Tuesday, April 30, 2019

1043. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு சின்ன பதில்

*மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட்டது. அவர் சொன்னது முழுவதும் சரி - ஒன்று தவிர. அதை இங்கே கொடுத்துள்ளேன். அவர் எழுதிய பகுதியில் 4 வரிகளும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களும்.


இந்தக் கொலைகளை ஆதரிக்கிறாயா?’’ என்கிறார்கள்
இல்லை’’ என்கிறேன்

உன் மதம் அதை ஆதரிக்கிறதா?’ என்கிறார்கள்


இல்லை’’ என்கிறேன்

//“உன் மதம் அதை ஆதரிக்கிறதா?’ என்கிறார்கள்
இல்லை’’ என்கிறேன்//
இது பொய் இல்லையா?
எத்தனையோ வசனங்களைச் சான்றாக தரலாம். உடனே, இது போர்க்காலத்தில் சொன்னது என்பீர்கள். எந்தக் காலத்தில் சொன்னாலும் ஒரு கடவுளின் வார்த்தை எக்காலத்திற்கும் உரியதாக இருக்க வேண்டாமா? எத்தனை கொடூரம் ... சில .. சில சான்றுகள்:

Sura 4 verses 71–76 urge Muslims to liberate the oppressed and also warns those who stay behind and fail to fight that they shall miss out on plunder, but those
who fight and slain shall go to heaven:
Indeed those who are opposing Allah and His Messenger are bound to be humiliated. The Almighty has ordained: I and My Messengers shall always prevail. Indeed Allah is Mighty and Powerful.
Quran, [Quran 58:20]
“Slay
the idolaters wherever ye find them, arrest them, besiege them, and lie in ambush everywhere for them,” Allah instructs the Prophet Muhammad (Quran, 9:5). He continues: “Prophet! Make war on the unbelievers and the hypocrites! … Hell shall be their home, an evil fate.”
Does the Quran really contain over a hundred verses that sanction violence?
The Quran contains at least 109 verses that speak of war with nonbelievers, usually on the basis of their status as non-Muslims. Some are quite graphic, with commands to chop off heads and fingers and kill infidels wherever they may be hiding. Muslims who do not join the fight are called ‘hypocrites’ and warned that Allah will send them to Hell if they do not join the slaughter.
இது போல் நிறைய இருக்கிறதே! கிறித்த்வர்களின் பழைய ஏற்பாடும் இப்படிப் பட்டது தான், அவைகளை கிறித்துவர்களை விட இஸ்லாமியர் அதுவும் .எஸ். நன்றாகவே செயல் படுத்துகின்றனரே.
இஸ்லாம் ஏன் மாற்று மதத்தினரை காஃபிர் (அல்லாஹ்வுக்கு மாறு செய்பவன்) என்று பழிக்கிறது? இது பிரிவினை இல்லையா ? சர்வாதிகாரம் இல்லையா? இந்த கொள்கையை பின்பற்றுபவன் எப்படி மதநல்லிணக்கம் உள்ளவனாக இருப்பான்?
இஸ்லாம் சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று காலம் காலமாக பொய் சொல்கிறார்கள். முதலில் முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றுபடுங்கள் பார்ப்போம். குறைந்த பட்சம் அது உங்களிடையேயாவது ஒற்றுமையை போதிக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம்.
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மேலும் சில சான்றுகள்:


11:2. நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்”

5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ....நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

சுரா 4 : 56 - யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் ..... - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்


 போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.” என்கிறது8.60 குரான் வசனம்
======

இதைவிட கிறித்துவர்களின் பழைய ஏற்பாட்டின் பயங்கரம் அதிகம். நல்ல வேளை கிறித்துவர்கள் இந்தப் பகுதையை நடைமுறைப்படுத்தாமல் விலகி நிற்கிறார்கள். ஆனால் ஐ.எஸ். ஆட்கள் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பழைய ஏற்பாட்டில் சொன்னதை முழுவதுமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து சில வசனங்கள்:  


2:33-35  ஆண்டவர் அவனை (சீகோனைநம் கையில் ஒப்படைத்தார்... கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள்பெண்கள்குழந்தைகள்எவரையுமே தப்பவிடாமல் அழித்தோம்கால்நடைகளையும்நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.

4:17 எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.

7:5 -8 -- அவர்களின்  பலி பீடங்களை அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்து விடு.

8:19  -- உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

12:3  --  அவர்களின் தெய்வங்களின் சிலைகளை உடைத்து அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.

