Saturday, June 30, 2018

988. F I F A -- '18 - 5 PRE-QUARTER ..ARGENTINA vs FRANCE






*


  PRE-QUARTER I MATCH 

ARGENTINA  vs  FRANCE

3  :  4

இன்றைய  ஆட்டத்தைப் பார்க்க முடியாத சூழல். கடைசி கொஞ்சமாவது பார்த்து விடலாமென நினைத்து வீட்டுக்கு விரைந்தேன். “எல்லாம் முடிந்து விட்டிருந்தது”!

இதை விட சோகம். அடுத்த ஆட்டம் உருகுவே - போர்த்துகல். அதையும் பார்க்க முடியாது ... காலங்கார்த்தால எழுந்திருச்சி ஓட வேண்டியதிருக்கு !









 *

Wednesday, June 27, 2018

987. F I F A '18 -- 4 -- ARGENTINA vs NIGERIA






*

26.6.’18
இரவு  10:30  --  1:30

இன்றைக்கு அர்ஜென்டினா முழுமையாக நைஜீரியாவை வென்றால் தான் அடுத்த லீக் ஆட்டத்திற்குள் - 16 அணிகளில் ஒன்றாக - நுழைய முடியும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது. Messi sparked now and then.

10 : 50

https://www.facebook.com/sam.george.946/posts/10214411453473414

Messi's goal to Nigeria. At 
14th mt.
Maradona happy.
நானும் happy.


*****


11:00

https://www.facebook.com/sam.george.946/posts/10214411530555341

Vertical bar ... a villain in Messi''s free kick. 


*****


https://www.facebook.com/sam.george.946/posts/10214411696759496

A penalty goal to Argentina. Next mt same foul at Nigeria's goal. Not awarded..


*****

after 12 night


https://www.facebook.com/sam.george.946/posts/10214411837203007

Argentina's second goal!


*****

1 : 30

https://www.facebook.com/sam.george.946/posts/10214411871363861

Argentina gets in.


Tuesday, June 26, 2018

986. இவர்களுக்கும், அவர்களுக்கும் .. ஆளுக்கொரு கேள்வி





*


இவர்களுக்கொரு கேள்வி:

 நம் கர்த்தர் மிகவும் இரக்கமானவர் ... நம் பாவங்களுக்காக இங்கு வந்து தன்னைப் பலியாகக் கொடுத்து நம்மை இரட்சிக்கவந்த அன்பான கடவுள். 

என்ன ... சரியாகச் சொல்லி விட்டேனா? 

 இதில் ஒரு கேள்வி: அவ்வளவு இரக்கமான ஒரு கடவுளால் எப்படி ஒரு நித்திய தண்டனைக் களமாக ஒரு நரகத்தைப் படைத்து, அதில் என் போன்றோரை தள்ளிவிட்டு, காலங்காலமாய் கொடிய தண்டனை கொடுமைப் படுத்த முடியும்? 


 *****



 அவர்களுக்கொரு கேள்வி:

 மதுவைத் தொடாதே; மனைவிகள் தவிர பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதே. தவறினால் கல்லெறிந்து கொல்லும் அளவிற்கு இவை ஹராமான விஷயங்கள்.

 என்ன ... சரியாகச் சொல்லி விட்டேனா? 

இதில் ஒரு கேள்வி: இவ்வளவு தீர்க்கமாக மாதும்,மதுவும் தீயது என்று வேத நூலில் கூறிவிட்டு, அதே நூலில் மறு வாழ்க்கையில் 72 ஹீரிகள் + எப்போதும் வற்றாத ஆறாக ஓடும் மது வகை நிறைந்த சுவனம் என்று சொல்வதில் என்ன பொருளுண்டு. இங்கே தீயது; அதனால் தடை என்றால் அங்கும் அது தீயது தானே! கடவுளே இதெல்லாம் அளவின்றி கொடுப்பார் என்றால் ... என்ன ஒரு சுவனம் அது?!




 *

Monday, June 25, 2018

985. F I F A '18 ... 3






*


23.6.18
இரவு 10:30 - 2:00
ஸ்வீடன்  vs  ஜெர்மனி

இந்த நிமிடம் வரை மிகவும் பிடித்த விளையாட்டு அணி மெக்ஸிகோ. அதனிடம் முதல் சுற்றில் ஜெர்மனி தோற்றது. அடுத்த ஆட்டம் ஸ்வீடனோடு விளையாடியது. மிகவும் முக்கிய ஆட்டம்; இதில் தோற்றால் ஜெர்மனி வண்டியேற வேண்டியது தான் என்பதால் இரவாயிருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிவெடுத்தேன்.. ஆட்டம் சுறுசுறுப்பாக ஆரம்பித்தது.

