Sunday, December 23, 2018

1014. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...10 இணைச் சட்டம்





கிறித்துமஸ் விழா சமயத்தில் இப்படி ஒரு தலைப்பில் பைபிளைப் பற்றி ஒரு  கட்டுரையா என்று எண்ணாதீர்கள்.

வெட்டு, குத்து, கொலை, கொள்ளை ....

இதை முன்பே நானே சொல்லியிருப்பேன் என்று நினைக்கின்றேன் - யூத மதத்தினருக்கு பழைய ஏற்பாடு வேத நூல் என்றும், கிறித்துவர்களுக்கு புதிய ஏற்பாடு வேத நூல் என்றும், இஸ்லாமியருக்கு இறுதி வேதமாக குரான் உள்ளது என்றும் அந்தந்த மதக்காரர்கள் சொல்வதுண்டு. ஆனால் கிறித்துவர்கள் பழைய ஏற்பாட்டைப் புறந்துள்ளுவதில்லை. இஸ்லாமியர் பழைய ஏற்பாட்டுக் கதைகளை அப்படியே தங்கள் குரானில் காப்பி & பேஸ்ட் செய்துள்ளனர்

என்னங்க ...  உங்கள் வேத நூலான பழைய ஏற்பாட்டில் ஆபிரஹாம் கதை, ஜோசப் கதை போன்ற மோசமான இதிகாசக் கதைகளும், இன்னும் பல கிளு கிளு கதைகளும் இருக்கிறதே என்றால் அதற்கான சரியான பதில்களை எனக்கு இதுவரை யாரும் தந்ததில்லை.   பழைய ஏற்பாட்டைஅப்படியேஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று மட்டும் சொல்வார்கள். அதன் பொருள்  எனக்குப் புரிவதில்லை. ஏனெனில் கிறித்துவர்களுக்கு இதுவும் ஒரு பைபிள் தான். ஆனால் அதைப் பற்றவும் மாட்டார்கள்; கேள்வி கேட்டால் புது ஏற்பாட்டை எடுத்து வருவார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டை விடவும் மாட்டார்கள். அது ஒரு பெரும் நகை முரண்.

இஸ்லாமியர்கள் தங்கள் பல கொள்கைகளை அப்படியே பழைய ஏற்பாட்டில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்துள்ளனர். இந்தக் கட்டுரையில் அதனைத் துல்லியமாகப் பார்க்கலாம்.

என்னைப் பொறுத்தவரை பழைய ஏற்பாடு இன்னொரு இந்துப் புராணக் கதைகள் போன்ற ஒரு தொகுதி.

கருப்பெழுத்துகளில் பழைய ஏற்பாட்டின் வசனங்களும், அதை ஒட்டி / வெட்டி சிகப்பு எழுத்துக்களில் என் கருத்தும்  இக்கட்டுரையில் காணலாம்.


4. இணைச்சட்டம்


முன்னுரையில்: ... மோசே ... வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.
--  பழைய ஏற்பாட்டை மோசஸ் / மோசே எழுதியதாகச் சொல்வர். ஆனால் அதற்கான எவ்வித சான்றும் கிடையாது.
மோசே இஸ்ரவேலர்களின் தலைவர் - அதாவது ஆதாம்  .. அவரை அடுத்து ஆபிரஹாம் .. அதற்கடுத்து மோசஸ் என்பார்கள். அவர் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டு கடவுளின் கட்டளைகளை மக்களுக்கு, அதாவது இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்ததாகச் சொல்வார்கள். பின் இஸ்ரயேலருக்குக் கொடுத்ததை நானும் நீங்களும் ஏன் பின்பற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டாலும் கிறித்துவர்களிடமிருந்து சரியான பதிலேதும் கிடைக்காது. இன்று எழுதப்பட்ட முன்னுரையிலும் இது இஸ்ரயேலரின் வாழ்க்கைக்கான சட்டங்கள் என்று தான் சொல்லியுள்ளனர். ஆக, இது நமக்கான கட்டளைகள் கிடையாது அல்லவா?

முன்னுரையில் இன்னொரு கருத்து -- கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு .. விடுதலை அளித்து தம் ஆசியை வழங்குகிறார். அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வுபெற்று அவர் தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர். -- 
Is it not a good business deal? கையில காசு .. வாயில தோசை என்று ஆசை காட்டுவது போல் தெரியவில்லையா? It is all ONLY a CONDITIONAL LOVE!!!! What a good hearted god! கும்பிட்டால் ஆசி உண்டு என்னும் கடவுள் !!!


இனி பழைய ஏற்பாட்டின் வசனங்கள்:

1:8 -- ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய .. அவர்கள் வழிமரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.
-- இஸ்ரயேலருக்கான நாட்டைக் கடவுள் கை காட்டுகிறார். இஸ்ரயேலருக்குத்தான் அது ... நமக்கெல்லாம் இல்லை. இஸ்ரயேலருக்குத்தான் கடவுள் ... நமக்கில்லை!

7:6 -- ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள், மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும்உங்களையே சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.
கடவுள் மிகத் தெளிவாக யாரைத் தான் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார். அது இஸ்ரயேலர்கள் மட்டுமே. பின் எப்படி நாமெல்லாம் பின் செல்வது? இதற்கானப் பதில்களை கிறித்துவர்களிடம் கேட்டுப் பார்த்தும், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. (உங்களிடம் இருந்தால் சொல்லுங்களேன்.)


7:14 -- மற்றெல்லா மக்களினங்களையும் விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
இஸ்ரயேலர்களின் கடவுள். அதனால் இப்படி சொல்கிறார்.


2:33-35  ஆண்டவர் அவனை (சீகோனை) நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தோம். கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.
எப்படி ..? அப்படியே முகமது தன்னைப் பின்பற்றியவர்களுக்குச் சொன்னது போல் அப்படியே இங்கும் சொல்லப்பட்டுள்ளதா? என்ன... முகமது அப்படி கொள்ளையடித்த பொருட்களில் தனக்குச் சேர வேண்டியகட்டிங்எவ்வளவு என்றும் விளக்கமாகச் சொல்லியுள்ளார். இங்கே அது சொல்லப்படவில்லை. ஆனாலும் எந்த மாதிரியான பொருட்கள் கடவுளுக்கு (லேவியர் மூலமாக) காணிக்கையாகச் செலுத்த வேண்டுமென நிறைய சொல்லியிருப்பதை முந்திய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன்.


3:22 -- நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.
What a valiant god! நமக்காகக் களத்தில் இறங்கும்கருணையானகடவுள் இவரல்லவா !


4வது அத்தியாயத்தின் தலைப்பு: கீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல்.
-- ஆகவே இதெல்லாம் கடவுள் - இஸ்ரயேலர் அளவிலான தொடர்பே. நாம் எங்கிருந்து இதற்குள் வருகிறோம்?




4:17 எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.
7:5 -8 -- அவர்களின்  பலி பீடங்களை அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்து விடு.
8:19  -- உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
12:3  --  அவர்களின் தெய்வங்களின் சிலைகளை உடைத்து அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.



17:4,5  வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் ...அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்கு கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.
என்ன I.S.I.S. நினைவிற்கு வருகிறார்களா? அதே... I.S.I.S தான் முழுமையாக பழைய ஏற்பாட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கான பல சான்றுகளை இந்தக் கட்டுரையில் இப்படிப் பல இடங்களில் காணலாம்.



4:24 -- உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.
11:25  --  நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும்.
என்ன .. குரானின் வசனங்களும், இஸ்லாமியரின் ஓரிறைக் கொள்கையும் நினைவுக்கு வருகிறதா? எல்லாம் காப்பி & பேஸ்ட் தானே!


பத்துக் கட்டளைகள் பற்றி இப்பகுதியில் வருகிறது.
5:9 -- நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்; என்னை வெறுக்கும் மூதாதையரின் அச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.
6:14,15 -- உங்களைச் சுற்றியுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ... உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள் மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.
நல்ல வேளை .. பத்துக் கட்டளைகளில்பொறாமை கொள்ளாதேஎன்று ஒரு கட்டளை இல்லை. ஏன் தெரியுமா? கிறித்துவக் கடவுளுக்கு(ம், இஸ்லாமியக் கடவுளுக்கும்) வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத ஒரு பொறாமைக் குணம் உண்டு. பொறாமையில் அம்மக்களையே கொன்றொழித்து விடும் இரக்கமான கடவுள் இவர்.


9:13,14  -- மோசேயிடம் கடவுள் சொல்கிறார்: நானும் இந்த மக்களைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள். ... நான் அவர்களை அழிப்பேன். மண்ணினின்று அவர்கள் பெயர் இல்லாது ஒழிப்பேன்.
கிறித்துவக் கடவுள் மிகவும் இரக்கமான கடவுள் என்று சொல்வார்கள். ஆஹா.. எத்தனை இரக்கம் அவருக்கு. தன்னை வணங்காத கழுத்துகளை அவர் வெட்டிச் சாய்ப்பாராமே...


10:20  --  உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்.
கிறித்துவக் கடவுள் அளவில்லாத அன்பானவர் என்கிறார்கள்.ஆனால் அவர் அச்சுறுத்தும் பயங்கரக் கடவுளாக அல்லவா இருக்கிறார்.


115:11  --  உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர்.
அடப் பாவமே ...! ஆனால் இஸ்ரேல் அப்படி ஒன்றும் பிச்சைக்கார நாடாக இப்போது இல்லையே!


18:9  ... அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.
கிறித்துவக் குழந்தைகள் - ஏன் பெரியவர்களும் கூட - இந்து சமயப் பழக்கவழக்கங்களை பேய் .. பேய்ச்செயல்கள் என்று குறிப்பிடுவது உண்டு. (நானும் அப்படித்தான் இருந்தேன்.) ஏனெனில் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப் பட்டோம்.


19:15  --  ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச் செயலையும் உறுதி செய்ய ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.
மிக நல்லதொரு அறிவுரை. ஆனால் இதே சட்டம் குரானிலும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வேறுபாடு உண்டு. இங்கே ஆண் சாட்சி, பெண் சாட்சி என்ற எந்த வேற்றுமையும் இல்லை. ஆனால் குரானில் பெண்கள் சாட்சியென்றால் அது இரு மடங்காக இருக்க வேண்டும் என்றுள்ளது.


21:10-13  -- போர்ப் பெண் கைதிகளைக் குறித்த விதிமுறைகள்: சிறை பிடிக்கப்பட்டதில் அழகான பெண்ணிருந்தால் அவளை எப்படி அடைய வேண்டும் என்ற methodology இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!
அப்படியே குரானில் கடவுளின் கட்டளை என்று முகமது கூறியது அப்படியே இதன் காப்பி & பேஸ்ட்! ஆனால் முகமது இந்த methodologyயைக் விட்டு விட்டு ஒரு short cut எடுத்து ஜுவேரியா என்ற கொல்ல்ப்பட்ட எதிரியின் மனைவியை உடனே மனைவியாக்கிக் கொண்டார்.


