Wednesday, April 25, 2012

565. ஜிப்ரேல் வந்தார் .. சொன்னார் .. சென்றார்*
 GABRIEL ஜிப்ரேல் 
வந்தார் .. சொன்னார் .. சென்றார்


 டிசம்பர் 1945-ம் ஆண்டில் எகிப்தின் ஜபால் அல்-டாரிஃப் (Jabal al-Tarf) என்ற மலைப் பகுதிகளின் அருகில் உள்ள நஜ் ஹமாதி (Naj Hammadi) என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள இடத்தில் நிலத்தைத் தோண்டும்போது முகமது அலி என்பவருக்குப் பழைய எழுத்துப் பிரதிகள் சில கிடைத்தன....……. இப்படி ஒரு கட்டுரையை ஆரம்பித்து அதைப் பதிவிட்டிருந்தேன்.

 புதை பொருட்களாகக் கிடைத்த இந்தப் பழைய கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த பின் கிறித்துவத்தின் வரலாறு, நம்பிக்கைகள் போன்று பலவும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளன. ஏசு ஒரு கன்னியின் மகனா, அவர் இரட்டைச் சகோதர்ர்களில் ஒருவரா, விபச்சாரியாக புதிய ஏற்பாடுகளில் வரும் மரிய மக்தலேனா உண்மையில் யார்?, கிறிஸ்துவின் மனைவியா .. இப்படிப் பல கேள்விகள். Gospels என்ற நூல்களின் காலம் என்ன? கிறித்துவத்திற்கும் முன்பே இந்த ஏற்பாடுகள் தோன்றியிருந்தனவா? கிறித்துவ நம்பிக்கைகளின் ஆரம்பம் என்ன? .. இப்படியும் பல கேள்விகள். இக்கேள்விகள், புதிய சில செய்திகள் என்று இந்தக் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகளைப் பற்றிய செய்திகளை THE GNOSTIC GOSPELS என்ற தலைப்பில் உள்ள நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளின் தொகுப்பை BOOK SHELF என்பதின் கீழ் பதிவுகளாகத் தொடர்ந்து தர நினைத்துள்ளேன்.

 இந்த முயற்சிக்காக THE GNOSTIC GOSPELS புத்தகத்தை வாசித்து, மேற்சொன்ன செய்திகளைப் படித்து எழுதியதும் புத்தி இன்னொரு திசையில் பயணித்தது. ஒரு தூக்கமில்லாத இரவில் தொடர்ந்த பல எண்ணங்கள் ....

 வரலாறுகள் எல்லாமே வெறுமனே எழுதி வைக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அதே போல் எழுதி வைக்கப்பட்டவை எல்லாமே மிகச் சரியான செய்திகளாகவும் இருக்க்த் தேவையுமில்லை, காலம், சூழல், வசதி, வாய்ப்பு என்று பல காரணிகள் எழுதிவைக்கப்பட்டவைகளில் உண்மையும் பொய்மையும் கலந்தே வைக்கும். அதோடன்றி, காதுவழிச் செய்திகளாக பல காலம் இருந்து வந்தவைகளும், தொகுக்கப்பட்டவைகளும், வரலாற்றின் பின்னால் கிடைக்கும் இது போன்ற சான்றுகளும் வரலாற்றின் மூலங்களாக நமக்குக் கிடைக்கின்றன. Zig-zag puzzle போலவே கிடைத்த செய்திகளை பல சான்றுகள் மூலம் உறுதியாக்கி வரலாற்றினைப் படைக்க வேண்டும். கிறித்துவ வரலாற்றின் அடிப்படையை இந்த நஜ் ஹமாதி பிரதிகள் மாற்றியது உண்மை. இது போல் வேறு வரலாறுகளும் மாற்றப்பட்டிருக்குமா என்று தோன்றியது. அதுவும் சமய வரலாறு பலவனவும் நினைவுக்கு வந்தன. கூன் பாண்டியனுக்கு வந்த நோயும், ஞான சம்பந்தரால் அது தீர்ந்த முறையும், அதனால் எண்ணாயிரம் சமணர் தமிழகத்தில் தலையிழந்த நிகழ்வும் நடந்திருக்குமா? பெளத்த மதம் ஆரம்பித்துப் பரவியதும் மெல்ல அழிந்த்தும் நினைவுக்கு வந்தன. அரசியல் காரணங்களால் புதிய மதங்கள் ஆழமாக வேரூன்றுவதும் இயல்பாகவே நடந்து வந்துள்ளன. புதிய மதம் ஒன்று பரவும்போது பழைய மதங்களின் ஆணிவேர்கள் அசைக்கப்படுவதும், பழைய மதத்தின் வழிபடு இடங்கள் இடிக்கப்படுவதோ, மாற்றப் படுவதோ வரலாற்றின் சில நிச்சயமான உண்மைகள்.

 நாடகங்களில் மேடையை இருட்டாக்கி விட்டு, திடீரென ஒளியோடு புதிய காட்சி தொடங்குமே அது போல இந்த தொடர்நத எண்ணங்களில் இருந்து சட்டென்று இன்னொரு எண்ணம் பளிச்சிட்ட்து. காலமெல்லாம் 1400 வருடங்களாக மாறாதது என்று சொல்லப்படும் குரான் ஒரு பக்கமிருக்க, ஹமாதியில் கிடைத்தது போல் பழைய இஸ்லாமியப் பதிவுகள் கிடைத்தால் அவர்களின் நம்பிக்கைகள் என்னாகும் என்று ஒரு யோசனை வந்தது. ஆனால் இதுவரை அப்படியேதும் வரவில்லை. அப்படியே ஏதாவது புதிதாக ‘தலை காட்டியிருந்தால்’ அதை உடனே என்ன செய்ய வேண்டும் என்பது இஸ்லாமியருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டேன். அப்போது என்னவோ ஒரு மணியோசை கேட்டது. power cut சமயத்தில் அரைத்தூக்கத்தில் இருந்த என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் ஒன்று தோன்றியது. யாரோ ஏதோ சொன்னதுபோல் கேட்டது. சொன்னவரோ மிகுந்த ஒளியில் இருந்த்தால் யாரென்று ஏதும் தெரியவில்லை. ஆழ்ந்து கேட்டேன். நான் இப்போது நினைத்த்து சரி என்று சொல்லியதுபோலிருந்தது. குழப்பத்தில் தூங்கி விட்டேன்.

