Monday, January 23, 2012

547. சல்மாவும், சல்மான் ருஷ்டியும்

*
சல்மாவும், சல்மான் ருஷ்டியும்.

சல்மான் ருஷ்டியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களாக தினசரிகளில் வாசிக்கும்போது அதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் இன்று (22.1.12) மாலை காலச்சுவடு நடத்தும் 'அற்றைத் திங்கள்' நிகழ்ச்சியில் சல்மா அவர்களது சந்திப்பு நடந்தது. அதனைப் பற்றியும் எழுத நினைத்தேன். இரண்டுக்கும் தான் தொடர்புண்டே .. இருவருமே பாவப்பட்ட மக்கள் தானே!

வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டும் படித்த, அதன்பின் படிப்பு மறுக்கப்பட்ட சல்மாவின் பேச்சில் இருந்த நேர்மையும், தீவிரமும் மிக அழகானவை. படிப்பை நிறுத்திய பின் நான்கு சுவர்களுக்குள் இறுக்கமான ஒரு வாழ்வு. தீவிர வாசிப்பால் விரிந்த சிந்தனைகள், சிறு சிறு இளம்பிராயத்துக் கவிதைகளோடு ஆரம்பித்து, அவைகள் பதிக்கப்பட்ட பின் அவர் பெயர் இதழில் வந்ததால் எழுந்த சமூக, குடும்பச்சிக்கல்கள், இளம் வயதுத் திருமணம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள், யாருக்கும் தெரியாமல் எழுதிய கவிதைகளை இதழ்களுக்கு அனுப்புவது என்று தன் வாழ்வில் சந்தித்த எதிர்ப்புகளை மீறி தன் படைப்பாற்றலை வளர்த்த முறை பற்றி கூறினார். சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து புனைப்பெயர் சூட்டிக் கொண்டு எழுதிய கவிதைகள் வெளியிடப்படும் விழாவிற்கு 'தலைமறைவாக' வந்தது பற்றியும் சொன்னார். எங்கள் மதம் சொல்லாதவற்றை ஆணாதிக்கச் சமூகம் தொடர்ந்து, பொதுவாக கல்வி, அதிலும் பெண்களுக்கான கல்வியைத் தடை செய்வது பற்றிச் சொன்னார். பொதுவெளிகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ளாததைப் பற்றியும் சொன்னார். (வந்திருந்த கூட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் அதிகம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது! எனக்குத் தெரிந்து ஒரு பெண் வந்திருந்தார். இஸ்லாமியர் இக்கூட்டத்தில் அதிகமில்லை என்று சல்மா சொன்ன போது ஓரிரு குரல்கள் நாங்களும் இருக்கிறோம் என்று ஒலித்தன!)

பெண்கள் கவிதை எழுதுவதைப் புதிதாக தான் ஆரம்பித்ததாகக் கூறினார். எழுதிய நாவல் பற்றியும் கூறி, தனது நாவலுக்கும் கவிதைகளுக்கும் எதிர்த்து எழுந்த ஆண்களின் குரல்கள் பொறாமையால் எழுந்தவை என்றார். ஆனால் இந்த ஆணாதிக்கப்பாதிப்பு உலகம் முழுமைக்கும் பொது என்றார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு கருத்தரங்கில் இவரது மொழிபெயர்க்கப்பட்ட நாவலைப் பற்றிய கருத்தரங்கு பற்றிச் சொல்லும்போது, இதே போன்றுதான் மற்றைய நாடுகளிலும் ஆணாதிக்க எதிர்ப்பு இருப்பதாகக் கூறி, பெண்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து அதைப் பற்றிய ஒப்பாரி வைத்தோம் என்றார்!

