Wednesday, February 28, 2018

973. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - மூன்றாம் பாகம்


பேரரசன் அசோகர் -2 (அசோக சக்கரம்)

அசோக சக்கரமிருக்கிறது. இந்திய பாடப் பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் அசோகரின் வரலாறு எங்கே...?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைத்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் மீதங்களிலிருந்து புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல மிக்க சிரமமேற்று அந்த காலத்திய காலனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நமக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து சுத்தமாக அழிக்கப்பட்ட விடயங்களை நம்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் அது போன்ற ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை காணும் போது ஏன் அதற்கு பிறகான ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக எதுவுமே கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட வில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது.
ஆனால் கச்சிதமாக நம்மிடம் கொட்டிக் கிடந்த தரவுகளையும், துணுக்குகளையும் பிற நாட்டவர் போரிட்டு அழித்தொழித்தது போதாதென இங்கு வாழ்ந்த பண்டிதர்களும் நிறையவே துடைத்தழித்திருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய எஞ்சிய கல்வெட்டுகளில் இருந்து அசோக சக்கரம் அந்த கால கட்டத்தில் ஆண்ட அசோகன் தொடங்கி அவன் வாரிசுகள் வரையிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இருப்பினும் பின் வந்த காலங்களில் வேத விற்பன்னர்கள் அடிப்படையான அசோகனின் சக்கரத்தை...
//...சக்கரம் ஒன்றைச் சுழற்றும் நிகழ்வு பழைய வேதகாலத்து புராணங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. வேத இலக்கியங்களில் தலைவன் காலத்தையே படைக்கிறார். அவனிடமிருந்தே அறவழி பிறக்கிறது. மகிழ்ச்சி பிரவாகமெடுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பரிணமிக்கிறது. பிராமண வேதங்களில் இந்தத் தலைவன் தன் கையில் ஒரு சக்கரம் கொண்டுள்ளான். அது அழிவுக் கருவியாக பகைவர்களைக் கொன்று குவிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. இதுவே இந்து மதப்பரிமாணத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணு என்னும் கடவுளாக உருவெடுக்கிறது ...//
என்பதாக திரித்து நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் இந்த வேத விற்பன்னர்கள். சக்கரம் என்னவோ புத்த காலத்தில் அசோக பேரரசால் ஓர் அறம் சார்ந்த அரசின் குறியீடாக பயன்பாட்டிற்கு வந்தது பின்னாலில் விஷ்ணு வின் அழிவுக் கருவியாக திரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் plagiarism என்று கூறுவார்கள் அறிவுசார் திருட்டு என்பதாக தமிழ் படுத்திக் கொள்ளலாம். பார்க்கும் அளவில் தோண்டித் துருவி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை ஒன்றிணைத்து பார்த்தால் நமக்கு இன்றைக்கு மத நூல்களாகவும், பெரிய பெரிய விஷ்ணு, பெருமாள் (அந்த சிலைகள் கூட புத்த சிலைகளாக இருக்க அனேக வாய்ப்புகள் உண்டு போல...) கோவிலாகவும் எழுந்து நிற்கும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்த சமயத்திற்கென எழுதப் பட்டதும், எழுப்பப்பட்டதுமாக தோன்றுகிறது. அதனிலிருந்து அறிவுசார் திருட்டின் மூலமாக உருவியவையே இன்று நாம் கண்ணுரும் சில விடயங்கள்.
இந்த இடத்தில் ஓர் விடயம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. அசோகர் காலத்திய புத்த மதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பின்பு வந்த வேத விற்பன்னர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், பிற தேசங்களுக்கு சென்றடைந்த புத்த மதம் சார்ந்த குறிப்புகள் பெருமளவில் இலங்கையிலும் இருப்பதாக இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இனப் படுகொலையாளன் ராசபக்‌ஷேவிற்கு தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே விடாமல் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.
நான் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்திலாவது அசோகர் மரம் நட்டார் என்று அளவிலும், ஆரிய, திராவிடர் வரலாறு பற்றியும் படித்தாக நினைவு. இந்த முப்பது வருட இடைவெளியில் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எது போன்ற திரித்தல், இடைச் செருகல்கள் அதிலும் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவணித்து கொண்டிருப்பவர்களுக்கே வெளிச்சம்.
Tuesday, February 27, 2018

