Friday, December 08, 2023
1165. இழுபடும் ஜீன்ஸ் ..........
Thursday, December 07, 2023
1164. பழைய நினைப்புடா, பேராண்டி
கார்த்திக் அன்பாக நம்மளப் பத்தி நாலு நல்ல வரி எழுதிட்டானா ... அது ஒரு பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்திருச்சி, பேராண்டி.
Sunday, December 03, 2023
Saturday, November 25, 2023
Tuesday, November 14, 2023
Saturday, November 11, 2023
Friday, November 10, 2023
Sunday, October 29, 2023
Wednesday, October 25, 2023
1157. கொமாரு .. ஒரு சொந்தக் கதை
மொழியாக்கம் செய்து வரும் நூலில் –
பாலஸ்தீன் – இஸ்ரேல் போராட்டம் – ஒரு சிறு பத்தி ஒன்று வந்தது. அது என் பழைய
நினைவொன்றைக் கிளறிவிட்டது. அந்தப் பத்தி :
1990 ஆகஸ்ட் இரண்டாம் தேதியில் ஒரு லட்சம்
ஈராக் வீரர்கள் இரவோடு இரவாக குவைத்தின் எல்லைகளைத் தாண்டி அந்நாட்டிற்குள்
வலிந்து நுழைந்தனர். குவைத் நகரம் ஈராக்கினரால் சூழப்பட்டு முற்றுகையிடப்பட்டது..
இந்தப் போரின் நடுவே 39 ஸ்கர்ட் ஏவுகணைகளை(Scud missiles – ground to ground missiles) இஸ்ரேல் நகரான டெல் அவிவ் மீது ஏவியது. இதனால்
பெரும் பொருட்சேதம் நடந்தாலும்,
உயிர்ச் சேதங்கள் அதிகமில்லை. இரண்டே இரண்டு பேர் மட்டும் மரணம் அடைந்தனர்.
அந்த சமயத்தில் எங்கள் கிறித்துவக்
கோயிலில் திருவிழாக் காலங்களில் கோவிலுக்கு வெளியே பெரிய விளையாட்டு மைதானத்தில்
பூசை நடக்கும். அது ஒரு மாலைப் பொழுது. பூசையின் நடுவே சாமியாரின் பிரசங்கம்.
நானும் வேறொரு கல்லூரிப் பேராசிரியரும் கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டு அதைக்
கேட்டுக் கொண்டிருந்தோம். சாமியார் மிகவும் உருக்கமாக யேசு எப்படி இஸ்ரேலரைக்
கவனமாகப் பார்த்துக் காப்பாற்றி விட்டார் என்று அதிசயித்துப் பேசினார். அவர் தன் மக்களை
அத்தனைக் கிருபையோடு காப்பாற்றி விட்டார் என்று மனமுருகப் பேசினார்.
பக்கத்திலிருந்த பேராசிரியருக்கும் அப்படி ஓர் ஆச்சரியம். என்னைப் பார்த்து மகிழ்ச்சியோடு யேசுவின் கிருபையை என்னோடு பகிர்ந்து கொண்டார்.
“எப்படி
பாத்தீங்களா? எந்த அளவு இஸ்ரேல் மீதான கருணை அவருக்கு. காப்பாத்திட்டார்ல...”
ஒரு
நிமிடம் யோசித்தேன். ஏதோ ஒரு பொறி தட்டியது.
“ஆமாங்க.
ஆனால் 50 வருஷத்துக்கு முந்தி தான் நல்லா தூங்கிட்டார் போல. லட்சக் கணக்கில ஹிட்லர்
இஸ்ரேலர்களைக் கொல்லும் போது அசந்து தூங்கிட்டாரே!”
பேராசிரியர்
முறைத்தார்.
(அப்போது
நானும் ஓரளவு ஒரு நம்பிக்கையாளன் தான் ...இப்போது மாதிரி இல்லை.)
