒரு மில்லியன் டாலர் விழுந்திச்சின்னு சொல்லுங்க. கேட்டுக்கிறோம்.

//ஏன் என்னை தவிற யாருக்கும் இந்த படம் பிடிக்கலைன்னு தெரியல.//

என்ன நீங்க இந்தப் பதிவுலகத்திலதான் இருக்கீங்களா? படம் வந்தப்போவெல்லாம் நீங்க பதிவுகளே படிக்கலையா?

//ஒரு வேளை நான் அறிவு ஜீவி இல்லையோ என்னவோ?//

என்ன கொடுமை இது, சீனு!

November 21, 2007 12:29 PM
தருமி said...

பவன்,
நீ வேற babyன்னு போட்டுக்கிட்டியா, டப்புன்னு 'ஆத்தா'ன்னு கூப்பிட்டுட்டேண்டா.. மனசில வச்சிக்காதடா..சரியாடா...
வர்ரேண்டா கண்ணுப்பா...

November 21, 2007 12:35 PM
இராம்/Raam said...

//தருமி said...

இராம்,
அப்போ அங்கன போட்டிருந்தா நீங்க வேற மாதிரி பின்னூட்டம் போட்டிருப்பீங்களோ? எனக்கு மட்டும்
சொல்லுங்களேன் அதை...
//ஐயா,

நீங்களே இதை ஜாலியா எழுதி அதை எல்லாரும் கும்மியடிக்கனுமின்னு இருக்கிறப்போ நான் என்னத்த பெருசா கருத்து சொல்லப்போறேன்....... frank'ஆ சொல்லனுமின்னா கொடுத்த 40 ரூபாய்'க்கு படம் நல்லாதான் இருந்துச்சு.

November 21, 2007 12:47 PM
தருமி said...

இராம்,

படம் நல்லா இருந்துச்சு அப்டின்னு சொல்றதுக்கும் நீங்க சொன்னமாதிரி //படம் நல்லாதான் இருந்துச்சு// அப்டின்றதுக்குமே ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிறேன்.

அதோட என் பதிவுகளில் நான் நல்ல படங்களா நினைக்கிற படங்களைப் பற்றி எழுதுறேன். சிவாஜிக்கு ஒரு கும்மி பதிவு போதும்னு நினைச்சேன்; அதான் இங்கன...
.

November 21, 2007 12:57 PM
சீனு said...

//நானும்தான் சீரியஸா கேக்கிறேன். அப்படி ஏதாவது ஒரு லாஜிக் காண்பிக்கிறது; யாரு வேண்டான்னா? அட அதுகூட வேணாங்க. தலைவருக்கு திடீர்னு ஒரு லாட்டரியில ஒரு மில்லியன் டாலர் விழுந்திச்சின்னு சொல்லுங்க. கேட்டுக்கிறோம்.//

எல்லாத்தையும் சீனாகவும் டயலாக்காகவும் காண்பிக்கனும்னு அவசியமில்லைங்கிறது என் கருத்து. திரைக்கதைக்கு தேவை சிவாஜி கையில் 200 கோடி (மைனஸ் 10 டாலர்) இருக்குங்கிறதை படம் பாக்குறவங்களுக்கு சொல்லனும் அவ்வளவு தான்.

//என்ன நீங்க இந்தப் பதிவுலகத்திலதான் இருக்கீங்களா? படம் வந்தப்போவெல்லாம் நீங்க பதிவுகளே படிக்கலையா?//

படிச்சேன். என் கருத்தையும் (சில பதிவுகளில்) சொல்லியிருக்கேன்.

November 21, 2007 2:00 PM
Kasi Arumugam - காசி said...

அட, நானும் ஏதோ பழைய இடுகைதான் ஹப்லாக் காரன் புண்ணியத்துல இப்ப வந்துட்டுதோன்னு பாத்தா, வாத்தியார் கொட்டாயில புத்தம்புதுக் காப்பி!:-)

//உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.//

அக்கம் பக்கம் நம்மள ஒரு மாதிரியாப் பாக்குராங்க!

//அந்த அம்மா வாயைப் பார்த்தாலே பிடிக்கலை அப்டின்னு நான் சொன்னாலும் //

நீங்க வேற இதை என் நண்பன் முன்னாடி சொல்லி, 'வாயை யார் பாக்குறா' அப்ப்டிங்கிறான். (எதாவுது தப்பா சொல்லியிருந்தேன்னா ரப்பர் போட்டு அழிச்சுடுங்க சார்)

உங்க வயசில இப்படி இருந்தாப் போதும்! ஜன்ம சாபல்யம்:-)

November 21, 2007 2:07 PM
சீனு said...

//என்ன நீங்க இந்தப் பதிவுலகத்திலதான் இருக்கீங்களா? படம் வந்தப்போவெல்லாம் நீங்க பதிவுகளே படிக்கலையா?//

அந்த பதிவுகளை எல்லாம் நீங்க படித்த 'பிறகும்' படம் பார்த்திருக்கிறீர்கள் என்றால், அது இந்த பதிவை போடுவதற்கு மட்டும் தானா? அப்போ எல்லாம் தெரிந்தும் படம் பார்த்த உங்களை என்னன்னு சொல்லுறது?

November 21, 2007 2:41 PM
கோவி.கண்ணன் said...

பெரிய வாத்தியாரே,

சூப்பர் விமர்சனம் !லேட்டாக வந்தாலும் லோட்டசாக வந்திருக்கு.

November 21, 2007 2:49 PM
enRenRum-anbudan.BALA said...

Professor,
அட்டகாசமான விமர்சனம்,
அபாரமான நகைச்சுவை உணர்வை பிரதிபலித்தது !

நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும், உங்கள் மேல் காழ்ப்பு எதுவும் இல்லை ;-))

காசி கூறிய
"உங்க வயசில இப்படி இருந்தாப் போதும்! ஜன்ம சாபல்யம்:-)"
என்பதற்கு ஒரு பலமான ரிப்பீட்டு

Pl. read my sivaji review at

http://balaji_ammu.blogspot.com/2007/07/350.html

என்றென்றும் அன்புடன்
பாலா

November 21, 2007 3:07 PM
நட்டு said...

எங்க சிவாஜியை மனசுல நினைச்சுகிட்டு இந்த சிவாஜிக்கு ஊசிப் போன தீபாவளி பட்டாசு மாதிரி மெல்ல விமர்சனம் அனுப்புறீங்க!நானும் கூட ரெண்டு நாளைக்கு முன்னாடி ரஜனியோட (இல்ல பாலச்சந்தர் சாரோட) மூன்று முடிச்சுக்குப் பிறகு என்னைக் கவராத ரஜனி எப்படி இத்தன மக்களக் கவுருராறுன்னு யோசிச்சி கிட்டே நடந்தேனுங்க...சும்மா சொல்லக்கூடாது அந்த மொட்டத் தலைக்குள்ளரயும் ஏதோ இருக்கும் போலத்தான் தோணுதுங்க.இல்லாவாட்டி இத்தன மக்கள கவரமுடியாதுங்க.

November 21, 2007 4:43 PM
கண்மணி said...

ம்ம்ம்....லேட் பட் லேட்டஸ்ட்.ஹிட்..
நான் 'சிவாஜி'யச் சொல்லல.உங்க கும்மியச் சொன்னேன்

November 21, 2007 5:44 PM
இராம்/Raam said...

//தருமி said...

இராம்,

படம் நல்லா இருந்துச்சு அப்டின்னு சொல்றதுக்கும் நீங்க சொன்னமாதிரி //படம் நல்லாதான் இருந்துச்சு// அப்டின்றதுக்குமே ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிறேன்.

அதோட என் பதிவுகளில் நான் நல்ல படங்களா நினைக்கிற படங்களைப் பற்றி எழுதுறேன். சிவாஜிக்கு ஒரு கும்மி பதிவு போதும்னு நினைச்சேன்; அதான் இங்கன...//

வாத்திகளுக்கு பதில் சொல்ல தெரியுதோ இல்லிய்யோ, திரும்ப ஏதாவதொரு கேள்வியை ஒன்னே கேட்டுறீங்க...

November 21, 2007 6:36 PM
தருமி said...

சீனு,
//திரைக்கதைக்கு தேவை சிவாஜி கையில் 200 கோடி (மைனஸ் 10 டாலர்) இருக்குங்கிறது//
அதுக்கு, அவரு மென்பொருள் ஆர்க்கிடெக்டா வேலை பார்க்கிறார்; 20 வ்ருஷத்தில சம்பாதிச்சது -இப்படியெல்லாம் ஏன் வசனம் எழுதணும்?

//அந்த பதிவுகளை எல்லாம் நீங்க படித்த 'பிறகும்' படம் பார்த்திருக்கிறீர்கள் என்றால்,..//
பதிலகள்:
அது என்னமோங்க..இந்த சினிமாவில மட்டும் என்னதான் சொன்னாலும் போய் பார்த்துடு(றோம்)றேன்.

November 21, 2007 10:34 PM
தென்றல் said...

// அந்த 'அடி பொலி' அப்டின்னா என்னாங்க?//

சூப்பர்!! [மலையாளத்தில்.. ]

November 21, 2007 10:36 PM
தருமி said...

காசி,
//உங்க வயசில இப்படி இருந்தாப் போதும்!//
அப்டியெல்லாம் சொல்லி பில்டப் கொடுத்திர்ரதுதான்.


ஆனாலும் அந்த சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில அப்படி குளோஸ்-அப் காமிக்கும்போது பார்த்துதானே -வாயை - ஆகவேண்டியதிருக்கு!

November 21, 2007 10:37 PM
தருமி said...

கோவி,
//லேட்டாக வந்தாலும் லோட்டசாக வந்திருக்கு.//

இதுதான் லேட்டஸ்ட்டா இருக்கு; ரொம்ப நல்லாவும் இருக்கு

November 21, 2007 10:40 PM
தருமி said...

எ.அ.அபாலா,
//..நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும், உங்கள் மேல் காழ்ப்பு எதுவும் இல்லை..//
ஆமா, பிறகு நாம என்ன அப்ப்டியா பழகியிருக்கோம் !


November 21, 2007 10:51 PM
தருமி said...

நட்டு,
//ந்த மொட்டத் தலைக்குள்ளரயும் ஏதோ இருக்கும் போலத்தான் தோணுதுங்க.இல்லாவாட்டி இத்தன மக்கள கவரமுடியாதுங்க.//
இல்லீங்க, (நம்ம)உங்களை கவர்ரது உள்ளே உள்ளது இல்லீங்க .. ஆனாலும் எதுன்னு கரீட்டாவும் சொல்ல முடியாத ஒண்ணுங்க .. அதைத்தான் charisma அப்டின்றாங்க

November 21, 2007 10:53 PM
தருமி said...

கண்மணி,

வசிஷ்டர் வாயால ... இல்ல .. இல்ல.. கும்மித் தலைவி வாயால சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றிங்க.

November 21, 2007 10:54 PM
தருமி said...

தென்றலுக்கு மீண்டும் நன்றி

November 21, 2007 10:55 PM
தருமி said...

இராம்,
//திரும்ப ஏதாவதொரு கேள்வியை ஒன்னே கேட்டுறீங்க... //

இங்க பாருங்க .. இப்ப என்ன கேள்வி கேட்டுட்டேன் அப்டிங்கிறீங்க ???????

November 21, 2007 10:56 PM
அபி அப்பா said...

சாரே! இன்னிக்குதான் கும்மி கலை கட்டுச்சு! டீச்சர் சொன்ன மாதிரி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கிட்டீங்க!!! ராம் கூல் கூல்!!!!!

November 21, 2007 11:41 PM
இராம்/Raam said...

//தருமி said...

இராம்,
//திரும்ப ஏதாவதொரு கேள்வியை ஒன்னே கேட்டுறீங்க... //

இங்க பாருங்க .. இப்ப என்ன கேள்வி கேட்டுட்டேன் அப்டிங்கிறீங்க ???????/

ஐயா,

நான் கேட்ட முதல் கேள்வியே இந்த பதிவை உங்களோட வலைப்பூவிலே இட்டுருந்தா அனைத்துதரப்பட்ட விமர்சனங்களையும் வாங்கிருக்கலாம்.அதை விட்டுட்டு இந்த படத்துக்கு விமர்சனமெல்லாம் எழுதினா கும்மிதான் அடிக்க முடியும்ன்னு நீங்களா கேள்விதாளை கொடுத்து நீங்களே அதிலே விடை ஒன்னே எழுதி அதை தப்புன்னு வேற திருத்தி தாறீங்க.

// Anandha Loganathan said...

ஐயா,

நீங்க ரஜினி படம் பார்க்க போயிருந்தீங்கனா இந்த மாதிரி எழுத மாட்டீங்க. ஆனா நீங்க மத்தவங்க feedback படிச்சுட்டு ரொம்ப எதிர்பார்ப்போட போன மாதிரி தெரியுது.
ரஜினி படங்களில் 100% குடும்ப்பத்துடம் போய் பார்க்கும் குதூகலத்துக்கு உத்திரவாதம். நீங்க கும்மி பதிவு போடனும்ன்னு போய் பார்த்த படம் மாதிரி தெரியுது.