32ம் நிமிடத்தில் ஸ்விடன் ஒரு கோல் போட்டது. அதற்கு ஒரிரு நிமிடங்களுக்கு முன்பே ஸ்வீடனுக்கு ஒரு பெனல்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஸ்வீடன் பந்தை வேகமாகக் கொண்டு வந்த வீர்ரை ஜெர்மன் கோல் கீப்பர் நேருக்கு நேர் மோதி விழவைத்து கோல் போடுவதைத் தடுத்துவிட்டார். நடுவர் மட்டுமல்ல ..VAR - video aided refree - நன்றாகவே தூங்கி விட்டார் போலும். 39வது நிமிடம் ஜெர்மன் ஆட்டக்காரருக்கு நல்லதொரு வாய்ப்பு. ஆனால் அடித்த பந்து மிக மிக மெல்ல ஊர்ந்து வெளியே நகர்ந்து போனது. பாதி ஆட்டம் வரை 1 : 0 என்ற நிலையிலேயே ஆட்டம் தொடர்ந்த்து.

அடுத்த பாதியின் 48வது நிமிடத்தில் ஜெர்மன் சமன் செய்தது.  அப்படியே போய் ஜெர்மன் தோற்று விடும் அல்லது சமன் மட்டும் செய்யும் என்று தான் நினைத்தேன். (ஏன் ஜெர்மன் தோற்க வேண்டுமென நினைத்தேன் என்று எனக்கே காரணம் தெரியவில்லை!)

81வது நிமிட்த்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை வாங்கி, அதனால் அது சிகப்பு அட்டையாக மாற ஒருவர் வெளியேறினார். இப்போது ஜெர்மன் பத்து ஆட்களோடு விளையாடியது. பந்து மாறி மாறி இருபுறமும் போய்க்கொண்டிருந்தது.

90 நிமிடத்தில் ஆட்டம் முடியாததால் மீண்டும் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட நேரத்தில் விளையாடினர். 92 நிமிட்த்தில் ஸ்வீடன் தப்பித்தது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் 94வது நிமிட்த்தில் ஜெர்மனிக்கு ஒரு பெளல் ஷாட் கிடைத்தது. ஸ்வீடன் கோல் சதுரத்திற்கு வெளியில், பக்க வாட்டில் எல்லைக்கு வெகு அருகே இருந்து பந்தை அடிக்க ஜெர்மனிக்கு வாய்ப்பு கிடைத்தது. அணித் தலைவர் அடித்த அடி உயரமாகப் போய் வலையில் வலது மூலையில் நுழைந்து கோலானது. ஜெர்மன்: ஸ்வீடன் = 2 : 1


ஜெர்மனிக்கு உயிர் வந்தது. இன்னும் தொடர அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

*****


  *

Saturday, June 23, 2018

984. FIFA 2018 ... 2






*






 ப்ரேசில் - கோஸ்டா ரிக்கா 


 பொறி பறந்தது. அதுவும் ஏறத்தாழ 90 நிமிடமும் பொறி பறந்தது.

 பையன் நெய்மர் full formக்கு வந்தாகி விட்டது என நினைக்கின்றேன். நெய்மர் - மார்செல்லோ (பரட்டைத் தலை) காம்பினேஷன் நன்கு வேலை செய்தது. பந்து முழுவதும் கோஸ்டா ரிக்கா பக்கம் தான் இருந்தது, பல முறை ப்ரேசில் அடித்த பந்துகளை கோஸ்டா ரிக்கா கோல் கீப்பர் அழகாக தடுத்துக் கொண்டிருந்தார். போட்டியே ப்ரேசில் டீமுக்கும் கோஸ்டா ரிக்கா கோல் கீப்பருக்கும் என்பது போல் தான் இருந்தது.

