Tuesday, June 12, 2007

223. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 3

பதிவர் நல்லடியார் என் பெயரிட்டே இதுவரை மூன்று பதிவுகள் இட்டுள்ளார்; அவைகளை நான் இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது என் பதிவொன்றில் ஒரு பின்னூட்டம் இட்டு தன் பதிவுக்கு அழைத்துள்ளார். அவருக்காகவே இதைப் பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து நீளம் காரணமாக இதை ஒரு தனிப்பதிவாக்கியுள்ளேன்.

நல்லடியார்,

உங்கள் பின்னூட்டத்திற்கு கடைசியிலிருந்து பதில் சொல்ல வேண்டியதுள்ளது.
//எனது பதிவிலும் சில கேள்விகள் இருக்கலாம். பொடிநடையா வந்து வாசித்து செல்லுங்கள்.//
பொடிநடை நடந்து உங்கள் பதிவை ஏற்கெனவே வாசித்துள்ளேன்; ஆனாலும் கண்டு கொள்ளாமல் வந்ததற்குரிய காரணம் -

உங்கள் எழுத்தில் உள்ள எள்ளல்தான். கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது? அப்படி என்ன எள்ளல் என்று நிச்சயம் கேட்பீர்கள். ஒரு சில துளிகள் உங்கள் எழுத்திலிருந்து....

1. //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட .........//
நான உங்களை எப்போது நம்பச்சொன்னேன்?
என்ன சொல்ல வருகிறீர்கள்?
நாத்திகனாக இருந்தும் குடிக்கிறானே என்றா?
இல்லை, குடித்தும் நாத்திகனாக இருக்கிறானே என்றா?
இல்லை, இவன் என்றாவது மட்டும்தானே குடிக்கிறானே என்றா?

2. தலைப்பையே பாருங்களேன்: தி.நகரில் தருமிக்கு என்ன வேலை? (பதில் கட்டாயம் சொல்ல வேண்டுமோ? அப்படியெனில் பதிவின் முதல் வரியைப் படியுங்களேன்; ஓ! நீங்கள் 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல?

3. அந்த உங்கள் பதிவில் என்னைக் கொஞ்சம்தானே "கவனித்துள்ளீர்கள்". மீதியெல்லாம் நேசகுமாருக்குத்தானே!

இந்த காரணங்களால் பதில் சொல்லாமலிருந்தேன்; இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல; குழப்பத்திலிருக்கும் பஸ் பயணியாக தருமியை ஆக்கிய பதிவு, நோக்கியா வாங்கிய தருமி இந்தப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிடாதது இது போன்ற உங்கள் மொழியாள்மைக்காகத்தான். இப்போது என் 'வீட்டுக்கே' வந்து கேட்கும்போதும் மெளனம் சாதிப்பது நாகரீகமாகாது என்பதாலும், என் பெயர் போட்டே இத்தனை பதிவுகள் போட்டு என்னைப் பெருமை படுத்தியமைக்காகவும் உங்கள் கேள்விகளுக்கு என் பதிலை இப்படி ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன்.

//சென்ற மாதப்பதிவில்"குண்டு எல்லாம் எதற்கு?" என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது.//
இப்பதிவில் என்ன நாத்திகம் கண்டீர்களோ எனக்குத் தெரியவில்லை. இஸ்லாமை அல்ல, இஸ்லாமியரைக் குறை சொன்னாலே நாத்திகமா, என்ன?

//முஸ்லிம்கள் ஐவேளை தொழ அழைக்கும் பாங்கொலியும் L.R.ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனக வல்லியோ அல்லது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கும்மிப் பாட்டும் ஒன்றா?//
உங்களுக்குப் பாங்கொலி இனிமையாக இருக்குமென்றால் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும், இருக்கும் என்பது உங்கள் எண்ணமா? நீங்கள் சொல்லும் இந்து சமயப் பாடல்கள் உங்களுக்குக் குத்துப் பாட்டு என்றால் எல்லோருக்கும் அப்படிதானா? நீங்கள் சொன்னதில் முதல் பாட்டு எனக்குகூட பிடிக்குமே! கும்மிப் பாட்டு என்று மற்றொரு சமயப் பாடலைக் கூறுவது ஒருவேளை அவர்களுக்குத் தவறாகப் படலாம் வருத்தம் தரலாம் என்றுகூட நீங்கள் நினைக்கவில்லை இல்லையா? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பது தெரியாதவரா நீங்கள்? உங்களுக்குக் குத்துப் பாட்டாகப் படுவதுபோல் பாங்கொலி மற்றவருக்கு எப்படியிருக்கும் என்றும் நினைத்துப் பாருங்கள் - இசையில்லாமல், ஒரு புரியாத மொழியில் ஒரு சத்தம் என்பதைத் தவிர மற்ற மதத்தினருக்கும் அது இனிமையாக இருக்கும் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; மற்ற சமயத்தினர் நாலு பேரிடம் கேட்டுப் பாருங்கள்.

//போக்குவரத்திற்கு இடையூறாக தொழுகை நடத்துதை வேண்டுமானால் குறையாகச் சொல்லலாம்.// அதைத்தான் நானும் சொல்லியுள்ளேன். ஆனால் அதோடு, // அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று.// என்று நான் சொல்லியிருப்பதன் பொருள் என்ன? படித்தீர்களா அதை?

//முஸ்லிம்கள் முடிந்தவரை இத்தகைய தற்காலிக இடையூறுகளையும் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மாற்று மதத்தவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது//
மிக்க நன்றி.

//'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.// யாரை, எதற்காக, ஏன் நொந்து கொண்டேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

//அப்படீன்னா தருமியும் நேசகுமாரும் யார் என்கிறீர்களா? யாருக்குத் தெரியும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !//
இவ்வரிகளும் இதற்கு முந்திய பத்தியும் என்ன நினைத்து, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உண்மையிலேயே புரியவில்லை.

// நிரந்தர இடையூராக சாலையை அடைத்துக் கொண்டு வீற்றிருக்கும் தெருப்பிள்ளையார்,உண்டியல்களும், தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள் பற்றி உங்கள் நாத்திகம் என்ன சொல்கிறது? சாமி சிலைகளுக்குப் போட்டியாக நிற்கும் பகுத்தறிவுச் சிலைகள் பற்றியும் சொல்லுங்களேன்.//
இதைத்தான் மேலேயே ஒரு முறை கூறியுள்ளேன். நீங்கள் இருப்பது "ஒற்றைச் சாளர வீடு". எதைப் பார்க்க வேண்டுமென்று மெனக்கெடுகிறீர்களோ அதை மட்டும் பார்க்கிறீர்கள்.கொஞ்சம் நீங்கள் வாசித்த பதிவுக்கு அடுத்ததாக, "யாரைத்தான் நொந்து கொள்வதோ...?" என்று எழுதியுள்ள, இன்னும் எழுத உள்ள பதிவுகளைப் படித்து விட்டு உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள், சார். நீங்கள் சொல்லும் 'தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள்' பற்றி இங்கே பார்க்கவில்லை போலும். என்னைப் பற்றிய தீர்ப்பெழுதும் முன் என் பதிவுகள் எல்லாவற்றையும் பாருங்கள், ஐயா.

நீங்கள் நம்ப முடியாத ஆனால் நான் நம்பும் சமூக அக்கறையுடன்தான் இவைகளை எழுதியுள்ளேன். இங்கு இஸ்லாமியரை மட்டும் குறை சொல்ல எழுதப் பட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இத்தவறுக்குக் காரணம் நான் ஏற்கெனவே சொன்னதுதான்: 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல? குண்டு எல்லாம் எதற்காக என்ற அந்த "நாத்திகப்" பதிவை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து வாசித்துப் பார்த்தால் நான் முக்கிய குறையாகச் சொல்வது என்ன என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். பொறுமையில்லை உங்களுக்கு. இப்படி எழுதிய பதிவு மட்டும்தானா கண்ணில் பட்டது. அதைத் தொடர்ந்து எழுதியுள்ள பதிவுகளும், அவைகளில் எழுதியிருப்பவைகளையும் ஏன் படிக்க உங்களுக்குப் பொறுமையில்லை? ஏதோ இஸ்லாமை எதிர்க்க மட்டுமே நான் பதிவுகள் எழுதுவதாக நினைத்து விட்டீர்களா?

