Showing posts with label யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும். Show all posts
Showing posts with label யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும். Show all posts

Wednesday, September 09, 2020

1109. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 8




ஏனைய பதிவுகள்:


பைபிள் கருத்துகள்

ஓர் அலசல்

 

பெண்ணடித்தனம்:

கலாத்தியர் 3:28 -’ஆண் பெண் வேறுபாடு இல்லை” என்று கூறியிருந்தாலும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்றே பைபிள் போதிக்கின்றது. (105)

கலாத்தியர் 4:30 - அடிமைப் பெண் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக் கூடாது.

1 திமொத்தேயு 2:11-14 - முதலில் உண்டாக்கப்பட்டது ஆதாம்; பிறகுதான் ஏவாள்.

இயேசுவுக்கு நெருக்கமாக இருந்த பணியாற்றியது பெண்களே. அவர் சிலுவையில் இறந்ததும் ஆண் சீடர்கள் தத்தம் தொழிலுக்குத் திரும்பி விட்டனர்.(யோவான் 2:2,3)சிலுவையில் அடியில் தொடர்ந்து இருந்தவர்களும், மூன்றாம் நாள் கல்லறைக்குச் சென்று முதலில் பார்த்தவர்களும் பெண்களே. ஆனால் ஒரு பெண்ணைக் கூட தன் அப்போஸ்தலர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. பரலோக ராஜ்ஜியத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட போது பெண்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. (மத்தேயு 19:28)

சாத்தானும் பரிசுத்த ஆவியும்:

கி.மு. 586க்கு முன்னால் “பரிசுத்த ஆவி” என்ற சொல் பழைய ஏற்பாட்டில் இல்லை.

புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “the Spirit of God” என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.(107)

கி.மு.586க்குப் பிந்தைய நூலாசிரியர்கள் தான் சாத்தானை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள். … சாத்தான் பற்றிய கொள்கை பாரசீக ஜொராஸ்ட்ரிய மதத்திலிருந்து பெறப்பட்டதாகும். (108)

பழைய ஏற்பாட்டில் சாத்தானுக்கும் கடவுளுக்கும் பகைமை இருந்ததாக எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. கடவுள் நடத்தும் அரசாங்கத்துக்குரிய படைவீர்ர்களாக வானதூதர்கள் (Commander of the army of the Lord) இருந்ததை அறிகிறோம்.(யோசுவா 5:14)

கிருபையும் செயல்களின்படி அமைகின்ற வினைப்பயனும்:

பைபிளில் கிருபை - mercy - என்ற சொல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆதியாகமக் 17:7 - ஆபிரகாம் சந்ததியினருடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி எல்லாக் காலத்திலும் அவருடைய சந்ததியினாருக்கு மட்டுமே அவர் கடவுளாக இருப்பார்.

புதிய ஏற்பாட்டு பவுலுக்கு   இயேசுவை புறஜாதியாரிடம் எடுத்துச் செல்ல முடியாத நிலையில், … பவுலுக்குக் கிடைத்த ஒரு புதிய வழிமுறைதான் “கிருபை” என்னும் பேரிரக்கம்.

புறஜாதியாரைப் பழி வாங்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அக்கடவுள். (எரோமியா 51:24;  செப்பானியா 3:19) இந்நிலையில், புறஜாதியினரை எப்படியாவது அவருடைய் பக்தர்கள் ஆக்கிவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் புனையப்பட்டதே இந்த ‘இரக்கம்’. (111) இச்சொல் மதம் மாற்றுவதற்குத் தேவைப்பட்ட சொல்லே தவிர வேறல்ல.

இயேசுவின் இரத்தமும் பாவ மன்னிப்பும்:

காயின் ஆபேலைக்கொன்ற பிறகு நோது நாட்டுக்குச் சென்று அங்கே ஒரு பெண்ணை மணந்து கொண்டான். அவர்களுக்கு ஏனொக்கு என்ற பிள்ளை பிறந்தது. அப்படியானால், ஆதாம் ஏவாள் தவிர்த்து பூமியில் பிற நாடுகள் இருந்தன. அங்கு எண்ணற்ற மக்களும் இருந்துள்ளனர். இவர்கள் யாரும் பைபிளின் கடவுளல் படைக்கப்பட்டிருக்க முடியாது. ஆதாம் ஏவாளின் சந்ததியின் இருபதாவது தலைமுறையில் இஸ்ரவேலர் தோன்றினார். இஸ்ரவேலின் சந்ததியர்களே இஸ்ரேயலியர்களாக, யூதர்களாக, 12 ஜாதியினராக ஆனார்கள். ஏனையோர் புறஜாதியினர்.  …தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்னினார். (அப். நட். 13:23) (113)

பரலோக ராஜ்ஜியமும் புறஜாதியாரும்:

கி.மு. 586-ல் யூதேயா நாடு பாபிலோன் மன்னனாகிய நெபுகாத் நெசாருக்கு அடிமையாகிப் போனது. அதனால் அவர்களுடைய கடவுளால் எருசலேமில் குடியிருக்க முடியாமல் போயிற்று. (!!!!)  (எசேக்கியல் 19:4,19,19) (115)

இதன்பின் கி.மு. 538-ல் பாரசீகர்களுக்கும், கி.மு. 332-ல் கிரேக்கர்களுக்கும், கி.மு. 142-ல் ஹாஸ்மோனியர்களுக்கும், கி.மு. 63-ல் ரோமானியர்களுக்கும் என மாறிமாறி யூதநாடு புறஜாதியினருக்கு அடிமையானது.

