Thursday, October 27, 2016

913. மதங்களும் ... சில விவாதங்களும் ... நூலைப்பற்றி சில வார்த்தைகள்


*


மானமிகு பேராசிரியர் தருமி அவர்களுக்கு,

வணக்கம்.நலம்காண விழைகிறேன்.

தங்களின் மதங்களும் சில விவாதங்களும் என்ற தலைப்படங்கிய நூலினை தஞ்சாவூர் வேர்ட்ஸ்வொர்த் புத்தக நிலையத்தில் பெற்று படித்திடும் வாய்ப்புகிடைத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

அறிவார்ந்த விளக்கங்கள்.விமர்சனங்கள்


 உளமார்ந்த பாராட்டுக்கள்

 அன்புடன்.


  உரத்தநாடு இரா.குணசேகரன்


 *

Thursday, October 20, 2016

912. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு*

K.V. KRISHNASWAMI writes ....

வணக்கம்.

சென்னை ராயபேட்டையில் நடந்த புத்தக கண்காட்சியில் தங்கள் புத்தகத்தை அதன் தலைப்பை கண்டவுடன் உடனே வாங்கவேண்டும் என்கிற அவா தோன்றியது. காரணம், நான் சாதி-மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்கிற தீவிர கொள்கையுடையவன். 1982ல் "இந்திய தேசிய சமதர்ம சங்கம்" என்கிற பெயரில் ஒரு சமூதாய இயக்கத்தை நடத்தி வந்தேன். ஆனால் நான் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இன்றைய மக்கள் சினிமாவையும் அரசியலையும் தானே விரும்புகிறார்கள் என்பதால் பிறகு அதையே ஹிந்துஸ்தான் தேசிய கட்சி என்று அரசியல் கட்சியாக பதிவு செய்து மிக எளிய முறையில் சேவை மனப்பான்மையுடன் முன்னேற்ற பாடுபட்டு கொண்டிருக்கிறேன். எனவே இது சம்பந்தமாக அரசியல் ரீதியாக அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

தங்கள் புத்தகத்தை வாங்கி புத்தக stallஐ விட்டு வெளியேரும்போதே புத்தகத்தை விரித்தபோது தருமி என்கிற புனைபெயரில் G.Sam George எழுதியிருக்கிறாரே? இவர் கிருத்துவத்தை போற்றித்தானே எழுதியிருப்பார் என்று துணுக்குற்றேன். பிறகு பேருந்தில் அமர்ந்தவுடன் என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று புத்தகத்தை புரட்டி முன்னுரையின் இரண்டாம் பத்தி கண்ணில் பட்டவுடன் என் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு மொத்தமும் ஒரே மூச்சில் படித்தபின் முதலில் ஏற்பட்ட தவறான எண்ணத்திற்கு உளமார வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டுவிட்டேன். 

தங்களின் புத்தகத்தில் உள்ளது அத்தனையும் பெரும் மதிப்புக்குரிய செய்திகள். இதை ஊன்றி படித்தவர்கள் கண்டிப்பாக சாதி மதத்தைப்பற்றி யோசிக்க தூண்டப்படுவார்கள். யார் மனதையும் புண் படுத்தாமல் , எந்த மதத்தையும் குறைகூறாமல் மிக அழகாக வேதங்களில் உள்ள ஓட்டைகளை வெளிபடுத்தி மதங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது தங்கள் புத்தகம். நன்றி.

தங்கள் சேவை மேலும் தொடர வேண்டுகிறேன்.


 தங்கள்,

 K.V.Krishnaswami.
 Jan 25, 16

 *

Wednesday, October 19, 2016

911. தமிழுக்கும் எனக்கும் நடக்கும் நீண்ட நெடும் போர் .......

* இன்றைக்கு இன்னொரு கூத்து.

