Friday, November 23, 2012

607. இலங்கைப் பயணம்

 *
பயணப் பதிவுகள்;
*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு
*
1960-களில் வாசித்த கதை. 

Irving Wallace எழுதிய ‘THE MAN’ என்ற புதினம். ஒன்றிலிருந்து ஒன்றாக அந்த ஆசிரியரின் நூல்களை வாசித்து வந்த காலம். இந்தப் புதினத்தில் நாட்டின் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் திடீரென்று இறந்து போக, கறுப்பு அமெரிக்கன் ஒருவர் ஜனாதிபதியாகிறார். (அப்போதெல்லாம் ஒரு கறுப்பு அமெரிக்கர் ஜனாதிபதியாக முடியும் என்பது கனவிலும் யாரும் நினைக்காத காலம்!) புதிய அமெரிக்க அதிபருக்கு பல இடைஞ்சல்கள்; அவை ஒவ்வொன்றையும் அவர் சமாளிப்பது தான் கதை.
MY GOOD FRIEND, SUHASNI


அதில் அவரது மகள் வெள்ளை நிறப் பெண்ணாக - mulatto - இருப்பாள். இதை வைத்து அதிபரின் மனைவியைக் கேலி பேசும் கேள்விகள் ஊடகங்களில் எழுப்பப்படும். அதிபர் கறுப்பு அமெரிக்கர்களின் பழைய வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எழுதி, எப்படியெல்லாம் அவர்கள் வெள்ளைத்தோல்காரர்களால் அலைக்கழிக்கப்பட்டனர்; பாலியல் தொல்லைகளுகு உள்ளானார்கள் என்பதையெல்லாம் எழுதி, அன்று நடந்த கொடூரங்களால் கறுப்பு அமெரிக்கர்கள் பல தலைமுறை கடந்த பின்னும் வெள்ளைத் தோலுடன் பிறக்க இருக்கும் வாய்ப்பு பற்றி எழுதுவார்.

மனிதர்களுக்குள் ஏது inbreeding....?


1960-களில் வாசித்த ஒரு பேட்டி.


லா.ச. ராமாமிர்தம் தன் விடுமுறையில் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து விட்டு திரும்பியுள்ளார். பேட்டி எடுப்பவர் அவர் பார்த்த இடங்களைப் பற்றிக் கேட்கிறார். லா.ச.ரா. எனக்கு இடங்களைப் பார்ப்பதை விட மனிதர்களின் முகங்களைப் பார்க்கவே பிடிக்கிறது என்கிறார். பார்த்த முகங்களைப் பற்றிக் கூறுகிறார். மணக்கும் பூ; மணக்காத பூ. மலர்ந்த பூ; மலராத பூ. வண்ணப் பூ; வண்ணமில்லாத பூ ..... இப்படியே சொல்லிக் கொண்டு இறுதியில் ‘ஒரு குடம் தண்ணீர் வார்த்து ஒரே பூ; ஒரே குடம் தண்ணீர் வார்த்து ஒரு பூ’ என்று சொல்லி முடிப்பார். (இந்த ஒரு சொற்றொடரை வைத்து அந்தக் காலத்தில் வகுப்பில் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.)

எனக்கும் முகங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். புது ஊர்களுக்குப் போகும்போது வித விதமாய் தெரியும் முகங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் சின்ன வ்யதில் இரவு ரயில் பயணங்களில் போகும் போது சன்னலருகே இருந்து, ஒவ்வொரு ஸ்டேஷனுக்குள்ளும் ரயில் நுழையும் போது ஒரு சாவியை ஓட்டுனருக்குக் கொடுப்பதற்காக ஒருத்தர் ஒரு பிரம்பு வளையத்தைப் பிடித்தபடி நிற்பார். இரவில் அவர் நிற்பது ஓட்டுனருக்குத் தெரியணுமே, அதற்காக வளையத்தைப் பிடித்து நிற்பவர் இன்னொரு கையில் ஒரு தீவட்டியைப் பிடித்தபடி நிற்பார். ஓடும் ரயிலில் இருந்து அந்த இருளில் தீவட்டியில் தெரியும் அந்த முகத்தைப் பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு ஆசை. 


சென்ற மாதம் ஒரு வாரம் இலங்கைச் சுற்றுலா. இரு ‘மீனவ நண்பர்களோடு’, அவர்கள் மீன் பிடிக்கும் ஆட்களல்ல .. aquaculture ஆட்கள், ஊர் சுற்றி வந்தேன்.  முதலில் பார்த்ததும் தெரிந்த ஒன்று - எல்லா முகங்களும் நம்மூர் முகங்கள் மாதிரிதான்   இருந்தன. நம் முகங்களுக்கும் அவர்கள் முகங்களுக்கும் எந்த வித்தியாசமும் அதிகமாகத் தெரியவில்லை.

