Thursday, December 29, 2022
1211. I SALUTE BRAHMINS .....
Wednesday, December 21, 2022
Monday, December 19, 2022
1208. FIFA '22 - FINAL MATCH
இப்போதுதான்
ஆரம்பித்தது போலிருந்தது ... அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.வழக்கம் போல்
ப்ரேசில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலோடு ஆரம்பித்து வேறு நாடு வென்றது. அதிலும்
அர்ஜென்டினா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே.
எப்படி
நேற்றைய இறுதிப் போட்டி இருந்தது என்று உலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததாகி
விட்டதால் அந்த ஆட்டத்தைப் பற்றி எதுவும் பேசப் போவதுமில்லை; தேவையுமில்லை.
ஆனால் பாவம் ... யாராவது கால்பந்தில் சிறிதேனும் ஆர்வம் உள்ளவர்கள் இருந்து, அவர்கள் நேற்றைய போட்டியைப் பார்க்காமல் தவற விட்டிருந்தால் அவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கலாமே என்று தான் இப்பதிவையிட நினைத்தேன். பாவம்
... அவர்கள் வாழ்வின் பொன்னான 90+30+ பெனல்ட்டிக்கான நேரம் (10 நிமிடம்
இருந்திருக்கலாமா?) 130 நிமிடங்களை அப்படியே முழுமையாக
இழந்து விட்டார்களே என்று தோன்றுகிறது. இனி அந்த ஆட்டத்தைத் திரும்பிப் பார்த்தாலும்
அதை நேற்று பார்த்தவர்களின் உணர்வில், கவலையில், ஆதங்கத்தில், எதிர்பார்ப்பில், அச்சத்தில் … நூற்றில் ஒரு பங்கைக் கூட அவர்களால் உணர
முடியவே முடியாது. என்ன பாவம் பண்ணினார்களோ .. அவர்களால் நாங்கள் – போட்டியைப்
பார்த்த புண்ணியவான்களான நாங்கள் – அனுபவித்த வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு
போட்டியை வினாடிக்கு வினாடி நாங்கள் பார்த்து “அனுபவித்தது” போல் அனுபவிக்க
முடியாது. முடிவுகள் வெளியான பின் இந்தப் போட்டியைப் பார்ப்பதில் எங்கள் “வாழ்நாள்
அனுபவம்” மாதிரி நிச்சயமாக இருக்க முடியவே முடியாது.
யாரோ
ஒரு நண்பர் எழுதியதை வாசித்தேன். கிறிஸ்டினா ரொனால்டோ இருப்பதால் பலருக்கு
போர்த்துகல் மீது ஆவல் இருக்கும்;
Mbappe (எனது மொழிபெயர்ப்பில் ம்பாப்பே!!) இருப்பதால் ப்ரான்ஸ் மீது
மக்களுக்கு ஈர்ப்பு இருக்கலாம். மெஸ்ஸி இருப்பதால் அர்ஜென்டினா மீது
அன்பிருக்கலாம். ஆனால் எப்போதும் நம்மால் நேசிக்கப்படுவது ப்ரேசில் மட்டும் தான்.
தனி நபர் என்று மட்டுமல்லாமல் எப்போதும் ப்ரேசிலை இந்தியர்கள் நேசிக்கிறார்கள்
என்று அவர் எழுதியிருந்தார். என்னைப் பொருத்தவரை இது முற்றிலும் உண்மையே. இன்னும்
கொஞ்சம் சேர்ப்பதென்றால், ப்ரேசில் இல்லாவிட்டால் அரைகுறை
மனத்தோடு அந்த இடத்தில் அர்ஜென்டினாவை வைப்பது வழக்கம் தான் என்று நினைக்கின்றேன்.
இதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை நாம் எல்லோருமே தொலைக்காட்சி
மூலம் இந்தப் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்த போதும், ஏன் .. அதற்கு
முன்பேயும், பீலே அவர்களைப்
பற்றி தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஒரு பந்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
அர்ஜென்டினாவில்
மெஸ்ஸி மட்டும் தான் இருக்கிறார்;
(ஆனால் எனக்கு அவரை விட left winger டி
மரியாவின் ஆட்டம் முதலிலிருந்தே பிடித்தது.) ஆனால் ப்ரான்ஸ் நாட்டு வீரர்களில்
பலரும் இளைஞர்கள். ஆகவே அதுவே நிச்சயமாக இறுதியில் வெல்லும் என்ற கணிப்பு
இருந்தது. அதாவது மூளை ப்ரான்ஸ் வெற்றி பெரும் என்று சொன்னாலும், இதயமோ அர்ஜென்டினாவிற்காகத் துடித்தது. அப்படிப்பட்டவர்களுக்கு நேற்றைய
ஆட்டம் ஒரு பெரிய, வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.
