Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Saturday, January 26, 2019

1028. AUSTRALIAN OPEN 2019 ...4





*




இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதியாட்டம் பார்க்கும் போது பழைய்ய்ய ஞாபகம் ஒன்று வந்தது.

இன்று முதலாட்டத்தில் ஜப்பானிய ஓசாகாவின் கை ஓங்கியிருந்தது. வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டமும் வேகமாக நடந்தது. இரண்டாவது செட்டில் எதிராளியைத் தோற்கடிக்கும் நிலைக்கு வந்தார். 5:4 என்ற முன்னிலையில்  40:0  என்ற நிலைக்கு வந்தார், மூன்று செர்வ்கள் இருந்தன. மூன்றில் ஒன்றை ஒழுங்காக விளையாடியிருந்தால் வெற்றி அவருடையதே. ஆனால் ஒவ்வொரு பாய்ண்ட்டும் கை நழுவிப் போய்க் கொண்டிருந்தது. எதிராளி - விட்டோவா - இரண்டாம் செட்டைக் கவ்விக் கொண்டு போனார்,

அடுத்த செட் ஆரம்பித்த போது அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த சபாட்டினி இதே போல் ஒரு ஆட்டத்தில் 6 : 1, அடுத்த ஆட்டத்தில் 5- 1 என்ற நிலையில் செர்வ் செய்ய ஆரம்பித்து பெர்னாண்டஸ் என்ற எதிராளியிடம் தோல்வியுற்றார். அப்போது ’’till you win the last ball, the game is anybody's  என்று தினசரியில் வாசித்த நினைவு. அதே நினைவு மீண்டும் வந்தது. மூன்றாம் செட்டின் ஆரம்பமும் விட்டோவாவிற்குச் சாதகமாகவே ஆரம்பித்தது.


அவ்வளவு தான்... ஒசாகா தோற்றுவிடுவார் என்று தோன்றியது. போட்டியையும் தொடர்ந்து பார்க்க முடியாது போனது. ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது போட்டி முடிவு என்ன என்று ஆண்டவரிடம் கேட்டேன். கூகுள் ஆண்டவர் ஒசாகா வென்று விட்டதாகச் சொன்னார்.   

மகிழ்ச்சி .......









*


Friday, January 25, 2019

1027. AUSTRALIAN OPEN 2019 ...3





*




செரீனா ... மூன்றாவது போட்டியில் 5:1 என்றிருந்தும் தோல்வியுற்றது சோகம் தான். இன்னும் ஒரு க்ராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்றால் அவருக்கான என் ஆதரவை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். முடியாமல் போனது. கொஞ்சம் சோகம் தான்.

நம்ம ஆளு நடால், ஜோக்கோவிச் இருவருமே அரையிறுதி ஆட்டத்தை எளிதாக வென்றார்கள். ஸ்கோர் கூட ஏறத்தாழ ஒரே மாதிரி. மூன்றே ஆட்டம் ... போட்டி இனிதே முடிந்தது.
இனி இவர்களுக்குள் போட்டி. நடால் வெல்லட்டும், இன்னும் மூன்று க்ராண்ட் ஸ்லாம் பரிசுகள் (என் கணக்கில்) அவருக்கு மீதியுள்ளது. வெல்ல வாழ்த்துகள்.

பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ... அட உடுங்க... யார் ஜெயித்தால் என்ன!

சீனியர் legends ஆண்கள் ஆட்டம் ஒன்று நடந்தது. அதிர்ஷ்டம் தான். பார்க்க நன்றாக இருந்தது. நரைத்த பெரிய மீசை ஆளு அசத்தல். நல்ல sense of humour. அந்தக் காலத்தில் எப்படி ஆடியிருப்பாரோ? நானும் இப்போது ரொம்ப வயசாயிருக்குமோன்னு நினச்சேன். 63 தானாம்! நம்ம பக்கத்தில நெருங்க முடியுமா?