பெண்களைப் பார்த்தால் நிறைய கேரளப் பெண்களைப் போல்  இருந்தார்கள். ஆண்களில் நம்மூரை விட மீசை வைத்திருப்போர் குறைவு. வேறு பெரிய வித்தியாசங்களை முகங்களில் காணவில்லை;

 .


இங்கே சில படங்களைப் பார்க்கிறீர்கள். அதில் ’நம்ம’ மூஞ்சுகள், ‘அயல்
நாட்டு’ மூஞ்சுகள் என்று
ஏதும் அடையாளம் தெரியுதான்னு சொல்லுங்களேன் ...மனித ுழுவினர்க்குள் ஏது inbreeding....? என்றுதான் தோன்றியது.


*

அந்த நாட்டுக்குப் போகும் போது ஒரு பெரும் சோகத்தோடு செல்வது போன்ற உணர்வுகள் வருவதைத் தடை செய்ய முடியவில்லை.
இன்னும் கஞ்சம் பங்கள் .. ங்கே ...


*

Sunday, November 18, 2012

606. அஞ்சலி - அப்பாடா! - இதில் எது சரி?
*
பால் தாக்ரே இறந்ததும் பத்தி பத்தியாக செய்தித் தாளில் பல கட்டுரைகள்; பதிவு ஒன்றும் பார்த்தேன். அவர் படம் போட்டு கீழே ‘அஞ்சலி’ என்று மட்டும் போட்டிருந்தது. கட்டுரைகளை வாசித்ததும் என் மனதில் ஒரு கேள்வி .. அவர் படத்திற்குக் கீழே அஞசலி - அப்பாடா! - இதில் எது போட்டால் சரி?

இந்து தினசரியில் வந்த கட்டுரையில் சில பகுதிகள்:

*  அவர் கூறும் ஒவ்வொரு இனவாத சொல்லும் மும்பையில் பெரும் போராட்டங்களையும் தொல்லைகளையும் தரக் கூடியதாக இருந்தது.

*  ஆரம்பத்தில் இவர் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருந்து. மும்பையில் மிகவும் உறுதியாக இருந்த தொழில் சங்கங்களுக்கு உலை வைத்தார்.

*  எளிதாக ஆரம்பித்த அவரது கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பின்னாளில் உருவெடுத்தது.

*  வட இந்தியர்கள், அதைவிட தென்னிந்தியருக்கு எதிராகவே அவரது சிவ சேனாவின் (சிவாஜி சேனையின்) கோபம் வளர்ந்தது.

*  ஹிட்லரை இவருக்கு மிகவும் பிடிக்குமாம். அவரை ஒரு பெரிய கலைஞன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*  .C.P.I. & C.P.I. (M).கட்சிகளின் தலைவர்கள் பலர் சிவ சேனாவினால் தாக்கப்பட்டார்கள்.

*   இதன் உச்சமாக ஜூன்6, 1970ம் ஆண்டு சிவ சேனையின் குண்டர்களால் C.P.I. எம்.எல்.ஏ. - கிருஷ்ண தேசாய் என்பவர் கொல்லப்பட்டார். இதுவே சுதந்திரத்திற்குப் பின் மும்பையில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலையாகும். இதில் காங். கட்சியின் வசந்தரோ நாயக் என்பவரையும், பால் தாக்ரேயையும் இக்கொலையில் தொடர்புபடுத்தி எதிர்க் கட்சிகள் போராடின. 

cultural police வேலையை மிக ‘ஒழுங்காக’ சிவ சேனை செய்து வந்தது. வால்ன்டைன் நாள் அன்று அவர்கள் ஆடிய ஆட்டங்கள் அனைவரும் அறிந்ததே.

*  பாக். அறிஞர்கள், கலைஞர்கள் சிவ சேனையினால் மிகவும் அவமதிக்கப்பட்டனர்; எதிர்க்கப் பட்டனர்.

*  மணிரத்தினத்தின் பம்பாய் படம் பட்ட அவஸ்தை எல்லோருக்கும் தெரிந்த இன்னொரு விஷயம்.

மண்டல் கமிஷனை மிகவும் ஆக்ரோஷத்தோடு எதிர்த்தார்.

*  1995 அசெம்ப்ளி தேர்தல்களில் இந்துத்த்வா கொள்கைகளோடு வெற்றி பெற்றார்.

*  பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை ஒப்புக் கொள்ள மறுத்து, மும்பையில் டிசம்பர் 1992 முதல் ஜனவர் 1993 வரை இரு மாதங்களுக்குத் தொடர்ந்து பெரும் போராட்டங்களை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். 

*  ஆனாலும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் சிவ சேனை குண்டர்களும், தலைவர்களும் இஸ்லாமியர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள் என்று உறுதியாகக் கூறியது.

