Monday, January 22, 2018

968. உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்

*

உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.

  என்னை ஆளாக்கியவர்கள் நீங்கள் தானே!

இதுவரை நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன.
n  அமினா (2009)
n  அசோகர் (2014)
n  மதங்களும் சில விவாதங்களும் (2015)
n  கடவுள் என்னும் மாயை (2018)
இந்த நான்கு நூல்களில் ”அசோகர்” என்ற வரலாற்று மொழிபெயர்ப்பு நூலும், நான் எழுதிய ”மதங்களும் சில விவாதங்களும்” முதல் அச்சு விற்று முடிக்கப்பட்டதாலும், இன்னும் அதற்கு வாசகர்களின்  தேடுதல் இருப்பதாலும் இந்த ஆண்டு மீண்டும் அச்சிடப்பட்டு இரண்டாம் பதிவாக வெளி வந்துள்ளன.

2015ல் பதிக்கப்பட்ட இந்த நூல் 2017ல் மறு பதிப்பு கண்டுள்ளது.
*******
”அசோகர்” 2014ல் முதல் பதிப்பும் இப்போது 2018ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளி வந்துள்ளது.

*****

எல்லாம் நீங்கள் கொடுத்த ஆதரவே இதற்கான காரணம். கரங்கூப்பி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
”மதங்களும் சில விவாதங்களும்” நூலில் சில மாற்றங்களும், சிறிது அதிகமான செய்திகளும் சேர்க்க நினைத்தும் முடியாமல் போயிற்று. முடியுமானால் இரண்டாம் பதிப்பு கொண்டு வந்து அதில் சேர்த்துக் கொள்ளும் முடிவில் உள்ளோம்.*

Sunday, January 21, 2018

967. கடவுள் என்னும் மாயை

 
கடவுள் என்னும் மாயை
 
நூலைப்பற்றி
 
தி  இந்துவில்
 
புத்தக விழா சமயத்தில்
 
வந்த நல்ல செய்தி

 
 
 
 
 
 

966. சென்னை புத்தக விழா - 2018

 
 
எனது இரண்டாவது நூலின்
 
கடவுள் என்னும் மாயை” 
 
வெளியீடும் நடந்தது.
 
 
 
 
 

 
 
 
 
 
 

965. சென்னை புத்தக விழா - 2018

 
 
சென்னை புத்தக விழா 5 -22.1.2018
 
 
12,13,14 நாட்களில் புத்தக தரிசனத்திற்காகச் சென்றேன்.


பல நண்பர்களை, அதுவும் மிகவும் பழைய சிரில் அலெக்ஸ், போகன் சங்கர் போன்ற வலைப்பூ நண்பர்களைக் காண வாய்ப்பு கிடைத்தது.


என் நூலின் வெளியீட்டு நிகழ்வும் நடந்தேறியது.
இனிய நாட்கள்..மகிழ்ச்சியான மணித்துளிகள்.
 
 
 
 
 
 

 

 
 
 

Tuesday, January 16, 2018

964. ஞாநி ... ஒரு மீள் பதிவு
மிக நீண்ட பதிவு. 11 ஆண்டுகளுக்கு முன் எழுதிய போது வாசிக்க ஆட்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை ...


* *


 Pick the odd man out என்று தேர்வுகளில் ஒரு கேள்வி கேட்கப் படுவதுண்டு. அதுபோல் கீழே ஒரு கேள்வி:

 Pick the odd man out:
 1. தெக்ஸ்
 2. லக்கி லுக்
 3. ஞாநி
 4. சுகுணா திவாகர்
 5. சிறில் அலெக்ஸ்

 - இன்னும் கொஞ்சம் பெயர்கள் உண்டு. இப்போதைக்கு இது போதும். உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

ஒருவேளை ஞாநி தவிர எல்லோரும் நம் தமிழ்ப் பதிவர்கள் என்று கொண்டால், சரியான விடை: ஞாநி. சரிதான். என் பதிலும் அதுவாகத்தான் இருக்கும்; ஆனால் அதற்குரிய காரணம் மட்டும் வேறு. ஞாநி தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்கள்; பழகியவர்கள்; நண்பர்கள். ஞாநியை டிவியில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.

 பகுதி I:
 இந்த மனுஷன் ஞாநி, ஆ.வி.யில் 'ஓ! பக்கங்கள்' & 'அறிந்தும் அறியாமலும்' அப்டின்னு எழுதிட்டு வர்ரார். ஓரளவு தவறாமல் வாசித்து வருகிறேன். நன்றாகத்தான் எழுதிவருகிறார். என்ன ஆச்சுன்னு தெரியலை, பாவம் இந்த மனுஷன் இப்போதைக்கு கொஞ்ச நாளாக நம் தமிழ்ப் பதிவர்களுக்கு punch bag ஆக மாறியுள்ளார்.

