Showing posts with label THE INCARCERATIONS. Show all posts
Showing posts with label THE INCARCERATIONS. Show all posts

Thursday, May 29, 2025

1316. THE INCARCERATIONS .. CONTENT

வரவர ராவ் – தெலுங்குக் கவிஞர். ஆதிவாசிகளுக்காகப் போராடிய கவிஞர். சுய நினைவிழந்து சிறையில் தன் 81 வயதில் துன்பப்பட்டவர்.


தன் மகள் பாவனாவுடன் பேசிய வரவர ராவ் “நீங்கள் இந்தச் சிறை வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் பேசுங்கள். மக்களும், ஊடகங்களும் எங்கள் சிறைவாழ்க்கையைப் பற்றி சிறிதாவது தெரிந்து கொள்ளட்டும்" என்று கேட்டுள்ளார்.
.... தொலைபேசியில் பேசியவர் என் தந்தை தன்னுடைய நினைவாற்றலை முழுவதுமாக இழந்துவிட்டார். அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களால் அவரைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை ஏதோ ஒரு தனி உலகில்... அவருக்கான தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் உடல்நிலை சரியில்லை உடனே அவருக்கு ஏதாவது செய்தாக வேண்டிய சூழல் இருக்கிறது" என்று தொலைபேசியில் பேசியவர் பாவனாவிடம் கூறியிருக்கிறார்.
குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரைச் சிறைக்கு அனுப்புவது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் அவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதும் அதற்கு எந்தவிதமான மருத்துவ உதவியும் கொடுக்காததும் எங்களது வேதனையை இன்னும் அதிகமாக்கியது. 81 வயதான வரவர ராவ் ஒரு பெரும் கவிஞர்; பெரும் விமர்சகர்; புரட்சிகரமான பாடல்கள் எழுதியவர். ஆனால் இன்று அவர் எந்தவிதக் கவனிப்பும் இல்லாமல் சிறையில் தன் நினைவாற்றலை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பலரின் மனசாட்சிகளை இவை தொடவே இல்லாமல், அவர் தனித்து விடப்பட்டுக் கிடந்தார்.
அவரது கவிதைகள் பல இளைஞர்களை ஊக்குவித்தன. அவர் கவிதைகள் பெரும்பாலும் பாவப்பட்ட ஏழை மக்கள், விவசாயிகள், ஆதிவாசிகள் போன்றவர்கள், அதிகாரம் மிக்க மக்களிடம் அடிமைகள் போல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளே அதிகம். காவல்துறையின் ஆதிக்கத்திலும், நில உரிமையாளர்களின் செல்வாக்கிலும் இந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் துரத்தப்பட்டார்கள். துரத்தப்பட்ட அவர்களின் இடங்களில் புதிய தொழில் ஆலைகள் நிறுவப்பட்டன; அல்லது சுரங்கங்கள் தோண்டப்பட்டன; அல்லது புதிய அணைகள் கட்டப்பட்டன. ஆனால் அந்த மக்களைப் பற்றிய கவலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை. வரவர ராவ் போன்ற கவிஞர்களுக்குத் தான் அந்தக் கவலை முழுமையாக இருந்தது.
முன்பு சிறையிலிருந்து அவர் எழுதிய கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘பிரதிபலிப்பு’. இந்தியா முழுவதும் மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் என்ற பெயர் பெற்ற, மறைந்த கே பாலகோபால் இந்தக் கவிதையை மொழிபெயர்த்திருந்தார்.
நான் ஒன்றும்
வெடி மருந்துகளை யாருக்கும் அள்ளிக் கொடுக்கவில்லை
எந்த அறிவுரையும் யாருக்கும் அள்ளித் தெளிக்கவில்லை
ஆனால் நீங்கள் தான்
உங்கள் இரும்பு செருப்புகளை வைத்து
எறும்புப் புற்றுகளை மிதித்து அழித்தீர்கள்
அந்தப் புற்றிலிருந்து போராட்டம் பிறந்தது
நீங்கள் தான்
உங்கள் லத்திகளால் தேன்கூட்டை உடைத்துச் சிதைத்தீர்கள்
பறந்து வந்த தேனீக்கள் தந்த ஒலி
உங்கள் இதயத்தை நொறுக்கி விட்டது.


May be an image of 1 person and text that says 'Revolutionary Rao, Hyderabad. poet Maravara'
All reactions:
முத்துமணி, Thillai Arasu and 9 others

