Wednesday, July 25, 2012

582. SAVE MARYAM; SAVE ISLAM

*








*


Approximately 2 million people in Indonesia leave Islam for Christianity every year.

Why is the case? Why are people not satisfied with Islam? Why are they willing to abandon Allah?


Join us in our mission to save a generation of Indonesians and help us bring Islam back into their lives.


Spread the word.  Save Maryam


Website: heep://savemaryam.com

Donate: http://savemaryam.com/donate.php




*









*

Friday, July 20, 2012

580. அவாளுக்கு மட்டும் ! – ஒரு தொடர்கதை !!

*


நம் ப்ளாக்குகளின் தொகுப்பைப் பார்க்கும் பட்டியல் ஒன்று இப்போது புதிதாக வந்துள்ளது. View count இதில் புதிய ஒரு சேர்க்கை. ஆறு ஏழு வருஷமா பதிவுகள் எழுதினாலும் அவ்வப்போது எத்தனை பேர் நம்ம பதிவைப் பார்த்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல இருக்கிற சந்தோஷம் இன்னும் விடலை. தொடர்கதையாகத்தானிருக்கு !!

அதிலும் கடைசியா இப்போ அந்த View count-களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் கொஞ்சம் ஆச்சரியாக இருந்தது. வழக்கமாக என் பதிவுகளில் உள்ள இஸ்லாமியப் பதிவுகளுக்கு ‘கூட்டம்’ வரும் என்பது தெரியும். சரி .. நம்ம ’விஷய ஞான’த்தைத் தேடி கூட்டமா வர்ராங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஆனால் ’அவாளுக்கு மட்டும்’ அப்டின்னு ஒரு பதிவு போட்டேன். View count பிச்சுக்கிட்டு போகுது ! ஏன்னு தெரியலை! நீங்களே பாருங்களேன் ...

5.5.12 - இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை..923 (பின்னூட்டங்கள் 20)
5.6.12 - இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை...1192 (பின்னூட்டங்கள் 27)

சரி .. நம்ம நினச்சதை விடவும் ’இந்தச் செய்தி நல்லாவே பரவியிருக்குன்னு’ நினச்சு, சந்தோஷப்பட்டுக்கிட்டேன். (இஸ்லாமியர் யாரும் அப்பதிவைப் படிக்கவேயில்லை என்று தெரிந்தாலும் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்!!) ஆனால் அதற்குப் பிறகு இன்னொரு பதிவு போட்டேன்.

6/22/12 - அவாளுக்கு’ மட்டும் ! 1240. (பின்னூட்டங்கள் 48) என்ன ஆச்சரியம் ..

இந்தப் பதிவு நிறைய மக்களால் படிக்கப்பட்டிருக்கிறது! இதில் எனக்கே ஒரு சின்ன வருத்தம். ஏன்னா நான் ஒன்று நினைத்து எழுதினேன்.

//.’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. . இருந்தும் ஆளாளுக்கு இப்படி நடத்துறாளே .. ஏன்? யாருக்காக இப்படில்லாம் பண்றா? இப்படிப் பண்றவா எல்லோரும் அவாளும் கிடையாதுன்னு நான் நினச்சுண்டு இருக்கேன். பின் ஏன் இப்டி பண்றா...?//

1. இந்த மாதிரி ஜாதியை ஒட்டி நிகழ்ச்சி நடத்துவது தேவையில்லாதது.
2. இது போன்ற ‘ஜாதி நிகழ்ச்சி’யை நடத்துவது பொதுவாக அந்த   
               ஜாதிக்காரர்களாகக் கூட இருப்பதில்லை.
3. இப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை அந்த ஜாதி மக்களே விரும்ப மாட்டார்கள்.
4. இருந்தும் இப்படி நடத்த வேண்டியது ஏன்?
5. Viewership / TRP இதனாலெல்லாமா கூடி விடும்?

பழைய தமிழ் சினிமாக்களைப் பார்த்தால் சில ஜாதிப் பெயர்கள் மட்டும் வரும் – செட்டியார், பிள்ளை, ஐயர் ..இப்படி. அந்தக் காலத்தில் அது இருந்தது; ஒழிந்து போகட்டும். இப்போது பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைப்பதில்லை என்ற அளவிலாவது “முன்னேறியிருக்கிறோம்”! இன்னும் ஏனிந்தக் கருத்துக்களை மக்கள் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததால் இப்பதிவை இட்டேன்.