கேள்வி பதில் நேரத்தில் இஸ்லாமியச் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். கல்வியறிவைப் பெருவதில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது. கல்வி ஒரு அடிப்படை உரிமை. அதை எல்லோருக்கும் கிடைக்க மறுக்கக்கூடாது என்றார். இளம் வயது வேகத்தில் கடவுளைப் பற்றிய எதிர்மறை உணர்வுகள் பதின்ம வயதினில் இருந்தன. ஆனால் இப்போது கடவுள் மறுப்பு என்று ஏதும் கிடையாது. ஆனாலும் இதுதான் கடவுள் என்ற குறிப்பிட்ட நம்பிக்கையுமில்லை; கூட்டத்தில் கடவுளைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுங்கள் என்றார்.

ஒரு பெண்; அதுவும் ஒரு இஸ்லாமியப் பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவளுக்கு மறுக்கப்படும் கல்வி, கொடுக்கப்படும் கட்டுக் கோப்பு என்பதைத் தாண்டி தன்னை மேலே வரச் செய்தது தனது எழுத்தே. என் எழுத்துச் சுதந்திரத்திற்காக எதையும் தியாகம் செய்வேன். எழுத பேனா எடுத்த எந்த படைப்பாளியும் இத்தகையக் கட்டுப்பாடுகளால் துவண்டு விட மாட்டார்கள் என்றார். (சல்மான் ருஷ்டிக்கும் இந்த வாக்கியம் மிகப் பொருத்தம் என்றே நினைத்துக் கொண்டேன்.)

* * *

ராஜஸ்தானில் நடக்கும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிற்கு உலகெங்கிலிருந்தும் பெரும் எழுத்தாளர்கள் வந்திருந்து அந்த விழா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. இவ்விழாவிற்கு சல்மான் ருஷ்டியும் வருவதாக இருந்தது. ஆனால் நமது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வழக்கம் போல் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். அவருக்கு விசா கொடுக்கக்கூடாது என்று சொல்ல, அவருக்கு விசாவே தேவையில்லை என்றதும், அவர் வர அரசு தடை விதிக்க வேண்டுமென்றனர். நடக்கப் போகும் தேர்தலில் இஸ்லாமிய ஓட்டுகள் வேண்டுமென்று விரும்பும் மைய அரசு எம்முடிவையும் எடுக்கத் தயங்கியது. ராஜஸ்தான் அரசோ கலகம் விழையும் என்று ஒரு பூதத்தைக் கிளப்பி விட்டு விட்டு, அதோடு நிற்காது ஒரு குழு சல்மான் ருஷ்டியைக் கொல்ல ராஜஸ்தானுக்குள் வந்து விட்டது என்று ஒரு 'சினிமா' ஓட்டியுள்ளார்கள்.

விழாவை நடத்துபவர்களுக்கும் அடியில் நெருப்பு மூட்டியது போலானது. எழுத்தாளர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அதோடு இரண்டு மூன்று எழுத்தாளப் பெருமக்கள் சல்மானின் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை மேடையில் வாசித்துள்ளார்கள். உடனே இங்கே 'சட்டப்படி' அது தவறு என்று வாசித்த மக்களை, உங்கள் மேல் வழக்கு போட்டு விடுவார்கள் என்று சொல்லி அவர்களை விழா நடத்துவோரே விழாவிலிருந்து காலியாக்கி விட்டார்கள்.

இந்த 'திருவிழாக் கூத்தில்' இரு கடிதங்கள் இந்துவில் வந்துள்ளன. வழக்கமாக இந்துவில் வரும் கடிதங்கள் sensible ஆக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் இம்முறை இரு கடிதங்கள் எனக்கு வேடிக்கையாக, குறுகிய நோக்கோடு இருந்தன. அதில் ஒருவர் சல்மான் ருஷ்டி is guilty of violating the moral and legal principles' என்று எழுதியுள்ளார். உங்கள் moral எல்லோருக்கும் moral தானா? அடுத்து இதில் violating the legal principles என்பது எங்கே, எப்படி நடந்திருக்கிறதென்று தெரியவில்லை.

