Thursday, May 28, 2009

315. MY FIRST TIME ........

*

MADURAI BLOGGERS' MEET .......

*
ஏதோ தப்பு தப்பா செஞ்சி ஒரு பதிவுலகில் முதல் முறையாக ஒரு u-tube படம் போட்டாச்சு. இன்னும் கொஞ்சம் மீதியிருக்கு. மறுபடி சரி செஞ்சி போடணும் .. அதுவரை இதைப் பார்க்கணும்னா பாருங்க .......இல்லைன்னா .. இப்போ அடுத்த நாள் போட்ட இந்தப் பதிவைப் பாருங்களேன் ...

*

Wednesday, May 27, 2009

314. ஒரு திருட்டுப் பதிவு ... அட, கடவுளே!

*

தமிழ்ப்படை என்ற பெயரில் ஒரு பதிவு. வாசித்ததும் மிகவும் பிடித்தது. பதிவர் பெயர் தெரியாது. பதிவு வழியே தொடர்பு கொண்டேன். உங்களது இந்தப் பதிவை நான் என் பதிவில் மீண்டும் போட வேண்டுமென ஒரு வேண்டுகோள் விடுத்தேன். சரியென்றார். ஆனால் இப்போது அவரது பதிவைக் காணவில்லை. ஏனென்றும் தெரியவில்லை.

ஆகவே, இப்போது அப்பதிவை இங்கு இடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அந்த இளைஞரின் (வயது கொஞ்சம் கம்மிதான் என்பது மட்டும் தெரியும்.) இந்தப் பரவலான சிந்தனை என்னை மிகவும் பிரமிப்பு கொள்ள வைத்ததால் மட்டுமே இதை என் பதிவிலும் இட நினைத்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்; இதோ:
எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.

புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.

புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.

ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.

"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?


வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.

"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.

"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.

கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!


Image and video hosting by TinyPicகாட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.

டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.

தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.

இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.

எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.

ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.


பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!

இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.

உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.

எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).

விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

நன்றி: http://www.tamilcircle.net/

(இப்பதிவுக்குரிய பின்னூட்டங்களை அவரது பதிவில் போடச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அவரது பதிவு இல்லாததால் பின்னூட்டங்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஆசிரியரை இங்கு அழைக்கிறேன்.)


*

Monday, May 25, 2009

313. மதுரை - பதிவர் சந்திப்பு

*

நானும் இன்னும் ஓரிரு பதிவர்களும் மதுரையில் ஒரு நல்ல பதிவர் கூட்டம் நடத்திடலாம்னு நினச்சோம். என்ன பண்றது ... கார்த்திகைப் பாண்டியன் அப்டின்னு ஒரு இளைஞர் வந்தாதான் அப்படியெல்லாம் நடத்த முடியும்னு இன்னைக்கித்தான் நிஜமாச்சு .. 16+2 பதிவர்கள் வந்து கலந்துக்கிட்டோமே ..


1. டக்ளஸ்

2.தேனீ-சுந்தர்

3. அன்பு- சிவகாசி

4. பாலகுமார்

5. இளைய கவி கணேஷ் குமார்

6. ஜாலி ஜம்பர்

7. சூப்பர் சுப்ரா

8. வால்பையன்

9. கார்த்திகைப் பாண்டியன்

10. ஸ்ரீதர்

11. சில் பீர்

12. டாக். தேவமாயம்

13. அருண்

14. முருகன்

15. சீனா

16. தருமி

17. ராஜா

18. கார்த்திக்ஜாலி ஜம்பர், கார்த்திகைப் பாண்டியன்வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர்அருண், தேனீ-சுந்தர், சில்-பீர்
கணேஷ் குமார்


ஸ்ரீதர், வால்பையன்டக்ளஸ்ஸ்ரீதர்


சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்
அன்பு, கார்த்திக்சில்-பீர்ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா
ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்
அருண், கார்த்திகை
ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை

மயங்கும் நேரம் ...


* 5 மணிக்குச் சந்திக்கலாமென நினைத்திருந்தால் 3.30 மணிக்கு சரியான மழை.