17:4,5  வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் ...அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்கு கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.

4:24 -- உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.

11:25  --  நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும்.

21:10-13  -- போர்ப் பெண் கைதிகளைக் குறித்த விதிமுறைகள்: சிறை பிடிக்கப்பட்டதில் அழகான பெண்ணிருந்தால் அவளை எப்படி அடைய வேண்டும் என்ற methodology இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

20 : 4 –5 “…யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணி விடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன். 

34: 13,14 “அவர்களின் (ஏனைய சாதியினரின்) பலி பீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத்தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள். 

14 – நீ வேறொரு தெய்வத்தை வழி படலாகாது. ஏனெனில், ’வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்

31:17 & 18 - “ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்று விடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்று விடுங்கள்; ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம் பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்”.

இது எங்கள் வேதநூல் .. அதில் சொல்லியபடி ஏனைய மதக் கோவில்களை, சிலைகளை அடித்து நொறுக்குவோம் என்று நல்லவேளை கிறித்துவர்கள் போர்க்கோலம் கொள்ளாமல், தங்களைத் திருத்தி, திருந்தி .. வேத நூலில் சொல்லியிருப்பதையும் மீறிஇருப்பது ஒரு உள் மாற்றத்தால். கிறித்துவர்களும் போட்ட சண்டைகளுக்குக் கணக்கில்லை. ஆனால் இன்று அதீத வன்முறை போய் மிதவாதம் கொண்ட அளவிற்கு மாறியுள்ளார்கள்.
(இதிலும் வெள்ளைச் சட்டை போட்டு, அடிப்படைவாதிகளாக இருக்கும் கிறித்துவ குழுக்களும் இன்னும் உண்டு. அளவில் கொஞ்சம் கம்மி.) 

இந்த மாறும் தன்மை இன்றைய இஸ்லாமியருக்கு வந்தால் நலம் என்பது மட்டுமல்ல .. அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் அச்சமில்லாமல் வாழலாம்.

ஆனால் இஸ்லாமியர்கள் என்ன சொல்வீர்கள்? இதெல்லாம் 1400 வருடக் கதை. நாங்கள் ஏற்கெனவே இதற்கெல்லாம் பதில் சொல்லி விட்டோமே” என்று தங்கள் வழமையான பதிலைத்தான் சொல்வார்கள். 