972. அசோகர் நூலைப் பற்றி தெக்கா -இரண்டாம் பாகம்*
பேரரசன் அசோகர் -1
இந்த அத்தியாயத்தில் வரலாற்றை, புராணங்களின் வழியாக திருத்தி, இடைச்செருகல் செய்து தங்களுக்கு தேவையானதை செய்து வந்திருக்கிறார்கள் வேத விற்பன்னர்கள் என்பதாக தெளியவைக்கிறது.
இன்றைய காலத்தில் மோடி, எடப்பாடி, பன்னீர் போன்ற அடியாட்களை (ஷத்ரியர்களை) முன் நிறுத்தி வேலை நடத்திக்கொள்வது போலவே, ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பும் வேத விற்பன்னர்கள் அதே ஒட்டுண்ணி பாவனையில் வயிற்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக தெளிவாகுகிறது.
இப்பொழுது கூட எடப்பாடிக்கு பக்கத்தில் ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் ஒரு தலைமை செயலளாலர் சுற்றித் திரிவது நவீன ஏற்பாட்டின் ஓர் குறியீடு.
இத்துடன் அந்த நூலின் பக்கத்தை இணைத்துள்ளேன், அன்றும் இன்றும் அதே நிலைதான் நடந்தேறுகிறது. தவறாமல் வாசித்து விடுங்கள்.
*


971. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - முதல் பாகம்

*பேராசான் Sam மொழி பெயர்த்த "பேரரசன் அசோகன்" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

 பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

 அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

 அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

 இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

 சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

 அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...). 


ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

*

Saturday, February 10, 2018

970. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...7


*     

                             2.     விடுதலைப் பயணம்


இதன் முன்னுரைப் பகுதியில் கடவுளே முன் வந்து “தனது உரிமைச் சொத்தாகிய” இஸ்ரயேலர்களின் அடிமைத் தளையை அறுத்து, விடுதலை நோக்கி அழைத்துப் போவதும். அவர்களைத் தண்டித்து தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறது.
இஸ்ரயேலர்களை கடவுளின் இனமாக முழுவதும் காண்பிக்கப் படுகிறார்கள்.  அப்படியானால் இக்கடவுள் ஒரு சமுதாயம் மட்டும் சார்ந்த, ஒற்றைச் சார்புடைய கடவுளாகவே எனக்குத் தோன்றுகிறார். உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் படி கிறித்துவத்தை உயர்த்தியவர்களின் தொழில் நுட்பம் தான் இது.

3:2. – “அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்கு (மோசேவிற்குத்) தோன்றினார். இதுவரை கடவுளே நேரடி தரிசனம் கொடுத்து வந்திருக்கிறார். முதன் முறையாக ஒரு “தூதர்” இறக்கி விடப்பட்டுள்ளார்.

3 : 15  கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்; “நீ இஸ்ரயேல் மக்களிடம், “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
மீண்டும் கடவுள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் என்பதை இவ்வரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றன. இஸ்ரயேலர்களுக்கு மட்டுமான ஒரு இனக் கடவுளை எல்லா மக்களுக்குமான கடவுளாக மாற்றி விட்டனர். இதை பைபிள் வார்த்தைகளை வைத்தே கிறித்துவ மக்களிடம் பேசினாலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து விடுவதைப் பல முறை பார்த்துள்ளேன். மதம் வலியது!

9 : 12 ” ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.”
இதென்னங்க விளையாட்டு? கடவுளே மன்னனின் மனதைக் கடினப்படுத்துகிறார். அவன் வார்த்தை தவறுகிறான். அதற்காகக் கொள்ளை நோயை (9 : 14) ஏவி விடுவேன் என்கிறார் கடவுள்!  அடுத்து கல்மழையை ஏவி விடுகிறார்.( 9 : 24) ஆடுவதும் நானே! ஆட்டுவிப்பனும் நானே! என்கிறார். இதில் மன்னனை எப்படிக் குறை சொல்வது?