இதன் பின்னால் நடக்கப் போகும் நிகழ்வுகள் பற்றி யோவானுக்கு ஒரு தரிசனம் மூலமாகக் கடவுள் முன்னறிவித்ததாக எழுதப்பட்டுள்ளது. அதில் அரியாசனத்தில் இருக்கும் கடவுள் வீற்றிருந்தார். … பரலோக ராஜ்ஜியத்துக்கும்ப் போவதற்குத் தகுதியுடையவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கடவுளிடம் இருந்தது. 1,14,000 பேர்களின் பெயர்கள் மட்டுமே அதில் எழுதப்பட்டிருந்தன. அனைவரும் இஸ்ரேயலர்களின் 12 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஜாதிக்கும் 12,000 பேர்கள்.(திருவெளிப்பாடு 7:4-8) அப்போ புறஜாதியினரான நமக்கெல்லாம் அங்கே இடமே இல்லையா? அவர்கள் … புதுப்பாட்டைப் பாடினார்கள். அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும்கற்றுக் கொள்ளக் கூடாதிருந்தது. (திருவெளிப்பாடு 14:3)

திருவிளையாடல் படத்தில் தருமி “அய்யோ.. ஆயிரம் பொன்.. எனக்குக் கிடைக்காதா என்று அங்கலாய்த்து அரற்றுவார். அதைப் போல் தான் புறஜாதி மக்கள் அனைவரும் அரற்ற வெண்டும் போலும். ஏனெனில் 

1.பரலோக ராஜ்யம் 1,44,000 யூதர்களுக்கு மட்டும் தான் என்று திருவெளிப்பாட்டில்(பைபிளில்) கூறப்பட்டுள்ளதே. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

தேவ வாக்கியம் பொய்யாகுமா?

2. இயேசு இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாகப் பல இடங்களில் வேதாகமத்தில் சொல்லியுள்ளது. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

3. வரலாற்று பூர்வமாக கிறித்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் நடந்த மாற்றங்கள் , திரிபுகள் பற்றி விளக்கமான ஆய்வறிக்கை கொடுத்தாலும்  ... அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

சிறு வயதில் கொடுக்கப்பட்ட விசுவாசத்தைக் கை  விடாமல் பயணிக்கும் வழியைப் பற்றி ஆயிரம் ஆய்வுகள் கொட்த்தாலும்  ...அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

*******





இந்த நூலின் கருத்துரைகள் இப்பதிவோடு முடிவடைகிறது.


.

Friday, September 04, 2020

1108. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 7


ஏனைய பதிவுகள்:





                             (Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
                                                           in Codex Sinaiticus.             
                        

வரலாறு மிகவும் முக்கியம், நம்பிக்கையாளர்களே!

 

பொதுவாக, எனது கிறித்துவ மதக் கட்டுரைகளை “பெரிய” நம்பிக்கையாளர்கள் வாசிப்பதில்லை. இருப்பினும் இந்தக் கட்டுரையை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நிச்சயமாக ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கு, கிறிஸ்துவ நம்பிக்கையாளனுக்கு கீழ்க்கண்டவை அனைத்துமே நிச்சயமாக மிகப் புதியதாகவும், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடியவைகளாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வேண்டுகோளின்படி வாசிப்பவர்கள் அனைவரும் பெரிய மனது செய்து இதில் சொல்லிய விஷயங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களா  அல்லது தெரியாதவைகளா என்று மட்டும் சொன்னால் அது என் புரிதலுக்குத் துணையாக இருக்கும். 

இக்கட்டுரையில் நூலாசிரியர் மாற்கு 16:9-20 என்ற வசனங்களில் 16:8 மட்டுமே உண்மையான வசனங்கள் என்றும், 9-20 வசனங்கள் பிற்சேர்க்கை என்கிறார். அதை உறுதிப் படுத்த நானும் சில ஆய்வுகளைச் செய்தேன். ஆய்வுகளில் கிடைத்த செய்திகளை இக்கட்டுரையில் நடுவே நான் தந்துள்ளேன்.

 

இயேசுவின் திருத்தூதர்களாகிய அப்போஸ்தலர்களும் அவர்கள் செய்த பணிகளும் (65) 

இயேசு தன் அப்போஸ்தலர்கள் /திருத்தூதர்களான பன்னிருவரையும் அனுப்புகையில் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டாரிடத்தில் போங்கள்”. (மத் 10:5,6) 

அதாவது, இயேசுவும் புறஜாதியாரிடம் போகவில்லை; தம்முடைய சீடர்களும் அவர்களிடம் சென்று பணியாற்ற இயேசு அனுமதிக்கவில்லை. ’மெசியா’ என்பவர் இஸ்ரேயலர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.(66) 

நம்புகிற யூதர்களும் நம்பாத யூதர்களும்

’கிறிஸ்து’ , மற்றும் ‘கிறிஸ்தவர்’ என்னும் சொற்கள் கி.பி. 49க்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன. இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர், 36 வாக்கில் பைபிளில் அறிமுகமாகிற பவுல் என்பவர் ஆவார்.

