Showing posts with label யூதாஸின் நற்செய்தி. Show all posts
Showing posts with label யூதாஸின் நற்செய்தி. Show all posts

Tuesday, February 18, 2014

716. யூதாஸின் நற்செய்தி ... 7





***

ஏழு பதிவுகள்: 



***


  யூதாஸும் ஞான மரபும் 

Marvin Meyer 


ஐரினியஸ், யூதாஸின் நற்செய்தி காயினைட் குழுவினரால் எழுதப்பட்டது என்கிறார்.

பழமைக் கிறித்துவத்திற்கு எதிரான இந்தக் குழுவின் நான்கு பேரை ஐரினியஸ் நற்செய்திகளில் காணும் குணக்கேடானவர்களாகச் சொல்கிறார். அந்த நால்வர்: காயின் (Cain), ஈசாவ் (Esau), கோரா (Korah), சோதோம் மக்கள் (the people of Sodom). ஒருவேளை காயினைட் என்ற பெயர் கிறித்துவ எதிரிகளோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த ஐரினியஸ் போன்றோர் வைத்த பெயராக இருக்கலாம். (137)

 நாக் ஹமீதியில் கண்டெடுக்கப்பட்ட சில நூல்களில் – Secret Book of John, the Nature of Rulers, Holy Book of the Great Invisible spirit (the Egyptian Gospel) – காயினைப் பெருமைப் படுத்தும் பகுதிகள் உண்டு.

 Holy Book சோதோமின் மக்களை புரட்சிக்காரர்கள் என்று பேசுகிறது.

தங்களை ஞான மரபு என்றழைத்துக் கொண்டவர்கள் தங்களுக்கு உலக ஞானத்தை விட கடவுளைப் பற்றிய ஞானமும், mystical ஞானமும் மிகுந்தவர்களாகவும் கடவுளோடு ஒட்டிய உறவும் கொண்டிருந்ததாகக் கருதினர். யூதாஸின் நற்செய்தியில் ஞானம் – gnosis- என்ற சொல் இரு முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. (50,54)

 நாக் ஹமீதில் உள்ள Secret Book of John என்ற நூல் சேத்திய ஞானமரபு -Sethian Gnostic – சார்ந்த நூல். யூதாஸின் நற்செய்தியும் இதைப் போலவே சேத்தியன் வகையோடு சேர்ந்துள்ளது. (139)

’ என்றும் அழிய முடியாத ராஜ்ஜியமான பார்பெலோ’ என்பது சேத்தியன் ஞான மரபில் வழக்கமாக வரும் சொற்றொடர்.

 பார்பெலோ என்ற சொல்லின் ஆரம்பம் எது என்று தெரியவில்லை. ஒருவேளை ‘கடவுள்’ என்ற பொருள் தரும் நாலெழுத்து சொல் ‘YHWH’ அல்லது யெஹோவா (Yahweh) அல்லது ஆங்கிலத்தில் Jehovah என்பதிலிருந்து வந்திருக்கலாம். ஹீப்ரு மொழியில் ‘சொல்லில் அடங்கா கடவுள்’ என்று இதற்குப் பொருள் கொள்ள முடியும். (140)

சேத்தியன் மரபுப் படி பல சமயங்களில் தெய்வீகத்தைத் தங்களுக்குள் கொண்டிருக்கும் மனிதர்கள் இந்த உலகைப் படைத்த சிறு கடவுள்களை விடவும் மேலானவர்கள். (142)

யூதாஸின் நற்செய்தி சேத்தியன் கிறித்துவ மரபுகளை உள்ளடக்கியதாக உள்ளது. யூதாஸின் நற்செய்தியில் கடவுள் என்று வரும் சொல் எல்லாமே உலகத்தைப் படைக்கும் சிறு கடவுள்களையே குறிக்கிறது.(143)

இந்தக் கடவுள்களைத் தாண்டியவர் ‘பெரிய கடவுள்’ – Great One – என்றும் குறிப்பிடுகிறது. இதே மரபு Secret Book of John என்ற நூலிலும் காணப்படுகிறது. ’Great One’ என்ற ‘பெரிய கடவுள்’ காண முடியாத ஆன்மா.(Nag Hammadi Codes 11: 2-3) (144)

சேத்தியன் மரபின் படி Autogenes என்பது பார்பெலோவிலிருந்து தோன்றியது. ஆனால் இத்தோன்றல் தனித்திருக்கும் ஆற்றலுடையது. Autogenes என்பது auto-generated என்பது யூதாஸின் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. (146)

வேறு சில சேத்தியன் நூல்களில் இந்த Autogenes-ன் தோற்றம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

Secret Book of John –ல் ’Great One’விற்கும், பார்பெல்லோ என்ற தாய்க்கடவுளுக்கும் நடுவில் ஆன்மா இணைப்பால் பிறந்ததுவே Autogenes என்றும் சொல்லப்படுகிறது.

யூதாஸின் நற்செய்தியில் நான்கு ‘ஒளிப் பிரவாகிகள்’ – luminaries – Autogenesக்குக் கீழே பணி புரிகிறார்கள். இவர்களுக்குத் தனித் தனிப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. (147)

இக்கட்டுரை மேலும் பல சேத்தியன் கோட்பாடுகளை விளக்குகிறது. இதில் உள்ள நான்கு ஒளிப் பிரவாகிகளின் பெயரைக் கொடுக்கிறது.

கடவுளின் கட்டளையை மீறும் ஆதாம், ஏவாள், சோபியா – இவைகளின் கதைகள் கொடுக்கப்படுகிறது.

இவ்வுலகின் படைப்பாளிகளான Nebro, Yaldabaoth, Saklas … அவர்களின் பண்புகள் ... உலகை ஆளும் பன்னிருவர்களும் அவர்களுக்கு உதவியான வான தூதர்களும் ... மனிதனும் உலகமும் படைக்கப்படுதல் ... இதுபோன்ற பலவகையான கோட்பாடுகளும், Nag Hammidi-ல் உள்ள பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டவைகளும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.

யூதாஸின் நற்செய்தியில் சேத் ஒரு நல்ல ஆட்சியாளரென்று சொல்லப்படுகின்றது. அவரது வழியினரோ பெரும் பரம்பரையினர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நற்செய்திகளின் வழியே பார்க்கும் போது ‘முதல் குடும்பத்தினர்’ ஒப்பேறாத ஆட்களாக (the first family is highly dysfunctional !!!) இருப்பது போல் தோன்றுகிறது. பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் சண்டை; ஏதனை விட்டுத் துரத்தப் படுகிறார்கள்; காயில்-ஏபேல் நடுவில் சண்டை; அடுத்து ஒரு மகன்; ஆதாமைப் போன்றவன் இந்த மகன். (157)

சேத் ஆதாமின் ‘அடுத்த ஒரு விதையாக’ இருப்பதால் allogene என்ற பெயர் அவருக்களிக்கப்படுகிறது. (158)

யூதாஸ் நற்செய்தியில் ஏசு ஒரு ஆசிரியராகவும், வெளிப்படுத்துபவராகவும் தெரிகிறார். தெய்வீகத்திலிருந்து வந்து மீண்டும் தெய்வீகத்திற்குள் செல்லப் போகிறார். அவர் யூதாஸிற்குப் போதனை செய்கிறார். யூதாஸோடு சேர்த்து சேத்தின் வழித்தோன்றல்களுக்கும் போதனை தருகிறார்.