23:13  --  ஸ்வாச் பார்த் விஷயம் இங்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. திறந்த வெளியில் “ஆய் போனால் என்ன செய்ய வேண்டும் என்பது கற்பிக்கப்பட்டுள்ளது.
Holy shit!!


33:29  --  "இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்;
       ஆண்டவரால் மீட்கப்பட்ட
       மக்களினமே! உன்னைப் போல்
       வேறு இனம் உண்டோ?”


சரி.. சரி.. இஸ்ரயேலர்கள் பேறு பெற்றவர்கள் தான். அவர்களை மீட்ட கடவுளை அவர்கள் வணங்குவது மிகச் சரி. ஆனால் நாம், அதாவது இஸ்ரவேலரைத் தவிர அனைத்து உலக மக்களும் எப்படி அந்தக் கடவுளை வணங்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. .. உங்களுக்கு ...?

ஆக, 
1. கிறித்துவக் கடவுள் இஸ்ரயேலருக்கான கடவுளாகத் தன்னை நிலைநிறுத்துவதைப் பார்க்க முடிகிறது.
2. வேறெந்தக் கடவுளையும் வணங்கினால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.
3.அடிமைத்தனம், பெண்களுக்கான தாழ்ந்த நிலை, காணிக்கை .. என்று பல்வேறு கருத்துகளும் இந்த வேதநூலில் இருக்கிறது.

சிந்திக்க மாட்டீர்களா...?


Thursday, December 06, 2018

1013. அம்பேத்கர் ...




*

இன்று அம்பேத்கரின் பிறந்த நாள். 

நேற்று தான் அம்பேத்கரைப் பற்றிய நூல் ஒன்றின் தமிழாக்கத்தை  எழுதி முடித்த மகிழ்ச்சி.





இன்று தமிழ் இந்துவில் வினோத் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் அம்பேத்கர் இன்னும் நம் மத்தியில் ஒரு “ஒதுக்கப்பட்டவராகவே “ உள்ளார் என்பதை எழுதியுள்ளார். இதைச் சாதி வெறி என்று அம்பேத்கரின் நினைவகத்தின் காவலாளி மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்,

(ஆனாலும் அம்பேத்கருக்கு இவ்வளவு அழகான நினைவகம் கட்டியது யாரோ! மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எப்படி இத்தனை அழகாக ஒரு நினைவகம் என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் இருக்கும் இடம் கூட பலருக்கும் தெரியாமல் எங்கோ முடங்கிக் கிடக்கிறதாமே!)

என்று மாறுமோ இந்த சாதி வெறி?

இந்தியர்களின் மனத்திலிருந்து. இது மாறவே மாறாது என்று தான் நினைக்கின்றேன். ஒரு பெரும் முடியாத நீள் கதை...



அம்பேத்கரின் பிறந்த நாள் .. எனது இப்போதைய மொழியாக்க வேலை முடிந்த ஒரு மகிழ்ச்சி. இந்தச் சூழலில் நண்பன் பேராசிரியர் முனைவர் சாமிநாதன் எழுதிய “நெகிழ்ச்சி” என்னும் புதினத்தை இப்போது வாசித்துக் கொண்டிருக்கும்போது இதையொட்டிய மிகச் சரியான சில வரிகளை அவன் நூலில் காண முடிந்தது. அதையும் இங்கு தருகிறேன் - நம் சாதி வெறிக்கு இன்னும் ஒரு சின்ன அடையாளச் சின்னம்!







****

எத்தனை அம்பேத்கர்கள், பெரியார்கள் வந்தென்ன ... 


*****




Monday, November 26, 2018

1012. தோரணம்





*





*

”வனம்” என்றொரு அமைப்பு கஜாவில் வீழ்ந்த மரங்களில் சிலவற்றிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுந்த பெரிய மரங்களின் மேல் கிளைகளை வெட்டி விட்டு, தடித்த ஏழெட்டு அடி நீளப் பகுதியை மீண்டும் நட்டு விட்டால் இரண்டு ஆண்டுகளில் தளிர்த்து துளிர்த்து மரமாக வளர்ந்து விடும் என்கின்றனர்.

தொடரட்டும் .. மரங்கள் வளரட்டும்.


                                                                                 *****



TOI தினசரியில் திரைப்பட விமர்சனம் போட்டிருந்தார்கள். ஜோசப்... / ஜார்ஜ் ... எதோ ஒரு பெயர். நகைச்சுவை நடிகர் சீரியஸ் ரோலில் அழகாக நடித்திருக்கிறாராம். மலையாளப்படம். 4 ஸ்டார் கொடுத்திருந்தனர். அதைத் தவிர நான்கு தமிழ்ப்படங்கள்... எல்லாம் ஒன்று.. ஒன்றரை ஸ்டார்.

அடப் போங்கடா .... என்றிருந்தது.


                                                                           *****


குருமூர்த்திக்கு ஒரு கடிதம் வந்தது. நறுக்குத் தெறித்தது போல் இருந்தது. இன்னும் பஞ்சாங்க காலத்து ஆட்களாக இருக்காதீர்கள் என்று ஒரு நல்ல திறந்த கடிதம். உலக அறிவுக்கு அடிமைகளாக ஆகாதீர்கள் .. இந்திய அறிவின் வழியேதான் உலகைப் பார்க்க வேண்டும் என்று குருக்களயா அறிவு பூர்வமாகப் பேசியிருப்பார் போலும்.  அதை எதிர்த்து ’ஸ்வாமினாமிக்ஸ்” என்ற தலைப்பில் அங்கலேசரியா ஐயர் நன்கு எழுதியுள்ளார்.



                                                                                  *****


தேவர் இனத்து 7 சின்னப் பசங்க அம்பையில் ஒரு 32 வயது கோனார் சாதிக்காரரைக் காலையில் கொன்று விட்டு, அவனவனும்  தங்கள் தங்கள் வேலைக்கு / பள்ளிக்குப் போய்விட்டார்களாம் .. எந்த வித மன உறுத்தலும் இல்லாமல். எப்படி ஒரு இளைஞர் படை வைத்திருக்கிறது அந்த சாதி. எவ்வளவு பெரிய பெருமை அந்த சாதியினருக்கு? கொலையும் செய்து விட்டு பத்து பதினொறாம் வகுப்புக்கு சென்று விட்டார்களாம். என்ன ஒரு தீரர்கள் !

ஒவ்வொரு சாதிக்கும் ஊருக்கு நாலு பேரை இதே போல் வளர்த்து விடுங்கள்.. நாடு முன்னேறும்.

இது காதல் விவகாரம். கோனார் சாதியைக் கீழ்ச்சாதியாக்கி, தேவர் சாதிக்கு இந்தக் கோபம் .. வெறி. காதலித்த தேவர் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது என்கிறார்கள். நிச்சயமாக எனக்கு அப்படித் தோன்றவில்லை. இன்னொரு சந்தேகம். அட யாதவ் இந்தியா முழுவதும் இருக்கிற கட்சியாயிற்றே. காஞ்சா அய்லய்யாவின் வாக்கின் படி இவர்கள் ”புதிய சத்திரியர்கள்”. இச்சாதியினர் கட்சி அகில இந்தியக் கட்சியாயிற்றே; தேவர் கட்சிகூட பிராந்திக் கட்சி தானே... அதிலும் இப்படி ஒரு மேல்-கீழ் நிலையா?


கடவுளே...

                                                                                 
                                                                                   *****



நீயா நானா?  ஒரு பக்கம் தமிழ் தெரிந்த வடநாட்டுக்காரர்கள்..இன்னொரு பக்கம் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாத  ஒரு கூட்டம். ஆசிரியனாக வேலை பார்த்த போது ஆங்கிலம் தெரியவில்லை என்று வெட்கமும், வேதனையும் படும் மாணவர்கள் ஒரு புறமும், i dont know tamil என்று பெருமையோடு சொல்லும் மாணவனையும் பார்த்திருக்கிறேன். இது மாறவே மாறாது என்று தான் நினைக்கின்றேன்.

அட... நான் இவ்வளவு பேசுகிறேனே... நான் என் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வி முறையில் தான் சேர்த்தேன். அதனாலோ என்னவோ வாட்ஸ் அப் செய்தியைத் தமிழில் அனுப்புங்களேன் என் மகள்களிடம் இப்போது சொன்னால் கூட கேட்க மாட்டேன் என்கிறார்கள். நானும் நானெழுதிய இரு நூல்களில் முதல் நூலை என் பேரப் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் இட்டேன். எதற்கென்றே தெரியவில்ல !. தமிழ் வாசிக்கும் பேரப்பிள்ளைகள் எனக்கில்லை. அப்படி ஒரு தனிப்பட்ட சோகம் எனக்கு. மொழியின் மேல் காதல் உண்டு என்ற எனக்கு தவறான ஒரு நினைப்புண்டு அதனால்.இந்தி, மலையாளம்,பிரஞ்சு மொழி படிக்க முயன்றேன். மூன்றாவது certificate அளவிற்காவது வந்தது. இந்தியும் மலையாளமும் - முக்கியமாக இந்தியும் -இந்த ka. ga gha. ha என்றெல்லாம் வர ஆரம்பித்தும் அந்த இடத்தை விட்டே ஓடி விட்டேன்.

சரி... நீயா நானாவுக்கு வருவோம். குறளை மேற்கோளாக ஒருவர் சொன்னதும், தமிழ் எனக்குப் பண்பைப் போதித்தது என்று ஒருவர் சொன்னதும், நாமறிந்த மூன்று மொழிகளில் தமிழுக்கும், தமிழருக்கும் உள்ள நகைச்சுவை உணர்வைப் பெருமையாக பேசிய ஒருவரும். எவ்வித பயனும் நோக்காமல் தனது மொழியிலிருந்து 25 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் என்று சொன்ன ராஜஸ்தான் அம்மையும்....நம் தமிழ்த் தோள்களை நிமிர்த்தினார்கள்.

ஆனால் தமிழ் தெரியாது என்று சொன்ன சிலரில் ஓரிருவர் நிறையவே தங்களைக் கூமுட்டைகளாகக் காட்டிக் கொண்டனர். ஐம்பெருங் காப்பியங்களைப் பற்றிக் கேட்டதும் ஒரு புண்ணியவான் - இளைஞர் தான் _ தொல்காப்பியர் என்றார். மொழிபெயர்த்திருக்கிறேன் என்று சொன்ன பெண்மணி பொங்கலைப் பற்றி அழகாகப் பேசியதை இடை மறித்து, அவர்கள் சொன்னதில் திங்கள் என்ற சொல்லை நம்மாள் ஒருவரிடம் திங்கள் என்றால் என்ன என்று கோபிநாத் கேட்டார். இந்தப் புண்ணியவான் monday என்றார். புல்லரித்து விட்டது.  ஆனாலும் என் பேரப் பிள்ளைகளும் இந்த நிலைதான் என்று எண்ணினேன்.


