Monday, August 31, 2015

858. புத்தகத் திருவிழா




மதுரை புத்தகக் கண்காட்சி

28-08-2015 முதல் 07-09-2015 தேதி வரை 



தமுக்கம் மைதானத்தில்


எதிர் வெளியீடு அரங்கு எண் : 126, 127

நண்பர்களையும் வாசகர்களையும் அன்போடு 
அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு : 99425 11302





*






*

Thursday, August 27, 2015

857. தெரு விளக்கில் படிக்கிறவங்க எல்லாம் பெரிய ஆளுகளா என்ன ,,,,? (தருமி பக்கம் 32)








*





 நமது 'ராஜ மாளிகை'யிலிருந்து சிறிது தொலைவில் புனித மரியன்னை கோவிலும், அதே காம்பவுண்டுக்குள் புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் இருந்தன. எனது வாழ்வில் இந்த காம்பவுண்டு மிக முக்கிய இடம் பிடித்து விட்டது. ஆரம்பப்பள்ளி நாட்களில் தினமும் காலையில் 6 மணிக்கெல்லாம் இரண்டாம் பூசைக்கு அனுப்பி விடுவார்கள். பூசை முடித்து விட்டு. கோவிலுக்குப் பின்னாலிருக்கும் fathers’  bungalow வில் இருந்த பெரிய மாட்டுப் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போக வேண்டும். அதென்னமோ…. சின்ன வயதிலேயே நாலரை, ஐந்து மணி என்று வீட்டில் எழுப்பி விட்டு விடுவார்கள். இது போன்ற பழக்கம் அப்படியே என்னை வாழ் நாளெல்லாம் தொற்றிக் கொண்ட்து என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் என் வழி … தனி வழி …! இன்று வரை காலையில் எழுவது என்பது ஒரு பெரிய கஷ்டமானதாகவே இருக்கிறது. இப்போதும் காலையில் நடைப் பயிற்சி என்றால் நன்றாக தூங்கி விடுகிறேன். அதற்குப் பதிலாக shuttle cock என்றால் ஒரு வழியாக அலாரம் வைத்து எப்படியோ எழுந்து விடுகிறேன். அதற்காகவே நடைக்குப் பதிலாக விளையாட்டு என்று இப்போதும் வைத்துக் கொண்டு விட்டேன்.

காலையில் எழுந்து கோவிலுக்குப் போகும் பழக்கம் தொடர்ந்து வந்தது. பத்தாம் வகுப்பு வரை வந்த போது வீட்டிலும் ‘ஜனப் பெருக்கம்’ அதிகமாக ஆகி விட்டது. அதனால் இரவு மொட்டை மெத்தையில் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. பக்கத்து வீட்டில் நடந்த ஒரு தற்கொலை, அதனால் எழுந்த பேய் பயம் எல்லாம் இதற்குள் பழகிப் போய் விட்டது. அதோடு அன்றிலிருந்து இன்று வரை தொடரும் இன்னொரு பழக்கம் – படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்தால் அப்படி ஒரு தூக்கம் கண்களைக் கட்டிக் கொண்டு வரும். அட … அந்தத் தூக்கத்திற்கு இணை ஏதுமில்லை. இன்னும் நினைவில் இருக்கிறது. உட்கார்ந்து படித்தால் தூக்கம் வந்து விடுகிறதே என்று நடந்து கொண்டு, அதோடு மட்டுமின்றி மெல்லியதாக முணங்கிக் கொண்டே படிக்க ஆரம்பித்த சமயத்தில் கூட, நடந்து கொண்டே படிக்கும் போது கையிலிருந்த புத்தகம் தூக்கத்தில் கைநழுவிக் கீழே விழுந்தது. என்னமோ அப்படி ஒரு தூக்கம். அதுவும் வயதான பிறகு தூக்கம் குறைந்து விடும் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனாலும் எனக்கு இன்று வரையிலும் தூக்கம் என்னைத் துரத்தி துரத்தி வந்து தூங்க வைத்து விடும். பலரும் அதை ஒரு பெரிய blessing என்கிறார்கள். இருக்கட்டும் …. (இப்போது கூட - காலை 10.45 - காலையிலேயே எழுந்து விளையாடி விட்டு ... இப்போதும்  லேசாக தூக்கம் வருவது போல் தான் இருக்கிறது!)