முதல்
90 நிமிடங்களில் 80 நிமிடங்களுக்கு அர்ஜென்டினா கொடிகட்டிப் பறந்தனர். அதன் பின் எக்கச்சக்கமான
ஏற்ற இறக்கங்கள். தாங்க முடியவில்லை. ப்ரான்ஸ் சமன் செய்ததும் பேசாமல் படுத்துத்
தூங்கி விடலாமென நினைத்தேன். ஏனெனில் கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதில் இரண்டு
விஷயம் சுத்தமாகப் பிடிக்காது. முதல் விஷயம்,
அதென்னவோ ஆட்டக்காரர்களின் முகத்தை மட்டும் க்ளோசப்பில்
காண்பிக்கும் நேரம் பார்த்து, அவர்கள் எச்சில் துப்பித்
தொலைப்பார்கள். ..ஏதோ நம்மீதே விழுந்தது
போல் தோன்றும்; கஷ்டமாக இருக்கும்; பிடிக்காது.
(க்ரிக்கெட்டில் பந்தையே நக்கி எடுப்பார்களே அது போல் அத்தனை அசிங்கமாக
இல்லாவிட்டாலும், கால் பந்து விளையாட்டில் இது ஓர்
அருவருப்பான ஒன்று.) பிடிக்காத இன்னொன்று என்னவென்றால், பெனல்டி
மூலம் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது. இதை விட sudden death என்ற முறை எனக்குப் பிடித்தது. அதாவது 45 + 45 நிமிடம் விளையாடி
முடிவில்லாதிருந்தால், அடுத்து 15 +15 என்று மொத்தம் 120 நிமிடம் விளையாடியும் முடிவு
வராவிட்டால் இப்போது அடுத்து பெனல்டி கிக் என்பதே இப்போதைய முறை. ஆனால் sudden
death என்ற முறையில் 90 + 30 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும்
தொடர்ந்து விளையாட ஆரம்பிக்கும். எந்த அணி கோல் போடுகிறதோ அப்போது ஆட்டம்
முடிவிற்கு வந்து விடும். இதில் ஆட்டத்தின் வீரர்கள் அனைவரின் பங்கும் உண்டு. ஆனால்
பெனல்ட்டியில் ஏறத்தாழ முழுப் பொறுப்பும் இரண்டு வீரர்களின் மேல் மட்டுமே விழுகிறது
– கோல் கீப்பர் & பெனல்டி ஷாட் அடிப்பவர். அதிலு ஷாட் அடிப்பவர்
தவறு செய்து, அதனால் தோல்வி ஏற்பட்டால் ...பாவம் அந்த மனுஷன்...
அவரே தன்னை மன்னித்துக் கொள்ள முடியாது. வரலாற்றிலும் அவர் பெயர் பதிந்து விடுகிறது.
ஏறத்தாழ தோல்வியின்முழுப்பொறுப்பும் அவர் மேல் தான் ஏற்றி வைக்கப்படும். மெஸ்ஸி போலந்தோடு
விளையாடியபோது ஒரு பெனல்டி பந்தை வெளியே அடித்து விட்டார். ‘இவனெல்லாம்
பெரிய ஆட்டக்காரன் என்று பெயர்; ஆனால் ஒரு பெனல்டியைக் கூட ஒழுங்காக உள்ளே அடிக்கத் தெரியவில்லை’ ….
இது போன்ற வசுவுகள் அவர்கள் மீது பாயும். அதையும் விட என்னைப் பொறுத்த
வரை அந்த “ஒன்றுக்கு ஒன்று” என்று இருவர் மட்டும் மீது அத்தனை
சுமையை ஏற்றுவதை விட sudden death பரவாயில்லை என்று தோன்றுகிறது.
முன்பில் வழக்கிலிருந்ததை ஏன் மாற்றித் தொலைத்தார்களோ!?
விளையாட்டை
நேற்று பார்க்கும் போது தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் படுக்கப் போய் விடலாமா
என்று தோன்றியது. ஆனால் அர்ஜென்டினா வென்றதும் மிச்சம் மீதிக் காட்சிகளைச் சந்தோஷமாகப்
பார்க்கத் தோன்றியது.