 காலையில் எழுந்ததும் தங்க்ஸிடம் இரவில் நடந்ததைச் சொன்னேன். யார் வந்து என்ன சொன்னார்கள் என்று மிகவும் அழுத்திக் கேட்டார்கள். மணிச்சத்தம், ஒளி வெள்ளம், ஆழ்ந்த குரலில் வந்த வார்த்தைகள், என் நினைப்பு சரியென்று சொன்னது ... என்று எல்லாவற்றையும் சொன்னேன். யாராக இருக்கும் என்று கேட்டார்கள். ஏதாவது வான தூதன் – ஜிப்ரேல் மாதிரி ஒரு தேவ தூதன் – வந்து ஏதோ சொல்லிச் சென்றுள்ளார் என்று நினைக்கிறேன் என்றேன். என்னை இன்னும் பேசச் சொல்லிக் கேட்டார்கள். நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா என்றார்கள். அப்படித்தான் தோன்றுகிறது என்றேன்.

 சிறிது நேரம் இப்படியே பேசிக்கொண்டிருந்து விட்டு, பிறகு திடீரெனச் சிரிக்க ஆரம்பித்தார்கள். ’என்ன ஆச்சு?’ என்றேன். ’ஒன்றுமில்லை ... ராத்திரி ரொம்ப நேரம் கழித்து power cut நேரத்தில் நீங்கள் அரைத் தூக்கத்தில் இருக்கும்போது கைப்பேசியில் ஒரு அழைப்பு உங்களுக்கு வந்ததே.. அதுதான் அந்த மணியோசை. பின்பு இருட்டில் ஒரு வெளிச்சம் பிரகாசித்ததே ... அது உங்கள் கைப்பேசியின் ஒளிதான். அதெல்லாம் நினைவில் இல்லையா’ என்றார்கள். அப்படியா என்றேன்.

ஆனால் எனக்கு நிச்சயமாக ஒன்றும் தோன்றவில்லை. குழப்பமாக இருந்த்து. இரவில் நடந்த்து எல்லாம் நிச்சயமாக எனக்குத் தோன்றியது. ஜிப்ரேல் மாதிரி தேவதூதன் வந்து சில நல்லது சொல்லி விட்டுப் போயிருக்கிறார். தங்க்ஸ் ஏதோ கதை சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். விடிய விடிய நான் சொன்னதையெல்லாம் சீரியசாகக் கேட்ட தங்க்ஸ் கடைசியில் இப்படி சொல்லி விட்டார்களே ... இதில் எது உண்மை? சீரியசாக என்னிடம் ‘கதை’ கேட்டது உண்மையா? கேட்டபின் எல்லாம் கதை என்று சொன்னதை நம்புவதா? பெருங்குழப்பம் தான் காரணமாக இருந்தது.

 வழக்கம்போல் காலையில் கணினி முன்னால் அமர்ந்து மயில் பொட்டியைத் திறந்த்தும் தான் தெரிந்தது தங்க்ஸ் சொன்னது உண்மையென்று. ஏனெனில் நண்பர் ஒருவரிடமிருந்து வந்திருந்த ஒரு மயிலில் - http://www.faithfreedom.org/articles/quran-koran/ancient-qur%E2%80%99anic-manuscripts-of-sana%E2%80%99a-and-divine-downfall/ என்ற ஒரு தொடர்பு கொடுக்கப்பட்டிருந்த்து. அதை எடுத்து வாசித்ததும் முந்திய இரவில் நான் எண்ணியது எதுவும் தவறல்ல என்று தெரிந்து கொண்டேன். நண்பரோ, ஜிப்ரேலோ ... வேண்டிய தகவல் ஒன்றைத் தந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

 ஆச்சரியமான தகவல்கள். மீண்டும் அதை வாசிக்க வேண்டும். உங்களுக்கும் இங்கு விரைவில் தர வேண்டும்.

 ஆனாலும் என்ன ... என்ன சொன்னாலும் நம்பிக்கையாளர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள். ’மனிதனுக்கு விந்து எங்கிருந்து வருகிறது’ என்ற பதிவுலக விவாதத்திலேயே இது முழுமையாகப் புரிந்து விட்ட்து. 1400 வருடக் கதை ஒரு டோமினோ விளையாட்டு மாதிரி.

ஏதாவது ஒரு கார்டை உருவி விட்டால் எல்லாமே முடிந்து விடும். ஆனால் நம்பிக்கையாளர்கள் எத்தனை கார்ட் போனாலும் அதையெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் நடைமுறை சாத்தியம்.Tuesday, April 17, 2012

564. தினமும் செய்திதாட்கள் கட்டாயம் வாசிக்கணுமோ!

* காலையில கஷ்டப்பட்டு 6 மணிக்கு எழுந்திருச்சி ரெண்டு ஷட்டில் ஆட்டம் போட்டுட்டு ஒரு தம்ளர் கருப்பட்டிக் காப்பியோடு ஈசி சேர்ல உட்கார்ந்து இந்து பத்திரிகையை எடுத்தேன்.

முதல் செய்தி படங்களோடு நம்ம முதலமைச்சர்கள் பற்றியது. ஒவ்வொருத்தர் முகத்தையும் பார்த்தேன். அவர்களும் அலுப்போடு இருந்தது போலிருந்தது. பார்த்த எனக்கும் அது பற்றிக் கொள்ளக்கூடாதேன்னு அடுத்த செய்திக்குப் போனேன்.

 பீகார்ல எவனோ ஒரு நீதிபதிக்கு நியாய உணர்வு பீறிட்ட செய்தி ஒன்று.