அப்புறம் தமிழ் படங்களை பத்தி ஒருத்தர் சகட்டு மேனிக்கு எழுதிருக்கார். இதை லிங்க்போய் படித்தீங்கனா அப்புறம் தமிழ் படம் பத்தி கும்மி பதிவு போட மாட்டீங்க . லிங்க பார்த்ட்டு அடிக்க வராதீங்க சாமி.//

ஆனந்த் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க???? ஒங்களை பத்திதான் சொல்லி வைச்சிருக்கீங்க...

இங்கே பதிவிட்டதுனாலே உங்களுக்கு வரும் நேர்மையான மாற்று கருத்துக்கள் வாராமே எல்லாரும் கும்மியடிச்சிட்டாங்க, நீங்களும் சரவணா ஸ்டோர்ஸ்,குளோஸ்-அப்'ன்னு பதில் சொல்லிட்டிங்க...


வரலாற்று சிறப்புமிக்க அதாவது லே(லோ)ட்டஸ்ட் பதிவிற்கு மிக்க நன்றி...

November 22, 2007 1:41 AM
இராம்/Raam said...

//அபி அப்பா said...

சாரே! இன்னிக்குதான் கும்மி கலை கட்டுச்சு! டீச்சர் சொன்ன மாதிரி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கிட்டீங்க!!! ராம் கூல் கூல்!!!!!/

தொல்ஸ்ண்ணே,

நான் எங்கன ரென்சன் ஆகப்போறேன்....? கருமம் பிடிச்ச அழகிய தமிழ் மகனை'ல்லாம் பார்த்து தொலைச்சே என்னாலே சிவாஜி'யை பத்தி இந்தளவுக்கெல்லாம் விமர்சனம்'ன்னு பதிவை படிச்சிட்டு கோபம் வந்துச்சு, வாத்தி நம்ம ஊரு'கிறதுனாலே பாசத்திலே அதுவும் போயிருச்சி...

November 22, 2007 1:46 AM
goma said...

சிவாஜி விமரிசனம் நம்ம சனங்களும் அத்தனை பேரும் நிச்சயமா ஒதுக்குவாங்க ...ஆனாலும் சிவாஜிக்கு விசில் அடிச்சான் குஞ்சுகள் இருப்பாங்க அடிப்பாங்க.

November 22, 2007 11:13 AM
தருமி said...

இராம்,

//பதிவை படிச்சிட்டு கோபம் வந்துச்சு,//

அப்டியா? சரி .. சரி ..

November 22, 2007 2:32 PM
தருமி said...

அபி அப்பா,goma,
மிக்க நன்றிங்க...

November 22, 2007 2:34 PM
தருமி said...

இராம்,
//ஆனந்த் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க???? ஒங்களை பத்திதான் சொல்லி வைச்சிருக்கீங்க... //

அவரு கொடுத்த லின்க் பார்த்தீங்களா நீங்கள்?

//இங்கே பதிவிட்டதுனாலே உங்களுக்கு வரும் நேர்மையான மாற்று கருத்துக்கள் வாராமே ...//

புரியலை சாமியோவ்!!

November 22, 2007 4:46 PM
ரசிகன் said...

//அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.//

அய்யோ.. எம்புட்டு அறிவு உங்களுக்கு..அப்பறம் எப்படி அந்த படத்துக்கு போனிங்க?..விமர்சனங்கள படிக்காம?..
டீவுல டிரைலர் பாத்தே..நா எஸ்கேப் ஆயிட்டேனுங்க..நாம ரொம்ப உஷாருல்ல....ஹிஹி...

November 22, 2007 7:19 PM
ரசிகன் said...

// நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை//

ஹா..ஹா.. இது டாப்பு......

November 22, 2007 7:20 PM
இராம்/Raam said...

/தருமி said...

இராம்,
//ஆனந்த் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க???? ஒங்களை பத்திதான் சொல்லி வைச்சிருக்கீங்க... //

அவரு கொடுத்த லின்க் பார்த்தீங்களா நீங்கள்?//

எல்லாம் பார்த்துட்டு தான் இவ்வளவும் பேசினதே...

//இங்கே பதிவிட்டதுனாலே உங்களுக்கு வரும் நேர்மையான மாற்று கருத்துக்கள் வாராமே ...//

புரியலை சாமியோவ்!!//

ரொம்ப நல்லது....

November 22, 2007 8:16 PM
delphine said...

"லேட்டா படத்தை பார்த்தாலும் அதிர்ர்ர்ர் ர வச்சுட்டீங்கள்ல --- i mean உங்க விமர்சனம்.

November 22, 2007 8:18 PM
தருமி said...

இராம்,
COOL ..!

November 23, 2007 6:51 PM
தருமி said...

நன்றி டாக்டர்.

November 23, 2007 6:51 PM
கண்மணி said...

இராம் இது சரியில்ல.எதுன்னு கேக்கறீங்களா?
இங்க பதிவிட்டதால தருமி சாரின் பதிவுக்கான 'நேர்மையான' விமர்சனம் வரலைன்னு சொன்னது.
இது ஒதுக்கப்பட்ட ஏரியாவா ராம்?
யாரும் சீரியஸானவங்க பதிவுல 'கும்மி' யடிப்பதில்லையா?
இல்ல இங்க பதிவிட்டால் அந்த பதிவுக்கு மதிப்பில்லையா?
யார் பதிவிட்டது?என்ன தலைப்புன்னு பார்த்தா போதும் நேர்மையான பின்னூட்டம் தானா வரும்?ஆமா நேர்மையானது ன்னா என்ன?இங்கன பின்னூட்டமிட்டவங்க 'கும்மி' யா அடிச்சாங்க.
அப்படித் தோனுச்சின்னா அது 'சிவாஜி' யோட லட்சணம்.
யு டூ ராம்

November 23, 2007 8:48 PM
இராம்/Raam said...

//கண்மணி said...

இராம் இது சரியில்ல.எதுன்னு கேக்கறீங்களா?
இங்க பதிவிட்டதால தருமி சாரின் பதிவுக்கான 'நேர்மையான' விமர்சனம் வரலைன்னு சொன்னது.
இது ஒதுக்கப்பட்ட ஏரியாவா ராம்?
யாரும் சீரியஸானவங்க பதிவுல 'கும்மி' யடிப்பதில்லையா?
இல்ல இங்க பதிவிட்டால் அந்த பதிவுக்கு மதிப்பில்லையா?
யார் பதிவிட்டது?என்ன தலைப்புன்னு பார்த்தா போதும் நேர்மையான பின்னூட்டம் தானா வரும்?ஆமா நேர்மையானது ன்னா என்ன?இங்கன பின்னூட்டமிட்டவங்க 'கும்மி' யா அடிச்சாங்க.
அப்படித் தோனுச்சின்னா அது 'சிவாஜி' யோட லட்சணம்.
யு டூ ராம்/

கண்மணி,

நீங்க கேட்க வந்தது எனக்கு புரியுது... ஆனா என்னோட கேள்வியே தமிழ் படங்களிலே இருக்கிற நிறைகுறைகளை தருமிக்குரிய ஸ்டைலிலே சொல்லுவாரு, இனி எடுக்கப்போற படத்துக்கெல்லாம் அவரோட போன பதிவிலே எழுதியிருந்தார். அங்க வந்த பின்னூட்டங்களும் இங்க வந்த பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு பாரூங்க...

என்னோட ஆதங்கமே தருமியோட பதிவிலே வர்ற சுவராசியமான பின்னூட்ட,கருத்து பரிமாற்றங்கள் போயிருச்சேன்'னு தான்.

யூ டூ'ன்னு கேட்டுருக்கீங்க , நான் இன்னும் யார்கிட்டையும் டூ விடல..

November 23, 2007 9:22 PM
தருமி said...

ரசிகன்,
//அப்பறம் எப்படி அந்த படத்துக்கு போனிங்க?..விமர்சனங்கள படிக்காம?.....//

விமர்சனங்கள் படிச்சேனுங்க. அதுக்குப் பொறவும் ஏன் போனேன்னு கேக்குறிங்க.. ஏங்க தெரிஞ்சே வாழ்க்கையில் பல தப்புகள் பண்றதேயில்லையா நாம எல்லோரும்.அட, கல்யாணம் பண்ணிக்கிறதில்லையா நாம எல்லோருமே .. கேட்டா unavoidable evil சொல்லிடுறோம்ல அது மாதிரிதான் வச்சுக்கங்க..

November 23, 2007 10:58 PM
G.Ragavan said...

ஹி ஹி பாத்துட்டீங்களா.. ஹி ஹி... ஐயோ பாவம். ஆண்டவர் உங்களைக் காப்பாத்தட்டும்.

November 24, 2007 5:28 PM
காட்டாறு said...

ஹா ஹா ஹா... சூப்பர்! படத்துல உங்களுக்கு பிடிச்சது.. ரொம்ப ரொம்ப சூப்பருங்க.... ஹா ஹா ஹா.. கண்ணுல தண்ணி வர சிரிச்சேன்....

December 5, 2007 5:29 AM

242. ஆ.வி.யின் வரவேற்பறையில் ...

This is just for the sake of record ...நவ,14, 2007 - ஆனந்த விகடனில் – பக்கம் 166 – விகடன் வரவேற்பறை!


ஞாநி – கலைஞர் சர்ச்சை, ‘கற்றது தமிழ்’, யூ டியூப் டாக்குமென்ட்டரிகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஒரு பக்க சார்போ முன் முடிவுகளோ இல்லாமல் எழுதுகிறார் தருமி. யதார்த்தமான அணுகுமுறையுடன் அறிவார்த்தமாக, பல்வேறு கோணங்களில் நின்று விஷயங்களை அலசுகிறார். தருமி மதுரைக்காரர் என்பதால் அதிகமான பதிவுகள் மதுரை பற்றியே உள்ளன. சாலைகளை மறித்துக் கொண்டு நிற்கும் கோயில்கள் குறித்த சென்சிட்டிவான பதிவில், நாத்திகம் பேசாமல் உணர்வு பூர்வமாக பிரச்சனையின் ஆழத்தை நமக்குப் புரியவைப்பது அழகாக இருக்கிறது. ‘அட, தமிழ்ப்பட இயக்குநர்களே …’ பதிவு நியாயமான ஆதங்கம். பார்த்து ரசித்த ‘யூ ட்யூப்’ படங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளார். புத்துணர்ச்சிக் குளியலுக்குச் சிறந்தது இந்த வலைப் பூ.

Thursday, November 15, 2007

241# + * x $-% + @x& + ^() = தமிழ் சினிமா ! :(

மேலே தலைப்பில் குடுத்திருக்கிற 'கணக்கு' / பார்முலா புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். புதுப்படம் ஒண்ணு வரப்போகுதுன்னு வச்சுக்கங்க. நம்ம டைரடக்கர்கள், தொழில் விற்பன்னர்கள், அதில் வரும் நடிக, நடிகையர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமா சொல்ற பார்முலாதான் மேலே தலைப்பில் கொடுத்திருக்கிறது.

புரியலையா? எப்படிப் புரியும் உங்களுக்கு! விளக்கம் சொல்லியே ஓஞ்சி போயிடுவேன் போல இருக்கு !!

இப்போ பாருங்க. The officer and the gentleman அப்டின்னு ஒரு இங்கிலீசு படம் வந்திச்சி. நல்ல படம். நம்ம ஊரு ஃபேமஸ், டேவிட் கியர் ரிச்சர்ட் கியர் நடிச்ச படம். ரெண்டு நண்பர்கள். ஒருத்தர் நம்மாளு டேவிட் ரிச்சர்ட் கியர்; பட்டாளத்தில சேருவாங்க; கடுமையான ட்ரெய்னிங் இருக்கும்; ஒரு கருப்பர் அவங்களுக்கு ட்ரெய்னிங் குடுப்பாரு. இதுக்கு நடுவில நண்பருக்கு காதல் வந்து, கனியாம காயாகிப் போக அவரு தற்கொலை பண்ணிக்குவாரு. நம்மாளு, டேவிட் கியர் கடைசியில் ஆபிசரா ஆவாரு; அப்போ அந்த ட்ரெயினிங் கொடுத்தவரே இவருக்கு சல்யூட் அடிச்சி ஆபிசருக்கு மரியாதை செய்வாரு.

சுபம்.

இப்போ இதை நம்ம தமிழ்ப்படமா மாத்துவோமா?

"மீண்டும் The officer and the gentleman"

முதல்ல, முக்கியமா நம்ம ஹீரோ, அவர் நண்பர் இருவரையும் அறிமுகம் செய்றதுக்காக கதை ஆரம்பிச்ச உடனேயே ஒரு கோயில் செட் முன்னால ஒரு குத்துப் பாட்டு போட்டுர்ரோம். பாட்டு பாதி போனதும் கூட்டத்தில இருக்கிற கதாநாயகி பகல் கனவில் அவங்களும் சேர்ந்து அந்தக் குத்துப்பாட்டுல ஐக்கியமாயிருராங்க.