இதில் எனக்கு ஒரு ஏமாற்றம். முதலில் டோண்டு எனக்கு நன்றி சொல்லி ஒரு பதிவிட்டார்.  அதில் அவருக்கு இந்த நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சி கொடுத்ததாகச் சொன்னார். அதோடு அவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம்:

//பார்ப்பன வெறுப்பளர்களுக்கு நம்மை மாதிரி சிலர் வந்து பதிலடி கொடுப்பது அவசியம்.// 

இந்த நிகழ்ச்சி பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். எனக்கு அப்படித் தெரியவில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும், ஏன் ஜாதியை வைத்து ஒரு நிகழ்ச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் அதற்குள் Tamil அப்டின்னு ஒருத்தர் வந்து கொக்கரித்து விட்டார். இருவருமே நான் சொன்னதின் மையப்புள்ளியைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.

(டோண்டுவின் பதிவில் சில பதில்கள் சொல்லியிருக்கலாம். தேவையில்லை; அவர்கள் இருவரும் சந்தோஷமாகவே இருக்கட்டுமே என்று விட்டு விட்டேன்! )









*

Sunday, July 15, 2012

579. THE GNOSTIC GOSPELS ... 4

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 

 III

GOD THE FATHER / 
GOD THE MOTHER



*

எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், ஆப்ரிக்கா, இந்தியா, வடக்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் மதங்களில் இருப்பது போல் ஆபிரஹாமிய மதங்களில் பெண் தெய்வ வழிபாடு கிடையாது.  இம்மதங்கள் மூன்றிலும் கடவுளுக்கு பால் வேற்றுமை ஏதும் கிடையாது என்பர். கத்தோலிக்க கிறித்துவத்தில் மேரியைப் போற்றினாலும் வழிபடுவது இல்லையென்பர்.  (48)

 ஆயினும் கிறித்துவத்தில் தமதிருத்துவம் - Holy Trinity - என்ற கோட்பாடு உண்டு. இதில் முதல் இருவரை ஆணாகக் - தந்தை, தனயன் என்பதாகக் - காண்பிப்பதுண்டு. மூன்றாவதிற்கு, கிரேக்க மொழியில் பால் வேறுபாடற்ற ஆன்மா எனபதற்கான சொல்லை - pneuma -பயன்படுத்துவர். 

உதாரணமாக, தாமிஸ் விவிலியத்தில் ” சைமன் பீட்டர் ஏனைய சீடர்களிடம், ‘மேரியை விலக்கி விடுங்கள்; எந்தப் பெண்ணுக்கும் வாழ்க்கையில் அதற்கு மேலான தகுதியேதும் இல்லை.’ ஏசு அதற்காகச் சொல்கிறார்: ‘அவளை நான் வழிநடத்தி, அவளை ஒரு ஆணாக மாற்றி விடுகிறேன். அதனால் அவளும் மற்ற ஆண்களைப் போல் ஒரு முழுமையான ஆன்மாவாக ஆகி விடுவாள். ஆணாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் பெண் மட்டுமே மோட்ச ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பாள்.’ 

gnostic கிறித்துவர்களில் ஒரு குழு ஏசுவிடமிருந்து கற்ற ஒரு ரகசிய வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இவர்களின் ஜெபம் தந்தைக் கடவுள், தாய்க் கடவுள் என்ற இருவரையும் நோக்கி உள்ளன. (49)

 gnostic கிறித்துவம் கடவுளை இரு கூறாகக் கருதியது. ஆண், பெண் இரு கூறுகளுமே அதில் உள்ளன - (சைனாவின் Yin - Yang   போல்)  ஆனால் ஏசு இறந்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளின் பெண்மைப் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டு விட்டது..பழமைக் கிறித்துவத்தில் இந்த இரு கூறுகள் முற்றிலுமாக எடுக்கப்பட்டு விட்டன. 