இயேசுவை புற ஜாதியாருக்கும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்ற பவுலின் தீர்மானத்துக்குப் பின்னரே இந்த இரு சொற்களும் பயன்பாட்டுக்கு வந்தன.(67)

மெசியா செய்ய வேண்டிய பணிகளுள் எதையும் இயேசு செய்யவில்லை என்பதால் இயேசுவை மெசியா என நம்பாதவர்கள் ‘நம்பாத யூதர்கள்’ஆயினர். பழைய ஏற்பாடு அறிவிக்கும் மெசியா இன்றுவரை வரவில்லை என்றும், விரைவில் வந்து விடுவார் என்றும் இன்றுவரை அவர்கள் நம்பி காத்திருக்கிறார்கள். இன்றைய யூதர்கள் அவர்களே; அவர்களுடைய மதம் யூத மதம். அவர்களுக்கு என சொந்தமாக யெகோவா என்ற கடவுள் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு நூல்களில் யூதர்கள் இழந்த நாட்டினைத் திரும்பப் பெறுதல் என்பதே “விடுதலை” அல்லது “இரட்சிப்பு” எனப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில் அது ”பரலோக ராஜ்ஜியம்” என்று கடவுள் சார்ந்த விஷயமாக மாற்றப்பட்டது. (68)

அதனால் தான் இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட காலத்தில் கூட, தங்களுடைய நாட்டின் விடுதலை எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்றுதான் அவரிடம் விசாரித்தார்களே தவிர, ”ஆன்மீக விடுதலை” பற்றி அம்மக்கள் பேசவில்லை. (அப். நட. 1:6) (69)

யூதர்களுக்கு மட்டும் மெசியாவாக இருந்த இயேசு பின்பு புறஜாதியினர் நலனில் அக்கறை கொண்டவராக மனம் மாறியதாகவும், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்குமாறும்” தன் சீடர்களுக்கு கட்டளை இட்டதாகவும் பைபிளில் எழுதப்பட்டுள்ளது. (மாற் 16:15)  ஆனால் மாற்கு 16:9-20 வரை உள்ள 12 வசனங்கள் உண்மையானவை அல்ல என்றும், Codex Sinaiticus, Codex Vaticanus ஆகிய முக்கியமான பைபிள் பிரதிகளில் இந்த வசனம் இல்லை என்றும், பிற்காலத்தில் யாரோ எழுதி இவற்றைச் சேர்த்துள்ளனர் என்றும் அறிகிறோம். .. (இதற்கான மேல் விவரங்களுக்குக் கீழே சில இணைய தள முகவரிகளைத் தந்துள்ளேன். பழைய பைபிளின் படங்களும் 16:9-20 இல்லாத பகுதிகளும் அதில் உள்ளன. ஆனாலும் இந்த கிறித்துவ இணைய தளங்கள் இதில் கொஞ்சம் “மழுப்பு வேலை” செய்வதாகவே வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது.) தமிழ் புரோட்டஸ்டாண்ட் மொழி பெயர்ப்பு, கத்தோலிக்க மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் இந்த வசனங்கள் இல்லை. ஏமாந்து போன சீடர்கள் இதனால் இரண்டாம் வருகைக் கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். (யோவான் 16:20) (73) 

உடனே நடக்கும், தங்கள் வாழ்நாளிலேயே கிடைத்துவிடும் (மாற்கு 9:1; மத் 16:20) என்று சீடர்கள் நம்பியிருந்தும் இரண்டாம் வருகை இன்னும் நடைபெறவில்லை.(74)

 பவுலின் அறிமுகம் அல்லது மனமாற்றம், அப்போஸ்தலர் எனப்பட்ட திருத்தூதர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியது, எருசலேம் சங்கக்கூட்டம்,  பழைய ஏற்பாட்டை அவர் ரத்து செய்தது, அதனால் இயேசுவின் உண்மையான சீடர்களோடு ஏற்பட்ட மோதல், இவற்றால் எழுந்த புதிய சூழ்நிலை காரணமாக பரலோக வாழ்வு இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே உண்டு என இயேசுவின் சீடராகிய யோவான் நூல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் …  இவையெல்லாம் பைபிள் வரலாற்றில் ஒரு பின் இணைப்பாகவே உள்ளன. (75)

பவுல் மனமாற்றமும் அதிலுள்ள முரண்பாடுகளும்

அப். நட. 26:12-14; அப்.நட. 9:3-7; அப்.நட. 22:9  -- இரண்டாவது வசனத்தில் கடவுளின் குரலைக்கேட்டவர்களால், மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள வசனத்தில் குரலைக் கேட்க முடியாமல் போயிற்று.