ஹீரோ யாரையும் லவ் பண்ணாம காரியத்திலேயே கண்ணாயிருப்பார். ஆனால் அந்த கதாநாயகி, அதாங்க அந்த ட்ரெய்னிங் சென்டரின் தலைவரின் பொண்ணு, அவரை விரட்டி விரட்டி லவ்ஸ் பண்ணுது. அதுக்கு அடிக்கடி கனவு காண்ற வியாதி வேற இருக்கு. அதனால் கலர் கலரா, வெளிநாடு உள்நாடுன்னு பல இடத்தில நூறு நூறு பேரோடு நம்ம ஹீரோவோடு கனவில டூயட் பாடுது.

நண்பர் காதலிப்பாரே ... அவருக்கு ஒரு மெலடி டூயட்; அத ஒரு பிறந்த நாள் விழாப் பாட்டா வச்சுக்குவோம். பிறந்த நாள் பாட்டை ரொம்ப சோகமா இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாடுவாங்க; பாட்டு வரிகள் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் புரியும்; ஆனா வேற யாருக்கும் புரியாது. அவங்க எல்லாரும் பேசாம செம ஜாலியா, கேக் சாப்பிடுவாங்க. சரியா ..

அடுத்து, காதல் அம்போ ஆனதும் ஒரு pathos. இவரு ஒரு மலைக்கு இந்தப் பக்கம் இருந்து பாட, அந்த மலைக்கு அந்தப் பக்கம் இருந்து பதிலாக பொண்ணு பாடுது .. (என்னது, நிறைய தமிழ்ப்படத்தில இதுமாதிரி சீன் வந்திருக்கா .. அதே, அதே!)

நடுவில அந்த பொண்ணின் அண்ணன்காரங்கள் & அடியாட்கள் இவங்களுக்கும் நண்பனுக்கும் ஒரு ஃபைட். (என்னது, காதலுக்கு மரியாதை நினைவுக்கு வருதா; அதுக்கு நான் என்ன பண்றது?) ஆனா, பைட் பூராவும் Matrix பட ஸ்டைலில் வச்சுக்குவோம். ( Matrix படம் ஒரு fantasy அப்டின்றீங்களா? அதெல்லாம் கேட்கப் படாது) கதாநாயகன் திரும்பினா, கையைத் தூக்கினா அந்தப் பக்கம் நாலு இந்தப் பக்கம் நாலு - எல்லோரும் காத்தில பறந்து பறந்து போறாங்க. (பின்னே கயிறு கட்டி இழுத்தா போக மாட்டாங்க!) நிச்சயமா காத்தில நாலஞ்சு கரணம் அடிச்சி விழுகிறதுமாதிரி கொஞ்ச பேரைக் காண்பிக்கணும். இந்த சண்டை நடக்கும்போது நம்ம ஹீரோ உதவிக்கு வந்த பிறகுதான் சண்டை சூடு பிடிக்குது. ஹீரோ வந்தபிறகுதான் தள்ளு வண்டியில கலர் கலரா பொடி இருக்கு; அதில அடியாட்கள் விழுந்து கலர் எஃபெக்ட் கொடுக்குறாங்க; கையில அருவாளை வீசுறதில காய்கறிக்கடையில இருக்கிற புடலங்காயெல்லாம் வெட்டுப் படுது; ஒரே பயங்கரம்தான்!

இந்தமாதிரி ஆபீசர் ட்ரெய்னிங் அப்டின்னா அங்க ஒரு காமெடியன் இல்லாட்டி என்ன பண்றது? இந்த ரெண்டு நண்பர்களுக்கும் நடுவில ஒரு மூன்றாவது ஆளு. அவருக்கும் அந்த ட்ரெய்னிங் கொடுக்கிற கருப்பருக்கும் எப்போவும் லடாய். கருப்பர் 'குண்டக்க மண்டக்க' கேள்வி கேட்க நண்பர் தெறிச்சி ஓடுவார் எப்பவும். வசனத்தில நடிப்புல சிரிப்பு வராம போய்ட்டா என்ன பண்றது? அதனால நாலஞ்சி இடத்தில இந்த காமெடியன் போறவங்க வர்ரவங்க கிட்ட எல்லாம் அடி வாங்குறார்.

கடைசியில நண்பர் பேனாவினால 'விஷம்' அப்டின்னு எழுதி ஒட்டியிருக்கிற ஒரு சின்ன பாட்டில்ல இருக்கிறதை அப்படியே அண்ணாந்து வாயில ஊத்திக்கிடுறார். பேக்லலைட் எஃபெக்ட் இப்போ கொடுக்கிறோம். அப்போது நம்ம இரண்டாம் கதாநாயகி ஓடிவந்து காலி பாட்டிலைப் பார்த்துட்டு ஒரு பக்க வசனம் ஒண்ணு கடல் மடை திறந்தது மாதிரி பேசுறாங்க. பதிலுக்கு அவர் திக்கித் திக்கிப் பதில் வசனம் பேசுறார். வாயிலிருந்து ரத்தமெல்லாம் வருது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறாங்க. அப்போ கதாநாயகன் வர்ரார். உயிரைக் கொடுத்தும் உன்னைக் காப்பாற்றுவேன் அப்டின்னுட்டு அங்க நிக்கிற கார், ஜீப் எதுவும் வேண்டாம்னுட்டு தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு நடந்தே மருத்துவ மனைக்கி ஓடுறார் .. ஓடுறார். அந்தப் பொண்ணு சாமி சிலைக்கு முன்னால் நின்னு பாட ஆரம்பிச்சிர்ராங்க. சாமி சிலையில் இருந்து பூ ஒண்ணு கீழே விழுகுது. அதே நேரத்தில் அங்க ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் 'நல்ல வேளை, சரியான சமயத்தில கொண்டு வந்தீங்க; இன்னும் 27 நிமிஷம் லேட்டாயிருந்தாலும் ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது' அப்டின்னு சொல்லிக்கிட்டே கையைத் தொடச்சிக்கிட்டு வர்ரார்.

சுபம். இப்போ மறுபடியும் முதல் பத்தியைப் படியுங்க.

இப்போ புரிஞ்சிருக்கணுமே .. நம்ம தமிழ்ப்படம் எது புதுசா வந்தாலும் இயக்குனர்கள் இன்னும் மற்றவங்க எல்லோரும் சொல்றது: இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)

நம்ம ஆளுங்களும் எந்த லாஜிக்கும் வேணாம்; இந்த ஃபார்முலாவே போதும் அப்டின்ற நிலைமையை விட்டு மாறவேயில்லை. படம் பார்க்குறது entertainment-க்குத்தான்; அதனால் இப்படித்தான் படம் இருக்கணும் அப்டின்னு மேதாவித்தனமா பேசிட்டு, அந்தப் பக்கம் போய் வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரந்தான்யா, எப்படி படம் எடுக்குறாய்ங்க அப்டின்னு சொல்லிட்டு போறோம். அவனுங்க படத்திலேயும் காமெடி இருக்கு; பாட்டு இருக்கு; ஜுஜா வேலையிருக்கு - ஆனா அது அது தனித்தனி படமா இருக்கு. காமெடியையும் சீரியஸ் கதையையும் ஒண்ணா சேத்து பினைஞ்சி கொடுக்கிறதில்லை. நம்ம ஊர்ல நம்ம கதாநாயகன் வேல்கம்பை அப்டி ஊன்றி வச்சார்னா, அந்தக் குச்சி மட்டும் எதிராளிகளை ஒரு சுத்து சுத்திட்டு மறுபடி அவர்ட்டயே வந்து நிக்குது; தியேட்டர்ல விசில் பறக்குது. அட, அவங்களை மாதிரி நாமும் ரசனைகளைப் பிரித்து தனித்தனியே வேறு வேறு படங்களாக எடுக்கக் கூடாதா? genre அப்டின்னு சொல்லுவாங்களே அதத்தான் சொல்றேன். காமெடி படம்னு எடுத்தா அதில எத வேணும்னாலும் காமிக்கலாம். கரடி என்ன சிங்கம் கூட எதிர்த்தாப்பில வந்து மூஞ்சில எச்சி துப்பிட்டு போறது மாதிரி காமிக்கலாம். ஆனால், உதாரணமா, பம்பாய் சீரியஸ் படம் - சரி; பின் அதில எதுக்குக் குத்துப் பாட்டு? copy cat இருக்காரே - மணிரத்தினம் - அவரின் படங்களில் (கன்னத்தில் முத்தமிட்டால் தவிர)குத்துப் பாட்டு இல்லாத படம் இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இவரை இந்த மீடியாக்காரர்கள் இந்த அளவு தூக்கி வைத்துப் பேசுகிறார்களோ?

ஆக இந்த ஜென்மத்தில் நம் தமிழ்ப் படங்கள் அதுமாதிரி genre வாரியாக வரப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ...


"லிங்குசாமிக்கு ஜே!

"முருகதாஸுக்கு ஜே !

coffee with anu நிகழ்ச்சியில் சூர்யா, முருகதாஸ் கலந்துகிட்ட நிகழ்ச்சி. இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் விக்ரம், சூர்யா ரெண்டு பேரையும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பார்க்கிறதுக்கே நல்லா இருக்கு. ஒரு துடிப்போடு casual-ஆக இருக்கிறது நல்லா இருக்கு. ஆனா அந்த நிகழ்ச்சியில் பிடிச்சது முருகதாஸ் சொன்ன ஒரு விஷயம். தமிழ்த் திரைப்படங்களை அடுத்த தளத்துக்கு எடுத்திட்டுப் போகணும் அப்டின்னு சொல்லும்போது இந்த genre பற்றிச் சொன்னார் - இதே சொல்லைப் பயன்படுத்தினாரென்றே நினைக்கிறேன்.

அப்பாடான்னு இருந்திச்சி. அட ஒரு இயக்குனருக்காவது இந்த அடிப்படை விஷயத்தைப் பற்றிய தெளிவு இருக்கேன்னு சந்தோஷமா இருந்திச்சு. இனிம அந்த விஷயம் பரவி, மற்ற இயக்குனர்களை அதை பாதித்து அவங்களும் மாறி நம் மக்களும் மாறி ... ம்ம்..ம்.. இதெல்லாம் இப்ப நடக்குற விஷயம் இல்லைதான். இருந்தாலும் முதல் முதல்ல இதைச் சொன்ன-

"முருகதாஸுக்கு ஜே !

பி.கு.
ரிச்சர்ட் கியருக்குப் பதிலா டேவிட் கியர் ..
முருகதாஸுக்குப் பதிலா லிங்குசாமி ..

மாத்தி மாத்தி பேருகளைப் போட்டுட்டேன்; மன்னிச்சுக்கோங்க.
நமக்கு பெயரா முக்கியம் ..விஷயம்தான முக்கியமுங்க (கீழ விழுந்தாலும் ... அப்டின்னு என்னமோ சொல்லுவாங்க ,, இல்ல?!)

Saturday, November 03, 2007

240. தருமி - ஒரு நாட் இரவுக் குறிப்பு

தருமி - ஒரு நாட் இரவுக் குறிப்பு

அல்லது

தூக்கத்தில் பிறந்த பின்நவீனத்துவம் ... ?

அல்லது

ஃப்ராய்டைத்தான் கூப்பிடணும்!


நேற்று இரவு பார்த்த படம் RAINCOAT. O Henry-யின் கதைத் தழுவலாக இந்தியில் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா நடித்தது. மொத்தம் ஆறே ஆறு கதாபாத்திரங்கள் - நாயகன், நாயகி, நாயகனின் அம்மா, நண்பன், நண்பனின் மனைவி, வீட்டுச் சொந்தக்காரன். இதில் நாயகனின் அம்மா, நண்பன் இருவருக்கும் இரண்டு இரண்டு வசனம் இருக்கலாம்; நண்பனின் மனனவிக்கு அரைப் பக்க வசனம் -ஆனாலும் மிகவும் அழுத்தமான, கதையின் மய்யப் புள்ளியைக் காட்டும் வசனம்; வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒன்றரைப் பக்க வசனம். மீதி முக்கால்வாசிப் படம் முழுவதும் நாயகன் ஒரு நாற்காலியில் சிகரெட்டுப் பிடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு கட்டிலில் காலைக்கட்டிக் கொண்டு ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதைப்படி காலை ஆரம்பிக்கும் கதை இரவோடு முடிகிறது. costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை. படத்தின் கடைசி ஐந்து நிமிடம், அதிலும் தன் நிலைமையைப் புரிந்து கொண்டதால் நண்பனின் மனைவியின் கடந்த கால நினைவுகளைப் புரிந்து கொள்ளும் நாயகன் "திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா?" என்று கேட்கும் கேள்வி அழகு என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சொல்லும் பதிலின் ஆழம் ...

இன்னொரு பெருமூச்சு ... இப்படியெல்லாம் எப்போது தமிழ்ப் படம் வரும்? அதையும் ரசிக்கும் நிலைக்கு எப்போது நம் தமிழ் ரசிகர்கள் உயர்வார்கள்? (இது பலருக்கு உறுத்தும்; அதுமாதிரி ரசனைதான் உயர்வென்று எப்படிக் கூறப் போச்சுன்னு வந்திராதிங்க'ப்பு!)

அது போகட்டும் ...

