Showing posts with label ஒச்சப்பனும் நானும். Show all posts
Showing posts with label ஒச்சப்பனும் நானும். Show all posts

Thursday, February 14, 2013

638. ஒச்சப்பனும் நானும்







*


ஒச்சப்பன் இந்த ஆண்டில் ‘அந்திமழை’ என்ற நூலுக்குக் கொடுத்த ஒரு செவ்வி. ஆங்கிலத்தில் அதை ஒச்சப்பனே தருகிறார்.


*  





Camera Eye &
The Madurai Lover 

Interview for the Andhi Mazhai Magazine by Perassi Kannan 


The Belgian man, Henk, is quite familiar with Madurai taking pictures in and around the town for the past 25 years, discovering lately more the life in villages and small towns around the big city. In his own accented Tamil, picked up from his continuous visit from 1987, talking to local Tamil people, he replied:



 “My mother tongue is Dutch, I’m living in the small town Lokeren - Belgium. When I studied for my degree on architecture I came across Indian architecture. That pulled me to Tamil Nadu through Delhi and finally arriving in Madurai.

 “Why did you select Madurai at all?”

“Madurai, I consider the center point of TN. I can reach any place in TN from here. Moreover I find that the essence of Tamil culture is very much alive in Madurai. Festivals like Chitra, Karthigai, Pongal … feels more vibrant celebrated here. The hospitality, the joy, the love and smile from their heart are livelier in Madurai than anywhere else.

 “My mother was attracted by the photos that I took in Madurai. She was then 72. Still she wanted to visit India. She did it for 10 years. Now I am coming alone … she passed away immediately after her last visit to TN. I am in my sixties. I worked for the Government of Justice as a high ranking officer. Presently I am retired. Photography is my hobby, a way to meet people, sharing the pleasure. In ’94 I discovered the real Jallikattu, nowadays losing its glamour.

 “When I first came to Madurai I met Ochappan, a load man, still a good friend using his derived name ‘oochappan’ on the internet. Anand is nowadays my right hand, helping, getting a day older.

Henk hibernates in Madurai from November till February. He likes so much our language as carrier of our culture and lives, hoping that Tamil doesn't lose its importance to English, a foreign language. His photographs are so brightly colored since he feels that colors reflect the happiness in the minds and lives of the Tamil people.

His dream is to exhibit once his Madurai photos on the pavement in the city, so that everyone will have the chance to see and enjoy them.

His photos can be seen in : http://www.flickr.com/photos/oochappan/


*

Tuesday, February 05, 2013

636. ஒச்சப்பனும் நானும் .. நம் தாய்மொழிகளும்









*
 எனக்கும்  ஒச்சப்பனுக்கும் நடந்த சில கருத்துப் பரிமாற்றங்களை, தேவை கருதி, உங்கள் முன் வைக்கிறேன்.

 

1830-ல் உருவான பெல்ஜியத்தின் அண்டை நாடுகள் நெதர்லேண்டு. ஜெர்மனி,. ப்ரான்ஸ், லக்ஸம்பெர்க். கிறித்துவர்களின் இரு கூறுகளின் நடுவே நடந்த குழப்பங்களால் இந்நாடு தனியாகப் பிரிந்தது. அப்போது பிரஞ்சு மொழிதான் அரசியல் மொழியாக இருந்தது. அரசியல், வகுப்பு வாத வேறுபாடுகள் பலவும் இருந்த இந்த நாட்டில் பின்னாளில் மொழியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தின. 

1970 வரை ஒன்றாக இருந்த பெல்ஜியம் இந்தப் பிரச்சனைகளால் எழுந்த பல அரசியல் சிக்கல்களினால் பெடரல் ஸ்டேட்டாக மாறியது. இப்போது இது மூன்று பிரிவுகளாக உள்ளன: வடக்குப் பகுதியில் டச் மொழி பேசும் ஃபாளண்டர்ஸ்; தெற்குப் பகுதியில் பிரஞ்சு மொழி பேசும் வல்லோனியா; இரண்டிற்கும் நடுவில் இரு மொழி பேசும் ப்ருசல்ஸ். பிரிவுகளாக இருந்தாலும் பெல்ஜியம் ஐரோப்பிய யூனியனில் நல்ல பொருளாதார மேம்பாட்டோடு இருக்கிறது.