யூதர்கள் இயேசுவை மெசியா என ஏற்க மறுத்துவிட்டனர். எனவே புறஜாதியாரிடமாவது அவரைப் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்பதே பவுலின் கொள்கையாக இருந்தது. (80)

கி.பி 49ல் எருசலேம் சங்கம் (The Council of Jerusalem) கூடி புறஜாதியினரிடம் இயேசுவைப் பிரச்சாரம் செய்யலாம் என பவுலுக்கு ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னரே கிறிஸ்து என்ற சொல்லை பவுல் பயன்படுத்தினார். (82)

 எருசலேம் சங்கக் கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. அதில் யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி பேதுருவுடையது; புறஜாதியினருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தாமே செய்ய வெண்டும் என எருசலேம் சங்கம் முடிவு செய்ததாக பவுல் எழுதினார். (கலாத்தியர் 2:7) புற ஜாதியாருக்கு விருத்தசேதனம் தேவையில்லை என ஒரு சலுகையாக வழங்கப்பட்டது.

பின்பு பவுல் பழைய ஏற்பாடே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தார். (அப்.நட. 21:20,21) இதனால் மீண்டும் பல சண்டைகளும் ஆரம்பித்தன.(87) 

புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் உள்ளன. அவற்றில் 14 கடிதங்கள் பல்வேறு தரப்பினருக்கும் பவுல் எழுதியவை. இரண்டு லூக்கா எழுதியவை.  மேற்கண்ட  நூல்களில் இயேசுவை ஜாதிய எல்லைக்குள் இருந்து வெளியே மீட்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களை எழுதிய பவுலும் லூக்காவும் இயேசுவுக்கு நேரடியாக தொடர்பில்லாத அந்நியர்கள். இருவரும் அவரைப் பார்த்தது கூட இல்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்தக் கொள்கைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

தாயின் வயிற்றில் இருந்தபோது என்னை தமக்கென ஒதுக்கி வைத்து தனது அருளால் என்னை அழைத்த கடவுள் என்று பவுல் எழுதியுள்ளார். (கலாத்தியர் 1:15,16) பின் ஏன் கி.பி. 36 வரை அவர் இயேசுவிற்கு எதிராக படை நடத்தினார்?

அப்.நட. 21:21-24; அப். நட. 21:26 - வசனங்கள் நமக்குப் பல செய்திகளை தருகின்றன.(90)

 

பவுல் - விருத்த சேதனம்

ஆதியாகமம் 17.9-11 - விருத்த சேதனத்தின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. ஆனால் பவுல் ரோமர் (2:26-29)  உள்ளத்தால் செய்யும் விருத்த சேதனமே சிறந்தது என்கிறார்.                             மேலும் கலாத்தியர் (5:2) - விருத்தசேதனம் செய்து கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை என்கிறார்.

தம் பணிக்கு இடையூறாக இருந்த விருத்தசேதனம், மோசேயின் சட்டம் மற்றும் பழைய ஏற்பாட்டை ரத்து செய்தால் மட்டுமே பிறகு ஜாதியினரிடம் இயேசுவை பிரச்சாரம் செய்வது சாத்தியமாகும் என அவர் கருதினார். இந்த மாற்றத்தை அவரால் நிறைவேற்றவும் முடியவில்லை.ஆனால் மற்றொரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மெசியாவை கிறிஸ்துவாக மாற்றினார். (93)

 

கிரேக்கத்தில் “கிறிஸ்டோஸ்” (Christos) என்ற சொல் ஜாதிகளைத் தாண்டிய “எல்லோருக்கும் ஏற்புடைய கடவுள்” என்ற பொருள் கொண்டதாகும். இயேசுவை’கிறிஸ்து; என்று அறிமுகம் செய்தார். இதற்கு சீடர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.ரோமர் 1:2-5 வசனங்கள் மூலம் ஒரு சமரச ஏற்பாட்டிற்கு முயன்றார்.

 

இயேசு தன் இறப்பிற்குப் பின் கிறிஸ்து ஆகி விடுகிறார். அவரே அனைவருக்கும் உரியவர். “கிறிஸ்துவுக்கே தாம் பணியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேனே தவிர, மெசியாவுக்கல்ல என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். தனது நற்செய்தியிலும் இயேசுவின் சாதனை, போதனை பற்றி பவுல் பேசமாட்டார். இயேசுவின் மரணத்திலிருந்து தான் தொடங்குவார்.  தமக்கு  எதிராகப்   பிரிந்துள்ளவர்களிடம் வன்முறைப் பிரயோகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறினார்.(1 கொரிந்தியர் 4:21) (96)    

 

இயேசு மரணத்திற்குப் பின் கிறிஸ்துவாக மாறினார். அந்த இரண்டாவது இயேசுவே தம்முடைய இயேசு என்று பவுல் தெளிவுபடுத்தினார். (2 கொரிந்தியர் 11:4,5)                              

 

******

மாற்கு 16:9-20 பற்றிய சில கட்டுரைகளின் இணைய தள முகவரிகள்:

http://www.curtisvillechristianchurch.org/MarkOne.htm  - 

Codex Vaticanus does not contain Mark 16:9-20 but following Mark 16:8 and preceding Luke 1:1 it contains prolonged blank space, including an entire blank column. (Fig:1)

 


                                         (Fig:1) இப்படத்தில் 16:8 வசனங்களுக்குப் 

                     பின் சில வெற்றிடங்கள் உள்ளன.


(Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
in Codex Sinaiticus
.

http://apologeticspress.org/apcontent.aspx?category=13&article=704

One textual variant that has received considerable attention from the textual critic concerns the last twelve verses of Mark. Much has been written on the subject in the last two centuries or so. Most, if not all, scholars who have examined the subject concede that the truths presented in the verses are historically authentic—even if they reject the genuineness of the verses as being originally part of Mark’s account

********

https://www.thegospelcoalition.org/article/was-mark-16-9-20-originally-mark-gospel/  

 For example, between 16:8 and 16:9, the ESV includes these words: “Some of the earliest manuscripts do not include 16:9–20.”

Christians have known for centuries that Mark 16:9–20 might not have originally been part of Mark’s Gospel.

One brother in Christ, a monk named Ephraim who lived in the 900s, …we still have several manuscripts he made. Some still have his signature. We can identify others by his handwriting and craftsmanship. Ephraim wasn’t the original author of these particular words. He regularly copied marginal notes that were already in the manuscripts he was using, and this note was one of them. And Ephraim’s manuscript isn’t the only copy of Mark that has this note between 16:8 and 16:9. There are at least 11 others in Greek. The note probably predates 10th-century Ephraim by a few hundred years.

One important fourth-century Old Latin manuscript has a short addition after verse 8 and then ends without verses 9 to 20. A valuable Old Syriac manuscript from the fourth century also ends Mark at 16:8. A Sahidic Coptic manuscript (probably from the fifth century) ends Mark’s Gospel at 16:8 as well. In 1937, E. C. Colwell identified 99 Armenian manuscripts of Mark (of 220 surveyed) ending at 16:8, and a further 33 containing 16:9–20 but with notes expressing doubt about the verses’ authenticity.

****** 

புதிய ஏற்பாடு எழுதப்படுதல்

கி.பி. 52 வாக்கில்தெலோனிக்கருக்கு தம் முதல் கடிட்தத்தை பவுல் எழுதினார். காலத்தால் முதலில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு நூல் இதுவே. அதனைத் தொடர்ந்து தம்முடைய 14 கடிதங்களையும் பவுல் கி.பி. 65க்குள் எழுதி முடித்து விட்டார். ஆனால் இயேசுவின் திருத்தூதர்களோ அல்லது மற்றவர்களோ, இதுவரை புதிய ஏற்பாட்டு நூல்கள் எதனையும் எழுதத் தொடங்கிருக்கவில்லை.

பவுலின் நூல்களில் மூன்று விஷயங்கள் தெளிவாக அழுத்தம் விட்டிருந்தன: 

·         விருத்த சேதனம்,  திருச்சட்டம்,  பழைய ஏற்பாடு ஆகியவை தேவையில்லை. (அப். நட.21:28; ரோமர் 10:4; மற்றும் 7:6) 

·         உயிரோடு வாழ்ந்த காலத்தில் இயேசுவில் தூய ஆவி இல்லை. அவர் மரணம் அடைந்த பின்னரே அவரில் பரிசுத்த ஆவியாகிய தூய ஆவி இறங்கியது. அதனாலேயே அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார். (2 திமோத்தேயு 2:8,9;  மற்றும் 2 கொரிந்தியர் 11:4,5; மற்றும் 5:15,16) 

·         இயேசுவை ’கிறிஸ்து’ எனவும், மரணத்துக்குப் பின் கிறிஸ்துவாக மாறிய பின்னரே அவர் அனைவருக்கும் உரிய கடவுள் ஆனார் என நிறுவினார். (1 கொரி 2;2) 

இக்கொள்கைகளை உண்மையான சீடர்கள் மறுத்தனர். இதனால் அவர்கள் நற்செய்தி நூல்களை எழுதினர். கி.0இ. 66ல் மாற்கு முதலாவதாக எழுதினார். லூக்காவைத் தவிர ஏனைய 3 பேர்களும் பவுலுக்குப் பதில் சொல்லுவதற்காகவே நூல்கள் எழுதினார்கள். அப்பதில்களில் முக்கியமானவை:

  1. 1.    மத் 5:17-19 - உலகம் அழியும்வரை பழைய ஏற்பாடு அழியாது என்றும், பவுலின் பிரச்சாரம் இயேசுவின் கொள்கைகளுக்கு மாறானது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.(98)
  2. 2.    எசாயா 7:14 இந்த இறைவாக்கு கி.மு. 700 யூதேயா நாட்டு ஆகாஸ் மன்னனுக்காகச் சொன்னது. மெசியாவிற்கு உரியதல்ல. ஆனால் இதை அவ்வாறு மாற்றி எழுத சீடர்கள் துணிந்தனர். இதனால், இயேசுவின் பிறப்பின் மீதுள்ள மர்மம் நீங்கும்; பிறக்கும்போதே இயேசுவின் பரிசுத்த ஆவி இருந்ததாக நிறுவ முடியும். இயேசு பிறந்ததும், திருமுழுக்கு பெற்ற பொது அவரில் பரிசுத்த ஆவி இறங்கியதாகவும் மத்தேயு எழுதுகிறார். (மத் 1:18; மத் 3:16)
  3. 3.    இயேசுவே மெசியா, கிறிஸ்து அல்ல என்றனர் சீடர்கள். (99) மத் 10:5,6; யோவான் 4:6-9; யோவான் 4:16-18; மத் 15:25;  மத் 15:24; போன்ற வசனங்கள் இயேசு சமாரியர்களை வெறுத்தார் எனவும், இஸ்ரேயலியர்களுக்காகவே கடவுளால் அனுப்பப்பட்டிருப்பதை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.(101) 

திருத்தூதர்கள் என்னும் அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. இருந்தும் பவுல் தன்னைத்தானே அப்போஸ்தலர் என அறிவித்துப் பலருக்கும் கடிதம் எழுதுகிறார். அக்கடிதங்களின் முதல் அதிகாரத்தின் இரண்டு வசனங்களைப் படித்தால் அவர் தம்மை ஒரு திருத்தூதனாக முன்னிலைப்படுத்தியிருப்பதைக் காணலாம். (103) இந்தக் காரியத்தை வைத்து யோவானும் பவுலும் தங்கள் எழுத்துகள் மூலம் பொருதிக்கொள்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சி திருவெளிப்பாடு 2:2; 1 கொரிந்தியர் 9:2 என்பதில் இருப்பதை நூலாசிரியர் விளக்குகிறார். (104)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Monday, June 22, 2020

1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6




ஏனைய பதிவுகள் ….


தொடர்ச்சி ... 
பைபிளின் புதிய ஏற்பாடு





 மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் -  இவர்களில் லூக்கா மட்டும் பிற ஜாதி கிரேக்கர்;  இயேசுவை கண்ணால் பார்க்காதவர்.

 நற்செய்திகள் இரண்டு வெவ்வேறு தளங்களில் இருந்து தொடங்கப்பட்டன. மத்தேயு,லூக்கா கன்னி மேரியின் கருவிலிருந்து இயேசு உருவானதை கூறித் தொடங்குவர். ஆனால் மார்க்கும், யோவானும் அதைத் தாங்கள்  அறிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். திருமுழுக்கு என்பதிலிருந்து அவருடைய நூல்கள் தொடங்குகின்றன.(56)

 யூத மரபுகளில் இருந்து மாறுபட்டு பரிசுத்த ஆவி மற்றும் விசுவாசம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மதம் பவுல் மூலம் கிபி 49 இல் நடந்த எருசலேம் சங்கக் கூட்டத்திற்கு பின்னரே உருவாயிற்று. பைபிள் தன்னுடைய வரலாற்று தளத்திலிருந்து விசுவாசத்தின் பாதைக்கு இப்போதுதான் தடம் மாறிப் போனது.

 புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் உள்ளன. முதல் நூல் எழுதப்பட்ட காலம் கிபி 52க்குப்  பின்னர்.  இயேசு மரணம் அடைந்து சுமார் 20 ஆண்டுகள் அப்போது ஆகியிருந்தன. அதாவது கிபி 49 கூடிய எருசலேம் சங்கத்துக்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும், அவை எழுதப்பட்ட காலவரிசைப்படி பைபிளில் இடம் பெறவில்லை.

தற்போது புதிய ஏற்பாட்டில் வரிசைப்படுத்திக் கொள்ள முறையின்படி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நான்கு நூல்களும் இயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் உள்ள அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகும்.
அப்போஸ்தலர் நடவடிக்கைகள் அல்லது திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் சிலுவை சம்பவத்துக்குப் பிறகு அவரது சீடர்கள் செய்த பணிகளும்
‘ அப்போஸ்தலன் ஆக இல்லாதிருந்தும் தன்னைத்தானே அப்போஸ்தலன் என கூறிக் கொண்டவர்”  எனக் குற்றம் சாட்டப்பட்ட பவுல் மற்றும் பர்னபாஸ் போன்ற அவருடைய குழுவினர் செய்த பணிகளும் எழுதப்பட்டுள்ளன.  

அதன்பின் பவுல் எழுதிய 14 கடிதங்கள் உள்ளன.  உண்மையில் பவுல் எழுதிய கடிதங்கள் தான் காலத்தால் முதலில் எழுதப்பட்டவையாகும். ரோமர் முதலாக எபிரேயர் முடிய  பவுல் எழுதிய கடிதங்களுக்குப் பின் இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) எழுதிய கடிதம் உள்ளது. (57)
இயேசுவின் எதிரி என பொருள்படும் எதிர்க் கிறிஸ்து (anti-Christ) என்பவர், பவுல் மற்றும் அவருடைய குழுவினர் தாம் என்கிற அதிர்ச்சியான தகவலும் அவற்றில் இடம் பெற்றுள்ளது.(58)