*




Monday, January 21, 2019

1026. AUSTRALIAN OPEN 2019 ...2




*

இன்னைக்கி காலைல யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. இப்படியா ஒரு டென்னிஸ் போட்டிய பார்க்கணும். விளையாடியது நாலாவது சுற்று. Pre-quarter final. செவ்ரெவ்(4)- ராகோனிக்(16) நடுவில் போட்டி. முடிவு 6:1; 6:1: 7:6

முதல் இரு செட்டுகளிலும் ஒரு “செட்டு” மேளம் மட்டுமே கேட்டுது. ராகோனிக் விளையாடினார்.  பாவம்.. செவ்ரெவ். புதிய சில விளையாட்டுகளை விளையாட முயற்சித்தார் போலும். அதாவது, தன் ராக்கெட்டை தரையில் எத்தனை தடவை அடித்து, அதை உருப்பெறாமல் செய்ய வேண்டும் என்பதை அழகாகச் செய்து காண்பித்தார்.



அதை அடுத்து இன்னொரு பிரமாண்ட record உருவாக்கினார். அதிக முறை ஒரு ஆட்டக்காரர் Double faults வைப்பதில் அநேகமாக ஒரு ரிக்கார்ட் வைக்க முயற்சித்தார். மொத்தம் 10 Double faults. அசகாய சூரர் தான்!

மூன்றாவது செட்டில் ராகோனிக் ரொம்ப பாவப்பட ஆரம்பித்து விட்டார். எத்தனை வில்லத்தனம் பண்ணினாலும் நம் சீரியல் கதாநாயகிகள் கோபப்படாமல், விரோதிகளுக்கும் நல்லதே செய்வார்களே, அது மாதிரி ராகோனிக் தன் எதிராளி மேல் பாவப்பட ஆரம்பித்து விட்டார். கடைசி இரு கேம்களில் ராகோனிக் டென்னிஸ் சொல்லிக் கொடுக்கும் போது கோச் எதிர் கோர்ட்டில் இருந்து எதிராளி அடிப்பதற்காகவே எளிதாக, அவர் கையில் கிடைக்கும்படி அடிப்பார்களே ... அதே மாதிரி செவ்ரேவ் கைகளுக்கே பந்து கிடைப்பது போல்  பந்தைத் “தட்டிக் கொடுத்து” ஆடினார். 

இத்தனை சலுகை கிடைத்தாலும் செவ்ரெவ் தொடர்ந்து தன் ஆட்டமின்மையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். எனக்கே சந்தேகம் வர... தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் போய் அவரது தரம் நிஜமாகவே நான்கு தானா என்று அருகில் போய் சரி பார்த்தேன். 

அடேய் தம்பி .. செவ்ரெவ் எப்படிப்பா இப்படியெல்லாம் விளையாடி நாலாவது தரம் பெற்றாய்? அல்லது இன்று மட்டும் தான் உன் ஆட்டம் இப்படியா? என்னமோ போ ... நீ தோற்றவரை எனக்கு மகிழ்ச்சி தான்.






*


Sunday, January 20, 2019

1025. AUSTRALIAN OPEN 2019 ...1




*



யாரையாவது டிவில கூட டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கக் கூடாதுன்னு நினச்சீங்கன்னா ஒரு நல்ல வழியை நேற்றும் இன்றும் கண்டுபிடிச்சேன். 6வது தர விளையாட்டுக்காரர் சிலிக் அப்டின்னு ஒருத்தர் இருக்கிறார். அவர் விளையாட்டை பத்துப் பதினைந்து நிமிடம் பார்த்து விட்டாலே அதன் பிறகு யாருக்கும் டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கவே பிடிக்காமல் போய்விடும்.