இவ்வளவு நேர்மையான ஒரு அரசியல் தலைவர் இறந்திருக்கிறார். நாடு முழுவதும் சோகத்தைக் கடைப்பிடிக்கணும் என்கிறார்கள் சிலர். ஏனெனில் இறந்த ஒரு மனிதன் மேல் உங்களுக்கு ஏன்  இத்தனை எதிர்ப்பு என்கிறார்கள்.

இப்படியே போனால் நாளை தாவூத் இறந்ததும் அரைக் கம்பத்தில் கொடியை இறக்கி, இதைப்போல் அஞ்சலி எல்லாம் போடுவார்களா என்றொரு ஐயம். அதனால் தான் இந்தக் கேள்வியை இங்கே கேட்டுள்ளேன்.

 பதில் தெரிந்தவர்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் ..... அஞ்சலியா ... அப்பாடா! - இரண்டில் எதைப் போடுவது?


*

Markandey Katju is Chairman, Press Council of India.
இன்றைய - 19.11.12 - இந்துவில் ியர் ியட்டுரின் கைசி வாக்கியம் ஒன்று பும். அந்தாக்கியம் .....
Hence I regret I cannot pay any tribute to Mr. Bal Thackeray.

*
 20.11.12 THE HINDU:
இன்று இந்துவில் 3 நல்ல கட்டுரைகள்:
பார்க்க ....
1.Katju blasts arrest of women who commented on FB
2. An authentic Indian fascism
3.'Mumbai shuts down due to fear, not respect'

*Friday, November 16, 2012

605. ’கணக்குப் புலி’ சூர்ய நாராயணன் - காணாமல் போன நண்பர்கள் ... 7


*

அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறு பதிப்பு ...


*

1955 - ‘58 ....
St. MARY'S  CHURCH

*

 நம்ம கணக்குப் புலியைப் பற்றி சொல்றதுக்கு முன்னால் இன்னொரு பழைய கணக்கு வழக்கு பற்றி உங்களுக்குச் சொல்லணுமே .. இப்போவெல்லாம் +2-ன்னு பன்னிரண்டு வருஷம் படிக்கிறாங்களே .. நாங்க படிக்கும் போது +1 - பதினோரு வருஷம் தான் இருந்திச்சி. அதாவது பள்ளிக்கூடப் படிப்பு 5+6=11 வருஷம் தான். அதில் முதல் ஐந்து ஆண்டுகள் சின்னப் பள்ளிக்கூடம் .. அதாவது எலிமெண்டரி பள்ளிக்கூடம் / ஆரம்பப் பள்ளி. I to V Standards வரை அந்தப் பள்ளியில். அடுத்து உயர்நிலைப் பள்ளி. அதில் I to VI Forms. ஆறாவது ’பார்ம்’ முடிப்பது S.S.L.C. தேர்வுகளோடு. அதன்பின் கல்லூரியில் P.U.C. அடுத்து பட்டப் படிப்புகள்.

St. MARY'S  Hr. .Sec.  SCHOOL

எந்த வகுப்பிலிருந்து சூரிய நாராயணன் எனக்கு வகுப்புத் தோழனாக இருந்தானென்று நினைவில்லை. ஆனால் III, IV & V பார்ம் படிக்கும் போது உடன் இருந்தது நலலா நினைவில் இருக்கிறது. இந்த மூன்று பார்ம்களில் முதல் இரண்டு வருஷமும் எனக்கும் அவனுக்கும் போட்டியிருந்தது. எனக்கு எப்பவுமே ஒரு ராசி. உடன் படிக்கும் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ந்ல்ல பெயர் .. நல்லா படிக்கிற பையன் என்று பெயர் இருக்கும். ஆனால் தேர்வுகளில் அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறது மாதிரி இருக்காது. கடைசி வரை இப்படி தான். ஆனால், அது இந்தக் கணக்குப் பாடத்தில் ஆரம்பத்திலேயே கோணலாப் போச்சு.


மூன்றாம் பார்ம், அதாவது 8 வது வகுப்பில் இருக்கும் போது கணக்குக்கு எங்களுக்கு வந்த ஆசிரியர் பெயர்: சவுக்கடி சவரிமுத்து. கீழே வேட்டி. மேலே சட்டை போட்டு கோட்டு போட்டிருப்பார். அவர் கோட்டுப் பைக்குள் ஒரு சவுக்கு வைத்திருப்பார்; அதை வைத்து அடிப்பார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம் எந்த சவுக்கும் பார்த்ததில்லை. கேட்டால் முன்பெல்லாம வைத்திருந்தார் என்று சீனியர்கள் சொல்லி விடுவார்கள். அவருக்கு நானும், சூரிய நாராயணனும் செல்லப் பிள்ளைகள். ஏன்னா ... அம்புட்டு நல்லா கணக்கு போடுவோம். எங்க கணக்குப் புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 16 கணக்குகள் இருக்கும். அதற்கு முன்னால் இரண்டு மாதிரி கணக்குகள் இருக்கும். அந்தப் பதினாறு கணக்குகளில் முதல் மூன்றும் மிக எளிய கணக்குகளாக இருக்கும். கடைசி மூன்றும் மிகவும் கஷ்டமான கணக்குகளாக இருக்கும். ஒவ்வொரு கணக்கிலும் ஏதாவது ஒரு ‘பொடி’ இருக்கும்.