இப்போதெல்லாம் தமிழில் தட்டச்ச தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் வேலையை செய்ய வேண்டியதாகி விட்டது. Windows 10.1 version போட்டதிலிருந்து ஒரு தலைவலி போய் அடுத்த தலைவலின்னு வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது. NHM writer, e-kalappai…. எதுவும் வேலைக்காகவில்லை. இப்போது அது இது என்று சுற்றித் திரிந்து விட்டு google tools வழியாக கஷ்டப்பட்டு ஏதேதோ தட்டச்சி பொழப்பை ஒரு மாதிரியாக ஒட்டிக் கொண்டிருக்கிறேன். பல கஷ்டங்கள்.... அதில் ஒன்று ‘ஞ்’ என்ற எழுத்துக்கு நெடில் எப்படி தட்டச்சுவது என்றே தெரியவில்லை.

 ------------------------------

இப்போது தமிழில் தனியாகத் தட்டச்சி அதை என் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். Publish என்பதை அழுத்தி விட்டு பதிவைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். என்ன ஆச்சோ ... ஏது ஆச்சோ ... தெரியவில்லை. நான் தமிழில் தட்டச்சியது எப்படியோ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி என்னைப் பார்த்து முழித்து நின்றது. அதை வாசித்து விட்டு நானும் முழித்து நின்றேன். அப்படி ஒரு அழகிய மொழிபெயர்ப்பு!!!! நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 ------------------------------

 அடுத்துவரும் முதல் பத்தி நான் தமிழில் எழுதியது. அடுத்து இரண்டாம் பத்தி அதுவாகவே மொழி பெயர்ப்பாகி நின்ற கோலம்.

 --------------------------------

 ' ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ' சிடி சினிமாவில் ஓடியது போல் எனக்கு ஒரு நினைவு. நிச்சயமாகத் தெரியாது.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது. நாயக்கர் மகாலில் இருந்து பார்த்தால் சிந்தாமணி தியேட்டரின் elevation வித்தியாசமாகத் தெரியும். அதன் நடுப்பகுதி பழைய காமிராவில் உள்ள bellows மாதிரி இருக்கும். அப்படி டிசைன் செய்திருக்கிறார்கள்.

முதன் முதல் கலர்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த தியேட்டரில் வந்தது. படம் பார்க்கனும்னு அப்பாட்ட கேட்டதும் பக்கத்து வீட்டில் இருந்தவர், என் நண்பனின் அப்பா அந்த தியேட்டரின் ஆப்பரேடர் ஆக இருந்தார். அவரோடு அனுப்பி வைத்தார்கள். அவர் மாட்னி நடக்கும் போதே என்னை உட்கார வைத்து விட்டுப் போய் விட்டார். படம் முடிந்ததும் எல்லோரும் போய் விட்டார்கள். நான் மட்டும் தியேட்டர் மெத்தையில் கடைசி வரிசையில் தனியாக உட்கார்ந்திருந்தேன். முருக்கு வந்தது. சாப்பிட்டுக் கொண்டு 'அம்பேல்' என்று உட்கார்ந்திருந்தேன். அதன் பின் மாலைப் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன். 

 ------------------------------------

Blogger Tarumi said ... 

 'Apoorva Chintamani bought a thousand head, "I have a memory like CD and ran in the cinema. We do not know. 

There comes to mind. From the elevation of the theater Chintamani Nayak Mahal incorporating knew differently. In its mid old bellows camera model. Design done so. 

The first came in this theater kalarpatam Alibaba and forty thieves. Image parkkanumnu appatta neighbor had heard, my friend's father was the theater of the operator. He was sent to. Matni happens when he went from me to sit. The film was finished, everyone was gone. I sat alone in the last row of the theater of the mattress. Was mur. Eating 'ampel he sat down. After that evening I came home from watching the film. 

======================
இப்படம் வந்த ஆண்டு 1955. என் வயது அப்போது 11

===========================


இப்படி மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்???
*

Saturday, October 15, 2016

910. சின்ன artist .........

* U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.

அக்காளுக்கு நல்ல போட்டிதான்.
 கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.
NO  PLASTIC  BAG!


FLOWERS
அம்மா,  அக்காவுடன்
BIG  BOAT
SMALL  OCCUPIED  BOAT ON  WAVES

அம்மா,  அக்காவுடன்


******
அக்கா  வரைந்தது ....


 *

Monday, October 10, 2016

909. ஆண்டவன் கட்டளை

* இந்தப் படத்தைப் பற்றி ரிவர்சில் சொல்லப் போகிறேன்.