Sunday, October 22, 2023
Saturday, October 21, 2023
Friday, October 20, 2023
1154. சூத்திரன்
0 comments
Wednesday, October 18, 2023
Sunday, October 08, 2023
1152. மூன்று மொழியாக்க நூல்கள் பற்றிய என் தனிப்பட்ட உணர்வுகள்
ரொமிளா தாப்பர் இந்தியாவின் பண்டைய
கால வரலாற்றைப் பற்றி எழுதிய நூலை மொழியாக்கம் செய்தேன். அதில் எவ்வாறு
வெளியிலிருந்து வந்தவர்கள் ஆதிக்கசாதியினராக மாறினார்கள் என்ற வரலாற்றுப்
பகுதியைப் படிக்கும் போது ஏற்பட்டு மனதின் உறுத்தல் ஒரு கேள்வியை எழுப்பியது.
அடுத்து மொழியாக்கம் செய்த நூல் சூத்திரன்.
இதை வாசிக்கும் போதே என் மீதே எனக்குக் கோபம் வருமளவிற்கு அதிலுள்ள செய்திகள் இருந்தன.
ஏன் சூத்திரர்களுக்கு சூடு, சுரணையில்லாமல் இருக்கிறோமே
என்றொரு நச்சரிப்பு மனதினுள் எழுந்தது.
அடுத்து செய்த மொழியாக்க நூல் பாலஸ்தீன்
- இஸ்ரேல் போராட்டம். ஏற்கெனவே ஓரளவு தெரிந்த வரலாற்றை முழுவதுமாகத் தெரியும் போது
உலகத்தில் மிகவும் கேவலமாகவும், கொடுமையாகவும்
காலனியாட்சி செய்த, அதிலும் முக்கியமாக, இங்கிலாந்து நாடு வரலாற்றில் செய்த கொடுமைகளின் சாட்சியாகவே உள்ளது இன்றைய
போர்.
இந்த மூன்று நூல்களையும் வாசிக்கும்
போது,
மொழிபெயர்ப்பாளன் என்பதையும் தாண்டி அதில் சொல்லப்பட்டவைகளோடு மனதளவில்
ஐக்கியமாவதும். அதற்காகக் கழிவிரக்கம் கொள்வதும் , வேதனைப் படுவதும்
நடந்தது.
ஒரு சின்ன கேள்வி: மொழிபெயர்ப்பாளன் எழுதும் நூலோடு இப்படி ஒன்றிப்
போவது சரியா?
ஆனால் நிச்சயமாக மொழிபெயர்ப்பில்,
சொல்லப்பட்டவைகள் என்னோடு நெருங்கிய ஒன்றாக இருந்தாலும், என் கருத்துகளுக்கோ என் வருந்தங்களுக்கோ அங்கே இடம் கொடுக்கவில்லை.
Tuesday, September 26, 2023
1151. சநாதனம்னா என்னாங்க ...5
சநாதனம்னா என்னாங்க ...5
1946ல் அம்பேத்கர் “யாரிந்த
சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?;
எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்?
என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும்
இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட
நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து சில பகுதிகளை
அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
பிராமணியத்தின் ஆன்மிக,
அறிவியல் கொள்கைகள் எல்லாமே ஒரு முனைப்பாக, சூத்திரர்களுக்கு
உடலுழைப்பைக் கட்டாயமாக்கி, வர்ண தர்மத்தை உயர்த்திப்
பிடிப்பதாகவே உள்ளன. இந்தத் தத்துவம் சமயத்தின் புராணக் கதைகள் மூலம் தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டே வந்துள்ளன. எண்ணிக்கையில்லா ஸ்மிருதிகளும், சூத்திரங்களும், சாத்திரங்களும் மகாபாரதம், இராமாயணம் போன்ற சமயப் புராணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ
வர்ண தர்மங்களின் அடிப்படைக் கோட்பாடுகளை வலிந்து நிலை நிறுத்துகின்றன. இந்தக்
கோட்பாடுகள் த்விஜாக்களின் ஆளுமையையும், அதிகாரத்தையும்
உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அதே சமயத்தில் பூணூல் அணிய
முடியாத சூத்திர மக்களின் தலை மீது உழைப்பையும், தண்டனைகளையும்
அடுக்கடுக்காய் ஏற்றி வைக்கின்றன.