1996-ல் நடந்த தலித்திய குடியிருப்பில் கொலைவெறியாட்டம் நடத்திய ரன்வீர் சேனா என்னும் ’சாதி’ இந்துக்களான ராஜ்புத், பூமிகார் என்ப்வர்களின் கூலிப்படையினரில் 23 பேரில் மூவருக்கு தூக்குத் தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் செஷன்ஸ் கோர்ட் கொடுத்த தீர்ப்பை பீகார் உயர்நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. வெறியாட்டம் ஆடி பெண்கள், குழந்தைகள் என்று கொன்று குவித்ததற்கு கண்கூடான சாட்சிகள் இருந்தும் அந்த ... நீதிபதிக்கு அவைகள் பற்றவில்லையாம். சாட்சிகள் பற்றாது என்று சொல்லி கூண்டோடு எல்லோரையும் விடுதலை செய்துள்ளான் அந்த நீதிபதி. ஏற்கெனவே அந்த வெறியாட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவன் போன ஆண்டிலிருந்தே சிறையை விட்டு வெளியே வந்து ஆடிக்கொண்டிருக்கிறானாம்.

 நல்ல ஊருடா இது ...

 வழக்கமாக ஒன்று சொல்வார்கள்: இவனுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது என்பார்கள். அந்த ...நீதிபதிக்கான வார்த்தைகள் இவை. 

*
 போனால் போகுதுன்னு இரண்டாவது செய்தி படிப்போம்னு அதே முதல் பக்கத்தில் இன்னொரு செய்திக்கு வந்தேன். திருவண்ண்மலையில் Mount St. Joseph Matriculation Hr. Sec. School என்று பள்ளியில் ஒட்டு மொத்தமாக பள்ளியே ‘பிட்’ தயார் செய்து மாணவர்களுக்குக் கொடுத்து பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வை நடத்தியிருக்கிறார்கள். பள்ளி நகலெடுக்கும் இயந்திரத்திலேயே இந்த பிட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏழு வாத்தியான்கள் பிட்டோடு அகப்பட்டிருக்கிறான்கள். ஒரு மாணவியின் பெயர் எழுதிய கவர் ஒன்றில் ரொக்கப்பணத்தோடு ஒரு வாத்தியான் அகப்பட்டிருக்கிறான். பத்தாம் வகுப்பிற்கே இந்த ஆட்டம் போட்ட பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எப்படி அழகாக நடத்தியிருக்கும்.

ஆனால் என்ன அடுத்த ஆண்டுக்கு இந்தப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முழு வேகத்தில் இருப்பார்கள். பள்ளியும், அந்த தலைமை ஆசிரியனும், மற்ற வாத்தியான்களும் ஜே .. ஜே.. ன்னு காசு குவிப்பானுங்க.

 வேலை பார்த்த காலத்தில் காசுக்கு மார்க் போடும், கேள்வித்தாள் கொடுக்கும் வாத்தியான்களைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இது போன்ற் ஆசிரியன்கள் தன் பொண்டாட்டி புள்ளையக் கூட வித்து விட்டு காசு பாப்பானுக ... 

*
 முதல் பக்க ரெண்டு செய்தியும் இப்படி ஆனதில் வெறுத்து அப்படியே கடைசிப் பக்கத்திற்குச் சென்றேன்.

 முதலில் ஒரு அநீதிபதி .. அடுத்தது ... ஆசிரியன்கள் ... இப்போது காவல்துறை...

இரண்டு கார் விபத்துகள் தில்லியில். இரண்டிலுமே விபத்துக்குள்ளான கார்கள் BMW. காரோட்டிகளின் தவறால் முதல் காரில் காலை நடைப்பயிற்சி எடுத்த ஒரு வயதானவர் அடித்துத் தூக்கியெறியப்பட்டார். கார் கவிழ்ந்து விட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் அடிபட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருந்தவரைக் கவனிக்காமல், கார்காரனைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள். ரத்தம் சிந்தி விபத்துக்குள்ளானவர் அங்கேயே மரணமடைந்து விட்டார்.

 அடுத்த விபத்தில் ட்ராபிக் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த காவலரையே காரில் அடித்துக் கொன்று விட்டான் ஒரு பணக்காரன். இங்கும் செத்த தங்கள் துறையின் போலீஸ்காரரைக்கூடக் கவனிக்காமல் காரோட்டிக்கு காவல் துறையினர் உதவிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

 நம்ம ஊர்ல எதைச் செஞ்சாலும் நிறைய காசு பணத்தோடு செய்யணும். மரியாதை வரும் தானாக ...

 *
பேப்பர் படிக்க மனசே வரலை. தூக்கிப் போட்டுட்டேன். ஆனால் அடுத்த வேலைக்கு பேப்பர் இல்லாமல் போய் பழக்கமில்லையா அதனால் அரை மனதோடு The Times Of India பேப்பரோடு ‘உள்ளே’ சென்றேன்.

முதல் செய்தியே பேப்பரின் இடது ஓரம் உள்ள சிறு செய்தித் துளிகள். திருனாமுல் காங்கிரஸ் இருக்கே .. நம்ம மம்தா தீதி கட்சி. அந்தக் கட்சியில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்களாம். சி.பி.எம். கட்சிக்காரங்க கூட அக்கா கட்சி ஆளுக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதாம். அந்தக் கட்சிக்காரங்க கூட கல்யாண உறவு எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாதாம். அந்தக் கட்சிக்காரங்க கூட எந்தப் பேச்சு வார்த்தையும் வச்சிக்கக் கூடாதாம். 

நல்ல அரசியல்வாதிகள்.

 நம்ம ஊர் அ.தி.மு.க்.வை விட அல்லவா மோசமா போய் விட்டார்கள். தி.மு.க., ம்.தி.மு.க.வில் உள்ள தங்கள் பழைய தோழர்கள் செத்தால் கூட மாலை போட அ.தி.மு.க. ஆட்கள் போகக் கூடாதென்பது அந்தக் கட்சியின் உயர்ந்த தத்துவம். மம்மி காருக்குள் இருந்தால் கூட நம்பர் டூ முதல் எல்லா அமைச்சர்களும் தரையைத் தொட்டு நமஸ்கரிக்கணும் ...

