Showing posts with label என் வாசிப்பு. Show all posts
Showing posts with label என் வாசிப்பு. Show all posts

Saturday, August 27, 2022

1182. என் வாசிப்பு ....





*


என் வாசிப்பு

 




Forensic Science என்றொரு விருப்பப்பாடம் - elective subject. பல ஆண்டுகள் தொடர்ந்து விருப்பத்துடன் எடுத்த பாடம். விருப்பப் பாடம் என்றால் அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பல்வேறு துறை மாணவர்கள் வருவார்கள். வகுப்பு நன்றாக இல்லாமலிருந்தால் ஆசிரியர் கல்லூரி முழுவதும் மாணவர்கள் மதிப்பில் மிகக் குறைந்த “மதிப்பெண்களே” பெற முடியும். பல்வேறு துறை மாணவர்கள் என்பதால் ஆசிர்யர்கள் பெயர் எடுப்பதும், கெடுப்பதும் எளிது. ஆகவே மாணவர்களை வகுப்பில் “கட்டிப் போட்டாக” வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு உண்டு.

இந்த வகுப்புகளை எம்.ஜி.ஆர். – எம். ஆர்.ராதா வழக்கோடு ஆரம்பிப்பதுண்டு. அந்த வழக்கு நடந்த காலத்தில் தினசரிகளில் வரி விடாமல் வாசித்து வந்திருக்கிறேன். அது நல்ல வசதியாகப் போய் விட்டது. பாடத்தில் முதன் முதலில்  இந்த வழக்கு பற்றிய விவரங்கள் அதிகமாக உதவின. ராதாவின் வழக்கறிஞர் –வானமாமலை அவ்ர் பெயர் – வாதங்களை வாசித்து ரசித்தது (ஆரம்பத்திலேயே முதல் விவாதத்திலேயே matinee idol என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார்.) கடைசி விவாதத்தில் குண்டுகள் எந்தத் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரியவில்லை என்று எதிர்த்தரப்பு கொடுத்த விவாதத்தையும் அடித்து நொறுக்கினார் ... நிச்சயமாக மாணவர்களின் விருப்பத்தை நம் பக்கம் எளிதில் திருப்பி விடலாம்.

அடுத்த வழக்கு ஷோபா (பாலுமகேந்திரா) தற்கொலை வழக்கு. என்னைப் பொறுத்த வரை அது தற்கொலையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அடுத்து அதைப் பற்றிய விவாதங்கள் தொடரும். அடுத்து ஷெர்லாக் ஹோம்ஸ் கதையைப் பின்பற்றி தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால்  கதைகள் வரும். அதிலிருந்து Anyone leaves evidences என்ற தாரக மந்திரமே இந்தத் துறையின் அடிப்படை என்று சொல்லி... பாடங்கள் தொடரும்.

இதில் பல ஆண்டுகள் ஒரு ஆங்கில நாவலைப் பற்றிய கதைகளும் வகுப்பினுள் தலை காட்டும். Frederick Forsyth  எழுதிய THE DAY OF JACKAL கதை வந்து விடும். சில ஆண்டுகளில் வகுப்பில் இந்தக் கதை சொன்னதோடு, அந்தப் படத்தையும் போட்டுக் காண்பித்தேன். என்னைப் பொறுத்தவரையில் திரில்லர் ..திரில்லர் என்றெல்லாம் சொல்கிறோமே ... இந்தக் கதை வாசிக்கும் போது – படம் பார்ப்பதை விட கதை வாசிப்பது... அடேயப்பா .. அது ஓர் அனுபவம். டி கால் என்ற பிரஞ்சு அதிபரைக் கொல்ல ஒரு கூலிப்படை ஆளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவன் ஒவ்வொரு செயலும் கணக்கிட்டுச் செய்கிறான். அவனைத் தேடி வருபவரும் just one step மட்டும் பின்னால் இருப்பார். ஏறத்தாழ டி காலை நோக்கி சுட்டு விடுவார். மகாபாரத்தத்தில் வந்தது போல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்’.  இந்தக் கதையைச் சொல்லி பலரை கதை வாசிக்க வைத்ததும் அல்லது அந்தப் படத்தைப் பார்க்க வைத்ததுமுண்டு.