 முதலில் அவர் எப்படி செக்ஸ் பற்றி எழுதலாம்னு ஒரு சுடு பதிவொன்று வந்தது. அப்போது அதை நான் வாசித்தேன்.மன்னிக்கணும், எழுதியது யார் என்பது மறந்துவிட்டது. தொடர்ந்து தெக்கிகாட்டான் ஒரு பதிவு போட்டார். அவர்களது பதிவில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு - ஞாநி என்ன Sexology படித்த மருத்துவரா, அல்லது அத்துறையில் மேற்படிப்பு படித்தவரா; இப்படி அரைவேக்காடுகள் எழுதி அதில் தவறு இருந்துவிட்டால் மக்கள் அப்படியே தவறான ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு தவறிப் போய்விட மாட்டார்களா என்ற அங்கலாய்ப்புடன் எழுதியிருந்தார்கள்! நானும் ஞாநியின் அந்தக் கட்டுரைகளையும் வரி வரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு வாசித்துள்ளேன். வரி வரியாக வாசிக்காததற்குரிய காரணம் 'இதெல்லாம்தான் எனக்குத் தெரியுமே!' அப்படி என்கிற 'மேதாவித்தனம்"தான்.

என்ன எழுதிவந்தார்? இளம் பருவத்து உடம்பின், மனத்தின் மாறுபாடுகள், அதனால் குழந்தைகளுக்கு வரக்கூடிய குழப்பம், ஊடகங்களில் வரும் சில தவறான தகவல்கள் (சிறப்பாக, masturbation பற்றி) தரக்கூடிய அச்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றி எழுதி வந்தார். நம் இளம் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தாலே நாம் எல்லோரும் இதைப் போல் எழுத முடியுமே. இதற்கென்று தனிக் கல்வி பெற்று வரவேண்டுமா என்ன? ஆனால் அவர் அப்படி மேம்போக்காக நிச்சயமாக எழுதவில்லை. இந்த அறிவியல் உண்மைகளை, சொந்த அனுபவத்தோடு சேர்த்து ஒரு basic sex education பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாமே. அதைத்தான் அவர் செய்தார். நன்றாகவும் செய்திருந்தார்.

அது ஒன்றும் பெரிய அறிவியல் கட்டுரை அல்ல; மக்களை எளிதாக சேரக்கூடிய ஓர் ஊடகத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு நான்கு நல்ல விஷயங்களை, நான்கு பேர் தெரிந்து கொள்ள காரணமாயிருந்துள்ளார். அந்த ஒரு புதிய நல்ல முயற்சிக்காக அவரை வாழ்த்த வேண்டும்.

 அந்தந்த துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் நானும் நீங்களும் எதை எழுத முடியும். என் முந்திய பதிவு நம் தமிழ் சினிமா இயக்குனர்களை நோக்கி எழுதப்பட்டது. சினிமா பார்ப்பவன் என்பதைத் தவிர எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ முதலில் போய் நாலைந்து படம் இயக்கிப் பார்த்துவிட்டு அதன் பிறகு இதையெல்லாம் எழுது என்று யாரும் சண்டைக்கு வரவில்லையே.

அது சினிமா, அதுவும் நீ உன் பதிவில் எழுதுகிறாய்; யார் அதைப் படிக்கிறார்கள்(!)? அப்படியே படித்தாலும் அதன் தாக்கம் பெருமளவில் இருக்காது; ஆனால், ஆ.வி. பொன்ற ஒரு வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதும், பதிவுகளில் எழுதுவதும் ஒன்றா என்பீர்களாயின், நிச்சயமாக ஞாநி செக்ஸ் பற்றியெழுதியதில் என்ன தகவல் தவறு கண்டீர்கள் என்று சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு, எழுதுவதே தப்பு என்பது என்ன நியாயம்? அப்படியென்றால், ஹைகூ பற்றியும், சங்கப் பாடல்கள் பற்றியும் ஏன் சுஜாதா எழுதுகிறார் என்றா கேட்பீர்கள்? இல்லை, வெண்பா பற்றி நம் பதிவர்கள் ஜீவாவும், கொத்ஸும் எப்படி எழுதலாம்; அவர்கள் என்ன வித்வான் தேர்வு எழுதினார்களா, இல்லை, புலவர் பட்டம் பெற்றார்களா? என்றா கேட்பீர்கள்? செல்லாவும் CVR-ம், ஆனந்தும் எங்கே போய் நிழற்படக் கலை பற்றிப் படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வந்து கட்டுரை எழுதுகிறார்கள்? இப்படியே கேட்டுக் கொண்டே போனால் ....

 யாரும் எதையும் எழுதுவதற்கு இந்தந்த தகுதி வேண்டுமென்று சொல்ல நமக்கென்ன அருகதை. அருகதை என்பதைக் கூட விடுங்கள். யாரும் எதையும் எழுதலாம்; எழுதட்டும். ஆனால் தவறாக எழுதியதாகத் தெரிந்தால், வாருங்கள், உண்டு இல்லை என்று பார்த்துவிடுவோம்.ஞாநி பாலியல் பற்றி இதுவரை எழுதியதில் உள்ள தகவல் பிழைகளைப் பட்டியலிடுங்கள். நாமா அவரா என்று பார்த்துவிடுவோம். அதைவிட்டு விட்டு அவன் அதை எழுதக் கூடாது; இவன் இதை எழுதக் கூடாதென்பது ஒரு வேடிக்கையான விவாதம் மட்டுமல்ல; எழுதுபவனுக்கு வேதனையானதும் கூட. அதோடு இதுபோன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் "படித்தவர்களை" வைத்து எழுதச் சொல்லிப் பாருங்கள்; படிக்க ஆளிருக்காது. வேறொன்றுமில்லை; அவர்கள் அனேகமாக ஆழமாக எழுதுவார்கள் பல ஆதாரங்கள் அது இது என்று. அப்படிப்பட்ட அறிவியல் கட்டுரைகளை எத்தனை பேர் வாசிப்பார்கள். 