சவுக்கடி சார் வழக்கம் என்னன்னா, மாதிரி கணக்கை முதலில் சொல்லித் தருவார். அதன்பின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள முதல் இரு கணக்குகளும், கடைசி மூன்று கணக்குகளும் போடச் சொல்வார். நானும், சூரிய நாராயணனும் எப்போதும் வகுப்பை விட நாலைந்து அத்தியாயங்கள் முன்னால் போயிருப்போம். சாரும் எங்களைப் பார்த்து ’என்னடா .. இந்த அத்தியாயம் முடிச்சிட்டீங்களா?’ன்னு கேப்பார். நாங்க ஆமான்னு சொன்னதும் எங்களைக் கண்டுக்க மாட்டார். அதன்பின் ஒவ்வொரு கணக்குகளையும் அவர் சரி பார்க்கும் போது, எங்களைப் பார்த்து, ‘சரியா போட்டிருக்கீங்களா?’ன்னு கேப்பார். நாங்க ‘ஆமா’ன்னு சொன்னதும் தலையை ஆட்டுவார். அப்படி ஒரு ராஜ வாழ்க்கை....


எனக்கு கணக்கு போட ரொம்ப பிடிக்கும். (இப்ப கூட மனக்கணக்கெல்லாம் போட பிடிக்கும். ஒரு ‘டேஸ்ட்’ அதில் உண்டு.) அதுல இப்படி ஒரு போட்டியா? ரொம்ப ஜாலியா போட்டி போட்டுட்டு பண்ணிக்கிட்டு இருப்போம். அது எங்களிடையே நல்ல நட்பையும் வளர்த்திச்சு. இந்தப் போட்டி ஆங்கிலத்திலும் இருந்தது. அதிலும் இலக்கணம்னா ரெண்டு பேத்துக்கும் ரொம்ப பிடிக்கும். (கணக்குக்கும், ஆங்கில இலக்கண அறிவுக்கும் முழுக் காரணம் எங்க அப்பாதான். கணக்கிலேயும், ஆங்கிலத்திலேயும் பயங்கர வாத்தியார். பள்ளிக் கூடத்திலே அப்பாவுக்கு ரொம்ப பேரு .அப்பாவும் எங்க புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் தானே வேலை பார்த்தார்கள்.) அப்போவெல்லாம் இப்போது மாணவர்களைக் கெடுக்கிற ‘பயிற்சிப் புத்தகம்’ எல்லாம் கிடையாது. புத்தகத்தில் உள்ள கேள்வி, பதில்கள் தான். ஆனால் கணக்கு மாதிரி இதில் வகுப்புக்கு முன்னால் போவது என்பது இருக்காது.


இப்படி மூன்றாம் பார்மிலும் நான்காவது பார்மிலும் எனக்கும் சூரிய நாராயணனுக்கும் நடுவில் இரண்டு பாடத்திலும் எங்கள் வகுப்பின் முதல், இரண்டாம் இடத்திற்கான  போட்டியிருந்தது. நான்காவது பார்ம் கணக்காசிரியர் நினைவில் இல்லை. வாழ்க்கை இப்படி நல்லா போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஐந்தாம் பார்ம் வந்தோம். இப்போது இருப்பது போல பல பிரிவுகள் அப்போது கிடையாது. ஆனால் ஒரே ஒரு பிரிவு உண்டு. கணக்குப் பாடத்தில் மட்டும் General maths & composite maths என்று இரு பிரிவுகள் இருக்கும். கணக்கு வராத கேசுகளுக்கு முதல் பிரிவு. கணக்குப் புலிகளுக்கு இரண்டாவது பிரிவு. என் தலைவிதி முழுவதுமாக மாறியதற்கு இப்பிரிவு ஒரு பெரிய காரணம்.
அந்தக் காலம் மாதிரியே பள்ளியின் முன்னே இன்னும் ஒரு கடை. காலங்கள் மாறுவதில்லை!


