Wednesday, October 28, 2009

348. மயிலில் வந்த கதை

*

மகள் அனுப்பிய மயிலில் வந்த கதை இது. படிக்க நல்லா இருந்தது. "எனக்கும்" கூட எல்லாம் புரிஞ்சிரிச்சி ... :)


*



A discussion between a father and a son, working for a software company.
Very interesting … Read thru ...


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"
நியாயமான ஒரு கேள்வி


*

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. அவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

“இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யணும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.

அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துப்பானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?"

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடிப் பொடிங்க இருப்பாங்க.."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.
அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

“புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

------End of discussion--------

Monday, October 19, 2009

347. கடவுள் என்றொரு மாயை ... 12

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12



கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 10.

A MUCH NEEDED GAP?

===========================================


நமது வாழ்க்கையில் கடவுள் என்றொன்றிற்கு மனத்தளவில் ஓரிடம் உண்டு - ஒரு நண்பனாக, தந்தையாக, மூத்த தமையனாக, நம் குற்றங்களைத் தாங்குபவராக, நம்பிக்கைக்குரியவராக. கடவுள் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அதற்கென்று நம் வாழ்க்கையில் ஓரிடம் உண்டு. (387)

*
அந்தக் கற்பனை நண்பன், கற்பிக்கப்படும் அந்தக் கடவுள் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு எப்போதும் நிறைய காலம் எடுத்து, பொறுமையொடு காத்திருப்பார். மனோதத்துவர்களோ, நல்லுரை கூறுபவர்களோ அந்த அளவு பொறுமையோடும், காலணா காசில்லாமல் கிடைப்பார்களா என்ன? (391)

*
மதங்களை மறுத்துவிட்டால் அதற்குப் பதிலாக எதை வைத்திருக்கப் போகிறீர்கள்?

*
மதங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதாலேயே அது உண்மையாகி விடுவதில்லை.

*
கடவுள் உண்மையாக இருப்பின், அவரோடு இருப்பதே மகிழ்ச்சி என்பதானால், சாகும் நேரத்தில் எல்லா நம்பிக்கையாளர்களும் மகிழ்ச்சியோடுதானே இருக்க வேண்டும்? ஒருவேளை அவர்கள் நம்பியதாகக் கூறியவை எல்லாமே வெறும் வேடம்தானா?

ஏன் இரக்கக் கொலை (euthanasia) அல்லது தற்கொலை நம்பிக்கையாளர்களுக்குத் தப்பாகத் தெரிகிறது?

*
இந்த வாழ்க்கைக்குப் பின் இன்னொரு வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுள்ளவர்களுக்கு, இறப்பு என்பது இன்றைய இந்த உலக வாழ்க்கையிலிருந்து மறு வாழ்வுக்காக உங்களைக் கடத்தும் ஒரு கருவி என்பது தானே உண்மையாக இருக்க வேண்டும்?

*
இந்த வாழ்க்கை மரணத்தோடு முடிகிறது என்ற நம்பிக்கையுள்ளவர்கள் தான் இரக்கக் கொலைக்கோ, உதவப்படும் தற்கொ்லைக்கோ (assisted suicide) எதிர்ப்பு காண்பிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அடுத்த ஜென்ம வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள்தானே இவைகளை ஆதரிக்கிறார்கள்.

*

................................ கடவுள் என்றொரு மாயை என்ற நூல் பற்றிய இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது!!


http://www.mylivesignature.com/signatures/54487/287/FE27BF4CB271859C180DCF19676DCCD3.png



*


*

Sunday, October 18, 2009

346. கடவுள் என்றொரு மாயை ... 11

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 9.

CHILDHOOD, ABUSE AND ESCAPE FROM RELIGION

=========================================

ஒவ்வொரு ஊரிலும் விளக்கேற்றுபவர் ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு ஆசிரியர்.

ஒவ்வொரு ஊரிலும் அந்த விளக்கை அணைக்க ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு மதகுரு.
- VICTOR HUGO
(349)


*

David i. Kertzer என்பவர் எழுதிய The Kidnapping of Edgardo Mortara என்ற நூலில் கதையுடைத் தலைவனாக வரும் எட்கார்டோ என்ற அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் கத்தோலிக்க கிறித்துவர்களின் மத 'வெறியாட்டத்தில்' நடந்த உண்மைகளை வெளிக்கொணர்கிறார். Spanish Inquisition நடந்த 1850களில் கதை இது. தற்செயலாகக்கூட ஒருவன் தலையில் தண்ணீர் ஊற்றி ஜெபித்துவிட்டால்கூட அவன் "உண்மையான", திருமுழுக்கு (baptism) பெற்றவனாக மாறிவிடுகிறான் என்ற கத்தோலிக்கரின் நம்பிக்கையை முழுவதுமாக எழுதுகிறார்.