கடைசியில் ஒரு assignment. தடயங்கள் இல்லாமல் என்னை மாணவர்கள் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டி வகுப்பில் வந்து சொல்ல வேண்டும். மற்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவோ, காவல் துறையினராகவோ இருந்து கேள்வி கேட்டு அந்தத் திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தக் கதை வாசித்து பிரம்மித்த பிறகு அவரின் மற்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒன்று NEGOTIATOR. இந்தக் கதையில் ஒருவனைக் கைது செய்து பின் கட்டாயத்தின் பேரில் விடுதலை செய்ய வேண்டும்.  அவனை விடுவிப்பதற்கு முன்பு அவனது இடைவாரில் ஒரு குண்டு ஒளித்து வைக்கப்பட்டு, அவன் தன் ஆட்களோடு சேரும்போது அதை வெடித்து அவனைக் கொன்று விடுவார்கள். அதாவது ராஜிவ் காந்தியைக் கொலை செய்வது போல் நடக்கும். அப்போது ஒன்று வாசித்த ஞாபகம். இந்த human bomb என்பது இந்த ஆசிரியரால்தான் முதன் முதலில் கற்பனையாக எழுதப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. அதன்பின் இது வெவ்வேறாக வளர்ந்த கதையைத் தான் இப்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே.


                                         

புதினத்தின் ஆசிரியர் 84 வயதில் இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.






*


Wednesday, August 03, 2022

1178. என் வாசிப்பு ...IRVING WALLACE




*

Harold Robbins கதைகளை வாசித்த பின்புதான் ஆங்கிலத்தில் ஒரே ஆசிரியரின் கதைகளைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கின்றேன்.  அப்படி தொடர்ந்த இரண்டாவது ஆசிரியர் Irving Wallace. அவர் எழுதிய THE MAN என்ற நூலை முதலில் வாசித்ததும் இவரையும் தொடர்ந்து வாசிக்க வைத்தது இந்த புதினம். மனதைத் தொடும் கதை.


                                  

அமெரிக்கன் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் விபத்தில் இறக்க, அடுத்து பதவியேற்க வேண்டிய ஸ்பீக்கரும் அறுவை சிகிச்சையின் போது இறக்க, அவருக்கு அடுத்து இருந்தவர் அவசர கால ஜனாதிபதியாகிறார். இவர் ஒரு ஆப்ரோ-அமெரிக்கன்; அதாவது ஒரு கருப்பர். கதை எழுதிய ஆண்டு 1964.  அப்போதெல்லாம் ஒரு கருப்பர் அமெரிக்க அதிபதி என்பதே நடக்க முடியாத, நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அச்சூழலில்  இவரது கதையில் ஒரு கருப்பர் அதிபதியாகிறார். நாடெங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. பல கற்கள் அவர் மீது வீசப்படுகின்றன. அவரது மகள் முழு கருப்பாக இல்லாமல் இருக்கிறாள். அது ஒரு கேலிப் பொருளாகிறது. தங்கள் தலைமுறைகளுக்குக் கடந்த காலத்தில் நடந்த பலவற்றைச் சொல்லி அதற்கான உண்மையை உரைக்கும் போதும் பலருக்கு அது போய்ச் சேரவில்லை. அவரது மகனைப்பற்றியும் குற்றச் சாட்டுகள். அவைகளோடு நில்லாது அவரின் பதவியைப் பறிப்பதற்காக impeachment கொண்டு வரப்படுகிறது. எதிர்நீச்சல் போட்டு நல்ல அதிபதி என்று பெயரெடுத்தும், தொடர்ந்து இரண்டாம முறையாக அதிபதியாவதற்கு ஆதரவு இருந்தும் தொடராமல் பதவிக் காலத்தை முடித்து விட்டு வெளியேறுகிறார்.


                                        

கதையின் நாயகன் நமக்கு அத்தனை பிடித்தவராகிறார். அவரது சோதனைகள் நம்மையும் துன்புறுத்துகின்றன. 1961ல் .. அதாவது இக்கதை எழுத ஆரம்பித்த காலத்தில் பிறந்த ஒபாமா 2008ம் ஆண்டு 44வது அமெரிக்க அதிபதியாகிறார். ஒரு கதை நிஜமானது.