ஆனால்
ம்பாப்பேவுடன் தரையில் உட்கார்ந்து ஆறுதல் சொன்ன பிரான்ஸ் நாட்டு அதிபரின் படம், மகா சோகத்துடன்
தன் பரிசை வாங்கிச் சென்ற ம்பாப்பேவைப் பார்த்த போது ஒன்று சொல்லத் தோன்றியது: ”அட
.. போப்பா ... உனக்கு இன்னும் நிறைய வயசிருக்கு. இந்த தடவை போனா அடுத்த தடவை பார்த்துக்கோ.” ( அதுவ்ரைபொழச்சிக் கிடக்கிறவங்க பார்த்துக்குவாங்க !!!)
Thursday, December 15, 2022
1207 FIFA '22 -- FIRST SEMIFINAL
செவ்வாய் இரவு முதல் அரையிறுதி ஆட்டம்
வெகு சுறுசுறுப்பாக நடந்தது. அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஆட்டத்தை மிக அழகிய ஒன்றாக மாற்றினார்.
எதிரணியினரான கொரோஷியாவின் ஆட்டதில் முந்திய ஆட்டங்களில் இல்லாத சோர்வு, அதுவும் தற்காப்பில்
சிறிது பின் தங்கியிருந்தார்கள். அதனால அர்ஜென்டினா மிகவும் வேகமாக கொரோஷியா கோல்
ப்குதியில் அடிக்கடி ஊடாட முடிந்தது. முதல் கோல் பெனல்ட்டியால் கிடைத்தது. சிரமுமின்றி
மெஸ்ஸி அதை அடித்து வென்றார். இரண்டாவது கோல் 9 எண்ணுள்ள ஜூலியன் அல்வாரஸ் என்பவரிடம்
பந்தை மெஸ்ஸி பாஸ் செய்தார். ஏறத்தாழ அர்ஜென்டினாவின் கோல் எல்லைக் கோட்டைத்தாண்டி
கொடுத்தார். அங்கிகிருந்து அல்வாரஸ் தனியாகப் பந்தை வெகு வேகமாக கொரோஷியா கோலுக்கு
எடுத்துச் சென்றார். அங்கே இரு தடுப்பாளர்களைத்
தாண்டி, அதன் பின் கோல் கீப்பர் பந்தைத் தடுக்க, தடுத்தப்பட்ட பந்தை மீண்டும் கைப் பற்றி .. இல்லை .. இல்லை .. கால்பற்றி அதைக்
கோலாக மாற்றினார். மரடோனா அடித்த கோல் நினைவுக்கு வந்தது. அவரும் தனியாக தன் கோல்
பகுதியில் ஆரம்பித்து ஐந்தாறு ஆட்களைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்று கோல் அடித்தது
நினைவுக்கு வந்தது.
முதல்
பாதியிலேயே இரண்டு கோல் போட்டிருந்தாலும் ஆட்டம் தொடர்ந்து பதட்டத்தோடு ஆரம்பித்தது.
ஏனெனில் இதே கொரோஷியா ப்ரேசிலை வென்றது அர்ஜென்டினாவை ஆதரிக்கும் மக்கள் மனதில் நிழலாட
அந்த அச்சத்தோடு ஆட்டத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அர்ஜென்டினா
மூன்றாவது கோலையும் போட்டு ஆட்டத்தை வென்றது. வழக்கமாக கொரோஷியா இந்தப் போட்டியில்
எக்ஸ்ட்றா நேரத்தில் ஆட்டத்தை இழுத்துச் சென்று வெற்றிகரமாக முடித்தது போலில்லாமல்
ஆட்ட நேரத்திற்குள் போட்டி முடிவுக்கு வந்தது.
முதல்
முறையாக உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஆப்ரிக்க-அரேபிய நாடாக அரையிறுதிக்கு க்ரோஷியா
முன்னேறியுள்ளது. அடுத்த இரண்டாம் அரையிறுதியில் பிரான்ஸ் நாட்டோடு மோதுகிறது. உலகக்
கால்பந்து ரசிகர்களில் பலருக்கும் பிரான்ஸ் சென்ற முறை கோப்பை வென்றது போல் இப்போதும்
வெல்ல அதிக வாய்ப்பிருந்தும்,
இம்முறை ஒரு ஆப்ரிக்க நாடு வெல்லட்டுமே என்ற ஆசையில் உள்ளார்கள். பிரான்ஸ்
நாட்டு Mbappe – இவர் பெயரை எப்படித் தமிழில் உச்சரிப்பது,
எழுதுவது என்றே தெரியவில்லை!! – 5 கோல் போட்டு முன்னணியில் இருக்கிறார்.