இப்பதிவு இந்தப் படத்தைப் பற்றியதல்ல. படம் பார்த்தேன். தூங்கப் போனேன். உடனே தூங்கியும் விட்டேன். இரவெல்லாம் உடல் நன்றாகவே தூங்கியது. விழித்திருந்தது எது - அது மூளையா, மனமா - தெரியவில்லை. ஒரே ஒரு விஷயத்தைச் சுற்றிச் சுற்றி அந்த "அது" -மூளையோ, மனசோ (இனி அதை "அது" என்று சொல்லிவரப் போகிறேன்.)- தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. அட! இயங்கி வந்ததோ என்னவோ சரிதான்; ஆனால், 'அது' இயங்கி வந்தது இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைச் சுற்றி சுற்றிதான். allure & allude என்ற இரண்டு சொற்களைச் சுற்றிச் சுற்றியே 'அது' வந்ததுதான் ஏனென்று தெரியவில்லை. இந்த இரு வார்த்தைகளுமே பார்த்த படத்துக்கோ முந்திய பகலில் நடந்த நிகழ்வு எதற்குமோ தொடர்பில்லா வார்த்தைகள். பின் ஏன் இந்த இரு வார்த்தைகளை மட்டும் 'அது' சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்?

allure = The power to attract through personal charm
allude = Make a more or less disguised reference to


இதிலும் பல கனவுலகத்திற்கேயான பல பின்புலங்களில் இந்த வார்த்தைகளை, அதன் பொருளைத் தேடித் தேடி 'அது' போகின்றது. காடு, மேடு, மலைமுகடு என பல இடங்களில் சஞ்சரித்ததாகத் தோன்றியது. இரு சொற்களுக்குமே பொருள் எனக்கு /அதற்கு (?) நன்கு தெரியும். இருப்பினும் கனவா அல்லது நனவா அதில் நான் பொருள்தேடி அலைகிறேன். முதல் சொல்லுக்குப் பொருளும் அந்தச் சொல்லை வைத்து வாக்கியங்களும் அமைக்கிறேன். இரண்டாவது சொல்லுக்குப் பொருள் சொல்கிறேன். ஆனால் 'எதுவோ' அதை மறுக்கிறது. அச்சொல்லை வைத்து வாக்கியம் அமைக்க முயலாது தடுமாறுகிறேன். அந்தக் கோபத்தில் ஒரு மலையுச்சியில் இருந்து எதையோ ஓங்கி உதைத்துத் தள்ளுகிறேன். அனேகமாக நான் உதைப்பது அந்த வார்த்தை 'allude'- யைத்தான் என்று நினைக்கிறேன். நான் மலை முகட்டுக்கு இந்தப் பக்கமிருந்து உதைக்க அந்தப் பக்கம் போய் அது விழுகிறது. மலைமுகடு பனிபடர்ந்து வெள்ளை வெளேரென்று இருந்ததாக நினைவு. ஜோலி முடிந்தது என்று கைகளைத் தட்டு விட்டுக்கொண்டு திரும்புகிறேன். பின்னால் ஏதோ சத்தம். திரும்பிப் பார்த்தால் மீண்டும் 'allude'! இந்தப் போராட்டம் துவந்த யுத்தமாகவே இரவு முழுவதும் நடந்தது போல் நினைவு.

வழக்கம் போலவே 7 மணிக்கு விழிப்பு வர, இன்று தங்கமணிக்கு ட்ரைவர் வேலை பார்க்கத் தேவையில்லை என்ற நினைவு வரவும் மீண்டும் தூங்க முயன்றேன். தூங்கினேனா, இல்லை கனவுகளில் இருந்தேனா என்பது தெரியாத ஒரு நிலை. இரவில் வந்த இரு வார்த்தைகளுகே மீண்டும் வந்து விளையாட்டு காண்பித்தன. இப்போது அரைகுறைத் தூக்கம் என்பதாலோ என்னவோ இரவில் 'அது' செய்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு ஒவ்வொன்றாய் வர அதை முன்னிலிருந்து பின்னாகவும், பின்னாலிருந்து முன்னாகவும் நினைவு படுத்த முயன்றேன். ஏனோ அப்போது பின்நவீனத்துவம் என்பது மண்டைக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் பின்நவீனத்துவமோ என்று ஒரு கேள்வியும், இதுதான் அது என்று ஒரு பதிலுமாக ஒரு சேரத் தோன்றியது.

* இப்படி யாருக்காவது வெறும் வார்த்தைகள் - வார்த்தைகள் மட்டுமே - கனவில் வந்திருக்கின்றதா?

* முன்பின் தொடர்பில்லாமல் இரு வார்த்தைகள் கனவில் வந்து வதைத்ததேன்?

* அதுவும் why did allude elude so much?


*** பின்குறிப்பு: இப்பதிவை சுகுணாவோ, அய்யனாரோ அவர்கள் நடையில் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது - சீரியசாத்தான் சொல்கிறேன்!

Monday, October 15, 2007

239. கற்றது தமிழ்

வழக்கமாக, காலை (இரவு ?) 1-3 மணிக்குள் ஒரு முறை எழுந்து பாத்ரூம் சென்று விட்டு மீண்டும் வந்து படுத்தால் அடுத்து 7 மணிக்கு மேல்தான் பள்ளியெழுச்சி. ஆனால் சென்ற வெள்ளியன்று மாலை 'கற்றது தமிழ்' படம் பார்த்துவிட்டு வந்து படுத்து தூங்கி பின்னிரவில் வழக்கம்போல் எழுந்து அதன் பின் படுத்தால் தூக்கத்தில் 'ப்ரபாகர்' வந்து தொல்லை கொடுத்து தூங்க விட மாட்டேனென்றான்.

//பார்த்து முடித்துவிட்டு என்னால் சீராய் மூச்சுவிடமுடியவில்லை.
இந்த பதிவில் என்ன எழுதவென்று சரியாய் தெரியவில்லை.தொடங்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருந்தது (இனி அது பார்த்துக்கொள்ளும்)// -
(அய்யனாருக்கு நன்றி)

மலைக்கோட்டை மாதிரி ஒரு தமிழ்ப் படம் பார்த்தோம்; அதற்கு விமர்சனம் ஒன்று எழுதினோம் என்றால் எவ்வளவு சுலபமா இருக்கு. காமெடி பற்றி ரெண்டு வார்த்தை; சண்டை பற்றி வழக்கமா வச்சிருக்கிற டெம்ப்ளேட்ல இருந்து ஒண்ணு; குத்துப் பாட்டு பற்றி ஒண்ணு அப்டின்னு எழுதிட்டு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்துக்குள் ஒரு மார்க் போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். வழக்கமா வர்ர நம்ம தமிழ்ப்படங்களுக்கு விமர்சனம்னு ஏதாவது எழுதிப் பாத்திட்டு, இப்போ இந்த மாதிரி படத்துக்கு முயற்சிக்கும்போதுதான் திரைப்பட விமர்சனம் என்பதே உண்மையிலேயே எவ்வளவு கஷ்டமான விஷயம்னு தெரியுது.


//நம் தமிழ்ப் படங்களை இரண்டே வகையாய் பிரிக்கலாம்; இரண்டுமே படங்கள் எடுக்கும்ஆட்களின் sincerity பற்றியது. முதல் வகை: புத்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாவது லாஜிக்கோடு எடுக்கப்படும், அல்லது எடுக்க முயற்சிக்கப்படும் சீரியஸ் படங்கள். இரண்டாவது வகை: முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்கள்.//
இது என் பழைய பதிவொன்றில் நான் எழுதியது.

'கற்றது தமிழ்'- இந்தப் படம் நான் சொன்ன இருவகைகளில் முதல் வகையில் வரக்கூடிய படம்தான். என்றாலும் லாஜிக் கொஞ்சம் அதிகமாகவே உதைக்க இடம் கொடுத்துவிட்டார் இயக்குனர் ராம்.


இப்படம் obsessive-compulsive disorder என்ற மனநோய்வாய்பட்ட ஒருவனின் கதை என்று நான் கொண்டுள்ளேன். சிறு வயதிலிருந்தே தொடர்ந்த பல இழப்புகள், கொடூர மரணங்களின் அருகாமை, அதன்பின் ஏற்படும் ஏமாற்றங்கள், அவமானங்கள் எல்லாமே அவனை ஒரு மனநோயாளியாக்குகின்றன என்பது சரியே. தற்கொலை முயற்சியும் தோல்வியடைய முழு மனநோயாளியாகி, பின் ரத்தவெறி ஏறியவனாக மேற்சொன்ன obsessive-compulsive disorder என்ற நிலைக்கு வருகிறான். போதைக்கு அடிமையான ஒருவன் போதைப் பொருள் கிடைக்காத போது அனுபவிக்கும் வேதனையான நிலை - cold turkey - அவனுக்கும் வருவதாக இயக்குனர் காண்பித்துள்ளார். அந்த நிலையில் கொலைவெறி உச்சநிலைக்கு வர தொடர்கொலைகள் செய்கின்றான்.இதுவரை சரியே. ஒரு psychopath-ன் கதை என்று கொண்டிருக்கலாம்.

ஆனால், இந்த அவனது மனநிலைக்கு அவன் தள்ளப் படுவதை உறுதிப் படுத்தவோ என்னவோ, கொடூர மரணங்களை, இழப்புகளை, இகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து காண்பிக்கிறார். அதில் ஒரு செயற்கைத்தனம் வந்துவிடுகிறது. அதோடு பல லாஜிக் இல்லாத காரியங்கள்:
* அப்பாவின் மரணத்திற்குப் பிறகு வந்திருக்கக்கூடிய பணம் அவனது வறுமை நிலையை மாற்றியிருக்க வேண்டுமே?
* துப்பாக்கி, குண்டு எப்படி வாங்கினான்? காசு ஏது?
* தொடர் கொலைகள் செய்தும் - அப்படி ஒன்றும் பிரமாதமாகத் திட்டம் தீட்டி ஏதும் செய்யாதிருந்தும் - எப்படி எதிலும் மாட்டிக் கொள்ளவேயில்லை?
* முதல் கொலையைச் செய்துவிட்டு சர்வ சுதந்திரனாக எலெக்ட்ரிக் ரயிலில் கையில் வழியும் ரத்தத்தோடு செல்வது ...
* வெறும் பலூன் சுடும் ஏர்கன் சத்தத்தோடு துப்பாக்கி சத்தத்தையும் இணைத்து இரண்டு பேரைச் சுட்டுக் கொல்வது..
* ஒரு காவல் துறையதிகாரியை ஒரு வாரம் தொடர்ந்துவிட்டு குருவியைச் சுடுவதுபோல் எவ்விதத் தடயமின்றி சுட்டுவிட்டுச் செல்வது...
* இவனது திடீர்வருகை நியாயமாகத் தரக்கூடிய அதிர்ச்சியோ, ஆனந்தமோ ஆனந்திக்கு ஏற்படாதது ...
* "தற்செயலாக" மறுபடியும் ஆனந்தியைச் சந்தித்து, காப்பாற்றி, சர்வ சாதாரணமாக அங்கிருந்து அவளோடு வெளியேறுவது ...
* படத்தின் கடைசியில் சில இடங்களில் அழகான ஆங்கிலம் பேசுவதாகக் காண்பித்ததை முதலிலேயே காண்பித்திருந்தால் ப்ரபாகருக்கும் அவனது கம்ப்யூட்டர் அறை நண்பனுக்கும் இடையில் உள்ள தராதர வித்தியாசத்தைக் காட்டியிருக்கலாமே...
* அல்லது 1100 மார்க் வாங்கிய ப்ரபாகரின் அந்த அறைத் தோழன் 890 மார்க் மட்டுமே வாங்கியவன் என்று காண்பித்தும் வித்தியாசத்தைக் கோடிட்டிருக்கலாமே ...
* எல்லாம் முடிந்து "முதன்முறை கதவு திறந்ததே" என்று பாட்டு பாடிவிட்டு, மறுவாழ்க்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்த பிறகும் எதற்காக தன் பழைய கொலைகளை விலாவாரியாக விவரித்து அதைப் படமாக்கி தொலைக்காட்சி நிலையத்திற்குத் தானே நேரே போய் கொடுக்க வேண்டும்?

- பட்டியலை இன்னும் நீட்டலாம் ...

2500 ஆண்டுகாலத் தமிழ் படித்தவனை விட 25 வருஷ கம்ப்யூட்டர் படித்தவனுக்குக் கிடைக்கும் சம்பளம், BPO வேலைக்குக் கிடைக்கும் சம்பளம், உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள் - இன்ன பிற பல சமூகக் காரியங்களை அவனது மனப் பிறழ்வுக்குக் காரணம் காண்பிப்பதற்காகவே படத்தில் இயக்குனர் திணித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவன் வாழ்க்கையில் நடந்த இழப்புகளும் சோகங்களும் மட்டுமே போதுமே அவன் மனநிலை பாதிக்கப் படுவதற்கு. இவையெல்லாம் எதற்கு?

எனக்குப் பிடித்த நல்ல விஷயங்களையும் ஒரு பட்டியலிடலாம்.