அடுத்து வாசித்த நூல் அப்படியே நம்மை (என்னைக்) கட்டிப் போட்டது. புதிதாக ஒரு பைபிள் தொல்பொருளாக வெளிவருகிறது. இது ஏசுவின் தம்பியான ஜேம்ஸ் எழுதியதாகவும், பல புது விஷயங்கள்  அதில் இருக்கின்றன எனவும், வெளி வந்ததும் கிறித்துவ திருச்சபையே ஆட்டம் கண்டு விடுமென்றும் கருதப்படுகிறது. கிறித்துவ மதத் தலைவர்கள் இந்நூல் வெளியிடப்படக் கூடாதென்று பெரும் முயற்சியெடுப்பார்கள்.  நமக்கும் எப்போது  அந்த நூல் வெளிவருமென்று காத்திருப்போம். இறுதியில் நூல்  வெளிவருவதற்கு முன் அது ஒரு forgery என்பது தெரியும். ஆனால் மூச்சைப் பிடித்துக் கொண்டு இறுதிப் பகுதி வரை வாசிக்கும் அளவிற்கு கதைப் பின்னல் மிக அழகாக எழுதப்பட்டிருக்கும்.

அடுத்த்து ஒரு புதினம்: Seven minutes. ஒரு பெண் புணர்ச்சியின் போது அந்த ஏழு நிமிடங்களில் என்ன நினைத்தாள் என்பது பற்றி ஒரு நூல் எழுத, அந்த நூல் pornography  என்று ஒரு தரப்பு சொல்ல, மற்றொன்று அதை பெரும் நவீனமாகக் கருத... வழக்கு தொடரப்படுகிறது. இதில் வரும் விவாதங்கள் நன்றாக இருந்தாலும், வழக்கு விசாரணை நன்றாக இருந்தாலும் அவரது பழைய கதைகளின் உயரத்திற்கு இது செல்லவில்லை.

                                       


இப்படியெல்லாம் நல்ல கதைகள் எழுதிய பின் 1974ல் The fan club என்று ஒரு நாவல். முழுவதுமாக ஒரு  porno. போதுமடா சாமின்னு இவரைத் தவிர்த்து விட்டு ஓட வைத்த புத்தகம்.





*



Thursday, July 21, 2022

1174. என் வாசிப்பு ...HAROLD ROBBINS



*


அந்தக் காலத்தில நிறைய புத்தகங்கள் வாசித்த காலத்தில் ஒன்று மிகவும் ஆச்சரியமாக மனதில் பட்டது. அது அவ்வாறு அமைந்ததா அல்லது உண்மையிலேயே அப்படித்தானிருந்ததா என்று தெரியவில்லை. நான் விரும்பி வாசித்த நாவலாசிரியர்கள் ஏறத்தாழ எல்லோருமே யூதர்களாக இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.  கதையெழுத வேறு ஆட்களே இல்லையென்பது போலிருந்தது. ஒரு சின்னப் பட்டியல்: Leon Uris, Harold Robins, Irving Wallace, Ken Follet, Asimov, Ayn Rand, Saul Bellow … பட்டியல் இன்னும் நீளும். காரணம் புரியவில்லை.( ஒரு வேளை ஆர்ய வம்சமோ ...??)

இதில் Harold Robinsக்கு ஒரு விஷயத்தில் முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவரது நூல்களில் STONE FOR DANNY FISHER, என்பதை முதலில் வாசித்ததும் அவ்வளவு பிடித்துப் போனது. அதனால் அவரது எல்லா நூல்களையும் வாசித்து விட வேண்டுமென நினைத்தேன். இவ்வாறு ஓர் ஆசிரியர் பிடித்துப் போனால் தொடர்ந்து அவர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்க வேண்டும் என்று நான் முதலில் முடிவெடுத்தது இவரது நாவல் வாசித்த பின்பு தான் ஆரம்பித்தது.



அதன் பின் 79 PARK AVENUE, CARPET BAGGERS, DREAM MERCHANTS  … போன்ற அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்தேன். இவையெல்லாம் அவர் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் எழுதிய புதினங்கள். 1976ல் எழுதிய புதினம் .. அதைப் புதினம் என்று சொல்வதா porno என்று சொல்வதா என்று தெரியவில்லை. அதுவரை கதைகளை அழகாக எழுதியவரின் நூல்கள் எல்லாம் சாண்டில்யன் ஸ்டைல் நாவல்களாக ஆகிப் போய் விட்டன. கடைசியாக THE LONELY LADY வாசித்ததும் Harold Robinsயை மூட்டை கட்டி வைத்து விட்டேன். porno  ஆசிரியர் என்று பெயர் வாங்கி விட்டு அப்படி எழுதினால் ஏமாற்றமில்லை. ஆனால் நன்றாக புதினங்கள் எழுதும் ஆசிரியர்கள் ஏனிப்படி தாவுகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து ஒரு கதாசிரியரையும் இவ்வாறு ஒதுக்க வேண்டியதிருந்தது. அவரைப் பற்றி அடுத்துக் கூறுகிறேன்.