* தெரிந்தது போலவே அரை மணி கழித்து மழை முடிந்து போயிற்று.

* புறப்பட்டு, சரியாக 4.58க்கு பந்தய மைதானத்து வாசலுக்கு வந்து நின்றேன்.

* வாசலில் பழச்சாறு விற்பவரோடு 10 நிமிட உரையாடல்; அடுத்த 'கதை'க்கு கரு கிடைத்தது. ஆனால் யார் கதை எழுதுவது?

* 5.15க்கு ஒரு ஆட்டோ; உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள். அத்தனை சனம். அந்த ஒரு வண்டிக்குள். 7 உருப்படி இறங்கியதுகள்! இறங்கின ஆட்களுக்கும் அந்த பந்தய மைதானத்துக்கும் ஏதும் தொடர்பில்லை. இருந்தும் எல்லாரும் தாராளமாய் பந்தய மைதானத்துக்குள் நுழைந்தார்கள். யாரும் வேறு யாரையும் தேடவுமில்லை. என்னமோ கல்யாண வீட்டுக்கு வந்த மக்கள் மாதிரி போனார்கள். திடீரென நடுவில் ஒரே ஒரு தெரிந்த முகம். நம்ம வால்ஸ் தான். கூப்பிட்டால் மொத்தமாக படையெடுத்து வந்தார்கள். அறிமுகம் வாசலிலேயே முடித்துவிட்டு, உள்ளே படிகள் இருக்குமே அங்கே செல்ல ஆரம்பித்தோம்.

* படிகள் எல்லாமே நல்ல ஈரம். நின்று கொண்டே பல சேதிகள் பற்றிப் பேசினோம். எல்லோருக்குமே இப்படி ஒரு பதிவர் உலகமா என்று தோன்றியதோ என்னவோ .. அப்படி ஒரு கலகலப்பு.

* இன்னும் சிறிது நேரத்தில் மற்ற பதிவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

* அரட்டை ... அரட்டை ... காலை வாருதல் ..

* இருட்டும் நேரத்தில் வந்து சேர்ந்தார் தேவன் மாயம்.

* அதைவிடவும் பின்னால், வெளியூர் சென்றிருந்த சீனா வந்தார். அவரை "வரவேற்கும்" நிலையில் பந்தயத் திடலின் முன் வாசலுக்கு வந்து நின்று அவரோடும், எல்லோரும் நின்று கொண்டே பேசி முடித்துக் கிளம்பினோம்.

* படம் போடும்போது பதிவர் அன்புடன் நின்று ஒரு படம் எடுத்திருக்கலாமோவென்று தோன்றியது. ஏனெனில் 20 வயது என்பது கூட தோன்றாமல் நின்ற அவருடன் பதிவுலகப் "பெரியவன்" என்ற முறையில் ஒரு படம் எடுத்திருக்கலாமேவென்று தோன்றியது!

* பதிவுலக சந்திப்பு ஆரம்பிக்கும்போதே மும்பையிலிருந்து நையாண்டி நைனாவும், முடியும் நேரத்தில் ரம்யா அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி.

* அன்பு அவர்கள் சந்திப்பு பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்

* இரவுக் காட்சிகளோடு, தேவமாயம் ஒரு பதிவிட்டுள்ளார்.

பாலகுமாரின் பதிவு.


*

Thursday, May 21, 2009

312. மதுரையில் பதிவர் சந்திப்பு

*

இதோ.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது.


மதுரையில் இருந்து எழுதி வரும் அனைத்துப் பதிவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும், புதிதாக எழுத ஆரம்பித்து இருக்கும் நண்பர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் கண்டிப்பாக இந்த சந்திப்பு உதவும்.நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில்.
அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம்.

சீனா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

பசும்பொன் - 90470 92425

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

ப்ரபு ராஜதுரை

பாலக்குமார்

வால்பையன்

தேனீ சுந்தர்

தேவன்மயம்

அன்பு

May Vee

பப்பு

தருமி - 99521 16112

(நல்லவேளை (!!!) நையாண்டி நைனா வரலையாம்!)

