யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் ... 2ம் பதிவு
*
ஏனைய பதிவுகள்
….
யூதர்களின் இயேசுவும்,
பவுலின் கிறிஸ்துவும்
எஸ். செண்பகப்பெருமாள்
*
மதங்களைப் பற்றிய நூல்களை வாசித்துப் பகிர்ந்து கொண்ட
(வலைப்பூக்களில் சொல்கிறேன்; FBஎன்ற
டீக்கடை பற்றிச் சொல்லவில்லை!) பழைய அனுபவம் மறந்தே போச்சு. வாசிக்க எவ்வளவோ இருக்கிறது என்றாலும் ஏனோ தள்ளிப்
போய்க்கொண்டே இருந்த நேரத்தில் புதிய புத்தகம் பற்றிய அறிவிப்பு ஒன்றை கிழக்குப்
பதிப்பகத்தின் மருதன் அறிவித்த போது ஏகப்பட்ட மகிழ்ச்சி எனக்கு.
ஏனெனில் பல நாள் பழக்கத்தைத் தொடர
ஒரு வாய்ப்பு என்பது மட்டுமல்லாமல், நான் பல இடங்களில் துண்டு துண்டாக
பவுல் எனப்படும் ஏசுவின் "follower" பற்றி வாசித்ததுண்டு. ஏற்கெனவே
Paul is the one who mystified Jesus as a divine person" என்று முன்பே எழுதியுள்ளேன். அதைப் பற்றி
ஒரு நூல், அதுவும்
தமிழில், அதுவும்
இந்துப் பெயர் கொண்ட ஒருவர் எழுதியது பதிப்பாகியுள்ளது என்றதும் அதை வாசிக்கவும்,
விவாதிக்கவும் ஆசை வந்தது.
இதில் எனக்கு ஓர் உதவி தேவை. எனது
முதல் நூலில் இஸ்லாம் மதத்தைப் பற்றிய செய்திகள் - நான் சார்ந்திருந்த கிறித்துவ
மதத்தையும் விட - அதிகமாக இருப்பதாக வாசித்த மக்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கான
காரணமே இஸ்லாமியர்கள் தான். அவர்கள் தொடர்ந்து என் கருத்துகளுக்கு நல்ல “எதிர்ப்பாட்டு”
பாடி வந்தனர். அதனால்
அதிகம் வாசிக்க, யோசிக்க,
எழுத வேண்டும் என்ற
கட்டாயமே பிறந்தது.
(ஆனால் அவர்கள் யாரையும் நானிப்போது இணையத்தில், முகநூல்களில் பார்ப்பதே இல்லை. ஏனிந்த மெளனமோ!)
;முன்பு தொடர்ந்து மதங்களைப்
பற்றி எழுதிய போது, இந்து, கிறித்துவ மக்கள் அதிகமான எதிர்ப்பு காண்பிக்கவில்லை. என் சுய
தேடலில் கிடைத்தவைகளை மட்டும் இவ்விரு மதங்களைப் பற்றி எழுதினேன். அவர்களும் ‘கச்சை கட்டி’ வந்திருந்தால் இன்னும் பல
விசயங்களை நான் விரட்டிப் பிடித்துத் தெரிந்து கொண்டு புத்தகத்திற்குள் கொண்டு
வந்திருப்பேன்.
இந்த முறையாவது கிறித்துவ
நண்பர்களும் விவாதங்களை ஆரம்பித்தால் எனக்கு மிகவும் பலம் சேர்க்கும்! இஸ்லாமியச்
சிறுவர்கள் போலவே கிறித்துவக் குழந்தைகளுக்கும் வெகு இளம் வயதிலேயே சமயச்
சரக்குகள் மனதிற்குள் இறக்கப்படுகின்றன. ஆனால் கிறித்துவ மக்கள் வளர்ந்த பிறகும்
கூட விவாதத்திற்குள் நுழைவதில்லை. அதற்கு ஏற்றது போல் பைபிளிலிருந்து ஒரு
மேற்கோளைச் சுட்டிக் காட்டிவிட்டு ஒதுங்கி விடுவார்கள். (மத். 7 : 6 - உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்;)
அது தோல்வி மனப்பான்மையா
அல்லது பதில் சொல்ல முடியாததாலா அல்லது எதற்கு இதெல்லாம் என்றா நினைவா .. எது
என்பது எனக்குத் தெரியவில்லை. முகநூலில் கூட சில கிறித்துவர்களிடமிருந்து
நட்பழைப்புகள் வந்தன. சிலரிடம் நான் மத மறுப்பாளன் ஆகவே விட்டு விடுங்களேன் என்று
கூட கேட்டிருந்தேன். அதையும் தாண்டி சில நட்பு வட்டத்திற்குள் நுழைந்தார்கள். ஆனால்
என் பதிவுகளை வேண்டுமென்றே அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன். ஆனால் மெளனமே பதிலாகக்
கிடைத்தது.
ஆனால் இம்முறை அவர்களை என் “உதவிக்கு” வரும்படி அன்போடு அழைக்கின்றேன்.
வாருங்கள் ... தொடர்ந்து விவாதிப்போம்.
யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் ... 2ம் பதிவு