 அ.தி.மு.க., தி.மூ.காங்கிரஸ் -- இரண்டில் எது ரொம்பக் கேவலம்னு தெரியலையே. உங்களுக்குத் தெரியுமா? * இன்னைக்கு இம்புட்டு பேப்பர் வாசிச்சது போதும்னு தூக்கிப் போட்டுட்டு என் வயித்தெரிச்சலை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறேன் ... தலைவிதி. 
பெரிய இந்திய நாடாம் ... போங்கடா போங்க ... *
*

முதல் செய்தியைக் கண்டனம் செய்து இன்று -25.4.12 - இந்துவில் ஒரு தலையங்கம் வந்துள்ளது.


A travesty of justice*

Monday, April 16, 2012

563. THE GNOSTIC GOSPELS ... 1

*
*

*

THE GNOSTIC GOSPELSமற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 
 

டிசம்பர் 1945-ம் ஆண்டில் எகிப்தின் ஜபால் அல்-டாரிஃப் (Jabal al-Tarf) என்ற மலைப்பகுதிகளின் அருகில் உள்ள நஜ் ஹமாதி (Naj Hammadi) என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள இடத்தில் நிலத்தைத் தோண்டும்போது முகமது அலி என்பவருக்குப் பழைய எழுத்துப் பிரதிகள் சில கிடைத்தன. 13 ஓலைப் பிரதிகள் தோல்களால் ஒருங்கே கட்டப்பட்டு, ஒரு மண் பாத்திரத்திற்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார். அதன் மதிப்புகளை அறியாது முகமது தன்வீட்டு அடுப்பங்கரையில் இதனை வைத்துள்ளார். அவரது தாயார் சமையலுக்கு அடுப்பெரிக்க இதிலிருந்து சில ஓலைகளையும் எடுத்துள்ளார். பின்னர், முகமதுவும் அவரது சகோதரர்களும் தங்கள் எதிரி ஒருவரைப் பழி வாங்குவதில் ஈடுபட்டு, காவல் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது  தங்கள் பகுதியிலிருந்த மத குரு - al-Qmmus Basiliyus Abd al-Masih என்பவரிடம் அந்தப் பிரதிகளைக் கொடுத்து வைத்துள்ளார். அதில் இருந்த ஒரு பிரதியைக் கண்ட வரலாற்று ஆசிரியர் ஒருவர் - Raghib - அதன் முக்கியத்துவதைக் கண்டறிய கெய்ரோவில் உள்ள தன் நண்பருக்கு அதை அனுப்பியுள்ளார்.(XIII)

அப்பிரதியைக் கறுப்புச் சந்தையில் விற்க முயற்சித்த போது எகிப்திய அரசின் கவனத்திற்கு இப்பிரதியைப் பற்றிய செய்து எட்டியுள்ளது. விற்கப்பட்ட அந்த ஒரு பிரதியோடு, மொத்தம் இருந்த 13 பிரதிகளில் மீதியிருந்த பத்தரை பதிவுகளையும் அரசு கைப்பற்றியது. கைப்பற்றியவைகளை கெய்ரோவின் அருங்காட்சியகத்தில் வைத்துப் பத்திரப்படுத்தியது. ஆனால் 13வது பிரதியும் அது அடக்கியிருந்த 5 அபூர்வமான கையெழுத்துத் தொகுப்புகளும் அமெரிக்காவிற்குக் கடத்தப் பட்டன. அங்கிருந்து நெதர்லேண்டில் உள்ள Utrecht என்ற ஊரிலுள்ள க்யுஸ்பெல் - Giles Quispel - என்ற மத வரலாற்றுப் பேராசிரியரிடம் வந்து சேர்ந்தது. கிடைத்த பகுதி அரைகுறையானது என்பதையும், சில பக்கங்கள் காணாமலிருக்கின்றன என்று தெரிந்ததும் பேராசிரியர் 1955ம் ஆண்டு கெய்ரோவிற்கு வந்தார்; நேரடியாக அருங்காட்சியகம் சென்று, அங்குப் பாதுகாப்பிலிருக்கும் பிரதிகளின் சில படங்களைப் பெற்று அறைக்குத் திரும்பியவர் தன் தேடலை ஆரம்பித்தார். முதலிரு வரிகளைப் படித்ததுமே க்யுஸ்பெல் மிகவும் பிரமிப்படைந்தார். ஏனெனில் அந்த வரிகள்:

‘இவைகளெல்லாம் ஏசுவின் ரகசிய வார்த்தைகள்;
உயிரோடு இருக்கும்போது அவர் பேசியவைகள்;
இவைகளை இங்கே தொகுத்தது
ஏசுவின் இரட்டைப் பிறவியும்
அவரது சகோதரனுமான
ஜூடாஸ் தாமஸ்.’

 1890-ல் கிரேக்க மொழியிலுள்ள தாமஸின் புதிய ஏற்பாட்டில் க்யுஸ்பெல்லின் பிரான்ஸ் நண்பர் H.C. Puech இதே போன்ற வாசகங்களை பழம் பிரதிகளிலிருந்து முன்பே கண்டுபிடித்திருந்தார். ஏசுவிற்கு இரட்டைச் சகோதரர் இருந்தாரா? மற்ற புதிய ஏற்பாடுகள் போலன்றி இது மட்டும் ஏன் ‘ரகசிய ஏற்பாடாக இருக்கிறது? ஹமாதில் கண்டுபிடிக்கப்பட்ட 52 தொகுப்பிலிருந்து இது ஒரு தொகுப்பு. இதே போல் பிலிப்பின் ஏற்பாடு ஒன்றும் வேறு விவிலியங்களில் சொல்லாததும் சொல்லப்பட்டிருக்கிறது: மரிய மக்தலேனாவை ஏசு மிகவும் விரும்பியதாகவும், அவர்களிருவரும் தங்கள் அன்பை சீடர்கள் முன்னால் வெளிக்காண்பித்ததாகவும் காணப்படுகிறது. (XV)