 இயேசுவின் வாழ்க்கை வரலாறு:
 மத்தேயு லூக்காஇயேசுவின் தலைமுறைப் பட்டியலைத் தருகிறார்கள். (மத்.1:1-16; லூக்கா 3.23-34) இந்த இரண்டிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.
 உதாரணமாக இயேசுவின் தந்தை யோசேப்பு என கருதப்படுகிறது. யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என  மத்தேயுவும் (மத் 1:16), ஏலி என 
லூக்காவும் (லூக் 3:23)  மாறுபட்டு எழுதுகின்றனர். (59)
 மத்தேயு விவரிக்கும் தலைமுறைப் பட்டியலில் 41 தலைமுறைகள் மட்டும் இருந்ததாகவும்,  லூக்காவின் பட்டியலில் 56 தலைமுறை இருந்ததாகவும் அறிவிக்கிறார்கள். 

லூக்காவும்  அவருடைய நற்செய்தி நூலும்:
 இயேசுவை தன் கண்களால் கூட காணாதவர் லூக்கா. அவர் முன்னரே எழுதப்பட்டிருந்த மத்தேயு, மார்க்கு இரண்டையும் நன்கு படித்து தம்முடைய நூலை எழுதியதாக கூறுகிறார். (1:1-4)

 அவர் வசனங்களில் 350 வசனங்கள் மார்க்கு எழுதிய நூலில் உள்ளன; 325 வசனங்கள் மத்தேயு நூலில் உள்ளன. அந்த நூல்களில் இல்லாத பல விஷயங்களை தன் கொள்கைக்கு ஏற்ப மாற்றி தனது நூலில் எழுதியுள்ளார்.  மூல நூல்களில் இஸ்ரேலிய ஜாதிகளுக்கு மட்டுமே இயேசு ஆதரவாக இருந்ததாக எழுதப்பட்டிருந்த பகுதிகளை மாற்றிவிடுகிறார் அல்லது திருத்தம் செய்து கொள்கிறார்.  ஒரு உதாரணம் நல்ல சமாரியன் கதை. (60)

திருச்சட்டத்தில் வல்லுநர் ஒருவர் இயேசுவிடம் வந்து 10 கட்டளைகளில் எது சிறந்தது என்று கேட்டார்.  திருச்சட்டத்தில் சொல்லியிருப்பதை செய்யுங்கள் என்றும் உன் மீது அன்பு செலுத்துவது போல் உன் அயலான் மீதும் அன்பு செலுத்துவாயாக என்றும் பதில் கூறியதாக பைபிளில் உள்ளது. மத்தேயு மார்க்கு இரண்டிலும் இது உள்ளது.  அதோடு அங்கு அது முடிந்து விடுகிறது. (மத் 22:35-40; மாற்கு 12:26-34). 

ஆனால் லூக்கா நற்செய்தியில் திருச்சட்ட நூல் வல்லுநர் அடுத்து ஒரு கேள்வி கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக நல்ல சமாரியன் கதையை இயேசு கூறியதாக எழுதுகிறார். இந்தக் கதை மிகவும் பிரபலமான ஒன்றாகும். இயேசுவுக்கு மிகவும் சிறந்த கிரீடத்தை வழங்குவதற்கு இக்கதையை பலரும் இன்று பயன்படுத்துவர். ஆனால் லூக்காவின் மூல நூலாகிய மத்தேயுவிலோ, மாற்கிலோ இது இல்லை. இதன் மூலம் இயேசுவுக்கு லூக்கா ஒரு புதிய முகவரியைக் கொடுக்கிறார். யூதர்கள் சமாரியர்களைப் புற சாதியினரைப் போல தீண்டத்தகாதவர்கள்ளகவே நடத்துவர்.  ஆனால் ஒரு யூதனாக இருந்தும் இயேசு சமாரியர் மீது அன்பு செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதற்கு இச்சம்பவம் லூக்காவிற்குப் பயன்பட்டது. (லூக்கா 10:29-37) .  

இதுபோல இன்னொரு மாற்றமும் உண்டு. கானான் தேசத்துப் பிற ஜாதிப் பெண்ணை ஏசு நாயாக விரட்டியதாக மத்தேயும், மாற்கும் எழுதுவார்கள். இயேசு பிற ஜாதியார் மீது விரோதம் பாராட்டியதாக மூல நூல்களில் எழுதப் பட்டுள்ளன. (மத் 15:21-28; நாற்கு 7:24-28)ஆனால் இந்தச் சம்பவத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார் லூக்கா.(61)

