Showing posts with label ”சொந்தக் கதை. Show all posts
Showing posts with label ”சொந்தக் கதை. Show all posts

Thursday, October 09, 2025

1357. மொழிபெயர்ப்பு விருது விழா


அருட்செல்வர் நா. மகாலிங்கம் காந்தியின் மீதுள்ள தனது பக்தியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம், காந்தி பிறந்த நாளைப் பல்லாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். காந்தியோடு அண்ணல் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளையும் இணைத்துப் பெரு விழாவாக ஆண்டாண்டு தோறும் கொண்டாடினார்.

 

      அருட்செல்வர் நா. மகாலிஙம்

               

                                               முனைவர்  ம. மாணிக்கம்

தந்தையார் மறைந்த பின் அந்தப் பணியை அதே போல் சிறப்பாக அவரது மகனார் முனைவர் மாணிக்கம் அவர்கள்  தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்த விழா தொடந்து 58 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு பெரும் விழா.

புதிதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிமன்றம் “அருசெல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்” மூலமாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுமின்றன. அதனோடு இணைந்து ஆண்டு தோறும் பல சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது கொடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விழா ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. காந்தி பிறந்த நாளான இரண்டாம் தேதி அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா” பெரிதும் விமரிசையாக நடந்தது.

இவ்விழாவில் இருவருக்கு முதல் விருதும்(தலைக்கு 1,00,000), இருவருக்கு இரண்டாம் பரிசுகள் இருவருக்கும்(50,000), நால்வருக்கு மூன்றாம் பரிசுகளும்(25,000) கொடுத்தார்கள்.

இவ்விழாவில் எனக்கு மூன்றாம் பரிசு(தான்!) கிடைத்தது. “பேரரசன் அசோகர்”  என்ற நான் மொழிபெயர்த்த நூலுக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எதிர் வெளியீடாக இந்த நூல் வெளிவந்தது. வெளியீட்டாளர் அனுஷ் அவர்களுக்கும், விருதளித்த மொழிபெயர்ப்பு மையத்திற்கும், அதனை நடாத்தி வரும் முனைவர் மாணிக்கம் அவர்களுக்கும்,  அதில் சிறப்பான பங்களித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

விழாவின் வரவேற்பாளர் முனைவர் ஒளவை ந. அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்ச்சித் துறை) அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. (அவரின் தந்தை முனைவர் ஒளவை நடராசன் அவர்களும், அவரது தாத்தா ஒளவை சு. துரைசாமி அவர்களும் என் கல்லூரிக் காலத்தில் (61-64) ஆண்டுகளில் என் தமிழ் ஆசிரியர்களாக மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தார்கள் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அருள் அவர்களிடமும் தெரிவித்தேன். எனக்கும் மகிழ்ச்சி. செய்தி கேட்ட அவருக்கும் பேருவகை.) “வாழ்க நீ எம்மான்” என்ற தலைப்பில் பேசிய திருமதி பாரதி பாஸ்கர், தான் மிகப் பெரும் மேடைப் பேச்சாளர் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதியாக்கினார்.

குடும்பத்தினர் அனைவரும் - முக்கியமாக, என் பேரக் குழந்தைகள் நால்வரும் - வந்திருந்தது எனக்குப் பேரின்பமாக இருந்தது.

விழாவிற்குப் போனோம்; விருது வாங்கினோம்; மகிழ்ச்சியைக் கொண்டாட பெயரன்கள் விருந்துண்ண அழைத்துச் சென்றனர்.

 

 






















 


Wednesday, January 03, 2024

1269. வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ...

வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ... 

 

கடந்த சில மாதங்களாகவே இந்த மூட் நன்றாக வந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட்டது. பற்றாததற்கு ஏற்றாற்போல் பேரா. முரளியின் காணொளி ஒன்றையும்  பார்த்தாகி விட்டது.