அவர் தங்கக் காலணி பரிசைப் பெற வேண்டுமென ஒரு பக்கம் அவரது விசிறிகள் காத்திருக்கின்றனர்.
பார்ப்போம் .. இன்னும் சிறிது நேர்த்தில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து
விடும்.
Sunday, December 11, 2022
1206. FIFA '22 - தமிழ் வர்ணனையாளர்கள்
ஆங்கில அறிவு நமக்கு கொஞ்சம் குறைச்சலா .. அதனால் விளையாட்டுகளில்
வரும் நேர்முக வர்ணனைகள் ஆங்கிலத்தில் வரும்போது அரைகுறையாக மட்டுமே கேட்பதுண்டு. ஆனால்
உலகக் கால்பந்தாட்டத்தில் தமிழிலும் வர்ணனை என்றதும் ஆசையாகக் கேட்க ஆரம்பித்தேன்.
முதல் இரு நாட்களில் – அதாவது pre QF – கேட்டது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
யாரோ இரு க்ரிக்கெட் ஆட்களை உட்கார வைத்தது போலிருந்தது. ஏனெனில் அடிக்கடி அந்த விளையாட்டை
இந்த விளையாட்டில் பேசிக் கொண்டிருந்தனர்!!! நல்ல வேளையாக QF ஆட்டங்களில் வேறு இருவர் வந்தனர். அவர்களது வர்ணனை மிக நன்றாக இருந்த்து.
ஆட்டக்காரர்கள் எந்த க்ளப்பிற்காக ஆடியவர்கள், அவர்களின் திறமை என்ன என்பது போன்ற
செய்திகளோடு விறுவிறுப்பாகப் பேசினார்கள். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான செய்திகளோடு
பேசினார்கள்.
அந்த வர்ணனையாளர்களைப் “பிடிக்க” கூகுள் ஆண்டவரிடம்
கேட்டேன். அவர் சொன்னது இது தான்: Tamil viewers will be able to enjoy the voices of
former India player and notable commentator Raman Vijayan along with Nallapan
Mohanraj, Dharmaraj Ravanan, and Vijayakarthikeyan.
இவர்களில் யார் அந்த இருவர் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
அவர்கள் ஒரே ஒரு முறை தங்கள் பெயர் சொல்லும் போது நல்லப்பன் மோகன்ராஜ் என்ற பெயர்
நன்றாகக் காதில் விழுந்தது. இன்னொருவர் பெயர் சீனிவாசன் என்று கேட்டது போலிருந்தது.
ஆண்டவர் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயரைக் காணோம். ஆக,
இரண்டாவது ஆள் யாரென்று தெரியவில்லை. .(அது ஒருவேளை ராமன் விஜயனாக
இருக்குமோ?)
தெரிந்தவர்கள் உதவுங்களேன்... என்னைப் போன்ற ஆங்கில
அறிவிலிகளுக்கு அது மிகவும் உதவும் ....
Saturday, December 10, 2022
1205. FIFA, 22 FALL OF BRAZIL
தியான் சந்த்
ஹிட்லர்
இருந்த காலத்தில் அவர் நமது ஹாக்கி விளையாட்டு வீரர் (ஹாக்கியை, வளைதடி
விளையாட்டு என்று சொல்லணுமாமே. வேண்டாம் ஹாக்கியே இருக்கட்டும்!) தியான் சந்தின்
ஹாக்கி மட்டையை வாங்கிப் பார்த்ததாகச் சொல்வார்கள். எப்படி அவர் மட்டையோடு பந்து
ஒட்டிக் கொண்டு போகிறதே என்ற ஆச்சரியம் ஹிட்லருக்கு என்று சொல்வார்கள். அதோடு அவரை
ஜெர்மனிய குடிமகனாக ஆக்குவதற்கும் தயாராக இருந்தாராம் ஹிட்லர். தியான் சந்த்
மறுத்து விட்டாராம். இதெல்லாம் வாசித்தது. எந்த அளவு உண்மை என்பது தெரியாது. ஆனால்
எல்லோருக்கும் தெரிந்த அளவிற்கு தியான் சந்த் குழுவினர் 1938ம் ஆண்டு
ஒலிம்பிக்கில் ஜெர்மனியை 10:1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.1928 -1964 ஆண்டு
வரை 8 இறுதி ஆட்டங்கள் ஆடி அதில் 7 ஆட்டங்களில் தங்கம் வென்றனர். 1964ம் ஆண்டு
முதல் முதலாக நான் சென்னை வந்த போது தொலைக்காட்சிப் பொட்டியில் முதல் ஹாக்கி போட்டியைப்
பார்த்தேன். அதன்பின் 1980ல் ஒரு மெடல் வாங்கினாலும் 1964 ஆண்டோடு நமது ஹாக்கி
சகாப்தம் முடிவடைந்தது.