ஏன் இப்படி பெண்மைத்தனம் முற்றாக மாற்றப்பட்டன என்று gnostic கிறித்துவர்கள் பழமைக் கிறித்துவர்களிடம் கேள்வியெழுப்பினர். பெண் கடவுளின் அருள் பெற்றே ஆண் கடவுள் படைத்தல், காத்தல் செய்தது என்று Valentinus கிறித்துவர்கள் கருதினார்கள்.  (57)

gnostic கிறித்துவத்தினரின் இந்தக் கேள்விகளைப் பார்த்து டெர்டூலியன் போன்ற பழமைக் கிறித்துவர்களுக்கு பெரும் சினம் எழுந்தது. அவர்கள் பெண்கள் விடாது பேசுவது போலவும், மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முற்படுவது பற்றியும், விவாதங்களுக்குத் தயாராக இருப்பது பற்றியும், அவ்வளவு ஏன்,  ஞானஸ்நானம் கொடுக்கும் அளவிற்குப் போவதற்கும் மிகுந்த எதிர்ப்பைக் காண்பித்தார்கள். 

Valentinians போன்ற gnostic கிறித்துவர்கள் பெண்களின்  சமத்துவத்திற்கு ஆதரவளித்தனர். அதுபோன்ற பெண்களை ஆசிரியைகளாகவும், வரும்முன் உரைப்போராகவும், குருவினராகவும், ஏன் .. பிஷப் ஆகவும் மரியாதை கொடுத்தனர். (60)

கிறித்துவத்தின் ஆரம்பத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த உயரிய இடம் ஒரு ஆச்சரியமான விஷயம். ஏசுவும் யூத வழக்கங்களுக்கு எதிராக பெண்களுடன் சமமாகப் பேசினார். தன் குழுவிலும் அவர்களுக்கு இடம் கொடுத்தார். புதிய ஏற்பாட்டின் லூக் பகுதியில் மார்த்தா தன்க்கு தன் சகோதரி மரியா உதவியாக வேலை செய்யாமல் ஏசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதை எதிர்க்கும் போது, ஏசு மரியாவிற்கு ஆதரவாகப் பேசுவது இடம் பெறுகிறது. 

ஏசு இறந்து பத்து இருபது ஆண்டுகள் கழித்தும் சில பெண்கள் வேத ஊழியர்களாகவும், சமய ஆசிரியர்களாகவும், வரும்முன் உரைப்போராகவும் இருந்து வந்துள்ளனர். 

ஆனால் பின் வந்த பவுல் பெண்களுக்கான இடம் பற்றிய தன் கருத்துக்களை வெளியிடும்போது அவை அப்போதிருந்த யூத வழக்கத்தினை ஒட்டியிருந்தது. ’ஆண்கள் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்;  ஆண்கள் பெண்களுக்காகப் படைக்கப்படவில்லை; ஆனால் பெண்கள் ஆண்களுக்காகப் படைக்கப் பெற்றவள் என்ற கருத்தே பவுலின் கருத்தாக இருந்தது. (61)

1 கொரிந்தியன் 14:34-ல் ‘பெண்கள் கோவில்களின் மெளனம் காக்க வேண்டும்; அவர்கள் ஆண்களை எதிர்த்துப் பேசாமல், அடங்கியவர்களாக இருக்க வேண்டும். கோவில்களில் பெண்கள் பேசுவது அவமானகரமான விஷயமாகும்.’ என்பதுவே பவுலின் கருத்தாக இருந்திருக்கிறது. 