ஃப்ளாண்டர் மொழி பேசுவோர் ஃப்ளெமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள். (நம் ஒச்சப்பன் இந்தக் குழுவைச் சார்ந்தவர்.) தங்கள் மொழி அதிகம் பேசப்படாமல், போற்றப்படாமல் பிரஞ்சு மொழிக்கே அதிக முக்கியத்துவம் இருந்த நிலையை தங்களது மொழிப்பற்றால்  முற்றாக மாற்றினர். இப்போது பிரஞ்சு மொழிக்கு முக்கியத்துவம் இழந்து ஃப்ளாண்டர்ஸ் மொழியே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒச்சப்பன் ஒருவன் தன் மொழியை இழந்தால் அவனது பழம் பண்பாடு, சமூகக் கட்டுக்கோப்பு, ஒற்றுமை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்து விடுவான். அது அந்த சமூகத்தினை முற்றாக அழித்து விடும் என்கிறார். இந்த உணர்வுகளை ஊக்குவித்த பின்பே ஃப்ளாண்டர்ஸ் மொழி வலுப்பெற்று இன்று எங்களின் தாய்மொழியை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்கிறார்.
அவர் எங்கள் நாட்டில் நடந்த மொழிப் பரிணாம வளர்ச்சி அப்படியே மாறி, எதிர்த் திசையில் உங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இங்கே ஆங்கிலத்தின் பின்னாலேயே எல்லோரும் ஓடுகிறீர்கள். அது மட்டுமின்றி ஆங்கிலம் அறிந்தோர் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களை குறைவாகக் கருதுகிறீர்கள். அந்த பாவப்பட்ட தமிழர்களும் ஆங்கிலத்தைப் போற்றுவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு சமூகத்தின், அதன் கலாச்சாரத்திற்கு அடிக்கப்படும் ஒரு சாவு மணி என்பதை உங்கள் சமூகம் புரிந்து கொள்வது நல்லது.

அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். தமிழ் தெரிந்தோருக்கே அரசு வேலைகள் என்ற கொள்கையை அரசு எடுக்க வேண்டும் என்கிறார். இதற்காக அவர் எனக்கு எழுதிய மயிலின் நகலை இங்கே கீழே கொடுத்துள்ளேன்.



Dear Sam,

The Sint-Lievens College was founded in 1930 for the insight and the deployment of Lieven Gevaert (Afga-Gevaert), an industrialist with an eye for social and Flemish needs for Dutch school education. The pride of your own mother-tongue, Dutch was the key for the revival of the Flemish culture, dominated for years by French invasions and domination, which chased away very famous Dutch writers from Antwerp (Belgium) to the Netherlands. Nowadays Flanders grew out to a strong region at the top of world technology, proud leaving behind the French hegemony.

Remarkable reverse evolution happens in Tamil Nadu, people are dominated by the foreign language, English. It is considered English-speaking ones are  the elite of Tamil society. Many such are not able anymore to read or write their own mother-tongue Tamil,  making  them foreigners in their own land, alienated from their own culture, looking down on their origin and the common Tamilians as lower caste, copying the English, and exploiting other non-English-speaking Tamils in a worse way. They can't be called proud Tamilians anymore as they chose to reject all Tamil values and its tradition and culture, not aware that they lost their personal-identity. They may praise themselves lucky for the tolerance of the majority Tamils.

Only the Tamil government can preserve their culture by making Tamil a compulsory medium of education. Tamil is one of the oldest languages and still remains as a spoken classical language, with its great Tamil culture, traditions and great jewels of Tamil literature. The more languages you know the more cultures you understand. But  you have an identity only when you master your own mother-tongue. A proud Tamil should know his language and his culture.