1315. THE INCARCERATIONS .. CONTENT


ஹனிபாபு. Associate Prof of English in Delhi University

நமது மக்கள் சாதியோடு தொடர்பில்லாத ஒரு மொழியை கற்றுக் கொள்வதே மிகச் சரியாக இருக்கும். இந்த விவாதம் முழுமையான ஒன்றாகவும், மிகுந்த பொருள் பொதிந்ததாகவும் உள்ளது. அந்நிய காலனிய மொழி வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும், காலனிய மொழிகளை விலக்கி, நம் நாட்டு மொழிகளைத்தான் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கும் அவர் கொடுத்துள்ள எடுத்துக்காட்டு நல்லதொரு பதிலைக் கொடுக்கும்.
ஹனி பாபுவைப் பொருத்தவரையில் குழந்தைகள் தங்கள் தாய் மொழியைக் கற்க வேண்டும். அதற்கு அடுத்த இடத்தை ஆங்கிலத்திற்குக் கொடுக்க வேண்டும். அது ஒரு காலனிய, அயல்நாட்டு மொழியாக இருக்கலாம் ஆனால் அது சாதியக் குவியலிலிருந்து தனித்து நிற்கும் ஒரு மொழி. அந்த மொழியை வைத்து மேலோர் கீழோர் என்றெல்லாம் பிரிக்க முடியாது. மொழி மூலம் சாதியை ஒழித்து, சமத்துவ சமூகத்தை ஏற்படுத்த இது ஒரு நல்ல வழி.
.............ஹனிபாபு. Associate Prof of English in Delhi University



All reactions:
முனைவர் பாஸ்கரன், Mukilvanan Mukilan and 18 others

1314. THE INCARCERATIONS .. CONTENT

யாரிந்த ரோனா வில்சன்?

ரோனா வில்சன் - கைதிகளின் உரிமைக்காகப் பாடுபடும் போராளி. டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வாளர்.
நமது நாட்டின் பிரதம அமைச்சரைக் கொல்லச் சதி செய்யும் திட்டத்தை இவரது கணினியில் கிடைத்த ஒரு தகவலினால் பலரைக் கைதுசெய்தனர். அவ்வளவு ‘பயங்கரமான ஆளா’ இவர்?
இவர் கைது செய்யப்படும் பொழுது அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் (Committee for Release of Political Prisoners - CRPP)உறுப்பினராக இருந்தார். என்னே ஒரு நகைமுரண்!
ரோனாவின் போராட்டம் அரசியல் கைதியான பேராசிரியர் ஒருவரை விடுதலை செய்வதற்காக ஆரம்பித்தது. இறந்து போன சையத் அப்துல் ரஹ்மான் ஜிலானி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடியவர் ஜிலானி. ஆனால் அவர் 2001 ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர் என்று கைது செய்யப்பட்டு மரண தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டார் . இறுதியில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் விடுதலை செய்யப்பட்டார்.
ரோனாவிற்கு இந்த அமைப்பு, போராட்டம் எல்லாவற்றிலும் ஈடுபட்டிருந்தாலும் அவர் முதலில் ஓர் ஆராய்ச்சி மாணவர். அவரது ஆர்வமும், அவரது ஆய்வின் தலைப்பும்:“இஸ்லாமியர் ஒரு மாற்றான் என்பதொரு கற்பனை; மாநில அரசு, சட்டம், அரசியல் இணைந்து நடத்தும் இன்றைய இந்தியாவில் புதிய பெயர் வைக்கும்போக்கு”. எப்படி ஒரு சாதாரண இஸ்லாமியர் ஒரு“தீவிரவாதியாக”க் காட்டப்படுகிறார்; சட்டங்கள் எப்படி இஸ்லாமியரை ஒரு போராளியாக மாற்றப் பயன்படுகின்றன? எங்ஙனம் இஸ்லாமியரை மிகத் திறமையாக ஒரு“மாற்றானாக”இனங்காண்பிப்பதை அரசுகள் செய்து முடிக்கின்றன? ஆனால் அதே நேரத்தில் ஒரு இஸ்லாமியப் பெண்ணைப் பாவப்பட்டதாகச் சித்தரித்து, அவளைக் காக்க வேண்டிய தேவை இந்திய அரசின் வேலை என்ற கருத்தையும் எப்படி வளர்த்து விடுகிறது? இந்தக் கேள்விகளின் பதில்களோடு, அவர் எவ்வாறு இஸ்லாமிய விரோதம் என்ற மனப்பான்மை மூலம் இந்துத்துவாவை இந்திய மண்ணில் உறுதிப்பட வைக்கின்றது என்பதையும் தன் ஆய்வில் கண்டுணர ஆவல் கொண்டார்.