படம் முடிந்து வெளியே வந்ததும் ஒரே ஆச்சரியம். அத்தனை இருசக்கர வாகனங்கள் வெளியே இருந்தன. ரொம்ப நாளாச்சு ... இத்தனை வாகனங்களை தியேட்டரில் பார்ப்பது. ஒரே தியேட்டர் காம்ப்ளக்சில்  இரண்டு படம் .. ஒரு வேளை அதனால் கூட இருக்கலாம்!

படம் முடியும் போது “சுபம்” அப்டின்னு திரையில் எழுத்துகள் வந்தன. அந்தக் காலத்தில சுபம் / வணக்கம் அப்டின்னு தான் படங்கள் முடியும். இப்போவெல்லாம் A film by ….. அப்டின்னு டைரடக்கர் பெயர் தானே வரும். ரொம்ப காலத்திற்குப் பிறகு படம் முடிஞ்சி வெளிய வரும்போது சுபம்னு வாசிச்சது சுகமாக இருந்தது.

படம் முடியிற சமயத்தில திடிர்னு எனக்கே ஆச்சரியம். என் வாய் ‘ஈ” என்று இளித்துக் கொண்டிருந்தது. எனக்கே ஆச்சரியம் ... படத்தோடு அப்படி ஒன்றிவிட்டேன் போலும். கதையோடு ஒட்டி இணைஞ்சிட்டேன். படத்தின் மகிழ்ச்சி மனதில் ஊறி ஒன்றி விட்டது என்பதை உணர்ந்து மறுபடி முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டேன். படம் முடிஞ்சி வெளியே போகும்போது அப்படி “ஈ”ன்னு இளிச்சிக்கிட்டே போனா நல்லாவா இருக்கும்?

படத்தில romance கடைசி ஐந்து நிமிடம் மட்டுமே. நம்ம தமிழ்ப் படங்களில் இதுவே ஒரு பெரும் புரட்சிதான். கடைசி சீனில் காதலிக்கு ‘காந்தி’ – அதான் கதாநாயகனின் பெயர் – விமான நிலையத்தில் டாட்டா சொல்லும்போது மாமியார் ஒரு வினாடி முகத்தை, அதைக் கண்டு கொள்ளாதது போல் வெட்கத்தோடு மறுபக்கம் திருப்பும் வினாடி அழகு.

இந்தக் கதாநாயகி உலகப் பெரும் ஆச்சரியமாக இருக்கிறார். முதல் படத்தில் குத்துச் சண்டை என்பதால் நன்கு நடித்தாரோ என்று நினைத்தேன். இந்தப் படத்திலும் அவரது ஸ்கோர் செமையாக இருக்கிறது. புது நடிகை .. புது மொழி.. என்று எந்த தடையும் இன்றி இயல்பாக, அழகாக நடிக்கிறார் ... இல்லை... இல்லை ... வாழ்ந்து விடுகிறார். இவரோடு நடித்தால் கதாநாயகர்கள் ஜாக்கிரதையாக ஒழுங்காக நடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் இவர் அவர்களைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போலும்.

Passport officer ஒரே வினாடியில் பிரச்சனையை அனுசரணையாக முடித்து விடுவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது. ஒரு வேளை அதுதான் ஆண்டவன் கட்டளையோ என்னவோ!

இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி தத்ருபமாக ஒரு கோர்ட் சீனைக் காண்பித்ததாக நினைவில் இல்லை. அப்படியே அச்சு அசலாக இருக்குமே .. அப்படி ஒரு thickly packed dingy and dirty room. Thank you art director. அந்த அறையில் இருக்கும் கூட்டம் ... கண்ணில் படும் ஆ ட்கள் ... பல வகை வகையான முகங்கள்  .. மேசை மேல் குவிந்திருக்கும் பைல்களின் குவியல்கள் .. இடமில்லாத மக்கள் நெருக்கம் .... டைரக்டர் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது போல் என்பார்களே அது போல் உன்னிப்பாகக் கவனித்து செய்திருப்பது நன்கு தெரிகிறது.