* அந்த ருத்ர தாண்டவம் மிகவும் பிடித்தது.
* ராஜஸ்தான் காட்சிகளும், ஆனந்தியோடு செய்யும் பயணமும், அந்த மலைகளுக்கிடையே நீண்டு கிடக்கும் சாலையும் மிக அழகு
* யதார்த்தமான இடங்கள் -அது ஆனந்தி வசிக்கும் ஒட்டுக் குடித்தன வீடாகட்டும்; ப்ராபகர் தங்கியிருக்கும் பிரம்மச்சாரிகளின் விடுதியாகட்டும் - உண்மையோ, ஆர்ட் டைரக்டரின் படைப்போ எல்லாமே மிக பொருத்தமாக உள்ளன.
* அந்த தமிழ் வாத்தியார்தான் அழகன் பெருமாளாமே .. இயல்பான இறுக்கமான பாத்திரப் படைப்பு. (இயக்குனர் தன் ஆசிரிய-நண்பரின் பெயரைக் கதாநாயகனுக்கு வைத்ததாகக் கேள்வி (?). அதற்குப் பதிலாக அந்த தமிழ்வாத்தியாருக்கு அந்தப் பெயரை வைத்திருக்கலாமோ?)
* புதுமுகம் அஞ்சலியின் யதார்த்தமான நடிப்பு
* ஜீவாவின் நடிப்பு
* தரமான படப் பிடிப்பு
* ஆடியன்ஸ் இருக்கும் இடத்தில் கருணாஸை உட்கார வைத்திருக்கும் உத்தி. இயக்குனர் படம் பார்ப்பவர்களைத் தொடர்பு கொள்ளும் அந்த உத்தி, கருணாஸைப் பார்த்து ப்ரபாகர் கேள்வி கேட்பது, பலவற்றிற்கு அவர் (நானும்தான்!) பதில் தெரியாமல் முழிப்பது - பிடித்தது.

- இன்னும் உள்ளன.

படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதை விடவும் படங்களின் நீளத்தைக் குறைத்தால் வரிவிலக்கு கொடுக்கலாமென்று ஏற்கெனவே ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். அதைப் போல இந்தப் படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதற்குப் பதில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக எடுத்திருந்தால், அந்த BPO ஆளைப் புரட்டி எடுக்கும் நீள காட்சியோ, கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நடத்தும் ஆர்ப்பாட்டம் - (அந்தக் காட்சி எதற்கு? கடைவாயின் ஓரத்தில் ஓர் அலட்சியப் புன்னகையால் உணர்த்த வேண்டிய காட்சிக்கு இத்தனை நீளமா?)- இவைகளையும், இன்னும் சில காட்சிகளையும் வெட்டியிருந்தால் கதையின் தேவையற்ற பல கூறுகளைத் தவிர்த்திருக்கலாம். நடுவில் சிலரது பேட்டிகள் படத்தை ஒரு செய்திப் படமாக மாற்றக்கூடிய நிலையைத் தவிர்த்திருக்கலாம். அதோடு இவைகள் படத்தைத் தூக்கி நிறுத்துவதைவிடவும், கதையை அதன் மய்யக் கருத்திலிருந்து விலக்கி எடுத்துச் செல்லத்தான் காரணமாயுள்ளன.

ஒருவேளை
இந்த சந்தைப் படுத்தப் படும் சமுதாயத்தின் அவலங்களையும்,
உலகமயமாக்கலின் தாக்கம் எளியவர்களை எப்படி வருத்துகிறது என்பதையும்,
உண்மையான புத்திசாலிக்கு மரியாதை இல்லை,
நுனிநாக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் மரியாதை நம் தாய்மொழிக்கு இல்லை,
- என்பது போன்ற விஷயங்களைத் தனது கதைக்களனாக, மய்யக் கருத்தாகக் காண்பிக்கத்தான் இந்த கதையமைப்பை இயக்குனர் தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று நினைத்தேன். அப்படி நினைத்திருந்தால் கதையில் ப்ரபாகரின் இளம்வயது சோகங்கள் எதற்கு என்று கேள்வி வந்தது. அவனது மனப் பிறழ்விற்கான காரணங்கள் அந்த இளம் வயது சோகங்களே என்றுதான் தோன்றுகிறது. அப்படியெனில் இந்த மற்றைய சமூகக் காரணிகளை, பதில் கொடுக்காமல் கேள்விகளை மட்டும் எழுப்பும் காட்சிகளின் தேவை என்ன?

இவைகளையெல்லாம் தாண்டி, இயக்குனரைப் பாராட்ட பலவிஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயக்குனரின் sincerity and seriousness தெளிவாகத் தெரிகிறது. நம் இயக்குனர்கள் வழக்கமாக commercial compromises என்ற ஒன்றின் பின்னால் தங்கள் குறைகளை ஒளித்துக் கொண்டு தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு போவது போல் இல்லாமல் முதல் படத்திலேயே எந்த காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கப் பட்டிருப்பதே இந்த இயக்குனரை தனிப் படுத்துகிறது. கனவு டூயட் கிடையாது. பாடல்களும் பின்புலப் பாடல்களாக - montage type - வருகின்றன. கதாநாயகிக்கு மேக்கப் கிடையாது. ஹீரோ மேல் எந்தவித ஹீரோயிசமும் திணிக்கப் படவில்லை. இப்படி பல நகாசு வேலைகள் செய்து தன் திறமையை முதல் படத்தில் காண்பித்திருக்கிறார். The parts are quite good but not the whole.

கடைசி சீனில் சிறுவயதில் ஆனந்தி கொடுத்த அந்த இறகை மீண்டும் அவளிடமே கொடுக்க, பறக்கும் இறகைச் சிறு வயதில் துரத்தி ஓடும் காட்சி - அதைப் பார்க்கும்போது Tom Hanks நடித்த Forrest Gump படம் நினைவுக்கு வந்தது.

Is the feather an eternal eluding thing to Prabhakar and Ananthi...?


.

Tuesday, October 09, 2007

238. ஞாநியும் என் நண்பர்களும்

Pick the odd man out என்று தேர்வுகளில் ஒரு கேள்வி கேட்கப் படுவதுண்டு. அதுபோல் கீழே ஒரு கேள்வி:

Pick the odd man out:
1. தெக்ஸ்
2. லக்கி லுக்
3. ஞாநி
4. சுகுணா திவாகர்
5. சிறில் அலெக்ஸ் - இன்னும் கொஞ்சம் பெயர்கள் உண்டு. இப்போதைக்கு இது போதும்.

உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ஒருவேளை ஞாநி தவிர எல்லோரும் நம் தமிழ்ப் பதிவர்கள் என்று கொண்டால், சரியான விடை: ஞாநி. சரிதான்.

என் பதிலும் அதுவாகத்தான் இருக்கும்; ஆனால் அதற்குரிய காரணம் மட்டும் வேறு. ஞாநி தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்கள்; பழகியவர்கள்; நண்பர்கள். ஞாநியை டிவியில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.


பகுதி I:

இந்த மனுஷன் ஞாநி, ஆ.வி.யில் 'ஓ! பக்கங்கள்' & 'அறிந்தும் அறியாமலும்' அப்டின்னு எழுதிட்டு வர்ரார். ஓரளவு தவறாமல் வாசித்து வருகிறேன். நன்றாகத்தான் எழுதிவருகிறார். என்ன ஆச்சுன்னு தெரியலை, பாவம் இந்த மனுஷன் இப்போதைக்கு கொஞ்ச நாளாக நம் தமிழ்ப் பதிவர்களுக்கு punch bag ஆக மாறியுள்ளார்.

முதலில் அவர் எப்படி செக்ஸ் பற்றி எழுதலாம்னு ஒரு சுடு பதிவொன்று வந்தது. அப்போது அதை நான் வாசித்தேன்.மன்னிக்கணும், எழுதியது யார் என்பது மறந்துவிட்டது. தொடர்ந்து தெக்கிகாட்டான் ஒரு பதிவு போட்டார். அவர்களது பதிவில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு - ஞாநி என்ன Sexology படித்த மருத்துவரா, அல்லது அத்துறையில் மேற்படிப்பு படித்தவரா; இப்படி அரைவேக்காடுகள் எழுதி அதில் தவறு இருந்துவிட்டால் மக்கள் அப்படியே தவறான ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு தவறிப் போய்விடமாட்டார்களா என்ற அங்கலாய்ப்புடன் எழுதியிருந்தார்கள்! நானும் ஞாநியின் அந்தக் கட்டுரைகளையும் வரி வரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு வாசித்துள்ளேன். வரி வரியாக வாசிக்காததற்குரிய காரணம் 'இதெல்லாம்தான் எனக்குத் தெரியுமே!' அப்படி என்கிற 'மேதாவித்தனம்"தான். என்ன எழுதிவந்தார்?

இளம் பருவத்து உடம்பின், மனத்தின் மாறுபாடுகள், அதனால் குழந்தைகளுக்கு வரக்கூடிய குழப்பம், ஊடகங்களில் வரும் சில தவறான தகவல்கள் (சிறப்பாக, masturbation பற்றி) தரக்கூடிய அச்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றி எழுதி வந்தார். நம் இளம் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தாலே நாம் எல்லோரும் இதைப் போல் எழுத முடியுமே. இதற்கென்று தனிக் கல்வி பெற்று வரவேண்டுமா என்ன? ஆனால் அவர் அப்படி மேம்போக்காக நிச்சயமாக எழுதவில்லை. இந்த அறிவியல் உண்மைகளை, சொந்த அனுபவத்தோடு சேர்த்து ஒரு basic sex education பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாமே. அதைத்தான் அவர் செய்தார். நன்றாகவும் செய்திருந்தார். அது ஒன்றும் பெரிய அறிவியல் கட்டுரை அல்ல; மக்களை எளிதாக சேரக்கூடிய ஓர் ஊடகத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு நான்கு நல்ல விஷயங்களை, நான்கு பேர் தெரிந்து கொள்ள காரணமாயிருந்துள்ளார். அந்த ஒரு புதிய நல்ல முயற்சிக்காக அவரை வாழ்த்த வேண்டும்.

அந்தந்த துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் நானும் நீங்களும் எதை எழுத முடியும். என் முந்திய பதிவு நம் தமிழ் சினிமா இயக்குனர்களை நோக்கி எழுதப்பட்டது. சினிமா பார்ப்பவன் என்பதைத் தவிர எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ முதலில் போய் நாலைந்து படம் இயக்கிப் பார்த்துவிட்டு அதன் பிறகு இதையெல்லாம் எழுது என்று யாரும் சண்டைக்கு வரவில்லையே. அது சினிமா, அதுவும் நீ உன் பதிவில் எழுதுகிறாய்; யார் அதைப் படிக்கிறார்கள்(!)? அப்படியே படித்தாலும் அதன் தாக்கம் பெருமளவில் இருக்காது; ஆனால், ஆ.வி. பொன்ற ஒரு வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதும், பதிவுகளில் எழுதுவதும் ஒன்றா என்பீர்களாயின், நிச்சயமாக ஞாநி செக்ஸ் பற்றியெழுதியதில் என்ன தகவல் தவறு கண்டீர்கள் என்று சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு, எழுதுவதே தப்பு என்பது என்ன நியாயம்? அப்படியென்றால், ஹைகூ பற்றியும், சங்கப் பாடல்கள் பற்றியும் ஏன் சுஜாதா எழுதுகிறார் என்றா கேட்பீர்கள்? இல்லை, வெண்பா பற்றி நம் பதிவர்கள் ஜீவாவும், கொத்ஸும் எப்படி எழுதலாம்; அவர்கள் என்ன வித்வான் தேர்வு எழுதினார்களா, இல்லை, புலவர் பட்டம் பெற்றார்களா? என்றா கேட்பீர்கள்? செல்லாவும் CVR-ம், ஆனந்தும் எங்கே போய் நிழற்படக் கலை பற்றிப் படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வந்து கட்டுரை எழுதுகிறார்கள்? இப்படியே கேட்டுக் கொண்டே போனால் ....

யாரும் எதையும் எழுதுவதற்கு இந்தந்த தகுதி வேண்டுமென்று சொல்ல நமக்கென்ன அருகதை. அருகதை என்பதைக் கூட விடுங்கள். யாரும் எதையும் எழுதலாம்; எழுதட்டும். ஆனால் தவறாக எழுதியதாகத் தெரிந்தால், வாருங்கள், உண்டு இல்லை என்று பார்த்துவிடுவோம்.ஞாநி பாலியல் பற்றி இதுவரை எழுதியதில் உள்ள தகவல் பிழைகளைப் பட்டியலிடுங்கள். நாமா அவரா என்று பார்த்துவிடுவோம். அதைவிட்டு விட்டு அவன் அதை எழுதக் கூடாது; இவன் இதை எழுதக் கூடாதென்பது ஒரு வேடிக்கையான விவாதம் மட்டுமல்ல; எழுதுபவனுக்கு வேதனையானதும் கூட. அதோடு இதுபோன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் "படித்தவர்களை" வைத்து எழுதச் சொல்லிப் பாருங்கள்; படிக்க ஆளிருக்காது. வேறொன்றுமில்லை; அவர்கள் அனேகமாக ஆழமாக எழுதுவார்கள் பல ஆதாரங்கள் அது இது என்று. அப்படிப்பட்ட அறிவியல் கட்டுரைகளை எத்தனை பேர் வாசிப்பார்கள்.

கடைசி வார ஆ.வி.யில் அரவாணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நான் உயிரியல் படித்தவன்தான். இருப்பினும் எனக்கும் புதிய தகவல்களாக இருக்குமளவிற்கு அந்தக் கட்டுரையை ஞாநி எழுதியுள்ளார். தயவு செய்து வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் - அது ஒரு நல்ல தகவல் நிறைந்த கட்டுரையா இல்லையா என்று.

