*
அடுத்த 2-ம் பதிவு ...
WHY I AM NOT A CHRISTIAN
and other essays on religion and related subjects
First published in 1957
*
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் - 1872 - 1970
* போர்களுக்கும் காலனியாதிக்கத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்தவர்.
* ஹிட்லருக்கு எதிரான கருத்துப் போராட்டத்தை நடத்தியவர்.
* அமெரிக்காவின் வியட்நாம் யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்;
* அணுகுண்டு அழிப்புக்கும் குரலெழுப்பியவர்.
மனிதப் பண்பாடுகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் அவர் எழுதிய இலக்கியத்திற்காக 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
*
Richard Dawkins நூலில் பார்த்தது போலவே இந்நூலிலும் கிறித்துவத்திற்கு என்று சொல்லப்படும் பல கருத்துக்கள் ஆப்ரஹாமிய மதங்களுக்கும் பொதுவானது என்றே கொள்ள வேண்டும்.
CHAPTER I
WHY I AM NOT A CHRISTIAN
மக்கள் பலரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதற்கான காரணம் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு அந்த நம்பிக்கை கற்றுக் கொடுக்கப்படுகிறது.
‘வலது கன்னத்தில் அடித்தால் அடுத்த கன்னத்தைக் காண்பி’ - இது ஒன்றும் புதியதல்ல.கிறிஸ்துவிற்கு ஐந்து, ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தரும், Lao-Tze-வும் சொன்னவைகளே. (20)
’உன் சொத்துகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விடு’ - நல்ல கோட்பாடு; ஆனால் வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத ஒன்று. (21)
கிறிஸ்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் எனக்கொரு ஐயம். அவர் நரகத்தை நம்பினார். ஆனால் மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு கால வரையற்ற தண்டனையை நம்ப முடியாது.
அவருடைய போதனைகளுக்கு எதிராகச் செல்லும் எவருக்கும் இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இருக்கிறது. (22)
பாவங்களுக்கான சம்பளம் நரகம் என்பது கொடூரத்தின் உச்சம். கிறிஸ்துவின் இந்தக் கோட்பாடு உலகத்தின் வரலாற்றில் நடந்த பல வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது.
அத்தி மரத்தை நோக்கிப் பசியோடு வந்த ஏசு அங்கே வெறும் இலைகளே இருப்பதைக் காண்கிறார். கோபமுற்று ‘இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்; உன் கனியை இனி யாரும் உண்ணவே கூடாது’ என்று சாபமளிக்கிறார். பின்னால் வந்த சீடர்கள் அம்மரம் அவரது சாபத்தால் பட்டுப் போனதை அவரிடம் சொல்கிறார்கள். (மத் : 21; 19; மாற் : 11 : 14) விநோதமான கதை இது. தவறான கால கட்டத்தில் கனி கொடுக்கவில்லையென்று மரத்தைக் கோவிப்பதா?
அறிவு சார்ந்த விஷயத்திலோ, பண்பாட்டு விஷயத்திலோ வரலாற்றில் வரும் பலரோடு சேர்த்து வைத்துப் பார்க்கும்போது கிறித்துவிற்கு உயர்ந்த இடம் கொடுக்க முடியவில்லை; புத்தரையும் சாக்ரட்டீஸையும் இதைவிட உயர்ந்த இடத்தில் வைக்கலாம். (24)

நம்பிக்கையோடு இருப்பவர்கள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; ஏனெனில் அவர்களது நம்பிக்கைகள் எல்லாமே உணர்ச்சி வசப்பட்டவை. (emotional)
ஆசிரியர் Samuel Butler எழுதிய Erewhon Revisited என்ற அங்கத நாவலின் கதையைக் கூறுகிறார். நல்ல கதை. குட்டிக் கதையாக, இங்கே இருப்பதை வாசித்துப் பாருங்கள். நமது நம்பிக்கைகளின் பிறப்பிடத்தின் ‘ரகசியம்’ புரியும்!
கிறித்துவ நம்பிக்கைகள் இல்லாதவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் மத நம்பிக்கையுடையவர்கள்தான் அனேகமாக அப்படிப்பட்ட கெட்டவர்களாக இருப்பார்களென நினைக்கிறேன்.