 ஏனைய சேத்தியன் நூல்களிலும் ஏசு இதே போன்று போதனை செய்கிறார். தன்னை பார்பெல்லோ, ஆட்டோஜீன்கள் என்ற சுயம்பிகள், சேத் என்று அனைவருக்கும் இந்தப் போதனை அளிக்கிறார்.

 Secret Book of John என்ற நூலில் கிறிஸ்து சுய விளம்பிகளோடு அடையாளப்படுத்தப் படுகிறார்.

இதில் மேலும் ஏசு பார்பெல்லோவின் மகனாகக் காண்பிக்கப்படுகிறார்.

 Holy Book of the Great invisible spirit-ல் சேத் ஏசு சேத்தின் அவதாரமாக இருக்கிறார். 

Book of Allogenes-ல் ஏசு சேத்தின் இன்னொரு பக்கமான அல்லோஜீன் என்ற புதிய மனிதராகக் காண்பிக்கப்படுகிறார். (168)

யூதாஸின் நற்செய்தியில் ஏசு பார்பெல்லோவோடு தொடர்பில் இருப்பதாகக் காண்பிக்கப் படுகிறார். (169)

****
முற்றும்



 *



715. யூதாஸின் நற்செய்தி ... 6



***


***

ஏழு பதிவுகள்: 




***





 ஐரினியஸ் – யூதாஸின் நற்செய்தி 

Gregor Wurst 

 எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட Codex Tchacos-ல் மொத்தம் நான்கு ஞானமரபு நூல்கள் இருந்தன. அவை: பேதுரு பிலிப்பிற்கு எழுதிய கடிதம்; (இது 1945ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட Nag Hammidi ஏடுகளிலும் இருந்தது.); Nag Hammidiல் இருந்த ஜேம்ஸின் வெளிப்பாடுகள்; யூதாஸின் நற்செய்தி; Book of Allogenes என்ற நூலின் சில பக்கங்கள். (121)

இந்த ஏடுகள் காப்டிக் மொழியில் இருந்தாலும் அவைகளின் மூலமும் காப்டிக் மொழியல்ல. கிரேக்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்று கருதப்படுகிறது. பிஷப் ஐரினியஸ் தன் நூலில் யூதாஸின் நற்செய்தி பற்றிக் குறிப்பிடுகிறார். (122)

 ஐரினியஸ் தன் நூலில் ஞானமரபுக் கிறித்தவர்களைப் பற்றிப் பேசுகிறார்.

அவர் தன் நூலில் யூதாஸைப் பற்றி ’மற்றவர்கள் போலில்லாமல் யூதாஸ் முழுமையான உண்மையை அறிந்திருந்ததாகக் கூறப்பட்டவர்’ என்று கூறுகிறார்.

 ஐரினியஸைப் பொருத்தவரை யூத வேத நூல்களில் குறிப்பிடப்படும் – Esau, Korah, the sodomites – என்பவர்கள் பழமைக் கிறித்துவர்களால் கெட்டவர்களாகவும், எதிராளிகளாகவும் கருதப்பட்டவர்கள். ஆனால் இவர்களே பெரும் கடவுளின் உண்மையான ஊழியர்கள் என்று ஞான மரபில் கூறப்படுபவர்கள். (123)

 ஐந்தாம் நூற்றாண்டின் Theodoret of Chyrrus யூதாஸைப் பற்றிக் கூறும் போது அவர் அப்போஸ்தலர்களுக்குள் முதனமையானவர் என்று கூறுகிறார்.

 மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த ஞான மரபினர் Cainites – காயினின் வழியினர் – என்று கிளமென்ட் அலெக்ஸாண்ட்ரியா போன்ற கிறித்துவ ஆசிரியர்களால் அழைக்கப்பட்டு வந்தனர்.(124)

ஐரினியஸின் எழுத்துகளிலிருந்து கானனைட்கள் யூதாஸின் காட்டிக் கொடுத்தலில் உள்ள மர்மத்தை ஆதரித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. (125)

 35ம் பக்கத்தில் யூதாஸின் நற்செய்தியில் யூதாஸ் தோன்றுகிறார். அந்தக் காட்சியில் அவர் மட்டுமே சீடர்களில் ஏசுவை முழுமையாக அறிந்த ஒரே ஒருவராக்க் காட்சிப்படுத்தப் படுகிறார். அதோடு ‘ஏசு பார்பெலோவிலிருந்து வந்தவர்’ என்றும் கூறுகிறார். (128)

இதனாலேயே ஏசு அவரைத் தனியாக அழைத்து ‘தன் அரசின் மர்மங்களை’ விளக்குகிறார். (யூதாஸ் நற்செய்தி 35, 45)

 யூதாஸிடம் மட்டுமே ஏசு ’எந்த தேவ தூதர்களாலும் கூட காணப்படாத, தன் பெரும், அகன்ற ராஜ்ஜியத்தைப் பற்றியும், எந்தப் பெயராலும் அழைக்கப்படாத அங்கேயுள்ள ஆன்மாவைப் பற்றியும்’ கூறுகிறார்.

மேலும், பிரபஞ்ச உண்மைகளையும், சின்னக் கடவுளர்களால் படைக்கப்பட்ட மனித குலத்தைப் பற்றியும் கூறுகிறார். (யூதாஸ் நற்செய்தி 52-55)

 காப்டிக் ஏடுகளில் யூதாஸ் ‘எல்லா உண்மைகளையும் அறிந்தவர்’ என்று கூறப்படுகிறார். (57)

இறுதியாக யூதாஸ் ஒரு ஞான மரபினர்; அவர் இறுதியில் ஒரு ஒளிமயமான மேகத்திற்குள் ஏறி, அங்கிருந்து பெரும் கடவுளைக் காண்பார். (129)

யூதாஸின் வேலையே ஏசுவை அவரது உடம்பிலிருந்து விடுதலை செய்வது தான். (130)

 யூதாஸ் நற்செய்தி எழுதப்பட்ட காலம் எது? கணிக்க மிகவும் கடினம். இந்த நற்செய்தியில் அப்போஸ்தலர்களின் நடவடிக்கையைப் பற்றிய குறிப்புள்ளது. 