பதினான்கே வயதான வேலைக்காரப் பெண்ணால் தலையில் நீரூற்றப்பட்டு திருமுழுக்கு பெற்ற பையனை அரசு அவனது யூதப் பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுகிறது. ஏனெனில் அந்த மதக்காரர்களது நம்பிக்கை அத்தனை ஆழமானது. திருமுழுக்கால் கிறித்துவனாவன் கிறித்துவர்களால்தான் வளர்க்கப்பட வேண்டும் என்பது அப்போதைய போப், மதகுருமார்கள், தினசரிகள் என எல்லோரின் நம்பிக்கை. (349 - 354)

*
சிறு குழந்தைகளின் பாலியல் வன்முறை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மதக்கல்வியின் அழுத்தம் இவைகள் பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். (354 - 366)

*
டாக்கின்ஸுடன் வேலைபார்த்த மனோதத்துவர் Nicholas Humphrey ஒரு சொற்பொழிவில் கூறியவைகளில் சில:
தனிமனித சுதந்திரத்தில் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மற்றவர்களின் - அவர்கள் யாராக இருந்தாலும் - தவறான முடிவுகளைக் கொடுப்பது தவறு. அவர்களது வாழ்க்கையின் நீட்சிகளை அவர்களே முடிவு செய்ய விட வேண்டும். மூட நம்பிக்கைகள் மலிந்த கடவுள் கோட்பாடுகளை அவர்களிடம் விதைத்து, அவர்களுக்கென்று ஒரு குறுகிய ஒற்றைவழிப்பாதையைத் தரக்கூடாது.

குழந்தைகள் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கக் கூடாது. (367)

*
எந்த ஒரு மத எதிர்ப்பாளனும் இப்போதெல்லாம் அமெரிக்காவில் bright என்று அழைக்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு குழந்தையும் ஒரு bright-ஆக மாறுவதற்குரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். (380)

*
குழந்தைகளை கிறித்துவக் குழந்தைகள், இஸ்லாமியக் குழந்தைகள் என்றெல்லாம் அழைப்பது அருவருக்கத் தக்கது. எந்தக் குழந்தையும் கிறித்துவ குழந்தை, முஸ்லீம் குழந்தை என்றல்ல; கிறித்துவ பெற்றோருக்குப் பிறந்த குழ்ந்தை, முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை என்று வேண்டுமானால் அழைக்கப் படலாம். (381)


*



*

*

345. GEORGE CARLIN ON RELIGION & GOD

-*





*

Friday, October 16, 2009

344. கடவுள் என்றொரு மாயை ... 10

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

-->



கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 8:

WHAT'S WRONG WITH RELIGION?
WHY BE SO HOSTILE?


========================================

மக்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் - மேலே வானத்தில் இருந்துகொண்டு் - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் என்னென்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதாக ஒரு நினைப்பை மதம் ஏற்படுத்தி விட்டது.

புலப்படாத அந்த மனிதனும் நாம் செய்யக் கூடாத பத்து கற்பனைகளை ஒரு நிரலாகத் தொகுத்து வைத்துள்ளார். அப்படி வி்லக்கப்பட்ட அந்தப் பத்துக் கட்டளைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அவர் ஒரு 'தனியிடம்' ஒன்றை வைத்துள்ளார்; அக்கினி மிகுந்து சூடும் புகையும் நிறைந்த, தவறுகள் செய்யும் நம்மையெல்லாம் சித்திரவதை செய்யும் அந்த இடத்திற்கு அனுப்பி, காலமெல்லாம் நாம் அங்கே கஷ்டப்படவும், எரிந்து வேதனைப் படவும், துக்கத்திலும் துயரத்திலும் நாம் முடிவில்லாத காலம் வரை அழுது துயருறவும் அனுப்பி விடுவார். .... ஆனால், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்!:) (பக்:317)

.................................ஜார்ஜ் கார்லின்

===============================================