அந்த 52 தொகுதிகளில், தாமஸ் விவிலியம், பிலிப் விவிலியம் என்பது போக இன்னும் மீதி இருந்த பல விவிலியங்கள்: Gospel of Truth, Gospel to Egyptians, Secret book of James, Apocalypse of Paul, Letter of Peter to Philip, Apocalypse of Peter இவைகள் எல்லாமே கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தன. இவைகளில் ஒரு தொகுதியின் சிறு பகுதிதான் - தாமஸின் விவிலியம் - 50 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நூல்கள் எல்லாமே கி.பி. 350 - 400 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. ஆனால் இதற்கு மறுப்பும் உண்டு. Prof.Helmut Koester of Harvard University - தாமஸின் விவிலியம் கி.பி.50-100-ல் எழுதப்பட்டிருக்கலாம்; அதனால் அவை மற்ற விவிலியங்களுக்கு முன்பே எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார். (XVI)

ஹமாதி தொகுப்புகளில் உள்ள தொகுதிகளில் மனித இனத்தின் ஆரம்பம் ஆதியாகமத்தில் சொன்னதுபோலின்றி வேறு வகையாகச் சொல்லப்பட்டுள்ளது. Testimony of Truth-ல் ஈடன் தோட்டம் பாம்பின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. (XVII)

ஏனிந்த தொகுதிகள் இப்படிப் பதுக்கப்பட்டன? ஏன் 2000 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் மறைந்துள்ளன? ஆரம்ப காலங்களில் புதிய கிறித்துவ்ர்களிடையே பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த அடிப்ப்டைக் கிறித்துவர்களுக்கு மற்ற கிறித்துவர்கள் மீதும் அவர்கள் நம்பிக்கைகள் மீதும் முரண்பாடு இருந்து வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, இரேனியஸ் -Irenaeus, Bishop of Lyons - 180-ம் ஆண்டு ஐந்து தொகுதிகளாக 'The Destruction and Overthrow of Falsely So-called Knowledge' என்ற நூலை எழுதியுள்ளார். கான்ஸ்டான்டின் கிறித்துவத்திற்கு வந்த பின், கிறித்துவர்களின் கை ஓங்கியது. ஒதுக்கப்பட்ட நூல்களை வைத்திருப்பதே குற்றம் என்றானது. அப்போது இந்த நூல்கள் பதுக்கப்பட்டிருக்க வேண்டும். (XVIII)

ஆனால் இது போன்ற நூல்களை வைத்திருந்தவர்கள் தங்களை heretics - நம்பிக்கையற்றவர்கள் - என்று நினைக்கவில்லை. அவர்களும் கிறித்துவ பாணியில், கிறித்துவ நம்பிக்கையுடன் தான் எழுதி வந்தார்கள். இத்தைகைய கிறித்துவர்கள் gnostics என்றழைக்கப்பட்டனர். கிரேக்க மொழியில் gnosis என்றால் knowledge என்று பொருள்படும். (XIX)

இந்த நூல்கள் மற்ற நமக்குத் தெரிந்த விவிலியங்களோடு ஒன்றுபட்டும், மாறுபட்டும் இருந்தன. பழைய யூதர்களும் கிறித்துவர்களும் மனிதனும் கடவுளும் வேறுபட்டவர்கள்; தனித்தனிக் கூறுகள் என்று சொல்வதுண்டு. ஆனால் gnostic கிறித்துவர்கள் தன்னையறிதலே கடவுளை அறிதல் என்றும் (self knowledge is knowledge of God), மனிதனும் தெய்வீகமும் ஒன்றுதான் (self and divine are identical) என்று சொல்வதுண்டு. இரண்டாவதாக, ஏசு மனிதர்களை உய்விக்க அல்ல, மாறாக வழி நடத்தவே வந்தார். மூன்றாவதாக, ஏசு தாமஸிடம் தாங்களிருவரும் ஒரே பொதுப்புள்ளியிலிருந்து வந்தவர்கள் என்கிறார். இத்தகைய ஏசுவின் படிப்பினைகள் கீழ்த்திசை நாட்டின் தத்துவங்களோடு ஒத்துப் போன அளவு மேற்கத்திய தத்துவங்களோடு ஒத்துப் போகவில்லை.

ஏசுவின் இந்தக் கருத்துக்கள் புத்தரின் கருத்துக்களோடு ஒத்து வருகின்றன. இந்து மதத் தத்துவங்களின் தாக்கமும், புத்தத்தின் தாக்கமும் gnostic கிறித்துவத்தில் இருப்பதுபோலுள்ளது. gnostic கிறித்துவம் மிகுந்திருந்த 80-200 ஆண்டுகளில் கிரேக்க, ரோமானிய நாடுகளோடு இந்தியாவிற்குத் தொடர்பு இருந்துள்ளது. அலெக்ஸாண்டிரியாவில் புத்த மதப் பரப்பல் அப்போதே நடந்து வந்துள்ளது. Hippolytus என்ற கிரேக்க மொழி பேசும் ரோமானியன் 225-ம் ஆண்டில் இந்திய பிராமணர்களைப் பற்றிப் பேசுகிறார். கடவுளை ஒளியாகப் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவிற்கு வந்ததாகக் கருத்தப்படும் தாமஸ் என்ற சீடரை நினைவு படுத்தும் முகமாகவே இந்தப் பெயர் -Gospel of Thomas - என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாமோ? (XXI)

மேலும் தொடரும் ஆராய்ச்சிகளால் தான் மேற்சொன்னவைகள் உறுதிப்படுத்த முடியும்.