மனுஷன் செர்வ் செய்வதற்கு முன் பந்தைத் தரையில் தட்டி.. தட்டி .. தட்டி அதன் பின் செர்வ் செய்வார், விடிந்து விடும் பொழுது. இப்படியா 18-20 தடவை பந்தைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருப்பார்கள். நாமளும் அதை விதியேன்னு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளை நான் பார்த்த போட்டியில் ஜெயித்தவர் அடுத்த நாள் தோற்று விட்டார். அப்பாடா ...!
******

இன்று (20.1019) பெடரரை ஒரு சின்னப் பையன் வெற்றி பெற்று விட்டான். ஏன் சின்னப் பையன்னு சொல்றேன்னா ... அவன் பெயரை எப்படி எழுதுவது, சொல்லுவது என்று தெரியவில்லை. சரி.. நம்ம கடைசி சோர்ஸ் ‘கடவுள்’ தானே. அதனால் கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன். அவர் இந்தப் படத்தைப் பார் என்று சொல்லி விட்டார். அதைப் பார்த்த பிறகும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லிக் கொடுங்கள்.


முதல் இரு செட்கள் பார்க்கவில்லை. அதன்பின் பார்க்க ஆரம்பித்தேன். பையனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. தம்பி பக்கம் நின்னு விசிலடித்தேன். பெடரர் இதுவரை நெட்டை ஒட்டி ட்ராப் போட்டு எதிராளியை ஏமாற்றி பாய்ண்ட் எடுப்பதை இதுவரை பார்த்ததில்லை. அதுவும் செய்து முயற்சித்தார். இருந்தும் பயனில்லை. அடிக்கு அடி பையன் திருப்பி அழகாக அடித்தான். போட்டி பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.

*****

யோசித்துப் பார்த்தேன். இந்தப் பையன் நடால், ஜோகோவிச் இவர்களை எதிர்த்து ஆடினால் நான் யார் பக்கம் இருந்து விசிலடிப்பேன் என்று யோசித்தேன். டாப் இருவரில் எப்போதும் நான் நடால் பக்கம் தான்.

ஆனால் ... இந்த தடவை .... தெரியவில்லை!







*




Sunday, December 21, 2014

810. INDIAN SUPER LEAGUE





*  

ISL போட்டிகள் முடிவடைந்தன.

அரையிறுதி ஆட்டங்களில் பாவம் ... நம்ம சென்னையின் அணி. லீக் ஆட்டத்தில் இரு முறை கேரளா அணியை வென்றிருந்தார்கள். மறுபடி அரையிறுதியில் இரு ஆட்டங்கள். நன்றாக ஆடியும் முதல் ஆட்டத்தில் மூன்று கோல்கள் வாங்கினார்கள். இரண்டாம் சுற்றில் மூன்றுக்கு மூன்று என்று கொண்டு வந்தார்கள், ஆனால் கடைசியில் கேரளா அணி 3:1 என்று கடைசி கோலடித்து இறுதிப் போட்டிக்குத் தேர்வானது. விரும்பிய சென்னை அணி தோற்றது.

அடுத்த அரையிறுதியில் கொல்கத்தா அணியும் கோவா அணியும் மோதின. இரண்டு சுற்றிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது சுற்றில் கோவா அணியின் கையே --- இல்லை..இல்லை... காலே மேலோங்கியிருந்தது. ஆனாலும் ஒரு கோல் மூலம் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு வந்தது.

இறுதிப் போட்டி கொல்கத்தா அணிக்கும் கேரளா அணிக்கும்.  முதலிலிருந்தே கேரளா அணியின் பக்கமே பந்து இருந்தது. அவ்வப்போது இரு கோல்கள் பக்கம் பந்து அயாயகரமாகச் சென்று ஆர்வத்தைத் தூண்டியது. வழக்கமாக பந்து ஒரு அணியிடமே அதிகமாக இருக்கும் போது சடாரென எதிர்த்த அணி பக்கம் கோல் விழுவதுண்டு. அதே போல் இந்த முறையும் நடக்கும் என்று என்  கோழி சொல்லியது.  புள்ளி விவரம்கேரளா: கொல்கத்தா  70:30 என்ற கணக்கு காட்டியது. இருந்தும் பந்து கோவா அணிக்கும் அவ்வப்போது பயம் காட்டியது. கோல்கள் விழாமல் கடைசி வரை போராட்டம் நீடித்தது. நீட்டிப்பு காலம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதில் முதல் நிமிடத்தில் ரபீக் தலையால் மோதி கோவாவிற்கு கோல் போட்டார்; வெற்றி கல்கத்தாவிற்கு. இப்போட்டியிலும் விரும்பிய கேரளா அணி தோற்றது.

அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விரும்பிய அணிகள் தோற்றன.ஆனாலும் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்த பின், கால்பந்தில் ஆர்வம் மிக்க மாநிலங்களே வெற்றி பெற்றுள்ளன. இரு பெரிய அணிகள் வைத்து முழு ஆர்வம் காட்டும் கொல்கத்தா அணிக்கு முதலிடம். அதன் பின் கேரளா. அடுத்து கோவா. ஒரு சந்தோஷம் நாலாவது இடம் நமது மாநிலத்திற்கு! கணக்கு சரிதான்!

இதில் ஆச்சரியப்பட வேண்டிய பல விஷயங்கள் நடந்துள்ளன.

*  விஜய் டிவி நேரடி ஒலிபரப்பை எடுத்துக் கொண்டது. ஆச்சரியாக இருந்தது.. இருந்திருந்து கால்பந்திற்கு நேரடி ஒலிபரப்பா ...? அதுவும் தமிழ் நாட்டில்...! அடடே... என்ன ஆச்சரியம். இதற்காகவே விஜய் டிவிக்கு நன்றி.

*  என்னங்க இது ... அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. மக்களிடம் கால்பந்திற்கு இவ்வளவு ஆர்வமா! ஆச்சரியம் ... மகிழ்ச்சி. It is not the end; it is not even the beginning of the end; but just end of the beginning ....என்ற சர்ச்சிலின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.கால்பந்து விளையாட்டுக்கும் காலம் வரும் போலும்.

*  கால்பந்து விளையாட்டை இவ்வளவு ஆர்வத்துடன் மேலெடுத்து வந்த ரிலையன்ஸ், ஹீரோ போன்ற ஆர்வலர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தின் நன்றி இருக்கும் என்று நம்புகிறேன்.

*  ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி இவ்வளவு கால்பந்து பரவுவதில் ஆர்வம். ஆயினும் அவர்கள் நம் நன்றிக்குரியவர்களே.

*  இந்தி நடிகர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர். நம்மூர் ஆட்கள் யாரும் இதில் கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை; கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர்களுக்கும் நன்றி.

*  கால்பந்து வீர்ர்களுக்கான பரிசுகள் ஆயிரங்களில்  இருந்தன. ஒரு வேளை கிரிக்கெட் போட்டி வீரர்களை இந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். அவர்களுக்கு லட்சங்களில் பரிசு வரலாம். பாவம் .. கால்பந்து வீரர்களுக்கு ஆயிரத்தில் மட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

*  போட்டியில் தரம் சிறப்பாக இருந்தது என்றே நினைக்கின்றேன். ஆனாலும் ஒரே வருத்தம். நம்மூர் ஆட்கள் மிகவும் கம்மியான எண்ணிக்கையில் இருந்தார்கள். இந்த போட்டி இனி ஒவ்வொரு வருடமும் நடக்கலாம்; நடக்க வேண்டும். அப்போதெல்லாம், நம்மூர் ஆட்களுக்குக் கட்டாயம் இந்த அணிகளில் கட்டாயம் இடம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50:50 என்றாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அணியில் கணக்கிற்காக மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கெடுப்பதற்காக ISLக்கு முன்பாகவே பல போட்டிகள் நடந்து அவைகளில் நம்மூர் வீரர்கள் பங்கெடுத்து, அதன் மூலம் இப்போட்டிகளில் இடம் பிடிக்க வேண்டும். .......... எல்லாம் ஆசை தான். எவ்வளவு தூரம் நடக்குமோ.... காத்திருந்து பார்க்க வேண்டும்.



... *

Saturday, November 23, 2013

698. நாங்களும் செஸ் விளையாடினோம் ...!