ஹாக்கி
மைதானம் செயற்கைப் புல் வெளியோடு மாறியது,
வெள்ளைத்தோல்காரர்கள் புதிய வேகத்தோடு விளையாட ஆரம்பித்து அதனால்
மாற ஆரம்பித்த மாற்றங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது, உடம்பு வலிமை அவர்களுக்கு அதிகமாக இருந்தது ... என்று பல காரணங்கள்
சொல்வார்கள். ஆனாலும் நாம் இழந்தது இழந்ததே. அந்த சகாப்தம் இனி வரப் போவதேயில்லை.
ப்ரேசில்
ஐந்து முறை வென்றது மட்டுமல்ல; அந்த டீம் பொதுவாகவே இந்திய மக்களின் dream team. மரடோனாவிற்குப்
பிறகு அந்தப் பட்டியலில் அர்ஜென்டினாவும் சேர்ந்து கொண்டது. பீலே, ரொனால்டோ, ரொனால்டின்கோ, கார்லோஸ்,
நெய்மர் என்று ப்ரேசிலும், மரடோனா, மெஸ்ஸியும் அர்ஜென்டினாவின் வீரர்களாகவும்,போர்ச்சுகல்லின்
கிறிஸ்டியானோவும் நமது நாட்டுக்குப் பிடித்த வீரர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
வழக்கமாக ப்ரேசில் நாட்டு வீரர்கள் போடும் ‘குத்தாட்டம்’
/சம்பா நடனம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் இந்த முறை
அந்த ஆட்டமும், ப்ரேசில் கால்பந்தாட்டப் பண்பை உச்சத்திற்கு
வளர்த்து விட்டிருப்பதும், அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதே
ஒரு பெரும் திருவிழா போல் இருக்கிறது என்றும் இந்த ஆண்டு அத்தனை புகழப்பட்டு
உச்சத்தில் அவர்கள் இருந்ததோடில்லாமல் இந்த ஆண்டு நிச்சயம் அது இறுதி வரை வந்து
தங்கக் கோப்பையையும் வென்று விடும் என்றும் நம்பப்பட்டது; நானும்
நம்பினேன் முழுமையாக.
ஒரு
வேளை எனக்கு பீலே ஒரு காரணமாக
இருந்திருக்கலாம். அவரால் ப்ரேசில் மீது ஒரு காதல். அதனால் அந்த நாடு வெல்ல
வேண்டுமென்று எப்போதும் ஒரு ஆவல். 86லிருந்து தொலைக்காட்சியில் போட்டியைப் பார்க்க
ஆரம்பித்திருந்தாலும்,
ப்ரேசில் வென்ற ஐந்து தடவைகளில் 1994, 2002 ஆண்டுகளில்
மட்டும் அதைப் பார்க்க முடிந்திருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்டு நிச்சயமாக இறுதி
நிலைக்கு வந்து, அதிலும் வெற்றியடைந்து விடும் என்று
எதிர்பார்த்தேன். நடக்காமல் நேற்று அதற்கு இறுதிச் சங்கு ஊதியாகிவிட்டது.
எனக்கென்னவோ
ஐரோப்பிய நாடுகள் தங்கள் முன்காலை தீவிரமாக எடுத்து வைத்து விட்டன என்றே தோன்றுகிறது. ப்ரேசிலின்
ஆதிக்கம், ஹாக்கியில் இந்திய ஆதிக்கம் முழுமையாக முறிந்து போனது போல், முடிவிற்கு வந்து விட்டது என்றே தோன்றுகிறது. கோல் ஏரியாவில் எத்தனை
கால்கள் தடுக்க வந்தாலும் அவைகளைத் தாண்டி,பெளல் நடக்காமல்
தப்பித்து பந்தை எடுத்துச் சென்ற ரொனால்டோவின் அழகான ஆட்டமும், ரொனால்டின்கோவின் வேகமும், கார்லோசின் வீச்சும்
பார்த்து ஈர்க்கப்பட்ட எனக்கு இந்த ஆண்டு நேற்று நெய்மர் அடித்த கோல் மட்டும்
ஆசுவாசமளித்தது. ஆனால் அடுத்து வந்த குரோஷியாவின்
கோல் இனி பெனல்ட்டி மட்டும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற போது நம்பிக்கை சரிந்தது;
அதுவே நடந்தும் விட்டது.