என் மதப் பதிவுகளிலும் நான் நம்பிய என் மதத்தைப் பற்றிய நான் எழுப்பிய ஐயங்கள் உங்கள் கண்களில் படவில்லை; நான் இஸ்லாமைப் பற்றி எழுதியது மட்டுமே உங்களை வந்தடைகிறது என்றால் அதற்குக் காரணம் உங்கள் ஒற்றைச் சாளர வீடு. நான் என் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் முழுமையாகத் திறந்து வைத்துள்ளேன் - கொடுப்பதற்கும், பெறுவதற்கும். நாம் இருவருமெழுதி வரும் பதிவுகளின் உள்ளீடே இதைச் சொல்லும். உங்கள் மதம் சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதும் உங்களை ஒரே ஒரு பதிவு மாற்றி எழுதட்டுமே என்றுதான் 'அழகான ஆறு' தொடர் பதிவிற்கு உங்களை அழைத்தேன். அழைப்புக்கு எந்த response-ம் இல்லை. அதைத் தப்பு என்று கூறவில்லை. எழுத முடியாமைக்கு வருத்தம்கூட சொல்லவில்லையே என்று கூட நான் நினைக்கவில்லை. ஏனெனில் மத ஈடுபாடு மட்டுமே உங்கள் பதிவுகளுக்கான காரணம் என்று புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது என் ஒரு பதிவில் நான் இஸ்லாமியரின் வழிபாட்டை, அதற்கான ஒரு சமூக மீறலைப் பற்றி சொல்லியதும்.அதற்குப் பிறகு நான் குற்றம் கண்டது யாரை என்றுகூட புரிந்து கொள்ளாமல், ஏன் அந்தப் பதிவுக்கு அந்தத் தலைப்பை வைத்தேன் என்று கொஞ்சமும் யோசித்துப் பார்க்காது, 'ஆஹா, என் மதக்காரர்களை குறை சொல்லிவிட்டாயா' என்ற உங்கள் கோபமும் எரிச்சலும் உங்களின் பார்வையை எனக்கு முழுவதுமாகப் புரியவைக்கிறது. 'அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது' என்று சொல்லி அதன்பின் ஏன் அந்தத் தலைப்பு வைத்தேனென்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

ஒரு சமூகம் அங்கீகரித்து விட்ட, அதற்காக நான் சந்தோஷமும் பெருமையும் படும் ஒரு சமூக மீறலைப் பற்றிப் பேசியபோது வந்துள்ள உங்கள் கோபம், அதன்பின் //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி// எழுதி வரும் மற்ற சமூக மீறல்களைப் பற்றியும் உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். என் பதிவில் நடுத்தெருக் கோவில் ஒன்றைப் பற்றி எழுதியதில் மிகுந்த மத நம்பிக்கைகொண்ட ஒரு பதிவர், 'சாமியெல்லாம் இப்படி இடைஞ்சல் தரும்படி சொல்லவில்லை; இப்படிப்பட்ட கோவிலை, அத்துமீறலை இடித்து அகற்ற வேண்டும்' என்று சொல்லியுள்ளார். உங்களால் அப்படி ஒரு நிலைப்பாட்டை இஸ்லாமைப் பொருத்தவரை எடுக்க முடியாது. குதிரைக்கு கண்ணில் மாட்டும் blinkers போல் ஒரே நேர்கோட்டுப் பாதை உங்களுக்கு என்று நினைக்கிறேன். நான் நாலு பக்கமும் பார்க்கிறேன். எது சரியென்று நான் தீர்ப்பிடவில்லை.

நல்லடியார், உங்கள் நம்பிக்கையை, மதத்தை, நடைமுறைகளை யாரும் கேள்வி கேட்டாலே தவறு என்று நினைக்கிறீர்கள். எல்லா மதங்களுமே மக்களுக்கான பொது விஷயங்கள். அவைகளைப் பற்றிய விவாதங்கள் நீங்களே உங்கள் பதிவுகளில் சொல்லியுள்ளது போல காலம் காலமாய் இருந்து வருபவை; என்றும் இருக்கும். மார்க்ஸியமும், இன்றைய உலகமயமாக்கலும் விவாதத்திற்குள்ளாவது போல்தான் மதங்களும் விவாதத்திற்குட்படும். அதுவே நியதி. நாத்திகனாக ஒருவன் மதத்தைப் பற்றிய விவாதத்தை வைத்தால் அதற்குப் பதில் தெரிந்த நம்பிக்கையாளர்கள் பதில் தர முனைவதும், பதில் தெரியாத நம்பிக்கையாளர்கள் 'நீ என்னமும் சொல்லிட்டு போ; எனக்கு என் கடவுள் நம்பிக்கை பெரிது' என்று சொல்லிப் போவதுதான் நடைமுறை. இதில் கேள்வி கேட்டாலே அது தவறு என்ற நிலைப்பாடு சரியா? ஏன், இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைப் பற்றிய சர்ச்சையில் கலந்து கொள்வதில்லையா? சொல்லில் மரியாதையோடு, புண்படுத்தாத மொழியில், sensible-ஆக, சரியான logic-ஓடு மதங்களைப் பற்றிய கேள்விகளை நாத்திகர்கள் எழுப்பிக் கொண்டிருப்பது தொடரத்தான் செய்யும். இதில் எந்த மதத்திற்கும் விலக்கு இல்லை. பதில் இருந்தால் தாருங்கள்; இல்லையேல் விட்டு விடுங்கள்.

உங்கள் பதிவுக்கு மட்டுமல்ல; என் பெயர் சொல்லிவரும் சில பதிவுகளை நான் கண்டு கொள்வதில்லைதான். மொழியாளுமை ஒரு காரணம் என்றால் சில நேரங்களில் என் பதிலுக்கு எந்த பயனுமிருக்கப் போவதில்லை என்று தெரியுமாதலால் விட்டு விடுகிறேன்.

இரண்டு உதாரணங்கள்:
1. //தான் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற பிரதானக் காரணமாக, இயேசுவை கர்த்தர் காப்பாற்றவில்லை என்பதால் கடவுளின் வல்லமை, கேள்விக்குரியதாகிறது என்றார்.//
இதற்குப் பதில் சொல்லிவிட்டோம் ஆகவே எங்கள் மதத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே என்றொரு கேள்வி உங்களிடமிருந்தும், மற்றும் உங்கள் நண்பரொருவரிடமிருந்தும். இதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. காரணம் - இவர்கள் தாங்கள் செய்யும் விவாதம் என்னவென்று தெரியாமல் செய்கிறார்களே என்றுதான். ஏனெனில் நான் இதைப் பற்றிப் பேசும்போது predeterminism vs free will; predeterminism vs prayers என்ற தளத்தில் பேசுகிறேன். அதையெல்லாம் விட்டு விட்டு அல்லாஹ் ஈசாவைக் காப்பாற்றி விட்டாரே; பின் என்ன? இங்கே வந்துவிடு என்பது ....?! குண்டு பதிவில் நான் கூறியதில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அப்பதிவின் spirit-யை தவற விட்டது போலவே இங்கும் தவறு செய்துள்ளீர்கள். உங்கள் கருத்துப்படியே வைத்துக் கொண்டாலும், கிறித்துவம் பற்றிப் பேசியபோது, ஜிப்ரேல் பற்றி சொன்னதுபோல, இரண்டு மதக்காரர்களுக்கு இரு வேறு நம்பிக்கைகள்; இதில் எது சரி? அல்லது, எல்லாமே கதைதான் என்கிற என் மூன்றாவது option-ம் சரியாக இருக்கலாமில்லையா? என் பதிவுகளில் நான் சொன்னதை முழுமையாக உள்வாங்கியிருந்தால் இந்த உங்கள் குற்றச்சாட்டுக்குத் தேவையே இருந்திருக்காது.

2. உங்கள் நோக்கியா பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் கேட்டது ஏன் மனிதனுக்கும் கடவுளுக்குமிடையில் இப்படி ஒரு கொடூரம் என்று. அதற்கு நோக்கியா வாங்கிய தருமியில் பதில் கொடுத்துள்ளீர்கள்.

என் கேள்வி: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."

உங்கள் பதில்: தன் மகன் எக்காரணம் கொண்டும் நஷ்டமடைந்து விடக்கூடாது என பேரன்புகொண்ட தந்தை தேவைப்பட்டால் மென்மையாக அடித்தும்கூட எச்சரிப்பார்.

ஒன்று செய்யுங்கள் - இந்த இரண்டு விவாதங்களையும் உங்களுக்கு இஸ்லாமியரல்லாத நண்பர் யாருமிருப்பின் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள். என் கேள்வியில் உள்ள 'கடவுளின் கொடூரம்' உங்கள் பதிவில் 'மென்மையாக' மாறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு இஸ்லாமியரல்லாத ஒருவரைப் பார்க்க ஆசை. ஆனால் நான் உங்கள் ஒரு சாளர வீட்டிற்கு வந்து இதைச் சொன்னால் என்ன பயன்? இருவரும் ஆளுக்கொரு முயல் வைத்துக் கொண்டு, குருடர்கள் பார்த்த யானைக் கதை போல் ஏதாவது தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பயன் இருக்கும்?