யார் எழுதுகிறார்கள் என்பதா முக்கியம்; எழுதப்பட்டது சரியானதுதானா என்பதுதானே முக்கியம்.


பகுதி II

அதே ஞாநி கலைஞர் ஓய்வு பெறவேண்டிய நேரமிது என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டார். கெட்டுது போங்க நிலமை .. இவர் எப்படி இதைச் சொல்லலாமென கண்டனங்கள். ஞாநியென்ன தெருவில் போகும் எவனும் கேட்கலாம் இந்தக் கேள்வியை. காரணம் கலைஞர் இப்போது நமது முதலமைச்சர். என்னை ஆள்பவன் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஓர் அளவுகோல் இருக்கும். ஏன், எம்.ஜி.ஆர். பேசக்கூட முடியாமல் இருந்தாரே (அப்போ நாங்க வேற, கல்லூரி ஆசிரியர்கள் ஸ்ட்ரைக் செஞ்சிட்டு, சிறைக்குள் மாட்டிக்கிட்டு இருந்தப்போ, முதலமைச்சரின் உடல் நிலையினால் எங்கள் விடுதலை நீட்டிக்கப் பட்ட போது .. )பேச முடியாத ஆளெல்லாம் அந்த நாற்காலியில் இருந்தால் இப்படித்தான் என்றுதான் பேசினோம்; தவறில்லையே அதில்.

அதோடு நரைத்த தலையோடு எந்த அரசியல் தலைவர் இருந்தாலும் 'அடுத்தது யார்?' என்று ஒரு பெரிய கேள்விக் குறியோடு ஊடகங்கள் வலம் வருவது உலகளாவிய ஒரு விஷயம். தி.மு.க. கட்சிக்காரர்களையும் சேர்த்தே சொல்கிறேன் - சென்ற தேர்தல் முடிந்து கலைஞர் முதல்வர் ஆனதும் இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டாலின் முதல்வராக்கப் பட்டு, கலைஞர் கட்சித்தலைமையில் இருந்துகொண்டு வழி நடத்துவாரென்பதுதானே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்வளவு ஏன், சமீபத்தில் சேலத்தில் அவர் பேசியதை வைத்து விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்ற பேச்சு கட்சி வட்டாரங்களிலேயே வந்ததே. ஒருவேளை எல்லோரும் நினைத்தது போல் அப்போதே ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டியிருந்தால் (Stalin is definitely my personal choice.) சில விஷயங்கள் நடந்தேறாமல் போயிருந்திருக்கும். இப்போது ஸ்டாலினுக்கே போட்டி என்பது போன்ற சேதிகளுக்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும். But all these are just hypothetical...

விஷயத்துக்கு வருவோம்.

ஞாநி இந்தக் கட்டுரைக்கு எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தே எழுதியிருக்கிறார் என்பது அவரது முதல் பத்தியிலேயே தெரிகிறது. //பாரதி வழியில் பேசாப் பொருளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!// (ஆச்சரியக்குறியும் அவர் போட்டதுதான்!!) இந்தத் துணிச்சலுக்காகவே அவருக்கு என் வாழ்த்துக்கள். Calling a spade a spade ( இதில் ஒன்பதாவது )எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்.

கலைஞரை எங்கும் குறையாகப் பேசாமல் அவரது வயது, அதனால் அவருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய தொல்லைகள் இவைகளைப் பற்றிப் பேசிவிட்டு, இனி அவர் //அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; சந்திப்பதற்கான புதிய விமர்சனங்களும் இல்லை// என்று சொல்லி ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்திருப்பதைக் கூறுகிறார்.இத்தனைக்கும் பிறகு //பதவியைத் தூக்கி எறிய வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?// என்று கேட்டிருப்பதில் என்ன தவறு என்பது எனக்குப் புரியவில்லை. இதில் என்ன உள்குத்து இருக்கிறது?

//தனக்குப் பாதுகாப்பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: "பாத்ரூம்ல கால் இடறிடுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டாயிடுச்சு"// - இது ஞாநி எழுதியுள்ளது. தடித்த எழுத்துக்கள் என்னுடையவை. அந்த தடித்த எழுத்துக்களை விலக்கி விட்டு மறுபடியும் வாசித்துப் பாருங்கள். 'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞாநி எழுதுகிறார் - இப்படி உள்ளது சுகுணாவின் பதிவில். கண்ணகி சிலை விவகாரத்திலும் இதே போல் ஒரு பதிவில் (எந்தப் பதிவென்று தெரியவில்லை)ஒரு குற்றச்சாட்டு. அதையும் வாசித்துப் பார்த்தேன். ஞாநியின் கூற்றில் தவறில்லை. குற்றச்சாட்டில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சுதான் இருந்தது. அந்த விகடன் ஏதென்று தெரியாததால் இங்கு முழுதாக அதை மேற்கோளிட முடியவில்லை.

என்னை, என் நாட்டைத் தலைமை தாங்குபவன் அறிவாளியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அவன் திறமைசாலியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அதேபோல் நல்ல திடகாத்திரக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு. சொல்லப் போனால் முழு ஆற்றலோடு இயங்க நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நமது உரிமை. கிளிண்டனையும், டோனி ப்ளேயரையும், இன்றைய புஷ்ஷையும் பார்க்கும்போதும், நமது சங்கர் தயாள் சர்மாக்களையும், வாஜ்பாய்களையும் பார்க்கும்போதும் சங்கடமாகத்தான் எனக்கு இருக்கிறது. சொல்வது தவறென்றாலும் சொல்கிறேன்: இதில் முந்தியவருக்கு நான் வைத்த பெயர் lame duck. அதன்பிறகு வாஜ்பாயும் அப்படி ஆனபோது முந்தியவருக்கு lame duck -senior என்ற பட்டத்தையும், பிந்தியவருக்கு lame duck (both literally and figuratively )- Junior என்ற பெயரையும் வைத்தேன்.

நமக்குப் பிடித்ததை மட்டும்தான் எல்லோரும் எழுத வேண்டுமென்பது எப்படி முதிர்ச்சியான அறிவுள்ள எதிர்பார்ப்பாக இருக்க முடியும். அமெரிக்க அதிபராக தேர்தலில் நிற்பவர்களின் பழைய கால வாழ்க்கையையே புரட்டி எடுத்துப் போட்டு விடுகிறார்கள். யாருடைய தேர்தல் என்று நினைவில்லை. ஆனால், அதிபருக்கு நின்ற ஒருவர் தனது கல்லூரிக் காலத்தில் ஒரு பாட்டில் பியர் அடித்து காவல்துறையிடம் மாட்டியது பத்திரிக்கைகளில் போட்டு பூதாகரமாக்கியது அங்கு நடந்தது. ஒவ்வொரு வேட்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களும் பத்திரிக்கைகளில் அலசப் படுகின்றன. நான் எப்படியும் இருப்பேன்; ஆனால் எனக்குத் தலைவனாக இருக்க வேண்டியவன் ஒழுங்கானவனாக இருக்க வேண்டுமென்பது அந்த நாட்டுக்காரர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கே அப்படியெல்லாம் ஏதுமில்லை. நம்மை மாதிரி எல்லாம் (ஒழுங்காக) இல்லாமல் இருப்பதே எல்லா அரசியல்வாதிகளுக்குரிய லட்சணம் என்பது நம் ஊர் ஒழுங்கு. அதுதான் போகிறது, இளம் வயதுக்குரிய ஆரோக்கியமான உடல் நிலையோடு இருக்க வேண்டுமென்பது கூடவா தவறு?

சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயியையும் பற்றி நீ முன்பு எழுதினாயா? இப்போது மட்டும கலைஞரைப்பற்றி எழுத வந்துவிட்டாயே அப்டின்னு ஒரு கேள்வி (யெஸ்.பா.,அது நீங்க கேட்டதுதானே?) சரி அய்யா, நான் அப்போது அவர்களைப் பற்றி எழுதாதது தவறுதான் என்று ஞாநி சொல்லிவிட்டால் அவர் இப்போது எழுதியதை சரியென ஒப்புக் கொள்வீர்களா? அன்னைக்கி நீ அது செய்யலை. இன்னைக்கி எப்படி நீ செய்யலாம் என்பது என்ன விவாதம்! அட! யார்மேல கரிசனமோ அவரைப் பற்றி எழுதத்தான் செய்வாங்க - இதுவும் ஒரு வாதம்தான்!


//கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞாநியோ நாமோ அல்ல// - இது சுகுணா. இல்லை சுகுணா, அவர் நம் முதல்வர். அவரைப் பற்றி, அவரது செயல்பாடுகள் குறித்து, நாமும் ஞாநியும் கவலைப் படலாம்; படணும். எவனாவது மழைநீர் சேமிப்பு செய்யாம இருந்து பாருங்க அப்டின்னு சொன்னது மாதிரி, எவனாவது ஹெல்மட் போடாம இருந்து பாருங்கன்னு சொல்ற அளவுக்கு மனசுல திண்மை இருக்கணும், மேடைக்குத் துள்ளி ஓடி ஏறி, தொடர்பா பேசுற அளவுக்கு உடம்புல சக்தி இருக்கணும் அப்டின்ற கவலை/எதிர்பார்ப்பு நமக்கும் வேணும்; ஞாநிக்கும் வேணும். ஏன்னா, அவர் பொது மனுஷன்; நம் முதல்வர்.

//சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.// இதுவும் சுகுணா. என்ன சுகுணா இது? இப்போ ஆட்சி பீடத்தில் இருக்கிறவங்களைத்தான் அதிகமா விமர்சிக்கணும். நீங்களே ஒத்துக்கிறீங்க, அந்த ஆளு ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்; ஆனால் 'சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார்' அப்டின்றீங்க. அதுதானே இயல்பு.

இதெல்லாம் போகட்டும். கடைசியாக ஒன்று: ஜெயேந்திரர் விஷயத்தில் ஞாநியின் நிலைப்பாடு நமக்கெல்லாம் உகந்ததாக இருந்ததல்லவா? அப்போது தெரியாத அவரது பூணூல் இப்போது மட்டும் நம் கண்களுக்கு ஏன் தெரியவேண்டும்? நமக்குப் பிடிக்காத ஒன்றை செஞ்சிட்டா உடனே அதைப் பார்க்கணுமா? வேண்டாங்க .. ஏன் அப்டி சொல்றேன்னா, எனக்குத் தெரிஞ்சே ஜாதி மறுப்பை உளமார உணர்ந்து பூணூலைத் தூக்கி எறிஞ்சவங்க இருக்காங்க. அந்தமாதிரி நல்ல மனுசங்களும் நீங்க இப்படி பேசுறதைப் பார்த்து மறுபடியும் பூணூலை எடுத்துப் போட்டுக்கணுமா?

உங்கள் கோபங்கள் எங்கே எப்படி இருக்கணும்னு அப்டீன்ற என் எதிர்பார்ப்பை இடப் பங்கீடு குறித்தான என் கட்டுரைகளில் கூறியுள்ளேன். உங்களைப் போன்ற அரசியல் தொடர்பும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கவனிக்க வேண்டுமென்றே என் கடைசிக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா? (இப்பதிவை வாசிக்கும் மக்கள் அந்த என் பழைய பதிவிற்கும் வந்துவிட்டு போங்கள்; சந்தோஷமாயிருக்கும் எனக்கு)


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: வயதுக்குரிய உங்கள் கோபம் எங்கே, எப்படி, எதற்குப் பயன்பட வேண்டுமோ அங்கே பாயட்டும். சமீபத்தில் பெங்களூரு I.I.Sc.-ல் தலித் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலை இருப்பதைப் பார்த்துக் கோபப்படுங்கள்; நான் குறிப்பிட்டுள்ள என் பதிவில் கூறியிருக்கும் அநியாயங்களுக்கு எதிராகக் கோபப்படுங்கள். ஆனால், ஞாநியின் மீது நீங்கள் கொண்டுள்ள கோபம் கிஞ்சித்தும் நியாயமற்றது. இங்கே உங்கள் கோபமும், சக்தியும் வீண் விரயமாகிறது. இது வேண்டாமே!

பி.கு. நான் யாரை சந்தோஷப்படுத்த இப்படி எழுதியிருக்கக் கூடும் என்று ஐயம் தோன்றும். (இல்லையா, லக்கி?) நானே சொல்லி விடுகிறேன். இக்கட்டுரையை எழுதியது என் திருப்திக்காக, என் மகிழ்ச்சிக்காக மட்டுமே.

Monday, October 08, 2007

237. அட தமிழ்ப்பட இயக்குனர்களே ...