Greetings
Henk










*



Thursday, January 10, 2013

626. ஒச்சப்பனும் நானும் (2013) - 2









*

ஒச்சப்பன் முதல் தடவை மதுரை வந்த போது, ஒரு வெயில் நேரத்தில் ஒதுங்க இடமில்லாத இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, பக்கத்தில் ஒரு கடையில் இருந்த இளைஞன் அவரை  கடைக்கு உள்ளே வந்து உட்கார அழைத்திருக்கிறான். அழைத்த இளைஞன் ஆனந்த். அன்று தொட்ட நட்பு பல்லாண்டுகளாக நன்கு வளர்ந்துள்ளது. ஒச்சப்பன் இந்தியா வரும் நாளை ஆனந்திற்குத் தெரிவித்து விடுகிறார். சென்னைக்கே சென்று அவரைச் சந்தித்து, பின் அவர் தன் தாய்நாடு திரும்பும் வரை அவரோடு ஆனந்த் இருப்பது தொடர்ந்த ஒரு பழக்கம்.


ஒச்சப்பனின்   “தத்துப் பிள்ளை”

முதல் முறை ஒச்சப்பன் படம் எடுக்கும் இடங்களுக்கும் உடன் வரும் ஆனந்திடம் ஒரு சின்ன காமிராவைக் கொடுத்து படம் எடுக்க வைத்திருக்கிறார். அவரோடு அமர்ந்து புகைப்படத் திருத்தல்களையும் கற்றுக் கொண்டு விட்டான். இப்போது அவனது படங்களும் நம்மை மலைக்க வைக்கின்றன. இப்போது ஆனந்த் திருமணங்களுக்குப் படம் எடுப்பதில் வல்லவனாகி விட்டான்.

ஒச்சப்பன் google maps வைத்தே மதுரையருகில் உள்ள சின்னச் சின்னக் கிராமங்களைக் ‘குறி’ வைக்கிறார். அவரோடு ஏற்கெனவே அவர்கள் அடிக்கடி போயிருக்கும் யானை மலையைச் சுற்றியுள்ள கல் குவாரிகளைச் சுற்றிப் பார்த்துப் படம் எடுக்கப் போயிருந்தேன். யானைமலையை ஒட்டி அந்த மலையின் வெளியே தெரியும் அளவிற்கு ஆழமாக கற்களைத் தோண்டி எடுத்துள்ளார்கள்.

அநேகமாக கல்லூரி படத்தில் கதாநாயகன் ஒரு கல் பாதையில் வேகமாக ஓடுவது போல் ஒரு காட்சி இருக்கும். அநேகமாக நாங்கள் போன ஒரு பாதையாக அது இருக்கலாம். சரியாக ஒரு லாரி மட்டும் செல்லும் அகலத்தில் ஒரு பாதை. அதன் இரு பக்கமும் பார்த்தால் அதல பாதாளம். அப்பாதையில் போகவே எனக்குப் பயமாக இருந்தது. அதைக் கடந்து போனோம். ஆஆஆஆஆழமாக வெட்டி எடுத்துள்ளார்கள் - கொடுத்து வச்ச மவராசன்கள்!

‘தண்ணி’யை அரசு விற்கிறது. விலைகூடிய கற்களை சில தனி மனிதர்கள்  விற்கிறார்கள். நம் நாட்டுக் கனிப் பொருட்களை அரசே உடமையாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று தான் அந்த இடங்களைப் பார்த்ததும் தோன்றியது. என்றாவது அது நடக்குமா என்று ஒரு ஆசை.







திபெத்திய மூதாட்டி 
 கட்டாயம் இப்படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள். காலத்தின் ஆழமான கோடுகள் ... அதனூடே தெரியும் வயதிலும் ஒளிரும் கண்கள் ... எனக்கு மிகவும் பிடித்த படம்.


இதே மூதாட்டியை இருவரும் படம் எடுத்துள்ளார்கள். ஒன்றுக்கு ஒன்று குறைச்சலில்லை. ஆனாலும் ஒச்சப்பன் தான் தான் அந்த மூதாட்டியை படம் எடுக்கத் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லி, காலரை தூக்கி விட்டுக் கொண்டார்.