10 :20; 10 : 27; 11 : 10:  “ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.” மீண்டும் அதே திருவிளையாடல் தான்! தவறு யார் மீது? இறுகிப் போகச் செய்யும் கடவுளா? இறுகிப் போன மன்னவன் மனதா?
12 : 13; 12 : 27; 12 : 29  “… நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும் போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.”  
பாரபட்சம் மிகுந்த கடவுள். இஸ்ரயேல் மக்களுக்கான கடவுள் மட்டுமே இவர். எகிப்தியரைத் தண்டிக்கிறார்; கொல்கிறார். ஆனால் இஸ்ரயேலர்களுக்கான கடவுளாகவே பார்க்க முடிகிறது.


12 : 49 “பாஸ்கா விதிமுறைகள்” – ”விருத்த சேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.” இஸ்லாமியர்கள் விருத்த சேதனத்தைக் கண்டிப்பாகச் செய்து வரும்போது கிறித்துவத்தில் இக்கட்டாயம் இல்லை. கடவுளின் ஆணையை மறுதலிப்பதா இது? இதற்குக் காரணம் என்ன?


14 :18 – “பார்வோனையும் அவன் தேர்களையும்  குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்.”  ஆனால் இன்று வரை எகிப்தியர்கள் இஸ்லாமியர்களாகவே உள்லனர். கிறித்துவத்திற்குள்  இதுவரை வரவேயில்லை. கடவுளின் ‘எதிர்பார்ப்பு’ தவறாகி விட்டதோ!


16 : 30 – “ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்”. ஏழாம் நாள் சனிக்கிழமையா (Seventh-Day Christians) அல்லது ஞாயிற்றுக் கிழமையா?


17 : 16 – “ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறை தோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்”.   யார் இந்த அமலேக்கியர்கள்? இன்னும் அவர்கள் கைதான் ஓங்கி உள்ளதா?


20 : 4 –5 “…யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணி விடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன். “ – ஓ!  வஹாபிக்கள், தலிபான்கள்  இவர்களின் தத்துவம் இப்படித்தான் ஆரம்பித்ததோ!


”என்னைப் புறக்கணிக்கும்  மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்”. அட என்னங்க அநியாயமா இருக்கிறது. அப்பா கடன் வாங்கினால் பிள்ளைகள் தீர்க்கணும்னா கூட பரவாயில்லை; ஆனால் அப்பா பண்ணின தப்புக்கு பிள்ளைகள் அதுவும் நான்கு தலைமுறை கழித்தும் வருமென்றால் …. என்ன ’தெய்வ சித்தமோ’ தெரியவில்லை. இந்த் தெய்வத்தின் தீர்ப்புகள் எதுவும் சரியாக இருக்காது என்று தான் தெரிகிறது.


21-ம் பகுதியில் “அடிமைகள்” பற்றிப் பேசப்பட்டுள்ளது. எத்தனை கொடுமையான அடிமைத்தனத்தை நடத்துவது பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கிறித்துவக் கடவுள் அடிமைத் தனத்தை ஆதரிக்கிறது. கொடுமைதான்! அடிமையை அடித்துத் துன்புறுத்தலாம்; பெண் அடிமைகள் மீது எல்லா உரிமைகளும் உரிமையாளருக்கு உண்டு; சூனியக்காரிகள் எவளையும் உயிரோடு வைக்காதே;

23-ன் பகுதியில் தான் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமான கடவுள் என்று கடவுள் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

25-ம் பகுதி “திருத்தலத்திற்கான காணிக்கை” என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

25-1 – “இஸ்ரவேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட் ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காக காணிக்கைகளை பெற்றுக் கொள்ளுங்கள்”.
 இதன் பின்னும் எல்லாமே காணிக்கை பற்றி மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.உடன்படிக்கைப் பேழை, அப்ப மேசி, விளக்குத் தண்டு,கூடாரம், பலிபீடம் முற்றம் அமைத்தல், விளக்கைப் பேணுதல், குருக்களின் உடைகள், மார்புப்பட்டைகள்  …. இப்படி எல்லாமே காசு … பணம், money … என்று தான் பேசப்படுகின்றன.