நானும் composite maths எடுத்தேன். General maths மாதிரி இல்லாமல், இங்கு அல்ஜீப்ரா, ஜ்யோமெட்ரி, தியரம், ரைடர் என்று என்னென்னமோ இருந்தது. வகுப்புக்கு வந்த ஆசிரியர் யாகப்பன். ஒல்லியா, உயரமா இருப்பார். டை இல்லாமல் கோட், பாண்ட்ஸ் என்று வருவார். அவர் வகுப்புக்கு வந்ததும் நான் அவருக்கு வைத்த பட்டப் பெயர்: ஆப்ரஹாம் லிங்கன். அவரு மாதிரியே இவரும் இருந்ததார். முதல் நாள் முதல் பெஞ்சில் இருந்த நான் மெல்ல அவர் கோட்டை ஒரு ஓரத்தில் பிடித்து இழுத்தது நினைவில் இருக்கிறது. முதலில் ரொம்ப லைட்டாக அவரை எடுத்துக் கொண்டேன். ஆனால் விதி அவர் மூலமாக வேறு மாதிரி என்னைப் பார்த்து பயங்கரமாகச் சிரித்தது.


யாகப்பன் புதியதாக வந்த ஆசிரியர். என் அப்பாவிற்கும் அவருக்கும் நன்கு பழக்கம். ஆக யாகப்பன் என்னைத் தன் ‘செல்லப் பிள்ளை’யாக நினைக்க ஆரம்பித்து விட்டார். அதுவே எனக்கு கணக்கில் மங்களம் பாட ஆரம்பித்து விட்டது. பார்ப்பதற்கு முதலில் சாதாரணமாகத் தோன்றிய யாகப்பன் சரியான ஸ்ட்ரிக்ட் வாத்தியார். நீளக் கையை நீட்டி, விரல்களை மடக்கி குட்டுவதற்குத் தயாராக என் தலை மீது கையை வைத்துக் கொண்டு என்னிடம் கேள்வி கேட்பார். அதாவது, அது தான் அவரது செல்லப்பிள்ளைக்கு அவர் கொடுக்கும் பரிசு. அவர் கேள்வி கேட்கும் போது கேள்வி மனசுக்குள் இறங்காது. அவரது கொட்டுதான் என் மண்டைக்குள் இறங்கும்.


என்ன பிரச்சனைன்னா, சிறு வயதிலிருந்தே மனப்பாடம் பண்ற ‘அருட்சக்தி’ என் பக்கம் வந்ததேயில்லை. மனப்பாடப் பகுதின்னாலே நான் முழுசா அவுட்! ஆனால் composite maths-ல் நிறைய மனப்பாடப் பகுதிகள் இருந்தன. தியரம் - ஒரு வார்த்தை மாறாமல் மனப்பாடமாக அதைப் படிக்கணுமாம். அதப் படிச்சாதான் ரைடர் போட முடியுமாம். அல்ஜீப்ரா ... கடவுளே ... (a+b)2-க்கு விடை மனப்பாடம் பண்ணினேன். ஆனால் (a+b)3-க்கும், (a+b+c)2-க்கும், (a+b+c)3-க்கும் நானெங்கே போவது! மனசுக்குப் பிடிச்ச கணக்கு இப்போ முழுசுமா பிடிக்காம போச்சு. ஒண்ணும் ஏறலை. ஏறத்தாழ இது என் படிப்பு முழுசையுமே சுனாமியா தாக்கியிருச்சி. என்னமோ தேத்தினேன். சூரிய நாராயணன் நட்பும் குறைஞ்சி போச்சு. S.S.L.C.-ல் ஏதோ .. எப்படியோ ...மார்க்கமில்லாத  மார்க் வாங்கி தேறினேன்.


ஒன்பதாம் வகுப்பு வரை வகுப்பில் I was somebody; ஆனால் என் கணக்கு ஆர்வம் போனபின் I became a nobody. இது என் மேல் படிப்பையும் நிறைய மாற்றியது. அங்கும் நினைத்ததைப் படிக்க முடியாத parental pressure. எப்படியோ வண்டி ஓடி ... இங்க வந்து பரிதாபமா நிக்குது! எப்படி இருந்த நான்  composite maths-யினால் இப்படி ஆகி விட்டேன்!


சூரிய நாராயணன் நல்லா படிச்சி, S.S.L.C. முடிச்சதும் என்ஜியனீரிங் கல்லூரியில் சேர்ந்தது தெரியும். அவனது வீடு எங்க பள்ளிக் கூடத்திலிருந்து நேரே போனா .. சிந்தாமணி தியேட்டர் வரும். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் அம்சவள்ளி பிரியாணி கடை.
சூரியின் வீடு .... இங்கே தான்...

அதைத் தாண்டியதும் முனிச்சாலை ரோடு வருமே .. அந்த தெரு முக்கில் தான் அவன் வீடு. ஒரு ஸ்ப்ரிங்க் கதவு போட்டிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் அவன் வீட்டுக்குப் போய் அவனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை வரும். ஆனால் அவன் என்ஜினீயர்.... நம்ம சாதா டிகிரி ... அப்டின்னு மன்சுக்குள் ஒரு எண்ணம் ஓடும். அப்படியே உட்டுட்டேன்.