மெண்டொஸ் புயல் கடுமையான காற்றோடு கடும் மழையையும் கொண்டு வந்ததா? என் சோகத்திற்கு விசிறிவிடுவது போல் இன்றைய போட்டி முடிந்தவுடன் மின்சாரத்தடை வந்தது. அடுத்து அர்ஜென்டினா ஆட்டம் பார்க்க திராணியும் இல்லை. படுத்தால் உடனே தூக்கம் வரவில்லை. ஏனோ இந்தியா ஹாக்கியில் வீழ்ந்தது போல் ப்ரேசில் கால்பந்தில் விழுந்து விட்டது என்ற நினைப்பே மனதிற்குள் சுற்றிச் சுற்றி வந்தது. அடுத்த போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குத்தான் தெரியும்?
Wednesday, December 07, 2022
Sunday, December 04, 2022
1203. FIFA '22
அர்ஜென்டினா – ஆஸ்திரேலியா 2 : 0
KO – KNOCK OUT துவங்கியாச்சு. ஆட்டம் இனி தெறிக்கணும். ஆனா இரவு 12.30 மணிக்கு அர்ஜென்டினா ஆடிய ஆட்டம் அத்தனை ரசனையாக இல்லை. அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவுடன் மோதியது . ஆசிக்களின் ஆட்டமே வேகமாகவும் நன்றாகவும் இருந்தது. மெஸ்ஸி & கோ மைனஸ் ஆட்டம் ஆடி அநியாயமாகப் போரடித்தார்கள். எப்படியோ 2 கோல்கள் போட்டார்கள். முதல் கோல் மெஸ்ஸி. மெல்ல ஒரு பந்தைத் தட்டினார். நாலைந்து பேர் கால்களைக் கடந்து கோலானது. அதன் பின் அர்ஜென்டினா வேகம் கொஞ்சூண்டு கூடியது. ஆனால் ஆட்டம் என்னைப் பொறுத்தவரை ... செம சொதப்பல்.
நெதர்லாந்து - அமெரிக்கா
ஆனால்
இந்த ஆட்டதிற்கு முன் இரவு 8.30 மணிக்கு அமெரிக்காவும், நெதர்லாந்தும் ஆடிய
ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தது. இரு பக்கமும் பந்து அலைபாய்ந்தது. நெதர்லாந்தின் கை
ஓங்கியிருந்தது; காலும் ஓங்கியிருந்தது என்பதை அது 2:0 என்ற
கோல் கணக்கில் வென்றதை வைத்தே சொல்லி விடலாம்.
Saturday, December 03, 2022
1202. FIFA '22
ஒரு வழியாக முதல்
ரவுண்டு முடிந்தது. நாக் அவுட் ஆரம்பித்தாகி விட்டது. ஏதோ ஒரு வழியாக பிடித்த சில ஆட்டங்களைத்
தேர்ந்து பார்த்தாகி விட்டது. இனி எல்லாவற்றையும் பார்க்க ஆசை. தேறும் வரை பார்க்கணும்.
இதுவரை ஆடியவர்களில் இருவரை மிகவும் பிடித்து விட்டது. அதைப் பற்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது.
அதில் முதல்வர்
ஜெர்மன் நாட்டு இளம் வீரன். 19 வயதுதான் ஆகிறது. மரடோனா ஆறு பேரிடம் பாலைக் “கடைந்து”
போய் கோலடித்தார் என்பதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். அதுவும் ஏறக்குறைய பாதி கிரவுண்டில்
ஆரம்பித்து கோலில் முடித்திருப்பார். ஆனால் இந்தச் சின்னப் பையன் கோவில் பெனல்டி ஏரியாவின்
வலது பக்க மூலையில் இருந்து கோல்வரை தொடர்ந்து பல ஆட்டக்காரர்களின் கால்களை ஏமாற்றி
பந்தை கோலுக்கு அருகில் கொண்டு வந்த ஆட்டத்தைப் பார்த்து அசந்து விட்டேன். யாரும்
பெளல் செய்து காலை மிதிக்க உடாமல் தவ்வித் தவ்வி பந்தை அழகாகக் கடைந்து முன்னேறிய காட்சி
அப்படியே மனதில் பதிந்து விட்டது. அழகான ஆட்டக்காரன். அடுத்த உலகக் கோப்பை ஆட்டத்திலும், அதற்கு முந்திய போட்டிகளிலும் நிச்சயமாக அசத்துவான்.
வாழி, பையா நீ!