29:45 “நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன். ( அப்போ நமது பகுதியில் அந்தக் கடவுள் வரமாட்டாரோ?) 

அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன். 
(அப்போ நமக்கு அவர் கடவுளில்லையா?)


29:46 “…நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்”. எவ்வளவு திருத்தமாக இக்கடவுள் இஸ்ரயேலர்களின் கடவுள் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார். பின் ஏன் ஏனைய சாதியினர் அவரைக் கடவுளாகக் கருதுகிறார்கள்?


30:11 ”இஸ்ரயேல் … எண்ணிக்கைகுட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்ட வேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடைய கொள்ளை நோய் வந்து விடும்.”  காசு … காசு … கடவுள் கட்டாய வசூல் இஸ்ரயேலர்கள்மேலும் கடினமாக விழுந்து விடுகிறது. காசு தராவிட்டால் கொள்ளை நோய் … என்ன அன்பான, இரக்கமான கடவுள்!


31:15 – “..ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட் வேண்டும்” . அடடா … இதைப் பின்பற்றினால் ஒரு கிறித்துவனும் இன்று உயிரோடு இருக்க முடியாதே!


34: 13,14 “அவர்களின் (ஏனைய சாதியினரின்) பலி பீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத்தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள். 

14 – நீ வேறொரு தெய்வத்தை வழி படலாகாது. ஏனெனில், ’வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்’ என்பதே ஆண்டவர் பெயர்.” ஆஹா … நல்ல கடவுள்.அரசியல் கட்சித் தலைவர் போல், அடுத்த கடவுளைக் கும்பிடுபவனை எதிரியாகக் கருதும் கடவுள்.


34:24  “நான் வேற்றினத்தாரை உன் முன்னிருந்து துரத்திவிட்டு உன் எல்லையை விரிவு படுத்துவஏன்.” 

இஸ்ரயேலருக்கு மட்டுமேயான கடவுள்

35-ம் பகுதி மீண்டும் காணிக்கை பற்றி பேசுகிறது. கூடாரத்திற்கான காணிக்கை, மக்களின் தாராள காணிக்கைகள் … என்று காசு பிடுங்கும் காணிக்கை பற்றி பேசுகிறது. கடவுளே மக்களிடம் காணிக்கை கேட்டு கேட்டு வாங்குவதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டும். ஆனால் யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லையே!


*

Monday, February 05, 2018

969. BIBLE STUDY பழைய ஏற்பாடு ... 6
விடுதலைப் பயணம்
1.    தொடக்க நூல்
இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது. – எல்லா மதங்களுமே அம்மதங்கள் தோன்றிய ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அதன் சாதி சனத்தையும் தான் மய்யப் புள்ளியாக வைத்து கற்பனையின் அடிப்படைகளில் எழுதப்பட்ட என்ற என் விவாதத்திற்கு உரம் சேர்க்கிறது மேற் சொன்ன வரிகள்: ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறே இங்கு ஒரு மதமாக உருவெடுக்கிறது.
கடவுள் மனைதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.  இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இவை; ஆனால் வாசித்துப் பார்த்தால் நோவாவை மட்டும் விட்டு விட்டு மற்ற உயிரனங்கள் அனைத்தையும் தண்ணீரால் இந்தக் கடவுள் அழித்தொழித்ததையும், பின்பு இது போல் இனி செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு அதன் பின் நெருப்பால் சோதோம், கொமோராவினை அழிக்கிறார். தான் கொடுத்த உறுதிமொழியைக் கடவுள் இப்படியாக முறியடிக்கிறார் நியாயாவதியான கடவுள்! இந்தப் பகுதியில் கடவுளை ஒரு “அழிக்கும்” கடவுளாக மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நூலில் கடவுள் கனிவு காட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது.
கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர் தம் வழி மரம்பினர் வரலாற்றில் தாமே செயல் பட்டுமீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்று இந்த நூலின் துவக்க உரை கூறுகிஅது.
                                                           ***
விவிலியத்தில் வரும் சில வசனங்களும், என் கேள்விகளும்