என்ன செய்வது .. காதுள்ளவர்கள் கேட்கட்டுமே என்ற ஆசை.
 . *

Monday, April 29, 2019

1042. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 3


தொடர்புள்ள பதிவுகள்

8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.htmlஇரண்டாவது நாள். காலையிலேயே ஸ்பாட்டுகுப் போய்ச்சேர்ந்து விட்டோம். இது ஒரு பரபரப்பான, வேகமான நாள். இரவு 2 மணி வரை படப் பிடிப்பு செல்லலாம் என்றும் சொன்னார்கள்.  இன்றும் கரி பூசி விட்டார்கள். காலையிலேயே ஷாட் இருக்குமென்றார்கள். எனக்கும் வெங்கிக்கும் ஷாட் இருந்தது. உதவி இயக்குநர் கிருஷ்ணகுமார் எங்கள் ஸ்பாட்டுக்குக் கொண்டு சென்று என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். இதுவரை silence .. start ... rolling  ... action ... என்ற வார்த்தைகளைத் தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது எங்களைத் துரத்திக் கொண்டு அந்த வார்த்தைகள் விழுந்தன.சின்ன ஷாட் தான். ஆனால் நாலைந்து பேர் என்பதால் position  பார்த்து trial shots  பார்த்தார்கள். எனக்கு ஒரு மருத்துவரைத் தெரியும் - Dr. Sam C Bose, a plastic surgeon.  மதுரையில் இருக்கிறார். வயதில் எனக்கெல்லாம் நிறைய சீனியர். ஆள் குட்டை தான். ஆனாலும் ஆறடி உயர ஆட்களோடு போனாலும் எல்லோர் கண்களும் இந்த மருத்துவரிடம் தான் போகும். மிக நல்ல body language இருக்கும். அந்தக் காலத்திலேயே அவரை  ரசித்திருக்கிறேன். 50 வருடத்திற்கு முன் ரீகல் தியேட்டரில் அவர் படியேறி வந்த அழகு இன்னும் நினைவில் இருக்கிறது. மருத்துவ மனையில் தன் ஜூனியர்களோடு அவர் நடந்ததும் நினைவுக்கு வந்தது. சரி .. இந்த சீனில் அவரைப் போல் நடிக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தேன். trial shotல் அவரை மாதிரி நடந்து பார்த்தேன். அப்போது  action  என்ற சத்தம் வந்தது. சொல்லிக் கொடுத்தது போல் செய்தோம். இயக்குநர் சில மாறுதல்கள் சொன்னார். மறுபடி action. மூன்றாவது ஷாட் ஓகே ஆயிற்று. அடுத்த சீனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் என்றார்கள். நான் நினைத்தது மாதிரி Sam C Bose மாதிரி நடந்தேனா / நடித்தேனா என்று தெரியவில்லை. காமிரா முன்னால் நின்றதுமே அரை மயக்க நிலைக்குப் போய் விட்டேன். எப்படி நடித்தேன் ... என்ன செய்தேன் என்று படம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஷாட்களுக்கு நடுவில் நேரம் எடுக்கிறது ஏன் என்று அப்போது நன்றாகத் தெரிந்தது. அந்த நேரம் தான் cinematographer அடுத்த ஷாட்டிற்கு ஒளி சேர்க்கை செய்யும் நேரம். அந்த இடைவெளியில் காற்று வரும் இடம் தேடிப் போனோம். அங்கே ஒருவர் தனி உடை, மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தார். ஏற்கெனவே எனக்கு டெம்பரேச்சர் கொஞ்சம் ஏறிக் கொண்டு இருந்தது. வெங்கியும் என் நிலை தெரிந்திருந்தார் - அதாவது எனக்கு சுத்தமாக மனப்பாடம் செய்யும் திறமையே இளம் வயதிலிருந்தே கிடையாது. இனி எனக்கு முக்கியமான இரு சீன்களில் கொஞ்சூண்டு வசனம் பேசணும். மனப்பாடம் செய்து பார்த்தேன். அட .. போடா என்றது என் நினைவுத் திறன். வெங்கியிடம் சொன்னேன். என்னை மாதிரி ஒரு ஆளு அங்க முளிச்சிக்கிட்டு இருக்கிறார் என்றேன்.


எனக்கு மிகவும் பிடித்த லைட்டிங் ...

ஆனால் அடுத்த ஷாட் நானும் அந்த மனப்பாடக்காரர்  மட்டும் தான். அவர் என்னிடம் பேச வேண்டும். பாவம் அவர். அவர் என்னைவிட மோசம். action என்று சொன்னதும் அவர் பின்னால் இருந்த நண்பரைப் பார்ப்பார். அவர் எடுத்துக் கொடுத்ததும் டயலாக்கை ஆரம்பிப்பார். பாதி செண்டென்ஸில் நின்று விடும். cut என்று சத்தம் கேட்கும். இரண்டு மூன்று தடவை இதே மாதிரி டேக் ஆகிக் கொண்டிருந்தது. கிருஷ்ணகுமார் வந்து நல்லபடியாக ஏதேதோ சொன்னார். அந்த ஆளும் சரியென்று தலையாட்டி விட்டு மீண்டும் தடுமாறினார். தள்ளி விட்டு காரை எடுப்பது போல் சில முயற்சிகள்.  தடுமாறிய ஆளின் நண்பரும் உடை மாற்றி பின்னால் நின்று கொண்டிருந்தார். கிருஷ்ணகுமார் அவரைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னார். அவர் சரியாகப் பேசினார், முதலில் பேசிய ஆளை குரூப் ஷாட்டில் இருந்து கொள் என்று சொல்லி விட்டு நண்பரை என்னிடம் வசனம் பேசச் சொன்னார். அவர் நன்றாக செய்து ஷாட் ஓகே ஆனது. அவர் பேசும் போது என் reactions சரியாக இருந்தது என்றார் இயக்குநர்.

நான் வெங்கியிடம் ’பேசாமல் நீங்களும் என் வசனத்தை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். நான் தடுமாறினால் நீங்கள் பேசி எடுத்து விடலாமே’ என்றேன்.  எங்கள் கேசில் அது முடியாது என்பது இருவருக்குமே தெரியும். என்ன நடக்கப் போகிறதோ?

ஏறத்தாழ மதியம் ஆகி விட்டது. இனி அடுத்த ஷாட் அங்கே நடக்கும் என்று ஓர் அறையைக் காண்பித்தார்கள்.எனக்கு scene details தெரியும். அதை இந்த அறையில் எப்படி எடுப்பார்கள் என்று ஆச்சரியாக நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த அறையைத் தயார் செய்யப் பல மணி நேரங்கள் எடுக்கும் என்பதும் தெரிந்தது. நீண்ட ஒரு ராத்திரிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம்.