நாடு போகும் நிலையும் நன்றாக இல்லை. மொழி செல்லும் வழியும் நன்றாக இல்ல. இதில் என்ன நமக்கு நாட்டுப் பற்று .. மொழிக் காதல் ...!!








*







Sunday, November 11, 2018

1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........




*


நகைச்சுவைத் திலகம்
அடுத்த வீட்டுப் பெண்”  மிகவும் பிடிக்கிறதென்று பல தடவை அந்தக் காலத்தில் பார்த்திருந்தாலும், “காதலிக்க நேரமில்லை” பார்த்த பிறகு அதுவே நகைச்சுவைப் படங்களின் டாப் லிஸ்ட்டில் இடம் பெற்றது. அடேயப்பா ... நாகேஷ் ... பாலையா... அப்படி ரசித்த ஒரு படம். ஆனால் “இம்சை அரசன் 23” வந்ததும் அத அடிச்சிக்க படமே இல்லைன்னு தோணுச்சு. அது மட்டுமா... வடிவேலு தான் ஒரு நகைச்சுவைத் திலகம்” என்று முழுவதுமாக நிரூபித்து விட்டார். நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்ற வரிசையில் அவரையும் சேர்ப்பதே சரி. (யாரும் இதைப் பார்த்து விட்டு தனக்குத் தானே “மாபெரும் நகைச்சுவைத் திலகம்” என்று  பெயர் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.) தினசரி வாழ்க்கையிலும், மீம்ஸுகளிலும் அவர் ராஜ்ஜியமே வேரூன்றி நின்று விட்டது. எந்த ஒரு நடிகனின் வசனங்களும் இப்படி நம் வாழ்க்கையோடு இந்த அளவு ஒன்றவில்லை. ‘ஆஹான்’ .. என்பதிலிருந்து தான் எத்தனை எத்தனை வசனங்கள் நம் தினசரி பேச்சு வழக்கில் பெரிய இடத்தைப் பிடித்து விட்டன. சிவாஜிக்குப் பல வேடங்கள் .. ஒவ்வொன்றிலும் தனித்தனியான தன் முத்திரை என்று பதித்து விட்டுப் போனார். ஏறத்தாழ நம் நகைச்சுவைத் திலகமும் அப்படித்தான். அட... போலீஸ்காரராக பல படங்களில் வந்தால் ஒவ்வொரு போலீஸும் வேறு வேறு; திருடனாக வந்தால் ஒவ்வொரு திருடனும் ஒவ்வொரு மாதிரி. சொல்லி மாளாது ....
அப்படி ஒரு நடிகர் நடுவில் இப்படிக் காணாமல் போனால் .. கையில் நல்ல வெண்ணையை வைத்துக் கொண்டு இப்படியா நாம் அலைவது. ஒரு வேளை (இளவஞ்சி சொன்னது போல்) தன்மானத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே அரசியல்வாதிகளிடம் ஏதும் சமரசம் செய்து கொள்ளாமல் அவர் இதுவரை ஒதுங்கி இருக்கலாம். ஆனாலும் அடுத்த இம்சை அரசன் படம் ஆரம்பமாகி விட்டதைக் கேட்ட்தும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால் அதுவும் நின்று போனது. தமிழ்சினிமா உலகில் அவருக்கென்று ஓரிடம் அழிய முடியாத அளவிற்குப் பதித்து விட்டார். இருந்தாலும் எவ்வளவு வந்தாலும் திகட்டாத, அலுக்காத உடல் மொழி, அசத்தும் பேச்சு முறை  அவருடையது. இன்னும் தொடர்ந்து பல படங்கள் அவரிடமிருந்து வந்துகொண்டே இருக்க வேண்டும்.
ஏமாற்றாதே.. வந்து விடு வைகைப் புயலே வந்து விடு ... சீக்கிரம்.

*****

வயசுக் காலத்தில் அமிதாபைக் கொஞ்சமும் பிடித்ததில்லை. வயதானபின் வந்த அவரது படங்கள் நிறைய பிடித்தது. இது போல் சிவாஜி நடிக்காமல் போய்விட்டாரே என்ற வருத்தம் நிறைய இருந்தது. சிவாஜி அவரது காலத்து இந்திப் பட அசோக்குமார் மாதிரி வயதான ரோலில் நடிக்கவில்லையே என்ற கவலை சிவாஜி காலத்தில் இருந்தது. அசோக்குமார் அத்தனை அழகாக வயதான ரோல்களில் அப்போது நடித்து வந்தார். நம்ம ஆள் அப்படி செய்யவில்லையே என்ற வருத்தம் முதல் மரியாதைக்குப் பிறகும், தேவர் மகனுக்குப் பிறகும் இருந்து வந்தது. அந்த நிலையில் இன்னொரு தேறுதல் கண்ணில் பட்டது. சிவாஜியின் மூத்த மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கும் கமல் அது போல் இனி வயதுக்கேற்ற நல்ல படங்களில் நடிப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் எட்டிப் பார்த்தது. பாவி மனுஷன்... கட்சி ஆரம்பிச்சிட்டார். அந்த கடைசி நம்பிக்கையும் ஓஞ்சி போச்சு!

ஐயா கமல் .. கடைசி வரை நடிகனாகவே இருப்பீங்கன்னு நம்பிக்கிட்டே இருந்தேனே .... :(

*****
’ராஜா ராணி’ படம் மிகவும் பிடித்தது. அதுவும் தன் முதல் படமாக அட்லி என்ற ஓர் இளைஞன் இயக்கியது. முதலில் பார்த்ததும் அசந்து விட்டேன் ... ஏனெனில் ஷங்கரிடமிருந்து வந்திருந்தாலும் முதல் படத்தையே இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறாரே என்ற நல்ல அதிர்ச்சி அது. அந்தப் படத்தின் எடிட்டிங், திரைக்கதை ரொம்பவே பிடித்தது. தேவையில்லாத ஒரு ப்ரேம்கூட  படத்தில் இல்லை. சரி .. ஒரு நல்ல, பிடித்த இயக்குனர் ஒருவர் வந்து விட்டாரென நினைத்திருந்தேன். 
வச்சாரையா அதுக்கு ஒரு ஆப்பு! அடுத்த படம் விஜய் நடித்த இரு படங்கள். (முதல் படத்தின் பெயர் இப்போ மறந்து போச்சே.) மெர்சல் நன்றாக நினைவில் இருக்கிறது. எவையெவை நல்ல அம்சங்கள் என்று ராஜா ராணியில் நினைத்திருந்தேனோ அந்த இரண்டும் இப்படங்களில் சுத்தமாக இல்லை. ரா.ரா. மாதிரியான இறுக்கம் கதைகளிலும் இல்லை.
அவ்வளவு தான் .. மாஸ் ஸ்டார்களின் படங்களில் கைவைத்தால் எந்த இயக்குனருக்கும் இந்த நிலைதான் வரும் என நினைக்கிறேன். இனி அட்லி நினைத்தாலும் ரா. ரா. மாதிரி இன்னொரு படம் கொடுக்க முடியாது என்று தான் நினைக்கிறேன். மாஸ் ஹீரோவிடம் மாட்டிக் கொண்டால் வரும் பரிதாபம் இது. இனி எங்கே அதிலிருந்து வெளி வரப் போகிறார்!

அட்லி .. ஒரு முடிந்த கதை.

*****











*

Friday, November 09, 2018

1010. எல்லோரும் எங்கப்பா போய்ட்டீங்க... ? இங்க வாங்கப்பா .. வாங்க.


மண்டபத்தில ( அதாவது, ப்ளாக்கில) என்னைத் தனியாப் புலம்ப வச்சிட்டு பழைய ஆளுக எல்லோரும் எங்கப்பா போய்ட்டீங்க... ?

2007ம் ஆண்டு பிப்.8ம் நாள் என் 200வது பதிவை   போட்ட போது அதைப் பெனாத்தலாரின் விமர்சனத்தோடு வெளியிட்டேன். அது தற்செயலாக இப்போது கண்ணில் பட்டது. இந்த வயசான ஆளுகளோடு ஒரு பிரச்சனை. பழசைப் பார்த்தால் அப்படியே அதில் முங்கிடுங்க. நானும்  முங்கிட்டேன்.
அந்த நாள் ஞாபகம்...

சுகமான நாட்கள்.... எழுதவும் நிறைய இருந்தது போலிருந்தது. எழுதினால் இப்போ சகதியில் போட்ட கல்லு மாதிரி முகநூலில்  இருக்கே .. அது மாதிரி இல்லாமல் அதை மக்கள் ஊன்றி வாசித்து பதிலளிப்பதும், கேள்வி எழுப்புவதும், தொடர்ந்து விவாதம் செய்வதும் என்ற நல்ல ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. அதுவும் நாம் நம் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருக்கும்போது பின்னால் நம் தோள் மீது  அன்போடு ஒரு கை விழுமே ...  அதுபோல் personalised comments வரும். இப்போதும் அதை மீண்டும் வாசித்துப் பார்க்கும் போது அந்த இறுக்கமான உறவு நினைவுக்கு ஒத்தடம் கொடுக்கிறது. அவையெல்லாம் இல்லாது போயிற்றே என்று ஒரு கவலை. சரி... அப்போதெல்லாம் இணையத்தில்  தமிழில் எழுதுவோர் ஆயிரத்திற்குள் இருக்கும். (நான் ஆரம்பிக்கும் போது 500க்கும் குறைவான ப்ளாக்கர்களே இருந்தனர்.)

தமிழ் மணத்தையும் குறை சொல்ல வேண்டும். நித்தம் முழிப்பதே தமிழ் மணத்தில் தான் என்று இருந்த காலம் மாறி விட்டது. காசியிடம் இருந்த போது இருந்த வீரியம் ஏன் நாளாவட்டத்தில் காணாமல் போனது? சமூக வலைத்தளங்களைத் தமிழ்மண அட்மின்கள் ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில் அவைகள் எல்லாம்  பிரபலமாவதற்கு முன்பே தமிழ் மணம் தன் இறுதி மூச்சுகளோடு தடுமாறிக்கொண்டிருந்தது.

அந்த மக்கள் எல்லோரும் எங்கப்பா போய்ட்டீங்க ... 