யூதாஸ் நற்செய்தியின் 36ம் பக்கத்தில் ஏசு யூதாஸிடம், ‘உனக்குப் பதிலாக வேறு ஒருவர் வருவார். மீண்டும் 12 அப்போஸ்தலர்களாக ஆகி கடவுளோடு ஒன்றி விடுவார்கள். அப்போஸ்தலர் நடவடிக்கையில் (1:15-26) யூதாஸிற்குப் பதிலாக மத்தியாஸ் என்பவர் இணைந்து மீண்டும் 12 அப்போஸ்தலர்கள் ஆகிறார்கள். (133)

 கார்பன் டேட்டிங் முறையில் A.J.Tmothy Jull என்பவரால் அரிசோனா பல்கலையில் ஆராயப்பட்ட இந்த ஏடுகள் மூன்றாம் நூற்றாண்டின் கடைசி 3 மாதங்களில் என்று இவ்வேடுகளின் காலம் கண்டறியப்பட்டது. (134)

 பழைய ஞான மரபுகளைப் பற்றிப் படிக்க இந்த ஏடுகள் மிகுந்து பயன்படும். சேத்தியன் ஞானமரபு பற்றிய அறிதலுக்கும் இது பயனளிக்கும். இந்தச் சேத்தியன் ஞான மரபு ஐரினியஸ் காலத்திற்கு முந்தியது என்பது வெளிப்படையாகிறது.

கிறித்துவத்தின் வரலாற்றறிவிற்கு இது பயனளிக்கும். (133)





 *


Monday, February 17, 2014

714. . யூதாஸின் நற்செய்தி ... 5





***

ஏழு பதிவுகள்: 


***





THE GOSPEL OF
JUDAS


Edited by

RODOLPHE KASSER
MARVIN MEYER
                                        GREGOR WURST



*

நூலில் உள்ள தனிக்கட்டுரைகள் ....

*

கிறித்துவத்தில் ஒரு பெரும் மாற்றம்

யூதாஸின் நற்செய்தியைப் பற்றிய இன்னொரு பார்வை

Bart d. Ehrman

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 1947-ம் ஆண்டு Dead Sea Scrolls கண்டுபிடிக்கப்பட்ட போது அது மக்களிடையே பெரும் விவாதங்களை எழுப்பியது. (77) அவைகள் ஏசுவைப் பற்றிப் பேசவில்லை. அவை முழுவதுமாக யூத மத நூல்களாகவே இருந்தன. அதோடு கிறித்துவத்தின் ஆரம்ப கால நிலையை அவை சொல்லின. ஆனால் இதற்கு ஓராண்டிற்கு முன் வந்த Nag Hammidi என்ற எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகள் கிறித்துவத்தைப் பற்றி நிறைய சொல்லிச் சென்றன. அவைகளிலிருந்த நற்செய்திகள் பல புதியன. அவை -- Gospel of Truth, Gospel of Philip, Gospel of Thomas.

Gospel of Thomas  இதுவரைஏசு சொல்லி நமக்குத் தெரியாத 114 வசனங்களைக் கொண்டிருந்தது. (78)

யூதாஸின் நற்செய்தி நமக்குத் தெரியாத பலவற்றை முன் வைக்கிறது. நமக்குத் தெரியாத ஒரு  யூதாஸை நமக்கு அறிமுகப் படுத்துகிறது.(79)

நாம் நினைப்பது போல் யூதாஸ் ஒரு மோசமான, புனிதமற்ற, தீமை நிறைந்த மனிதரல்ல. ஆனால் ஏசுவிற்கு நெருங்கிய சீடர். மற்ற சீடர்களை விட ஏசுவைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்த மனிதர். ஏசு விரும்பிய படி அவரை எதிரிகளின் கைகளில் கையளித்தார். இதன் மூலம் கடவுளை மறுதலித்து, லெளகீகமாக இருந்த இந்த உலகிலிருந்து தன் வீடான பரலோகத்திற்குச் செல்ல ஏசுவிற்கு உதவினார். (80)

அவைகள் மத்த்திற்கு எதிரானவை என்ற கருத்தில் பல நற்செய்திகள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் இப்போதைய கால கட்ட்த்தில் இது போன்ற நூல்கள் ஆவலோடு வரவேற்கப்படுகின்றன. நான்கு நற்செய்திகளும் காலத்தில் மிக முந்தியவை. அதன் பின் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 1896-ல் கண்டுபிடிக்கப்பட்ட மரிய மக்தலேனாவிள் நற்செய்தியும் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. இப்போது கிடைத்துள்ள யூதாசின் நற்செய்தி அனேகமாக 280-ம் ஆண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அதன் உண்மையான காலம் என்னவென்று நமக்குத் தெரியாது. பழைய முதல் நூல் அழிக்கப்பட்டிருக்கலாம். நமக்குக் கிடைத்தது ஒரு நகலாகத்தான் இருக்க வேண்டும்.ஐரினியஸின் கூற்று இதனை நிருபிக்கின்றது. (81)

ஐரினியஸ் இது போன்ற எதிர்மறைக் கருத்துகள் தரும் நூல்களை அழிக்க முனைந்தார். ஐரினியஸால் இவ்வாறு கிறித்துவத்திற்கு எதிராக இருக்கும் மக்களும் அவர்கள் நம்பிக்கைகளும் Gnostic /Gnostic religions என்று அழைக்கப்பட்டன. (82)


GNOSTIC RELIGIONS – ‘ஞான மரபு’ மதங்கள்

முதலில் ஞான மரபுகள் பற்றி ஐரினியஸ் எழுத்து மூலமாகவே நமக்குத் தெரிய வந்தது. அதன் பின் Nag Hammidi 1945-ல் தோன்றிய பிறகு மேலும் பல தகவல்கள் கிடைத்தன. (83)

இம்மரபு மதங்கள் ஞானத்தின் அடிப்படையில் உள்ளவை.  நாம் எங்கிருந்து வந்தோம்; எதற்கு இங்கே வந்தோம்; எப்படி நாம் முக்தி அடைவோம் என்ற ‘ஞானம்’ நிறைந்தவர்கள்.
ஏசுவின் மேல் உள்ள நம்பிக்கைகளால் அல்ல; நம் செயல்களாலேயே நாம் உய்வடைய முடியும். (84)

கிறித்துவத்தில் உண்மையான கடவுள் அழகான இந்த உலகைப் படைத்துள்ளார் என்கிறது.
ஆனால் ஞான மரபில் இந்த உலகில் உள்ள அவலங்களைப் பார்க்கிறது; இது ஒரு நல்ல உலகமல்ல; இந்த உலகம் முழுமையில்லாத, குறையுள்ள ஒரு கடவுளால் படைக்கப்பட்டது. உலகத்தோடு ஒட்டாத ஒரு எல்லையில்லா வன்மையுள்ள ஆன்மா (spirit). இதுவே பரம்பொருள். இந்தப் பெருங்கடவுள் பல ஆன்மாக்களைப் படைத்துள்ளது. அவை aeons என்று அழைக்கப்படுகின்றன. எல்லாம் வல்ல கடவுளும், இந்த aeonsகளும் ஒரு மோட்சத்தில் இருந்தார்கள். ஆனால் ஒரு பிரபஞ்ச அழிவினால் சில aeons மோட்சத்திலிருந்து கீழே விழுந்தன. அப்படி வந்து aeons களால் இந்த உலகம் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் சில மனிதர்களுக்கு மட்டும் அழிவில்லாத ஆன்மா கிடைத்துள்ளது. அவர்களது ஆன்மா தாங்கள் விடுபட்ட தெய்வீக வீட்டிற்குத் திரும்ப வேண்டும்.