இருந்தாலும், உங்களின் அந்தப் பதிவில் நான் போட நினைத்த பின்னூட்டம் இதுதான்:

நல்லடியார்,

இந்த எழுத்து என் ஸ்டைல் கிடையாது. உங்கள் ஸ்டைலிலேயே பதில் சொல்ல முயன்றுள்ளேன்.

நோக்கியாவில் நீங்கள் சொன்ன இந்த ஒப்பந்தங்கள் மட்டும் இருந்தால் சரி. ஆனால் கடைசியாக இன்னுமொரு ஒப்பந்தம் இப்படி இருந்திச்சுன்னா என்ன பண்ணணும்னு சொல்லுங்க:

"நோக்கியா போன் வாங்கியது வாங்கியதுதான். இனி எப்போதேனும் அந்த உரிமையாளர் இந்த போனை மாற்ற நினைக்கவோ, இல்லை அதன் தரம் பற்றிய ஐயங்கள் ஏதும் எழுப்பவோ, இந்த போனை விட்டு விட்டு வேறு போன் ஏதும் வாங்க நினைக்கவோ கூடவே கூடாது. அப்படியின்றி "...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், நோக்கியா கம்பெனி அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடும்" என்றால் ...?"


என்னைப் பொறுத்தவரை மதம் ஒன்றும் கழட்ட முடியாத, கழட்டக் கூடாத கவச குண்டலமல்ல; பிடித்தால் போடவும், இல்லையென்றால் கழட்டிப் போடவும் கூடிய ஒரு சட்டை. அப்படி இருந்தமையால்தான் இந்துக்களாக இருந்த நம் முன்னோர் மாற்று மதங்களுக்குச் செல்ல முடிந்தது.


பதிவர் கல்வெட்டு போன்று சிலர் என்னிடம் 'நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது தேவையற்ற ஒரு வீண் வேலை' என்றார்கள். நானோ எப்படியோ இதை ஒரு academic interest ஆக ரொம்ப ஆண்டுகளாக வளர்த்துக் கொண்டு விட்டதால் என்னால் நாய்வாலை நிமிர்த்த முடியவில்லை. ஆனாலும் மதங்கள் பற்றிய என் பதிவுகளை நான் எப்போதோ முடித்துக் கொண்டேன். எல்லா மதங்களைப் பற்றிய என் கேள்விகள் பலவும் கேள்விகளாகவே இன்னும் இருக்கின்றன. அவ்வப்போது உங்களைப் போன்றோர் தரும் பதில்களுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமே செய்து வருகிறேன். கொஞ்சம் நாய்வாலை நிமிர்த்தி வச்சிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

ரொம்ப நாள் கழிச்சி, நீண்ட, எனக்குப் பிடித்த மதம் பற்றிய ஒரு பதிவை இட வழிசெய்தமைக்கு நன்றி.
===============================================================================


12.06.'07 காலை 10 மணிக்கு சேர்த்த பின் குறிப்பு:
1. மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை. ஆனால் இதேபோல் பாங்கொலி பற்றி யாராவது கொஞ்சம் கேலி செய்திருந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த வேற்றுமை ஏனென்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன். என் மதம் என் உயிருக்கும் மேலானென்பதைத் தவிர வேறேதும் பதில் உண்டா?

2. நான் நடுத்தெரு இந்துக் கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்திருந்தும் ஒரே ஒரு இந்துவாவது ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியுள்ளாரா? அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்ற தத்துவத்தைப் பொழிந்துள்ளார்களா? வேறு மதக்காரர்கள் சாலைகளில் அப்படி பண்ணவில்லையா? இப்படி செய்யவில்லையா என்று கேள்வி கேட்டிருக்கிறார்களா? சாலைகள் எல்லாமே மிக நன்றாகவா இருக்கு; வேறு தடைகளே கிடையாதா என்றெல்லாம் கேட்கவில்லை. இதனால்தான் குடி கெட்டுவிட்டதாக்கும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் காட்டும் இந்த தீவிரம் ஏன், அது சரிதானா என்று தயவு செய்து உங்களையே ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள்.

3. என்னை வேற்றொரு மதக்காரனாகப் பார்த்தாலும் இந்து கோவில்களைப் பற்றிப் பேசும்போது கூட நான் என்ன சொல்கிறேன்; அது சரியா என்றுதானே அந்த மதக்காரர்கள் பார்த்தார்கள். நான் மதத்தைத் தாக்குவதாக யாரும் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே. ஏன்? எது சரி? ஒருவேளை உங்களைப் போல அவர்களும் இருந்தால்தான் சரியா? புரியவில்லை.

43 comments:

Thekkikattan|தெகா said...

எந்தவொரு விசயத்தையும் ஒரு தீர்க்கமான முடிவோடு அணுகும் பட்சத்தில், சொல்லப்பட்டிருக்க கருத்திலிருந்து எதுவுமே உள்வாங்கப் படுவதில்லை. ஏனெனில், வாசிப்பவரின் பின் மண்டையில் ஓட்டப் படும் படம் அந்த தீர்க்கமான முடிவு மட்டுமே.

அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கிருந்து வருகிறது கற்க வேண்டும் என்ற முனைப்பு. ஏனெனில் அங்கே கவனிப்பே தவற விடப் பட்டுவிட்டதே.

Stagnant water when it stays too long in one place, it starts to stale and stink. Same way I believe this is what happens exactly to human mind also, when we stuck with certain belief in a condtioned manner, there we stop growing and get older quicker.

குட்டிபிசாசு said...

ஐயா,
உங்களுக்கு பொறுமை அதிகம். தெளிவான பதில்!

Raveendran Chinnasamy said...

I like your questions and answers from others ( like Nanban ) .

Dont stop your questions as it is enlighting visitors like us who silently reading it . .

rv said...

பெரியப்பா,
உங்களின் பொறுமைக்கும் அனாலிடிக்கல் மைண்டுக்குமானது (சையண்டாலஜி இல்லப்போவ் :)) இந்த பின்னூட்டக் கயமைத்தனம். அதோடு கூடவே civilized responseஉக்கும்....

என் பெரீய்ய்யப்பாவாச்சேனு சொல்ல ஆசைதான்.. :P

தருமி said...

//என் பெரீய்ய்யப்பாவாச்சேனு சொல்ல ஆசைதான்.. :P //

சொல்லியிருந்தா எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பேன்.. :(

சீனு said...

//இஸ்லாமை அல்ல, இஸ்லாமியரைக் குறை சொன்னாலே நாத்திகமா, என்ன?//
இஸ்லாம் அல்லாதவர்கள் எல்லாருமே நாத்திகர்கள் தானே, அவர்களுக்கு?

//இப்படிப்பட்ட கோவிலை, அத்துமீறலை இடித்து அகற்ற வேண்டும்' என்று சொல்லியுள்ளார். உங்களால் அப்படி ஒரு நிலைப்பாட்டை இஸ்லாமைப் பொருத்தவரை எடுக்க முடியாது.//
ம்ம்...அதற்கு தானே நான்கு உயிர்களை பலிகொடுக்கவேண்டியிருந்தது, வடக்கே?

நல்லடியாரின் சில பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். ஆனால், பின்னூட்டம் இடும் அளவிற்கு எனக்கு அவர் பதிவுகள் புரிவதில்லை. பின்னூட்டமிட்டும் பயனிலை. அறிவு வளர்ச்சி எனக்கு கொஞ்சம் கம்மியோ என்னவோ!!!

பொறுமை மற்றும் தெளிவான பதில், தருமி சார்!!!

G.Ragavan said...

தருமி சார், யோசித்துத்தான் பதிவு போட்டிருக்கின்றீர்கள். அது படிக்கும் பொழுதே தெரிகிறது. silent majorityன்னு சொன்னீங்களே....உங்களோட நானும் வர்ரேன். :)

துளசி கோபால் said...

உங்களுக்கு அசாத்தியப் பொறுமைங்க!!!!

Narayanaswamy G said...

பொறுமையான ஆனால் தெளிவான பதில். ஆனால், இப்படி ஒரு அரைவேக்காட்டுத்தனமான பதிவாளிக்கு இவ்வளவு விளக்கமான விஷமம் இல்லாத பதில் தேவையா?

இதுக்கு பதிலா "சிவாஜி" படம் பத்தி ஒரு பதிவு போட்ருக்கலாம். ஒரு பொம்பளபுள்ள படத்த போடரதுக்கு ஒங்களுக்கும் ஒரு சான்ஸ் கெடச்சிருக்கும்.