உங்களைச் சுற்றிப் பார்த்தால் உலகத்தில் ஒவ்வொரு மனித உணர்வுகளின் முன்னேற்றத்திற்கும், குற்றத்தடைச் சட்டம் ஒவ்வொன்றின் முன்னேற்றத்திற்கும், நமக்குள் நடக்கும் யுத்தங்களைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், நிறவெறிகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், அடிமைத்தனத்தை ஒழிக்க எடுக்கப் படும் செயல்களுக்கும், பண்பாட்டு முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கும் கிறித்துவ மதம் எதிர்ப்பாகவே இருந்து வந்துள்ளது. கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்பொதும் எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன்.
மதங்களின் முதல் முக்கியமான அடிப்படையே அச்சம் தான். புரியாதவைகளின் மேலுள்ள அச்சம் பாதியென்றால், அடுத்த பாதி நம் ‘பெரிய அண்ணன்’ ஒருவர் நமக்குத் தோள் கொடுக்க இருக்கிறார் என்ற நினைப்பும் ஒரு காரணமாயுள்ளது. (25)

CHAPTER II
HAS RELIGION MADE USEFUL CONTRIBUTIONS TO CIVILIZATIONS?
சமயங்களைப் பற்றிய என் கருத்துக்கள் Lucretius என்ற ரோமானிய தத்துவ ஞானியின் கருத்தோடு ஒன்றிப் போகிறது. சமயங்கள் பயத்தின் அடிப்படையில் பிறந்து மனித குலத்திற்கு சொல்ல முடியாத மிகுந்த சோகங்களைத் தந்துள்ளன. ஆனாலும் மனித நாகரீகத்திற்கு அவைகள் பங்களித்திருக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. (27)
கிறித்துவம் பெண்களின் சமூக நிலையை மேலேற்றியதாகக் கூறுவதுண்டு; ஆனால் இது வரலாற்றை மிகவும் திரிக்கும் செயலாகும். (29)
ஏறத்தாழ ஒவ்வொரு கிறித்துவனும் சிறு வயதில் பாலியல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட தடைகளால் முதிய வயதில் மனக் கோளாறுகளோடு இருப்பதுண்டு. பாலியலைப் பற்றிய செயற்கையான கருத்துக்கள் மனித மனத்தில் கடுமை, அச்சம், மடத்தனம் போன்றவைகளை முதிய வயதில் ஏற்படுத்துகின்றன. (30)
ஒரு மனிதன் என்ன தவறு செய்வான் என்பது கடவுளுக்கு முன்பே தெரியுமென்றால், அப்படி ஒருவனைப் படைத்ததற்கும், அந்த மனிதன் செய்யும் எல்லா தவறுகளுக்கும் கடவுள் தானே பொறுப்பு.
உலகத்தில் மனிதனுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே அவனை தூய்மைப்படுத்துவதற்காக; ஆகவே துன்பங்கள் நல்லதே என்பது ஒரு கிறித்துவ விவாதம். ஆனால் இது ஒரு கொடுமையை அறிவுக்குப் பொருத்தமாக்கும் (rationalization of sadism) முயற்சியேயொழிய வேறில்லை.
சமயங்களுக்கு எதிராக இரு வாதங்கள் உண்டு: ஒன்று அறிவு சார்ந்தது; மற்றொன்று பண்பாடு சார்ந்தது. அறிவு சார்ந்த எதிர்ப்பில் சமயங்கள் உண்மையென்று சொல்ல சான்றுகள் ஏதும் இல்லை. பண்பாடு சார்ந்து எழும் விவாதத்தில், இப்போதிருக்கும் மனிதனை விட மிகவும் கொடூரமாக மனிதக் கூட்டம் இருந்த போது சமயங்கள் ஆரம்பித்தன. அப்போதிருந்த மனிதத் தன்மையற்றவைகளையும், இப்போதைய மனசாட்சிக்கு எதிரானவைகளையும் சமயங்கள் தொகுத்துக் காத்து வருகின்றன. (31)
மெக்ஸிகோவிலும்,. பெருவிலும் ஸ்பானியர்கள் செவ்விந்தியர்களின் இளம் கைக்குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (கிறித்துவத்திற்குள் கொண்டு வருதல்) கொடுத்து, உடனே அந்தக் குழந்தைகளைத் தரையிலடித்துக் கொன்று விடுவார்கள். அவர்கள் கொல்லும் குழந்தைகளுக்கு நேரே மோட்சம் ! அப்போதிருந்த அடிப்படை கிறித்துவனுக்கு அது தவறாகப் படவில்லை. ஆனால் இன்றைய நிலையில் எல்லோருக்கும் இது தவறு.