*




 கல்லூரிக்கு வேலைக்குப் போன பின் நண்பர்களோடு காசில்லாத நேரத்தில் விளையாடுவதற்காகவே செஸ் பழகினோம். இரண்டு வருஷம் அடிக்கடி விளையாடுவோம். இந்தியன் எகஸ்பிரஸில் வரும் white wins in two moves எல்லாம் போட்டுப் பழகினோம். அதன் பின் செஸ் பக்கம் போகவேயில்லை. பின்னாளில் மகள்கள் இருவருக்கும் சொல்லிக் கொடுத்தேன். ம்ம்..ம்.. ஒண்ணும் தேறலை. உட்டுட்டேன்.


 ஏறத்தாழ ஒரு இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன் ஒருவனோடு அவனது நண்பரைப் பார்க்கப் போயிருந்தோம். அவர்கள் இருவரும் அப்போது தான் I.P.S.ஆப்பீசர்களாக ஆகியிருந்தார்கள். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினோம். போரடித்தது. அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்த போது நண்பனின் நண்பர் செஸ் விளையாடுவோமா என்று கேட்டார். எனக்கு ரொம்ப தெரியாதுன்னேன். ’கொஞ்சம் தெரியுமல்ல .. அதை வைத்து விளையாடலாம்’ என்றார். நீங்கள் இரண்டு பேரும் விளையாடுங்கள். நான் வேடிக்கை பார்க்கிறேன் என்றேன். அட .. மூன்று பேரும் விளையாடலாம் என்றார் அந்த நண்பனின் நண்பர். அது எப்படியென்றேன். நான் இரண்டு பேரோடும் விளையாடுகிறேன் என்றார். அதிலும் நான் blind chess விளையாடுகிறேன் என்றார். அது என்னங்க என்றேன். நீங்கள் சாதாரணமாக விளையாடுங்கள்; நான் முதுகைக் காண்பித்துக் கொண்டு உட்காருகிறேன். போர்டை பார்க்காமலேயே விளையாடுகிறேன் என்றார். அது எப்படிங்க என்றேன். வாங்க விளையாடுவோம் என்று களத்தில் குதித்தார்.


 முதுகைக் காண்பித்து உட்கார்ந்தார். நாங்கள் இருவரும் ஆளுக்கொரு போர்டில் விளையாட உட்கார்ந்தோம். மனுஷன் திரும்பியே பார்க்காமல், மனசுக்குள்ளேயே நினைவு வைத்து எங்கள் இருவரோடும் அடுத்தடுத்து விளையாடினார். அசந்து விட்டேன். எபடிங்க மனசுல அம்புட்டையும் ஞாபகம் வச்சி விளையாடினாரோ ... கொஞ்ச நேரம் விளையாடினோம்.


நமது அடுத்த மூவ் என்று யோசிப்பதற்குப் பதில் அவர் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ப முடியாத அளவிற்கு அவர் அடுத்தடுத்த மூவ்களை மிகச் சரியாகச் செய்தார். அம்புட்டு ஆச்சரியம். கொஞ்ச நேரம் பார்த்தேன். என்னடா மனுசனுக்கு இம்புட்டு ஞாபக சக்தியான்னு நினச்சிக்கிட்டே ... இப்படி பண்ணிப் பார்ப்போமா என்று நினைத்து, எனது பீஸ் ஒன்றை இடம் மாற்றி வைத்தேன். அடுத்து அவர் இரண்டு மூவ் சொன்னார். இரண்டாவது மூவில் நான் ’இல்லைங்க .. அந்த இடத்தில் என் பீஸ் இருக்குது’ என்றேன். அப்டியா என்றார், கொஞ்சம் யோசித்து விட்டு முதலில் சரியாக இருந்த இடங்களைப் புட்டு புட்டு வைத்தார். சொல்லிட்டு .. நீங்க ‘விளையாடிட்டீங்களா?” என்று கேட்டுச் சிரித்தார்.

உண்மையைச் சொன்னேன். ஆச்சரியம் தாங்காமல் எப்படிங்க இதெல்லாம் என்றேன். பழக்கம் தான் என்றார். செஸ்ஸில் எந்த அளவிற்குப் போனீர்கள் என்றேன். கோவை மாவட்ட அளவு வரை போய் போட்டிகளில் வென்றிருக்கிறேன் என்றார்.