 அந்தக் காலத்தில் ஆங்கில தினசரிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.இப்போதெல்லாம் தமிழ் நாளிதழுக்குக் கொடுக்கும் நேரத்தில் கால்வாசி கூட ஆங்கில நாளிதழ்களுக்குக் கொடுப்பதில்லை. ஆங்கில நாளிதழை நிறுத்தி விடலாமாவெனவும் தோன்றுகிறது.

செய்திகளைப் படிப்பதில் எந்த வித அக்கறையும் எடுக்க முடிவதில்லை. உக்ரைன்.. பாலஸ்தீன் ... எல்லாம் சுடச்சுட படித்து சோர்ந்து போயாச்சு. அயல்நாட்டு விவகாரம்தான் இப்படி இருக்கிறதென்றால் உள்நாட்டு விவகாரமும் அலுத்துப் போச்சு. அடுத்தது மோடிதான் என்ற பின் எந்த மனுசனுக்குத் தான் அலுப்பு வராமல் போகும்?

மாநிலத்திற்குள், அடுத்து மகனை அரியணையில் அமர வைப்பதற்காகவே இந்த முறை அதிக ஊழல் இல்லாத அரசு அமையும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் போச்சு. வேற கட்சி ஏதுமிருக்கான்னு தேடின்ன போது பல காமெடியன்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அட எடப்பாடி முதலமைச்சராக ஆகணும்னு ஆசைப்படுறாரா ...சரி .. அவரு பக்கமும் ஆளுக நிக்கிறாங்களேன்னு நினச்சி உட்டுவிடலாம். அது போதாதுன்னு சசிகலா சித்தி, டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். என்றொரு வரிசைன்னா ... புதுவரிசை இன்னொண்ணு ஆரம்பிச்சிருக்கு. அதிலேயும் எனக்கு சரத்குமார் சாரை ரொம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு. ஏன்னா அவருக்கு அந்தப் பதவி மேல ஒண்ணும் ஆசையில்லையாம். ஆனா அவரு wife  ரொம்ப ஆசைப்படுறாங்களாம். அதோடில்லாமல் அவங்க மாமியாரும், ‘மாப்பிள்ள .. நீங்க இன்னும் முதலமைச்சராக ஆகலையா’ன்னு கேட்டு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம். இது பத்தாதுன்னு புதுசா இன்னொரு ஹீரோயின் வந்திருக்காங்க. புருசன் செத்த நாளை ‘இந்த நல்ல நாளில் ...’ அப்டின்னு பேசுறாங்க. எல்லோரும் வாங்க ... நம்ம வீடு புழங்கிரும் ...

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் ஏதும் இல்லாவிட்டாலும் வயது ஒரு அச்சத்தைக் கொடுக்குது. என்ன ... வயசானவங்க எல்லோரும் சிக்கல் இல்லாம போய்ச் சேரணுமேன்னு ஒரு கவலையோடு இருப்பாங்க. அத லிஸ்ட்லயும் சேர்ந்தாச்சு.

வாழ்க்கையைப் பிரிச்சிப் பார்த்தா அர்த்தமே இல்லையோன்னு தோணுது. வெங்காயம் .. பிரிச்சிப் பார்த்தா ஒண்ணுமேயில்லை. (இதோ ..  இன்று .. டிசம்பர் 31. இரவு 12 மணி. மக்கள் வேட்டெல்லாம் போடுறாங்க. சத்தம் காதில் விழுது. கமல்ஹாசன் பாட்டு ஒண்ணும் காதில் இதுவ்ரை விழவில்லை.) யோசிச்சி பாருங்க. நேத்து டிசம்பர் 31. இன்று ஜனவரி 1. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாற்றம்? ஒரு மண்ணுமில்லை. ஆனா ஏன் ஆடுறோம்... பாடுறோம். எதுக்கு? (போன வருஷம் வேட்டுப் போட்டு, பாட்டு பாடினோம்ல ... அதைத் திருப்பிச் செய்யணும்ல!)