கடைசி வார ஆ.வி.யில் அரவாணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நான் உயிரியல் படித்தவன்தான். இருப்பினும் எனக்கும் புதிய தகவல்களாக இருக்குமளவிற்கு அந்தக் கட்டுரையை ஞாநி எழுதியுள்ளார். தயவு செய்து வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் - அது ஒரு நல்ல தகவல் நிறைந்த கட்டுரையா இல்லையா என்று.

 யார் எழுதுகிறார்கள் என்பதா முக்கியம்; எழுதப்பட்டது சரியானதுதானா என்பதுதானே முக்கியம்.


 பகுதி II

 அதே ஞாநி கலைஞர் ஓய்வு பெறவேண்டிய நேரமிது என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டார். கெட்டுது போங்க நிலமை ..

இவர் எப்படி இதைச் சொல்லலாமென கண்டனங்கள். ஞாநியென்ன தெருவில் போகும் எவனும் கேட்கலாம் இந்தக் கேள்வியை. காரணம் கலைஞர் இப்போது நமது முதலமைச்சர். என்னை ஆள்பவன் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஓர் அளவுகோல் இருக்கும். ஏன், எம்.ஜி.ஆர். பேசக்கூட முடியாமல் இருந்தாரே (அப்போ நாங்க வேற, கல்லூரி ஆசிரியர்கள் ஸ்ட்ரைக் செஞ்சிட்டு, சிறைக்குள் மாட்டிக்கிட்டு இருந்தப்போ, முதலமைச்சரின் உடல் நிலையினால் எங்கள் விடுதலை நீட்டிக்கப் பட்ட போது .. )பேச முடியாத ஆளெல்லாம் அந்த நாற்காலியில் இருந்தால் இப்படித்தான் என்றுதான் பேசினோம்; தவறில்லையே அதில்.

 அதோடு நரைத்த தலையோடு எந்த அரசியல் தலைவர் இருந்தாலும் 'அடுத்தது யார்?' என்று ஒரு பெரிய கேள்விக் குறியோடு ஊடகங்கள் வலம் வருவது உலகளாவிய ஒரு விஷயம். தி.மு.க. கட்சிக்காரர்களையும் சேர்த்தே சொல்கிறேன் - சென்ற தேர்தல் முடிந்து கலைஞர் முதல்வர் ஆனதும் இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டாலின் முதல்வராக்கப் பட்டு, கலைஞர் கட்சித்தலைமையில் இருந்துகொண்டு வழி நடத்துவாரென்பதுதானே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்வளவு ஏன், சமீபத்தில் சேலத்தில் அவர் பேசியதை வைத்து விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்ற பேச்சு கட்சி வட்டாரங்களிலேயே வந்ததே. ஒருவேளை எல்லோரும் நினைத்தது போல் அப்போதே ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டியிருந்தால் (Stalin is definitely my personal choice.) சில விஷயங்கள் நடந்தேறாமல் போயிருந்திருக்கும். இப்போது ஸ்டாலினுக்கே போட்டி என்பது போன்ற சேதிகளுக்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும்.

But all these are just hypothetical... விஷயத்துக்கு வருவோம். ஞாநி இந்தக் கட்டுரைக்கு எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தே எழுதியிருக்கிறார் என்பது அவரது முதல் பத்தியிலேயே தெரிகிறது. //பாரதி வழியில் பேசாப் பொருளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!// (ஆச்சரியக்குறியும் அவர் போட்டதுதான்!!) இந்தத் துணிச்சலுக்காகவே அவருக்கு என் வாழ்த்துக்கள். Calling a spade a spade ( இதில் ஒன்பதாவது )எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். கலைஞரை எங்கும் குறையாகப் பேசாமல் அவரது வயது, அதனால் அவருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய தொல்லைகள் இவைகளைப் பற்றிப் பேசிவிட்டு, இனி அவர் //அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; சந்திப்பதற்கான புதிய விமர்சனங்களும் இல்லை// என்று சொல்லி ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்திருப்பதைக் கூறுகிறார்.இத்தனைக்கும் பிறகு //பதவியைத் தூக்கி எறிய வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?// என்று கேட்டிருப்பதில் என்ன தவறு என்பது எனக்குப் புரியவில்லை.

 இதில் என்ன உள்குத்து இருக்கிறது? //தனக்குப் பாதுகாப்பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: "பாத்ரூம்ல கால் இடறிடுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டாயிடுச்சு"// - இது ஞாநி எழுதியுள்ளது. தடித்த எழுத்துக்கள் என்னுடையவை. அந்த தடித்த எழுத்துக்களை விலக்கி விட்டு மறுபடியும் வாசித்துப் பாருங்கள்.