அவன் நிச்சயமா பெரிய ஆளா ஆகியிருந்திருப்பான்.


நல்லா இருடே .. ! 

 *

Friday, November 09, 2012

604. காணாமல் போன ஒரு நண்பரைக் கண்டெடுத்து விட்டேன்....

*
*

அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மீள் பதிவு .....


*

பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின் என்று ஒரு பதிவிட்டிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மண்ணைப் பார்த்த நினைவுகளைப் பற்றி அதில் எழுதியிருந்தேன். அப்பதிவில் வேல்முருகன்என்றொரு பதிவர் தனது ஊரும் இதுவே என்றும், தானும் என்னைப் போலவே  பல ஆண்டுகளுக்கு முன்பே ஊரைப் பிரிந்ததாக பின்னூட்டமிட்டிருந்தார். எனக்குப் பெரும் ஆச்சரியம். எங்க ஊரே ரொம்பச் சின்னது. அதில் இருந்து கூட இரு பதிவர்களா என்ற ஆச்சரியம். ஆனாலும் இருவருமே மண்ணை விட்டு விலகியவர்களாக இருந்தோம்.

’ஏலேய்வைத்தி! நல்லா இருக்கியா’ல? பதிவைப் போட்டதும் வேல் முருகனிடம் என் ஐயத்தைக் கேட்டேன். ஏனெனில் வைத்தியின் வீடு வேல்முருகனின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. ஒரு வேளை வேல்முருகனுக்கு வைத்தியைத் தெரிந்திருக்குமோவென நினைத்தேன். அவருக்குத் தெரியவில்லை; ஆயினும் அவரது உறவினர்கள் சிலரை எனக்காகத் தொடர்பு கொண்டு கடைசியில் வைத்தியை எனக்காகக் கண்டுபிடித்து விட்டார். அவருக்கு மிக்க நனறி.

அந்தப் பதிவில் வைத்தி ஊரை விட்டுச் சென்று காவல் துறைக்குச் சென்று விட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் வைத்தியின் தம்பிதான் காவல் துறைக்குச் சென்றிருந்திருக்கிறார். அவரது தொலைபேசி எண் வேல்முருகன் மூலமாகக் கிடைக்க, அவரிடமிருந்து வைத்தியலிங்கத்தின் எண் கிடைத்தது. நாங்கள் இணைந்து நடித்த நாடகம் என் நினைவில் நன்கு பதிந்திருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தன. வைத்தியலிங்கத்திற்கு அப்படி இருக்கக் காரணம் ஏதுமில்லை. இருப்பினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சென்னை, நந்திய பாக்கம் என்னும் பகுதியில் உள்ளார். எல்லா விவரங்களும் நினைவில் இல்லாவிட்டாலும் நாடகத்தில் நடித்ததெல்லாம் அவருக்கு நினைவில் இருந்தது.

மெல்ல ஒருமையில் அவரை அழைக்கலாமாவென்று நினைத்தேன். ஆனால் அவர் மிக மரியாதையாக என்னுடன் பேசியதால் அந்த ஆசையைத் தள்ளி வைத்து விட்டேன். மூன்று குழந்தைகள் அவருக்கு. எல்லோரும் சென்னையிலேயே இருக்கிறார்கள். முகவரி வாங்கி அவரைப் பற்றிய பதிவை அவருக்கு அனுப்பி வைத்தேன். ஏலேஎன்றெல்லாம் எழுதியிருக்கிறோமே என்று நினைத்தேன்.

இப்போது அவர் ஒரு புதிய வீடு கட்டியிருப்பதால் அவரளித்த முகவரிக்கு என் கடிதம் உடனே போய்ச் சேரவில்லை. பின் நான் தொடர்பு கொண்டு, வேறொரு முகவரிக்கு அனுப்பி, அவரும் தபால்காரரை விசாரித்து ...  ஒரு வழியாக ஒரு மாதம் கழித்து அவருக்கு என் தபால் நேற்று போய்ச் சேர்ந்தது. வாசித்து விட்டு வைத்தி தொலை பேசினார். குரலில் நிரம்ப மகிழ்ச்சி.

காணாமல் போயிருந்த ஒரு நண்பனோடு பேசிய மகிழ்ச்சி எனக்கு. சென்னை வரும்போது வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தார்.  ... கட்டாயம் முயற்சிக்கணும்.* 

Thursday, November 08, 2012

603.


*
 எல்லாருக்கும் 
எல்லாத்துக்கும்  (!!!)
ரொம்ப ரொம்ப 
நன்றி, ஐயன்மீர்!

பதிவு போட இம்புட்டு தயக்கமா? 
அச்சமா காரணம்? 
அச்சம்னாலும் மொதல்ல பதிவு போட்ட என்னைத்தானே பிடிப்பாங்க.. 
அப்புறும் ஏன் இப்பி பப்புறங்க??!!