எனது 200 வது பதிவிற்கு வந்த பின்னூட்டக்காரர்கள்:

பெனாத்தல் 
சிறில் அலெக்ஸ் 
வசந்தன்(Vasanthan) 
தங்கவேல் 
முத்துலெட்சுமி 
செந்தில் குமரன் 
tbr.joseph 
நெல்லை சிவா 
யெஸ்.பாலபாரதி 
ஜோ / Joe 
G.Ragavan 
ஞானவெட்டியான் 
மதி கந்தசாமி (Mathy) 
இராமநாதன் 
கல்வெட்டு (எ) பலூன் மாமா குமரன் (Kumaran) 
குழலி / Kuzhali 
பத்மா 
வெளிகண்ட நாதர் 
dhanuezhil 
லிவிங் ஸ்மைல் 
இளவஞ்சி 
திரு
 enRenRum-anbudan.BALA
Thangamani 
இராம் 
Boston Bala 
சிவபாலன் 
பொன்ஸ்~~Poorna




 * THURSDAY, FEBRUARY 08, 2007 

தருமி 200 - விமர்சிக்கிறார், பெனாத்தலார் !!!!!!!!!!!! 


* *

 (குங்குமம் பாணியில் படிக்க)
 சில புனைபெயர்களைப் பார்த்ததும், ஏன் இந்தப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்ற கேள்வி மனதில் எழும்பும். தருமி என்ற பெயர், திருவிளையாடல் நாகேஷையே நினைவுபடுத்த, இந்த எழுத்தாளர் நகைச்சுவைக்காக இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே தோன்றியது. விளம்பரங்களைப்பற்றிய சில கேள்விகளோடு உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அடுத்ததாகவே Civic Sense பற்றிய கேள்விகளை அள்ளித் தெளித்ததில் சரிதான் - இது நாகேஷ் தருமி அல்ல, "எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும் - தருமி" எனத் தெரிந்தது. உள் கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டாலும், இதுவரை 199 கேள்விகளைக் கேட்டிருக்கிறார். எத்தனையோ பேர் பதில் சொல்ல முயற்சித்தும் இருக்கிறார்கள்.


 சர்தர்ஜியின் மகன் சர்தாரிடம் கேட்டானாம்..
"அப்பா உலகத்திலேயே பெரிய மலை எதுப்பா?"
 சர்தார் -"தெரியலையேடா கண்ணா"
 கொஞ்ச நேரம் கழித்து மகன் "அப்பா, பறக்காத பறவைகளிலேயே பெரிய பறவை எதுப்பா?"
 சர்தார் -"தெரியலையேடா கண்ணா"
 இன்னும் கொஞ்ச நேரம் கழித்து, மகன் "அப்பா, இந்தியாவின் 8ஆவது பிரதம மந்திரி யாருப்பா?"
 சர்தார் -"தெரியலையேடா கண்ணா"
 மகன் அமைதியாகிவிட்டான்.
 கொஞ்ச நேரம் கழித்து சர்தார் "ஏன்ப்பா கேள்வி கேக்கறதை நிறுத்திட்டே? கேள்வி கேட்காட்டி அறிவு எப்படி விருத்தியாகும்" என்றானாம்.

 தருமியின் பிரச்சனையும் இதுவேதானோ என்று தோன்றுகிறது. சரியான கேள்விகள், ஆனால் கேட்கப்பட்டவர்களிடமும் கேள்விகள்தான் இருக்கின்றனவே ஒழிய விடை இல்லை. ஆரம்ப காலங்களிலேயே இவர் கேள்விகளின் (கவலைகளின்) வீச்சு ஆச்சரியப்படவைத்தது.


கற்பழித்தவனுக்கே கல்யாணம் செய்துவைக்கும் நீதிபதியைப்பற்றியும் குமுறுவார்.
காமன்வெல்த்தில் இன்னும் இந்தியா நீடிப்பது அவமானம் என்றும் வாதிப்பார் (நீடிக்கிறதா என்ன?:-))
ஏன் நம் அரசியல்வாதிகளுக்கு நனிநாகரீகம் தெரிவதில்லை என வருந்துவார்!
அப்புறம்தான் ஒரு கியர் மாற்றி மெகா சீரியல்களை ஆரம்பித்தார். ஹிந்திப்போராட்டம் பற்றிய முதல்கைத் தகவல்கள், "நான் ஏன் மதம் மாறினேன்" என்று இன்னுமொரு informative தொடர், இந்தி தெரியாமல் வடநாட்டுக்குச் செல்வதை வீரப்பயணமாக வர்ணித்த தொடர், மரணம் தொட்ட கணங்கள் என்று தேவிபாலா கணக்காக சீரியல்கள் எழுதினாலும், அவ்வப்போது ஜாவா மகாத்மியம், மீனாட்சியம்மா வீட்டு வயசுக்கு மரியாதை கேட்டு, கொ ப செ வாக பதவி உயர்வு பெற்றது என நகைச்சுவைக்கும் மரியாதை கொடுக்கத் தவறவில்லை. திரைப்பட விமர்சனங்கள் என்று தனிப்பட்டு செய்யாவிட்டாலும், நல்ல திரைப்படங்களுக்காக (அவருக்கும் எனக்கும் பல இடங்களில் நல்ல திரைப்படம் என்றால் என்ன என்ற கருத்து ஒத்துப்போகிறது) ஆதங்கப்படுவார், டிவி தொடர்களைக் கண்டு வெதும்புவார். திடுதிப்பென்று கவிதைகளை மொழிபெயர்த்து ஆச்சரியப்படுத்துவார். 


பின்னூட்டங்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதை அருமை. நேரம் எடுத்தாலும், பொறுமையாக ஒவ்வொரு வரிக்கும் பதிலை அளிப்பதாக இருக்கட்டும், தனக்குத் தெரியாத விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் என ஒப்புக்கொள்வதாக இருக்கட்டும், விவாதம் வி-வாதமாக மாறும்போது சரி இத்தோடு போதும் என புல்ஸ்டாப் வைப்பதாகட்டும், விவாதக்களத்தை வழிநடத்துவதில் பல விஷயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.


 எனக்கு இவரிடம் ஒத்துப்போகாத விஷயங்கள் பல இருந்தாலும் பெரும்பான்மையானவை கிரிக்கெட் மசாலா சினிமா போல தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் சார்ந்தவை - ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாகக் குறிப்பிட்டுவிடுகிறேன். முகம் மறைத்து எழுதும் பதிவர்கள் பற்றிய இவரது தீவிரமான கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை. முகம் மறைப்பது தன் கருத்தில் உள்ள நம்பிக்கையின்மை என்பது இவர் கருத்து. நான் மாறுபடுகிறேன். தீவிரமான கருத்துக்களை வெளியிடுவோர் பல காரணங்களால் முகம் மறைக்கலாம், போலித்தனம், அடையாளத் திருட்டு, அவதூறு நோக்கம் இல்லாதவரை முகம் மறைப்பது தவறல்ல என்பது என் கருத்து. இருக்கட்டும்..முழுக்க ஒத்துப்போனால் வாழ்க்கை போரடித்துவிடும். 


சமீப காலங்களில் இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவை சார்ந்த பதிவுகளில் அதிக பங்களிப்பு இருந்தாலும், ஆரம்ப காலங்களில் இருந்த Versatility குறைந்துவிட்டதுபோல உணர்கிறேன். பரந்த களங்களில் பங்கேற்கக்கூடிய திறமை உள்ளவர் ஓரிடத்தில் மட்டும் ஒடுங்கிவிடக்கூடாது என்பதனால் இந்த விண்ணப்பமே தவிர, சமீப காலப் பதிவுகளை எதிர்த்து அல்ல.


 எப்படி இருப்பினும், தெளிவான, யாரையும் காயப்படுத்தாத, மெல்லிய நகைச்சுவை கொண்ட தமிழ்நடையால், முகப்புக்கு வந்த அடுத்த நொடி க்ளிக் பெறும் தருமியின் பதிவுகள். அதே போல, மறுமொழியப்பட்ட பதிவுகளில் வந்தாலும் உடனே க்ளிக்க வைக்கும் விவாதங்கள் - இதே வீரியத்துடன் தொடர விரும்புகிறேன்.

 200க்கு வாழ்த்துகள். முதல் பதிவில் வேறு யாரும் பின்னூட்டம் போடாத காரணத்தாலே எனக்கு இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.


 *


 43 comments: இலவசக்கொத்தனார் said... ஆஹா. இந்த பதிவை நான் இது வரை பார்க்காமலேயே போயிட்டேனே. 200 பதிவுக்கு வாழ்த்துக்கள். நம்ம ஐடியாவைக் காப்பி அடிச்சுட்டு ஒரு நன்றி கூட சொல்லாததுக்கு கண்டனங்கள்!:)) பெனாத்தல், இவரு கேக்குற கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லறது விக்கி பசங்க மட்டும்தான்னு நினைக்கறேன்!! நீங்க சொன்ன பல கருத்துக்கள் (முகம் மறைப்பது உட்பட) நீங்கள் சொன்னதுதான் என் கருத்தும். மீண்டும் வாழ்த்துக்கள் தருமி(ஐயா!) Wednesday, February 07, 2007 10:49:00 AM இலவசக்கொத்தனார் said... வார்ப்புருவில் பல இடங்களில் பூச்சி பூச்சியாய் தெரியுதே. சரி பண்ணக்கூடாதோ?

 Wednesday, February 07, 2007 10:51:00 AM சிறில் அலெக்ஸ் said... 200க்கு வாழ்த்துக்கள். இன்னும் உங்கள் சிறந்த கருத்துக்களை பதிப்பீர்கள் எனும் நம்பிக்கை உள்ளது. எங்களை தொடர்ந்து 'வழிகாட்ட வேண்டுமென்று வணங்கினோம்' தொடர்ந்து 'ஒன்றே குலமென்று..' பாடவும் :)

 Wednesday, February 07, 2007 11:05:00 AM வசந்தன்(Vasanthan) said... இருநூறுக்கு வாழ்த்து.

 Wednesday, February 07, 2007 11:06:00 AM துளசி கோபால் said... 200 ரன்களுக்கு வாழ்த்து(க்)கள். நல்லா நின்னு நிதானமா ஆடறார். நல்லா இருக்கணும். 

Wednesday, February 07, 2007 11:59:00 AM இலவசக்கொத்தனார் said... //வார்ப்புருவில் பல இடங்களில் பூச்சி பூச்சியாய் தெரியுதே. சரி பண்ணக்கூடாதோ?// பூச்சி கொல்லிகளை உபயோகித்து புதிய வலைப்பூ மலரச் செய்த தருமி வாழ்க வாழ்க!!