அரை மணி நேரத்துக்கு முன்னால விசிடியில் ஒரு படம் பார்த்தேன்.
மலையாளப் படம்.
படம் முடிஞ்ச பிறகும் அந்த இடத்திலேயே ஆணியடிச்சது மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
ஏறக்குறைய இருபது இருபத்தஞ்சு நிமிஷம்.
ஒண்ணுமே செய்யத் தோணலை.
என்னென்னமோ மனசுக்குள்ள ஓடியது.
கஷ்டமா இருந்தது.
மனசு ரொம்ப பாரமா ஆயிரிச்சி.
வசனங்கள் அனேகமா எதுவுமே புரியவில்லைதான்.
கேரளாவின் எந்தப் பகுதின்னும் தெரியலை.
Backwaters உள்ள அந்தப் பகுதி மிகவும் புதுசா தோன்றியது.
அழகான இடம்.
நல்ல மக்கள்.
இடத்தைப் போலவே மக்கள் மனசுக்குள் எல்லாம் ஈரம்.
இருட்டை இருட்டாக காண்பிக்கும் படப் பிடிப்பு.
நடிப்பு, கதை, படப்பிடிப்பு - சுத்தமாக எதிலும் மிகையில்லை.
cinematic, dramatic அப்டின்னு எல்லாம் சொல்லுவாங்களே.
அவைகளுக்கு இப்படத்தில் இடமே இல்லை.
எப்படி இப்படி படம் எடுக்கிறார்கள்?
இந்த மாதிரி படம் எடுக்கும் துணிச்சலைத் தரும் மக்களை எப்படிப் பாராட்டுவது?

இப்படியெல்லாம் நினச்சிக்கிட்டு இருந்தப்போ ...
நமது தமிழ்ப்பட டைரடக்கர்கள் ஒவ்வொருவராக மனசுக்குள் வந்து நின்றார்கள்.
அடச் சீ! போங்கடான்னு சொல்லணும்போல இருந்தால் அது என் தப்பா?


குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு கேரளாவிற்கு வந்து சேர்ந்த மொழி தெரியாத சிறுவன்.
மம்முட்டியின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறான்.
சட்டதிட்டங்களின் குறுக்கீடு.
அதன்படி அவன் குடும்பத்தைத் தேடி பையனோடு மம்முட்டி குஜராத் பயணம்.
அழிந்து உருக்குலைந்த வீடு.
அனாதையான சிறு பிள்ளைகளோடு பையன் சேர்க்கப் படுகிறான்.
அறியாச் சிறுவனின் மனத்தில் குடும்பம் வந்துவிடும் என்ற நம்பிக்கை.
அந்த நம்பிக்கையில்லாமல் பையனை விட்டுவிட்டு வரும் மம்முட்டி.சமீபத்தில் பார்த்த சில ஈரானியப் படங்களைப் பார்த்து(Where is my friend's house?) பெருமூச்சு விட்டதுண்டு.
இப்படியெல்லாம் என்றைக்கு நம்மூரில் படம் எடுப்பார்கள் என்று நினத்ததுண்டு.
பக்கத்தூரிலாவது எடுத்திருக்கிறார்களே.

மலையாளப் படங்களின் உச்சங்களைப் பார்த்து மலைத்தது உண்டு.
இதோ இன்னொரு படம்.

படப் பெயர்: காழ்ச்சா.
Tag line Edge of Love
இயக்குனர்: Blessy
நடிப்பு: மம்முட்டி ...

நம்ம ஊரு நிலைமைக்கு யார் காரணம்?
நிச்சயமா நம்மை மடையர்களாக நினைத்து (புரிந்துகொண்டு..)படம் எடுக்கும் நம் டைரடக்கர்களா? என்ன மசாலா கொடுத்தாலும் விசிலடிச்சி படம் பார்க்கும் நாம்தானா? இதையும் தாண்டி நம் ஊடகங்கள் ... அடடா, மலைக்கோட்டை படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதே படத்தின் அருமை புரிந்துவிடுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் நம்பர் 1 ஆ.வி.யில் அதற்கு நூத்துக்கு நாற்பத்து ஒன்று. தாராளப் ப்ரபுகள் .. சில வாத்தியார்கள் மாதிரி .. நிறைய மார்க் போட்டுட்டா பசங்கட்ட இருந்து எந்த தொல்லையும் இருக்காதே .. என்னமோ நடக்குது ...

Wednesday, September 26, 2007

236. கோவில் மண்டபத்தில் தருமி ...

JOURNEY OF MAN - A GENETIC ODYSSEY

பத்து பத்து நிமிடங்களாக ஓடும் 13 பாகங்கள். -u tube documentaries
சமீபத்தில் பார்த்த ACCAPULCO படம் கூட நினைவுக்கு வந்தது.

http://www.youtube.com/watch?v=AT6XsVnuz6o&mode=related&search=


அத்தனையும் பார்த்து முடித்ததும் சில கேள்விகள் மனத்துக்குள்:

* ஆப்ரிக்காவில் உருவான மனித இனம் அங்கிருந்து இடம் பெயர்ந்து உலகின் பல இடங்களுக்கும் சென்றதாக மனிதனின் Y நிறமிகள் (chromosomes) மூலமாக நிறுவப்பட்டுள்ளதை இந்தத் தொடர் மிக அழகாகக் காண்பிக்கிறது.

என் ஐயம்: ஏற்கெனவே கேட்ட கேள்விதான். இந்தக் காலத்தில் கூட தாங்கள் வாழ்ந்த இடத்தை முற்றாக விட்டு விட்டு புது இடம் போக நாம் தயங்குகிறோம். ஆனால் 30 -50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக competition for survival கடுமையாக இல்லாமல் இருந்திருக்கக் கூடிய காலத்தில், fear of unknown இருந்திருக்கக்கூடிய காலத்தில் இடப் பெயர்ச்சி மிகவும் கடினமாக இருந்திருக்கக் கூடிய அந்தக் காலத்தில் எதனால் மனித வர்க்கம் இந்தத் தொடர் இடப் பெயர்ச்சியை மேற்கொண்டிருந்திருக்கும்?

ஆப்ரிக்காவில் ஆரம்பித்த இந்த தொடர் இடப் பெயர்ச்சி இந்தியா வழியாக ஆஸ்த்ரேலியாவுக்குச் சென்றதாக நிறுவப்படுகிறது. அதற்கு ஆதாரமே மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் ஓர் ஊரிலுள்ள விருமாண்டியின் மூலமாகத்தான்! குறும்படத்தின் மூன்றாவது பகுதியில் இதுபற்றி உள்ளது.

ஆக திராவிடரோ, ஆரியரோ எல்லோருமே வந்தேரிகள்தான் போலும். என்ன சிலருக்கு வேண்டுமானால் கொஞ்சம் சீனியாரிட்டி இருக்கலாம்; அவ்வளவே. அதைப் பார்த்ததும் நான் என் பதிவொன்றின் கடைசிப் பகுதியான ஏழாம்பகுதியில் எழுதியதுதான் நினைவுக்கு வந்தது.

இந்த வம்பு வழக்கெல்லாம் வேணாம்னு நினைக்கிறவங்க கூட கட்டாயம் அந்த விருமாண்டி எபிசோட் பாருங்க. அட, அது இல்லாவிட்டாலும் 10-ம் பதிவு மட்டுமாவது பார்க்கணும். ஆர்க்டிக் பகுதியின் உட்பகுதி, சைபீரியாவின் ஒரு மூலை, எங்கும் பனிமூடிய நிலம், -30டிகிரி செல்ஷியஸ், உடன் வாழும் உயிரினங்கள் இரண்டே இரண்டு - lichens அதை மட்டுமே உணவாகக் கொள்ளூம் reindeers - மட்டுமே, சாப்பாடு, உடை, உறையுள், போக்கு வரத்து எல்லாமே அந்த மான்களை வைத்துதான் என்ற நிலை, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் It is an out and out a god forsaken place. The question is how come mankind has not STILL forsaken it? வாழ்வாதாரங்கள் ஏதுமில்லாத அந்த அத்துவான தேசத்தில் ஏன் மனிதர்கள் இயற்கையோடு மல்லுக்கட்டிக் கொண்டு வாழவேண்டும்? 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து அங்கு குடியேறிய அந்த மக்கள் - அவர்களின் பெயர் Chuksi - இன்னும் ஏன் அந்த பனிப்பிரதேசத்தில் கஷ்டப் படணும்? பழகிவிட்டது என்றாலும் தங்களின் அடுத்த தலைமுறையாவது வேறெங்காவது போய் நன்றாக வாழட்டும் (நமது கிராம மக்கள் நினைப்பது போல் ) என்ற நினைவு வராமல் போவதெப்படி? இன்றைய மக்களுக்கு அப்படிப் புது இடங்களுக்குப் போவது கடினமென்றால், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நம் மூதாதையர்களுக்கு மட்டும் அந்த பிரச்சனை இல்லையா? அவர்கள் எப்படி அந்தக் காலத்திலேயே நாடு விட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் மாறி மாறி இடம் பெயர்ந்தார்கள்?
அதுவும் ஏன் இடம் பெயர்ந்தார்கள்?

ஒண்ணும் புரியலை ... புரிந்தவர்கள் விளக்குங்களேன்.

பாவம் தருமி! கோவில் மண்டபத்தில் நின்று கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு நிற்கிறான்.

Saturday, September 22, 2007

235. பத்மாமகனுக்கு ஜே!

அம்முவாகிய நான் .. இன்னொரு நல்ல தமிழ்ப் படம். கொஞ்சம் மெச்சூர்டு ஆடியன்ஸை மனசில வச்சி எடுத்திருக்கார் பத்மா மகன். அப்புறம் என்ன ..? ஒரு ஃபைட்டு கிடையாது; காமெடிக்குன்னு ஒட்டாத தனி ட்ராக் கிடையாது. இந்த மாதிரி தைரியத்துக்கே அவருக்கு வாழ்த்து சொல்லணும். விலைமாதுகளை வச்சி கதை எடுத்தாலும் கதாநாயகியின் வளர்ப்புத் தாயான ரிட்டையர்ட் விலைமாதுவாக வரும் பாத்திரத்தின் மேல் எந்த வித அருவருப்பும் இல்லாமல் தனி மரியாதைதான் வருது. அந்த மாதிரி இடங்களுக்கு வருபவர்களின் sexual perversions-களையும் கூட ஒரு ஸ்கிப்பிங் கயிறு, ஒரு விஸ்கி பாட்டில், ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் என்பதை வைத்து வேறு விரசமில்லாமல் காண்பித்திருப்பதே பாராட்டுக்குரியது.

கதாநாயகி விளையாட்டாகவே ஒரு சேலஞ்சாகவே கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள். ஆனாலும் அவளின் மனமாற்றங்களை சின்னச் சின்ன விஷயங்களாலேயே காட்டுவது அழகு.

*விபச்சார விடுதிக்கு கைது செய்ய வந்த அதே காவல்துறை அதிகாரி தன் கணவனிடம் காட்டும் மரியாதையையும், அவன் மனைவி என்பதாலேயே தனக்குக் கிடைக்கும் மரியாதை,

*தன்னிடம் காசு கொடுத்துப் படுத்தவன் (அபிஷேக்) இப்போது தன் தலையை ஆதரவாகத் தொட்டு மரியாதையும் அன்போடும் வாழ்த்தும் இடத்தில் தன் ஊடலை மறந்து நெகிழும் நேரம்
- எல்லாமே கதாநாயகியின் மனத்துள் நடக்கும் சின்னச் சின்ன ரசாயன மாற்றங்கள்.

*வழக்கமான தமிழ்ப் பட ரசிகர்களை மடையர்களாக நினைத்து இதற்கெல்லாம் வழக்கமாக வரும் foot notes எதுவுமில்லாமல் கதையை நகர்த்தும் பாங்கு,

*ஒரு நல்ல சிறுகதை போல் நாலைந்து பாத்திரப் படைப்புகளுக்குள் எந்த வித சிக்கல் இல்லாமல் அமைத்திருக்கும் திரைக்கதை.

*பார்த்திபனாவது ஒரு அனுபவப்பட்ட நடிகர். ஆனால் அந்தப் புதுமுக பாரதியையும் இப்படி இயல்பாய் நடிக்க வைத்திருப்பது.

*கதாநாயகனின் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த அழகு செங்கல் வீடு, அதன் பழைய காலத்துக் கதவு, சுற்றி இருக்கும் புல்வெளியும் தோட்டமும் (நிஜ வீடோ, ஆர்ட் டைரக்டரின் கைத்திறனோ?)

*படத்தின் முடிவை நாமே முடித்துக்கொள்ளக் கொடுத்திருக்கும் சுதந்திரம்.

*எல்லாவற்றையும் விட, ஒரு நல்ல டைரக்டர் தன் இருப்பைப் படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்தாத அளவு படத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஒரு விதியாகவே கூறப்படுவதுண்டு. டைரக்டர் படத்தின் ஒவ்வொரு ப்ரேமின் ஓரத்திலும் உட்கார்ந்து கொண்டு தன் இருப்பை நிலைநாட்டவில்லை.

---> இவைகள் அனைத்துக்கும் சேர்த்து, மீண்டும் தலைப்பு: பத்மாமகனுக்கு ஜே!


நெகட்டிவா ஏதாவது சொல்லணும்னா, அம்முவைத் தேடி ராணி வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது அந்த வீட்டுக் கதவு பார்த்திபன் வீட்டுக் கதவு மாதிரில்ல தெரிஞ்சுது -அவசரத்துக்கு மாத்தி நிக்க வச்சி எடுத்தாலும் அதையெல்லாம் யாரு பாக்கப் போறாங்கன்னு டைரக்டர் நினச்சிட்டாரோ...