பெண்களுக்கான சம உரிமைகள் ஏசுவின் இறப்பிற்குப் பின் இரு நூறு ஆண்டுகளில் முழுவதுமாக மாறிவிட்டது. யூதப் பெண்கள் முழுவதுமாக எந்தப் பொது நிகழ்வுகளிலிருந்தும், கல்வி கற்பதிலிருந்தும்,  கோவில் ஆராதனைகளை எடுத்து நடத்துவதிலிருந்தும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். ’பெண்கள் அமைதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்; கீழ்ப்படிதலோடு இருக்க வேண்டும். ஆண்களுக்கு அடங்கியவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மேல் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” - இது போன்ற பவுலின் கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதற்கான காரணம் என்ன என்பதற்கான பதில்கள் பலவும் உண்டு. Johannes Leipoldt என்ற அறிஞர் கிறித்துவத்திற்குள் நுழைந்த யூதர்களினால் இந்தத் தாக்கம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறார். (63) Professor Morton Smith என்பவர் கிறித்துவம் எளிய ஏழை மக்களிடமிருந்து  நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்கிறார். எளிய மக்களிடம் குவிந்திருந்த வேலைகளை ஆண்களும் பெண்களும் சேர்ந்து செய்து வந்தனர்; ஆனால் மத்திய தரத்தில் வேலைகள் பகிரப்பட்டன. கீழ்த்திசை நாடுகளிலும் கூட மத்திய தர மக்கள் மட்டுமே தங்கள் முகத்தை மறைத்து (ஹிஜாப் அணிந்து) வாழப் பழகினர். 
  
ஆனால்  gnostic கிறித்துவர்கள், பழமைக் கிறித்துவர்களின் எழுத்துகளில்  இந்தக் காரணங்கள் மேலும் அதிகமாக விவாதிக்கப்பட்டன. பிலிப் எழுதிய விவிலியத்தில்  - Gospel of Philip - ஏசுவின் ஆண் சீடர்களுக்கும் மரிய மக்தலேனாவிற்கும் நடுவில் ஒருந்த பகைமை உணர்வு தெளிவாகத் தெரிகிறது. அதில் ...        

  •  ‘ .... ஏசுவிற்கு மரிய மக்தலேனா மீது மற்ற சீடர்களையும் விட அதிக அன்பு இருந்தது. அவரை ஏசு இதழில் முத்தமிடுவதுண்டு. இதனைக் காணும் சீடர்கள் அதில் அதிருப்தி அடைந்ததுண்டு. அவர்கள் ஏசுவிடம், ‘ஏன் எங்களை விட அவரின் மேல் உங்களுக்கு அன்பு அதிகம்?’ என்று கேட்ட போது ஏசு அவர்களிடம், ‘ஏன் நான் உங்களிடம் அன்பு செலுத்துவது போல் அவரிடமும் அன்பு செலுத்தக் கூடாது?” என்றார். ("Why do I not love you as (I love) her?") 
  மரிய மக்தலேனா, தாமஸ், மத்தேயு இவர்களை ஏசு தனிப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் மற்ற இருவரையும் விட மரிய மக்தலேனாவை மேலும் புகழ்கிறார்.  ( ”...she spoke as a woman who knew the All" - in the Dialogue of the Savior.)

ஏனைய ரகசியப் பதிவுகளில் மரிய மக்தலேனா ஏனைய சீடர்களுக்குப் போட்டியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சீடர்கள் பீட்டரையே  தலைவராகக் கருதினர். 

Gospel of Mary -ல் ஏசு இறந்த பிறகு மரிய மக்தலேனா  மற்ற சீடர்களிடம் ஏசு தன்னிடம் ரகசியமாகச் சொன்னவைகளைப் பகிர்ந்து கொள்கிறார். பீட்டருக்கு இதைக் கண்டு, க்டும் கோபம் கொண்டு, ‘எங்களிடம் சொல்லாததை ஏசு உங்களிடம் சொன்னாரா?  எங்களை விட உங்களை அவர் அருகில் எடுத்துக் கொண்டாரா?’ என்று  கோபத்தில் கத்துகிறார். அதற்குப் பதிலாக, மரிய மக்தலேனா, ‘சகோதரரே! நானென்ன இதையெல்லாம் நானாகவே கற்பித்துக் கூறுகிறேனா? நம் நாயகரைப் பற்றி நான் இல்லாததெல்லாம் பேசுகிறேனா?’ என்று கேட்கிறார். (64)

லெவி இந்த விவாதத்தில் தலையிடுகிறார். அவர் பீட்டரைப் பார்த்து, ‘ஏசு மரிய மக்தலேனாவை சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருந்தால் அதை மறுக்க நாம் யார்? அவருக்குத் தெரியாதா? அவருக்கு மக்தலேனாவை நன்கு தெரிந்ததால் தான் அவரை மிகவும் நேசித்தார்’ என்கிறார் 