 Wednesday, February 07, 2007 12:29:00 PM தங்கவேல் said... இருநூறுக்கு வாழ்த்துக்கள் :-)

 Wednesday, February 07, 2007 12:40:00 PM முத்துலெட்சுமி said... வாழ்த்துக்கள். 

Wednesday, February 07, 2007 1:36:00 PM செந்தில் குமரன் said... 200க்கு வாழ்த்துக்கள். புது வார்ப்புருவுக்கும் வாழ்த்துக்கள். அதென்ன தருமியோட வார்ப்புருல Christmas tree?

 Wednesday, February 07, 2007 1:39:00 PM தேவ் | Dev said... தருமி சார் 200க்கு வாழ்த்துக்கள். பினாத்தலாரின் அழகான அலசல் பதிவு நன்றாக வந்துள்ளது. 

Wednesday, February 07, 2007 2:11:00 PM tbr.joseph said... டபிள் செஞ்சுரி அடிச்ச உங்களுக்கு வாழ்த்துக்கள். பினாத்தலாரின் அலசலும் அழகு! வாழ்த்துக்கள். 

Wednesday, February 07, 2007 2:21:00 PM நெல்லை சிவா said... தூள்..தூள்..தூளே.. வாழ்த்துக்கள் அய்யா!

 Wednesday, February 07, 2007 2:30:00 PM ♠ யெஸ்.பாலபாரதி ♠ said... வாத்தியாரைய்யாவுக்கு வாழ்த்துக்கள்!

 Wednesday, February 07, 2007 2:35:00 PM ஜோ / Joe said... யோரோ எழுதிக்கொடுத்த தருமியின் தவறான பாட்டுக்கே 1000 பொற்காசு என்றால் ,சரியாக எழுதபட்ட 200 பதிவுகளுக்கு என்ன கொடுக்க முடியும். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் வாரி வழங்குகிறோம். 

Wednesday, February 07, 2007 2:41:00 PM G.Ragavan said... (இரு)நூறாண்டு காலம் வாழ்க போலிகள் இல்லாமல் வளர்க பதிவுலகில் புலவன் உன் போலே கேள்விகளைக் கேட்பதில் உன் போலே (இரு)நூறாண்டு காலம் வாழ்க போலிகள் இல்லாமல் வளர்க அருமையான விமர்சனம். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் ஐயா. எடுத்து விடுங்கள். பெனாத்தலார் அருமையான விமர்சனங்கள் செய்திருக்கிறார். பொருத்தமாகவும் கூட.

 Wednesday, February 07, 2007 3:15:00 PM ஞானவெட்டியான் said... நன்றி. வாழ்க! வளர்க!!

 Wednesday, February 07, 2007 5:53:00 PM மதி கந்தசாமி (Mathy) said... //யாரோ எழுதிக்கொடுத்த தருமியின் தவறான பாட்டுக்கே 1000 பொற்காசு என்றால் ,சரியாக எழுதபட்ட 200 பதிவுகளுக்கு என்ன கொடுக்க முடியும். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் வாரி வழங்குகிறோம். // Repeat! :) 

Wednesday, February 07, 2007 8:33:00 PM இராமநாதன் said... பெரீய்யப்பா, அதுக்குள்ள டபுளா? வாழ்த்துகள்! பெனாத்தலார் வாழ்த்துரை அருமை! எனக்கும் நீங்க niche ஏரியாவுக்கு போயிட்டீங்களோ சமீபகாலமான்னு தோணுது. (பொதுவா எழுதுனா மட்டும் வந்து கவனிச்சியான்னு எகத்தாளம் செய்யப்படாது!:)) நூறுக்கு உங்கள போட்டோ பினிஷ்ல பீட் பண்ணினேன். ஆனா இருநூறுக்கு நான் இன்னும் பக்கத்திலேயே வரலை. நீங்க என்னடான்னா வெப்லாக்ஸ்லாம் கூட போயிட்டு வந்துட்டீங்க. வாழ்த்த வயது நிறையவே இருக்குதோனு சந்தேகமா இருக்கு. :))

 Wednesday, February 07, 2007 8:51:00 PM ச.சங்கர் said... This comment has been removed by a blog administrator.

Wednesday, February 07, 2007 8:55:00 PM கல்வெட்டு (எ) பலூன் மாமா said... எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அதுதான் உங்களின்மேல் ஒரு பார்வையை பதிக்கச் செய்தது. உங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த பண்பு அல்லது எனக்கு மிகவும் பிடித்தது: அடுத்தவர் தானாகச் சொன்னால் தவிர அவர்களின் சொந்த விசயங்களைக் கேட்பது இல்லை.எடுத்தவுடன் ஊர்/கல்யாணம்/பிள்ளை/வேலை/சம்பளம்.....etc போன்ற கேள்விகளையே கேட்கும் நமது (இந்தியக் கலாச்சாரம்) மக்களின் மத்தியில் வாத்தியாரிடம் யிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு!! தமிழ் வலைப்பதிவர்களில் கடவுள் சம்பந்தமான விசயங்களில் எனது எண்ண ஓட்டத்துடன் இருப்பவர் என்ற முறையில் ஸ்பெஷல் வாழ்த்துகள்! நிறைய எழுதுங்கள்

 Wednesday, February 07, 2007 8:56:00 PM குமரன் (Kumaran) said... தருமி ஐயா. தங்கள் தனிமடலை இன்று காலை பார்த்த போதே 200வது பதிவிற்கான அழைப்பு தான் என்று எண்ணினேன். அந்த அழைப்பு மடலே அருமையாக இருந்தது. வந்து பதிவைப் படித்தால் பெனாத்தலாரும் கலக்கியிருக்கிறார். Concise and Direct to the point. உங்கள் வழக்கமான பதிவுகள் போல் இல்லை (ச்சும்மா.... :-) ) துளசி அக்கா சொன்ன மாதிரி நின்று நிதானமாக ஆடுகிறீர்கள். இல்லையேல் இந்த எண்ணிக்கையை எப்போதோ தொட்டிருப்பீர்கள். 200க்கு வாழ்த்துகள். வணக்கங்களுடன்.

 Wednesday, February 07, 2007 9:01:00 PM குழலி / Kuzhali said... எப்போது கவனிக்க ஆரம்பித்தேன், என்னுடைய இடஒதுக்கீடு(மறுபங்கீடு) பதிவில் ஒரு பின்னூட்டம் தருமி அய்யா இட்டிருந்தார், அதில் நூல் பிடித்து அவரின் பதிவுக்கு போனேன், அதிலிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய நேரடி தகவல்களோடு எழுதிய பதிவு என்று தருமி அய்யாவின் தொடர் வாசகனாகிவிட்டேன்.... வெகு சில கருத்துகளில் மட்டுமே(அப்சல் தூக்கு தண்டனை) எதிர்கருத்துகளை கொண்டிருந்தோம், மதம் பற்றிய பதிவுகளை படித்தாலும் அங்கே விவாதம் எதுவும் பெரிதாக செய்யவில்லை, ஏனெனில் அவ்வளவுதான் அதில் எனக்கு அறிவு, என்னமோ நான் விவாதம் விதண்டாவதம் செய்வதிலெல்லாம் எனக்கு அறிவு இருப்பதாக நினைத்துக்கொள்கிறாயோ என கேட்பது என் காதில்விழுகிறது தான் என்ன செய்வது, சில பதிவர்களின் வலைப்பதிவை புத்தகமாக்கினால் நலமென்று நான் நினைப்பதுண்டு, அதில் ஒன்று தருமி அய்யாவுடையது. நன்றி

 Wednesday, February 07, 2007 9:16:00 PM குமரன் (Kumaran) said... என்னுடைய பின்னூட்டம் கிடைக்கவில்லையா தருமி ஐயா?

 Wednesday, February 07, 2007 9:20:00 PM தருமி said... பத்மா சொன்னது -- வாழ்த்துக்கள் தருமி. நானெழுத ஆரம்பித்த பின் சில மாதங்களுக்கு பிறகு ஆரம்பித்து என்னை கடந்து சென்ற உங்கள் சாதனை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இப்போது வலை உலகம் பக்கம் அதிகம் வர வாய்ப்பு இருப்பதில்லை. பாராட்டுக்கள். 200 இன்னும் பலவாக, சிந்திக்க தூண்டும் படியாக உங்கள் எழுத்துக்கள் இதே போல தொடரட்டும்.

 Wednesday, February 07, 2007 9:28:00 PM ஜொள்ளுப்பாண்டி said... 200 க்கு வாழ்த்துக்கள் தருமி சார் !!;)))

 Wednesday, February 07, 2007 9:41:00 PM இராமநாதன் said... நான் இட்ட பின்னூட்டமெங்கே? எங்கே? எங்கே?????

Wednesday, February 07, 2007 9:50:00 PM வெளிகண்ட நாதர் said... அந்த காலத்திலே எம் ஜி ஆர் படங்கள் செய்யும் '200 நாட்களையும் தாண்டி வெற்றிகிறமாக ஓடுகிறது' என்பதை தருமியால் மட்டுமே செய்ய முடியும், வாழ்த்துக்கள்! 

Wednesday, February 07, 2007 10:31:00 PM dhanuezhil said... //எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அதுதான் உங்களின்மேல் ஒரு பார்வையை பதிக்கச் செய்தது.// பலூன் மாமாவின் கருத்துதான் என்னுடையதும். வாழ்த்துக்கள். பொண்ணுக்கு பரீட்சை முடியட்டும், உங்களுடன் போட்டியிட வருகிறேன்!!! 

Thursday, February 08, 2007 1:00:00 PM லிவிங் ஸ்மைல் said... 200 பதிவா..!! கேள்வியின் நாயகன், பா.கா.ச. வின் மதுரை தலைவர் எங்கள் மாண்புமிகு தருமி தாத்தா அவர்கள் பதிவுகள் 200 கண்டிருப்பதை மனமார வாழ்த்துகிறேன், மன்னிக்கவும் வணங்குகிறேன்... இதோ உன்னால் பா.கா.ச.வின் மணிமகுடத்திற்கு மேலும், ஒரு வைரம் சேர்ந்துள்ளது.. ஹை!! ஒரே பின்னூட்டத்தில ரெண்டு உள்குத்து... :-) 

Thursday, February 08, 2007 2:40:00 PM இளவஞ்சி said... தருமி சார், 200 க்கு வாழ்த்துக்கள்! நீங்க, சிறில், பெனாத்தல்னு 200 போட்ட மக்கா எல்லாரும் சேர்ந்து ஒரு எலைட் க்ளப் ஆரம்பீங்க! எங்கள மாதிரி ஜீனியரு பசங்க எல்லாம் எப்படி சுறுசுறுப்பா பதியறதுன்னு பாடம் படிக்க வாரோம்! :)))

 Thursday, February 08, 2007 3:01:00 PM திரு said... அய்யா, என் எழிய வணக்கங்கள்! உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் தொடரப்போகிற சாதனைகளுக்கும் வணக்கங்கள்!