தங்களது வேதமும்,
வட மொழியும்தான் உயர்ந்தவை என்று பறை சாற்றிக் கொண்டிருக்கும்
த்விஜாக்கள், அதோடு நில்லாது ஆங்கில மொழி மூலமும் தங்கள் ‘கொள்கை விளக்கங்களை’ பரப்பிக் கொண்டுள்ளனர். அதிலும்,
‘ஆதிக்க சாதியினர்’ என்று இன்று அழைக்கப்படும்
சாதியினர் - ஜட்கள், குஜ்ஜார்கள், பட்டேல்கள்,
யாதவர்கள், மராத்தியினர், நாயர்கள், ரெட்டிகள்,
கம்மாவினர், கௌனம்பிகள், லிங்காயத்துகள் - தங்கள் முன்னே பிளந்து கிடக்கும் சமூக
ஏற்றத்தாழ்வுகளையும் பிரித்தாளும் இரட்டை முனைக் கத்தி போலிருப்பதையும்
முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களாகவே உள்ளனர். 2
பூலே பிராமணர்கள் எந்த அளவு
சூத்திரர் மீது தங்கள் சுரண்டலைத் தொடர்கிறார்கள் என்பதையும்,
பிராமணர்கள் சமயக் கதைகள் மூலம் ஏனையோரை அடக்கி ஆள்கிறார்
என்பதையும் தன் சுய சிந்தனையின் வெளிப்பாடாகக் கொண்டுவந்தார். புரட்சிகளும் சீர்
திருத்தங்களும் நடக்காவிட்டால் எதிர்காலம் முழுமையாகப் பிராமணர் வசப்பட்டு விடும்
என்று கூறினார். அப்படி ஒரு போராட்டம் இன்றுவரையும் தேவையாகவே இருந்து வருகிறது.
காலம் இன்னும் அதற்குக் கனியவில்லை.
தெற்கே மதராஸ் மாகாணத்தில்
அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பறையர் இனத்து
அறிஞர், அந்தப் பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே ‘சாதியற்ற தமிழன்’ என்றொரு சமூக, அரசியல் நிலைப்பாட்டிற்கான முதல் முயற்சியை எடுத்தார். மேலும் அவர்
அப்போது நிலவி வந்த ‘பிராமணியத் தேசியவாதத்திற்கு’ எதிராகத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு வந்தார். அயோத்திதாசர் ஏற்றிய
தீபத்தை மேலும் எடுத்துச் சென்றவர் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அப்போதிருந்த
காலனிய அரசமைப்பில் பிராமணர் அல்லாதவர்களுக்கும் வியத்தகு பெருமை தரும் முறையில்
தன் சிந்தனைகளைப் பரப்பினார். ஒரு பெரிய பகுத்தறிவுவாதியாகவும் இறை
மறுப்பாளராகவும் இருந்து சமயப் புராணக் கதைகளைத் தோலுரித்து தன் கருத்துகளைப்
பரப்பினார். பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்து ஒரு புதிய சாதியற்ற, பகுத்தறிவுள்ள சமூக அமைப்பு வர பெரும் முயற்சி மேற்கொண்டார்.
திராவிடக் கருத்துகள் சாதிய
மறுப்புக் கொள்கைகளாக இருந்தாலும் தலித் மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் அதில்
ஏதுமில்லை. அதிலும் இன்னும் சூத்திரர் சமூகம் இன்றளவிலும் அடிமைப்பட்டே
இருக்கின்றது. சாதியச் சமூக அழுத்தங்கள் அவர்களைத் தலைதூக்க விடாமல் வைத்துள்ளது.
சமத்துவம் இல்லாமல் த்விஜாக்களின் அழுத்தத்தில் இருந்து விடுபடாமல்
இருக்கிறார்கள்.
தெற்கே சில தலைவர்கள்
தோன்றினார்கள். முன்னெடுப்புகளும் நடந்தேறின. தாழ்த்தப்பட்ட மக்களின்
முன்னேற்றமும் பிராமணர்களின் ஆதிக்கத்தின் அளவுகோலைச் சுருக்குவதும் ஓரளவாவது
நடந்தேறின. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த சில சீர்திருத்த முயற்சிகளும்
பிராமணச் சாதியக் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே நடந்தது.