அடுத்தது அர்ஜென்டினா
குழுவில் wingerஆக ஒரு
நெடிய உருவம் என்னை ஈர்த்தது. பெயர் டி மரியா. எனக்கு முன்பு பிடித்த பிரஞ்சு ஆட்டக்காரர்Thierry
Henry-யை நினைவுக்குக் கொண்டு வந்தார். செம ஓட்டம். பார்த்த ஆட்டங்களில்
மெஸ்ஸியை விட இவரையே எனக்குப் பிடித்தது.
Thursday, December 01, 2022
1201. FIFA '22 ARGENTINA vs POLAND
அந்தக் காலத்தில எல்லாம் ... டென்னிஸ், கால்பந்து போட்டிகள் நடக்கும்போது என்னையறியாமல் சத்தமாகக் கத்தி விடுவேன்;
அல்லது பலமாக கையை, காலைத் தட்டிக் கொள்வேன்.
தூரத்திலிருந்து பாஸ் என்னன்னு கோவமா கேப்பாங்க. ஒண்ணுமில்லை... நல்லா டென்ஷனா
இருந்துச்சுன்னு சொல்லிட்டு அசடு வழிவேன். ஆனால் இந்த தடவை இரண்டே இரண்டு தடவை
மட்டும் அப்படி நடந்திச்சு.
ஸ்ருதி சரியா சேரலையோ? விளையாட்டுப் போட்டியே அப்படி சுருதி
இறங்கிப் போனது மாதிரி தோணியிருச்சு. அவங்க விளையாட்டு முந்தி மாதிரி இல்லையா
அல்லது நமக்கு வயசாகிப் போச்சே அதுனால நம்ம சுருதிதான் இறங்கிப் போச்சோன்னு ஒரு
எண்ணம் வந்தது. அதே நேரத்தில் மதுர நண்பர் ஒருவரும் இதே மாதிரி சொன்னார். அவரும் sailing
in the same ஓட்டை boat! Common factor பார்த்தா
எங்க வயசுதான் காரணமாயிருக்கும். இருந்தாலும் பூமர் அங்கிள்கள் யாராவது இந்தத்
தீர்ப்பை சரி அல்லது தப்புன்னு சொன்னா ரொம்ப நன்னியோடு இருப்பேன் / இருப்போம். Okay,
Pri?
முந்தா நாளும் நடு ராத்திரியும் ஆட்டம் பார்க்க தேவுடு
காமிச்சாச்சு. காலையில் என்னமோ சாமி வந்து இறங்கி, எழுப்பி விட,
மகா ஆத்திரத்தோடு 5-8 மணி வரை எழுத்து வேலையை அப்படியே கடமை தவறாத கந்தசாமி
மாதிரி உக்காந்து எழுதியாச்சு. மத்தியானம்
ஒரு தூக்கம் போட்டிருக்கலாம். மதிய போட்டியையும் தேவுடா என்று உட்கார்ந்து
பார்த்தாச்சு. இப்படி இருந்தா நேற்று இரவு போட்டியை நடு ராத்திரி உக்காந்து மனுஷன்
பார்க்க முடியுமா? நானும் மனுஷன் தான்னு என்னைப் போட்டுப்
படுத்திய தூக்கம் நிருபித்து விட்டது.
ஆட்டத்தின் முதல் பாதியின் முதல் பாதி வரை தூக்கத்தோடு
பார்த்தேன். பாத்துக்கிட்டு இருக்கும் போதே சாமி வந்து ஏறிடும். அப்புறம்
டப்புன்னு அது இறங்கி முழிக்கும் போது டிவியைப் பார்த்தா அர்ஜென்டினா ஆட்கள்
அம்புட்டு பேரும் போலந்து கோலைச் சுத்தி நின்னுக்கிட்டு இருப்பாங்க. அப்ப
வந்திச்சு அர்ஜென்டினாவிற்கு ஒர் பெனல்டி. இந்த VAR ரொம்ப பொய்
சொல்லுமோ? கோல் விழாம இருக்க கோல் கீப்பர் உயரமா தவ்வுறாரு
... சரி. அதே மாதிரி கோல் போட போன மெஸ்ஸி என்ற குட்டைக் கத்திரிக்காயும்
தவ்வுறாரு. மோதிக்கிறாங்க .. இதில் என்ன foul? ஒரு நியாயம்
வேணாமா? இந்த தகறாரில் நான் நன்றாக முழித்து விட்டேன்..
அதனால் விழித்தும் பார்த்தேன். எனக்கு பெனல்டி கொடுத்தது தப்பாகத் தோன்றியது. Anyway
umpire’s discretion and judgment! என்ன பண்ண முடியும்?