*

Tuesday, May 12, 2009

311. ஏதோ .. நம்மளால பதிவுலகத்துக்கு முடிஞ்சது ...
*

The meeting started with Rotary Grace rendered by Rtn. S.R. Madhan Mohan, Birthday Baby of the week Rtn. PP. KLY. Premnath made the Sunshine Collection Rtn. V.M.Nandalal acted as the Secretary. The meeting was well attended with many members in spite of the sultry evening.

The speaker of the evening Mr. Sam George of American College was introduced to the august gathering by Rtn. P.Ramaswamy.

Sam.G. worked in American College as lecturer in Zoology Department from year 1970-2003. But his interest in varied subjects prompted our club to invite him to speak on a hot topic BLOGOSPHERE.

The power point aided presentation along with the eloquence of the speaker kept members attention intact for the 40m minutes talk.

Just like the way email revolutionized the world in 1990’s and the cell phones in 22000’s. Blogosphere is set to change the face of communication now.

The work BLOG is derived from the merger of words: WEB + LOG. To simplify it, BLOG is a platform (something similar to website) where youi can write whatever you think and whatever you want to share. The main difference being, you need not spend even a single penny. And in a website, you need to keep on reviewing your website but in a BLOG it stays on forever.

This concept of BLOG was started in the year 1994. but it got popular in India only in 2005. since then lots of BLOGS of varied interest has been created.. Our Speaker is one among the first 500 bloggers in 2005. Hence his hands on experience could be felt all along his speech.

Creating a BLOG is as simple as you create your email id. Just log on to website https://www.blogger.com/start. Any email savvy person can create a BLOG in less than 3 minutes in 3 easy steps.

The speaker showed a step by stop visuals of this creation process and the way you actually load it. Once created you can write any article of your interest. (it could be your own business / religion / opinions / heritage / movies etc.) And the beauty is you can even maintain your BLOG in Tamil.

The speaker highlighted why everyone of us need to maintain a blog. Some of them are:

--- you communicate with like minded people
--- you get friends from all over the world
--- variety of people with varied intellectual standings
--- a clean pastime
--- intellectual exercise

May be you can bring out your creativity and spend your timeusefully too …
Even with limited resources, you can express yourself. It is upto the reader to accept your views or not

Above all you learn a lot from other BLOG sites. You can keep on upgrading yourselves.

With lots of elite members in our club, this new emerging field of BLOGOSPHERE was much interesting. Of course if you want to find the taste of an apple, you need to bite it first. But for that, the speech was well received and it was an eye opener for many of our members. We hope many of our members start their own BLOG where in they share their experience and expertise. This is not only entertaining and useful for our members - but to the entire world. So start BLOGGING ….

(In case members need clarification / assistance in creating BLOG, they can reach the speaker Mr.G.Sam George at his mobile phone : 99521 16112.)

Rtn. Sankar Narayanan thanked the speaker and the meeting was adjourned with National Anthem.

Compiled by Rtn. P. Ramaswamy

Saturday, May 09, 2009

310. மூன்று இந்திப் படங்கள்

*

A WEDNESDAY - NEERAJ PANDEY - UTV PRODUCTION

TAHAAN - SANTOSH SIVAN - DREAM PRODUCTION & SANTOSH SIVAN FILMS


MUMBAI MERI JAAN - KESSANT KAMAL - UTV PRIDUCTION
எல்லாமே சென்ற வாரம் பார்த்த படங்கள்.

எல்லாமே நல்ல படங்கள்தான். முதல் படம் எனக்கு மிகப் பிரமாதமாகத் தெரியவில்லை. நம் ஊர் பெரிய நடிகர் கமலும், அதைவிடப் 'பெரிய' இயக்குனருமான மணியும் இன்னும் தமிழ்ப்படங்களில் பாட்டு வேண்டுமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்களே என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ள முடிந்தது. மற்றபடி எனக்கு மிகவும் பெரிய படமாகத் தெரியவில்லை. (நம்ம ஊர் தமிழில் மனுஷ்யபுத்திரன் பாட்டு எழுதியிருக்கிறாராமே .. நம்ம எங்க மாறப் போறோம்?)