1: 16   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும்,
இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
எனது கேள்வி:  இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பு ..அது என்ன? நிலவையா சொல்கிறார்கள்?

1:30   – பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
2:5    --    வயல்வெளியில் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை.
எனது கேள்வி: முதலில் ‘அவ்வாறே ஆனது” ஆனால் இரண்டாம் வசனத்தில் எவ்வித செடியும் முளைத்திருக்கவில்லை.????

நோவா வெள்ளப் பெருக்கின் முடிவில் …
7:23   மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன.  .. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சி இருந்தனர்.

நோவா பலி செலுத்திய பிறகு …
8: 20, 21   மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்க மாட்டேன் . … இப்போழுது நான் செய்தது போல் இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.

என் கேள்வி:  எல்லாவற்றையும் அழித்தவர் தனது இரண்டாம் யோசனையில்  (on second thoughts) இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒரு சபதமெடுக்கிறார். மனித சிந்தனை போலவே உள்ள ஒரு கற்பனை இது.


9: 11   நோவா வெள்ளப் பெருகிற்குப் பின் …
சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது.

அப்படியா? உடைக்கப்படுவதற்காகவே உறுதிமொழிகள் மனிதர்களால் மட்டுமல்ல கடவுளாலும் கொடுக்கப்படுகிறது போலும்!


17: 10, 11  உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். …இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
எப்படி ஏற்பாட்டில் கூறப்பட்ட ஒரு கட்டளை கிறித்துவத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டது.


19: 5 (சோதோமின் தீச்செயல் என்ற தலைப்பில் வரும் ‘கதை’ மிகவும் விரசமான ஒன்றாக உள்ளது.) லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா” என்றனர்.
 
இதற்கு லோத் ஆண் தொடர்பில்லாத தன் இரு புதல்வியரை அதற்குப் பதிலாகத் தயாராக இருக்கிறார். 
மிக மட்டமான கதை. இந்துப் புராணங்களைப் பார்த்து கிறித்துவர்கள் முகம் சுழிப்பதுண்டு. இக்கதை பற்றி எத்தனை கிறித்துவர்களுக்குத் தெரியுமோ… தெரிந்த கிறித்துவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவோ?!


19: 12-22 சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. என்று 9:11ல் கடவுள் வாக்களித்தார். ஆனால் இங்கு நெருப்பால் சோதோம், கொமோராவினை நெருப்பினால் அழிக்கிறார்.

எதற்காக அழிக்கிறார்… ஏன் அழிக்கிறார் போன்ற
 கேள்விக:ளைக் கேட்பதே விரையம் தான். இதெல்லாம் கடவுளுக்கு just like that மட்டும் தான் போலும். அதே போல் அவர் அழித்ததைத் திரும்பிப் பார்த்ததால் பாவம் அந்த லோத்தின் மனைவி. உப்புத்தூணாக மாறினாள். எல்லாம் நம் அகல்யா கதை போல் இங்கு இன்னொரு கதை. புராணங்களின் அடி மட்ட அழுக்குகள்!

இதன் பின் வரும் ஆபிரகாமின் கதை அடுத்த ஒரு மிகக் கேவலமான கதை. (முந்திய பதிவில் அதைப் பற்றி எழுதியாகி விட்டது. 20 அதிகாரம்.)


47: 22  அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.


ஊருக்கு ஊர் இதே கதை தான் போலும். அர்ச்சகர்கள் என்றாலே மானியம் தானா?


*