ஆனாலும் பழமைக் கிறித்துவர்களுக்கு ஒரு பெண்ணை இவ்வாறு உயர்வாக வைத்திருப்பது பொருந்தாததாகவே தோன்றியது. I & II . Timothy, Colossians, & Ephesians என்ற நூல்களில் பவுல் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்களே என்பதை வலியுறுத்துகிறார். (65)

இவ்வாறாக, இரு கிறித்துவ குழுமமும் இரு வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பது புலனாகிறது. gnostic கிறித்துவர்கள் கடவுளையே பாலியல் முறையில் பகுத்துப் பார்த்ததில்லை.  சமூக, அரசியல் வாழ்க்கைகளில் ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபடி செய்து பார்த்ததில்லை.  ஆனால், பழமைக் கிறித்துவர்கள் கடவுளை ஆணாக மட்டுமே பார்த்தார்கள். (66)

(இந்தக் கொள்கைகளில் பழமைக் கிறித்துவத்தின் பிடிப்பே இறுதியானதாகி விட்டது.)  ஏனெனில் 1977-ல் ஆறாவது பால் என்ற போப், ‘பெண்கள் குருமார்களாக ஆக முடியாது; ஏனெனில் கிறிஸ்து ஒரு ஆண்’, என்று அறிவித்து விட்டார். (69)

பி.கு.
இப்பதிவில் வந்துள்ள மரிய மக்தலேனாவைப் பற்றிய கருத்துக்களே டான் ப்ரவுண் எழுதிய டாவின்ஸி கோட் கதையின் மையப்புள்ளியாக உள்ளது.The Last Chalice  போன்றவைகளுக்கும் இதுவே ஒரு காரணியாக உள்ளது.
















*

Saturday, July 07, 2012

578. THE GNOSTIC GOSPELS ... 3

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 

*

II 

"ONE GOD, ONE BISHOP":

THE POLITICS OF MONOTHEISM



"வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல ஏக இறைவனை நம்புகிறேன்”  -- கிறித்துவ நம்பிக்கைகளின் அடிப்படை இது. இந்தச் சொற்றொடரை மார்ஷியன் (Marcion) பழமைக் கிறித்துவர்களுக்காகவே (Orthodox Christians) அமைத்ததாகச் சொல்வதுண்டு. ஏனெனில், ஏசியா மைனரில் இருந்த மார்ஷியன் பழைய ஏற்பாட்டு கடவுளும், புதிய ஏற்பாட்டுக் கடவுளும் இரு வேறு நிலைப்பாடுகளில் இருப்பதாகக் கருதினார். முதல் கடவுள் நியாயத் தீர்ப்பிடும், கட்டளைகளைப் புறக்கணிப்புகளுக்குத் த்ண்டனை தரும் கடவுளாகவும், புதிய ஏற்பாட்டுக் கடவுள் மன்னிப்பையும், அன்பையும் தரும் தந்தையாகவும் இருப்பதாக உணர்கிறார். ஏனிப்படி மிகவும் ஆற்றல் மிக்க ஒரு கடவுள் மிகுந்த துன்பமும் துயரமும் நிறைந்த இந்த உலகைப் படைக்க வேண்டும்  என்ற கேள்வியால், இரு வகைக் கடவுள்கள் இருப்பதாக மார்ஷியன் கருதினார். பழமைக் கிறித்துவத்திற்கு வந்த அடுத்த சோதனை Gnostics.  அவர்களையும் பழமைக் கிறித்துவர்கள் 'Maricionites' என்றழைக்க ஆரம்பித்தனர். (29)

இன்றைய அறிஞர்கள் gnosticism இரட்டைக் கடவுள் என்பதோடு ஒட்டிப் போனதாக நினைக்கிறார்கள். (31)

நாக் ஹமாதியின் மூலம் Valentinian என்ற gnosticism அறிமுகப்படுத்தப் படுகிறது.  Irenaeus (180 A.D., Orthodox Bishop of Lyons),  என்பவர் Marcionites இரட்டைக் கடவுள் என்று மத அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டுகிறார்; ஆனால் Valentinians அதை அவர்கள் மறைபொருளாக வைத்திருந்தார்கள் என்கிறார்.(32)