நந்தா said...

நீ என்ன வேணல்லும் சொல்லிக்கோ. நான் திருந்த மாட்டேன். இப்படியேதான் இருப்பேன் என்று சொல்கிறார்.

நல்லடியார் சார் உடனே ஒட்டு மொத்த இந்து ஆளுங்களும் ஒண்ணா சேந்துட்டீங்கன்னு பிரச்சினையை திசை திருப்பாதீங்க. மத்தவங்களுக்கு இடையூறு பண்றவன் இந்துவா இருந்தா என்ன? முஸ்லீமா இருந்தா என்ன? எல்லாருமே சுயநல மதவாதிகள் தான். இதைத் தான் தருமி அய்யாவும் சொல்லி இருக்காரு.

Unknown said...

தருமி,

இந்தியாவில் கடவுள் நம்பிக்கையை துறந்ததினால் நாத்திகர் எல்லாருக்கும் Civic Sense வந்துவிட்டது என்று இல்லை.இந்தியாவில் 99.99999 % பேர்களுக்கு Civic Sense என்றால் என்னவென்றே தெரியாது.தான் செய்வது தவறு என்றே உணராதவர்களை திருத்துவது என்பது முடியாத காரியம். இதில் ஆத்திகம்/நாத்திக வியாதிகள் எல்லாம் அடக்கம். எனவே மதவாதிகள் / மதமற்றவாதிகள் எல்லாம் நம்மக்களே. :-))

எங்கிருந்தாலும் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். அமெரிக்கா சென்றாலும் அங்கே இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இதே Civic Sense கேடுகளைப் பார்க்கலாம்.

உ.ம்:
ரோட்டில் பான்பராக் துப்புவது, குப்பை போடுவது போன்றவற்றை நியூ ஜெர்சியின் "ஜெர்சி சிட்டி", "எடிசன்" போன்ற இடங்களில் சர்வ சாதரணமாக பார்க்கலாம்.இந்தியர் அதிகமாக உள்ள இடங்களில் இந்தியனே "பிராபர்ட்டி வேல்யூ" குறைந்து போச்சு என்று புலம்புவான் ....அந்தப்பக்கம் எச்சிலை துப்பிக்கொண்டே :-))

******

கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?

இருந்துவிட்டுப் போகட்டும் அதனால் என்ன?
(இவர்கள் இருப்பதினால் நான் வாழும் சமுதாயம் ஒன்றும் திருந்திவிடப் போவது இல்லை. இவ்வளவு கடவுள்கள் இருந்தே இந்தியாவில் Civic Sense இந்த இலட்சணத்தில் உள்ளது.இவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடப்போவது இல்லை.)

******
எந்த மதத்தினரும் "ஆம் நான் பின்பற்றும் மதம் ஒரு குப்பை. சும்மா பொழுது போகாமல் இதன் சடங்குகளைச் செய்து கொண்டு இருக்கிறேன்" என்று சொல்லப்போவது இல்லை.

ஒருவர் தன்னை மதப்பற்றாளராக அடையாளம் காண்பிக்கும்போது அவரிடம் மதம் பற்றிய நமது மாற்றுக் கருத்துக்களை அவராக நம்மிடம் கேட்டால் தவிர பேசவே கூடாது.அதுவே சாதிக்கும். பூணூல் உடன் ஒருவன் அழையும்போது அவனிடம் போய் பார்ப்பனீயம் பற்றிப் பேசினால் ஒரு புண்ணியமும் இல்லை.

இவர்கள் நம்பிக்கையாளர்கள். தனது நம்பிக்கையை அடையாளமாக தெரிந்தே வெளியில் வெளிப்படுத்துகிறார்கள்.இவர்கள் உங்களுக்கு அவர்களின் நம்பிக்கை என்ன என்றும் அடையாளங்களால் சொல்கிறார்கள்.

எனவே நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது நேர விரயம். குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை தாங்களே கேள்விக்கு உட்படுத்தாதவர்களின் (மத/சாதி/அதிமுக வின் இரத்தின் இரத்தங்கள்/தி.மு.கவின் உடன் பிறப்புகள்/ரஜினியின் இரசிகர் போன்றோரின் நம்பிக்கைகள்) நம்பிக்கையை நேரடியாக அவர்களிடமே விவாதிப்பதால் ஒரு பயனும் இல்லை.


அவர்களின் நம்பிக்கை அவர்களை சந்தோசமாக வைத்து இருக்கிறதா? அதுவே போதும் அவர்களுக்கு. ரோடாவது மண்ணாவது. சமுதாயம் எப்படிப் சீர்கெட்டுப்போனால் என்ன?


ரோட்டில் குப்பை போடாதே என்றோ அல்லது சாலைவிதிகளை மதி என்றோ எந்த மதமும் சொல்வது இல்லை.


One-Way யில் போய்விட்டு அதற்கு பரிகாரம் செய்தால் சரி, வேறு தண்டனை எதுவும் வேண்டாம் என்று இவர்கள் சொல்லாத வரைக்கும் நாம் இங்கே வாழலாம்.அதுவும் வந்துவிட்டால் காட்டிற்குள் போய்விட வேண்டியதுதான்.

99 % மத நம்பிக்கையாளர்கள் உள்ள இந்த நாடு ஏன் இப்படிச் இலஞ்சம்,AIDS,Civic Sense போன்றவற்றில் சீரழிந்து கிடக்கிறது.இந்த மத நம்பிகை ஆசாமிகள் கோவிலில் சாமி கும்பிடுவது ..."என்னைக் காப்பாற்று " என்றே தவிர " நான் இன்று ட்ராபிக்கில் சரியானவிதிகளைக் கடைபிடிக்க உதவு" "இன்று முழுக்க குப்பை போடாமல் இருக்க உதவு" என்றல்ல....

***

எல்லா மத்ங்களிலும் கடவுள் நம்பிக்கைதாண்டி சடங்குகளே பிரதான இடம் வகிக்கிறது.வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு சுவர் வேண்டும்.

மத/சாதி அடையாளங்களைத் துறந்தால் இவர்களிடம் ஏதும் இல்லை.தனக்கென்று ஒரு அடையாளம் உருவாக்கத் தெரியாதவன் பிறர் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒழிந்து கொள்கிறான்.அதுவே அவனின் கேள்வி கேட்கும் திறனை இழக்கச் செய்கிறது.

கடவுள் நம்பிக்கை என்பது , எல்லாம் இழந்த ஒருவனுக்கு அந்த கணத்தில் சாய்ந்து கொள்ள ஒரு சுவராக இருந்தால் அதனால் சமூகத்திற்கு பாதிப்பு இல்லை. ஆனால் அந்தச் சுவர் அவனுக்கு கண நேர ஓய்வு தந்தது என்பதற்காக அங்கேயே தங்கி விடுவதும் , அது சார்ந்த கதைகளைப் புனைவதும் சமூகத்திற்கு நல்லதல்ல.

***

"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் கிப்ரான்" (நன்றி : உருப்படாத நாரயண்)

குட்டிபிசாசு said...

தருமி ஐயா,

தன் வட்டத்திற்குள் இருந்து பிறரை விமர்சிப்பது முதிர்ந்த விமர்சனம் அல்ல. அதற்கு பொதுநோக்கடன் கூடிய வேண்டும். மக்களுக்கு இடையூறு விளைவிப்பதை அகற்றுவது முக்கியமென்றால்! இந்து, கிருத்துவம்,இஸ்லாத் எல்லாம் இதற்கு விதிவிலக்கல்ல!!

பொன்ஸ்~~Poorna said...

எல்லாரையும் போல,
தருமியின் பொறுமைக்கு ஒரு ஜே..

தருமி, என்னாச்சு உங்களுக்கு, கேள்விகள் கேட்பது மட்டுமல்லாமல், பதில்களும் சொல்லத் தொடங்கிட்டீங்க? ;)

ச.மனோகர் said...

தனி மனித எள்ளல்களை அவர் தவிர்த்திருக்கலாம். அவர் தவிர்க்காததற்கு காரணம் அதைத்தான் அவர் கேடயமாக பயன்படுத்தியிருக்கிறார்.ஆனால் அட்டையில் செய்த கேடயம்.. எளிதில் கிழிந்துவிடுகிறது.