'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞாநி எழுதுகிறார் - இப்படி உள்ளது சுகுணாவின் பதிவில். கண்ணகி சிலை விவகாரத்திலும் இதே போல் ஒரு பதிவில் (எந்தப் பதிவென்று தெரியவில்லை)ஒரு குற்றச்சாட்டு. அதையும் வாசித்துப் பார்த்தேன். ஞாநியின் கூற்றில் தவறில்லை. குற்றச்சாட்டில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சுதான் இருந்தது. அந்த விகடன் ஏதென்று தெரியாததால் இங்கு முழுதாக அதை மேற்கோளிட முடியவில்லை.

 என்னை, என் நாட்டைத் தலைமை தாங்குபவன் அறிவாளியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அவன் திறமைசாலியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அதேபோல் நல்ல திடகாத்திரக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு. சொல்லப் போனால் முழு ஆற்றலோடு இயங்க நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நமது உரிமை.

கிளிண்டனையும், டோனி ப்ளேயரையும், இன்றைய புஷ்ஷையும் பார்க்கும்போதும், நமது சங்கர் தயாள் சர்மாக்களையும், வாஜ்பாய்களையும் பார்க்கும்போதும் சங்கடமாகத்தான் எனக்கு இருக்கிறது. சொல்வது தவறென்றாலும் சொல்கிறேன்: இதில் முந்தியவருக்கு நான் வைத்த பெயர் lame duck. அதன்பிறகு வாஜ்பாயும் அப்படி ஆனபோது முந்தியவருக்கு lame duck -senior என்ற பட்டத்தையும், பிந்தியவருக்கு lame duck (both literally and figuratively )- Junior என்ற பெயரையும் வைத்தேன்.

 நமக்குப் பிடித்ததை மட்டும்தான் எல்லோரும் எழுத வேண்டுமென்பது எப்படி முதிர்ச்சியான அறிவுள்ள எதிர்பார்ப்பாக இருக்க முடியும். அமெரிக்க அதிபராக தேர்தலில் நிற்பவர்களின் பழைய கால வாழ்க்கையையே புரட்டி எடுத்துப் போட்டு விடுகிறார்கள். யாருடைய தேர்தல் என்று நினைவில்லை. ஆனால், அதிபருக்கு நின்ற ஒருவர் தனது கல்லூரிக் காலத்தில் ஒரு பாட்டில் பியர் அடித்து காவல்துறையிடம் மாட்டியது பத்திரிக்கைகளில் போட்டு பூதாகரமாக்கியது அங்கு நடந்தது. ஒவ்வொரு வேட்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களும் பத்திரிக்கைகளில் அலசப் படுகின்றன. நான் எப்படியும் இருப்பேன்; ஆனால் எனக்குத் தலைவனாக இருக்க வேண்டியவன் ஒழுங்கானவனாக இருக்க வேண்டுமென்பது அந்த நாட்டுக்காரர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கே அப்படியெல்லாம் ஏதுமில்லை. நம்மை மாதிரி எல்லாம் (ஒழுங்காக) இல்லாமல் இருப்பதே எல்லா அரசியல்வாதிகளுக்குரிய லட்சணம் என்பது நம் ஊர் ஒழுங்கு. அதுதான் போகிறது, இளம் வயதுக்குரிய ஆரோக்கியமான உடல் நிலையோடு இருக்க வேண்டுமென்பது கூடவா தவறு?

 சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயியையும் பற்றி நீ முன்பு எழுதினாயா? இப்போது மட்டும கலைஞரைப்பற்றி எழுத வந்துவிட்டாயே அப்டின்னு ஒரு கேள்வி (யெஸ்.பா.,அது நீங்க கேட்டதுதானே?) சரி அய்யா, நான் அப்போது அவர்களைப் பற்றி எழுதாதது தவறுதான் என்று ஞாநி சொல்லிவிட்டால் அவர் இப்போது எழுதியதை சரியென ஒப்புக் கொள்வீர்களா? அன்னைக்கி நீ அது செய்யலை. இன்னைக்கி எப்படி நீ செய்யலாம் என்பது என்ன விவாதம்! அட! யார்மேல கரிசனமோ அவரைப் பற்றி எழுதத்தான் செய்வாங்க - இதுவும் ஒரு வாதம்தான்!

//கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞாநியோ நாமோ அல்ல// - இது சுகுணா. இல்லை சுகுணா, அவர் நம் முதல்வர். அவரைப் பற்றி, அவரது செயல்பாடுகள் குறித்து, நாமும் ஞாநியும் கவலைப் படலாம்; படணும். எவனாவது மழைநீர் சேமிப்பு செய்யாம இருந்து பாருங்க அப்டின்னு சொன்னது மாதிரி, எவனாவது ஹெல்மட் போடாம இருந்து பாருங்கன்னு சொல்ற அளவுக்கு மனசுல திண்மை இருக்கணும், மேடைக்குத் துள்ளி ஓடி ஏறி, தொடர்பா பேசுற அளவுக்கு உடம்புல சக்தி இருக்கணும் அப்டின்ற கவலை/எதிர்பார்ப்பு நமக்கும் வேணும்; ஞாநிக்கும் வேணும். ஏன்னா, அவர் பொது மனுஷன்; நம் முதல்வர்.