ஆனந்த் சீர் திருத்தியது
ஒரே படத்தை நானும் ஆனந்தும் சீர் திருத்தியதை இங்கே போட்டுள்ளேன்.  இந்தப் படங்களில் எந்த அளவு தெளிவாகத் தெரியுமோ என்னவோ .. ஆனந்த், ஒச்சப்பன படங்கள் அதிக வித்தியாசமாக அழகாகத் தோன்றுகிறன.

நான் ‘கெடுத்த’ படம்



ஆனந்த்
மிக உயரத்திலிருந்து 300mm  மூலம் எடுத்த படம். ஒச்சப்பன் தேர்ந்தெடுத்த படம்.  பெரிய சத்தம் போட்டு கீழேயுள்ளவரை சுத்தியலைத் தூக்கிப் பிடிக்க வைத்து எடுத்தோம். இப்படத்தைச் சீர் செய்ய முயன்றேன். ஒரே தகராறு. அந்த மஞ்சள் பையை பிரைட் ஆக முயற்சித்தேன். அதே போல் அந்த நீரையும் ஏதாவது செய்ய முயன்றேன். ஏனோ .. ஒன்றும் செய்ய இயலவில்லை. மீதிப்பாடங்களை ஒச்சப்பனிடமும், ஆனந்திடமும்  படிக்க வேண்டும்.....
தருமி
                                                                                           




 *





Friday, January 04, 2013

624. ஒச்சப்பனும் நானும் (2013)




*


சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒச்சப்பன் என்றொரு புனைப்பெயரில்  தன்னை அழைத்துக் கொள்ளும் Belgium நாட்டின் Henk என்பவரைச் சந்தித்து அவரோடு இணைந்து புகைப்படங்கள் எடுத்ததைப் பற்றியும், புகைப்படத்துறையில் இருந்த அவரது ஆர்வத்தையும், அவரோடு சில படங்களை post-production  செய்தது பற்றியும் ஏற்கெனவே எழுதியிருந்தேன்.

பல ஆண்டுகளாக வருவது போல் இந்த ஆண்டும் டிசம்பர் மாதமே வந்து விட்டார். வந்ததையும் தெரிவித்தார்.  ஆனாலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நேரில் சென்று சந்திக்க முடியாது போயிற்று. மனுஷன் புத்தாண்டு தினத்தன்று வீட்டிற்கே வந்து விட்டார். அவர் இந்த ஆண்டு வருவதற்குள் கொஞ்சமாவது post-production பழகிக்கொள்ள வேண்டுமென நினைத்திருந்தேன். முடியாது போயிற்று.

இரண்டு நாள் கழித்து அவரைப் பார்க்கச் சென்றேன். கையோடு பதிவுகளில் சமீபத்தில் போட்டிருந்த Orchids  படங்களோடு சென்றிருந்தேன். படம் எடுத்த போது இந்தப் படங்கள் நன்றாக வந்திருந்ததாக நினைத்திருந்தேன். ஆனால் அதன் பின் திருப்தியில்லாமல் போனது. சரி ... அவரையாவது கொஞ்சம்  PP செய்யச் சொல்லுவோமே என்று அவைகளோடு சென்றேன். வழக்கமான மேஜிக் செய்து காண்பித்தார். என்ன வேகம் ... என்ன precision ... இரு பூக்களை அவர் PP செய்ததை இங்கே பதிந்திருக்கிறேன்.


இந்தப் படங்களில் இதழ்களின் வரிக்கோடுகள், texture எல்லாம் கொண்டு வந்தார். பின்னணி மாறுபாட்டோடு இருக்க வேண்டுமென நினைத்தார். நான் வெள்ளைப் பூவிற்கு பச்சைப் பின்னணி நன்றாயிருக்குமே என்று நினைத்திருந்தேன். ஆனால் மாறுபட்ட பின்னணி தான் சரி  என்று மாற்றிக் காண்பித்தார். பூவிதழ்கள் இயற்கைத் தோற்றத்திற்குக் கொண்டு வந்துள்ளார். பூ பின்னணியிலிருந்து தனித்து நிற்க வேண்டும் என்றார்.