ஆனால் அவ்வப்போது கோஸ்டா ரிக்கா ப்ரேசில் பக்கம் பந்தை எடுத்துப் பறந்தார்கள், இது மாதிரி பல போட்டிகளில் பந்தே போகாமல் இருந்து திடீரென்று எதிர்ப்பக்கம் இருந்து கோல் அடித்து விட்டுப் போய்விடுவார்கள். அது மாதிரி ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சமும் தொடர்ந்து இருந்தது. 

ஏறத்தாழ காலம் முடியும் நேரம். 86வது நிமிடத்தில் இரு கோஸ்டா ரிக்கா ஆட்கள் பெளல் வாங்குவதற்காக படுத்துக் கொண்டு “ஆட்டம்” காண்பித்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே நெய்மர் மீது பெனல்டி ஏரியாவில் பெளல் கொடுத்து நடுவர் பெனல்டி கிக் கொடுத்து, VAR மூலம் மாற்றப்பட்டது. இப்போதோ நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஏறத்தாழ ஓரிரு நிமிடங்கள் இருக்கும் போது ப்ரேசிலின் முதல் கோல் அழகாகப் போடப்பட்டது. 6 நிமிடம் ஆட்டம் நீடித்தது. அதிலும் முதல் நிமிடத்திலேயே நெய்மருக்குக் கொடுக்கப்பட்டு எளிதாகக் காலால் ஓடி வந்து தட்டி இரண்டாம் கோல் விழுந்தது.

 ப்ரேசில் கோச் ஓடி வந்த வேகத்தில் யாரும் பெளல் செய்யாமலேயே கீழே விழுந்து புரண்டு எழுந்தார். எனக்கும் அத்தனை மகிழ்ச்சி!


அர்ஜெண்டினா அடுத்த கட்டத்திற்கு வருமா?

பாவம் ... அர்ஜெண்டினா பய புள்ளைக!

குரோஷியாவுடன் விளையாடி 3 கோல் வாங்கித் தோற்று விட்டது. ஏற்கெனவே ஐஸ்லேந்தோடு விளையாடி ஆளாளுக்கு ஒரு கோல் போட்ட சமன் நிலைக்கு வீழ்ந்தது. இனி குழுவின் மற்ற அணிகளின் ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் மூலமாகத்தான் அர்ஜெண்டினாவின் தலைவிதி நிர்ணயிக்கப்படும், 

நைஜீரியாவும் ஐஸ்லேந்தும் விளையாடி நைஜீரியா 2 : ! கோல் கணக்கில் வென்று விட்டது. அர்ஜெண்டினாவிற்கு இன்னும் வழி இருப்பது போல் தெரிகிறது. பார்க்கலாம் ...


 *

Friday, June 22, 2018

983. FIFA 2018 ...1






ஆச்சு... நாலு வருஷம் முடிஞ்சி அடுத்த உலகக் கோப்பையும் வந்தாச்சு. 86ல் ஓசி டிவியில் பார்க்க ஆரம்பித்து .. . இன்னைக்கி 55 இன்ச் அகலத்தில் பார்க்கத் தொடர்ந்தாச்சு

முதல் தடவையாக உலகக் கோப்பையை 86ல் பார்க்கும் போது, விளையாட்டில் ரிப்பீட் வருமே அதைப் பார்க்கும் போது அன்று அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அதுவரை அப்படியெல்லாம் தொலக்காட்சியில் பார்த்ததே கிடையாதே.

14.6.2018 ஆட்டம் ரஷ்யாவில் ஆரம்பித்தது. அன்று சென்னை பயணம். திறப்பு விழா பார்க்க முடியாது போனது. ஆனால் முதல் ஆட்டமான ரஷ்யாவும். சவுதியும் மோதிய முதல் ஆட்டத்தை அடுத்த நாள் சென்னை போனதும் பார்த்தேன். ரஷ்யா நடத்தியதால்தான் அதற்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்றார்கள். ஒரு ஆட்டத்திலும் வெல்ல முடியாத அணி என்றார்கள். ஆனால் பசங்க கிளப்பி விட்டனர். 5:0 என்று அடுக்கடுக்காய் கோல் போட்டு சவுதியை வென்றார்கள். (சரி ... முதல் சுற்றில் தான் இப்படி என்றால் இரண்டாவது சுற்றிலும் அதே கிளப்பல் ஆட்டம் தான். எகிப்துவிற்கு  3 கோல்  போட்டு வென்றது. இரண்டே ஆட்டத்தில் மொத்தம் போட்ட கோல்கள் 8!!)