சென்னை ரட்டன் பஜாரில் கூட வெள்ளிக்கிழமை தொழுகையின் போதுகூட இந்த மாதிரி காட்சியை காணமுடியும். ஆனால் இந்த மாதிரி பொதுமக்களுக்கு இடர் தரும் விசயத்தில் இந்துக்களை வெல்ல முடியாது. அம்மன் திருவிழா, கூழ் காய்ச்சுவது,ஆடி திருவிழா,பங்குனி உத்திரம்,பால்காவடி, பழனிக்கு நடையாத்திரை, மார்கழி மாத விடிகாலை விசயங்கள், குருசாமி கன்னிசாமி கூத்துக்கள்..லவுட் ஸ்பீக்கர்..அம்மன் பாட்டு,ஈஸ்வரி,சாமி சரணம்.. இத்தியாதிகள்..அடடா பேச்சுலர் வினாயகர்.. அவரை வைத்து நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள்..

இப்படி வருடம் முழுவதும் கலக்கி வரும் கலாச்சார பரிணாமங்களை நாம் செத்தும் விடுவதில்லை.அந்த கொஞ்சநேர இறுதியாத்திரையில் நம் சுற்றம் செய்யும் கலாட்டகள்.. பூக்களை சாலை முழுவதும் இறைத்து செல்வது,வெடிவைத்து எல்லோரையும் மிரளவைப்பது..இது எல்லாவற்றிக்கும் மேலாக தற்காலிகமாக போக்குவரத்து ஒழுங்குகளை தாங்களே எடுத்துக்கொண்டு செய்கின்ற அட்டகாசங்கள்...

அதிகாலை 4.30 மணிக்கு ஒலிபெருக்கியை இயக்க செய்பவன் யாராக இருந்தாலும்.. அம்மன் டிஸ்கோ ரசிகனாக இருந்தாலும் சரி... சுவனத்திற்கு டிக்கட் எடுத்து தயாராக இருப்பவனாக இருந்தாலும் சரி.. அவன் மூளையை ஆராயத்தான் வேண்டும். நிச்சயம் ஒரு சாடிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும்.

தருமி சார் சில கேள்விகள்..

ஸல் அவர்கள் ஒலி பெருக்கி டெக்னாலஜி பற்றி எதாவது கூறியிருக்கிறாரா?

இஸ்லாத்திலிருந்து நிறைய நாத்திகர்கள் வருவதில்லை...ஏன்?(இதற்கு இஸ்லாமியகளின் பதில் தெரிந்ததே)

alisina விதிவிலக்கு. (http://www.faithfreedom.org/)

அந்த மதத்தில் மிக புத்திசாலித்தனமாக 'other option' ஐ எடுத்துவிட்டதுதான் காரணமா? அங்கு கேள்விகள் கேட்பது குற்றமா? அல்லது நீங்கள் குறிப்பிட்டதை போல சில பயமுறுத்தும் வசனங்களா? இல்லை எப்படியும் அந்த சுவனத்து இன்பங்களை அடையத் துடிக்கும் ஏக்க கனவுகளா?

இப்னு பஷீர் said...

தருமி அய்யா, இந்த விஷயத்தில் நீங்கள் நொந்து கொள்ள வேண்டியது உங்களையேத்தான்!

//நீங்கள் 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல?//

உங்கள் ஆ......ரம்ப கால பதிவுகளையும் (குறிப்பாக மதங்கள் பற்றியவை..) அவை தொடர்பாக மற்ற பதிவர்கள் உங்களிடம் முன்வைத்த கேள்விகளையும் அவற்றுக்கு நீங்கள் சொன்ன (அ) சொல்ல மறந்த (அ) சொல்ல முடியாமல் போன பதில்களையும் ஓரளவுக்கு ஞாபகத்தில் வைத்திருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்..

'நான் ஏன் மதம் மாறினேன்?' என்ற தலைப்பில் தொடர் பதிவுகள் எழுதினீர்களே, நினைவிருக்கிறதா? அதில் மற்ற மதங்களை ஒப்புக்கு சப்பாணியாக தொட்டு விட்டு இஸ்லாம் பற்றி கேள்விகளை அடுக்கினீர்களே, நினைவிருக்கிறதா? அந்த கேள்விகளுக்கு முஸ்லிம் பதிவர்கள் விளக்கமாக பதில் சொன்ன பிறகும் சில மாதங்கள் கழித்து அதே கேள்விகளை தூக்கிக் கொண்டு வந்தீர்களே.. அதுவாது நினைவிருக்கிறதா? கிருஸ்துவரான நீங்கள் நாத்திகராக மாறுவதற்கும் இஸ்லாம் பற்றிய உங்கள் அபத்தக் கேள்விகளுக்கும் என்ன தொடர்பு என்பதையாவது உங்களால் விளக்க முடிந்ததா? கிருஸ்துவம், பைபிள் பற்றி உங்களிடம் சிலர் கேள்விகள் கேட்டபோது, 'நான் அதில் அத்தாரிட்டி இல்லை' என்று நழுவினீர்களே, நினைவிருக்கிறதா? கிருஸ்துவத்தைப் பற்றியே சரியாக அறிந்திருக்காத நீங்கள், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுமுன் அதை விட்டு வெளியேறியதாக சொல்வது நம்பும்படி உள்ளதா? நீங்கள் பிறந்து வளர்ந்த மதத்தைப் பற்றியே சரியாக பதில் சொல்ல முடியாத நபர், இன்னொரு மதத்தைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தால் அவரது உள்நோக்கம் என்னவாக இருக்கும்? இஸ்லாம் பற்றிய உங்கள் கருத்துக்கள், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கப்படும் கேள்விகள் அல்ல..! 'இது இப்படித்தான்' என்று ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருப்பதைத்தான் உங்கள் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. கிருஸ்துவம் பற்றியே சரிவர அறியாத தருமி அய்யா அவர்கள் இஸ்லாத்தில் ஒரு அத்தாரிட்டி மாதிரி எழுதுவது முறையா? தெ.கா.வின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் கருத்து //எந்தவொரு விசயத்தையும் ஒரு தீர்க்கமான முடிவோடு அணுகும் பட்சத்தில், சொல்லப்பட்டிருக்க கருத்திலிருந்து எதுவுமே உள்வாங்கப் படுவதில்லை. ஏனெனில், வாசிப்பவரின் பின் மண்டையில் ஓட்டப் படும் படம் அந்த தீர்க்கமான முடிவு மட்டுமே.// இந்த கருத்து தருமி அய்யா அவர்களுக்கும் அப்படியே பொருந்துகிறதே!


துரதிருஷ்டவசமாக இவ்வளவு விஷயங்களும், எங்களைப் போன்றவர்களுக்கு நினைவில் இருப்பதால், நீங்கள் எவ்வளவுதான் நாத்திகர் என்ற போர்வையில் எல்லா மதங்களையும் சமமாக மதிப்பிடுவதாக சொல்லிக் கொண்டாலும், என் மனதில் உங்களைப் பற்றி 'நாத்திகவாதி' என்பதைவிட 'இஸ்லாமிய எதிர்ப்புவாதி' என்ற பிம்பம்தான் படிந்திருக்கிறது. சகோதரர் நல்லடியாருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் எழுதுவதில் இஸ்லாம் பற்றி எழுதுவது மட்டும் கவனிக்கப் படுகிறது. அவற்றுக்கு முஸ்லிம் பதிவர்களால் பதில் சொல்லப்படுகிறது.

உங்களைப்பற்றி இப்படி ஒரு பிம்பம் உருவாவதற்கு உங்கள் பதிவுகள்தான் காரணம் என்கிறபோது, நீங்கள் உங்களையே நொந்து கொள்வதுதானே முறை?

சகோதரரின் நல்லடியாரின் பதிவுகளின் எள்ளல் அதிகமிருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். பாவம்.. அவருக்கு உங்களைப்போல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கலையில் அனுபவமில்லை போலிருக்கிறது. அதற்காக அவரது பதிவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். எள்ளல் வார்த்தைகளை கருவேப்பிலைகள் போல எண்ணி தூக்கி எறிந்துவிட்டு அவரது கருத்துக்களுக்கு பதில் சொல்லுங்கள். நன்றி.

.. இந்த பின்னூட்டம் நல்லடியாரின் பதிவிலும் இடப்படும்..

பகுத்தறிவாளன் said...

அய்யா தருமி அவர்களே,

என்னை நினைவிருக்கின்றதா? இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா?

நான் பகுத்தறிவாளன்.

நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற காரணங்களை அடுக்கியதில் மிக முக்கியமான காரணமான //இயேசுவை கர்த்தர் காப்பாற்றாததைக்// குறித்து ஒரு கேள்வி - ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டு நான் போட்ட பின்னூட்டத்திற்கு விளக்கம் அளிக்காதது மட்டுமின்றி, இந்த நிமிடம் வரை அந்த பின்னூட்டத்தை உங்கள் "அந்த 9" பதிவில் அனுமதிக்கவும் செய்யாமல் மறைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

சொந்தமாக நான் பட்ட சோகக்கதைகளை(!) எழுத நினைத்து ப்ளாக் உலகத்துக்கு வந்த என்னை, பர்தாவைக் குறித்து நான் என் வாழ்வில் பட்ட ஓர் அனுபவத்தை வைத்து ஒரு பதிவு எழுதியதில் அழைக்காமலே வந்த விருந்தாளி போன்று வந்து எள்ளி விட்டு என்னை உங்கள் பக்கம் திரும்ப வைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

இந்த பதிவில் நீங்கள் எழுதியுள்ள பொன்னால் குறிக்கப்பட வேண்டிய ஒரு வாசகம்:

//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது?//

நீங்கள் அன்று என்னுடைய அந்த பர்தாவை குறித்த அனுபவத்தை எழுதியதில், என் அனுபவம் சார்ந்த கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திருந்தால் மேலே நீங்கள் கூறியதில் அர்த்தமிருக்கின்றது - கண்டிப்பாக உங்களைப்போன்றவர்கள் இந்த வாசகங்களை பயன்படுத்துவதில் ஒரு அர்த்தமிருக்கின்றது.

ஆனால் அந்த என்னுடைய பதிவில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பது நினைவுள்ளதா?

எழுதக் கூடியவனின் மதமும்/பின்னணியும் என்ன என்பது அவசியமில்லை எனக் கூறும் நீங்கள், அன்று நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை கூறிய போது, ஒழுங்காக அந்த கருத்துக்களுக்கு மட்டுமே பதிலளித்திருந்தால் மேலே கண்ட வார்த்தைகளை கூறுவதற்கு உங்களுக்கு தகுதியிருக்கின்றது.

அன்று என் பதிவில் என் அனுபவ கருத்துக்களை ஓர் எள்ளலுடன் எதிர்கொண்ட உங்களுக்கு பதில் தர வேண்டும் என்பதற்காகவே உங்கள் பதிவுக்கு வந்தேன்.

வந்த இடத்தில் தான் நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற காரணமாக கூறிய "அந்த 9"(இதனை பதிலுக்கு பதில் எள்ளலாகவே எடுத்துக்கொள்ளுங்கள்) கேள்விகள் அடங்கிய பதிவை கண்டேன்.

53 வருட காலம் அனுபவம் உள்ளவர், 53 வருட ஆராய்ச்சியில் பைபிளில் கண்டது என்ன?

"கர்த்தர் இயேசுவை கைவிட்டார். காப்பாற்றவில்லை" - இது நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய பிரதான காரணங்களில் ஒன்று.

சும்மா செவனே என்றிருந்த என்னை என் அனுபவ கருத்துக்களை எள்ளி இங்கே அழைத்து உங்கள் பதிவை படிக்க வைத்தீர்கள்.

நானோ உங்களை போன்று நாகரீகமின்றி செயல்படாமல், நீங்கள் கூறிய உங்களின் அனுபவ பைபிள் அறிவு சரியல்ல எனச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினேன்.

ஓர் நல்ல பேராசிரியர் என்ன செய்திருக்க வேண்டும்?

என் கேள்விக்கு தகுந்த விளக்கம் அளித்திருக்க வேண்டும். அக்கேள்வியில் நான் உங்களை எள்ளி நகையாடி ஒன்றும் பின்னூட்டம் இடவில்லையே.

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த பின்னூட்டத்தையே இதுவரை அனுமதிக்கவில்லை.

இதுவா உங்கள் நடுநிலைமை?

உங்கள் கருத்துக்களையே என் கேள்வி குழிதோண்டி புதைக்கும் என்பதால் தானே இன்று வரை என்னுடைய அந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை.

நல்லடியார் போன்றவர்களின் பதிவுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு //"அவர்களின் எள்ளல் தொனியிலான பதிவுகள் தான் காரணம்"// என காரணம் கூறியுள்ளீர்கள்.

உங்களின் "அந்த 9" கேள்விகள் பதிவில் போட்ட என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் இதுவரை அனுமதிக்காததற்கும் அதனை கண்டுகொள்ளாததற்கும் உண்மையில் அது தான் காரணமா? உங்கள் நெஞ்சைத் தொட்டு பதில் கூறுங்கள் பார்ப்போம்.

உங்கள் பதிவில் என் முதல் பின்னூட்டம், உங்களின் மதமாற்றத்திற்கு நீங்கள் குறிப்பிடும் காரணம் தவறானது என்று சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் மட்டும் தானே கேட்டிருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளும் நியாயவானாகிய 53 வருட அனுபவ பேராசிரியர் நீங்கள், குறைந்தபட்சம் அந்த என் பின்னூட்டத்தை மட்டுமாவது அனுமதிக்காததன் காரணம் - தங்களின் மதமாற்ற வைபவமே கேள்விக்குறியாகி விடும் என்பதனால் அல்லவோ?

என் பதிவில் வந்து, என் அனுபவ கருத்தை எள்ளியதோடு, உங்கள் பதிவில் என் நியாயமான கேள்வியை நீங்கள் புறக்கணித்ததும் தானே என்னை தொடர்ந்து உங்களை எள்ளி நகையாடி தொடர்பதிவுகளை போட வைத்தது. இதனை இல்லை என்று உங்களால் மறுக்க இயலுமா?

சரி கடந்து போனவைகள் அனைத்தையும் மறந்து விட்டு விடுவோம். வேண்டுமெனில் உங்களை எள்ளி நகையாடி நான் போட்ட பதிவுகளையும் வேண்டுமெனில் தூக்கி விடுகின்றேன்.

நீங்கள் கூறியது போன்று,

//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன்.//

உங்கள் கருத்தை மட்டுமே வைத்து கேள்வி எழுப்புகின்றேன். நீங்கள் பதிலளிக்க தயாரா?

நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய காரணங்களுள் மிக முக்கியமானது, //"இயேசுவை கர்த்தரால் காப்பாற்றாதது".//

"பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்தார்" என்று வருவதாக நான் கூறுகின்றேன்.

இதனைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

என் கருத்தை ஒத்துக் கொண்டு உங்களின் கருத்தை திரும்பப்பெற்றுக் கொள்கின்றீர்களா?

நீங்கள் மதம் மாறுவதற்காக கூறிய காரணங்களில் தவறுகள் உள்ளன என ஒத்துக் கொள்கின்றீர்களா?

இல்லை, பைபிளில் அவ்வாறு கிடையவே கிடையாது; இயேசுவை கர்த்தர் காத்ததாக பைபிளில் வரவே இல்லை என உங்களின் 53 வருட பைபிள் அறிவை வைத்து என்னிடம் சவால் விடுகின்றீர்களா?

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நீங்கள் குறைந்தபட்சம் இந்த பின்னூட்டத்தையாவது நடுநிலையுடன் அனுமதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

(இந்த பதிவோடு சம்பந்தப்பட்ட நல்லடியாரின் பதிவிலும், என் வசதிக்காக என் பதிவிலும் இப்பின்னூட்டம் பதியப்படும்.)

பகுத்தறிவாளன்.

எழில் said...

அன்புள்ள தருமி,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இங்கே இஸ்லாமிய சகோதரர்களை குறிவைத்தாற்போல இறுதியில் எழுதியிருந்ததை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கு இருக்கும் பரந்த மனம் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. என்னுடைய பதிவில் ஒரு பாகிஸ்தானியர் மசூதியால் வரும் நாய்ஸ் பொல்லூஷனை பற்றி பாகிஸ்தானிய பத்திரிக்கையில் புலம்பியிருப்பதை பதிவாக எழுதியிருக்கிறேன். அதனால், இந்தியாவில் மசூதியிலிருந்து வரும் நாய்ஸ் பொல்லூஷனை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்தியாவில் நடுத்தெருவில் இருக்கும் மசூதிகளை தொடக்கூடாது என்று பேசுபவர்கள், சவூதி அரேபியாவில் நபிகள் நாயகம் வீடு மற்றும் அவரது தோழர்களது வீடுகள் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை. அதுவும் இடிக்கப்பட்டது போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்ற பொதுநல நோக்கு கூட கிடையாது. அடுக்குமாடி கட்டிடம் கட்டி பணம் பண்ண வியாபாரிகளிடம் விற்றுவிட்டார்கள்.

ஆகவே, பொதுநல நோக்கு என்பதை இஸ்லாமிய தலைவர்களிடம் கூறினால், அவர்களே அப்படிப்பட்ட இடைஞ்சல்களை நீக்கிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

Narayanaswamy G said...