இன்னொருவர் சல்மான் ருஷ்டி hurting the sentiments of Muslims the world over என்கிறார். அதற்குத்தான் பத்வா போட்டார்கள். அந்தக் கதை முடிந்து விட்டது. ஆனால் அதோடு நிற்காது, அவரை அங்கே போக விடாதே .. இங்கே உட்கார விடாதே என்கிறார்கள். எல்லோருக்கும் அவரவர் மதம் புனிதமானது. இதிலேதும் ஐயமில்லை. ஆனால் மற்ற மதத்தினர் யாரும் தங்கள் கடவுளையோ வேறு யாரையுமோ இப்படித் தாங்கிப் பிடிக்கவில்லை. இப்படி அளவுக்கு மீறி கொலைத்தண்டனை .. அது இது ...என்று சொல்வது நிச்சயமாக மதத் தீவிர வாதம். இது அந்த மதத்தினருக்கு மட்டுமே சரியாகத் தோன்றும். அடுத்தவர்களுக்கு இது ஒரு கேலிக்குறிய, கேள்விக்குறிய விஷயமே. இந்த மதத் தீவிரவாதம் மேலும் பிளவுகளையும் கசப்பையும் ஏற்படுத்துமேயொழிய அம்மதத்தின் மேல் யாருக்கும் எந்த மரியாதையையும் தராது. குண்டு வைப்பது மட்டும் தீவிரவாதமல்ல. இது அதைவிட மிக மோசமான விளைவுகளைத்தான் தரும்.

சலமானின் Midnight Children பல ஆண்டுகளுக்கு முன் வாசிக்க ஆரம்பித்து 150 பக்கங்கள் மட்டும் வாசிக்கவே மிகச் சிரமப்பட்டேன். இப்போது Satanic Verses-ன் திறனாய்வு வாசிக்கும்போதே தலை சுற்றத் தொடங்கியது. என்னமோ magical realism என்கிறார்கள். நமக்குத் தாங்காது. புத்தகத்தை வாசிக்க முயற்சித்தும் முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகக் கத்தாமல், புத்தகத்தை வாசித்த அடிப்படைவாதிகள் யாரேனும் இருந்தால் எதிர்ப்புக்குள்ளான பகுதி எது என்று சொன்னால் நானும் அதை மட்டுமாவது வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே வாசித்த புண்ணியவான்கள் யாராவது அப்பகுதி எது .. பக்கங்கள் எவை .. என்று சொன்னால் நானும் வாசித்துக் கொள்வேன். எப்படி வாசிப்பேன் என்று கேட்பீர்களோ .. நம் நாட்டில் வாசித்தாலே தப்பாமே. எங்கேயாவது நாடு கடந்து போய் வாசித்துக் கொள்கிறேன்!

அது என்னவோ .. தமிழ்மணமாயிருந்தாலும், உலக இலக்கிய விழாவாக இருந்தாலும் இஸ்லாமியரின் அரட்டல் என்பது சகஜமாகி விட்டது. நல்லவேளை நம் தமிழ்மணம், இந்த விழா நடத்துபவர்கள், மைய, மாநில அரசுகள் போலல்லாமல், தங்களைத் தாழ்த்திக் கொள்ளவில்லை; எல்லோரும் விலகுவோம் என்றதும், சரி .. அதற்காக கவலையேதுமில்லை என்று தமிழ்மணம் சொன்ன பதிலில் தரம், தைரியம், நியாயம், தீர்க்கம் இருந்தது.
*

Thursday, January 19, 2012

546. "மெளனகுரு"