All reactions:
Mohamedsadiq Abdulsalam and Charles Manoharan

1313. THE INCARCERATIONS .. CONTENT




சுரேந்திர காட்லிங் - மனித உரிமைப் போராளி; தலித்; வழக்கறிஞர்



மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தலித்துகளும் ஆதிவாசிகளும் விடுதலை பெற வேண்டும் என்று 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக போராடிக் கொண்டிருப்பவர். நாக்பூரில் தனது தொழிலை செய்து கொண்டிருக்கிறார்
சுரேந்திரா ஏழை மக்களிடம் பணம் ஏதும் வாங்காமல் அவர்களுக்காக வழக்காடுகிறார். ...114அவரின் மனைவி மினல் காட்லிங், “இவர்கள் எல்லோருமே பாவப்பட்ட ஏழை மக்கள்; நல்லது கெட்டது தெரியாத எளிமையான மக்கள்; அவர்களுக்கு சட்டதிட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாது. நாக்பூர் போன்ற நகரங்களுக்கு வந்ததும் அங்கு இருக்கும் மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் அத்தனை ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கு மாடுகள் இழுக்காமல் எவ்வாறு இந்த கார்கள் ஓடுகின்றன என்ற கேள்விகள் அவர்கள் மனதில் இருக்கும் . இப்படிப்பட்ட ஏழை மக்களுக்காக சுரேந்திரா தன் பணியை முன்னெடுத்துச் செல்கிறார்.
இன்னொரு பிரபலமான வழக்கிலும் சுரேந்திரா முழு ஆர்வம் காட்டினார். Dr. G. N. சாய்பாபா ஏறத்தாழ 90% உடல் மரத்துப் போய், வாழ்க்கையைச் சக்கர நாற்காலியில் கடத்துபவர். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர். மகாராஷ்டிரா காவல்துறை இவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு போய் கொண்டு இருக்கும் வழியில் மறித்து கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருக்கிறார் என்றும், அதற்காக ஆயுள் சிறைத்தண்டனையை 2017 ஆண்டில் பெற்றார். இவருக்காக சுரேந்திரா வழக்காடினார்.
இவர் கைதாகும்போது அவரது வயது 47.அவர் நடத்திய வழக்குகளில் மூன்று வழக்குகளை தவிர அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்ற வழக்கறிஞர் அவர்.
சுரேந்திராவை பொறுத்த வரையில் அவர் மிகவும் பெருமைக்குரிய மனிதர். ஒரு தலித்தாகப் பிறந்து நாக்பூர் நகரின் குடிசைப் பகுதிகளில் தன் வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருடைய தந்தை ஒரு கைவண்டி ரிக்ஷாக்காரர். ஆனால் அதன் பின் அவர் நகர முனிசிபாலிடியின் சுகாதாரத் தொழிலாளியாக இருந்தார்.


1312. THE INCARCERATIONS .. CONTENT


இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் THE INCARCERATIONS - சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் .. என்ற நூல் ஒரு வழக்கைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பீமா கோரேகான் என்ற இடத்தில் நடந்த வன்முறைகளை வைத்து எழுதப்பட்டுள்ளது. அதன் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்படுகின்றனர், அவர்களில் ஒருவர் உமர் காலித். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் - வெறும் விசாரணைக் கைதி என்ற பெயரில் இந்த நீண்ட சிறைவாசம்.
இவரைத்தான் அண்மையில் நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லியில் சிறைக்குச் சென்று சந்தித்து வந்தார்.
உமரைப் பற்றி நூலில் வரும் சில வரிகள்:
ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தற்கொலை செய்து இறந்து விட்டார். சாதிப் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொள்ள தள்ளப்பட்டு விட்டார், அவரின் தாய் ரேணுகா மகனைப் பற்றிப் பேசியமர்ந்ததும், ….
உமர் காலித் ரேணுகாவின் சோகப் புலம்பலுக்குப் பதில் சொன்னார்:
“அவர்கள் உங்கள் மகனைக் கொன்று விட்டார்கள்; இல்லை … அவரை விதைத்து விட்டார்கள். இன்று நிறைய ரோஹித்துகள் முளைத்து விட்டார்கள்.”25ரோஹிதின் மரணம் இந்தியா முழுமைக்கும் ஓர் பேரதிர்ச்சியாக மாணவர்களிடம் பரவியது. பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் சாதி வெறுப்பிற்கு எதிராக மாணவர்கள் அணி திரண்டனர்.2
6உமர் காலித் 2018 ஆகஸ்ட் மாதம் மெல்லிய நூலிழையில் உயிர் தப்பினார். அவரைக் கொல்வதற்காக நடந்த முயற்சிகளிலிருந்து தப்பிவிட்டார்.27அப்படித் தப்பித்தவரை 2020 செப்டம்பர் மாதம் அரசு சிறையிலிட்டது. அவர் செய்த தவறு தலித்துகளின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்று போராடியதுதான்.28அன்று மேடையேற்றப்பட்ட மக்களில் மிகவும் முக்கியமானவராக இவர் கருதப்பட்டார். ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் - தரத்திற்காக பெரும் புகழ் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில்- நல்லதொரு மாணவராக புகழ்பெற்ற இவர் இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடினார். அது மட்டுமல்ல; பிறவியால் அவர் ஒரு இஸ்லாமியர்.29அவர் அன்று மேடையில் பேசியபோது, “நாளை கோரேகானில் நடக்கும் விழா ஆங்கிலேய அந்நியர்களின் வெற்றிக்காக அல்ல; ஆனால் சாதி வெறி பிடித்த ஒரு பேரரசு வீழ்ந்ததின் வரலாறு. அந்தப் பேரரசு கீழ் சாதி என்று நசுக்கப்பட்ட மக்கள் தாங்கள் நடக்கும் பாதையில் ஏற்பட்ட தீட்டை விலக்குவதற்காக முதுகுகளில் விளக்குமாற்றைக் கட்டிச் செல்ல வேண்டுமென்று கட்டாயப் படுத்தினர்.30அந்த அரசை எதிர்த்து தோல்வியடைச் செய்த தலித்துகளின் கொண்டாட்டம்தான் அது.












All reactions:
தமிழ் காமராசன், Saravanan Madurai and 7 others