முதல் வாரம் .. முதல் சுற்று முடிஞ்சாச்சு.

இந்த தடவை ஜெர்மனி, ஸ்பெயின், ப்ரேசில், ப்ரான்ஸ் என்ற நாலு அணிகளுக்குள் ஒன்றுதான் வெல்லும் என்பது பரவலான கருத்து. ஆனால் நடந்து முடிந்த முதல் சுற்றில் என்னென்னமோ நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, விருந்தாளி என்ற முறையில் மட்டுமே போட்டியில் கலந்து கொள்கிறது என்றார்கள். ஆனால் முதல் இரண்டு ஆட்டத்திலும் அமோக வெற்றி.  அடுத்து ஸ்பெயின் போர்த்துகல்லுடன் விளையாடி 3 : 3 என்று ட்ரா மட்டுமே செய்ய முடிந்தது. இந்த ஆட்டமே ரொனால்டோவின் ராஜ்ஜியம் தான். முதல் ஹேட் ட்ரிக். கோலுக்கு அருகிலேயே இரண்டு தப்பாட்ட்த் தண்டனை ஷாட்கள் கிடைத்தன. வளைந்து நெளிந்து அழகாக கோலாகின; நடுவில் ஒரு பெனல்ட்டி ஷாட்.

அடுத்து நம்ம ஆளுக ப்ரேசில் - நெய்மர் நம்ம பையன நினச்சி உட்கார்ந்தேன். சுவிட்சர்லாந்துடன் போட்டி. எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். பந்து காலுக்கு வந்ததும் பையன் சில வினாடிகள் தியானத்தில் மூழ்கி விடுவது போல் இருந்தது. பந்து வந்ததுமே கொஞ்சம் யோசிப்ப்பது போலிருந்ததுஆனாலும் பையன் பாவம் தான். எப்போதும் மூன்று அல்லது நான்கு ஆட்கள் அவரை அரண் கட்டி நிற்கிறார்கள். அது பத்தாது என்பது போல் ஓடும் போது சட்டையைப் பிடித்து இழுக்கவே எதிராளிகள் தயாராக இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு முறை சட்டை இழுக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். He did not have any space at all. பாவம். ஆனாலும் ரஷ்யா 5 கோல் போட்ட்தைப் பார்த்த பிறகு ப்ரேசிலும் நாலைந்து கோல் சுவிட்சர்லாந்திற்குப் போட்டு விடும் என்று நினைத்து உட்கார்ந்தேன். 1 : 1 என்ற கோல் கணக்கு ரொம்ப உதைக்குது. எல்லாமே short passes தான். ப்ரேசிலும், நெய்மரும் எதிர்பார்க்கும் அளவிற்கு வரமாட்டார்களோ என்ற அச்சம் வர ஆரம்பித்தது.

ஸ்பெயின், ப்ரேசில் இரண்டும் இப்படி என்றால் அடுத்து மிக அதிகமாக எதிர் பார்க்கப்படும் ஜெர்மனி மெக்சிகோவிடம் 0 :1 என்ற கணக்கில் தோற்றது என்பது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. அதோடு இதுவரை பார்த்த அனைத்து ஆட்டங்களிலும் மெக்சிகோவின் ஆட்டம் தான் எனக்குப் பிடித்தது. passes எல்லாமே சரியாக இருந்தன.

இரண்டு அணி இப்படி போச்சேன்னு பார்த்தால் அர்ஜெண்டினா நிலை படு மோசமாகி விட்டது. ரஷ்யா சவுதிக்குப் போட்டது போல் நிறைய கோல்களை ஐஸ்லாந்திற்குப் போட்டு விடும்.... ரொனால்டோ ஹேட்ரிக் மாதிரி மெஸ்ஸி கோல் போடப்போகிறார் என்று உட்கார்ந்திருந்தால் கிடைத்த ஒரு பெனல்டி கிக்கை வெளியே அடித்து எல்லோரையும் அடித்து நொறுக்கி விட்டார் மெஸ்ஸி! ஐஸ்லந்தின் 7ம் நம்பர் ஆட்டக்காரர் மிக நன்றாக விளையாடினார். ஆனால் பாவம் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை போலும். பல முறை அவரது கோலடிக்கும் முயற்சி தப்பிப் போனது.1 : 1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா தப்பித்தது.