இன்னொரு சோதனை. வெய்யிலின் வெக்கையில்  சட்டை வியர்த்து கசங்கி விட்டது. இரு முறை கழட்டிக் கொண்டு போய் தேய்த்துக் கொண்டு வந்தார்கள். அதுவும் முடியாததால் பனியன் வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். (ஆ.வி. எபிசோட் எடுத்த போதும் கேட்ட அதே கேள்வி.) இல்லை என்றேன். ஏதோ கானா தேசத்தில் வானிலிருந்து உணவு விழுமே (எப்படி பைபிள் வார்த்தைகள் எல்லாம் தெரிந்து பயன்படுத்தியிருக்கிறேன். பார்த்தீர்களா?) அதே போல் காஸ்ட்யூம் வண்டியிலிருந்து ஒரு புது பனியன் இறங்கியது. போட்டுக் கொண்டேன்.

மாலை வந்தது. நல்லதொரு மழையையும் அழைத்து வந்தது. வெயிலின் தாக்கம் போய் மழையின் குளுமை வந்தது. நான் சொன்ன அறையில் வேலை நடந்து கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். அழைப்பு வந்தது. ஒரு காட்சியில் நானும் வெங்கியும் மேசையின் ஒரு புறம் அமர்ந்திருக்க எதிர்ப்பக்கம் கதா நாயகன் - ஆர்யா - உட்கார்ந்திருப்பார்.  காமிரா அவருக்குப்  பின்பக்கம் இருக்கும். நான் பேச வேண்டும். அதனால் அந்த ஷாட்டில் நான் பேச காமிரா எங்களைப் படம் பிடிக்கும். கிருஷ்ணகுமார் மனப்பாடமாக எதுவும் பேச வேண்டாம். conceptயைப் பிடித்துக் கொள்ளுங்கள். அதைப் பேசி விடுங்கள் என்றார். கொஞ்சமல்ல ... நல்லாவே நடுக்கம். சிறிதே பெரிய அறை. அதில் பாதி இடத்தை காமிரா பிடித்துக் கொண்டிருந்தது. லைட் போட .. அது இதுவென்று புகைப்படக்குழுவினரே அதிகம் இருந்தனர். அதோடு சேர்த்து மானிட்டர் ... இயக்குநர் குழு ... குற்றேவல் குழு என்று பெருத்த கூட்டம் வேறு. அந்த அறைக்குள்ளேயே 30 - 40 பேர் இருந்திருப்பார்கள். வசனம் பேசும் முன் சுற்றி மக்கள். வெட்கம் .. பயம் ..தடுமாற்றம்........ எல்லாம் ஒரு கலவையாக வந்து என் மேல் உட்கார்ந்து கொண்டது.

வசனம் இரண்டு பகுதியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் ஒரு trial. பேசி விட்டேன். ஆரியா நன்றாக இருந்தது என்றார். கொஞ்சம் ஜில் ...  அடுத்து action என்றார்கள். முதல் போர்ஷன் பேசி விட்டு இரண்டாம் பகுதியை ஒரு சிறு pause விட்டுப் பேசணும்.. அது தனி ஷாட் என்பது போல் விட்டு விட்டேன். ‘ஒரு போர்ஷன் விட்டுட்டீங்க...’ என்றார் ஆர்யா. கிருஷ்ண மூர்த்தியும்  சிறு pause விட்டுத் தொடர்ந்து பேசிடுங்க என்றார். ஒரு தம் ... பேசி விட்டேன். cut சொன்ன  இயக்குநர் ‘நல்லா இருந்தது’ என்று  மைக்கில் சொன்னார். ஆர்யாவைப் பார்த்தேன். ‘நல்லா பண்ணிட்டீங்க. என்றார். கொஞ்சம் மேலே பறக்க ஆரம்பித்தேன். ஆனால் மூன்றாவது முறையாக மீண்டும் எடுத்தார்கள். கிருஷ்ணமூர்த்தியும் வந்து நல்லா இருந்தது என்றார்.