 யூதர்களின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய பாசத்தை தவிர்த்து விடுகிறார் லூக்கா. சமாரியர் மீதும் பிறர் மீதும் கொண்டிருந்த வெறுப்பை மறைத்து அவர்களுடன் அவர் நல்லுறவு கொண்டு உழைத்தது போலவும் தாழ்த்தப்பட்ட குழுவினருக்காக அவர் உழைத்ததாகவும் மாற்றி எழுதுகிறார். அதற்கான சில உதாரணங்கள்:
  •  ஊனமுற்றோர் மீது பரிவு 13: 10 - 13
  •  விதவைகளின் நலனில் ஈடுபாடு 7: 11 - 15  மற்றும்18: 1- 18
  •   ஏழைகளுக்காக உழைத்தல் 16: 19 - 31 மற்றும் 18: 24, 25
  •  பாவிகளை மீட்பதில் விருப்பம் 15: 11 - 31 மற்றும் 15: 8 - 10 மற்றும் 19: 1-7
  • வரிதண்டும் பாவிகளையும்ரட்சிக்கும் மனப்பான்மை 18: 9 - 14
  •  
இந்தப் புதிய தகவல்கள் மூலம் இயேசுவுக்கு ஒரு புதிய முகத்தையும் ஜாதிகளை கடந்த பொதுவான ஒரு முகவரியையும் கொடுக்கிறார்.

 இயேசுவை உலகுக்கு அறிமுகப் படுத்த விரும்புபவர்கள் இன்று லூக்காவின் இந்த முகவரியை இயேசுவுக்கு வழங்குகிறார்கள். ஆனால் லூக்கா இயேசுவுக்காகக் கொடுத்திருப்பது உண்மையான தகவல்கள் அல்ல. அவருடைய சீடர்கள் இத்தகவல்கள் எதுவும் இயேசுவுக்கு உரியதாக எழுதவில்லை. இயேசுவின் பெயரால் புதிய மதத்தை உருவாக்கிய போது லூக்கா இயேசுவுக்கு வழங்கியிருக்கும் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஆனால் ஏசுவின் முகம் வேறு வகையானது.(62)

 இயேசுவின் அற்புதங்களாலேயே  மக்கள் கவரப்பட்டனர்

மாற்கு 3:8  -- “...திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். ( ஆங்கிலத்திலும் புராட்டஸ்டன்ட் மொழிபெயர்ப்பிலும் ’அற்புதங்கள்’ என்ற சொல் இல்லை.)

மாற்கு 4:35-41  - வீசும் புயலை நிறுத்தி படகில் இருந்த சீடர்களை காப்பாற்றியது -  ”காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே ! இவர் யாரோ?”

சீடர்கள் கூட இயேசுவை மெசியா என அறிந்து பின்பற்றுவதற்குப் பதில் அவருடைய அற்புதங்களைக் கண்டு அவரைப் பின்பற்றினர் என அறியலாம்.

 இயேசு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உவமையில் இயேசு உரையாடிக்கொண்டிருந்தார்.  அதைக் கேள்வி கேட்ட சீடர்களிடம் ’மறைபொருள் அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்கு கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்றார். (மத் 13;10-12)  (உள்ளவருக்குக் கொடுப்பதும், இல்லாதவரிடமிருந்து எடுக்கப்படும் என்னும் இந்தத் தத்துவம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. யாரும் விளக்கினால் புரிந்து கொள்வேன்.
இரண்டாவதாக,  மறை பொருளை அவர்களுக்குப் புரியாத படி உவமைகள் மூலம் ஏன் பேச வேண்டும்? பயன் என்ன?.) (64)

மறைபொருள் சீடர்களுக்குப் புரியும் என்றார். பாவம் .. அவர்களுக்கும்  ஏசு சொன்ன வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமை புரியவில்லை.(மத் 13:36) 
(யாருக்காக, எதற்காக, மறைமுகமாக, உவமைகளோடு இயேசு பேசினார் என்பது எனக்கு ஒரு பெரிய கேள்வியாகவே இருக்கிறது)

மேற்கண்ட தகவல்களிலிருந்து இயேசுவை மெசியா என விசுவசித்து எவரும் அவரைப் பின்பற்றவில்லை என்பதை அறியலாம். அவருடைய சீடர்கள் கூட அவர் யார் என்பது தெரியாமலும், அவரது பேச்சு புரியாமலும், அவரது பேச்சை விசுவாசிக்காமலும் தான் அவரோடு உறவாடி இருக்கிறார்கள். ஆனால் அவர் செய்த அற்புதங்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. (65)

*****

ஒரு சிறு பின்குறிப்பு

 சினிமாவைப் பற்றி எழுதினால் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கடைசி இரண்டு பதிவுகளில் கருப்பு துரை என்ற படத்தை பற்றி எழுதினேன்; 25 பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். ஆனால் அதைவிட மூன்று மடங்கு அளவு இந்தத் தலைப்பில் எழுதியதை வாசித்து இருக்கிறீர்கள்.

மிக்க மகிழ்ச்சி.

 ஆனால் நீங்கள் வந்ததும் போனதும் தடங்கள் ஏதும் இல்லாமல் சென்று விட்டீர்கள். எனக்குப் பல கேள்விகள்;  உங்களுக்குப் பதில் தெரிந்தால் ஏன் சொல்லக்கூடாது?

 நான் தவறாக எழுதலாம் - உங்களைப் பொறுத்தவரையில். அப்படியிருந்தால் அதை ஏன் நீங்கள் மறுக்கக்கூடாது.

 இப்படிப் பல கேள்விகள் எனக்கு. இந்த கேள்விகளுக்காவது  பதில் தருவீர்களா ???










*