மொட்டை மெத்தையில் படிக்க ஆரம்பித்த பிறகு யாரோ ஒரு பெரிய மனிதர் தெரு விளக்கில் படித்து பெரிய நீதிபதி ஆனார் என்று எங்கள் பள்ளிப் பாடத்தில் வரும். நானும் பக்கத்து வீட்டில் இருந்த நண்பர்களுக்கும் அந்த தகவல் தெரிய நாங்களும் தெருவிளக்கில் படித்து பெரிய ஆளாக வரணும் என்ற நினைப்பில் வீதியில் படிக்க ஆரம்பித்தோம்! என்னைப் பொறுத்தவரை மெத்தையில் தனியாகப் படித்தால் படிப்பு படிக்க வருவதே இல்லை .. தூக்கம் மட்டும் நன்றாக வந்தது. தெருவிளக்கில் படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் போய் விட்டது. ஆனால் நண்பர்கள் குழாம் பெரியதாகி விட்டது. அரட்டை அடிக்கவும், டீ அல்லது எங்களது பேவரைட்டான சுடச் சுட பருத்திப் பால் குடிக்கவும் தான் நேரம் இருந்தது. அதோடு அந்த வயதில் பேசுவதற்கு ‘விஷயங்களா’ இல்லாமல் இருந்திருக்கும்?

உட்கார்ந்து படிக்க தெரு விளக்குகளுக்கும் போட்டி இருக்கும். எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தாண்டி நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம். அதனால் அந்த இடத்தில் மட்டும் மெர்குரி லைட் இருக்கும். அதிக பிரகாசமாக இருக்கும். இந்த லைட்டுக்கு அடியில், சந்தின் முதல் வீட்டில் தபால் நிலையம் இருந்தது. ஐந்தாறு படிகள் இருக்கும் படிக்கட்டு. படியின் முடிவில் உட்கார அகலமாக திண்ணை மாதிரி இருக்கும். இதற்கு மேல் ஒரு தகரக் கூரை இருக்கும். குளிர் காலத்தில் படிக்க நன்றாக இருக்கும். இந்த இடத்திற்குப் போட்டி நடக்கும். பாவம் … யாரோ பெரிய மனிதர் ஒருவர் இதே மாதிரி விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பெரியவரானாராம். நாங்கள் எல்லாம் அப்படிப்பட்ட ’பெரிய மனிதர் category’ல்’ வரவில்லை. என்னோடு அப்படி தெருவில் இருந்த படித்தவர்களில் பலரும் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொண்டார்கள். தப்பித்துக் கொண்டது நானும்,ஜாபர் என்ற நண்பரும். அவரும் பாவம் … என்னைப் போலவே அவரும் (வக்ஃபோர்ட் கல்லூரியில்) ஒரு பேராசிரியரானார். காலம் கடந்த காலத்தில் நாங்கள் இருவரும் சந்திக்கும் போது பழைய நினைவுகளை rewind செய்வதுண்டு. வீட்டில் உட்கார்ந்து ஒழுங்காகப் படித்திருந்து, வாழ்க்கையில் இன்னும் நன்றாகத் தேர்ந்திருக்கலாம் என்றும் பேசிக் கொண்டதுண்டு. தெரு விளக்குகளுக்குக் கீழே உட்கார்ந்து ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும் … அரட்டை அடித்தால் இப்படி என்னை மாதிரி தான் ஆக வேண்டும்!

இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் தெருவுக்கு வரமுடியும். ஆனாலும் நான் தான் படிக்க வேண்டும் என்று கொள்ளை ஆர்வம் கொண்டவனாச்சே … அதுக்கு முன்பும் படிக்க வேண்டுமே…! பள்ளியில் எங்களைப் போன்ற வசதி குறைந்த கிறித்துவ மாணவர்கள் படிப்பதற்காக அறை ஒன்றைக் கொடுத்தார்கள். இப்போது அந்தப் பழைய கட்டிடம் இல்லை. அப்போது அது மூன்று வகுப்புகள் கொண்ட பழைய கட்டிடம். மேலே ஓட்டுக் கூரை. பின்பக்கம் சுவர் கிடையாது. மூங்கில் தட்டிகள் வைத்திருக்கும். ஒரே ஒரு முட்டை பல்ப் இருக்கும். ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை இந்த வசதி உண்டு. மேற்பார்வைக்கு ஆள் யாரும் கிடையாது. அது பத்தாதா? அரட்டை … சண்டை … என்று ஒரு பக்கம் போராட்டம் நடக்கும். அதோடு இன்னொரு பெரும் போராட்டம் ஒன்றும் நடக்கும் – எங்களுக்கும் கொசுவிற்கும் நடுவில் நடக்கும் போராட்டம். பள்ளியில் நிறைய மரம் .. கொசுக்களுக்குப் பஞ்சமேயில்லை. மேய்ந்து விடும். இதனால் ஆறு மணிக்கு வந்ததும் ஒரு படை போய் காய்ந்த இலை தளைகளை அள்ளிக் கொண்டு வருவோம். மூங்கில் தட்டி பக்கத்தில் போட்டு, அதைப் பற்ற வைத்து கொசுவை விரட்டும் படலம் ஆரம்பித்து விடும். புறப்படுவதற்கு முன் கொஞ்ச நேரம் எரித்தவைகளை அப்புறப்படுத்தும் அடுத்த படலம். இதில் என்ன படித்தோமோ ……

 எப்படியோ பள்ளிப் படிப்பை முடித்தாகி விட்டது ………

 இளங்கலைக்கு வந்ததும் மீண்டும் கோவில் காம்பவுண்டு வாழ்க்கையின் இன்னொரு பகுதியாக மாறியது. வழக்கம் போல் காலையில் பூசைக்காக வீட்டில் எழுப்பி விட்டு விடுவார்கள். எழுந்திருந்து கோவிலுக்கு வந்து விட்டு ஒரு மணி நேரம் உயர் பள்ளியின் உள்ளே விசாலமாக உள்ள வெராண்டா எதிலாவது உட்கார்ந்து படிப்பதுண்டு.  கென்னடியும், நேருவும் இறந்த செய்திகள் இது போல்  ஏதோ ஒரு காலைப் பொழுதில் ‘படித்துக்’ கொண்டிருந்த போது தான் கிடைத்தது என்பது நன்கு நினைவில் இருக்கிறது. 
அதுவும் கென்னடி சுடப்பட்டு இறந்தார் என்பது ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தியாக வந்தது. மாலையிலும் மீண்டும் பள்ளிக்கு வந்து விடுவேன். கோவிலைச் சுற்றி ஏதாவது ஒரு விளக்கடி என்றானது.

ஒரு நாள் அது போல் புத்தகத்தைப் ‘புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு குரு / பாதிரியார் – அவர் எங்களது parish priest – என்னைப் பார்த்தார். பாவம் … கஷ்டப்பட்டு படிக்கிற நல்ல பிள்ளை என்று என்னைத் தப்பாக நினைத்துக் கொண்டு என்னிடம் பேசினார். அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள் என்பதும் எனக்குத் தெரியும். ஏன் வீட்டிலிருந்து படிக்கவில்லை என்றார். வீட்டில் வசதியில்லையென்று சொன்னேன். சரி .. நாளை மாலை என்னை வந்து பார் என்றார். சரி … நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு அறை எல்லோருக்குமாகக் கொடுத்தார்களே அது மாதிரி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாள் சென்றேன்.

 What a shock ….! 






 *

Tuesday, August 25, 2015

856. JIHADI COLLECTION ... 18 குரான் வல்லுனர்கள் கொஞ்சம் உதவுங்களேன்.





25.8.15




*










*

“The art and architecture of Palmyra, standing at the crossroads of several civilisations, is a symbol of the complexity and wealth of the Syrian identity and history,” Ms. Bokova said.

*

அவர்கள் தான் என்ன செய்வார்கள்?  அவங்க சாமி இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கே ....

பழைய ஏற்பாடு -- எண்ணாகமம் -- 34 : 50
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்; யோர்தானைக் கடந்து நீங்கள் கானான் நாட்டுக்குள் செல்லுகையில், உங்கள் முன்னிலிருந்து நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்தி விடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள் அனைத்தையும் அழித்து விடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள். நீங்கள் நாட்டை உடைமையாக்கி அதில் குடியிருப்பீர்கள்; நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி அதை உங்களுக்குத் தந்துள்ளேன்.