அடுத்த ஷாட். அப்படியே உல்டா புல்டா ... இப்போது காமிரா எங்கள் பின்னால் வர நாங்கள் காமிராவிற்கு முதுகு காண்பித்து உட்கார வேண்டும். அதே ரூம். ஆனால் எல்லாவற்றையும் அப்படியே மாற்றிக் காண்பிக்க வேண்டும், நாங்கள் வெளியே காத்திருந்தோம். ஆட்கள் பரபரவென்று செட்டிங்க்சை அப்படியே மாற்றி, அதற்கேற்றாற்போல் ஒளியை மாற்றி மெஷின் போல் வேலை பார்த்ததை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

அடுத்த ஷாட் ரெடி. நான் வேறு சட்டை போட்டுக்கொண்டு வெங்கியோடு உட்கார எதிரில் ஆர்யா. ஒரு விஷயம் பார்த்தேன்; ஆச்சரியப்பட்டேன்; நானும் அதைப் பழகிக் கொண்டேன். ஆர்யா நான் பேசும்போது தீவிரமாக என்னைப் பார்த்து விட்டு, பின் பார்வையை மாற்ற வேண்டும். அவருக்கு டச்சப் அது இதுவென்று செய்யும் போது சாதாரணமாக இருந்தார். ஆனால் அந்த நாற்காலியில் அமர்ந்த உடனேயே முகபாவம் அந்த தீர்க்கமான பார்வையோடு இறுகி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாற்காலியில் அமர்ந்ததும் It was like sinking into his mood ... அப்படியே அமிழ்ந்து போய் விடுகிறார். முதலில் அவர் என்னைக் கூர்ந்து கவனிக்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை ... அவர் அந்தப் பாத்திரமாக மாறுகிறார் என்று தோன்றியது. நானும் அதைப் பழகிக் கொண்டேன். நானும் அடுத்த actionக்கு முன்பே அவரைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலும் நான் பேசிய வசனம் ஓகே ஆனது. அதற்கு முன்பே மேசை மேலிருந்து ஒரு கோப்பினை இடம் மாற்றி வைத்திருந்தேன். அதை என்னிடம் சொல்லி மீண்டும் பழைய இடத்தில் வைக்க சொன்னார்.அது இன்னொரு ஷாட் வாங்கியது. இந்த கூரிய observation அவரிடம் இருப்பதாக பின்னால் மற்றவர்களும் சொன்னார்கள்.

மக்கள் ஏற்கெனவே என்னிடம் ஒன்று சொல்லியிருந்தார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் எங்களைப் போன்ற green horns ஆட்கள் புதிதாக நடிக்க வந்தால் நன்றாகப் பேசி தைரியப்படுத்துவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அது உண்மையாகவே இருந்தது. தேவையோ தேவையில்லையோ ... என்னிடம் இரு முறை நன்றாக இருந்தது என்றார். அது உண்மையோ பொய்யோ .. ஆனால் அந்த  வார்த்தைகள் நன்கு உற்சாகமூட்டின.. அதோடு இரண்டாம் வசனம் எடுக்கும் போது அந்த அறையில் முப்பது நாற்பது ஆட்கள் இருந்து நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வே இல்லை. அதனால் முன்பிருந்த நடுக்கமோ தயக்கமோ சுத்தமாக இல்லை. இயல்பாக இருந்ததாக உணர்ந்தேன். (ஒரு நடிகன் நிஜமாகவே பிறந்து விட்டானோ??!!)

இது போல் இரு வசனங்களை இருபுறம் மாற்றி மாற்றி எடுத்து முடித்தார்கள்.
என் வேலை முடிந்தது என்றார்கள்.வெளியே நல்ல மழை. மணி பத்தரை ஆகியிருந்தது. தனியாக ஆர்யாவிற்கு நன்றி சொல்ல நினைத்தேன், மழையினால் சொல்ல முடியாது போயிற்று. பசியோடு விடுதி வந்து சேர்ந்தோம்.


மிச்சக் கதைகள் ... மீதிக் கதைகள் ... இனி படம் வெளி வந்த பிறகு தான் என்று நினைக்கின்றேன். இல்லை ... இல்லை ... dubbing இன்னும் இருக்கிறதே. அந்த  அனுபவத்தையும் பிறகு எழுத வேண்டும். மே மாத நடுவில் இருக்குமென்று சொல்லியுள்ளார்கள்.

சாதாரண போட்டோவில் என் கண்ணாடியின் கலர் தெரிந்து கண்ணே தெரியாமல் போய்விடுகிறதே .. மூவி காமிராவில் எப்படியிருக்கும்? பொறுத்திருந்து தான்  பார்க்கணும்....*

Sunday, April 28, 2019

1041. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 28.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html*

ஏண்டா தருமி ... ஒன்றரை நிமிடம் வருவியா? அதுக்கு இத்தனை போஸ்ட் போடணுமா? ... இப்படி மனசு ஓரத்தில இருந்து ஒரு சத்தம் வருது. 