இரண்டாவது படம் ஒரு அழகான சின்னப் பையன்; ஒரு சின்னக் கழுதை. இதுதான் கதை.கழுதைக்காக எதையும் செய்யத் துணியும் அந்தச் சின்னப் பையன். அனுபம் கெர் இருக்கிறார். மிக மிக அழகான காமிரா. இறுதி சீன் மனதைத் தொடுகிறது. பாட்டும் ஒரு மண்ணும் கிடையாது. மிக நல்ல படம்.

ஆனால் அடுத்த படம் ...?

என்னங்க இது? யாருக்கும் உபதேசமில்லை. அழகான ஒரு படம். intermission சமயத்தில் ஒரு பாட்டு மாதிரி ஒண்ணு இருந்தது. போனா போகட்டும்; கடைசியில் டைட்டில் போடும் நேரத்தில் ஒரு பழைய பாட்டு ஒன்று. போனா போகட்டும்.

ஆனால் மற்றபடி என்னமாதிரியான படம். ஒரே நேரத்தில் ஏழு இடத்தில் பம்பாயில் ஒரு விபத்து - குண்டு வெடிப்புதான். முகத்தை ஒரே இறுக்கமாக வைத்திருக்கும் மாதவன், தன் காதலனை இழந்த ஒரு பெண், இரு போலீஸ்காரர்கள், ஒரு டீ விக்கும் (Irfaan Khan) தமிழன் (?), ஒரு சந்தேகப் பிராணி, --- அடடே .. என்ன பாத்திரங்கள்.

ஒவ்வொருவருக்குள்ளும் எழும் எண்ணங்கள் .. அவைகள் மாறும் நேரங்கள் .. அந்தக் கடைசி நேரத்து இரு நிமிடத் துளியளவு மெளனம் ... இதுதான் உலகம் என்று உணரும் மாதவன்; தன் கடைசி போலீஸ்கார வாழ்க்கையைத் துறக்கும் அந்த வயதான போலீஸ்காரர், அவரது ஜூனியரோடான அவரது கடைசிச் சந்திப்பு; தன் தவறால் உயிரழந்து போய்விடுவாரோ என்று நினைத்த அந்தப் பெரியவருக்குக் கார் பிடித்து ஒரு பூ கொடுக்கும் அந்தத் தமிழன்; தன் சந்தேகத்தால் பலரை இழக்க நினைத்த அந்த சந்தேகப் பிராணி, அவரது சந்தேகம் அந்த முஸ்லீமின் தாயைச் சந்தித்த நிமிடத்திலேயே கறைந்த அவனுக்கு தனக்கு பிஸினஸ் தரும் அந்த முஸ்லீம்; ஒரு முஸ்லீமை வழக்காமச் சந்திக்கும் டீக்கடை ... ஒவ்வொன்றும் அருமையான சித்தரிப்பு. இது படம்... இல்லை, இதுதான் படம்.


பேசாமல் இனி தமிழ்ப்படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்திப் படம் மட்டும் பார்க்கலாமோவென்று தோன்றிவிட்டது. பல்லாண்டுகளாக இந்திப் படம் பார்க்காமல் இருந்துவிட்டு Black பார்த்தவுடனேயே இந்த எண்ணம் வந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று படங்களுமே மிக நேர்த்தி. இந்த மூன்று படங்களில் இரண்டு படம் தயாரித்த UTV-க்கு என் மரியாதை.

நாம் எப்பதான் உயரப் போகிறோமோ?*

Friday, May 08, 2009

309. கடவுள் என்றொரு மாயை ... 6

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12*
கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

CHAPTER 4: WHY THERE ALMOST CERTAINLY IS NO GOD


நூலின் இந்தப் பகுதியில் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், அதன் மறுப்பாக நம்பிக்கையாளர்கள் சொல்லும் intelligent design - ID - (திறன் படைத்த படைப்பமைப்பு என்று மொழிபெயர்த்துக் கொள்வோமா?)என்பதனையும் ஒப்பிட்டு டாக்கின்ஸ் விவாதிக்கிறார். அறிவியலும்,பரிணாமக் கொள்கைகளும், இயற்பியலுமாக இப்பகுதி கொஞ்சம் சிக்கலான பகுதியாக உள்ளது. இதைத் தமிழ்ப்படுத்துவதிலும், விளக்கங்கள் சொல்வதிலும் நிறைய பிரச்சனைகள் என்பதால் வெகு முக்கியமானவைகளை மட்டுமே இங்கே தருவதாக உத்தேசம்.