 

Porno என்று சொன்னதும் வாசித்த ஒரு porno புத்தகம் நினைவிற்கு வந்தது. நூலின் தலைப்போ, ஆசிரியரின் பெயரோ நினைவில் இல்லை. ஆனால் pornoவை இவ்வளவு நகைச் சுவையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆரம்பமே அமர்க்களம்...  அது இன்றும் நினைவில் இருக்கிறது. ஹீரோ பெயர் Father Mucker. அவரை அறிமுகப் படுத்தும் போது ஒரு spoonerism தவறு நடந்து விடும். நீங்களே இப்போது அந்தப் பெயரைத்த் தெரிந்து கொள்ளுங்களேன்!!! (தெரிந்தால் வைத்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் தெரிந்தவர்களிடம் கேளுங்கள் !!! – தீப்பொறி ஆறுமுகம் என்ற தமிழ் அரசியல் பேச்சாளர் அடிக்கடி சொல்லும் வசனம்!!!)  Brain transplant ஒருவருக்குச் செய்தபின் வரும் கலாட்டாக்கள். அவர் “ஒன்றுக்கு” போகும் போது அவர் படும் பாடு ....

 

நூலின் தலைப்பு ஆசிரியரின்பெயர் எல்லாம் மறந்த பிறகும் சில நூல்கள் நினைவில் தங்கி விடும். அப்படி ஒரு நூல்.

Extra terrestrial intelligence பற்றிய கதை. நிறைய physics இருக்கும். (வாசித்ததும் ஒரு physics பேராசிரியரைத் திட்டி திட்டி அதை வாசிக்க வைத்தேன்.) SETI – search for intellectual intelligence  இங்கிருந்து radio waves அனுப்பித் தேடிக் கொண்டிருப்பார்கள். அங்கிருந்தும் பதில் வந்து விடும். ஒரு உருவத்தின் படத்தை அனுப்பியிருப்பார்கள். அதற்கு மதத் தொடர்பு கிடைத்தால் மக்கள் அதை வரவேற்பார்கள் என்று கிறித்துவ தலைவர்களை அண்டுவார்கள். ஆஹா ... அப்படியே நம்மை அக்கதை இறுக்கிக் கட்டிப் போடும். 45-50 ஆண்டுகளுக்கு முன் வாசித்தது. பல முறை அதை கூகுள் ஆண்டவரிட்ம் கேட்டுப் பார்த்து விட்டேன். இன்னும் அந்த நூல் எதுவென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

 




*



Thursday, July 14, 2022

1172. என் வாசிப்பு ... ARTHUR HAILEY




*
 

கதைகள் எல்லாம் வாசித்து அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டன. கதைகள் எல்லாமே ஏறத்தாழ மறந்து போனது தான். ஆனால் ஒரு கதாசிரியர் எழுதிய கதையெல்லாம் மறந்து போனாலும், அவர் நாவலில் பொதிந்து வைத்திருந்த செய்திகள் அப்போதும் சரி இப்போதும் சரி பெரும் பிரமிப்பாகவே இருக்கும்.