இரண்டாம் நூற்றாண்டில் ஒரே கடவுள் என்ற அழுத்தமாகச் சொன்ன Orthodox christians  அதே நேரத்தில் ’ஒரே பிஷப்’ என்ற கொளகையிலும் அழுத்தமாக இருந்தனர். (34)

Clements (Bishop of Rome, 90 -100 A.D.) Bishop, Priests, Deacons என்ற இந்த மூவரும்தான் கடவுளின் அதிகாரத்தை இவ்வுலகில் பங்கு போடுபவர்கள்; இவர்களை மறுப்பவர்களுக்கு மரண தண்டனை என்று கூறியுள்ளார். இதை அவர் தனது கடிதம் ஒன்றில் நிலைப்படுத்தியுள்ளார். (34)

இவருக்குப் பிறகு Ignatius, Bishop, Antioch in Syria, என்பவர் ரோமிலிருந்து ஆயிரம் மைல்கள் தாண்டியிருந்தாலும் Clements போலவே தன் கருத்துக்களை எழுதியுள்ளார். ஏனைய கிறித்துவர்கள் கடவுளிடம் கீழ்ப்படிதல் போலவே Bishop-இடமும் அவர்கள் கீழ்ப்படிந்து இருக்கவேண்டுமென்கிறார். (35)

புனித பால் தன்னிடம் இருந்தோரில் ஆன்மீக விழிப்புணர்வோடு (Spiritual maturity) இருந்தவர்களிடம் மட்டும் ரகசியமாக தனக்குத் தெரிந்த பேருண்மைகளைத் தெரிவித்துள்ளார்.  கடவுளாகவும் தந்தையாகவும் கருத்தபடுபவர் உண்மையான கடவுளின் வடிவத்தில் வந்தவர்கள் என்றார். கடவுளை இரண்டாகப் பார்த்துள்ளார். ஆனால் Valentinus கடவுள் எல்லாம் வல்லவர்; அவரின் கீழ் இன்னொருவர் எல்லாவற்றையும் காத்து நிற்கிறார் என்கிறார்.

gnosis -உள்நோக்கு - கொண்டோர் யாராயினும் உள்நோக்கு கிடைப்பதற்கு முன்பு உண்மையான கடவுள் என்று மற்ற தெய்வத்தை வணங்குவர். ஆனால் gnosis -உள்நோக்கு - என்ற அருளைப் பெற்ற பின் அந்த சின்ன தெய்வத்தின் அடிமை ஆவதிலிருந்து தப்பித்து விடுவர். (37)

பழமைக் கிறித்துவர்கள் வேத ஊழியர்களையும் (clergy), பொதுநிலையினரையும் தனித்தனியே பிரித்து வைத்திருந்தனர். ஆனால்,  gnostic christians இந்த வேறுபாடுகளை மறுத்தனர். அவர்களுக்குள் எந்த வேற்றுமையையும் கண்டாரில்லை. (41)












  *

Sunday, July 01, 2012

577. படங்கள் சொல்லும் கதை

*
கடவுள் வானையும் பூமியையும் படைத்து மனிதனையும் படைத்தார் என்பது மதப் புராணங்கள் சொல்லும் கதை.
நம்மையும் நம் உலகத்தையும் ’சாதாரணமாகப்’ படைத்த கடவுள் ஏன்  சனிக் கிரகத்தைப் படைக்கும் போது இப்படி ஒரு எக்ஸ்ட்ரா “மோதிரம்” எல்லாம் போட்டு அதனை ஸ்டைலாகப் படைத்தார்?!





அதனால் தான் சனி நம் கிரகத்தைப் பார்த்து இப்படி கூறுகிறது!! 

 




எம்புட்டு சரியாகச் சொல்லியிருக்கு ... ஏன்னா, கடவுளைப் பார்த்தேன் என்று எத்தனை ‘புண்ணியவான்கள்’ தங்களைப் பற்றித் தண்டோரா போட்டிருக்கிறார்கள்! அதையும் அப்படியே நம்புவதற்கென்றே பல புண்ணிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே அவர்களும் அப்படியெல்லாம் கதைக்கிறார்கள். 
 