கிறித்துவத்தில் பல வகைப் பிரிவினைகள் இருந்தே வந்துள்ளன. தற்போது கத்தோலிக்கர், பிரிவினைக்காரர்கள், பழமைக் கிறித்துவர்கள் (Orthodox)-, மூவருமே கொள்கையளவில் மூன்று விஷயங்களில் ஒன்று படுகிறார்கள். விவிலியக் கட்டளைகள், சீடர்களின் நடவ்டிக்கைகள் (apostolic creed), சமயக் கட்டுப்பாடுகள் (institutional structure) - இந்த மூன்றையும் ஒழுங்குக் கோட்பாடுகளாக வைத்துள்ளார்கள். ஆனால் இந்த மூன்று கோட்பாடுகளும் இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே வந்துள்ளன என்பது பிஷப் இரேனியஸ் போன்றவர்களின் எழுத்திலிருந்து தெரிகிறது. இதனாலேயே பிஷப் இரேனியஸ் ஒரே ஒரு கிறித்துவம் மட்டுமே இருக்க முடியும்; மற்றவையெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். அந்த ஒரே கிறித்துவம் வழியாக மட்டுமே ஆன்மா உய்வடையும் என்றார். இதை மாற்றி நினைப்பவர்கள் எல்லோருமே heretic கிறித்துவர்கள் - பொய்க் கிறித்துவர்கள் - என்றார். கிறித்துவம் என்றாலே அது ’கத்தோலிக்கம்’ மட்டுமே என்றார். கான்ஸ்டாண்டினுக்குப் பிறகு இத்தகைய heretic கிறித்துவர்கள் தண்டனைக்குரியவர்களானார்கள்.

gnostic கிறித்துவம் முதலிலேயே இருந்திருந்தாலும் 19-நூற்றாண்டிற்குப் பிறகே அவை பற்றிய நூல்கள் வெளி வந்துள்ளன. 1769-ல் முதல் நூல் எகிப்திலிருந்து James Bruce என்ற ஸ்காட்லாந்துக்காரரின் மூலம் வெளி வந்தது. அதுவும் 1892-ல் அச்சிடப்பட்டது. இது ஏசுவிற்கும் அவரது சீடர்களுக்கும் நடுவில் நடந்த உரையாடல்களைக் கொண்டுள்ளது. (இங்கு சீடர்கள் என்பது இரு பாலினரையும் குறிக்கும்.) 1896-ல் எகிப்தின் வரலாற்றறிஞர் Gospel of Mary (Magdalane) என்ற நூலையும், இன்னும் வேறு மூன்று நூல்களையும் வெளிக் கொண்டு வந்தார். அந்த மூன்றில் ஒன்று – Apocryphon (Secret Book) of John.


Dead Sea Scrolls ஹமாதி பிரதிகளுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட்து. அந்த செய்தி உலகெங்கும் உடனே பரவியது. ஆனால் ஹமாதி பிரதிகள் அதுபோல் உடனே பரவி விடவில்லை. Gnositcism-ல் விற்பன்னரான Prof. Hans Jonas அரசியல், சட்ட ஒழுங்குகள் போன்றவைகளும், விற்பன்னர்களுக்கு நடுவில் எழுந்த போட்டி பூசல்களுமே இதற்கான காரணங்களாக இருந்தன என்கிறார். .(XXIV)


பல தடைகள் தாண்டி 1952-ல் இக்கையெழுத்துப் பிரதிகள் எகிப்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதற்குப் பிறகும் ஆராய்ச்சிகள் தொடங்க முடியாத தடைகளும் இருந்தன. அதன் பின் UNESCO-வின் தலையீட்டால் பல வல்லுனர்களின் ஆராய்ச்சிக்குள் இவை வந்தன.

1972-ல் இப்பிரதிகளின் முதல் வெளியீடு வெளிவந்தது. (pp XXVII)

ஹமாதிப் பிரதிகள் மூலம் Gnosticism கிறித்துவத்திற்கும் முந்தியது என்றும், கிரேக்க தத்துவம், வானவியல், புராணங்கள், இவைகளோடு இந்திய மூலங்களிலிருந்தும் கருத்துக்கள் பெற்றன என்று நிரூபிக்க முயன்றார்கள். ஆனால் Adolf von Harnack என்ற ஜெர்மானிய வரலாற்றாசிரியர் கிறித்துவத்தின் மறுப்புகளே Gnosticism-ஆக மாறியது என்றார். கிறித்துவ த்த்துவங்களை கிரேக்க த்த்துவங்களோடு இணைந்து முதல் கிறித்துவ மதயியல் தோன்றியது. ஆனால் இதனால் கிறித்துவத்தின் பல வழிகாட்டல்கள் திசை திருப்ப்ப்பட்டன. (XXIX) இக்கருத்தினை ஆங்கில அறிவியலாளர் Arthur Darby Nock ஒத்துக் கொண்டார்.

ஆனால் வேறு பல மதவியலாளர்கள் இக்கருத்தினை ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் Gnosticism தனியொரு மதமாக இயங்கி வந்துள்ளது என்றார்கள். Wilhelm Bousser என்ற புதிய ஏற்பாட்டின் வல்லுனர் Gnosticism  கிறித்துவ மத்த்திற்கு முந்தியது என்றார்.

சிலர் Gnosticism ஈரானிய மத்த்திலிருந்து தோன்றி, ஜோராஸ்ட்ரியன் (Zorastrianism) மத்த்தின் தாக்கத்தோடு வளர்ந்த்து என்றனர். யூத மதத்திலிருந்தே Gnosticism தோன்றியது என்பாரும் உண்டு. (XXX)

ஹமாதி பிரதிகள் 52-யும் ஆய்ந்த பின் கிறித்துவத்தின் துவக்க வரலாறு மேலோட்டமாகவே புரிகிறது.

ஏன் சில புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன? ஏன் சில புத்தகங்கள் மறுக்கப்பட்டன? மறுக்கப்பட்டவை ஏன் தேவையற்றவை, ஒதுக்கப்பட வேண்டியவை என்று கருதப்பட்டன? – இது போன்ற கேள்விகளுக்கான சில பதில்கள் ஹமாதிப் பிரதிகளிடமிருந்து கிடைக்கின்றன. (XXXV)Thursday, April 12, 2012

562. வைரமுத்துவின் வரிகளுக்கு வயது 1500 ஆண்டுகளா...?

*

டிசம்பர் 1945-ம் ஆண்டில் எகிப்தின் ஜபால் அல்-டாரிஃப் (Jabal al-Tarf) என்ற மலைப்பகுக்திகளின் அருகில் உள்ள நஜ் ஹமாதி (Naj Hammadi) என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள இடத்தில் நிலத்தைத் தோண்டும்போது முகமது அலி என்பவருக்குப் பழைய எழுத்துப் பிரதிகள் சில கிடைத்தன. 13 ஓலைப் பிரதிகள் தோல்களால் ஒருங்கே கட்டப்பட்டு, ஒரு மண் பாத்திரத்திற்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார்

  ............... இது அடுத்த என் பதிவிற்கு ஒரு trailer.