ஒளிச்சேர்க்கையில் 72 நுதிப் பொருட்களின் வெவ்வேறு வித மாற்றங்கள் நடைபெறுகின்றன. இதெல்லாம் (பரிணாமம் சொல்லும் chance (தற்செயல்)களால் நடந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு டாக்கின்ஸ் சொல்லும் பதில்: Design is not the only alternative to chance; Natural Selection is a better alternative. It is the only workable solution that has ever been suggested. (pp146-147)

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திலும் ஏதேனும் ஒரு இடைவெளி (gap in knowledge) கிடைத்தால், அங்கு தங்கள் கடவுளைச் செருகி விடுகிறார்கள். ஆனால், அறிவியல் வளர வளர இந்த இடைவெளிகள் சுருங்கிக்கொண்டே செல்கின்றன.

பென் (Penn), டெல்லர்(Teller) இரு பெரும் மாஜிக் நிபுணர்கள். ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று அடையாளமிடப்பட்ட நிஜ குண்டுகளால் ஒருவரையொருவரை சுட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த நிஜ குண்டுகளை அவர்களால் தங்கள் பற்களால் கடித்து நிறுத்திக் காண்பிப்பார்கள். துப்பாக்கிகளில் நன்கு பரிச்சயமானவர்கள் அவர்களுக்கு அருகே இருந்து் உன்னிப்பாகக் கவனித்தாலும் இது எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அதனால்,உடனே இது ஒரு miracle என்று கூறிவிட முடியுமா? நிச்சயமாக இதற்கு ஒரு விளக்கம் இருக்கும்;ஆனால் நமக்கு அது தெரியவில்லை; அவ்வளவே. அதைவிட்டு விட்டு இதற்கு அசாதாரணமான காரணம் சொல்வது அறிவுடைமையன்று. (pp155)

பரிணாமத்தில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதர்களுக்கு் முதுகு வலி, ஹெர்னியா, கருப்பை சிரமங்கள், sinus infections போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கான காரணம் நமது recurrent laryngeal nerve - இந்த நரம்பு 'தேவையின்றி' நீண்டு வளைந்து இருப்பது. பரிணாமத்தின் தேவையற்ற இந்த விளைவுக்கான காரணம்: பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான்கு காலில் நடந்த உயிரிகளிலிருந்து இரண்டு காலால் நடக்கும் மனிதர்களாக மாறியதால் வந்த விளைவு.(evolutionary flaws)(pp161)

நான் படித்த வேறொரு உதாரணம் கூட உண்டு. நமக்குப் புரையேறுவதுண்டு. நம் உணவுப்பாதைக்கும், மூச்சுப் பாதைக்கும் உள்ள ஒரு தேவையற்ற தொடர்பாலேயே (glottis)இது நடக்கிறது. பின் ஏன் அந்த தொடர்பு இருக்கிறதெனில், அது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தவறு. தவளைக்கு இந்த தொடர்பு பிரதானமாக இருக்கும்; ஏனெனில் அதன் சுவாசத்திற்கு ஏற்ற தகவமைப்பு அது. ஆனால் பரிமாண வளர்ச்சியில் மனிதன் வரையில் இந்த தொடர்பு வந்துள்ளது; நமக்கு அது ஒரு தொல்லை தரும் அமைப்பாகவே இன்றும் இருந்து வருகிறது.

பரிணாமம் glottis-க்கு evolutionary flaw என்று விளக்கம் தருகிறது. நம்பிக்கையாளர்கள் இதை நம்ப மறுத்தால், அவர்களின் கடவுள் தன் படைப்பில் ஏனிந்த 'தவறை'ச் செய்தது என்பதற்குக் காரணம் கூற முடியுமா?