நான் அதுக்குப் பதில் சொல்லிட்டேன்.

 ”... அட   .. போடா.. இது என் ப்ளாக். என் சொந்தக் கதை ... சோகக் கதை எல்லாம் சொல்றதுக்காகத் தானே இத ஆரம்பிச்சேன். அப்புறம் என்ன?”. 

***    ***    ***.

சாந்த குமார் .. பழைய மாணவன்ர் .. முதல் படம் மெளனகுரு. படம் முடிந்து வெளியான பிறகு சில நாள் கழித்து வீட்டிற்கு என்னைப் பார்க்க வந்திருந்தான்ர். போகும் போது அப்படத்தில் வந்த ஒரு பாத்திரத்திற்கு என்னை அழைக்கலாமா என்று நினைத்தேன் என்று சொன்ன போது அழைத்திருக்கலாமே என்றேன். அடுத்த படத்திற்குக் கூப்பிடுகிறேன் என்று சொல்லிச் சென்றார். தனிப்பட்ட காரணங்களால் ஏழாண்டுகள் ஓடி விட்டன. 

சில மாதங்கள் முன் ஒரு போன் வந்தது. எடுத்ததும் “சாந்தகுமார் .. 93 ZOO 39” என்று கேட்டது. ’பெயர் சொன்னாலே தெரியுமே’ப்பா .. அதற்கு கல்லூரி எண் எல்லாம் எதற்கு?’ என்றேன். அந்த எண்ணைச் சொல்ல ஒரு ஆசை என்றதொரு பதில் வந்தது. அடுத்த படம் எடுக்கப் போகிறேன். இன்னும் இரு நாளில் பூசை. கூப்பிட நினைத்திருந்தேன். ஆனால் அவசரமாக தேதி குறிப்பிட்டாகி விட்டது, ஒரு ரோல் கொடுத்தால் செய்றீங்களா? என்ற கேள்வியும் வந்தது. சரி என்று சொன்னேன்.

சின்னாள் கழித்து ராஜா என்ற துணை இயக்குனர் சென்னை வர முடியுமா என்றார். சென்றேன். அவரைச் சந்தித்தேன். இயக்குனர் வெளியே சென்றிருப்பதாகக் கூறி எனது ரோல் என்னவென்று சொன்னார். நீங்களே சொல்லுங்களேன். போன பதிவில் என்னென்ன ரோல் .. அதற்கான வசனம் என்னவென்று சொல்லியிருந்தேனே .. அதில் எது எனக்கு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என் அனுமானம் சரி. அந்த நான்கில் ஒன்று எனக்குக் கிடைத்த வேடம். 

ராஜா எனக்கு டாக்டர் வேஷம் என்றார். நான் நம் படங்களில் டாக்டர்கள் வழக்கமாகப் பேசும் வசங்களைக் கூறினேன். அதெல்லாம் இல்லை. கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் ரோல் என்று சொல்லி சந்தோஷப்பட வைத்தார்.
எனக்கும் தெரியும். இந்த வயதில் பிறகென்ன “தாதா - 75” என்ற ரோலா எனக்குக் கொடுக்க முடியும்.சட்டைக்கெல்லாம் அளவெடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து சாந்தக்குமார் வந்து பேசிக்கொண்டிருந்தார். எங்கே .. எப்போது என்பதை பிறகு தெரியப்படுத்துவதாகக் கூறினார்கள்.

இயக்குனர் சாந்த குமார்சில நாள் கழித்து திரைபடக் குழுவின் மேனேஜர் ஷூட்டிங் பாலக்காடில் எனவும், அங்கு   வர வேண்டிய தேதிகளைக் கொடுத்தார். துணைக்கு ஒருவரை  அழைத்து வரலாமென்றார். நண்பன் ரவி உடன் வர ஏற்பாடுகளைச் செய்து கொண்டான். ரயிலுக்கு டிக்கட் வந்தது. அதோடு இன்னொரு நண்பரும் எங்களோடு சேர்வார் என்றார்கள். அவர் சாந்தகுமாரின் கல்லூரித் தோழர், கல்லூரிக் கலைக் குழுவின் உறுப்பினர். அவர் வந்ததும் பார்த்தால் ரவியும் அவரும் பக்கத்து பக்கத்து வீட்டில சில காலம் இருந்திருக்கிறார்கள். உலகமே சிறுத்துப் போனது போல் உணர்ந்தோம். ஒருவ்ருக்குத் தெரிந்தவர் மற்றவர்களுக்கும் தெரிந்தவர்களானோம். ஐந்து மணி நேரப் பயணம் அரட்டையிலேயே கழிந்தது.