ARTHUR HAILEY  இவரது கதைகள் வாசிக்கும் போது நல்ல கதையும் கிடைக்கும்; தொடர்பான பல செய்திகளும் வந்து சேரும். எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை வைத்து சொல்கிறேனே... AIRPORT என்றொரு நாவல். ஆங்கிலத்தில் படமாக வந்தது. தமிழிலும் வந்தது என்று நினைக்கின்றேன். சத்யராஜ் நடித்த படமோ... தெரியவில்லை. நான் தமிழ்ப்படம் பார்க்கவில்லை. ஆனால் இக்கதையை வைத்து எடுத்த படம் என்று வாசித்த நினைவு. AIRPORT-ல் ஒவ்வொரு நாள் நடக்கும் அத்தனையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அங்குள்ள குளிப்பறைகளைச் சுத்தம் செய்யும் janitor என்பதில் ஆரம்பித்து, அந்த முழு விமான நிலையத்தின் உயர் அதிகாரி வரை செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் பற்றியெல்லாம் நாமும் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு janitor வேலை செய்யாமலிருக்க என்னென்ன செய்வார் என்பதிலிருந்து ஒவ்வொரு விமானமும் இறங்கி ஏறிச்செல்லும் வரை உயரதிகாரிக்கு எத்தனை தலைவலி என்பதும் தெரியும். ஏதோ ஒரு புதிய வகை விமானம் மிக அதிகமாக சத்தத்தோடு ஏறும், இறங்கும். இதனால் விமானநிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விடும். அந்தப் பகுதி மக்கள் அதற்காக விமானநிலையத்திற்குள் வந்து கூட்டம் போட்டு எதிர்ப்பு காண்பிப்பார்கள்.நமக்கும் டெசிபல்,நம் காதுகளின் தன்மை, அதிக டெசிபல் சத்தம் கேட்பதால் நடக்கும் கேடுகள் பற்றியெல்லாம் விஞ்ஞானத்தோடு எழுதுவார். விமான நிலையத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் தெரிந்து கொள்ளும்படி எழுதியிருப்பார். ஆனால் கதையின் வீரியம் சிறிதும் குறையாது.

AIRPORT, WHEELS, OVERLOAD, STRONG MEDICINE …. என்று ஒரு நீளப் பட்டியல். WHEELS கதை கார்கள் செய்யும் கம்பெனியில் நடப்பது. வெள்ளிக்கிழமையும்,, திங்கட் கிழமையும் வெளிவரும் கார்களை வாங்கக்கூடாது என்று சொல்லியிருப்பார். வெள்ளியன்று வார இறுதி நாள்.. வேளை செய்பவர்கள் ஊர் சுற்றுவதில் குறிக்கோளாக இருப்பார்கள். அன்று நன்கு வேலை செய்ய மாட்டார்கள். திங்கட்கிழமை ஹேங் ஓவர். அன்றும் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள் என்று எழுதியிருப்பார். OVERLOAD மின்சாரக் குழுமம் ஒன்றின் கதை. ஓரிடத்தில் சில மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில் முன்னேற்பாடுகளாக அவர்கள் செய்யும் நேர்த்தியான வேலைகள். மின்சாரத்தின் உதவியோடு உயிரோடு இருக்கும் ஒருவருக்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் .. அட டா!  மனுசன் ஒரு தடவை உடல் நலமின்றி மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார். அதை வைத்தும் ஒரு கதை. STRONG MEDICINE … மருந்துக் கம்பெனிகள் மருந்து தயாரித்து அதை எப்படியெல்லாம் (!!!) விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள் என்று ஆதியோடு அந்தமாக ஒரு கதை.

அவரது கதைகள் பலவும் வாசித்தும் நினைவுக்கு வந்த சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதை எழுதுவதற்கு முன்பு அத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி ஆச்சரியாக இருக்கும். ஒவ்வொரு கதை எழுத தனியாக ஒரு ஆராய்ச்சி செய்வார் போலும். ஒவ்வொரு கதையும் ஒரு Ph.D thesis !!

கதாசிரியர்களின் கதைகளை அந்தக் காலத்தில் வாசித்திருக்கிறேன். இன்று கூகுள் ஆண்டவர் தயவில் அவர்கள் முகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது.

 








*


Saturday, July 09, 2022

1171. என் வாசிப்பு THE ROOTS



*
                                                       Alex Haley  



Leon Uris  எழுதிய EXODUS  புத்தகம் பத்தி சொன்னியே ஏன் என்ன உட்டுட்டன்னு Roots: The Saga of an American Family எழுதின Alex Haley   சண்டைக்கு வந்துட்டார் (கனவுல). என்ன பண்றதுன்னு அவரைப் பத்தியும், அவரது புத்தகம் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம்னு நினைக்கின்றேன்.

பல வாரங்கள் best sellers listல இந்தப் புத்தகம் இருந்திருக்கு. இத வச்சி சீரியலும் எடுத்து ஓஹோன்னு ஓடியிருக்கு. சினிமாவா வந்துச்சான்னு தெரியலை.