கடவுளின் இருப்பைப் பற்றிய கேள்விகள் என்றும் புதிதல்ல. அன்றைக்கே ஆரம்பித்தாகி விட்டது ....









பரவாயில்லை ... சில மதத் தலைவர்கள் “உண்மைகளைக் கூட” பேசுகிறார்கள். வாழீ ...




முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சாய்பாபா தங்கச் சங்கிலியைக் கையில் மறைத்து வைத்து, பின் அன்பளிப்பாக அளித்ததை வீடியோ படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். அப்போது அந்தக் கட்டுரையில் எழுதியிருந்த ஒரு சொற்றொடர்: "What were these videographers doing when Jesus was walking on the water!"



சின்னப்பிள்ளைகளை கடவுளுக்காக இப்படியா கொடுமைப் படுத்துவது??!!





நீங்க பாட்டுக்கு வானத்தை / சுவனத்தைப் பார்த்து கைநீட்டி சாமியைக் கும்பிடாதீங்க ... உங்க கண்ணை கடவுள் புடுங்கிக்குவார். ஜாக்கிரதை!!!






நல்ல கேள்வி. இந்த ரெண்டு பேர்ல யாரு பெரியவரு? யாரு மனுக் குலத்திற்கு நல்லது பண்ணியிருக்காங்க ??






WHAT A GREAT BUT SUCH A SIMPLE  DEFINITION FOR "RELIGION"!!

 




என்னடா ... நமக்கு ஏனிப்படி தொந்தி பெருசா போச்சுன்னு ஆச்சரியப்பட்டேன். இப்போதான் “உண்மை” புரியுது!!!  நல்ல அறிவியலாகவும் இருக்கே!

மதம் மாறிட்டா நம்ம தொப்பை டபார்னு குறைஞ்சுடுமே ... யோசிக்கணும்!! ஆனா, ஒண்ணு! இது ரொம்ப வீக் ஹதீஸ் அப்டின்னுட்டாங்கன்னா மதம் மாறியது வேஸ்டா போய்டும்!!




நாங்கள் அழியும் இந்த உடலைப் பற்றியல்ல அழியாத ஆன்மாவைப் பற்றித்தான் கவலைப்படுகிறோம் என்று சொல்லும் ஆன்மீகவாதிகள் தான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்.

அதென்னமோ ... ஆன்மா .. அபடி இப்டின்னு பேசினா அவங்க ‘பயங்கர’ ஆன்மீகவாதிகளாக ஆகிட்றாங்க ... என்னமோ போங்க ... பொய்களில் பல விதம் உண்டாம். அதில் ஒண்ணு ... ஆன்மா!




அட ... நம்பிக்கையாளர்கள் எல்லோருமே முழு முட்டாள்களில்லை!






நம்மள சுத்தி நடக்கிற துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் எல்லாவற்றையும் பார்த்த பிறகும் “கடவுள் அன்பானவர்” என்று சொல்லும்போது அவர்கள் எதையுமே யோசிக்க மாட்டார்களான்னு  - அந்தச் சின்னப் பையன் கேக்குறது மாதிரி - கேக்கணும்னு தோணாதா??







சமூகச் சூழலில் இது போன்ற நல்ல எண்ணங்கள் எப்போதும் நம் மனதில் தோன்றவே போவதில்லை என்பது என் நம்பிக்கை. பிறந்ததும் போடும் “சூட்டோடு” தான் நாம் வாழ்ந்தாகணும் போலும்!






பையனுக்கு நல்ல சந்தேகம் வந்திருக்கு. ஆனா என்ன... வளர்ந்த பின் அந்த சந்தேகத்தைக் கூட அவன் வெளியே சொல்ல முடியாது. Blasphemy அப்டின்னுடுவாங்க ... பாவம்!






மாலையில் சூரியன் என்ன பண்ணுது?  ஹதீஸில் அறிவியல் பதில் இருக்கு ... தெரிஞ்சுக்கோங்க!






என்னதான் இருந்தாலும் பெரிய மனுசன் இல்லியா? அதான் ரொம்ப கரெக்டா இப்படிச் சொல்லியிருக்கிறார். வெறும் எண்ணிக்கையிலா இருக்கு புத்திசாலித்தனம்!