இன்னும் பல விளக்கங்களும் உண்டு. இவை குழப்பத்தை உண்டு பண்ணலாம். ஆனால் இவைகளின் அடிப்படை யாதெனில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் கடவுளே இவ்வுலகைப்படைத்தார். இவர் பரம்பெரும் பொருள் அல்ல; இடைப்பட்ட – secondary and inferior – கடவுள். இக்கடவுள் படைத்தவர்களே நாம். நம்மில் பலரும் ஆடு மாடுகள் போல் சாதாரணமானவர்கள். அவர்கள் மிருகங்களைப் போல் பிறந்து, இறந்து, அழிந்து விடுவார்கள். வெகு சிலர் மட்டும் தங்களுக்குள் இறைத் தன்மை கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடான மோட்சத்திற்குச் செல்லும் வழி தெரிய வேண்டும். (85,86)

சில ஞான மரபில், இவ்வழியைக் காண்பிக்க வந்தவரே ஏசு; இவர் ஒரு aeon ஆக இருக்கலாம். வெறு சில ஞான மரபினர் ஏசு ஒரு மனிதரே; ஆனால் அவரது வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் ஞான ஆன்மா அவருள் புகுந்து விட்டது. மரணத்தோடு அந்த ஆன்மை அவரை விட்டு அகன்று விட்டது. அதனாலே அவர் சிலுவையிலிருந்து, ‘இறைவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று சத்தமிட்டார்.

ஐரினியஸ் இந்த ஞான மரபுக்காரர்களைப் புறந்தள்ள முடியவில்லை; ஏனெனில் ஞான மரபுக்காரர்கள் தங்களது ரகசிய ஞானம் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.  இதனால் ஐரினியஸ் தன் ஐந்து நூல்களில் ஞான மரபுக்காரர்களை முற்றுமாக எதிர்த்தார். அவர் எதிர்த்த நூல்களில் ஒன்று யூதாஸின் நற்செய்தி. (88)

பல ஞான மரபினரில் ஒரு குழு காயினைட் – Cainites - என்றழைக்கப்பட்டனர். ஆதாமின் மகன் காயின் பெயரைத் தழுவி வந்த பெயர் இது. காயின் பழைய ஏற்பாட்டின் கடவுளை முழு முதல் கடவுளாகக் கொள்ளவில்லை. ஐரினியஸின் கருத்துப் படி ஞான மரபினர் பழைய ஏற்பாட்டின் கடவுள் சொன்னவைகளுக்கு எதிரான கருத்துகளையே முன்னிலைப் படுத்தினர். யூதாஸ் எல்லோராலும் துரோகி என்றழைக்கப்பட்டார். ஆனால் ஞான மரபினர் அவர் ஏசு விரும்பியதைச் செய்தார்; அவரே ஏசுவின் முழுமையான சீடர்; யூதாஸ்சிடம் மட்டுமே ஏசு தன் திட்டங்களைப் பற்றி முழுவதும் தெரிவிக்கிறார். (91)

யூதாஸ் சீடர்களிலேயே மிக மோசமானவராகச் சித்தரிக்கப்படுகிறார். இருபது முறை அவரது பெயர் புதிய ஏற்பாட்டில் வருகிறது.  ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வசைச் சொல்லும் அவர் பெயரோடு சேர்ந்து வருகிறது. யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்காவிடில் ஏசு உலகத்திற்கு வந்த நோக்கமே தடை படுமே என்று யாரும் நினைக்க இடம் கொடுப்பதில்லை. (93)

மாற்கு புதிய ஏற்பாட்டில் யூதாஸ் பணத்திற்காக மட்டும் இவ்வாறு நடப்பதாக்க் கூறவில்லைமத்தேயுவில் பணத்திற்காக, லூக்காஸில் சாத்தானின் தூண்டுதலாலும், ஜான் நற்செய்தியில் யூதாஸின் கெட்ட குணமும், பேராசையும் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. (94)

எல்லாம் முடிந்த பின் மத்தேயுவில் யூதாஸ் மனம் வெறுத்து, வெள்ளிக் காசுகளை யூத குருக்களிடம் கொடுத்து, பின் நான்று கொண்டு இறந்தார் என்று சொல்லப்படுகிறது. மற்ற மூன்று நற்செய்திகளில் அச்செய்தி இல்லை; ஆனால் அப்போஸ்தலர்கள் நடவடிக்கையில் யூதாஸ் முப்பது வெள்ளிக்காசிற்கு ஓரிடம் வாங்கி, அதன் பின் கொடூரமாக – வயிறு வெடித்துக் கிழிந்து - மரணமடைந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் யூதாஸின் நற்செய்தியில் ஏசுவை இப்பிறவியிலிருந்து விடுதலை செய்பவராக இருக்கிறார். இதில் அவர் ஒரு வில்லன் அல்ல; ஒரு கதாநாயகன்.(96)


யூதாஸ் – அவரது நற்செய்தியில்

நற்செய்தியின் ஆரம்பத்திலேயே ஏசு யூதாஸிடம் மட்டும் தன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். (97) 

யூதாஸிற்கு ஏசுவைப் பற்றி முழு உண்மைகள் தெரிகின்றன.  அதனால் ஏசு யூதாஸை தனியே அழைத்து, தன்னைப் பற்றியும் முழு இரட்சிப்பைப் பற்றியும் கூறுகிறார். (98)  

யூதாஸ் தான் கண்ட காட்சி பற்றியும், அதில் தான் கல்லால் எறியப்படுவது பற்றியும் ஏசுவிடம் கூறுகிறார். அதனோடு ஒரு பெரிய மாளிகையைப் பார்ப்பது பற்றியும் கூறுகிறார். அந்தப் பெரிய மாளிகை தெய்வீக பிரசன்னத்தைப் பெறுபவர்கள் மட்டுமே காண முடியும் என்கிறார் ஏசு. (99)

இந்த உலகம் இப்போதிருக்கும் தெய்வங்களை விட பல பழைய தெய்வங்களை பெற்றிருந்தது. அதில் ஒன்று El என்ற தெய்வம்; இதன் உதவிக்கு  Nebro அல்லது   yaldbaoth  என்ற ரத்தக் களறியான தெய்வம். இதன் பெயருக்குப்புரட்சியாளன்என்று பொருள். அடுத்து  ’முட்டாள்என்ற பொருளில் Saklas  என்ற தெய்வம்இதில் கடைசியாகச் சொன்ன Saklas தன்னுடைய image ல் மனிதர்களைப் படைத்தார். மனிதர்களில் வெகு சிலரே தெய்வீகத் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். (100) அதில் யூதாஸும் ஒருவர். 

இறுதியில் அவர் ஒளிபொருந்திய மேகங்களுக்கு நடுவே செல்கிறார். அவரது விண் மீனே எல்லோருக்கும் வழிகாட்டியாக உள்ளது. (101)

யூதாஸ் அதன்பின் ஏசுவைக் காட்டிக் கொடுப்பதோடு இந்த நற்செய்தி நிறைவு பெறுகிறது.