*

Tuesday, November 06, 2012

602. I-T ACT SECTION 66 A- OUR WORRIES AND DEMANDS

*

Dear Bloggers,

Hope you might be aware of the arrest of some bloggers in Tamil Nadu on two different cases. Of these, one is on the basis of just an e-mail from one Mr. Karthik Chidambaran, s/o our FM, Mr. Chidambaram to the Puducherry police. The arrested person, Mr. Ravi has twitted on a news from the dailies. His twit was: ‘got reports that karthick chidambaram has amassed more wealth than vadra’. Puducherry police pounced on him at the early hours of the day and arrested him. Does he deserve to be in jail for three years for this big ‘sin’ of this ‘grossly offensive’ twit?

L.K.Advani .. said he should not have been arrested till a court had found him guilty. On his latest blog, Mr. Advani quoted the former Madras High Court judge, David Annoussamy’s remarks that going by the yardstick applied by the police in Mr. Ravi’s case, many tweeters would have to be arrested. (http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece)

*

The second case was filed by a playback singer, Chinmaye. Police arrested two bloggers, pin pointed by the singer and then the police were searching for evidences. Though there are nineteen cases pending in their files, police gave priority to this case, since it is from a celebrity!

Due to its importance, coming from a very right person, I quote the statement of Pranesh Prakash, Policy Director of the Bangalore-based Centre for Internet and Society. He says the I-T Article is “overbroad,” “unconstitutional,” and does not satisfy Article 19 (2) of the Constitution which allows for restrictions on freedom of speech and expression.

He further elaborates ’ that there is no equivalent law for any offline communication, whether in verbal or printed format. “If you write a book that annoys or inconveniences me, even deliberately, I have no civil or criminal recourse. But if you send an e-mail message, or post a tweet, you could face three years in jail,” says Mr. Prakash. “That’s higher than the two-year imprisonment for causing death by negligence.”

Statements of Pranesh Prakash expose that around every neck of a blogger there is noose, which can be tightened any time a government machinery wants. Our very fundamental right of free expression has been on the altar of the celebrities to be communed by them any way they like.

With this background, I insist that this is a crucial time to raise our voices for our basic human rights. If things are left out as they are now, any murmur in our blogs could be made into terrorist calls and days of free expression will be totally wiped off. Hence I request you all to post the following in your blog. PLEASE. ==================================================
*Even quoting news items on our blogs could be made wrong by this I-T ARTICLE; SECTION 66-A. This article will uproot totally our basic human rights. We very definitely need to protect our rights to express our views without fear. To suit this requirement the I-T ARTICLE should be amended. 

*The way the police department plays as a toy in the hands of celebrities raises unknown fear in our minds. We expect and demand that arresting somebody even without proper investigation should never happen in our society. 

*The media in such incidents go for sensation and not for truth. Vulgarizing people, even before they are judged by law, is very much like a personal assasination. Media should be more responsible.

*

LET  US  FIGHT  FOR  OUR  
RIGHTS  AND  FREEDOM. 
*
LET ALL BLOGGERS BE TOGETHER 
IN THIS TESTING TIME. 
*
*

http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_6.html


Monday, November 05, 2012

601. I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.
*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் கீழே - சிகப்புக் கோட்டிற்குக் கீழே - உள்ளதைத் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் இட்ட பின் உங்கள் தொடுப்புகளை பின்னூட்டங்கள் மூலம் அனுப்பி விடுங்கள்.. அப்பதிவுகளை இப்பதிவின் கீழ் தொகுத்து விட ஏதுவாக இருக்கும்.

 தொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே ....

இந்திய அரசே,

தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்


நண்பர்களிடமும் சொல்லுங்கள் ..............
========================================================
*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*


=========================================================
ஆங்கிலத்திலும் ஒரு பதிவிட்டுள்ளேன் -    மாற்று மொழிப் பதிவர்களை அதனை பதிவிட வைக்கலாமே ...
==========================================================
இது ஒரு நீண்ட நெடும் பயணமாக இருக்க வேண்டுமென்பது நம் ஆவல்.