அடுத்து ....



அடுத்த படத்திலும் பின்னணியை மாற்றினார். அதோடு பூவிலும் நிறைய மாற்றங்கள் செய்தார். மிக நுணுக்கமான மாற்றங்களைக் கொண்டு வருகிறார். மிகச் சிறிய - சில சமயம் அவ்வளவு எளிதாகக் கண்டு கொள்ள முடியாத - மாற்றங்களைக் கொண்டு வருகிறார். உன்னிப்பும், வேகமும் பயமுறுத்தின !


PP-யில் என்னென்ன மாற்றங்கள் செய்கிறாய் என்று கேட்டார். நானென்ன பெருசா செய்யப் போகிறேன் ... கொஞ்சம் கொஞ்சம் curves, contrast, colour balanace மட்டும் செய்கிறேன். அதிலும் skin tone கொண்டு வரக் கஷ்டப்படுவதைச் சொன்னேன். பூவிற்கு எடுத்த அளவு அதிக முயற்சி எடுக்காமல் கீழே உள்ள என் பேத்தியின் படங்களை மாற்றிக் காண்பித்தார்.















எல்லாம் துரித கதியில் செய்கிறார். அவர் மூலமாகக் கற்றுக் கொள்வது என்னைப் போன்ற மர மண்டைக்குக் கொஞ்சமல்ல ... நிறைய கஷ்டம். அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்து விட்டோம். அவரது இந்தியப் பயணத்தில் அவரோடு இருக்கும் அவரது மதுரை நண்பன் ஆனந்திற்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளார். அவனோடு இனி அமர்ந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். ஒச்சப்பன் இந்தியாவை விட்டுப் போனபின் அந்த வேலையை ‘சீரியஸாக’ச் செய்ய வேண்டும். (ஏற்கெனவே நவ்பால் சொன்னது போல் எனக்கு perseverance ரொம்பக் கம்மி தான். இருந்தும் ஒரு கை முயற்சித்துப் பார்த்துவிட வேண்டியது தான்.)


*


Tuesday, February 14, 2012

553. நானும் photography-யும் .... 7 - ஒச்சப்பனும் நானும்




*
ஒச்சப்பனின் MAGIC

*

நான் கெடுத்த படம்
ஒச்சப்பன் சீர்திருத்தி கொடுத்த படம்


ஒச்சப்பனின் MAGIC-ல் வளர்ந்த எனது இரு படங்கள் ....



*

552. நானும் photogrphy-யும் ... 6 & "ஒச்சப்பனும் நானும்"





*
"ஒச்சப்பனும் நானும்"



இரு ஆண்டுகளுக்கு முன்பே ஒச்சப்பன் என்ற பெயரை இணையத்தில் பார்த்தேன். நிழல்படக்காரர். அவரது படங்கள், மதுரையை மிகவும் ரசித்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பாக, ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. வண்ணக் கலவைகளும், படம் சொல்லும் 'கதைகளும்', வாழ்வியல் படங்களும், நம் நாடும், நம் ஊரும், நம் மக்களும் வித விதமாக அவர் படங்களில் தோன்றினார்கள். candid  போட்டோக்கள் நிறைய. pose கொடுக்கும் படங்களில் கூட மக்கள் இயற்கையாக candid-ஆகத்   தோன்றினார்கள். மக்களின் வாழ்வியலோடு படம் எடுப்பது வித்தியாசமாக இருந்தது. 

அவர் படங்களை C & P செய்ய முடியாது. ஆகவே அவரது வலைப்பூவைப் பார்த்து வாருங்கள் ... http://www.oochappan.be/ 

இல்லாவிட்டால் அவரின் சில படங்களை இங்கு பாருங்கள்

http://www.pbase.com/oochappan/image/139709681 

ஒரு நாடகமே அல்லவா இங்கே நடக்கிறது. அதில் நாமும் நடிகர்களாக இருப்பதுபோல் தோன்றுகிறது!



http://www.pbase.com/oochappan/image/139709678 

சிகப்பு-மஞ்சள் குவியலுக்குள் ...