இது எனக்கு அடுத்த அடி! வெறும் மாவட்ட அளவில் விளையாடும் ஆளே இப்படி ரெண்டு பேரை வைத்து blind chess விளையாட முடிந்தால், பெரும் நிலைகளுக்குச் சென்றவர்கள் எப்படி ஆடுவார்கள்.


 நினைக்கவே தலை சுற்றுகிறது!


 ஆமாம் ... உங்களில் யாரேனும் இந்த blind chess விளையாடுவீங்களா? அப்படி யாரும் இருந்தால் இந்த மாயா ஜாலம் எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.


 ஆனந்த் ஒரு ஆட்டம் கூட ஜெயிக்காமல் போய்ட்டாரே .... :(




 *


 

Friday, June 07, 2013

659. FRENCH OPEN 2013 - வாரே .. வாவ் ...!! அரை இறுதியில் நாடல் வெற்றி






*

Rafael Nadal beats Novak Djokovic to reach eighth French Open final



French Open-ல் நாடல் ஜெயிக்கணும்னு ஆசை.

ஆனால் மேட்ச் எங்க டிவியில வரலை.

இப்போ B.B.C.- ல ஆன் லைன் ஸ்கோர் போடுறாங்க. அஞ்சாவது செட்ல இப்போ ரெண்டு பேரும் 7-7. மாறி மாறி ஜெயிக்கிறாங்க.

யாரு ஜெயிச்சாலும் ரிக்கார்ட் செய்றாங்க.

நாடல் ஜெயிச்சா 8 வது தடவை ஒரே பந்தயத்தை வென்ற முதல் ஆள். 
சே ... கட்டாயம் ஜெயிக்கணும்.

ஜோக்கோவிச் ஜெயிச்சா அவருக்கு முதல் French Open.

இந்த தடவை உட்டா அடுத்த தடவை வேணும்னா எடுத்துக்கட்டும். இப்போ நாடல் ஜெயிக்கணும்.

ஸ்கோர் பாத்துட்டு வர்ரேன்.

நாடல் 8 : 7 அடுத்து ஜோக்கோவிச் செர்வீஸ் ... நாடல் லீட். எப்படி போகுதோ...?

சே .. இந்த தடவை டிவியில பார்க்க முடியாம போச்சே ...

ஸ்கோர் பார்க்கணும் .. கேம் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் நாடல் 8 : 7.

ஏன் மனசு இப்படி படக் .. படக்குன்னு அடிக்குது!



ஆஹா.... நாடல் ஜெயிச்சாச்சு. விசில் அடிக்கணும் போல் இருக்கு....!  


Nadal wins 9-7 in fifth set to reach the final
Djokovic wins 4th set 7-6 (7-3) in a tie-break
 Nadal breaks twice to win 3rd 6-1 in 37 mins
Djokovic wins second set 6-3 in 45 minutes
Nadal takes first set 6-4 in 51 minutes

அம்மாடி ... இனி பைனல்ஸில தல வந்திருவாரு ...


================================



சரி .. அப்படியே பைனல்ஸில் செரினாவும் வெல்லட்டும்.



*  

9.6.2013

தல ஈசியா ஜெயிச்சிருவாருன்னு நினைக்கிறேன்.  

முதல் செட்: 6 : 3 ஸ்கோரை சும்மா நெட் பேப்பர்ல பாத்து தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு ...ஆட்டத்தைக்  கண்ணால பார்க்க முடியலையே .. :-(  

இரண்டாவது செட் இப்போ .. 3 : 0; ... 3 : 1; .. 4 : 1; .. 5 : 2; .. 6 : 2.

மூணாவது செட்: தல இப்போ முடிச்சிரும் ...ஸ்ட்ரெய்ட் வெற்றி தான் .. 1 : 0; . 2 : 2; .. 3 : 2; .. 3 : 3; .. 4 : 3; .. 5 : 3; .. 15:15.. 30:15..40:15 .. என்ன ஆச்சு .. சத்தமே காணோம் ,, 6 : 3  

தல ஜெயிச்சாச்சே .............! 





*