 Thursday, February 08, 2007 10:59:00 PM enRenRum-anbudan.BALA said... 200 க்கு வாழ்த்துக்கள்! Pl. make a visit to my blog for my 300th (shortly !) :)))

 Thursday, February 08, 2007 11:47:00 PM Thangamani said... மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்தாக்கும்னு நினைச்சுக்கிட்டே வாசிச்சுக்கிட்டே வந்தேன். :))) நல்லா இருக்கு, உங்க மற்ற பதிவுகள் போல. அதிலயும் சர்தார்ஜி ஜோக் ரொம்ப நல்லாருக்கு. அதனால சொல்றது என்னன்னா கேள்வி கேக்குறது ரொம்ப முக்கியம்! பதில் சொல்றதவிட. ஏன்னா பதில் எப்படியாவது, எங்க இருந்தாவது கிடைச்சிடும். கேள்வி மட்டும் உள்ள இருந்து தான் வரனும்.அப்பத்தான் நல்லது... :)) 200 பதிவு வளர்ந்து 2000 ஆக வாழ்த்துகள்!! 

Friday, February 09, 2007 12:13:00 PM இராம் said... 200 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா :) 

Friday, February 09, 2007 7:51:00 PM Boston Bala said... Francis Bacon - “if a man begins with certainties he shall end in doubts; But if he be content to begin with doubts, he shall end in certainties.” வாழ்த்துக்கள் தருமி

 Friday, February 09, 2007 10:51:00 PM சிவபாலன் said... தருமி அய்யா 200 க்கு வாழ்த்துக்கள்!! தொடரட்டும் .. விரைவில் 500 ஐ எட்ட வாழ்த்துக்கள்!! Friday,

February 09, 2007 11:03:00 PM தருமி said... நன்றியறிவிப்பு … முதலில், என் வேண்டுகோளுக்கிணங்கி இப்பதிவை தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வு மிளிற, ஒரு தொகுப்புரையாகவும், திறனாய்வாகவும் இப்பதிவைத் தந்த பெனாத்தலாருக்கு மிக்க நன்றி.
 அவர் குறிப்பிட்ட இரு காரியங்களுக்கு என் பதில்கள்: முதலாவதாக, versatility பற்றியது. முன்பு இருந்ததாகக் கூறியுள்ளமைக்கு முதலில் நன்றி. Versatility இருந்ததோ என்னவோ, variety இருந்ததென்னவோ உண்மைதான். அது குறைந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்துக் கொள்கிறேன்; சரியான பதில் தெரியவில்லைதான். சீரியசாக எழுதஎடுத்துக் கொண்ட விஷயங்களை எழுதிய பின்னும், கியர் மாற்றாமல் அதே கியரில் பயணம் தொடர்கிறதென்று நினைக்கிறேன். கியர் மாற்றணும்; மாற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
 அடுத்து, பதிவர்களின் முகத்திரை பற்றியது. கட்டாயம் எல்லோரும் முகம் காண்பித்து, தங்கள் தங்கள் எழுத்துக்களை ‘அப்பா பெயர் தெரியாத அனாதைப் பிள்ளைகளாக’ ஆக்கி விடாமல் இருக்க வேண்டும் என்ற என் கருத்தில் முன்பே ஒரு சின்ன மாற்றம் சொன்னேன் – எழுத்துக்காரர்களின் முழு விவரம் இல்லாவிட்டாலும், ஏதோஒரு புனைப்பெயரோடாவது எழுத வேண்டும் என்றேன். இன்னும் அதே கருத்தே. ஒரு பின்னூட்டத்தில் இரண்டு அனானிகள் வர, அதில் ஒருவருக்கு நான் நன்றி சொல்லவும், இன்னொரு அனானியை ‘போட்டுப் பார்க்க’ வேண்டுவதற்காகவாவது எனக்கு வித்தியாசம் தெரியவேண்டாமா? ஒருவருக்கு ஒரு புனைப்பெயர் என்ற நிலையாவது இருக்க வேண்டுமென்பதில் இன்னும் உறுதியாகவே நிற்கிறேன். ஆனால் இப்போதோ நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு புதுப்பெயரோடு பின்னூட்டமிடுபவர்களும், பதிவிடுபவர்களும் நிறைந்து விட்ட இந்த நேரத்தில் என்னைப் போன்றவர்கள் மிகக் குறைந்த அளவே இருப்போம் என்றாலும் …. பெனாத்தலார், கொத்ஸ், Let us agree to disagree. Okay?
 கொத்ஸ், உங்களது 100வது பதிவில் செய்ததைக் காப்பி அடித்திருக்கிறேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு 100 ஆவது பதிவிலே வந்த ஐடியாவை விட்டு விட்டு வேறு ஏதாவது புதிதாகச் செய்ய எனக்கு 200-வது பதிவிலும் வரவில்லை பார்த்தீங்களா? // இவரு கேக்குற கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லறது விக்கி பசங்க மட்டும்தான்னு நினைக்கறேன்.// ஓ! அந்த அளவு “விவரமான” கேள்விகளா கேக்குறேன்னு சொல்றதுக்கு நன்றிங்க.
 சிறில் அலெக்ஸ், //…தொடர்ந்து 'வழிகாட்ட வேண்டுமென்று …// நல்ல ஆளு பார்த்தீங்க, சிறில்! நன்றி
 வசந்தன், துளசி, முத்து லட்சுமி, தங்கவேல், டி.பி.ஆர். ஜோசப், நெல்லை சிவா, யெஸ்பா, ஞானவெட்டியான், அனைவருக்கும் மிக்க நன்றி
 செந்தில் குமரன், வீடு மாறுவதற்கு இராம் உதவி செய்து கொண்டிருந்தார் ஓவ்வொரு படியாக. அப்போது ஒரு மூன்று வடிவங்களைக் காண்பித்து இதில் எது வேண்டுமென்றார். பார்த்ததில் பார்த்ததும் பிடித்தது இந்த வார்ப்புரு. இதைச் சொன்னேன். சிறிதாக இருந்தது பெரிதாகத் திரையில் தோன்றியதும், இராமிடம் chat-ல் நான் சொன்னது: எப்படி க்றிஸ்துமஸ் மரம் இருக்கும் இதைத் தேர்ந்தேன். அடி மனதில் இன்னும் கிறித்துவம் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று இராமிடன் சொன்னேன். ஆனால் அதற்குப் பிறகு நம் தேசிய வண்ணச் சேர்க்கை இருப்பதும் பிடித்தது. இங்கே வந்து பார்த்தால் எனக்கு வந்த கேள்வியை நீங்களும் கேட்டிருக்கிறீர்கள்!!! பதில் என்ன செந்தில் குமரன்?? 

ஜோ, //..சரியாக எழுதபட்ட 200 பதிவுகளுக்கு..// நற்சான்றிதழுக்கு நன்றி, ஜோ. 

ஜிரா, // …போலிகள் இல்லாமல் வளர்க .. // நடக்கிறதெல்லாம் பார்த்தா அப்படியெல்லாம் முடியுமான்னு தெரியலையே, ஜிரா.
 கல்வெட்டு, //.. எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை.// மிக்க நன்றி.
 இராமநாதன், // இருநூறுக்கு நான் இன்னும் பக்கத்திலேயே வரலை. நீங்க என்னடான்னா,..// மொதல்ல ரஷ்யாவில மாணவ வாழ்க்கை. ஆனால் இப்போ ஒழுங்கா வேலைய பாத்துக்கிட்டு இருக்கீங்க அப்டின்னு தெரியுது. கட்டாயமா அந்த niche விட்டு விட்டு வெளிய வந்திர்ரேன், சரியா?
 குமரன், இனியாவது ‘concise and direct to point’ இருக்க முயற்சிக்கிறேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். (முடிஞ்சாதானே!) இதுவரை இருந்தமாதிரி இல்லாம புதுசா இனிமே மாற முடியும்னு தோணலை.

குழலி, //.. சில பதிவர்களின் வலைப்பதிவை புத்தகமாக்கினால் …// கிடைத்த நற்சான்றிதழ்களில் இதையே பெரிதாக, பெருமையாக நினைக்கிறேன். நன்றி 

பத்மா,’ //… என்னை கடந்து சென்ற உங்கள் சாதனை …// இதற்குக் காரணம்
வெள்ளிடை மலை! இதெல்லாம் சாதனையோடு சேர்த்தியில்லை. ஜொள்ளுப் பாண்டி, வெளிகண்ட நாதர், மிக்க நன்றி.

 தாணு எழில், // உங்களுடன் போட்டியிட வருகிறேன்!!!/// காத்திருக்கிறேன். வாருங்கள் .. உங்களுக்காச்சு .. எனக்காச்சு …
 லிவிங் ஸ்மைல், // ஒரே பின்னூட்டத்தில ரெண்டு உள்குத்து” ஒண்ணுதானே புரிஞ்சிது. அப்ப இன்னொண்ணு … ??
 இளவஞ்சி, // நீங்க, சிறில், பெனாத்தல்னு 200 போட்ட மக்கா எல்லாரும் சேர்ந்து ஒரு எலைட் க்ளப் ஆரம்பீங்க..//!..// அட நீங்க ஒண்ணு … ஒவ்வொருத்தரும் எண்ணிக்கையில எங்கெங்கேயோ போயிட்டாங்க. அன்னைக்கிப் பார்த்தேன். பாடும் நிலா S.P.B.க்கான பதிவில் 365 நாளில் 370 பதிவுகளோ என்னவோ போட்டிருக்காங்க… சும்மா, ஜெட் எல்லாம் கெட்டுது போங்க… அவ்வளவு அவர்மேல் டெடிகேஷனாக இருக்கணும். ஆனாலும் நீங்க ரொம்பவே மோசம்.

 திரு, என்றென்றும்-அன்புடன் பாலா, தங்கமணி, இராம், மிக்க நன்றி. பாஸ்டன் பாலா, பாஸ்டன் பாலா பேக்கன் பாலாவா மாறி கொடுத்துள்ள நல்ல ஒரு மேற்கோளுக்கும், என் பதிவோடு அதைப் பொருத்தியமைக்கும் மிக்க நன்றி. 