திடீரென்று கண்டெடுக்கப்பட்ட அந்த கையெழுத்து ஓலைப் பிரதிகளில் கிடைத்த தகவல்கள் கிறித்துவத்தின் வரலாற்றைப் புரட்டிப் போட்டு விட்டன. அதைப் பற்றிய விளக்கத்தை ELAIN PAGELS என்பவர் எழுதிய THE GNOSTIC GOSPELS என்ற நூலின் சுருக்கத்தை அடுத்த பதிவிலிருந்து ஆரம்பிப்பதாக நினைத்துள்ளேன்.

ஆனால் அதற்கு முன் ... 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த ஹமாதி தொகுப்புகளில் மனித இனத்தின் ஆரம்பம் ஆதியாகமத்தில் சொன்னதுபோலின்றி வேறு வகையாகச் சொல்லப்பட்டுள்ளது. Testimony of Truth-ல் ஈடன் தோட்டம் பாம்பின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி கூறும் ஆசிரியர் அந்நூலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதையைக் கொடுக்கிறார்.For I am the first and last
I was the honored one and the scorned one
I am the whore and the holy one
I am the wife and the virgin ...
I am the barren one,
      and many ate her sons ..
.
I am the silence that is incomprehensible
i am the utterance of my name.இந்தக் கவிதையை வாசித்ததும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் ..’ படத்தில் வரும் ஒரு பாடலின் சில வரிகள் நினைவுக்கு வந்தன. வைரமுத்துவின் வரிகள். பாடலாக வரும்போது என்னை வசீகரித்த அந்த வரிகள் இந்தக் கவிதையின் வரிகளோடு மிகவும் ஒட்டிப் போயிருக்கின்றன. எப்படி இந்த ஒற்றுமை என்றே தெரியவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்தக் கவிதை வரிகளிலும், வைரமுத்துவின் வரிகளிலும் பொருந்தாத இரு எதிர்மறை விசயங்கள் இணைந்து வருவதைப் பார்த்தேன். உங்கள் பார்வைக்குக்கும் வைக்கிறேன்.
ஒரு தெய்வம் தந்த பூவே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!


எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!


 இந்தத் தொடர்பும் ஒற்றுமையும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. எப்படி இது நடந்திருக்கும்? காலத்தையும் தாண்டி நிற்கும் கவிஞர்களின் பார்வையின் ஒற்றுமை இதுதானா? அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு கவிதையின் கருத்தை ஒட்டி, இன்று ஒரு கவிஞர் அதே கற்பனையை தன் வரிகளில் கொண்டு வரும் ஆச்சரியம். நிச்சயமாக வைரமுத்துவிற்கு இந்த ஆங்கில வரிகள் புதிதாகவே இருக்கும் ஏனெனில் இது மதம் சம்பந்த்தப்பட்ட ஒரு கவிதை. வேறு எவ்வித பிரபல்யமும் இல்லாத ஒரு கவிதை. ஆனால் அதே கவிதை மறு பிறப்பாக வைரமுத்துவின் வழியாக நமக்குக் கிடைத்துள்ளது. ஆச்சரியம் ...!.
*


Monday, April 09, 2012

561. A SUFI MESSAGE ...

*

http://www.thehindu.com/opinion/op-ed/article3294318.ece

இன்று - 9.4.12 - இந்துவில் வந்துள்ள செய்தி ஒன்றின் சில பகுதிகளைக் கீழே தந்துள்ளேன் - எனது சில கருத்துக்களோடு.

இச்செய்தியில் இஸ்லாமியத்தில் இருக்கும் இரு வேறு கோட்பாடுகளைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று - சூபியிசம்; இரண்டாவது - வஹாபியிசம்.

சூபியிசம்      - மனித நேயத்தின் பாற்பட்ட ஒரு தத்துவம்.
வஹாபியிசம் - புத்தகத்தின் பாற்பட்ட ஒரு தீவிரம்.

Sufism  - A compassionate and all-embracing passion.
Wahabism- A rigid and all-hating practice.

Sufism  - More importance to other humans.
Wahabism- Least importance to this life.

Sufism  - Love thy neighbour.
Wahabism- 'Jihad' a war cry.

சூபியசத்தால் சகோதரர்களாக யாரையும் பார்க்க முடிகிறது
வஹாபியிசத்தில் மூமினும் காபிரும் விலகல் கோட்டுக்கு இரு புறமும்.
 
Lofty symbolism: 
Pakistan President Asif Ali Zardari 
at the shrine of Khwaja Moinuddin Chishti in Ajmer 
on Sunday. A Sufi message from a Pakistani President
*The appearance of such a large Pakistani delegation at the Sufi Saint Khwaja Moinuddin Chisti's shrine in Ajmer will strike a chord with an overwhelming majority of Pakistanis who are more comfortable with the soft, humane message of the Sufis compared with the vengefulness that Hafiz Saeed represents. (சூபியிசத்தையும் வஹாபியிசத்தையும் கட்டுரை ஆசிரியரே அழகாக கூறிவிட்டார்.)

*Contrary to popular perception, the rapid spread of Islam across the length and breadth of India was primarily the handiwork of Sufis. The message the Sufis sought to communicate offended nobody: oneness of Being (Wahdat ul Wajood), equality of men, Love as a universal value. (முழு மனித நேயம்.)


*Egalitarian Rungs of the stratified Hindu order found the egalitarianism of Sufi Khanqahs, ashrams, hospices, compelling. The first-time visitors to the hospice were overwhelmed by the hospitality. The cuisine was custom made for universal consumption. It was not just vegetarian but care was taken to avoid garlic and onion too which some Hindu sects abstain from. (இதற்குப் பெயர் தான் மனித நேயம்.)


*If there was one dogma the Sufis lived by, it was their total aversion to Kings and Sultans or those who sat at the top of the feudal heap. (ஐம்பது வயதுக்கு மேல் செத்துப் போன ஒரு செளதி இளவரசனுக்காக இங்கே இரங்கல், அதுவும் ஒரு அகால மரணம் என்ற செய்தியோடு இரங்கல் செலுத்த மாட்டார்கள்!!)