யூதாஸ் நற்செய்தியினைப் பற்றிய வித்தியாசமான இறையியல் விளக்கங்கள்:

பல இறையியல் கருத்துகள் இதில் கூறப்பட்டுள்ளன. அவை: இந்த உலகத்தைப் படைத்தவர் உண்மையான கடவுள் இல்லை; இந்த உலகம் மிகவும் மோசமானது; இதிலிருந்து தப்பிக்க வேண்டும்; கிறிஸ்து கடவுளின் ஏக குமாரனல்ல;  இரட்சணியம் கிறிஸ்துவின் இறப்பினாலும்,. உயிர்த்தெழுதலாலும் நடக்காது; பதிலாக அது அவரது ரகசியக் குறிப்புகளின் படியே நடந்தேறும்.(102)

இவையெல்லாமே கிறித்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவைகள். இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இது போன்ற பல கோட்பாடுகளோடு பல கிறித்துவ அமைப்புகள் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. இந்த இரு கோணப் போட்டிகளில் ஒரு சாராருக்கு அனுசரணையாக இருந்த நூல்கள் மட்டுமே கடவுளின் வார்த்தைகள் – நற்செய்தி – என்று அறிவிக்கப்பட்டன.


யூதாஸ் நற்செய்தியில் கடவுள்

தங்கள் உணவுக்காக ஜெபம் செய்யும் தன் சீடர்களைப் பார்த்து ஏசு நகைக்கிறார். சீடர்கள் காரணம் கேட்கும் போது அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்வதாகச் சொல்கிறார். (104)  

தன்னைக் கடவுளின் மகன் என்று சீடர்கள் சொல்லும் போது, எந்தப் பரம்பரையும் அவரை உண்மையில் யாரென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.  

சீடர்கள் வணங்குவது மனிதர்களைப் படைத்த புரட்சிக்காரனான ’yaldbaoth’ என்ற கடவுளையும், முட்டாள் என்ற பொருள் கொண்ட ’Saklas’ என்ற கடவுளையும் மட்டுமே.


கிறிஸ்து பற்றிய குறிப்பு

கிறிஸ்து தன்னை சீடர்களிடம் ஒரு குழந்தை போல் காண்பித்துக் கொண்டார். புதிய நற்செய்திகளைத் தவிர்த்த பல கிறித்துவ எழுத்துகளில் ஏசு ‘தன்னை ஒரு மனிதனாகக் காண்பிக்கும்’ விதம் குறிப்பிடப்பட்டுள்ளது. (107) 

இங்கே புனிதத்தின் அடையாளமாகவே ‘குழந்தை’ என்று குறிப்பிடப்படுகிறார்.(109) 

ஏசுவின் மரணம் அவரது விடுதலை; அது போலவே நமது மரணத்தின் மூலம் நாமும் விடுதலை அடைகிறோம். இறந்த ஏசு உயிர்ப்பது பற்றி இந்த நற்செய்தியில் ஏதுமில்லை. உயிர்த்தால் விடுதலை ஆன ஆன்மா மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறது. ஆனால் ஆன்மா இந்த உலகை விட்டுச் சென்று மிகப் பெரும், புனித பரம்பரையோடு சேர்வது தானே.  (110)


இரட்சிப்பின் வழிகள்

இந்த நற்செய்தியின் படி ஒவ்வொரு மனிதனுக்கும் உடல், ஆவி, ஆன்மா (body,spirit, soul) என்ற மூன்றும் உண்டு. உடலுக்கு உயிரளிப்பது ஆவி; உயிர் மூடி வைத்திருப்பது ஆன்மா.ஆவி போனதும் உடல் மாண்டு விடுகிறது. (112) 

தெய்வீக ஆன்மா கொண்டவர்களின் ஆன்மா மட்டும் தெய்வலோகத்திற்குச் செல்கிறது. மற்றவர்களின் ஆன்மா உடலோடு மடிகிறது.(113)


ஏசுவின் அடியார்களின் கருத்துகள்

யூதாஸின் நற்செய்தியில் ஏசுவின் சீடர்கள் உண்மையை அறிந்தவர்களில்லை. ஆனால்பதின்மூன்றாவதுசீடரான யூதாஸ் அறிந்தவராகக் காண்பிக்கப்படுகிறார்.

மார்க் 11: 15-17ல் ஏசு தன் கோவில் வியாபார தளமா என்று கொதித்து வியாபாரிகளை விரட்டுகிறார். ஆனால் அவரது சீடர்களோ பெரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கோவில் எவ்வளவு பெரியதாக உள்ளது என்று ஆச்சரியப்படுகிறார்கள். (மார்க் 13;1)  (113) 

ஆனால் யூதாஸின் நற்செய்தியில் சீடர்கள் அங்கு நடத்தப்படும் பலிகளைப் பற்றிக் கேட்கிறார்கள். ஏசுவின் பெயரால் நடத்தப்படும் அந்தப் பலிகளை ஏசு தவறென்கிறார். (114)

இதன் பின் யூதர்களின் கோவில்களில் வழிபடவில்லை. புதிய கிறித்துவர்கள் யூதர்களில்லை.ஆனாலும் அவர்கள் யூதக் கடவுளை வணங்கினர்; அந்த யூதக் கடவுள் யூதச் சட்டங்களைத் தந்தன; ஒரு யூத மெசியாவை யூதர்களுக்கு அனுப்பி, யூதர்களின் நூல்களில் கூறப்பட்டவைகளை முடித்து வைத்தன. அவர்கள் தாங்களேஉண்மையானயூதர்கள் என்றும், உண்மையான கடவுளின் உண்மையான மக்களாகவும் புரிந்து கொண்டார்கள்.
ஆனால் ஏசுவோ இந்த உலகைப் படைத்த கடவுள் ஒரு முட்டாள். இந்த உலகம் நல்லதல்ல; இதனை விட்டு விட்டு வெளியேற வேண்டுமேயொழிய இதனைக் கட்டிக் கொண்டு கிடக்க வேண்டியதில்லை. ஏசு யூதாஸிற்குச் சொல்லிக் கொடுத்தது  மட்டுமே முழு உண்மை. (115)


யூதாஸின் நற்செய்தியும் ஏனைய அனைத்து மத நூல்களும்:

ஏன்  மத்தேயு, மார்க், லூக்காஸ், யோவான் என்ற நான்கு நற்செய்திகள் மட்டும் நமக்குக் கிடைத்தன?

இன்றைய நற்செய்தியில் மொத்தம் 27 நூல்கள் இணைக்கப்பட்டுள்ளனஇவைகள் கடவுளின் வார்த்தைகள் என்று பழமைக் கிறித்துவத்தால் அனுமதிக்கப்பட்ட நூல்கள் இவை.

ஏசு காலத்திற்கு முன்பே மோசஸினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஐந்து நூல்கள் – Genesis (ஆதியாகமம்), Exodus (யாத்திராகமம்), Leviticus(லெவிய்ராகமம்), Numbers (எண்ணிகையாகமம்), Deuteronomy (உபாகமம்) – இருந்தன.