கிறித்துவத்தில் ஆன்மாவையும் உடலையும் பிரித்துப் பார்க்கும் முறையால் மிகவும் மோசமான விளைவுகள் நிகழ்ந்தன. (34)
யூதர்கள் தங்களின் நேர்மைத்தனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைகளும், தங்கள் யூதக் கடவுளே சரியான கடவுள் என்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகின்றன. கிறித்துவ மதம் பரவிய காலந்தொட்டு மற்ற சமயங்கள் உண்மையல்ல என்ற சமய அடிப்படைவாதம் உலகந்தொட்டு வளர ஆரம்பித்தன.
யூதர்களும் அதிலும் முக்கியமாக தூதர்களும் தங்கள் நேர்மைத்தனத்தின் மீதான கடும் பிடிப்போடும், தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தாங்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள்.
நம் உலகம் உருவானது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்றால் இப்போது யாரும் நம்புவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இதை நம்பாதது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. (35)
FREE-WILL - சுயாதீனம்:
இயற்கை நியதிகளின் மீதான கிறித்துவர்களின் எண்ணங்கள் நிச்சயமற்றதாகவும், பெரிதும் உறுதியற்றதாகவும் இருந்தன. சுயாதீனம் (free-will) என்பதையே பெரும்பாலான கிறித்துவர்கள் நம்பினார்கள். இந்த சுயாதீனத்தால் மனித குலம் இயற்கை நியதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. (36)
சுயாதீனத்தைப் பற்றிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே நிற்கின்றன. யாரும் நடப்பியல் வாழ்க்கையில் அதை நம்புவதாக இல்லை. (37)
கார் ஒன்று கோளாறாகி நின்றால் அதை ஒரு பாவமாகப் பார்ப்பதில்லை; அதில் என்ன தகராறு என்று பார்ப்பதே இயல்பு. அதை விட்டு விட்டு ’இந்த கார் பாவம் செய்து விட்டது’ என்று கூறுவதில்லை. அதைப் போலவே ஒரு மனிதனையும் பார்க்க வேண்டும் என்பது சமயங்களுக்கு எதிரான ஒரு கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. (38)
ஆபிரஹாமிய மதத் தூதுவர்கள் சொல்வதெல்லாம் உண்மை; ஜெஹோவாவின் எண்ணமும் அதுவே என்று சொல்வதுண்டு. (’இது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நல்லது என்று தெரியும்’. நடவடிக்கை: 25:28) இன்னொரு தூதுவர் வந்ததும் முந்திய தூதர்களின் வார்த்தைகளை விட என் வார்த்தைகளே சரியானவை என்று சொல்வதும் கண்கூடு. (40)
கிறித்துவத்தில் அறிவு பாவமாக முந்திய காலத்தில் பார்த்தைப் போல் இப்போது பார்க்கப்படுவதில்லை. ஆனாலும் அது பாவமில்லாவிட்டாலும் அது ஆபத்தானது; ஏனெனில், அறிவு ஒருவனைப் புத்திசாலியாக்குகிறது; அதன் மூலம் அவன் கிறித்துவக் கொள்கைகளை கேள்வி கேட்கலாம்.(41)
சமயங்கள் பகுத்தறிவான படிப்பினையைக் குழந்தைகளுக்கு மறுக்கின்றன; சமயங்கள் பழைய பழக்க வழக்கங்களை, பாவம் தொடர்பான கருத்துக்களை, தண்டனைகளைவிடாது பிடித்துக் கொண்டு, புதிய, அறிவியலோடு தொடர்புள்ளவைகளைத் தெரிந்து கொள்ள விடாது தடுக்கின்றன.
மனித குலம் ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் நுழை வாயிலில் நிற்கிறது. ஆனால் அதில் நுழைவதற்கு முன் ஒரு பெரிய ராட்சத மிருகத்தைக் கொல்ல வேண்டியதுள்ளது. அந்தக் கொடிய மிருகம் நமது சமயங்களே.