 நடுவில் அந்த எவர்சில்வர் பாத்திரம் கண்ணைச் சிமிட்டுகிறதே....

http://www.pbase.com/oochappan/image/131985122   
நவ ரசங்கள் ...

http://www.pbase.com/oochappan/image/140769267 

இப்படத்தை எடுத்த நிமிடம்:  ஒச்சப்பனோடு நானும் ரவியும் சேர்ந்து ஒரு சின்ன சந்தில் சென்று கொண்டிருந்தோம். ஒரு பள்ளியின் பின்பக்க தகரக் கதவு  ஒன்றின் வழியே ஒரு சின்னப் பெண் வெளியே இருந்த கடைக்காரரிடம் ஏதோ தின்பண்டம் வாங்கிக் கொண்டிருந்தாள். நானும் ரவியும் உடனே எங்கள் manual modeல் இருந்த எங்கள் பெட்டிகளைத் தூக்கி, என்ன diaphragm .. shutter .. என்று யோசித்து வைப்பதற்குள் பாப்பா காணாமல் போய்விட்டது. ஆனால், ஒச்சப்பன் அந்தப் படத்தை ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார்.



இதுபோல் இடங்களில் பொட்டியை auto mode-ல் அல்லது  program mode-ல் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்த வினாடியும் வீணாக்காது ஒரு படத்தை உடனே எடுக்க முடியும் என்றார்
.

http://www.pbase.com/oochappan/image/133248700
எங்கிருந்தோ வரும் 'தேவனுடைய ஒளிக்கதிர்கள்' மாதிரி இல்லை ...?!



சரி ... யாரோ நம்மூர்க்காரர் இப்போது வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தன் நகரத்தின் அழகுகளைப் படம் பிடிக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இன்னொரு நிழல்பட நண்பன் இவரைப் பற்றிய முன்னுரை கொடுத்து, இப்போது மதுரையில், அதுவும் எங்கள் கல்லூரிக்குப் பக்கத்திலேயே தங்கி இருக்கிறார் என்றான். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்; ஒச்சப்பன் என்பது அவரது புனைப்பெயர்; மதுரைக்குத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருகிறார் என்பது போன்ற செய்திகள் கிடைத்தன.

யாதும் ஊரே ....
யாவரும் கேளிர்

மயிலில் தொடர்பு கொண்டேன். வரச் சொல்லியிருந்தார்.   முதல் முறை மதுரை வந்த போது கோடை செல்லும் பேருந்தில் அருகிலிருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி பிழைக்கும் சாதாரண மனிதர். அவரின் பெயர் ஒச்சப்பன். அவரோடு நெருக்கமாகி, அவரது பெயரையே தனக்குப் புனைப்பெயராக வைத்துக் கொண்டுள்ளார். இன்றும் வரும் ஒவ்வொரு ஆண்டும் அவரைச் சந்தித்து நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


அடுத்த நாள் மதுரையில், தங்கியிருக்குமிடத்திற்கருகில் படம் எடுக்கலாம் என்றார். அடுத்த நாள் நானும் பொட்டியோடு சென்றேன். நண்பன் ரவியும் என்னோடு சேர்ந்து கொண்டான். மூவரும் ஆளுக்கொரு பொட்டியோடு கரிமேட்டு சந்தை, பக்கத்திலுள்ள கடைகள், சந்து பொந்துகள் என்று சென்று வந்தோம். (அந்தப் படங்கள் பின்னால் அடுத்த பதிவுகளில் வரும்.)


நாம் பொட்டியோடு போனால் விரட்டியடிக்கும் நம்மூர் மக்கள் இவரோடு போனால் இன்முகத்தோடு ஒத்துழைத்தார்கள். படமெடுக்கத் தடையேதுமில்லை.

HOME WORK செஞ்சிட்டியா ...?