*
எல்லோரும் 'ஒகோ'ன்னு புகழ்ந்த படத்தைப் பற்றி நானென்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன். படம் வந்ததும் பார்க்க எண்ணி, முடியாது போக, பல இடங்களில் படம் எடுக்கப்பட்டு விட்டன. படத்தின் தரம் உணரப்பட்டு இரண்டாம் முறையாக திரையிடப்பட்ட பிறகே பார்த்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக கதாநாயகன் இருந்தார். சண்டையில்லை; கத்தலில்லை; வித்தியாசமான தமிழ்ப்படக் கதாநாயகன். படம் முழுவதுமே நம் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக கதாநாயகனின் செய்கைகள் இருந்தன. ஓரிரு வார்த்தையில் சொல்வதானால் இயக்குனர் திட்டமிட்டு கதாநாயகப் பாத்திரத்தை deglamorise செய்துள்ளார். இது படத்திற்கு மிக வலுவூட்டும் ஒன்றாக இருந்துள்ளது. உயரமான கதாநாயகன் கல்லூரி மாணவர்களின் பின்னே தானும் வழக்கமான ஒரு மாணவனாக, ரெளடிகளின் அடிதடிக்கு உடனே 'கம்பு தூக்காமல்' ஓரத்தில் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்ப்படம் தானா என்ற சந்தேகம் வந்தது.

க்ரைம் சீனில் கார் மோதுவது, பின் தலையில் அடித்துக் கொலை செய்ததை தடவியல் - போஸ்ட்மார்ட்டத்தில் மறைப்பது போன்ற நுண்ணிய விஷயங்களில் கொடுத்துள்ள கவனம் நன்கிருந்தது.


நெடுநாள் அடைகாத்து இயக்குனர் எடுத்த படம். மிக அழகாக ஒவ்வொரு நிகழ்வும் தமிழ்ப்படங்களில் வழக்கமாக வரும் illogical நிகழ்வுகள் ஏதுமின்றி பொருத்தமாக அமைந்துள்ளன. It is well sculpted and polished movie.

கதாநாயகனும் உமா ரியாஸும் இயக்குனரின் நடிகர்களாக உழைத்திருக்கிறார்கள். சினிமாத்தனம் இல்லாத இயல்பு அவர்களிடம் பார்க்க முடிந்தது.

கடைசி சீனில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு சைக்கிளில் செல்வது போல் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்; பொருத்தமாயுமிருந்திருக்கும் என்று தோன்றியது.
(இயக்குனர் என் மாணவர் என்று பெருமையாக இங்கே சொல்லிக் கொள்ளலாமா?)

*

Thursday, January 05, 2012

545. வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்*
அவைநாயகன் எனும் நா.சபாபதி என்ற பதிவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை உங்களிடம் சேர்ப்பிக்க இப்பதிவு.

அவர் கூறியிருப்பதில் உள்ள //என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்//  என்ற வார்த்தைகளுக்கு மரியாதை அளிக்க இப்பதிவு.

*

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள்
வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை என்று எழுதியிருந்தேன்.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது – வலைப் பதிவர்கள் அனைவரும் ஒரே நாளில் இந்த சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும் என்பதே அந்த யோசனை.
எனவே சாலை பாதுகாப்பு வார கடைசி நாளான 7-1-2012 அன்று அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?


அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி*

Wednesday, January 04, 2012

544. நல்ல ஒரு மதமும் .. அழகான ஆட்சி முறைகளும் ...
*
//லிபியா மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகள் மிக அடிப்படைவாதிகளான ‘islamic brotherhood' கீழே வரப் போகிறது என்றுதான் எண்ணுகிறேன். அதன் பின் நிலைமை எப்படியிருக்கும் என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.// -- தருமி

//பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாபத் ஆட்சி அமையும். பிறகு இறைவன் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான்.// -- சுவனப்பிரியன்.


சுவனப்பிரியன் சொன்னது போல்  'ஆஹா! இஸ்லாமிய ஆட்சி முறைகள் உலகம் முழுமையும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்த போது, இன்றைய இந்துவில் (4.1.12) வந்த இரு செய்திகள் ஒரு இஸ்லாமிய ஆட்சியில் நடக்கும் "நல்ல விஷயங்களைப்" பற்றிச் சொன்னது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள சில வரிகள் மட்டும் தருகிறேன்.