யாரோ யாருக்கோ குடுமிய பிடிச்சிருக்காய்ங்களோ?

Unknown said...

ம்...ம்...
*
ஒரு பழைய கிறித்துவர் (தற்போது எந்த மத நம்பிக்கைகளையும் ஏற்காமல் இருப்பதாகச் சொல்பவர்) தான் வாழும் இடம்,போகும் இடங்களில் காணும் Civic Sense சமாச்சாரங்களைப் பட்டியல் போடுகிறார். அவர் இந்து (சனாதன) கோவில்கள் ரோட்டில் கலகம் விளைவிப்பதைப் பற்றிச் சொன்ன போது எந்த இந்து (சனாதன) வாதியும் அவரை இந்து(சனாதன) எதிர்ப்பாளராகக் காணவில்லை. இஸ்லாமியர்கள் நடவடிக்கைகளைச் சொன்னவுடன் அவர் இஸ்லாம் எதிர்ப்பாளராக அடையாளம் கானப்படுகிறார். :-((
*
நண்பர்களே அவர் சொன்னவிதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்கூட நீங்கள் சார்ந்துள்ள நம்பிக்கைகள் (இந்து-சனாதன, இஸ்லாம், கிறுத்துவம், அதிமுக, திமுக, இரஜனி....இன்ன பிற நம்பிக்கைகள்) சார்ந்த விழாக்கள்/வழிபாடுகள் இந்தியாவில் Civic Sense உடன் நடந்தால் அனைவருக்கும் நல்லதே.
*
கடைசியில் இது மத விவாதமாக மாறிவிட்டது. :-(((((
*
எப்படி இந்த சமூக கேடுகளைக் களையலாம் என்பதில் விவாதம் அமைய வேண்டும்.
**
கட்சி விழாக்களில் அழியும் சொத்துக்களுக்கு கட்சிகள் பொறுப்பல்ல என்று அறிவித்த கலைஞர் , இதற்கும் " மத சம்பந்தமான கட்டடம்/விழாக்கள்/வழிபாடுகளில் ஏற்படும் எந்த சட்ட மீறலும் சட்ட மீறல் அல்ல " என்று ஒரு சட்டம் போட்டால் நல்லது.தருமி போன்றவர்களுக்கு குறை சொல்ல Civic Sense சமாச்சாரங்கள் கிடைக்காது. :-))

Narayanaswamy G said...

"தருமியின் குடுமி"னு ஒரு பதிவு போடலாமோ?

siva gnanamji(#18100882083107547329) said...

"Civilized reply"
Repeat!

Narayanaswamy G said...

இந்த எடத்துல ஏதோ விவகாரம் இருக்கர மாதிரி தெரியுது.......

சம்பந்தப்பட்டவுக வெவரம் சொன்னா நல்லாருக்கும்.

////"நோக்கியா போன் வாங்கியது வாங்கியதுதான். இனி எப்போதேனும் அந்த உரிமையாளர் இந்த போனை மாற்ற நினைக்கவோ, இல்லை அதன் தரம் பற்றிய ஐயங்கள் ஏதும் எழுப்பவோ, இந்த போனை விட்டு விட்டு வேறு போன் ஏதும் வாங்க நினைக்கவோ கூடவே கூடாது. அப்படியின்றி "...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், நோக்கியா கம்பெனி அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடும்" என்றால் ...?"///

தருமி said...

தெக்ஸ்,
என்னைப் பொறுத்தவரையில் - //நான் என் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் முழுமையாகத் திறந்து வைத்துள்ளேன் - கொடுப்பதற்கும், பெறுவதற்கும்.//

தருமி said...

குட்டிப் பிசாசு,
வந்து பொறுமை அதிகம்னு சொன்னாலும் சொன்னீங்க.. வரிசையா இன்னும் சிலரும் சொல்லிட்டாங்க..

தருமி said...

கு.பி. சொல்லி அதை வழிமொழியிறது மாதிரி ..

ராம்ஸ்
சீனு
துளசி டீச்சர்
நாணு,
பொன்ஸ்

எல்லோரும் நான் ரொம்ப பொறுமையா எழுதியிருக்கேன்னு சொல்லியிருக்கீங்க.
பொதுவாகவே நானும், பொறுமையும் தூரத்து சொந்தக்காரங்ககூட இல்லை.அதனால் நீங்க எல்லோரும் இப்படி சொன்னதும் என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெளிவா புரியாமப் போச்சு. ரெண்டு மூணு விளக்கம் - interpretation - இருக்கு; எதுன்னு தெரியலை. யார்ட்டயாவது கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.

எல்லோருக்கும் நன்றி.

தருமி said...

Raveendran Chinnasamy,
//Dont stop your questions ...//

நம்ம tagline வச்சிருக்கதே அதைதானங்க.
நன்றி

தருமி said...

ஜிரா,
அப்போ மற்ற பதிவெல்லாம் எப்படி போட்டதுன்னு சொல்றீங்க .. :(

தருமி said...

நந்தா,
நன்றி

தருமி said...

கல்வெட்டு,
ஒரு பதிவில் சொல்ல முடிவதைவிடவும் உங்கள் பின்னூட்டம் நிறைய கருத்துக்களைத் தந்துள்ளது.

பிடித்த சில வரிகள்:

//குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை தாங்களே கேள்விக்கு உட்படுத்தாதவர்களின் .. நம்பிக்கையை ...//

//வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு சுவர் வேண்டும்.//


//தனக்கென்று ஒரு அடையாளம் உருவாக்கத் தெரியாதவன் பிறர் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒழிந்து கொள்கிறான்.//

தருமி said...

பாபு மனோகர்,
//இஸ்லாத்திலிருந்து நிறைய நாத்திகர்கள் வருவதில்லை...ஏன்?(//

நீங்கள் கேட்கும் கேள்வி இஸ்லாமுக்கு மட்டுமின்றி மூன்று ஆபிரஹாமிய மதங்களின் தனிக் குணமாகவே எனக்குத் தெரிகிறது.சிறுவயதிலிருந்தே மதக் கல்வி ஆழமாகக் கற்று தரப்படுதல் என்பது ஒரு காரணம். அதைவிடவும் இன்னும் மனோரீதியான காரணங்கள் இருக்க வேண்டும். அதில் ஒன்று: தனது மதமே உண்மையான மதம்; தன் கடவுளே உண்மையான கடவுள் என்பது மனதுள் ஆழமாகப் பதிக்கப் பட்டு விடுவது.

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது நான் சார்ந்த மதத்தில் மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் திடீரென அப்படியே முழுவதுமாக மாறி, மதத்துக்குள் ஒன்றி விடுகிறார்கள்.one extreme to the other is a common phenomenon.உறவுகளிலே இப்படி ஆனவர்கள் உண்டு. de-addiction-க்கு மூன்றாம் முறையாக இறுதி முறையாகச் சென்றவர்; இனி பிழைப்பதே கஷ்டம் என்று மருத்துவர்களும், குடும்பத்தினரும் கைவிட்ட அந்த ஒரு மனிதர் இப்போது ... ! அவர்களிடம் பேசிப் பார்த்தது உண்டு. எப்படி, ஏன் இந்த திடீர் மாற்றம்? ஆனாலும் இதற்கு ஒரு தெளிவான விடை இதுவரை கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்குரிய ஒரு நல்ல சப்ஜெக்ட் தான்!

தருமி said...

பாபு,
ஒன்று சொல்ல விட்டு விட்டேனே... extreme கேசுகள்தான் இப்படி என்பதால் நானும் "அப்படி" ஆகிவிடுவேன் என்பது நண்பர்கள் பலரின் சவால்!

பார்ப்போம் ..
:)

தருமி said...

எழில்,
//அரேபியாவில் நபிகள் நாயகம் வீடு மற்றும் அவரது தோழர்களது வீடுகள் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை.//

நம்பமுடியவில்லை ; தவறான செய்தியாக இருக்கும்.

மற்றபடி நீங்கள் எழுதியவைகள் பலதும் எனக்குப் பிடிபடவில்லை.

தருமி said...

சிவஞானம் அண்ணா ஜி! :)
வேறொன்றுமில்லை; எனக்கு மூத்த ஒரே பதிவர் நீங்கள். பதிவுலகத்தில் பலர் உறவு முறைகளோடு பழகுகிறார்கள். எனக்கு அரிதான உறவு இதுதானென்று நினைக்கிறேன். (உங்களை விட்டா யாரை நானிப்படி அழைக்க முடியும்?)ஆகவே தான் இந்த "அண்ணா ஜி"!

தம்பியைத் தட்டிக்கொடுத்த தமையனுக்கு நன்றி..

தருமி said...