இறங்கும் போது நல்ல மழை. கார் வந்து அழைத்துச் சென்றது. விடுதிக்குச் சென்றோம். அடுத்த நாள் காலை “ஸ்பாட்டு”க்குச் செல்ல வேண்டும் என்றனர். இளம் காலையில் அங்கே போனோம். ஒரு பழைய பள்ளி. அவர்கள் சொன்ன கதைக்கு முழுமையான பொருத்தமான இடம். எப்படி இப்படிப்பட்ட இடம் பற்றிய தகவல் கிடைத்து அதை ஒழுங்கு செய்வீர்கள் என்று கேட்டோம். அதற்கென்றே ஒரு குழு வேலை செய்யுமாம். அங்கு நடந்தது எல்லாமே ஆச்சரியமாகத்தானிருந்தது.  நல்ல ஒரு கனவுலகம் தான்!


பாலக்காடு  - இறங்கிய இடம்பாலக்காடு - பழைய கட்டிடம். ஏறிய இடம்.தங்கிய விடுதி
MNC என்றால் எல்லோருக்கும் தெரியும். எனக்கு இந்த இடத்தைப் பார்த்ததும் MIC - Multi Industrial Complex  என்று தோன்றியது. பல துறைக்காரர்கள் குழுமி ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். படம் எடுக்கும் இடத்தில் இருந்த அனுபவம் நிறைய வித்தியாசமாக, புதிதாக எனக்கு இருந்தது.. பரபரப்பாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். வகை வகையாக நிறைய வாகனங்கள். உள்ளே. ஒரு குழு துணிகளைத் துவைத்துப் போட்டு  காபி decoctionல் அதைத் தோய்த்து   வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தது. இன்னொரு குழு எல்லா மின்சார வேலகளையும் செய்து கொண்டிருந்தது. மின்சாரமும் அந்த வண்டியிலிருந்து எல்லா இடங்களுக்கும் மின்சார சப்ளை செய்து கொண்டிருந்தது. இன்னொரு குழு முழுமையாக பெரிய பெரிய லைட்களை வைத்து ஒழுங்குபடித்திக் கொண்டிருந்தனர்.  இன்னொரு வண்டி ஒரு தையலகமாக இருந்தது. costumes என்பதற்கு ஒரு தனி வண்டி. 


http://ithutamil.com/mounaguru-director-santhkumars-next-movie-mahamuni/

தனியாக இன்னொரு குழு உணவு தயாரிப்பில் இருந்தது. சாப்பிட்ட இரண்டு நாளும் நல்ல சாப்பாடு.

DOP - DIRECTOR OF PHOTOGRAPHY அருண் பத்மநாபன். இளம் வயதுக்காரர். முதல் முறையாக இப்படத்தின் DOP. ரொம்ப வித்தியாசமான ஆள் என்று கேள்விப்பட்டேன். நான் ஓரிரு சீன்களைப் பார்த்தேன். லைட்டிங் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஒரு சீனில் .. பட்டப் பகலில் .. ஒரு சீன்.  இருட்டில் இரு குண்டு பல்புகளிலிருந்து மட்டும் வெளிச்சம். அழகாக, வித்தியாசமாக இருந்தது.

இயக்குனரின் ஆசிரியர் என்று பலருக்கும் அறிமுகம் செய்யப்பட்டேன் - கதாநாயகனுக்கும் சேர்த்து. ஆகவே நல்ல மரியாதை கிடைத்தது. அட.. சாப்பிடப் போகும் இடத்திலும் என் மீது அத்தனை கரிசனம்.

BTS -Behind the shoot photographer என்று ஒருவருக்குத் தனி வேலை. அவர் படம் ஷூட்டிங் நடக்கும் போது அதன் பின்னால் வேறு படங்கள் எடுத்துத் தொகுப்பாராம். அந்த வேலை ஜார்ஜ் என்ற எனக்கு முன்பே நன்கு தெரிந்திருந்த எங்கள் கல்லூரி மாணவன். FBயில் அழகழகாக இயற்கைக் காட்சிகளை அவர் எடுத்த படங்கள் தொடர்ந்து வரும். அவரும், stills photographer ஆனந்த் என்பவரும் உலக்கைகள் மாதிரி லென்ஸ்கள் வைத்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் எடுத்த படங்கள் அடுத்த பதிவில் வரும்.