 //சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.// இதுவும் சுகுணா. என்ன சுகுணா இது? இப்போ ஆட்சி பீடத்தில் இருக்கிறவங்களைத்தான் அதிகமா விமர்சிக்கணும். நீங்களே ஒத்துக்கிறீங்க, அந்த ஆளு ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்; ஆனால் 'சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார்' அப்டின்றீங்க. அதுதானே இயல்பு. இதெல்லாம் போகட்டும். கடைசியாக ஒன்று: ஜெயேந்திரர் விஷயத்தில் ஞாநியின் நிலைப்பாடு நமக்கெல்லாம் உகந்ததாக இருந்ததல்லவா? அப்போது தெரியாத அவரது பூணூல் இப்போது மட்டும் நம் கண்களுக்கு ஏன் தெரியவேண்டும்? நமக்குப் பிடிக்காத ஒன்றை செஞ்சிட்டா உடனே அதைப் பார்க்கணுமா? வேண்டாங்க

.. ஏன் அப்டி சொல்றேன்னா, எனக்குத் தெரிஞ்சே ஜாதி மறுப்பை உளமார உணர்ந்து பூணூலைத் தூக்கி எறிஞ்சவங்க இருக்காங்க. அந்தமாதிரி நல்ல மனுசங்களும் நீங்க இப்படி பேசுறதைப் பார்த்து மறுபடியும் பூணூலை எடுத்துப் போட்டுக்கணுமா? 

உங்கள் கோபங்கள் எங்கே எப்படி இருக்கணும்னு அப்டீன்ற என் எதிர்பார்ப்பை இடப் பங்கீடு குறித்தான என் கட்டுரைகளில் கூறியுள்ளேன். உங்களைப் போன்ற அரசியல் தொடர்பும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கவனிக்க வேண்டுமென்றே என் கடைசிக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா? (இப்பதிவை வாசிக்கும் மக்கள் அந்த என் பழைய பதிவிற்கும் வந்துவிட்டு போங்கள்; சந்தோஷமாயிருக்கும் எனக்கு)

 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இளம் வயதுக்குரிய உங்கள் கோபம் எங்கே, எப்படி, எதற்குப் பயன்பட வேண்டுமோ அங்கே பாயட்டும். சமீபத்தில் பெங்களூரு I.I.Sc.-ல் தலித் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலை இருப்பதைப் பார்த்துக் கோபப்படுங்கள்; நான் குறிப்பிட்டுள்ள என் பதிவில் கூறியிருக்கும் அநியாயங்களுக்கு எதிராகக் கோபப்படுங்கள்.

ஆனால், ஞாநியின் மீது நீங்கள் கொண்டுள்ள கோபம் கிஞ்சித்தும் நியாயமற்றது. இங்கே உங்கள் கோபமும், சக்தியும் வீண் விரயமாகிறது. இது வேண்டாமே!


 பி.கு. நான் யாரை சந்தோஷப்படுத்த இப்படி எழுதியிருக்கக் கூடும் என்று ஐயம் தோன்றும். (இல்லையா, லக்கி?) நானே சொல்லி விடுகிறேன். இக்கட்டுரையை எழுதியது என் திருப்திக்காக, என் மகிழ்ச்சிக்காக மட்டுமே.*
11 ஆண்டுகள்  கழித்து இன்று  (16.1.2018) எழுதியது: ஞாநிக்காக எழுதிய பழைய கட்டுரையை அவர் இறந்த அடுத்த நாளில் மீள் பதிவிடுகிறேன். பழைய அப்பதிவையும், பின்னூட்டங்களையும் வாசித்துப் பாருங்கள். ப்ளாக் எத்தனை உயிரோட்டத்துடன் அன்று இருந்தது என்பதும் புரியும்.

 *

Thursday, January 11, 2018

963. கடவுள் என்னும் மாயை ..முன்னுரை


*

இந்நூலின் வாழ்த்துரை  இங்கே ...  

முன்னுரை


புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு.

வலைப்பூக்களில் மதங்களைப் பற்றிய என் பார்வைகளைப் பதித்து வந்தேன். நான் சார்ந்திருந்த மதத்தை விட்டு ஏன், எப்படி வெளிவந்தேன் என்பதை எழுதினேன். நம் மதத்தைப் பற்றி எழுதினோம்; மற்ற மதங்களையும் பார்ப்போமே என்று அவைகளைப் பற்றி தெரிந்த சில விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கடினமான, கஷ்டப்படுத்திய வேலை. வாசித்தவர்கள் கேள்விகளோடு திரும்பி வந்தார்கள்; சிலர் மிகத்தீவிரமாக கேள்விகளோடு பொருத வந்தார்கள். அவர்களிடமிருந்து பல கேள்விக் கணைகள். வாசித்தவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழல் வந்தது. அப்போது தான் புலியின் வாலைப் பிடிக்கவேண்டிய கட்டாயம் பிறந்தது.

அப்போது புலி வாலைப் பிடித்தேன். ... இன்னும் விட முடியவில்லை!

பதிலைத்தேடி அங்குமிங்கும் ஓடி, அந்தப் புத்தகம் … இந்தப் புத்தகம் என்று நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. கிறித்துவ மதம், இஸ்லாமியம், இந்து மதம் என்று வகை வகையாக வாசித்தேன். வாசிக்க வைத்த எதிரணியினருக்கு எப்போதும் என் நன்றி. வாசித்த நூல்களிலிருந்து முக்கிய பகுதிகளைத் தமிழில் என் வலைப்பூவில் இட்டு வந்தேன். அவை மதம் பற்றிய அறிவையும், ஆழத்தையும் அதிகமாக்க பெரும் உதவியாக இருந்தன. புதுக் கருத்துக்களுக்கு ஆரம்பத்தையும், தெரிந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கவும் உதவின.