Sunday, February 11, 2007 5:40:00 PM பொன்ஸ்~~Poorna said... 200 வந்தாச்சா!! இப்பத் தான் பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்... நீங்க கவிதையெல்லாம் மொழி பெயர்த்திருக்கீங்களா? ஹிந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகள், காமெடி பதிவுகள், இதெல்லாம் நான் படிச்சதே இல்லை.. ஒவ்வொன்றாக படிக்கணும்.. // எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை.// கல்வெட்டு சொல்வதை வழிமொழிகிறேன் // உங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த பண்பு அல்லது எனக்கு மிகவும் பிடித்தது: அடுத்தவர் தானாகச் சொன்னால் தவிர அவர்களின் சொந்த விசயங்களைக் கேட்பது இல்லை.எடுத்தவுடன் ஊர்/கல்யாணம்/பிள்ளை/வேலை/சம்பளம்.....etc போன்ற கேள்விகளையே கேட்கும் நமது (இந்தியக் கலாச்சாரம்) மக்களின் மத்தியில் வாத்தியாரிடம் யிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு!! // எனக்கும் எனக்கும்.. :) வார்ப்புரு மாத்தியாச்சா? கலக்கலா இருக்கு! :)))

 Monday, February 12, 2007 12:46:00 PM Kittu said... Congrats on ur 200th post. 500, 1000, 2000 enna posttitte irukka ennudaya vaazthukkal. pazhaya post ellam neram kedaikum podhu vaasikiren tharumi.

 Wednesday, February 14, 2007 3:03:00 AM தருமி said... சிவபாலன், மிக்க நன்றி Saturday,
February 17, 2007 12:12:00 AM தருமி said... பொன்ஸ், ரொம்ப பிஸியா இருக்கவேண்டியதாப் போச்சுன்னு படிச்சேன். எல்லாம் நல்லபடியா நடந்தது என்றே நம்புகிறேன். வந்ததும் இங்கு வந்தமைக்கும், கொடுத்துள்ள வாக்குறுதிக்கும் நன்றி
 Saturday, February 17, 2007 12:14:00 AM தருமி said... கிட்டு, புதிதாக வந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அதற்கும், பொன்ஸ் மாதிரி நீங்களும் கொடுத்துள்ள வாக்குறுதிக்கும் நன்றி.
 Saturday, February 17, 2007 12:14:00 AM saamban said... இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடு அரசு தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது. நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன. இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது. தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர். கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது. எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர். சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான். தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான். இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம். கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர். தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா? Monday, June 16, 2008 3:53:00 PM



 *

Wednesday, November 07, 2018

1009. ராட்சசன் .....






*



 ஒரு விரலைச் சுத்தி ஒன்பது பேரைச் சாய்த்து ..ஒவ்வொருவரையும் பத்தடிக்கப்பால் விழச்செய்யும் படங்களின் முடிவு காலம் நெருங்கி விட்டதோ? நரி, நாய், சிங்கம், சிறுத்தை, கருப்பா இருக்கிற வானம் .. கடல் போன்ற படங்கள் வருவது நின்று போய், நல்ல படங்கள் எடுப்பது என்று “சின்னப் பசங்க” நிறைய பேர் வருவது மாதிரி தெரிகிறதே.

நல்ல படம்னா தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கிற பழக்கம் உண்டு. ஆனால் அப்படி எப்போவாவது போவது என்றுதான் இன்று வரை வழக்கமாக இருந்தது. ஆனால் திடீர் புயல் மாதிரி .. மேற்குத் தொடர்ச்சி மலை - கார்ப்ரேட்டுகள் மூலம் தனி மனிதன் வாழ்க்கையில் வீசும் சூறாவளி என்று மட்டும் இல்லாமல், வெகு வித்தியாசமான படம் -... பரியேறும் பெருமாள் - மானுடம், மனித நேயம் என்று அனைத்தையும் அழிக்கும் சாதியச் சகதியின் வீச்சும் வீறாப்பும் - அடுத்தடுத்து வந்தன. காதலையே மய்யமாக வைத்தே படங்கள் வரும் சூழலில் ஒரு வித்தியாசமான, மனதை நெருடும் 96 படம் வந்தது. அதை ஒட்டியே வந்ததாலோ என்னவோ அதிகம் பேசப்படாத இன்னொரு படம் - ராட்சசன்.

பொதுவாக தமிழ்ப்படங்களில் லாஜிக் என்பதைப் பார்ப்பதே கூடாது. முதல் மரியாதையில் கட்டை விரல் கடித்த “கதை”யும், நாயகனில் இருபது முப்பது வருஷத்துக்கு முந்தி செத்துப் போன அப்பாவின் துப்பாக்கியை எடுத்து சுட்டு நாயகனைக் கொல்வதையும் மனசுக்குள் போட்டுக் கொள்ளக் கூடாது. அப்படியே வளர்ந்துட்டோம்.

ஆனால் இந்தப் படத்தில் வெளிப்படையான தவறுகள் என் கண்ணில் படவில்லை. திரைக் கதையமைப்பு நம்மை படத்தோடு ஒன்றியிருக்க வைத்து விடுகிறது. இரண்டாம் படத்தில் முதல் படத்திற்கு நேர்மாறாக இத்தனை அழகான நேர்த்தியா? நல்லது ... வளரட்டும்.

எதிர்பார்க்காத அளவிற்கு தமிழ்ப்படங்கள் வளர்ந்து வருகின்றனவோ?

 இன்னும் ஒன்று என் நெடுநாள் ஆசை. படத்தில் பாட்டுகள் எதற்கு என்று தெரியவில்லை. பொதுவாக படங்களில் பாட்டுகள் அதன் வார்த்தைகள் என்று எதுவுமே என் காதில் மட்டும் விழுகின்றன. எவ்வளவு சிரமம் எடுத்தாலும் பொருள் என் மண்டைக்குள் ஏறுவதேயில்லை. முதல் இரண்டு மூன்று வரிகளைக் கவனித்தாலும் அதன் பின் படம் பார்க்கும் போது பாடல் முழுவதுமாக மண்டைக்குள் ஏறுவதேயில்லை. பின் எதற்கு அங்கு ஒரு பாட்டு என்ற கேள்விதான் மனதிற்குள் எப்போதும் ஓடுகிறது. முதல் மரியாதை, டூயட் இந்த இரு படங்களில் தான் பாட்டு என்னுள் சென்றது. மற்றபடி பொதுவாக பாட்டுகள் என் தலைக்கு மேல் பறந்து போகின்றன.


இந்தப் பாட்டு போல் எல்லா பாடல்களும்
 நம் மண்டைக்குள்ளும்
மனதிற்குள்ளும் போகின்றனவா?

 இரண்டு மணி நேரத்திற்கு மேல் படம் எடுக்கும் கட்டாயம் இருப்பதால் சண்டை, பாட்டு என்று போட்டு ‘வெட்டித் தனமாக’ இழுத்து விடுகிறார்கள். பாவம் இயக்குனர்கள். ஏற்கெனவே முன்பே சொன்னது போல் ஒன்றரை மணிப் படங்களுக்கு வரி விலக்கு அரசு கொடுத்தால் படங்கள் இன்னும் ‘சிக்’ என்று மாறும் என்று நம்புகிறேன்.






 *

Thursday, November 01, 2018

1008. மீண்டும் ... மதங்கள் பற்றிய கட்டுரைகள்





*



ஓய்வு பெற்ற பின் ...  தினசரி வாழ்க்கையில் வீடும் வீடு சார்ந்த இடங்களிலும் ட்ரவுசரோடு ஓடிக்கொண்டிருந்தவனுக்கு கடந்த பத்து நாளாக அந்தக் காலத்தில கல்லூரிக்குப் போகும்போது போன மாதிரி தினமும் ஒரு சட்டை ...பேண்ட் போட்டுக் கொண்டு திசைக்கொரு பக்கமாகச் செல்லும் ஒரு வாய்ப்பு வந்தது.






சில N.G.O.க்களுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் தமிழில் உறவாடுவதற்காக ஆங்கிலேயர் ஒருவருடன் செல்லும் வாய்ப்பு வந்தது. அமெரிக்க சினிமா கொஞ்சூண்டு பார்த்து அதை அரை குறையாகப் புரிந்து கொள்வதாலும், கொஞ்சூண்டு நாள் அமெரிக்காவில் பவனி வந்ததாலும் அமெரிக்க ஆங்கிலம் கொஞ்சம் எளிதாகப் புரியும் என்ற தைரியம் உண்டு. அவர்களும் நம் நலன் கருதி கொஞ்சம் மெல்லப் பேசுவார்கள். ஆனால் இந்த ஆங்கிலேயர்களின் ஆங்கில உச்சரிப்புகள் புரிய கஷ்டம். உறவுக்காரப் பெண் இங்கிலாந்திலிருந்து வரும் போது அவள் பேசும் ஆங்கிலம் புரிய நிறைய கஷ்டப்பட்ட அனுபவமும் உண்டு. சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு ஒப்புக் கொண்டேன்.

 வந்தவர் 45-50 வயது ஜிம். காவல் துறையில் 20 ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு, இப்போது குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய படிப்புகள் முடித்து, அதன் தொடர்பாக பல ட்ரஸ்டுகள் அவரை தாங்கள் உதவும் அயல்நாட்டு அமைப்புகளில் உள்ள நடப்புகள் பற்றி அவரை ஆய்வு செய்ய அனுப்புகிறார்கள். இங்கு வருவதற்கு முன் கென்யா, நைஜீரியா போன்ற இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். நேரில் வந்ததும் ஒரு பெரிய ‘குண்டு’ ஒன்றைப் போட்டார். வேலை இதுவென்றாலும் பகுதி நேரங்களில் முழுவதுமாக கிறித்துவப் பணியில் ஈடுபடுபவராம். அதைச் சொன்னதும் எப்படி நம் வண்டி பத்து நாட்களுக்கு ஓடுமோ என்ற கவலை சிறிது எட்டிப் பார்த்தது. அறிமுகத்தில் அவரது மத வழிபாடுகள் பற்றி அவர் சொல்ல, நான் ஒரு மத மறுப்பாளன் - அதில் இரு புத்தகங்கள் வேறு எழுதியவன் - என்றதும் அவருக்கு ஆச்சரியம். புத்தகங்களின் படங்களைக் காண்பித்தேன். நூலின் அடக்கம் பற்றிக் கேட்டார். சொன்னேன். பயணத்தின் போது அதைப் பற்றிப் பேசிக்கொள்வோமென்றார்.

எனக்கென்ன .. கரும்பு தின்னக் கூலியா என்ன? ஆஹா...சரியென்றேன். 