நூலின் இந்தப் பகுதியில் கூறப்பட்டவைகளின் சாராம்சம்:

1. உலகின் பல்வேறு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களே அறிவியலுக்கும் மனிதன் அறிவாற்றலுக்கும் சவாலாக இருந்து வருகின்றன.

2. ஒரு கடிகாரத்தைச் செய்ய அறிவுள்ள ஒரு நிபுணர் தேவை, அதைப் போலவே ஒரு மனிதக் கண், பறவையின் சிறகு - இவைகளைச் செய்யவும் ஒரு 'நிபுணர்'(Designer) தேவைதானே?

3. அப்படி ஒரு Designer hypothesis-யை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் பிறகு அந்த டிசைனர் எங்கிருந்து எப்படி வந்தார் என்பது போன்ற பதிலற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அறிவியல், ஒரு தூக்கி (crane)செயல்படுவது போல், மெல்ல மெல்ல இவைகளை விளக்க முடியும்.

4. இந்த 'டிசைனர் கருத்து' விளக்க முடியாததை டார்வினின் பரிணாமக் கொள்கைகளால் நன்கு விளக்க முடியும்.

5. உயிரியலுக்கு டார்வினின் கொள்கை இருப்பதுபோல் இயற்பியலுக்கு இன்னும் ஒரு கொள்கை அறிவியலுக்குக் கிடைக்கவில்லை.

6. அப்படிப்பட்ட ஒரு தீர்மானமான crane இயற்பியலுக்கு இல்லாவிடினும், இப்போது இருக்கும் அதிகத் திறமற்ற cranes மற்ற 'டிசைனர் கருத்தை' விடவும் மேலானவையே.


*

அடுத்த பகுதி: THE ROOTS OF RELIGION (191-240)*

Saturday, May 02, 2009

308. மதுர தேர்தல் நிலவரம்

*

ஒவ்வொரு ஏரியாவுக்கும்னு பத்து நூறு ஆளுகள்; அவங்க எல்லாத்துக்கும் ஒரு பொறுப்பாளர்; அந்த மாதிரி அஞ்சு பொறுப்பாளர்களுக்கு ஒரு தல .. கீழ்மட்டத்து அந்த ஆளுகளுக்கு நாளொண்ணுக்கு நூறு ரூபாய். வீடு வீடாவோ, தனிப்பட்ட ஆளுகளைச் சந்திச்சோ... வேட்பாளர் பற்றி எடுத்துச் சொல்லணும். நாளைக்கு உங்க தொகுதிக்கோ உங்களுக்கோ என்ன வேணும்னாலும் இதே மாதிரி எங்கட்ட சொன்னா எல்லாம் செஞ்சு தருவார். -- இப்படியாக ரொம்ப கரெக்டா organize-டா தொகுதி வேலை நடக்குதாம் எங்க ஏரியாவுல. அதுவும் டவுணுக்குள்ளும், புற நகர்ப் பகுதிகளிலும் மாறி மாறி கூட்டங்கள் அது இதுன்னு தூள் பறக்குதாம்.

-- இதெல்லாம் எங்க ஏரியாவுக்கான cable boy - என்னிட்ட நல்லா பழகுற பையன் - சொன்னது. சொன்னா சரியாத்தானிருக்கும்.

இவ்வளவும் சொல்லிட்டு, தமிழ்நாட்டுல 39 தொகுதிகளும் தோத்தாக்கூட மதுரையில திமுகவை அடிச்சிக்க முடியாது. நல்ல ஓட்டு வித்தியாசத்தில அழகிரி ஜெயிப்பார் -- இது அவன் கடைசியா சொன்னது.

அவன் போனதும், ஏம்பா .. ஏன் அப்படி சொன்ன? மற்ற தொகுதி தேர்தல் முடிவு அம்புட்டு மோசமாவா இருக்கும்னு நினைக்கிற அப்டின்னு கேட்டிருக்கலாமேன்னு தோணிச்சி. அடுத்த தடவை வரும்போது மறுபடி கேட்டு என்ன சொன்னான்னு உங்ககிட்ட வந்து சொல்றேன்.


*