அப்படித் தேர்ந்தெடுத்து வாசித்த நூல்களில் நான் கண்ட விஷயங்களில் பல எனக்கு மிகவும் புதியவனவாக இருந்தன. சாதாரண நம்பிக்கையாளர் ஒருவருக்கு அவர் நம்பி பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கும் மதங்களிலேயே அவருக்குத் தெரியாத பல உண்மைகளும், வரலாறுகளும், வேண்டுமென்றே மறைக்கப்பட்ட செய்திகளும் நிறைய இருக்கிறதெனத் தெரிந்தது. பூனை பிடிக்கப் போனவனுக்கு யானை கிடைத்தால் எப்படியோ அப்படி எனக்கும் ஒரு பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியினால் வாசிப்பும் அதிகமாயிற்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வீணாகுமா? அவைகளைப் பாத்தி கட்டி நாற்றுகள் போல் பராமரித்து, வயலில் பாவுவது போல் என் வலைப்பூக்களில் நான் விதைத்து வைத்தவைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாகக் கொண்டு வர முயற்சியெடுத்தேன். பன்னிரண்டு நூல்கள். அவைகளில் ஆங்கிலத்தில் ஒன்பது .. தமிழில் மூன்று. மதங்களைப் பற்றியதாக இருப்பினும் அவற்றில் இரண்டு நூல்கள் புதினங்கள். அவைகளிலும் சில தேவையான தகவல்கள் இருந்தமையால் அவைகளையும் இத்துடன் சேர்த்துள்ளேன்.

இந்தப் பன்னிரெண்டு நூல்களையும் வாசித்து அதில் எனக்குப் பிடித்த, இறைமறுப்புக்கு ஆதரவான கருத்துக்களைத் தமிழ்ப்படுத்தி கோர்வையாக்கினேன். ஒவ்வொரு நூலின் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகளையும், நூலைப்பற்றிய குறிப்புகளையும் இணைத்துத் தந்துள்ளேன். என் கருத்துகள் இருப்பின் அவைகளை சாய்வெழுத்துகளில் அங்கங்கே தந்துள்ளேன். நான் இதற்கு முன் என் சொந்த அனுபவங்களையும், மதங்களைப் பற்றிய என் எண்ணங்களையும் தொகுத்து எழுதிய “மதங்களும், சில விவாதங்களும்” என்ற நூலின் தொடர்பே இந்த இரண்டாம் நூல். இதோ … இந்த நூலின் பக்கங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

  *

Tuesday, January 09, 2018

962. Paper presented in INTERNATIONAL ATHEIST CONFERENCE


*Paper presented in 

INTERNATIONAL ATHEIST CONFERENCE, 

held on 5th , Jan 2018, at Thiruchirapalli


 ATHEISM: A WAY OF LIFE 


It was so hard for someone like me to proclaim at some point of my life that I had at last “become” an atheist. I started slipping off from my Christian faith in my late thirties but got the guts only after another 8 years to openly call myself an atheist. So almost at the late forties I hesitantly proclaimed my loss of faith to the world.


 It was so tough for me to accept this ‘conversion’. The faith that was fed / forced into me from cradle formed a thick armour around me, protecting me from the ‘sins and evils of the outer world’. However in the beginning it was a combination of little doubts. Once we allow such doubts arising in our mind it leads to a domino effect or ratchet effect. The first card falls. Then all cards fall down in a jiffy. A simple magic. What was built from childhood came to a naught soon. But I found the process of this change a very hard one. It reminded me what Nietzsche said: “It is not easy to be an atheist”!

 An atheist has to always face the onslaught of questions and criticisms, and he is always expected to answer them. It is a condition imposed on every non-believer. For a believer answering question is very easy. He always runs to his “Book” and quotes it left and right. He never even bothers whether the listener / opponent also believes his book. What is said in the book is the ‘divine word’ for him. They have a static statement about their scriptures: “My religious book answers all questions”; it is a foolish and far-fetched statement. Nothing can be less true. But an atheist cannot run to any such single safe source. Some theists blame that even atheism is a religion since atheists also hold on to some ‘faith’ or unprovable hypothesis. But this argument fails since atheists normally don’t have the same reason for being an atheist. It differs from man to man. Rationality is the only process and pathway for atheists to reach their own independent convictions.

Believers think human goodness is only by the fear of god. Since atheists have no gods they don’t have moral codes, concludes the theists. Hence theists assume that atheists can never be good moralists. This is like saying that since there is a police force, I never steal. Theists refuse to accept that good hearted people with good conscience need not have any divine moral stipulations; conscience is the only thing needed for the best behaviour in any man. Personally I felt atheism impregnates a person to be more humanistic. Human life could be quite moral even without a god. The British Humanist Association claims that "Right and wrong can be explained by human nature alone and do not require religious teaching".