 பதிவிட்ட பதிவர்கள்:
1. ..http://avargal-unmaigal.blogspot.com/2012/11/blog-post.html
2.   http://npandian.blogspot.in/2012/11/blog-post.html
3..  http://avargal-unmaigal.blogspot.in/2012/11/i-t-act-section-66.html 
4http://aatralarasau.blogspot.in/2012/11/blog-post_5.html
5.  http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_6.html
6.   http://reverienreality.blogspot.com/2012/11/blog-post_5.html
7.   http://vovalpaarvai.blogspot.in/2012/11/we-oppose-present-i-t-act-66a-demanding.html
8.   http://kurumban.blogspot.com/2012/11/we-oppose-present-i-t-act-66a-demanding.html
9.   http://thekkikattan.blogspot.com/2012/11/bloggers-voice-i-t-act-section-66-a.html
10. http://kaiyedu.blogspot.in/2012/11/i-t-act-section-66.html
11. http://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.htmlhttp://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.html
12. http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html
13. http://kaiyedu.blogspot.in/2012/11/i-t-act-section-66.html
14. http://vizippu.blogspot.hk/2012/11/i-t-act-section-66.html
15. http://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.htm
16. http://karikalan-karuthu.blogspot.com/2012/11/i-t-act-section-66-i-t-act-section-66.html
17. http://www.adrasaka.com/2012/11/66.html
18. http://www.artveedu.com/2012/11/i-t-act-section-66.html
19. http://www.adrasaka.com/2012/11/66.html
20. http://hollywoodraj.blogspot.in/2012/11/it-act-section-66.html
21. http://www.etakkumatakku.com/2012/11/i-t-act-section-66-a.html
22. http://www.padaipali.net/2012/11/blog-post_2388.html
23. http://thalapolvaruma.blogspot.com/2012/11/i-t-act-section-66-a.html
24. http://gokulmanathil.blogspot.com/2012/11/i-t-act-section-66.html
25. http://www.parvaiyil.blogspot.com/2012/11/me-oppose-present-i-t-act-66a-demanding.html
26. http://thamizvinai.blogspot.com/2012/11/blog-post.html
27. http://veeduthirumbal.blogspot.com/2012/11/it-act-66a.html
28. http://valpaiyan.blogspot.in/2012/11/blog-post_12.html


*
 

Thursday, November 01, 2012

600. ஒரு அவசர அழைப்பு ... என்ன செய்யப் போகிறோம்??
*
*

ஒண்ணுமே புரியலே உலகத்திலே .....

சின்மயி பற்றி எல்லோரும் எழுதி .. நாம அதை வாசிச்சி .. ஒண்ணும் பண்ணாம எல்லோரும் தூங்கியாச்சி. தூக்கத்திலிருந்து எழுப்புறது மாதிரி அடுத்த ஒரு ‘குண்டு’ விழுந்திருக்கு பதிவர்கள் மேல்.

http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece

பாவம் ... சீனிவாசன் அப்டின்னு ஒரு சின்ன பதிவர் .. ட்விட்டரில் வெறும் 16 followers மட்டுமே வச்சிருக்கிற இவரு மகாத்மா கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ஒரு டிவிட் போட்டிருக்கார். கார்த்தி இதைப் பத்தி e-mail-ல் ஒரு பிராது கொடுத்திருக்கிறார். நம்ம சுறுசுறுப்பான CBCID காலங்காத்தால அஞ்சு மணிக்கு இந்த சீனிவாசனைக் கைது செஞ்சிட்டாங்க. சீனிவாசன் பத்திரமாக காவல் துறையின் ‘பாதுகாப்பில்’ இருக்கிறார்.

சீனிவாசன் வேறும் ஒன்றும் செய்யவில்லை... ஒரே ஒரு ட்விட் கொடுத்திருக்கிறார்: ”கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன”.

சீனிவாசன் கெஜ்ரிவாலின் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பில் ஆர்வமுள்ளவர். ’பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் டிவிட்டினேன். இதில் அவமதிப்பு எங்கே என்று தெரியவில்லை’ என்று சொல்லியுள்ளார்.

இச்செய்தியைப் பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

IT Act Section 66-A என்ற இந்தச் சட்டம் பேச்சு சுதந்திரத்திற்குக் கடுமையான தடைகளைத் தருகிறது.

 நாம் எங்கே போகிறோம்?

பதிவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்??

பதிவுகளில் என்ன எழுதினாலும்  சிறைத் தண்டனை என்பது சின்மயி விஷயத்திலும், கார்த்திக் விஷயத்திலும் மேடையேறி விட்டன.

விழிப்போமா?

பி.கு.
உமாசங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசால் தண்டிக்கப்பட்ட போது  ஒரு பதிவில் - http://dharumi.blogspot.in/2010/08/426-just-idea.html - ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்காக 45 பதிவர்கள் உடனே ஒரு பதிவிட்டு - http://dharumi.blogspot.in/2010/08/427.html - தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்கள். அது போல் இப்போது நாம் எல்லோரும் இணைந்து ஒரு நாள் ஒட்டு மொத்தமாக ஒரே பதிவை இட்டு நாம் தூங்கவில்லை என்பதை அரசுக்கு உணர்த்த அழைக்கிறேன். 

அந்தப் பொதுப்பதிவை  வழக்கறிஞர் யாரேனும் ஒருவர் விரைந்து தயாரித்து உதவினால் நலம்


*
 பிற பதிவர்களின் பதிவுகளின் தொடுப்புகள்:

http://avargal-unmaigal.blogspot.com/2012/11/blog-post.html

*

*