நம்ம ஆளு மெஸ்ஸி கோல் அடிக்க வந்தார். ஏற்கெனவே முதல்
போட்டி பெனல்டியில் கவுத்துட்டாரேன்னு நினச்சேன். அதே மாதிரி இந்தத் தடவையும்
கவுந்து போச்சு. போலந்து கோல் கீப்பருக்குக் கை தட்டணும். அத்தனை வேகமாக வந்த
பந்தை வெளியே தள்ளி விட்டுட்டார்.
இதில் எனக்கொரு சந்தேகம். பொதுவாக, பெரிய புள்ளிகள் பெனல்டி
அடிக்கும் போது கோல் கீப்பர்கள் பந்தை எதிர்பார்த்து ஒரு பக்கம் சாய ஆரம்பிக்கும்
போது அடுத்த பக்கம் பந்தை அடித்து விடுவார்கள். அந்த டெக்னிக் எப்படி என்பது எனக்குத்
தெரியாது. “7” ரொனால்டோ போன தடவை அடித்த பெனல்டியில் அப்படித் தான் நடந்தது. ஆனால் இந்த தடவை மெஸ்ஸி அடிக்கும் போது போலந்து
கீல் கீப்பார் மிகச் சரியாக எதிர்பார்த்து பந்தைத் தட்டி விட்டுவிட்டார். பெனல்டியால் எனக்கு ஒரு லாபம் ... தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டது.
ஆனால் இரண்டாம் பாகத்தில் அர்ஜென்டினா ஒரு கோல் போட்டாலும்
போட்டார்கள். அதன்பிற்கு ஒரு மகா மோசமான “ஜவ்வு” ஆட்டம் ஆட ஆரம்பித்து
விட்டார்கள். அதாவது மைதானத்தின் நடுக்கோட்டிற்கும் போலந்து கோல் பெனல்டி ஏரியாவிற்கும் நடுவில்
உள்ள இடத்தில் ஏறத்தாழ அனைத்து அர்ஜென்டினா ஆட்டக்காரர்களும் வந்து ஆணியடித்து
நின்று விடுவார்கள். போலந்து ஆட்கள் பந்து எடுக்க வரும்போது இவர்கள் நால்வர்
அல்லது மூவர் சேர்ந்து ... நாங்கெல்லாம் குரங்குப் பந்துன்னு அந்தக் காலத்துல விளையாடுவோமே
... அது மாதிரி மாத்தி மாத்தி பந்தை அடிச்சிக்கிட்டு இருப்பாங்க. நான் வேற தூங்கி
ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கிறேனா ... தாங்க முடியவில்லை. மனசுக்குள்ள
நினச்சிக்கிட்டேன்... பைனல் போட்டியில ப்ரேசில் கூட இப்படி இவங்க இதே மாதிரி
விளையாடினால் நான் எழுந்திருச்சி போயிருவேன். இத அவங்க கோச் லயனல் கிட்டேயும்
சொல்லணும் போல இருந்திச்சு.
ஆனா ஒரு சந்தோஷம். என்னன்னா என்னை மாதிரியே இன்னொரு
ஆளுக்கும் இதே கோபம் வந்திருக்கும் போல. அது யாரு தெரியுமா? நம்ம மெஸ்ஸி தான். இந்த மாதிரி அவங்க ஆளுக குரங்கு பங்கு விளையாடும் போது
மெஸ்ஸி பக்கம் பந்து வந்ததும் அவர் பந்தை எடுத்துக்கிட்டு போலந்து ஆட்கள்
கூட்டத்துக்கு நடுவில் பாய்ந்து பந்தை எடுத்துச் சென்றார். எனக்கு அதுனால மெஸ்ஸி
மேல் இன்னும் அதிகமா லவ் வந்திருச்சு. நல்லா அடித்தார் .. கோல் விழாமல் போனது.
ஆனால் 20, 22 சட்டை
போட்ட ஆட்கள் ஆளுக்கொன்றாக இரண்டு கோல் போட்டு அர்ஜென்டினா வென்றது.
மெத்த மகிழ்ச்சி.
எனக்கு அர்ஜென்டினாவில் டி மரியான்னு ஒரு ஆளு...நெட்ட
நெடுன்னு இருந்தார். அவர் ஆட்டம் எனக்குப் பிடித்தது. ஆனாலும் லயனல் ஏனோ அவரை முதல்
பகுதியோடு வெளியே எடுத்து விட்டார். யாராவது
லயோனலிடம் சொல்லிவிடுங்களேன் ....