இலக்கிய கழகத்தின் தலைவரின் டப்பிங் வாய்சில் மலையாள வாடை அடிச்சுது. ஒருவேளை ஒரு தமிழ்ப் படத்தில் தெலுங்கு நடிகர் மலையாளப் பாத்திரமாக வந்தால் நல்லதுன்னு நினைச்சிருக்கலாம்!


கதாநாயகி வயசுக்கு வந்ததும் ஒரு பாட்டு படத்தில். கேட்டால் காம்ப்ரமைஸ் என்று பதில் வரலாம். படத்துக்கு வயிறு காமிச்சி நாலஞ்சு பொம்பளைங்க வந்து டான்ஸ் ஆடலைன்னா என்னாகிறது? (அந்தப் பாட்டு வந்ததும் பழைய நினைப்புதான் வந்தது. பதிவுலகத்திற்கு வந்ததும் போட்ட ஒரு பதிவு. துளசி டீச்சர் தவிர யார் கண்ணிலும் படாத அந்தப் பதிவு இந்தப் பதிவுக்கு உறுதுணையா இருக்கும்னு நினைக்கிறேன். அதையும் வாசிச்சி பாருங்க...)

நம்ம தமிழ்ப்படங்களின்உண்மையான ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் பாட்டுக்கள்தான். அவைகள் இல்லாவிட்டால் நிச்சயமா தமிழ்ப்படங்களின் slickness அதிகமாகும்; படங்களின் தரம் நிச்சயமாக உயரும். ஆனால் அதெல்லாம் எப்போ நடக்குமோ..தெரியலை. தமிழ்நாட்டு அரசின் தமிழ்ப்பெயர் வச்சா வரிவிலக்குன்ற மடத்தனமான சட்டம் போய், பாட்டு இல்லாத படங்களுக்கு வரி விலக்குன்னு சொன்னா நிச்சயம் இன்னும் வேகமா தமிழ்ப் படவுலகம் வேகமா வளரும்; முன்னேறும். ஆனா என்ன, அதுக்குப் பிறகு பாட்டெழுதுறவங்க எல்லாம் இப்போ மாதிரி ஆட்சியாளர்களை வானுக்குயர்த்திப் பாட்டெழுத மாட்டார்கள்; தாங்குவார்களா நம் அரசியல்வாதிகள்!

சிவாஜி, போக்கிரி மாதிரி படங்கள் பெரும்பான்மையருக்காக எடுக்கப் பட்டாலும், முனைந்து சிறுபான்மையருக்காக இந்த மாதிரி படங்கள் எடுக்கும் டைரக்டர்களைக் கட்டாயம் பாராட்டியே ஆகணும். இப்போதைக்குச் சமீபத்தில் வந்த 4 படங்களின் டைரக்டர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள்:

மொழி - சொன்ன விஷயத்தின் நேர்த்தி...
அம்முவாகிய நான்...- சொன்ன விஷயமும், சொன்ன நேர்த்தியும்....
வெயில் -சொன்ன விஷயத்தின் நேர்மை
பருத்திவீரன் - சொன்ன விஷயத்தின் பச்சைத்தன்மை rawness

பாராட்டுக்களும் இதே வரிசையில் - என்னப் பொறுத்தவரை. இத்தகைய டைரக்டர்கள் பெருகட்டும்.

காத்திருப்போம்.

இதே கருத்தை ஒட்டிய என் மற்றொரு பதிவு: http://dharumi.blogspot.com/2007/06/221.html

Friday, August 10, 2007

233. ஒளி ஓவியங்கள் - போட்டிக்கு

ஒளிக் கோட்டு ஓவியம்

Image and video hosting by TinyPic


--------------------
அசையாம ... கொஞ்சம் சிரி'மா !
Image and video hosting by TinyPic

Thursday, August 09, 2007

232. எங்க ஊருக்காரங்க சந்திப்புஏற்கெனவே எங்க ஊரு ஜாலிஜம்பர் ஒரு பதிவு போட்டு, எங்க ஊருக்காரங்க சந்திப்பில நடந்தது எல்லாத்தையும் ஆணி வேறு அக்கு வேறுன்னு (அய்யாக்களே! ஆணின்னா என்னன்னு தெரியும்; அதென்ன 'அக்கு' ? யாராவது விளக்குங்களேன்.) பிரிச்சி மேஞ்சிட்டார். நான் சொல்றதுக்கு ஒண்ணே ஒண்ணு இருக்கு. அத மட்டும் சொல்லிக்கலாம்னு இருக்கேன். On second thoughts ... ரெண்டு இருக்கு ..

1. சென்னையில் நடக்கப் போற பட்டறை பற்றிப் பேசினோம். நாமளும் நம்ம ஊர்ல ஒரு பட்டறை நடத்திர வேண்டியதுதான் அப்டின்னு பேசினோம். அதற்கான முதல் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.

2. எங்க ஊர்ல ஒரு பட்டறை கல்லூரி மாணவர்களை மய்யமாக வைத்து ஆரம்பிக்கத் திட்டமிட்ட உடனேயே அப்படி ஒரு பட்டறை நடத்துவதற்கு முன்பே நாம் மதுரைக்கார பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுக்களம் உருவாக்க வேண்டும். விரைவில் ஒரு குழுப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று ஏறத்தாழ 7 மணியளவில் பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்குப் போனால், 9 மணிக்கே 'இதோ, புதுப் பதிவு' அப்டின்னு இராம் ஒரு பொதுப்பதிவை ஆரம்பித்தே விட்டார். வாழ்க அவர்தம் சுறுசுறுப்பு.

அவரது இந்த சுறுசுறுப்பைப் பாராட்டும் முகத்தான் அவரது மற்றொரு திருவுருவப் படமொன்றை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

Image and video hosting by TinyPic

இந்தப் படம் போட்டது ஒண்ணும் அந்த படம் போட்டதுக்கான பழிவாங்குதல் எல்லாம் இல்லை. ஒரு நன்றிக்கடன்தான் .. !

அப்படி ஆரம்பித்துள்ள எங்கள் ஊரின் பொதுப்பதிவின் முகவரி: http://marudhai.blogspot.com/

மதுரைக்கார பதிவர்கள் அனைவரும் திரு. ராம் அவர்களை raam.tamil@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழுப்பதிவில் இணைந்து கொள்ள இதனையே அழைப்பாகக் கருதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவின் நுட்ப வேலைகளை இப்போதைக்கு திரு. ராம் மட்டுமே செய்துவந்தால் குழப்பமேதுமின்றி வலைப்பதிவை தொடரமுடியும். மாற்றங்கள் வேண்டுவோர் திரு, ராம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


.......

Wednesday, August 01, 2007

231.PORTRAITS - போட்டிக்கு அல்ல !

Image and video hosting by TinyPic
......................................சிங்கம் #1 ..............................


Image and video hosting by TinyPic

......................................சிங்கம் #2 ..............................

Image and video hosting by TinyPic

......................................சிங்கம் #3 ..............................


Image and video hosting by TinyPic

......................................சிங்கம் #4 ..............................


என்ன?

இங்கே உறுமிக்கிட்டு இருக்கிற இந்த நாலு இளம் சிங்கங்கள் யாரு? இங்க எதுக்கு உறுமிக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணுமா, அப்போ அந்தப் பதிவுக்குப் போய் பாத்துட்டு வாங்க...

சிங்கம் ஒண்ணு: நாடறிஞ்ச ராயலு

சிங்கம் ரெண்டு: கவிஞர் முத்துக் குமார்

சிங்கம் மூணு: ஜாலி ஜம்பர்

சிங்கம் நாலு: புல்லட் பாண்டி

Friday, July 20, 2007

230. டைட்டானிக்கில் தனலச்சுமி ...

மக்கள்ஸ் ... எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றுமறியேன்.ENZZZOY .............

ஒரே ஒரு க்ளிக்கில் ... தமிழ்ப் பட உலகிலேயே அதிக செலவில் தயாரான, ப்ரமாண்டமான மிகச் சிறந்த காதல் திரைக்காவியம் காண வாரீர் ...

காணத்தவறாதீர்கள்.

பார்த்தபின் மீண்டும் இங்கு வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க மறந்து விடாதீர்கள்.

நன்றி.சுபம்.

Wednesday, July 18, 2007

229. A LETTER TO (THE HINDU) EDITOR

வழக்கமாக எழுதி அனுப்பப்படும் கடிதங்களின் கூர்மையைச் சிறிது மழுங்கடித்து (read 'edited') அதன் பின்பே என் சில கடிதங்கள் பதிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டதே இந்து தினசரியைப் பொறுத்தவரை என் முந்திய அனுபவங்கள். நன்றாகவே எடிட் செய்யப் படுவதைப் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் இம்முறையோ என் கடிதம் மழுங்கடிப்படுவதற்குப் பதில் மேலும் 'கூர்மை"யாக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம்.

இந்துவிற்கு நான் அனுப்பிய என் கடிதத்தில் நான் குறிப்பிடாத "அடிப்படைவாதிகள்' (fundamentalists) என்று ஒரு சொல்லாடலைச் சேர்த்து என் கடிதம் இன்று (18th July,'07)பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதற்கு இங்கே என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (வேறென்ன செய்ய முடியும்?) அதோடு நான் அனுப்பிய ஒரிஜினல் கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.


Sir,

For his article "Debate or denial: the Muslim Dilemma" in your columns on 17th July,'07 Hasan Suroor deserves great appreciation for calling a spade a spade. Especially in the last paragraph of the article he has encapsulated what every Muslim of this day should understand and adhere. But the big question is whether Muslims in general and the Muslim zealots in specific would accept that "When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate…" but NOT NOW.

The problem arises when people insist that the "words" given by god should not even be interpreted, leave alone be changed.

Wish we get more level headed people among our all religious brethren.

-------------------------------------------------------------------

இஸ்லாம் பற்றிய விவாதங்களும், மறுப்புகளும் என்ற தலைப்பில் எழுதியுள்ள ஹசன் சாரூர் 'இந்து'வில் வழக்கமாக எழுதும் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர். இக்கட்டுரையில், ஒரு இஸ்லாமியர் இன்றைய சூழலில் எவ்வாறு தன் மதத்தைப் பற்றிய புரிதல் கொள்ள வேண்டும் ஒரு புதிய பார்வையைக் கொடுத்துள்ளார். மறுப்புகளை விடவும் விவாதங்கள் புதிய பாதையில் எப்படித் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அக்கட்டுரையில் எனக்குப் பிடித்த அந்த கடைசிப் பத்தியை மட்டும் இங்கு இடுகிறேன்:

Let’s face it; there are verses in the Koran that justify violence. The “hard truth that Islam does permit the use of violence,” as Mr. Butt* points out, must be recognised by Muslims. When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate to put them down. Today, when it is the world’s second largest religion with more than one billion followers around the world and still growing that context has lost its relevance. Yet, jihadi groups, pursuing their madcap scheme of establishing Dar-ul-Islam (the Land of Islam), are using these passages to incite impressionable Muslim youths. Yet there is no sign of a debate in the community beyond easy platitudes, and it remains in denial.

(கோடிட்ட பகுதி என் கடிதத்தில் மேற்கோளிடப்பட்டது.)

*Hasaan Butt is a reformed British extremist,quoted much in this article.

Saturday, July 14, 2007

228. தொடரும் அநியாயங்கள் - இடப் பங்கீடு

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதே சமயத்தில் ஷரத் யாதவ் இந்துவில் எழுதிருந்த ஒரு நடுப்பக்கக் கட்டுரையையும் பதிவிட்டிருந்தேன். U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பிக்காது விட்டு,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி செய்துவந்ததை எழுதியிருந்தேன். இந்த ஆண்டும் தேர்வாளர்கள் தங்கள் திறமையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்கள். அதனை எதித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.

நீங்கள் ஆண்டுதோறும் இப்படி வழக்கு போட்டுக்கொண்டேயிருங்கள்;நாங்கள் எங்கள் மோசடியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருப்போம் என்ற நிலை நீடிக்கும்போது நம் சட்டங்கள், சட்டங்களின் காவலான நீதிமன்றங்கள், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசு என்று அத்தனை துறைகள் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. எல்லாமே 'அவர்கள்' கையில்; இதில் நாமென்ன செய்ய முடியும் என்ற கையறு நிலைக்குத்தான் வரவேண்டியதுள்ளது. சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா?

இந்த வழக்கு பற்றிய இன்றைய (14.07.2007) இந்துவில் வந்துள்ள செய்தி:

The petitioners contended that the UPSC continued to flout the Centre’s directives and the Supreme Court rulings, besides the constitutional provisions, by not including successful candidates from reserved categories in the open category.

The petitions said nearly 60 candidates belonging to the open category were unlawfully included in the merit list.

06.06.2006 அன்று நானெழுதிய பதிவில் வழக்கறிஞர் திரு. ப்ரபு ராஜதுரை அளித்திருந்த பின்னூட்டம்:

PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.இந்துவில் வந்திருந்த ஷரத் யாதவ் எழுதிய கட்டுரையை 09.07.2006-ல் பதிப்பித்திருந்தேன்.அதில் இது தொடர்பான பகுதி மீண்டும் இங்கே ...


...but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.


People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.