மேலே போட்ட காணொளியைப் பாருங்க. பெரிய தத்துவஞானியாம். இதைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனா அத கேக்குறதுக்கு முந்தியே இதையே அடிக்கடி நினச்சிருக்கேன். ஏதோ எப்படியோ (??) வந்து பிள்ளையா பிறந்தோம் ... வளர்ந்தோம் .. யாரும் வளர்க்காமலேயே – அப்பா, அம்மா சோறு போட்டு வளர்க்கிறதைச் சொல்லலை – நமக்குன்னு ஒரு பண்பியல் – character - நம்மோடு வளர்ந்தது. நாம் நல்லவானா கெட்டவனா வளர்ந்ததற்கு வேறு யாரும் பொறுப்பில்லை... நாம மட்டும் தான் பொறுப்பு. நல்லவனாகவே இருந்து நல்லாவே செத்துப் போனாலும் ... போனபிறகு .. என்னதான் நமக்கு நடக்குது? அட கொஞ்சம் பேரு புகழ் அப்டின்னு ஏதோ ஒண்ணை சேர்த்தாலும்... செத்த பிறகெல்லாம் அதனால் யாருக்குத் தான் லாபம்? ஒண்ணும் புரியலைங்க ... அர்த்தங்கெட்ட வாழ்க்கைன்னு சொல்லுவாங்களே ... அதுவா இது?

உரிக்க உரிக்க வெங்காயம் ... ஒண்ணுமேயில்லாம தான போகும்! இல்ல ...? பற்றின்றி போகணுமோ? அப்படி சிலர் சொல்றாங்க.கட்டுப்பட்ட ஒரு சமூகத்தில் அப்படியும் இருக்க முடியாது.

WHAT DO I MISS? OR, DO WE ALL MISS SOMETHING?


Sunday, December 31, 2023

1268. ஒரு பொன்மாலைப் பொழுது ...

ஓராண்டு ஓடிப் போனதா .. வயதொன்றும் கூடியதா ..? நட்பு ஒன்றிற்கு அதைச் “சீராக” செய்து முடிக்க ஆசை. வரச் சொன்னான்; சென்றேன்.

கொண்டாட வேண்டுமென்றார்கள். கொண்டாடி விடுவோம் என்றான். வரச் சொன்னான் .. ஒன்று வந்தது; இனி அதிகமாக வேண்டாமென்று நினைத்திருந்த ஒரு புத்தாண்டு உறுதியை அன்று மட்டும் கொஞ்சம் ஒதுக்கி வைக்க நினைத்தேன். ஏனெனில் வந்தது அப்படி ஒரு சிறப்பானதாக இருந்தது. HANNESSY XXO.



பேசிகொண்டிருந்தோம். வெளியே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. நண்பனிடம் அதைப் பற்றிக் கேட்டேன், BMW - TWO DOOR M2 என்றான். collectors' choice மாதிரியான வகை அதன் ஜாதகம் என்றான். அதன் சரித்திரம் சொன்னான். ஆடிப் போகுமளவிற்குக் கோடிக் கணக்கியல் விலை சொன்னான். போவோமா என்றான். அதற்குத்தானே கேள்வியையே முன் வைத்தேன் என்றேன். ஆனால் மெல்ல போவோம் என்றேன். ஏனெனில் அது எத்தனை வேகமாகப் போகும் என்று சொல்லியிருந்தான்.
உட்கார்ந்தோம். மெல்லதான் போனோம்; ஏனெனில் வேகத்தடையில் இடிக்குமாம். மெல்ல சென்று, தடை கடந்து பெரிய ரோட்டுக்கு வந்தோம். மெல்லவே ஊர்ந்தோம். மூன்று செகண்ட் எண்ணி முடித்து speedometer-யைப் பார்க்கச் சொன்னான். மூன்று எண்ண ஆரம்பிக்கும்போதே கார் லேசாக மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது போலிருந்தது. மூன்று முடித்துப் பார்த்தேன். நூறில் பறந்தது; அப்பனே! மெல்லப் போ என்றேன். சரிந்தான் மெல்ல. கார் இப்போது மிதந்தது. சிறிது தூரம் மிதந்து, மீண்டும் வீடு செல்ல வளைந்து திரும்பினோம். இன்னொரு 100 கி.மீ. என்று சொல்லி அழுத்த, மூன்று விநாடியில் நூறைத் தொட்டு, பின் மிதந்தது.