ஏசுவின் காலத்திற்குப் பிறகு அவர் சொன்ன போதனைகளும், அவரது உடனிருந்தோரின் போதனகளும் எழுதி வைக்கப்பட்டன. அதன் பின்னும் பல நூல்கள் எழுதப்பட்டன. பல நூல்கள் ஏசுவின் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை. உதாரணமாக புதிய ஏற்பாட்டில் பால்  எழுதிய பதின்மூன்று கடிதங்களோடு மேலும் பல எழுதப்பட்டுள்ளன. இதைப் போலவே யோவானின் வெளிப்பாடுகள் (Apocalyse or revelation of John) புதிய ஏற்பாட்டில் இருப்பது போலவே பேதுரு (Peter), பால் எழுதிய வெளிப்பாடுகளும் உண்டு.

இது போலவே பல நற்செய்திகள் எழுதப்பட்டிருந்தன. இப்போது நற்செய்திகளாக அறியப்பட்டிருக்கும் அந்த  நான்கு நற்செய்திகளும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் இருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் தான் ஏசுவின் சீடர்களான மத்தேயு, யோவான் இருவர் பேரிலும், ஏசுவின் அப்போஸ்தலர்களான பேதுருவோடு உடனிருந்த மார்க், பாலுடன் இருந்த லூக்காஸ் இருவர் பேரிலும் நற்செய்திகள் பெயரிடப்பட்டன.

ஏனைய நற்செய்திகள் மற்ற அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை. பிலிப், பீட்டர், யூதாஸ், ஏசுவின் சகோதரரான யூதாஸ் தாமஸ், மேரி மகதலேன் போன்றோரால் எழுதப்பட்ட நற்செய்திகள் அவைகளில் சில.

 காலம் செல்லச் செல்ல மேலும் பல நூல்கள் எழுதப்பட்டன. ஒவ்வொரு குழுவும் சில நூற்களை ஏற்றுக் கொண்டனர். இக்குழுக்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். இவைகளில் ஐரினியஸ் இருந்த குழு மேலும் மேலும் புதிய கிறித்தவர்களோடு பெரிதானது. இக்குழுவில் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தவர்களில் வேதசாட்சி ஜஸ்டின் (Justin Martyr), டெர்டூலியன் (Tertullian) என்பவர்கள் முக்கியமானவர்கள். 

இக்குழுவே ஆதி / பழமைக் கிறித்துவர்கள் (Orthodox) என்றழைக்கப்பட்டனர். இவர்கள் மற்ற அணிகளை வென்று முக்கியத்துவம் பெற்றதும் கிறித்துவ வரலாறு புதியதாக மாற்றி எழுதப்பட்டது.  இவர்கள் தேர்ந்தெடுத்த நான்கு நற்செய்திகளே இப்போதை புதிய ஏற்பாட்டில் உள்ளன. (118)

ஏனைய நூல்கள் பல காப்பாற்றப்படாமலும், நகல் எடுக்காததாலும் இயற்கையான மரணமடைந்தன. ஆயினும் இந்த நூல்களில் ஏதாவது ஒன்று கண்டெடுக்கப்படும் போது இரண்டாம் நூற்றாண்டில் பழமைக் கிறித்துவம் மட்டும் இல்லாமல் வேறு பல குழுக்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது.

யூதாஸின் நற்செய்தி இதுபோன்ற ஒரு நூலே. இதில் வழக்கமான கிறித்துவத்தைப் புரட்டிப் போடும் ஒரு நூலாக உள்ளது.  
உண்மையான கிறித்துவம் என்று அறியப்பட்ட பல கொள்கைகளை மாற்றிப் போடும் நூலாக உள்ளது. 
இந்நூலிலிருந்து யூதாஸ் மட்டுமே ஏசுவோடு ஒன்றியிருந்து, அவரைப் பற்றி முழுவதும் தெரிந்தவராக இருந்தார் என்பது தெரிகிறது. அவர் இந்த உலகைப் படைத்த கடவுளிடமிருந்து வரவில்லை; அந்தக் கடவுளின் மகனும் அவரில்லை. 
அவர் பார்பெல்லோவிலிருந்து வந்தவர்; இரட்சிப்பின் ரகசியங்களை அங்கிருந்து கொண்டு வந்தவர். 
இவ்வுலகில் இறந்தது மூலமே அவர் பாவமும், துன்பமும், துயரமும் சூழ்ந்த இந்த உலகத்திலிருந்து விடுதலை பெற்று,  பெரும் மோட்ச  ராஜ்ஜியத்திற்கு எழுந்தருளினார்.(120)




**************









*

Saturday, February 15, 2014

713. யூதாஸின் நற்செய்தி ... 4





***
ஏழு பதிவுகள்:  





***




THE GOSPEL OF
JUDAS

Edited by
RODOLPHE KASSER
MARVIN MEYER
                                        GREGOR WURST

*


 நூலில் உள்ள தனிக்கட்டுரைகள் ....



*

 பழைய ஏடுகள் கிடைத்த வரலாறு 

RODOLPHE KASSER


 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி என் ஆய்வுக்காக என்னிடம் வந்து சேர்ந்த ‘பொருளை’ப் பார்த்து வியப்பால் அதிர்ந்தேன்.

பல இடைஞ்சல்களுக்கும் தடைகளுக்கும் நடுவே கடந்து வந்த, 1600 ஆண்டுகளுக்கு முந்திய பழைய ஏடுகள் அவை. (47)

இந்த ஏடுகள் 1978-ம் ஆண்டு மத்திய எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் உள்ள Jabel Qarara என்ற இடத்தில், Maghagha என்ற பகுதிக்குப் பக்கத்தில் உள்ள Ambar என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன.(50)

Hanna என்ற தொல்பொருள் வியாபாரியின் கைகளுக்குப் போய், அவர் விலை பேசும் முன் பல பொருட்களுடன் இந்த ஏடுகளும் திருடப்பட்டு விட்டன. திருட்டுப் போன பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் தலை காட்ட ஆரம்பிக்கவே, Hanna தன்னைப் போன்ற இன்னொரு தொல்பொருள் வியாபாரியின் உதவியுடன், 1982-ம் ஆண்டு அதனை மீட்கிறார். (51)

Robinson என்ற ஆய்வாளர் தன் மாணவர் மூலமாக இந்த ஏடுகளை 50 ஆயிரம் டாலருக்கு வாங்க முயல்கிறார். Hanna வின் விலயோ உச்சத்தில் இருந்தது.(53)

இன்னொரு ஜெர்மானிய தொல்பொருள் வியாபாரியான Frieda என்பவரிடம் 1982-ம் ஆண்டு இந்த ஏடுகளின் ஒரு பக்கத்தின் புகைப்படம் மட்டும் கிடைக்கிறது. (55)

22 வருடங்கள் உருண்டோடி விட்ட பின், மிகவும் பாழாகி விட்ட நிலையில் 2005-ல் Frieda-விடமிருந்து Bruce என்ற அமெரிக்கரிடம் விலைக்கு விற்கப்படுகிறது. இதன் பின்னும் ஏடுகள் பாதுகாப்பு ஏதுமின்றி மேலும் பாழ்படுகின்றன.