Wednesday, September 20, 2023
1150. சநாதனம்னா என்னாங்க ...4
சநாதனம்னா என்னாங்க ...4
1946ல் அம்பேத்கர் “யாரிந்த
சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?;
எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்?
என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும்
இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட
நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து
சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
***********
முதல் வேத நூலான ரிக் வேதத்தில்
உள்ள புருஷா சுக்தா (Purusha Sukta) என்ற
பக்திப் பாடலில் மனிதகுலம் எவ்வாறாக முதல் மனிதனின் பலியினால் ஆரம்பித்தது என்று
கூறப்படுகிறது. அம்முதல் மனிதனின் வாயிலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள்; அவனது கைகளிலிருந்து வந்தவர்கள் சத்திரியர்களும், கால்களிலிருந்து
வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் வந்தனர்.
பிராமணர், சத்திரியர், வைசியர்,
சூத்திரர் என்ற 4 படிநிலைகள் இந்து தர்மத்தின் நான்கு அடுக்கு
வர்ணாஸ்ரமமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதிப்பிரிவுகள் மீண்டும், அதன்பின் எழுந்த பிராமண நூல்களான மனு ஸ்மிருதி, அர்த்த
சாஸ்திரம், பகவத் கீதா என்ற நூல்களில் மீண்டும் அடையாளங்
காட்டப்படுகின்றன. OBC மக்கள் அனைவரும் சூத்திரர்கள். இந்தக்
கோட்பாடு அல்லது வரையறை பிராமண இந்து மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து
வந்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்தக் காலத்தில் இருந்தே
சூத்திரர்கள் சமூக, ஆன்மீக அடிமைகளாகவே கருதப்பட்டு
வந்துள்ளனர்.
*****
பிராமணிய
வகைப்படுத்துவதன் மூலம் அனைத்துச் சூத்திரர்களும் - இதில் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று ஒதுக்கப்பட்ட மக்களும்
உள்ளடக்கம் - உழைத்து, உற்பத்தி வேலைகளைச் செய்வதற்காகவே
உண்டாக்கப்பட்டவர்கள். நம் முன்னோர்களும் அவர்தம் வாழ்வும் இந்த உழைப்பினால்தான்
காப்பாற்றப்பட்டன. ஆனால் இந்த உழைப்பின் பயன்கள் என்னவோ மந்திரங்கள் ஓதும்
இனத்தவருக்கே சென்றன. இந்த உழைப்பில் வைசியர்களும் பங்களித்ததாக - விவசாயப் பணிகளில்
மேலாளர்களாக - ஒரு கருத்தும் உண்டு. ஆனால் சத்திரியர்களோ பிராமணர்களோ
இவ்வுழைப்பில் சிறிதும் பங்கெடுத்ததாக வரலாற்று ஏடுகளில் எங்கும் காணப்படவில்லை
கௌடில்யரின் படைப்பான ‘அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலிலும் மேற்சொன்ன
அடிமைத்தனமும், வேலைப்பளுவும் வெவ்வேறு சாதியினருக்கான
பணிகளாக வகுக்கப்பட்டுள்ளன. சுரண்டல் ஒரு சட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதோடு
இல்லாது, அர்த்தசாஸ்திரம் ஓர் அடிப்படைச் சட்ட அமைப்பை
வலியுறுத்துகிறது. இருமுறைப் பிறப்பெடுத்த பிராமணர்கள் - த்விஜஸ் - இதுபோன்ற உடல்
உழைப்புகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி
அரசமைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அதன்
பயனைப் பிராமணர்களின் நல்வாழ்க்கைக்காகத் தர வேண்டும். சூத்திரர்களின் உழைப்பில்
அப்பிரிவு சுகம் காண வேண்டும் என்றுள்ளது.
*****
சூத்திரர்களுக்கு
பாதஜா (padaja)
என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் அவர்கள் பிரம்மாவின்
காலிலிருந்து பிறந்தவர்கள். இதன்மூலம் கடவுள் அவர்களை அடிமைகளாகவே இருக்க
படைத்துள்ளார்.