What happens after you die? What happens to your “soul”? These are the next set of questions normally an atheist faces. Most of our existing religions insist importance to the ‘next life’ and unceremoniously abhor the present life and give least importance to this. I consider all the biological factors remain the same in me and my little puppy. What happens to the puppy after death is the same to me too. When my puppy dies … then it is the end of it. So do I. Soul is normally used as a very ‘powerful weapon’ either to threaten or to mystify human minds. What holds good to non-humans should be the same for humans too. Flesh turning to dust is universal. We by our own imaginations created gods and religions. And to make it more emphatic ‘soul’ is also created.

 If you don’t have a soul, and if there is nothing after death, what is the significance of this life? Don’t you attach values to this life? Don’t you have some meaning to this life? Another barrage of questions. Believers live for the ‘next’ world and die. Non-believers live for this life. Hence it becomes more meaningful and natural while it is conditional for believers. The “carrot and the stick” are the driving factors for believers. If religion does not have the mantra of “after life” it will lose its magnetic grip on believers. No wonder the address of all the religions is the combo of ‘death and after life’.

Believers keep claiming that all facts of science are there in their ‘books’. They always try construing some lines in their book to some scientific facts. They keep believing that our world was created by their almighty and keep a closed eye to evolution. In Christianity some evade the question of evolution with a quirky solution – it is creation through evolution. But Islam stands firm on the 6 or 8-day creation. Though searching scientific truths in religious books is an unnecessary and unwanted exercise, religious zealots keep trying it since that could strengthen that their books are really god given.

Rationality is another victim in the altar of religions. Like the science and holy books being contrastive to each other, rationality and religious faith also stand as another contrastive pair. It is always true that all scriptures deny the right of believers to question anything said in them. Brain-washing people that the words in scriptures are words of god is the first and foremost warning to believers. So they never raise any question on scriptures. Simply and eternally blind folded! Traditional arguments and explanations are fed especially to a growing child and its spiritual growth stops altogether at that point. Rest of its life goes in a “guided path” never looking beyond what was given in the childhood.

 What changes my new found atheism brought out in me? A lot. Free from all the shackles and religious rituals. There is no big brother sitting high above in the sky and watching every deed I make here. The fear of an eternal punishment – the fear of ‘stick’ – is not there. No threatening almighty above me. I am an individual; I have my own moral codes – basically be a good human. A believer believes in after life and lives his life only for that. But a non-believer sets his terms knowing well that this life is his and nothing more after that. So he makes use of it fully. He thinks and lives accordingly. Further many scientific experimental studies were carried out and results are more poignant. Non-believers are found to be more moralistic in real situations than the believers. 

Invariably any believer would end his arguments with one last question: what are you after death? What happens to you? You just simply vanish from the earth … is that all? I have an easy answer. After death I would become what I was before my birth … nothing! The funny thing about ‘after life’ … it is always praised by religions as the true life, eternal life, life with god. If so, how come believers too fear death so much? If heavenly gate readily opens for your good deeds, why not believers rush to those gates? Why so much medication, yearning for long life, all the struggle to hold on to life?

 Neuroethology has started throwing more light on the intricate relationship between brain and religious faith. A ‘moral part’ or ‘God spot’ could be there in human brain, scientists assume. A search is going on for some decades. Neuroethologists expect some specific part of our brain could be the source of religions in the whole human history. Michael Persinger’s ‘god helmet’ experiment done in 1980s is so interesting. Temporal lobe epilepsy and its impact on humans became another great breakthrough. Study on the impact of Sertonin proves that this may serve as a biological basis for spiritual experiences. Studies in 1990s by Vilayanur Ramachandran widen the field. Many experiments are being worked out with human samples like nuns, Buddhist monks, and people with odd religious experiences.

All the above scientific exercises prove that many religious experiences of people could be explained with scientific basis. They still do not know the very exact location in brain, or the actual mechanism, or any chemical stimulant related to the religious experiences. But attempts are being made to find it. But there is also another hypothesis that religion and faith could have been encoded in our human system so much that it cannot be so easily culled out from us.

These research proceedings logically confirm a state of a continuous war between theists and atheists. So it is going to be long war for atheists to keep moving against superstitions, religious fallacies and religious fundamentalism. Let us admit that theism dominates human minds for a long period in human history. However the presence of atheists is being felt now more emphatically around the world. National Geographic published in 2016 an article titled, "The World's Newest Major Religion: No religion. 

 This war is ours. Let us keep fighting what is best for humans – a world filled just with humaneness, without any marring religious fundamentalism.
 *

Sunday, January 07, 2018

961. ”கடவுள் என்னும் மாயை” நூலுக்கான வாழ்த்துரை


*

இந்நூலுக்கான முன்னுரை ...


*


10.1.2018 முதல் 22.1.2018 - என்ற நாட்களில் நடைபெறும் 

சென்னைப் புத்தக விழாவில் 

எதிர் வெளியீடு வெளியிடும் 12 நூல்களில் 

நான் ஏழுதிய 

“கடவுள் என்னும் மாயை”  

நூலும் ஒன்று.