2001, பிப்ரவரி 19-ம் தேதி Maecenas Foundation of Ancient Art என்ற நிறுவனத்திடம் விற்கப்படுகிறது. (61)

இந்த ஏடுகள் தாங்கள் அடைபட்டிருந்த இருண்ட பகுதிக்குள்ளிருந்து வெளியே வந்து, காப்டிக் ஆய்வாளர்களுக்குக் கிடைக்க மேசினா – Maecena – என்பவரின் கடும் உழைப்புக்குக் கடன் பட்டவர்களாகிறார்கள்.

முதல் ஆய்வில் நான் இந்த ஏடுகள் காப்டிக் மொழியின் ஒரு கிளை மொழி என்றறிந்தேன். (Sahidic supralocal dialect of the Coptic language) (64)

ஏடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை சீரமைப்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது.(65)

கால தாமதம் இல்லாமல் முதன் முதல் எடுக்க வேண்டிய வேலை என்னவென்றால் ஒவ்வொரு ஏட்டையும் ஒரு கண்ணாடித் தட்டுக்கு அடியில் சேர்க்க வேண்டும். உடைந்த துண்டுகளையும் கஷ்டப்பட்டு இதைச் செய்ய வேண்டும். … அதன் பின் ஒவ்வொரு ஏட்டையும் புகைப்படம் எடுத்து, மொழியாக்க முயல வேண்டும். (66)

சிரமப்பட்டு செய்த உழைப்பின் பலன் மெல்ல கிடைக்க ஆரம்பித்தது. (67)

கிடைத்த ஏடுகள் எல்லாமே மிகவும் உடைந்து நொருங்கியிருந்தன. அவைகள் எல்லாமே நீள வாக்கில் மேலிருந்து இரு பகுதிகள் தள்ளி, மடித்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒவ்வொரு பக்கமும் இரு பாகங்களாகக் கிடைத்தன. மேலே உள்ள பகுதிகளில் பக்க எண்களும், சிறிய எழுத்துப் பகுதிகளும் இருந்தன. இரண்டாம் பகுதியில் எழுத்துப் பகுதிகள் அதிகம். ஆனால் ஏற்பட்டிருந்த கேடுகளால் எந்தப் பக்கத்தின் கீழ்ப்பகுதி எது என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமான ஒன்றானது. (68)

ஏடுகளுக்கு நடந்திருந்த மிக மோசமான நிலைக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? நிச்சயமாக எந்தக் காரணம் கொண்டும் ஆய்வு செய்த நிபுணர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். தொல்பொருள் விற்பன்னர்களும் இதைச் செய்திருக்க முடியாது.(69)

ஏடுகள் இருந்த ஒரு தொகுப்பில் உள்ள முப்பது ஏடுகளின் இறுதியில் இருந்து ’யூதாஸின் நற்செய்தி’ என்ற பெயர் கிடைத்தது. (70)

2004-ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று பாரிஸ் நகரில் கூடிய English Congress of the International Association for Coptic Studies-ல் Maecenas Foundation கொடுத்த உத்தரவின் படி, ஐரினியஸ் தனது நூலான Against Heresies என்ற நூலில் குறிப்பிட்ட இந்த நூலைப் பற்றிய தகவலை நான் இங்கு வெளியிட்டேன். 180-ல் மறைக்கப்பட்ட இந்த ஏடுகள் 2006-ம் வருடத்தின் இறுதியில் வெளியுலகிற்கு வந்தன. புகைப்படங்களுடன் கூடிய நல்லதொரு நூலாக இந்து 2006 வருட இறுதிக்குள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்னும் வாசிக்கப்பட முடியாத ஏட்டுப் பகுதிகள் இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் வரும் தலைமுறையில் மேலும் அதிகமா அவைகளிலிருந்து செய்திகளைப் பெற ஆய்வாளர்கள் முயலலாம்.

என் அறிவிப்புக்குப் பிறகு அக்கூட்டத்தின் பார்வையாளர்களிடமிருந்து பல எதிர்வினைகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். (73)

ஜேம்ஸ் ராபின்சன் மட்டும் இன்னும் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் சுற்றி வரும் ஏடுகளின் சில புகைப்படங்கள் பற்றிக் கூறினார்.

இதுபோல் சுற்றி வந்த சில புகைப்படங்களையும், அவைகளின் மொழி பெயர்ப்பையும் சார்ல்ஸ் ஹெட்ரிக் – Charles Hedrick – என்பவரிடமிருந்து கிடைத்தது. (74)

 இந்த நூலில் உள்ள மொழி பெயர்ப்பு முழுமையானதில்லை. ஆயினும் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்த விலை மதிப்பில்லாத இந்த நூல் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. (75)






******

Tuesday, February 04, 2014

709. யூதாஸின் நற்செய்தி .... 3

*




*


ஏழு பதிவுகள்: 



***




*


THE GOSPEL OF
JUDAS

Edited by
RODOLPHE KASSER
MARVIN MEYER
GREGOR WURST

 ***



யூதாஸின் நற்செய்தி


Passover-க்கு முந்திய 3 நாட்களில் ஏசு யூதாஸிடம் தனியாகப் பேசுகிறார். (19)

ஏசு உலகத்தின் அதிசய பக்கங்களைப் பற்றி தன் சீடர்களிடம் பேச ஆரம்பித்தார்.(20)

ஒரு நாள் சீடர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவர்களைப் பார்த்து ஏசு சிரிக்கிறார். ஏனென்று சீடர்கள் கேட்க, ஏசு, ‘நீங்கள் ஜெபிப்பது நீங்களாகவே செய்யவில்லை; ஆனால் இதன் மூலம் உங்கள் கடவுளைப் புகழ்வதாக நினைத்துச் செய்கிறீர்கள்’ என்றார்.
சீடர்களோ, ‘நீர் தானே கடவுளின் மகன்’ என்கிறார்கள். அதற்குப் பதிலாக ஏசு, ‘உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்? உண்மையாகவே உங்களிடமிருந்து வரும் எவரும் என்னைத் தெரிந்து கொண்டவர்களில்லை’ என்றார். (21)

கோபமுற்ற தன் சீடர்களிடம் ஏசு, ‘உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுள்ளே உள்ள கடவுள் உங்கள் ஆன்மாவிற்குக் கோபத்தைக் கொடுக்கிறார். உங்களில் யாராவது ஒருவர் தன்னை முழு மனிதனாக நினைத்தால் அவன் என் முன் வரட்டும்’ என்றார். எல்லோரும் எங்களுக்கு அந்த தைரியம் உள்ளது என்றார்கள், இருந்தும் யாரும் அவருக்கு முன் வரவில்லை. அப்போது யூதாஸ் அவருக்கு முன்னே வந்து நிற்கிறார். ஆனால் அவரும் ஏசுவை கண்ணோடு கண்ணாகப் பார்க்காமல்,  முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நின்றார்.
யூதாஸ் ஏசுவிடம், ’நீர் யாரென்பதும், எங்கிருந்து வந்தவர் என்பதும் எனக்குத் தெரியும். நீர் என்றும் அழியாத பார்பெலோவிலிருந்து (Barbelo) வந்திருக்கிறீர். உம்மை அனுப்பியவரின் பெயரைச் சொல்லவும் எனக்கு எந்தத் தகுதியும் இல்லை’ என்றார்.(21,22)
(Barbelo is the divine Mother of all, who often is said to be the Forethought  (pronoia) of the Father, the Infinite One. )