வழக்கமாக “பெரிய” கிறித்துவர்கள் என்னைப் போன்ற ஆட்களிடம் பேசுவதை விரும்புவதில்லை; அதிலும் நான் மதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே முகம் சுருங்கி விடும். என்னை எப்போதடா தவிர்ப்போம் என்பதே அவர்கள் நிலையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அட... என் புத்தகத்தை வாசிக்கவே அந்தப் பெரிய “விசுவாசிகள்” தயாரில்லை. தங்கள் நம்பிக்கை மாறி விடுமோ என்ற பயம் போலும்! பிறகு எப்படி முகம் கொடுத்துப் பேசுவது...? ஆனால் நமது அடிப்படைவாதிகளான மூமீன்கள் தொடர்ந்து தொடுத்த விவாதங்களால் நிறைய வாசிக்கவும், உள்ளூற அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கவும் முடிந்தது. மேலும் மேலும் பல “ஓட்டைகளை” எல்லா மதங்களிலும் காண முடிந்த நல்ல நேரம் அது. கிறித்துவத்திலும் இன்னும் மேலும் பலவற்றைத் தெரிந்திருக்கலாம் - ஒருவேளை சில விசுவாசக் கிறித்துவர்கள் மூமீன்கள் போல் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருந்தால்! அப்படி ஒன்றும் நடக்காதது எனக்கு வருத்தமே. ஒரு வேளை கிறித்துவர்கள் மாத். 7:6 வசனத்தை (முத்துகளை பன்றிகள் முன்னால் இறைக்காதீர்கள்) நினைத்து என்னை விட்டு விலகிப் போயிருக்கலாம்!


ஆனால், நம்ம ஆளு ஜிம் அப்படியெல்லாம் இல்லை. அவரோடு பேசியதில் எனக்கு நல்லதொரு திருப்தி. ஏனெனில் விவாதத்தைத் தொடர்வதில் ஆர்வமாக இருந்தார். ஏன் இவர் மதத்தை விட்டு விலகினார் என்பதை அறிவுடன் சிந்திக்க ஆசைப்படுவதாகச் சொன்னார். அதோடு நான் மதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதைப் பற்றிச் சிந்தித்தே இந்தக் கேள்விகளை முன் வைக்கிறேன் என்பதை முழு மனதோடு ஒப்புக்கொண்டார். முதலில் வழக்கமாக கிறித்துவர்கள் அளிக்கும் பதில்கள் போன்று சிலவற்றை முன் வைத்தார். எனது அனுபவத்தில் அப்பதில்கள் பொதுவாக சிறு பிள்ளைகளுக்கு ‘ஞானக் கல்வி’ (!) சொல்லித் தருவது போன்றே இருக்கும். நேரடியாகச் சொன்னால் அப்பதில்கள் மிகவும் மொன்னையாக இருக்கும்.


இவரிடம் கேள்விகளை எழுப்பியதும் முதலில் அது போன்றே பதில் சொன்னார். ஆனால் மெல்ல அவைகளை நிறுத்திக் கொண்டு ... அவரும் அதற்கான intellectual பதில்களுக்கு முயற்சி செய்தார், அதோடு மாலையில் நாங்கள் திரும்பிய பிறகு தன் துணைவியாரிடம் பேசும்போது என் கேள்விகளையும் தெரியப்படுத்தியிருக்கிறார். எண்களிட்டு அக்கேள்விகளை அனுப்பியுள்ளார். ஊர் திரும்பியதும் அதைப் பற்றி விவாதிக்கப் போவதாகக் கூறினார்.

எல்லாவற்றிலும் எனக்கு மிகப் பிடித்தது அவர் என் நூல் ஆங்கிலத்தில் இல்லையே என்று கவலைப் பட்டது. இப்போது எங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் ... என் நூலில் கிறித்துவ மதத்தை நான் விடுவதற்கானக் காரணங்களையும், கிறித்துவ மதத்தின் மீதான என் கேள்விகளையும் நான் தொடர்ந்து அவருக்கு எழுத வேண்டும் என்றும், எனக்கு அவர் பதில் தருவார் என்பதுமே அது. அதை என் ஆங்கில ப்ளாக்கில் போடுவதாகவும் அதில் தான் வந்து வாசிப்பதாகவும் கூறியுள்ளார்.

எனக்கும் இரு வகையில் இது மகிழ்ச்சியாக இருந்தது. முதலாவதாக, மதங்கள் பற்றி நான் தொடர்ச்சியாக எழுதி வரும்போது அப்போது நடந்த ’யுத்தங்கள்” எனக்குப் பிடித்தது. கேள்விகளும் பதில்களும் மாறி மாறி வந்து வாழ்க்கையின் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அது ஒரு intellectual war தானே!. இரண்டாவதாக, சில கருத்துகளையாவது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென பல ஆண்டுகளாக நினைத்தும் அதை செயலாக்கவில்லை. இது ஒரு நல்ல வாய்ப்பு. thank you, jim for motivating me!

 தூங்கிக்கிடக்கும் ஆங்கில ப்ளாக்கைத் தூசி தட்டி எழுப்ப வேண்டும்.......

























 *

Tuesday, October 16, 2018

1007. 96



*

தமிழில் நல்ல படங்கள் எதுவும் உருவாவதில்லை. எல்லாமே காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்ற வேதனை எப்போதும் பலருக்கும் உண்டு. நான் அதைப் பற்றி பல வருடங்களாக எழுதியும் வந்துள்ளேன். ஆனால் இப்போது அந்த மனக்குறை நீங்கி விட்டது. பீட்சா படம் வந்தது. அடுத்தடுத்து வெவ்வேறு genresகளில் இன்று வரை நம்மைத் திக்கு முக்காட வைக்கும் நல்ல படங்கள் வர ஆரம்பித்து விட்டன. நல்ல சினிமாக்களை மட்டும் தியேட்டரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால் இந்த மாதம் மட்டும் பாருங்களேன் ... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96 ... வீட்டுல திட்டு வாங்கிட்டு தியேட்டருக்கு ஒடும் படியாக ஆச்சு. நல்லவைகள் தொடரட்டும். இன்னும் சிங்கம், புலி, சிறுத்தை, பிரம்மாண்ட டப்பா படங்கள் வருவது குறையட்டும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கார்த்தி தன் தாயிடம் ‘அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை, அம்மா” என்று பேசும் ஒரு வசனம் வரும். ஓங்கி கழுத்தை நெறிக்கலாமா என்று ஒரு கோபம் வந்தது அந்தக் காதல் வசனைத்தைக் கேட்டு. அதன்பின் ஒரு யோசனை... யாரு கழுத்தை என்று யோசித்தேன் - கார்த்திக் குரல் வளையா, பாரதி ராஜா குரல் வளையா என்று.

ஆனால் 96ல் பத்து பதினோராம் வகுப்புப் பையனே  அப்படி ஒரு தெய்வீகக் காதலுக்குள் மாட்டிக் கொள்கிறான். ஆனால் ... யோசித்துப் பார்க்கிறேன், பதில் கிடைக்கவில்லை ... ஏன் ராம்-ஜானு பார்க்கும் போது அந்தக் கோபம் வரவில்லை? பாதிப் படத்திற்கு மேல் ராம்-ஜானு மட்டும் தான் திரையில் என்றாலும் நாமும் பின்னால் நிற்பது போல் ஒரு நினைப்பு வருகிறதே! அந்த அண்மையை உண்டாக்கியவர் இயக்குனர்.

பழைய படங்களாக இருந்தால் விஜய் சேதுபதிக்கு ஒட்ட ஷேவ் செய்து, யூனிபார்ம் மாட்டி, திரிஷாவிற்கு இன்னொரு யூனிபார்மும் இரட்டைச் சடையும் போட்டு நமக்கு முன்னே திரிய விட்டிருப்பார்கள். நல்ல வேளை ... பள்ளிப் பருவத்திற்கு சின்னப் பசங்களைப் போட்டு விட்டு காப்பாற்றினார்கள். சிறுபிள்ளைக் காதல். ஊமைப் பையன் வி.சே. ... கடைசி வரை ஊமைப்பையனாக இருக்கிறார். பாவம் தன் காதலியை கண்ணெடுத்தும் பார்க்கத் தயங்கும் நல்ல பையன். ஆனாலும் காதலி தன்னை மறுத்து தன்னைப் பார்க்க வரவில்லையென்று என்று நினைத்த பிறகும் பாவம் போல் அத்தனை வருஷமும் அவள் நினைப்பிலேயே அதுவும் ஒரு வர்ஜின் பாயாக இருக்கும் ராம் ... அடேய் ராம்... ஆனாலும் இத்தனை நல்ல பையனா இருக்கக்கூடாதுடான்னு சொல்லணும் போல் இருக்கு. ஆனால் இறுதியில் விமான நிலையத்தில் ஜானுவிற்கு வி.சே முகம் பார்க்க முடியவில்லை. அப்போது தான் வி.சே தைரியமாக அவர் முகத்தைப் பார்க்கிறார். முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளும் வி.சே.வின் முன் ஜானு இப்போது அப்படியாகிறார். ஒரு முத்தமாவது கொடுத்துத் தொலைடா என்று மனசுக்குள் ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப (நமக்கு?) எனக்கு வந்த போது, இயக்குனர் ஜானுவின் கையை அழுத்தி ராம் கியர் போடும்படி வைத்திருப்பது ... ஒரு நல்ல அழுத்தம் தான்!

ஆனால் தொன்னூற்றி ஆறு - 2 என்று இரண்டாம் பாகம் எடுப்பதற்கு வேண்டிய அனைத்தையும் இயக்குனர் செய்து விட்டார், யார் அந்தச் சின்னப் பெண்? போட்டோகிராபி படிக்க வி.சே.யின் மாணவியாக வரும் அந்தப் பெண்ணுக்கு இயக்குனர் வசனமே கொடுக்கவில்லை .. பார்வை மட்டும் தான் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்குத்தான் வி.சே. மேல் அத்தனை காதல். அதையும் மிக மிக அழகாக தன் பார்வைகள் மூலமாக வெளிப்படுத்திய இயக்குனரையையும், அந்த நடிகையையும் பாராட்ட வேண்டும்  ஜானுவிற்கு தலையணையை எடுத்து வைப்பது போல் அந்தப் பெண் வி.சேவிற்கு க்ராஸ் பெல்ட் போட்டு விடுகிறாள். ஜானுவிடமும்,வி.சேயிடமும் ‘பை’ சொல்லும் அந்தப் பெண்ணின் நடிப்பு அள்ளிக்கொண்டு போனது. த்ரிஷா, வி.சே. நடிப்பும், சில வசனங்களும் (நீ விட்டுட்டுப் போன இடத்திலேதான் நிக்கிறேன்... நல்ல ஆம்பிளை நாட்டுக் கட்டைடா நீ ...) நம்மை அருகில் வைத்துக் கொள்கின்றன.


அடுத்த பாகத்தில் சிங்கப்பூரிலிருந்து ஜானு வி.சேக்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்ற நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்........


”டேய் .. ராமு  ..ஆனாலும் இம்புட்டு நல்ல பிள்ளையா இருக்கக்கூடாதுப்பா ....”






 *