மூன்று வினாடியில் நூறைத்தொட்டு சில நிமிடங்களே சென்றாலும் ஏறத்தாழ அந்தக் காலத்தில் சுஜாதா திருச்சி சாலையில் ஒரு நண்பரின் race பைக்கில் பறந்த அனுபவம் பற்றியெழுதியதை நான் வாசித்தது நினைவுக்கு வந்தது. (அது முழுவதும் நினைவில் இருந்திருந்தால் இங்கே பேசாமல் அதையே சேர்த்திருப்பேன்.) எனக்கெதற்கு இந்த வீண்வேலை.
பின்பு மீன்,ஆடு என்று மேய்ந்து விட்டு, குடும்பமாக உட்கார்ந்து கடந்த 40 - 45 ஆண்டனுபங்களைப் பிள்ளைகளோடு மேய்ந்து நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினோம்.
All reactions:
Nattarasan Nattarasan, Vaigai Alagar and 11 others



Friday, December 08, 2023

1265. இழுபடும் ஜீன்ஸ் ..........



jeans பற்றி ஒரு நண்பன் சொன்னதினால இதுக்கு முந்திய பதிவை எழுதினேனா, அதைப் படித்த கார்த்திக் பிரபா   "rebel" அப்டின்னு ஒரு வார்த்தையைப் போட்டார். jeans + rebel =?  அப்டின்னு ஒரு கேள்வி மனதில் எழுந்தது. அதுக்கு இன்னொரு கொசுவத்தி ...

வாழ்க்கையில் நடந்தத எழுதலாம்னு ஆரம்பிச்சாலே முதல் வரி " பத்து முப்பது வருஷத்துக்கு முந்தின்னு ..." ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது. 

இதுவும் அப்படித்தான் பத்து.. முப்பது வருஷத்துக்கு முந்தி நடந்தது. நம்ம ஜீன்ஸ் போட்டுட்டு சுத்துறோமா ... அது அவ்வளவு ஈசியா கிழியாது. கிழிய ஆரம்பிப்பதே முழங்கால் கிட்ட தான் ஆரம்பிக்கும்,. கிழியாது. அந்த ஏரியாவுல நூல் விட ஆரம்பிக்கும். அப்ப்டி ஒரு ஆசைப்பட்ட ஜீன்ஸுக்கு ஆச்சுது. அப்ப்டியே தூரப் போட மனசு வரலை. இப்போவெல்லாம் கிழிஞ்ச ஜீன்ஸ் பாஷனாக ஆகிப் போச்சு. நான் சொல்ற காலத்தில அப்படி ஒண்ணும் இல்லை. அப்படியே அதோடு கல்லூரிக்கும் போனோமா ... அங்க இருந்து ஒரு நாள் சாமிக்கடைக்கு டீ குடிக்க நாலைந்து பேர் போனோம். அதில் ஒரு த்ம்பி .. என் மாணவனாக இருந்து, இப்போது சேர்ந்து பணி புரிந்து கொண்டிருந்தான். அவன் என் ஜூன்சைப் பார்த்து, "என்ன சார்... கிழிஞ்சி போனத போட்டுட்டு வந்திட்டீங்க?" அப்டின்னான். அப்போ பக்கத்தில் இருந்த தமிழ்ப் பேராசிரியர் பிரபாகரன், "அதெல்லாம் signs of a rebel" அப்டின்னான். (பேரா. பிரபாவும் அப்படி ஒரு ரிபல் தான்!) கேள்வி கேட்ட தம்பிக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. 