அந்நூலுக்கான மதிப்புரையை  Dr. ஜீவானந்தம்,  M.B., B.S., D.A., ஈரோடு, அவர்கள் எழுதி நன்றிக்குரியவர் ஆகிறார். அவர் எழுதிய “வாழ்த்துரை”யை மகிழ்ச்சியோடு இங்கே அளிக்கிறேன்.வாழ்த்துரை


“கடவுள் என்னும் மாயை” என்ற இந்நூலுக்கு முன்னுரை எழுத பேராசிரியர் தருமி என்னைக் கேட்ட போது தயங்கினேன். ஏனெனில் சகிப்புத் தன்மை இழந்த கால கட்டத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்பையும், சமாதானத்தையும், சகிப்புத் தன்மையையும் போதித்த கடவுள்களின் பெயரால் அல்லவா இன்று பேரழிவுகளும், படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புத்தகத்தின் தட்டச்சுப் பிரதியைப் படித்த பின், புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன்.
முதலாவதாக மதம், கடவுள் பற்றி ஒவ்வொரு  மதம் சார்ந்த மாபெரும் அறிஞர்கள், பெரும் ஆராய்ச்சியின் பின் எழுப்பியுள்ள 12 நூல்களின் சாரத்தை  ஒரு சேரப் படிக்கும்  வாய்ப்பை அவர் எனக்குத் தந்துள்ளார் என்பதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
”எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற தமிழ்மறையின் வழிகாட்டுதலில் அறிஞர்கள் தாம் சார்ந்த மதத்தை, விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்துள்ள பல நூல்களின் கருத்துகளைச் சுருக்கமாக வாசித்த மன நிறைவைத் தருகிறது இந்நூல்.

மகான்கள் தமது காலத்தின் சரிவாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். அனால் பின் வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேர் எதிராக மக்களை ஒடுக்கி ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.

இதை எதிர்த்துப் பல புரட்சிக் குரல்கள் அவ்வப்போது அறம் சார்ந்த நல்லோரால் எழுப்பப்படுகின்றன. நட்ட கல்லை தெய்வம் என்போரைச் சாடினர் சித்தர்கள். ஆரிய மதத்தின் கேடுகள் கண்டு கொதித்தெழுந்த கலகக்காரர்களே புத்தரும், மகாவீரரும். பின் வந்த குருநானக்கும், பிரம்மோ சமாஜமும், ஆரிய சமாஜமும், ராமகிருஷ்ண மடமும், பசுவேஸ்வரரும், வள்ளலாரும், நாராயண குருவும் நான் இந்துவல்ல என்று எதிர்த்தெழுந்தவர்களே.

14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறிஸ்த்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டு பட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்று குவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.

அன்னை தெரசாவின் இறுதி கால மனப் போராட்டத்தைக் கூறும் “COME BE MY LIGHT” ”என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்என்று கதறிய இயேசுவின் குரலாகவே உள்ளது. தன்னலமும், அதிகார வெறியும், உடமை வெறியும் மிகுந்த சமூகத்தில் உன்னத அறம் சார்ந்த நல்லோரின் விரக்திப் புலம்பல் இவ்விதமாகவே இருக்க முடியும்.

கிறிஸ்துவின் வாழ்வு உண்மைகள், அவரது போதனைகளைத் திரட்டி எழுதிய பல்வேறு சுவிசேஷங்களைப் படிப்பின் ஆதிக்க சக்திகளின் கேடயமாகிப் போன மதம் இருட்டடிப்பு செய்து அழித்தன. எப்படி ஏகாதிபத்திய சர்வாதிகார சக்திகளின் கையாளாக கிறிஸ்துவம் மாற்றப் பட்டது என்பது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் உட்படப் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளதை அறியும் வாய்ப்பினை இந்நூல் தருகிறது.

இந்து மதம் பற்றிய கசப்பான உண்மைகளைப் பெரியாரை விடவும் அப்பட்டமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் வெளிப்படுத்தும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் வாதம், இன்று இந்து ஆரிய மதவாதச் சக்தியை எதிர்ப்போருக்கும் பெரிதும் உதவும் கையேடாகும்.

மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும்,  சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல; அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்து விட முடியாது.

அறிவியலும், பகுத்தறிவும், சமத்துவமும் வளர்ந்து வரும் உலகில் கடவுள் எனும் போதை, மாயையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவது வேகமாக நடந்து வருகிறது. ஐரோப்பாவில் தேவாலயங்கள் காலியாகி வருகின்றன. போப் புரட்சிக் குரலில் பேசி வருகிறார்.

உலகின் அநீதிகளுக்கும், போர்களுக்கும், படுகொலைகளுக்கும் பின்னணியில் மதமே நிற்கிறது என்பது தெளிவாகி வருகிறது. அறிவியலும், பகுத்தறிவும், சமத்துவ உணர்வும் தகவல் தொடர்பும் வளர்ந்து வரும் உலகில் படிப்படியாக கடவுளும், மதமும் தமது தேவையை இழந்து உதிர்ந்து போவது உறுதி.

பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால் கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது. இந்நூலை வெளியிடும் “எதிர் வெளியீடு”, எழுதிய பேராசிரியர் தருமி அறிவியில்வாதிகளின் வாழ்த்துக்கும், நன்றிக்கும் உரியவர்கள்.

                               இருளிலிருந்துது வெளிச்சத்திற்கும்,
                               அஞ்ஞானத்திலிருந்து அறிவொளி நோக்கியும் பயணிப்போம்.3.12.17
ஜீவானந்தம்,
9442272772*