பாபி ஜார்ஜ் - BTS photographer
ANAND - STILLS PHOTOGRAPHER


19,20,21 என்று அந்த இடத்தில் அனுமதி கொடுத்திருந்தார்கள். அங்கு பொதுத் தேர்தல் 24ம் தேதி போலும். படம் எடுத்துக் கொண்டிருந்த பள்ளியில் தேர்தல் சாவடிகள் உண்டு. ஆகவே 21ம் தேதியே எல்லாம் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம். வேலைகள் ஜரூராக நடந்தன. அதனால் தானோ என்னவோ எங்களுக்கு சில மேக்கப் வேலைகள் முடிந்தும் அன்று எங்கள் சீன் எடுக்கப்படவில்லை. தொடர் காட்சிகள் விரைந்து போய்க்கொண்டிருந்தன.

இதில் எனக்கொரு தனி சோகம். சென்னையிலேயே என்னிடம் தலையில் லேசாகக் கருப்படிக்க வேண்டியதிருக்கும். சரியா என்று கேட்டிருந்தார்கள், சரி என்று சொல்லியிருந்தேன். எனக்கு மேக்கப் போடும்போது அதை நான் வேறு நினைவு படுத்தி விட்டேன். இருக்கிற நாலைந்து முடியில் சிறிது


VENKY
கருப்படித்தார்கள். வெள்ளை மீசையும் சிறிது கருப்பானது. கண்ணாடி காண்பித்தார்கள். யாரோ ஒருத்தரைப் பார்த்தது போல் இருந்தது. ஏனெனில் கடைசி முப்பது ஆண்டுகளாக வெள்ளை முடியோடு மட்டுமே என் முகத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போது கருப்படித்ததும் ரொம்ப வித்தியாசமாக எனக்குத் தோன்றியது. அதுவும் என் முகவும் மிக cruel ஆக எனக்குத் தெரிந்தது என்பது முதல் சோகம்.

நானே தான் ...!
இரண்டாவது சோகம் என் மூஞ்சி எனக்குப் பிடிக்காத ஒரு அரசியல்வாதி முகம் போல் தோன்றியது. முதல் சோகத்தை நண்பன் ரவியிடம் சொன்னேன்.

RAVI
முதலில் அவன் ஒரு பொய் சொன்னான். அப்படியெல்லாம் இல்லை. புதிதாகப் பார்ப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றலாம் என்றான். அதோடு பார்ப்பதற்கு விஜய் படத்தில் வரும் மகேந்திரன் மாதிரி இருக்கிறது என்று எடுத்து விட்டான். ஆனால் அவன் நல்ல பயல். அதனால் அவன் சொன்ன பொய்யில் அவனால் நீடித்திருக்க  முடியவில்லை. நாலைந்து நிமிடத்தில் என்னிடம் வந்து, ஆமாம் ..  cruel ஆகத் தானிருக்கு என்றான். இரண்டாவது சோகம் என்னன்னா ... அது நான் சொன்னேனே .. எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒரு அரசியல்வாதியின் மூஞ்சி மாதிரி இருந்தது. உங்களுக்கும் அந்த மூஞ்சி ராமதாஸ் முகம் மாதிரி தெரியுதா இல்லையான்னு சொல்லுங்க ...

தலையைக் கொடுத்தாச்சு... இனி என்ன பண்ண...? நான் பார்த்த முகம் இல்லாமல் வேறொரு முகத்தோடு இருக்கப் போகிறேன். அதை நானே பார்க்க படம் வெளிவரணும். அதுவரை பொறுமையோடு இருந்தாகணும். என்னமோ   
போங்க ...!

அட ... நல்ல மூஞ்சுக்கும் டச்சப் !


பகலில் மதுரை வெயிலுக்கு எந்த அளவிலும் சோடையாகவில்லை. கொளுத்தியது. மின்சாரம் கிடையாது அல்லது கொடுக்கப்படவில்லை. வகுப்பறைகளில் விசிறிகள் உண்டு.  ஆனால் அதைப் போட ஸ்விச் கிடையாது.  காற்று வரும் இடமாகப்பார்த்து அவ்வப்போது இடம் மாற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் இருந்த இரு நாளிலும் மாலையில் மந்தாரமும் மழையும் குளிரூட்டின.