இதன் பின் ஏசு யூதாஸ் இஸ்காரியோத்துடன் தனியே பேசுகிறார். ‘மற்றவர்களிடமிருந்து நீ தனித்திரு; உன்னிடம் என் ராஜ்ஜியத்தின் மர்மங்களைச் சொல்லுவேன்என்கிறார். (22)
அடுத்த  நாள் ஏசு தன் சீடர்களின் முன் தோன்றுகிறார். எங்களை விட்டு விட்டு எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்ட தன் சீடர்களிடம், ‘இன்னொரு புனிதமான குழுவினரிடம் சென்று வந்தேன்என்கிறார்.

சீடர்கள், ‘எங்களை விடப் புனிதமான, உயர்வான அந்தக் குழு எங்கேயுள்ளது? அதுவும் இந்த உலகத்தைச் சார்ந்ததுவா?’ என்று கேட்கிறார்கள்.
ஏசு அவர்களைப் பார்த்து உரத்துச் சிரிக்கிறார். அவர்களை நீங்கள் யாரும் பார்க்க முடியாதென்கிறார். இதைக் கேட்டு சீடர்கள் குழப்பமடைந்து, பேச ஏதுமின்றி நிற்கிறார்கள். (25)

சீடர்கள் ஒரு பெரிய கோவிலைக் காண்கிறார்கள்; அதனை விவரிக்கிறார்கள்:
ஒரு பெரியகோவிலைத் தாங்கள் கண்டதாகவும் , அதன் பீடத்தின் முன் பன்னிரு குருக்கள் தங்கள் பலிப்பொருளோடு காத்திருப்பதாகவும் கூறினார்கள்.

ஏசு அந்த குருக்கள் எப்படியுள்ளனர் என்று கேட்கிறார்

அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பலியிட தயாராக உள்ளனர்; மற்றவர்கள் தங்கள் மனைவியர்களைப் பலியிடத் தயாராக உள்ளனர். அவர்கள் தங்களை மிகவும் தாழ்த்திக் கொண்டுள்ளனர். சிலர் மற்ற ஆண்களோடு உறவு கொண்டுள்ளனர்; சிலர் கொடுஞ்செயல்களோடு தொடர்பு கொண்டுள்ளனர்; பலர் பெரும் பாவங்களைச் செய்து கொண்டிருந்தனர்; சட்டத்துக்குப் புறம்பானவர்களாக இருந்தார்கள். பீடத்தின் முன்னாலிருந்த அனைவரும் உம்முடைய பெயரை முன்னெடுத்து வைத்தார்கள்.

இதைச் சொல்லி விட்டு சீடர்கள் மன உளைச்சலோடு, அமைதியாக நின்றார்கள்.(26)

யூதாஸ் ஏசுவிடம், ‘நானும் ஒரு காட்சி கண்டேன்’ என்று சொல்ல, அதைப் பற்றிச் சொல்ல யூதாஸை அழைக்கிறார்.

யூதாஸ் ஏசுவிடம், ‘என் காட்சியில் எல்லா சீடர்களும் என் மேல் கல்லெறிவது போல் கண்டேன். .. ஒரு பெரிய வீட்டின் முன் நான் நிற்கிறேன். அந்த வீட்டின் நடுவில் பெருங்கூட்டமாக மக்கள் நிற்கிறார்கள். என்னை அழைத்துச் செல்லும் என்று நான் உம்மை நோக்கி முறையிடுகிறேன்’ என்றார்.

ஏசு பதிலாக, ‘ நீ கண்ட வீட்டினுள் நுழைய சாதாரணமானவர்களுக்குத் தகுதியில்லை. அவ்வீடு மிகவும் புனிதமானவர்களுக்கானது’ கூறுகிறார்.

யூதாஸ் தன் விதியைப் பற்றி கேட்கிறார்:
... ‘நீ பதின்மூன்றாவது ஆளாக மாறி, ஏனையோரை ஆட்சி செய்வாய். இறுதி நாளில் நீ உயர்த்தப்படுவதால், மற்றவர்கள் உன்னைச் சபிப்பார்கள்.

அதன் பின் ஏசு யூதாஸிடம் பிரபஞ்சம், நரகம், ’புரட்சியாளன்’ என்ற பொருள் கொண்ட ‘நெப்ரோ’ என்ற சம்மனசு, சக்லாஸ் என்ற இன்னொரு விண் தூதர், மோட்சம் பற்றி விளக்குகிறார். 

மோட்சத்தினை ஆளும் பன்னிருவரில் ஐந்து பேரின் பெயர்களை ஏசு கூறுகிறார். முதல் தூதர் சேத்; இவர் கிறிஸ்து என்றழைக்கப்படுகிறார்.

மனிதனைப் படைத்தல்:
சக்லாஸ் தன் கீழ் உள்ள வானதூதர்களிடம்,’மனிதர்களைப் படைப்போம்’ என்கிறது. பின் ஆதாமும், ஏவாளும் படைக்கப்படுகிறார்கள். ஏவாள் மேகங்களின் ஊடே  ஸோ – Zoe – என்றழைக்கப்படுகிறாள்.

யூதாஸ் காட்டிக் கொடுத்தல்:
’ஆனால் நீ மற்றவர்கள் எல்லோரையும் தாண்டிச் சென்று, என்னை உடுத்துபவரை நீ பலியிடுவாய்’ என்று ஏசு சொல்கிறார்.

ஏசு ‘உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். உன் கண்களை வானை நோக்கி உயர்த்தி, மேகங்களையும், அதனூடே இருக்கும் ஒளியையும், விண் மீன்களையும் பார். உன்னை வழிநடத்தும் விண் மீனே உனது விண் மீனாகும்’ என்றார்.

யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்கிறார்:
அவர் ஜெபிப்பதற்காக ஒரு பெரிய அறைக்குள் நுழைந்ததும் பெரிய குருமார்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் ஜெபிக்கும் போதே அவரைக் கைது செய்ய பலர் தயாராக இருந்தனர். ஏனெனில் அவரை எல்லோரும் பெரும் போதகர்  என்று எண்ணிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் நேரே யூதாஸிடம் வந்து, ‘நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ ஏசுவின் சீடன் தானே?’ என்று கேட்டார்கள். 

யூதாஸ் அவர்கள் கூறிய படியே தனது பதிலைச் சொன்னார்.

அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவர் ஏசுவை அவர்களிடம் கையளித்தார்.

**********************





*