பழைய ஏற்பாடு மூன்று ஆப்ரஹாமிய மதங்களுக்குப் பொது தான். பழைய ஏற்பாட்டில் இருந்தால் அது நிச்சயமாக  குரானிலும் இருக்கும். அவை எனக்குத் தெரியாது. தெரிந்த மக்கள் அதைச் சொன்னால் அதையும் இதில் சேர்த்து விடலாம். ஓரே இறைவனின் உத்தரவை முழுவதுமாக இங்கே பதிந்து விடலாமே ... உதவுங்களேன் .......



*****

ஆனை மலைக்குப் பட்டை நாமம்



ஆப்ரஹாமிய மதங்களில் 'ஆட்டம்' அதிகம். மற்றவர்களும் கொஞ்சம் ஆடணும்ல ... அதான் நம்ம மக்கள் மதுரை ஆனை மலைக்கு பட்டை நாமம் சாத்தியிருக்கிறார்கள்.

 (பிரபு ராஜதுரையும் அவரது நண்பர்களும் கையில் எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.)

‘Thiruman’ on Yanaimalai rakes up controversy


https://www.facebook.com/profile.php?id=100003324906273

*

இப்படி தங்கள் மதத்தைப் பரப்ப மக்களுக்கு இருக்கும் கொலைவெறியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.

*


20.8.15


IS beheads 82-year-old archaeologist of Palmyra



he Islamic State group has beheaded the 82-year-old retired chief archaeologist of Palmyra, who refused to leave the ancient city when the jihadists captured it, Syria’s antiquities chief said.


*

4.8.15




Foreign women are joining the “migration” to the Islamic state in the belief they will become jihadi wives and mothers of the next generation; some of them will be passed from “husband’ to “husband” from one week to the next.


Foreign fighters who manage to get out say that the “Caliphate” is more brutal than they expected, and that they narrowly avoided death in trying to escape. Inside Iraq and Syria, the organisation exploits the disenfranchisement and fear of Sunni Arabs. 

IS is exploiting the Internet in a way no previous jihadist group has before. Social media plays an important role in the recruitment of foreign fighters, whereas the disenfranchisement of Sunni Arabs is more important locally.

the group is well organised to withstand decapitation strikes, suggesting a disciplined leadership cadre. 

they saw themselves as glamorous; that for some, jihad is an addictive adventure. 





 *

Sunday, August 23, 2015

855. அன்பு மணியை முதல்வராக்கி ....





*





                  அன்பு மணியை முதல்வராக்கி ....

தலித்துகள் இல்லாத தமிழகம்

                                                               ஒன்றை உருவாக்குவோமா ...?









A promise ends in a riot


JIHADI COLLECTION ... என்ற தலைப்பில் மதத்தீவிரவாதத்திற்கு எதிராக சில பதிவுகளைத் தொடர்ந்து போட்டு வருகிறேன். இதைவிட மோசமான சாதித் தீவிரவாதத்திற்கு எதிராகவும் கட்டாயம் இது போன்ற பதிவுகள் இட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

"சாதித் தீவிரவாதத் தொகுப்பு" என்ற தலைப்பின் கீழ் சில பதிவுகளையும் தொடர்ந்து போட வேண்டிய கட்டாயம் நேர்ந்தத்திற்காக வருந்துகிறேன்.


இன்று இந்துவில் வந்த ஒரு செய்தியிலிருந்து சில "மணித் துளிகள்" .....

சமாதானப் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த ஆண்டு காவல்துறையின் பாதுகாப்புடன் விழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பத்து மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர் தலித்துகளை விழா நடத்த விட மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர்.

வெண்ணிலா என்ற தலித் பெண்மணி எங்கள் உடைமைகளை அழித்தொழிப்பதே அவர்களது நோக்கம். காவல் துறையும்,சரியான நேரத்தில் வந்த மழையும் தான் எங்களை இந்த அளவாவது காப்பாற்றியது.