இன்று அந்தக் கேள்வியைக் கேட்டா - கேக்க மாட்டங்க, கேட்டால் - this is today's fashion அப்டின்னு ஓங்கிச் சொல்லியிருப்பாங்க.

இதுனால ... இன்னைக்கி வர்ர fashionக்கு அன்னைக்கே நாங்க முகவரி எழுதிட்டோம்ல ...

***

ஜீன்ஸோடு தொடர்புடைய இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. (இந்தக் கிழடுகளோடு இதே தலைவலி தான். ஒண்ணைப் பிடிச்சா இன்னொண்ணைச் சொல்லிக் கிட்டு ஒரு விஷயத்தை இழுத்துக்கிட்டே போகுங்க ...) 

1997. காலம் போன காலத்தில் புது வீடு கட்டிட்டு புதுசா ஒரு இடத்துக்குப் போனோம். விளாங்குடி. மதுரையின் மேற்கு விளிம்பாகவும், வாசலாகவும் இருக்கும் இடம். இன்று வரை அப்படியே ஒரு கிராமியுச் சாயல்  இருக்கும்.. அங்கே போனப்போ ஒரு ஜீன்ஸ் பாண்ட் பழசாகி, வழக்கம் போல் முழங்கால்
பக்கம் நூல் பிரிய ஆரம்பித்தது. பழகுனதை விடுற மனசு வருமா? என்ன செய்யலாமென யோசிச்சோமா? ஒரு ஐடியா க்ளிக் ஆச்சு.

அப்போவெல்லாம் அரை ட்ரவுசர் அங்கங்கே போட ஆரம்பிச்சிருந்தாங்க. அதுவும் அமெரிக்கா காரங்க ஆரம்பிச்சது தான். நம்மூர் ஆளுக அதெல்லாம் போடுறதில்லை. எல்லோரும் கைலி தான். நமக்கு வந்த ஐடியாவில அந்த ஜீன்ஸ் பாண்டை நூல் பிரியற இடத்தில அப்படியே வெட்டி எடுத்தேன். போட்டுப் பார்த்தேன். திவ்யமாக இருந்தது; பிடிச்சிப் போனது. அதுக்குப் பிறகு கைலி பக்கமே தலை வைக்கலை.

கிராமியப் புரம் என்று சொன்னேனா ... அங்க இப்படி அரைக்கால் சட்டை போட்டுக்கிட்டு, தலையில் தொப்பி வச்சிக்கிட்டு வண்டியில (அப்போ ஹெல்மட் காலம் இல்லை) அங்க இங்க போற ஆளை நம்மூர் ஆளுக ஏற இறங்கப் பார்த்தாங்க. பசங்கல்லாம் நமக்கு "ட்ரவுசர் பாண்டி"ன்னு பெயர் வச்சிருந்தாங்க. 

நாமெல்லாம் அதுக்கெல்லாம் கவலைப்படுகிற ஆளுகளா ...!

Thursday, June 01, 2023

Sunday, May 14, 2023

1220. இது ஆறாம் திணையோ ...?

                                     

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித்திணையில் வருமாமே? அப்படியென்றால் ஒரே ஊரில் நகரமும், கிராமியமும் இணைந்தால் அதன் பெயர் என்ன? ஏழ்மையும், வளமையும் அருகருகே அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? நாடும் காடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? ஆளே இல்லாத இடத்தில் பெரிய கடைகள் நடுநடுவே இருந்தால் அதன் பெயர்  என்ன? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நாஞ்சில் நாட்டுக்கு ஒரு மருத்துவப் பயணம். தமிழ் நாடு- கேரளம் இரண்டும் இணையும் இடத்தில் – இப்படி சொல்லணுமா அல்லது இரண்டும் பிரியும் இடத்தில் – ஒரு சிற்றூர். மாலை நேரம். சற்றே நடக்கலாமென்று நேற்று ஒரு சாலையில் சென்றேன். சின்ன குறுகலான சாலை; ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. ஆனால் எதிரும் புதிருமாக நிறைய வண்டிகள். அதனால் இன்று(13.5.23) சாலையை மாற்றி நடக்க ஆரம்பித்தேன். நீண்ட நெடும் பாதை. சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்த சாலை.