ஹேலி ஒரு அமெரிக்க ஆப்ரிக்கன். (இப்படித்தான் அவங்களை சொல்லணுமாம். அப்டின்னா பிரான்சு நாட்டில், இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களை எப்படி சொல்லணும்னு நேத்து .. முந்தா நேத்து விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கும் போது ஒரு கேள்வி மனதிற்குள் வந்தது. பதில் தெரிஞ்சா சொல்லுங்க. தன்யமாவேன்.) இவர் அமெரிக்கப் படையில் பணியாற்றி, பின் அதிலேயே பதவி உயர்வெல்லாம் பெற்று ஓர் இதழியியலாளராக இருந்திருக்கின்றார். படைப் பதவிகளிலிருந்து வெளி வந்த பின் Readers’ Digest  இதழின்  Chief Editor ஆகவும் இருந்திருக்கிறார்.

தன் பரம்பரை எங்கிருந்து எப்படி வந்து, இப்படி ஆனோம்னு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார். ஏழு தலைமுறைக்கு முன்பு காம்பியா என்ற ஆப்ரிக்க நாட்டில் பறை செய்வதற்காக மரத்தில் ஏறி கம்பு வெட்டிக் கொண்டிருந்தவரை அடிமை வியாபாரிகள் அடித்து மயக்கமடையச் செய்து, கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு வந்து, விலைக்கு விற்கப்பட்டார் என்று ஆரம்பித்து தனது ஒவ்வொரு தலை முறையிலும் பல மாற்றங்கள் கண்ட கதையை மிக அழகாக, நம் மனத்தைக் கசக்கிப் பிழியும் வழியில் எழுதியிருப்பார்.

EXODUS வாசித்து முடித்ததும் என்னையறியாமலேயே ஒரு pro-Israelite ஆக மாறினேன் என்பது உண்மை. அதே போல் இந்த நூலை வாசித்ததும் இம்மக்கள் மீதான் அன்பும் கரிசனையும் அதிகமானதாக உணர்ந்தேன். இதேபோல் இன்னொரு வரலாற்று உண்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். Uncle Tom's Cabin; or, Life Among the Lowly  என்ற நாவலை Harriet Beecher Stowe என்ற பெண்மணி 1852 ஆண்டில் எழுதியுள்ளார். பத்தொன்பதாம்  நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்த படியாக விற்பனையான / வாசிக்கப்பட்ட புத்தகமாக இருந்திருக்கிறது. ஒரு அடிமையின் கதை. இந்த நாவல் வாசிச்த்ததும் மக்கள் பலரின் மனதில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக வைத்திருப்பது பற்றிய கேள்விகள் மனதில் எழுந்துள்ளன. அதன்பின் அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்பித்த உள்நாட்டுப் போரிற்கு இந்த நாவல் தான் விதை போட்டது என்பதும் ஒரு முக்கிய கருத்து. இதை வைத்தே அன்றைய அமெரிக்கன் பிரசிடென்ட் Abraham Lincoln  கூறியதை மேற்கோளிடுவார்கள் :  When Abraham Lincoln met Stowe in 1862 he supposedly commented, "So this is the little lady who started this great war.  … இதைச் சொல்லும் போது ஏன் யாராவது ஒருவர் நம் தலித் மக்களைப் பற்றியெழுதி, அது நம் மனசாட்சையை உலுக்கி எடுக்கும் என்றொரு நப்பாசை மனதில் எழுந்தது. ....ம்ம்...ம்... நாம் எங்கே மாறப்போகிறோம் .. எனக்கென்னவோ அந்த நம்பிக்கை சிறிதும் வரவில்லை இது வரை .... நாமென்ன திருந்துற ஜென்மங்களா ... இல்லியே ...


****

ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு  கேள்வி வழக்கமாக எழும்:

இவர்கள் நாய்களுக்கும் கீழாகவே அடிமைகளாக வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்டார்கள். இது உண்மையாக இருக்க, வெள்ளைக்காரர்களின் கிறித்துவ மதத்தின் பக்கம் அவர்கள் இழுக்கப்பட்டு விட்டனர். Uncle Tom's Cabin கதையில் வரும் டாம் பெரியதொரு கிறித்துவராகவே இருப்பார்.

 என் ஐயம்:

தங்களை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தும் போது ஆப்ரிக்கர்கள் எப்படி வெள்ளைக்காரர்களின் தெய்வத்தை ஏற்றுக் கொண்டார்கள்? அது எப்படி சாத்தியமாகும்? அவர்களை வெறுப்பது போல் அவர்கள் கடவுள்களையும் வெறுப்பது தானே சாத்தியம்?