செய்தி: 1

Editorial
January 4, 2012
Nigeria's twin challenges

http://www.thehindu.com/opinion/editorial/article2772428.ece

The population of Nigeria is made up more or less equally of Christians and Muslims, with a small minority following traditional religion. The first crisis was triggered by deadly Christmas Day bombings near the national capital, Abuja, and in the city of Jos, about 200km away; 49 people were killed and scores injured.

Secondly, persistent and widening inequalities, with poverty especially severe in the Muslim-majority north, alienate citizens and give fundamentalists ready audiences.

Moreover, leaders of Boko Haram, which demands the nationwide adoption of an extreme form of the Sharia law, claim that al-Qaida in the Islamic Maghreb (AQIM) has assisted them; AQIM has also publicly praised the Nigerian group.

=====================

செய்தி - 2:

http://www.thehindu.com/opinion/op-ed/article2772464.ece

A long, sad year after Salman Taseer's killing

Pervez Hoodbhoy

One year ago, the assassination of Salman Taseer, Governor of Punjab, shook liberal and secular Pakistan to the core. Never had the country looked so rudderless.

Fearlessly championing a deeply unpopular cause, this brave man had sought to revisit the country's blasphemy law which he perceived as yet another means of intimidating Pakistan's embattled religious minorities. This law — which is unique in having death as the minimum penalty — would have sent to the gallows an illiterate Christian peasant woman, Aasia Bibi, who stood accused by her Muslim neighbours after a noisy dispute. Taseer's publicly voiced concern for human life earned him 26 high-velocity bullets from one of his security guards, Malik Mumtaz Qadri. The other guards watched silently.

In the long, sad, year more followed. Justice Pervez Ali Shah, the brave judge who ultimately sentenced Taseer's murderer in spite of receiving death threats, has fled the country. Aasia Bibi is rotting away in jail, reportedly in solitary confinement and in acute psychological distress. Shahbaz Taseer, the Governor's son, was abducted in late August — presumably by Qadri's sympathisers. He remains untraceable. Shahbaz Bhatti, the only Christian member of Parliament and another vocal voice against the blasphemy law, was assassinated weeks later on March 2.

Spontaneous celebrations

a murderous unrepentant mutineer had been instantly transformed into a national hero.

the imam of Lahore's Badshahi Masjid declined the government's request to lead the funeral prayers. (ஆனால் நம்ம ஊர்ல ஒசாமாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய ஆளாளுக்குப் போட்டி ...!)

Television screens around the world showed the nauseating spectacle of hundreds of lawyers feting a murderer, showering rose petals upon him, and pledging to defend him pro-bono. (சட்டம் தன் கடமையைச் செய்யும்!![:p] )

In his court testimony, a smugly defiant assassin declared that he had executed Allah's will. Justice Asif agreed, saying that Qadri had “merely done his duty as a security guard”. (என்னே ஒரு இறைப் பற்று!!! கொலை செய்யும் போது கூட ஏன் உங்கள் மக்கள் 'அல்லாஹு அக்பர்' என்று சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தேன்; இதுவரை அதற்குப் பதிலேதும் இல்லை.)

It is surely impossible to hear all khutbas, but a few hundred ones have been recorded on tape by researchers, transcribed into Urdu, translated into English, and categorised by subject at www.mashalbooks.org.

Often using abusive language, the mullahs excoriate their enemies: America, India, .. Hindus....

they breathe fire against the enemies of Islam and modernity. Music is condemned to be evil, together with life insurance a...

In frenzied speeches they put women at the centre of all ills, demand that they be confined to the home, covered in purdah, and forbidden to use lipstick or go to beauty parlours.(ஒழுக்கம்னா இதல்லவா ஒழுக்கம்![:@] )

The 19-year-old illiterate who killed Raj Pal, the publisher of the book Rangeela Rasool, subsequently executed by the British, was held in the highest esteem by the founders of Pakistan, Muhammad Iqbal and Muhammad Ali Jinnah. Jinnah had been Ghazi Ilm Din's lawyer.*