பல வியப்புகள் ...

·         சாலையில் இருமருங்கிலும் தொடர்ந்து வீடுகள் இருந்தன. இருந்தும் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. இரு சக்கர வண்டிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. இப்போது தான் வாசித்த ஒரு செய்தி உண்மையெனத் தெரிந்தது. சில பெரிய வீடுகள் ஆளில்லாத வீடுகள் மாதிரி இருந்தன. இப்படிக் காலி வீடுகள் நிறைய கேரளாவில் இருப்பதாகவும் வெளிநாட்டுக்குக் குடியேறிவிட்டார்கள் எனவும் சமீபத்தில்  வாசித்திருந்தேன். வீடுகளைப் பார்த்த போது அச்செய்திதான் நினைவுக்கு வந்தது. இதில் ஆச்சரியப்பட வைத்த ஒன்றும் இருந்தது. பெரிய வீடுகள் .. அலங்கார வீடுகள். ஆனால் அடுத்த வீடு ஒரு ஓட்டைக் குடிசையாக இருந்தது. சாலைகள் மேடும் பள்ளமுமாக இருப்பது போல் மக்களும் ஏழ்மையும் வளமையும் மாறி மாறி இருந்தார்கள்.  இருண்ட ஒரு வீட்டின் முன் உட்கார்ந்திருந்த ஒரு வயதான் அம்மையார் என்னைக் கவர்ந்தார். படம் எடுக்க உத்தரவு வாங்கிப் படம் எடுத்தேன். மொழியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டோம்.

                                                                  



                                                                              



                                                                                                         


·         சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது பார்த்த ஒரு அதிசயம்; இரு மருங்கிலும் வீடுகள். அதிகமாக மரங்கள் சூழ்ந்த வீடுகள். மாமரங்கள் காய்த்துத் தொங்கின. பலாமரங்கள் கைக்கெட்டும் அளவில் காய்த்துத் தொங்கின. சிறு வயதில் எங்காவது கண்ணில் படும் மாமரங்களில் அல்லது புளியமரங்களில் கல்லெறிந்து விரட்டுப்பட்ட நினைவு வந்தது. இங்கே யாரும் கல்லை விட்டு கூட அல்ல, எட்டியும் மாங்காயைப் பறிக்க மாட்டார்கள் போலும். நான் படமெடுத்த போது காய் பிடுங்கும் ஆவலைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.




·         வீடுகள் நிறைய உள்ள தெரு என்றால் அங்கு வீடுகளை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். ஆனால் வீடுகளின் நடுவே ஒரு காடும் இருக்கிறதே என்று வியப்போடு பார்த்தேன். அடுக்கடுக்காக நீள் வரிசையில் ஒரு பெரும் காட்டையும் அந்தத் தெருவில் பார்த்தேன். அடுத்த ஆச்சரியமாக அது இருந்தது.                                                                                     

                                                          


    



·         மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. ஆட்கள் அதிகமில்லாத வீடுகள் இருந்தன. ஆனால் அந்தத் தெருவில் அங்கங்கே பல கடைகள். ஒரு ரெடிமேட்  கடை; இன்னொரு பெரிய பழக்கடை. கவரிங் கோல் கடையும் கூட ஒன்று; ஓர் இருசக்கர பணிமனை. யார் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்ற கேள்வி மனதில் எழுந்தது.


                                                                             

·         இவ்வூரின் ஊராட்சி அலுவலகமும், நூலகமும் அதே தெருவில் பார்த்தேன். இது அவ்வூரின் முக்கிய தெருவாக இருக்குமோ?