நமது சமுதாயத்தில் முன்னோர் வழிபாடு மட்டும் இருந்தது மாறி, அனைவரும் இந்துக்கள் என்ற அடைப்புக்குள் வடநாட்டிலிருந்து வந்த மதத்திற்குள் சென்று விட்டோமல்லவாஅது போலவோ?  ….. இது இன்னொரு துணைக் கேள்வி.





*



Sunday, July 03, 2022

1170. என் வாசிப்பு ... (பழைய கதையை புதிய போத்தலில் ...)




*

DEV அப்ட்டின்னு ஒரு மனுஷன். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஒரு நூலின் அட்டைப் படத்தைப் போட்டு நல்லா நாலு சொல்லியிருந்தார்.  எனக்கோ பழைய ஞாபகம் வந்தது. அதைச் சொன்னேன்.  இது மாதிரி படிச்சி நல்லா இருந்த நூல்களைப் பற்றி ஏதாவது சொல்லலாமேன்னு கேட்டார். நம்ம தான் சுத்தமான சோம்பேறி ஆச்சே. அப்டில்லாம் உடனே எழுதி விடுவோமா?

ஆனாலும் டக்குன்னு ஒரு புத்தகம் மனசுக்குள்ள வந்து நின்னுது. அதைப் பற்றி மட்டுமாவது சொல்லிருவோம்னு நினச்சேன். நூலின் பெயர்: EXODUS;  ஆசிரியரின் பெயர்: LEON URIS. நூலைப் பற்றிச் சொல்லும் போது எப்படி படம் இல்லாமல் போடுவது என்று கூகுள் படங்களுக்குச் சென்றேன். விதவிதமான அட்டைகள்;அதில் நான் படித்த அதே அட்டையைத் தேடி அதைப் போட்டேன். பின் அட்டையில் இந்தப் புத்தகம் எழுதுவதற்காக அதன் ஆசிரியர் செய்த முயற்சிகளின் பட்டியல் பிரமிக்க வைத்தது. அங்கே கதையின் எலும்பை – skeleton of the story – சொன்னதும் அச்சிட்டு வெளியிடும் குழுமம் காசு கொடுத்து விடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நூலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்த போது சோம்பேறிக்கு ஒரு புது வழி கிடைத்தது. 14 ஆண்டுகளுக்கு முன் இந்த நூலைப் பற்றி எழுதினோமே என்று நினைத்து அப்பதிவைப் பார்த்தேன். ..... பதிவைப் பார்த்து, படித்து அதன் பின் வந்திருந்த பின்னூட்டங்களையும் படித்து அந்தக் காலத்திற்கே ஜம்ப் செய்து விட்டேன். என்ன இனிமையான காலம். நீங்கள் அங்கு சென்று கொஞ்சம் நீந்தி விட்டு வாருங்களேன். பின்னூட்டங்கள் கட்டாயம் வாசியுங்கள் ... எங்களின் பொற்காலம் உங்களுக்கும் கொஞ்சமாவது புரியும்.

https://dharumi.blogspot.com/2008/11/277-exodus.html

அந்தப் பொற்காலம் பற்றி சொன்னவன் இப்போதிருக்கும் “இருண்ட காலத்தைப்” பற்றியும் சொல்ல வேண்டுமல்லவா? EXODUS வாசித்த காலம் அழகானதொரு வாசிக்கும் பருவம். இரவு, சாப்பாட்டு நேரம், பேருந்திவிற்குக் காத்திருக்கும் காலம் ... என்று எல்லா நேரமும் வாசிப்பின் நேரமாக இருந்தது அந்தக் காலம். ஆனால் இப்போது ... எல்லாம் வரண்டு விட்டது. EXODUS நமக்குப் பிடித்ததே என்று பல ஆண்டுகள் கழித்து அதே ஆசிரியர் எழுதிய THE HAJ வாசிப்பதற்காக எடுத்து சில பக்கங்கள் வாசித்தேன். கதை நன்றாகவே போனது. ஆனாலும் கைக்கெட்டும் தூரத்தில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அந்த வாசிப்புக் காலத்தில் இந்த ஆசிரியரின் வேறு சில நூல்களையும் வாசித்தேன். அவை .... 

 Exodus Revisited

Mila 18,

Armageddon: A Novel of Berlin,

Topaz













*