கூத்துப்பட்டறை ஆட்கள் படத்தில் நிறைய என்று நினைக்கிறேன். அங்குள்ள அரங்கம், ஓப்பனை, ஒத்திகை, ‘ஐயா’வின் மேல் உள்ள பக்தி.. மரியாதை... எல்லாமே கூத்துப்பட்டறை இப்படித்தான் இருக்கும் என்று நானே உருவகப்படுத்திக் கொண்டேன். வக்கீலாக வருபவரை கூத்துப்பட்டறை  நிகழ்ச்சி ஒன்றில் எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அப்போது அவர் நன்கு வளர்ந்து விடுவார் என நினைத்திருந்தேன்.

இந்தப் படத்தில் அவரும் அவரது அழகான ஜூனியரும் அசத்தலான மேட்ச். ஜூனியருக்கு சின்ன ரோல் தான் .. ஆனால் .. அசத்தி விட்டார். இலங்கை அகதியாக வரும் அரவிந்தனிலிருந்து ஒவ்வொரு சின்ன சின்ன பாத்திரங்களிலும் வருபவர்கள் என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளக் கையெழுத்து போடும் பெரியவர் கூட மனதில் பதியும்படி செய்திருக்கின்றனர். யோகி பாபு எனக்கு ஏமாற்றம் தான்.

முதல்பாதி பார்க்கும் போது நடுவில் சிறிது சுணக்கமாகத் தோன்றியது. ஆனால் அதன் பின் படம் டாப் கியர் தான்.

விஜயசேதுபதி பற்றி என்னத்தைச் சொல்ல? அந்த மனுஷனுக்கு நடிப்பு இயற்கையாக வருகிறது. எதைச் செய்தாலும் அது இயல்பாகத் தெரிகிறது. அவர் தமிழ் சினிமாவின் பெரிய லாபம். இன்னும் உயரணும்... உயர்வார். நல்ல இயக்குனர்களும் அவரை நன்கு “குறி” வைக்கிறார்கள். நமக்கு லாபம்தானே!

பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய அனுபவம் கிடைத்தது. ஞயிற்றுக் (Sunday என்று தமிழில் அடிக்கத் தெரியவில்லையே!) கிழமை.  போன வெள்ளிக்கிழமை வந்த படமாச்சே ... இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்குமா என்று நினைத்துப் போனேன். ஆனாலும் கூட்டம் இருந்தது. அட ...டிக்கெட் எடுக்க வரிசையில் போக வேண்டுமோவென நினைத்தேன். நல்ல வேளை .. அப்படி எல்லாம் இல்லை. ஆனால் டிக்கெட்டு எடுத்த பிறகு உள்ளே செல்ல கொஞ்சம் கூட்டம். கூட்டத்துக்குள் போய் இடித்துப் பிடித்துப் படம் பார்த்த பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் முட்டை போண்டாவும், பாப்கார்னும் ரொம்ப பேமஸ். அந்த இரண்டும் இல்லாமல் அங்கு அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களை அந்த தியேட்டரில் பார்த்த நினைவு இல்லை. பழைய நினைவில் இரண்டும் வாங்க நினைத்தேன். தங்ஸ் உருவம் கண்முன் வந்ததால் போண்டாவிற்கு முட்டை போட்டுவிட்டு வெறும் பாப்கார்னோடு ஆசையை அடக்கிக் கொண்டேன்.

*

வானத்தில் பறக்கும் விமானத்தை முதல் பாதியில் அடிக்கடி காண்பிப்பது பற்றியும் சொல்ல மறந்து போனேனே. அதுவும் இன்னும் பலவும் ... மணிகண்டனின் touch தான்.

 *

Wednesday, October 05, 2016

908. பேத்தி வரைந்த படங்கள்
U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.
அக்காளுக்கு நல்ல போட்டிதான்.
கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.


அம்மா.. அக்கா .. நான்

A  BIG  BOAT

A  BIG BOAT ON  THE  WAVES


அம்மா.. அக்கா .. நான்

அம்மா &  அப்பா