கலகம் நடந்த சனிக்கிழமை மாலை ராமதாஸின் பா.ம.க. கூட்டம் ஒன்று  கள்ளக்குறிச்சியில்  நடந்து முடிந்தது. அதிலிருந்து  200க்கும் அதிகமான (சிலர் 500 என்கிறார்கள்) முரட்டுக் கும்பல் ஒன்று எங்களைத் தாக்கியது.





பெண்கள் தங்கள் சேலைகளில் கற்களை கட்டி எடுத்துக் கொண்டு, வீட்டு மாடிகளிலிருந்து எங்களை நோக்கி கற்களை எரிந்தார்கள். அதே நேரத்தில் ஆண்கள் எங்களைத் தாக்கினார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 

காவல் துறை அதிகாரி தாங்கள் பெரும் கூட்டத்தால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். 

ஏழு குடிசைகள் முழுவதுமாக எரிக்கப்பட்டன. கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை இழந்தார்கள்.

கோவில் விழா மட்டுமல்ல இதற்குரிய காரணம்; தலித்துகள் மீதான வன்னியர்களின் சாதிய வெறியும், சாதிய அடக்கு முறையும் தான் காரணம். 

எரிக்கப்பட்ட வீடுகளில் முதன் முதல் எரிக்கப்பட்ட வீடு வேறு கிராமத்தின் வன்னியர் பெண்ணை மணந்த ஒரு தலித்தின் வீடு.

சோலையம்மா என்ற தலித் பெண்மணி, "இங்கு வாழ்வதுஎன்பது மிகவும் சிரமம்" என்றார். அதோடு. எப்படி சாமியின் தேரைக்கூட எரிக்க அவர்களால் முடிந்தது என்று வேதனையும், ஆச்சரியமும் கலந்து கேட்கிறார்.

வன்னியர் குல "வீரப் பெண்மணிகள்" பலர் தலித்துகள் தங்கள் வீதி வழியே தேரை இழுக்க அனுமதிக்கவே மாட்டோம் என்றனர்.

தையல் நாயகி என்ற இன்னொரு வன்னிய வீரப் பெண்மணி, "எவ்வளவு தைரியம் இந்த தலித்துகளுக்கு! எங்கள் உடலில் ஓடும் ரத்தம் உங்கள் ரத்தத்திலிருந்து வித்தியாசமாகவா இருக்கிறது என்று தைரியமாகக் கேட்கிறார்கள்" என்கிறார். 

*

தங்களில் பலரையும் காவல் துறை கைது செய்து விட்டதாக வன்னியர் குறை சொல்லுகிறார்கள். 

*

இத்தனை சாதி வெறியர்களைப் பார்க்கும் போது நிச்சயமாக இதே போன்ற சோகமான நிகழ்வுகள் இன்னொரு நாளில் ... இன்னொரு இடத்தில் ... கட்டாயம் நடக்குமென்று தான் தோன்றுகிறது. அழியாமல் ஆழமாக சாதிவெறி மனதில் ஊறிக் கிடக்கிறது.






854. ஆங்கிலேயனின் தோலை உரித்த தரூர்







*





What did Colonialism do to India?







*



SHASHI THAROOR  puts the blame of India’s economic decline on the British and also recounts Jalianwala Bag, Bengal famine as the major highlight of British rule which reflected the attitude of British towards this colony of theirs’.


 Dr. MANMOHAN SINGH (2005), extols the virtue of British rule and gives them the credit for rule of law, constitutional government, and free press as the contributions which India benefitted from.



*

from the blog of  ....  ram.puniyani@gmail.com



 *



 

Wednesday, August 05, 2015

853. ஈரோட்டில் புத்தக வெளியீடு



எதிர்வெளியீட்டின் 
புதிய 7 நூல்கள் வெளியீடும் 
அறிமுக நிகழ்ச்சியும் 
கடந்த 03-08-2015 அன்று மதியம் நடைபெற்றது.














WELCOME BY KA.PA.


STALIN GUNASEKARAN


ANUSH   -  ETHIR VELIYEEDU








MY  FIRST BORN  CHILD ...........













POONGKUNDRAN


ARSHIYA
























MUTHUKRISHNAN




















"GOD'S GIFT"  DURING THE MEETING