அடுத்த நாள் பக்கத்து கிராமங்கள் சிலவற்றிற்குச் செல்ல ஏற்பாடானது. அன்று காலையிலேயே புறப்பட்டு சில கிராமங்களுக்குச் சென்றேன். எனக்கு அவைகள் புது இடமாக இருந்தன. ஆனால் ஒச்சப்பனுக்கு எல்லாம் மிகப் பழகிய இடங்கள். இடங்கள் மட்டுமல்ல .. அங்குள்ள மக்களுக்கு அவர் மிகவும் தெரிந்தவராக, நண்பராக இருந்தார்.


கீழக்குயில் குடி என்ற ஊரில் ஏறத்தாழ முழு கிராமமுமே அவருக்கு மிகவும் பழகிப் போயிருந்தது. ஒவ்வொரு சந்தும் அவருக்குப் பழகிப் போயிருந்தன. மக்களிடம் அவரது மழலைத் தமிழுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.


படம் எடுக்கும்போது சில பாடங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு எப்போதும் profiles எடுப்பது பிடிக்கும். ஆனால் வெறும் முகம் மட்டும் இருந்தால் அது 'கதை ஏதும் சொல்லாது'; அந்தப் படங்களோடு பின்னணி போன்று ஏதாவது இருக்க வேண்டுமென்றார். முந்திய நாள் படம எடுக்கும்போதுகூட அதே போல் சில clues  கொடுத்தார். தலைக்கு மேல் பொட்டியைத் தூக்கி வைத்து படங்களை எடுப்பது journalists' style என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியில்லை என்றார். நானும் ஒரு சில படங்களை அது போல் எடுத்தேன். எடுத்தவைகளில் ஒரு படம நன்கு வந்திருப்பதாகச் சொன்னார்.


அவர் சொன்னவை போல் எடுத்த படங்களைப் பின்னால் அடுத்த பதிவில் சேர்க்க எண்ணியுள்ளேன்.

CONTEMPORARIES



வட கிடச்சிருச்சே ..!

*
படங்களை எடுத்த பின் இன்னொரு நாள் post production session. அப்போது தான் ஒச்சப்பனின் magic புரிந்தது. ஒவ்வொரு படத்திற்கும் வெகுநேரம் எடுத்து அவைகளைச் சீர்படுத்துகிறார். அவர் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள என் மூளை மிகவும் மறுத்து அட்டகாசம் செய்தது. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இனி பயிற்சியில் அவைகளை வளர்க்க வேண்டுமாம் ..
(கடவுளே...! நமக்கு எந்தக் கலையும் களவு படாது என்று அந்தக் கடவுளே என் தலையில் எழுதிட்டார் போலும்!!) ஒவ்வொரு சின்ன மாற்றங்களையும் மிக உன்னிப்பாகப் பார்த்து சீர் செய்கிறார். ஏற்படும் அந்தச் சின்ன மாற்றங்களை மிக உன்னிப்பாகப் பார்த்தால் தான் எனக்கு வித்தியாசமே புரிந்தது. .... பழகணும் :(


டீக்கடை with flash ...
ஒரு டீக்கடை. எங்களுக்காக டீ போட்டார். ஒரு படம் எடுத்திரலாமேன்னு ரெண்டு மூணு முயற்சித்தேன். கடையின் உட்பகுதி மிகவும் இருட்டாகப் போச்சு. சரின்னு ஒரு flash போட்டு ஒரு படம் எடுத்தேன். வெளிச்சம் வந்ததும் ஒச்சப்பன் என்னைப் பார்த்தார். அவருக்கு அது பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்து படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். flash பிடிக்காதோ என்றேன். ஆமாம் என்றார்.
ஆனால் படங்களை வரிசையாகப் பார்த்தவர் இந்தப் படத்தைப் பார்த்து, உள்ளே கையில் இலையோடுஉட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்ததும் அந்த சின்ன மாற்றத்திற்காக இந்தப் படத்தையும் போனால் போகுதென்று 'நல்ல படங்கள்' என்று எடுத்துப் போட்ட என் folder-ல் சேர்த்துக் கொண்டார்.

*
அம்மாடி ...HEAVIEST smoker!!!