*It was part of their spiritual training to harmonise totally with the cultural environment of whichever place they had made their home. They accepted and adopted the local culture. (பொங்கல் விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க ‘இவர்கள்’ கொடுக்கும் தத்துவங்கள் நினைவுக்கு வருகிறது! பாவம்.)


*Their contribution therefore to folk, popular and classical art forms was immense. For instance, Hazrat Amir Khusro, principal disciple of Hazrat Nizamuddin Aulia, invented the sitar, tabla, ragas. And, by experimental fusion of Hindvi and Persian, he virtually laid the foundation of what later came to be recognised as Urdu. For popular participation, there were always the Qawwalis, with trance inducing rhythms deftly employed between spiritual and romantic lyrics. (இசை, பாட்டு எல்லாம் உண்டு. அதையெல்லாம் ‘சீச்சீ..’ என்று சொல்லும் “மேதாவித்தனம்” இங்கு இல்லை போலும்!)


*It was in pursuance of the trend set by the Sufis that every great Urdu poet proceeded to strengthen sub-continental syncretism. Hasrat Mohani always followed up his “haj” by a visit to Barsana for a “darshan” of Radha, because it was a belief he fancied that God had sent prophets to every country and the one he sent to India was Lord Krishna! (’பக்தி’ கடவுளையும் மனிதனையும் இணைக்கும்; இசை அதற்குப் பாலமிடும்.)


*Quite naturally, the rapid expansion of this spectacular, colourful Islam, far removed from the arid rigidity of Najd in Saudi Arabia, invited a puritanical reaction. (ஹா! puritanical !!! அப்டி ஒண்ணு இருக்கோ!ஆனால் நம் ‘சகோ’க்கள் சவுதிக்கு கை கால்களில் சங்கிலி போடாத அடிமைகளாகத்தானே இருக்கிறார்கள்.)


By and large, Islam in Afghanistan, Kashmir, North West Frontier Province, other parts of Pakistan and India has, for years, been cloaked in colours of Sufism. (இதுவரை இருந்து வந்துள்ள சகோதரத்தன்மைக்கு இதுதான் காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால வஹாபியசம் மனிதர்களை மூமீன் - காபிர் என இரண்டாகப் பிரித்தே வைத்திருக்கும். வேற்றுமைகளை வளர்க்கும்; பகைமையை மூட்டும்.)


*But it was the manufacture of Wahabism in Afghanistan (அதுதான் வஹாபியிசம் இந்த ‘அழகில்’ இருக்கிறதா?!அப்போ, வஹாபீயினர் தாலிபான்களின் ‘குலக் கொழுழ்ந்துகள்’ என்றல்லவா பொருள். ஒசாமாவின் ‘தவப் புதல்வர்கள்’ அல்லவா இவர்கள்?) to fight the Soviet Union which was at the bottom of recent Islamic upheavals, of which 9/11 and its aftermath are landmarks of Islamic extremism.(வஹாபிசத்தின் ‘திருவிளையாடல்’.)


* But a backlash from the Afghan war reached its crescendo with the fall of the Lal Masjid in Islamabad in 2007. Extremism has remained on a plateau.


*Hafiz Saeed is currently the most high profile representative of this extremism which is linked to Wahabism first manufactured in Afghanistan in 1980. (பொறந்த இடமும் சரியில்லை; வளர்ந்து, படர்ந்து வரும் முறையும் சரியில்லை ... )


*In India, Deoband is a harmless reform school. But in Pakistan, Deobandi/Salafi alliance is embarked on a vicious Jehad for the soul of the nation.(நம் அச்சத்திற்கே அதுதானே காரணம்.)

-----------------------------------------------------

சிறு வயதில் இஸ்லாமியத் தெருவில், இஸ்லாமிய நண்பர்களோடு நான் இருந்த போது இல்லாத வித்தியாசம் கடந்து சில ஆண்டுகளில் அதிகமாகத் தெரிகிறது.  வேணுமோ வேண்டாமோ தங்களைத் தனியாகப் பிரித்துக் கொண்டு, முன்பில்லாத அளவிற்கு ஆண், பெண்கள் தங்கள் தனித்த அடையாளங்களோடு இருப்பது இந்த வஹாபிய வளர்ச்சியின் காரணம் என்றே நினைக்கிறேன். பதிவுலகமும் 35-40 ஓட்டுகளுடன் இப்போது மிகக் காரசாரமாகவே இருக்கிறது.  அந்த ஓட்டுக்கள் அவர்கள் எவ்வளவு “கட்டுக் கோப்புடன்” இருக்கிறார்கள் என்ற உண்மை உடைத்துக் காண்பிக்கிறது

இந்து மதத்தைப் பற்றியோ, வேறு எதைப் பற்றியோ யாராவது எழுதினால் ஒரு பெரிய கூட்டமே அதற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வருவது என்பதை இதுவரை பதிவுலகத்தில் பார்த்ததில்லை.  ஆனால் இந்த 35040 பேருக்கு  அவர்கள் கொள்கைகளுக்கு மாறான எந்த ஒரு விஷயமும் அவர்களின் ஒட்டு மொத்த சத்தத்திற்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கிறது. தமிழ் மணத்திலேயே அதைச் சந்திக்கவில்லையா?  தேவையில்லாத arm twisting ... சில பயமுறுத்தல்கள் .. தமிழ்மணத்திற்குத் தடை ...

தேவையில்லாத அச்சங்களை மட்டும் தான் அவர்களால் உருவாக்க முடியும். நிச்சயமாக இதுபோன்ற சத்தங்களால் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் யாருக்கும் இதனால் ஈர்ப்பு ஏற்படாது; விலகிச் செல்லவே பலருக்கும் விருப்பம். தோழமையோடு வாழ மதங்கள் குறுக்கீடு என்பதைப் பார்த்தாகி விட்டது. 

மக்கள் மனதில் “மதங்கள்” குறைய வேண்டும். வாழ அதுவே வழி.
*