நாணு,
தருமி குடுமி யாரிடமும் மாட்டாதென்பது ( இருந்தால்தானே மாட்டும்?!) உங்களுக்குத் தெரியாதா என்ன?

தருமி said...

கடப்பாரை,
நானும் எதிர்பார்க்கிறேன்.

எழில் said...

தருமி அய்யா,
இந்த இணைப்பை பாருங்கள்.
இதனை ஒரு பதிவாக சில நாட்களுக்கு முன்னர் எழுதினேன்.

நன்றி
http://ezhila.blogspot.com/2007/06/blog-post_6206.html

நல்லடியார் said...

நண்பரே,

"கேள்விகள் கேட்பதன்றி வேரொன்றும் அறியேன்" என்ற முன்முடிவுடன் எழுதும் உங்களிடம் பதிலை எதிர்பார்ப்பது வீண்வேலை.

தனிமனித நம்பிக்கைகளை எள்ளல்களுடன் நீங்கள் எழுதியவைக்கான எதிர் வினைகளின் நியாயங்களைக் கண்டுகொள்ளாத நீங்கள், தனிமனித தாக்குதல் பற்றி நொந்து கொள்வது வியப்பாக உள்ளது.

மேற்கொண்டு என்ன சொல்ல?

அன்புடன்,

Thekkikattan|தெகா said...

கேள்விகள் கேட்பதற்கும் இரண்டு விதமான நிலைகள்(தகுதிகள்) தேவை.

1) ஏற்கெனவே தான் நிறைய படித்து, பார்த்து புரிந்து கொண்டதில் ஏற்படும் ஐயப்பாடுகளின் ஊடே கிளம்பும் கேள்விகள்; அதில் தீர்க்கம் கொண்டு பதிலை பெறுவதாக கொள்ள முடியாது.

2) அவ்வாறு புறப்படும் கேள்விகள் சும்மாச்சுக்கும் பொழுது போக்கிற்காக கேட்கப்படாமல், வைக்கபடும் பட்சத்தில் அக் கேள்விகள் எது போன்ற தாக்கத்தை வாசிப்பவர்களிடத்தேயும், அதற்கு பொறுப்பாக பதிலுரைப்பவர்களிடத்தேயும் ஏற்படுத்தக் கூடும் என்று அறிந்து தெரிந்து கேள்விகளை வைப்பது.

அதுவே தருமியின் கட்டுரைகளில் நான் காண்கிறேன்.

இல்லை இன்னும் அங்கேயே சென்று விளக்கமாக பதிலுரைக்க வேண்டுமோ?

பி.கு: தருமி நிலையில் நானும் அவரின் வயதில் எந்த "மதமும்" என்னை பிடித்து விடாமல் எல்லா மார்க்கத்தையும் தெளிவாக தொட்டுப் பார்த்து, படித்து அனுபவிக்க அதே மனதோடும் தெளிவோடும் இருப்பேன் என்று நம்புகிறேன்.

ஓகை said...

//குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை தாங்களே கேள்விக்கு உட்படுத்தாதவர்களின் .. நம்பிக்கையை ...//

இக்கூற்றில் சற்றும் உண்மை இல்லை. என்னையும் சேர்த்து பலரை நான் அறிவேன்.

எல்லோருடைய எண்ண ஓட்டத்தையும் அறிந்தாற்போல் கூறுவது எவ்வகையில் சரி?

//வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு சுவர் வேண்டும்.//

வெற்றிடம் என்பதும் ஒரு நம்பிக்கைதான். வெற்றிடத்தில் ஏன் நிற்க வேண்டும்? வெற்றிடம் விருப்பத் தேர்வுகளில் ஒன்றே. விரும்பாதவர் வேறிடம் செல்வர்.


//தனக்கென்று ஒரு அடையாளம் உருவாக்கத் தெரியாதவன் பிறர் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒழிந்து கொள்கிறான்.//

நாத்திகம் என்பதும் ஓர் அடையாளம்தான். அதற்குள் ஒளிந்து கொள்ளாததால் இந்தக் குற்றச்சாட்டு.

Anonymous said...

//தருமி said...
எழில்,
//அரேபியாவில் நபிகள் நாயகம் வீடு மற்றும் அவரது தோழர்களது வீடுகள் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை.//

நம்பமுடியவில்லை ; தவறான செய்தியாக இருக்கும்.
//


தருமி,

ஐயுறத்தேவையில்லை. அது உண்மையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், வகாபிக்களின் சித்தாந்தங்கள், சுன்னி இஸ்லாம் தோன்றிய விதம், முகமது அவர்களின் அந்திமக் காலத்தில் அவரது குடும்பத்தார்களுக்குள் (அவரது மனைவிமார்கள் + மாமனார்கள்+ மருமகன் ... சுருங்கச் சொன்னால் அன்றைய சக்களத்திச் சண்டை எனலாம்)நிகழ்ந்த சண்டைகள், ஷியாக்கள் சுன்னிக்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு(இவர்கள் முகமதின் குடும்பத்தினருக்கு எதிரானவர்கள் என்பது) போன்ற பலவிஷயங்களை, அதன் பின்னால் இருக்கும் வன்முறைக் கோட்பாடுகள், முகமது எடுத்த பிடியில்லாக் கத்தி அவரையும் அவரது குடும்பத்தையுமே பதம் பார்த்தது போன்ற பலவிதமான வரலாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.


மேலோட்டமாக , சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வகாபிக்கள் முகமதுவுக்கு எதிரானவர்கள், முகமதுவை அழிக்க நிர்ப்பந்தம் காரணமாக இஸ்லாத்தில் வந்து இணைந்துகொண்ட இஸ்லாத்தின் எதிரிகளின் திரிபின் விளைவே இந்த வகாபியிசம் என்கிறது ஒரு இஸ்லாமிய பிரிவு. வகாபிக்களோ, முகமதை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி அவர் சொல்லாததையெல்லாம் சேர்த்து கிறித்துவம் உண்மையான இறைமார்க்கத்தில் இருந்து பிரிந்தது போன்ற ஒரு நிலை இஸ்லாத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முகமது சம்பந்தப்பட்ட இடங்களுக்கு, விஷயங்களுக்கு , அவரது குடும்பத்தார்களின் மண்ணறைகளுக்கு அதீத புனிதத்துவம் கற்பிக்கக்கூடாது என்பதால் இப்படிச் செய்கிறோம் என்கிறார்கள்.

Anonymous said...

எழில்,

//ஏனெனில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கு இருக்கும் பரந்த மனம் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. //

என்ன அய்யா காமெடி செய்கிறீர்களா? இஸ்லாமிஸ்டுகள் தாம் தாங்கள் இவ்வளவு பெரிய சமுதாயம், இவ்வளவு அதிகமாய் வளர்ந்து வருகிறோம் என்று தினம் தினம் பட்டியல் போட்டு வருகிறார்களே(அது சரியா தவறா என்பது வேறு விஷயம்)?

அது சரி, இங்கே சிறுபான்மை என்பதால் இப்படி இருக்கிறார்கள் என்றால், பாகிஸ்தானில் , பங்களாதேஷில் என்ன வாழ்கிறது? அங்கே ஒரு சாம் ஜார்ஜோ , நேசகுமாரோ இதே கேள்விகளை கேட்டால் புன்னகையுடன் இஸ்லாமிஸ்டுகள் பதிலளிப்பார்களா?

முடிந்தால் சிங்கப்பூரிலிருந்து பாகிஸ்தான் போய் கேட்டுப் பாருங்களேன், சவுதிக்குக் கூட போகவேண்டாம்!

Unknown said...

//ரோட்டில் குப்பை போடாதே என்றோ அல்லது சாலைவிதிகளை மதி என்றோ எந்த மதமும் சொல்வது இல்லை.//
கல்வெட்டு அவர்களே. நீங்கள் ஏற்றுக் கொண்டதில் இல்லையென்று சொல்லலாம். எதிலுமே இல்லையாவென்று படித்து அல்லது கேட்டுப் பாருங்கள்.
மனிதர்கள் செல்லும் வழியில் மனிதர்களுக்கு தீங்கு தருகின்ற எது இருந்தாலும் அதை அப்புறப்படுத்தி துப்பறவு செய்வது (இஸ்லாமிய அடிப்படையாகிய) ஈமானின் கடைசிப்பகுதி என நபி (அவர் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்) எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

Anonymous said...

//மனிதர்கள் செல்லும் வழியில் மனிதர்களுக்கு தீங்கு தருகின்ற எது இருந்தாலும் அதை அப்புறப்படுத்தி துப்பறவு செய்வது (இஸ்லாமிய அடிப்படையாகிய) ஈமானின் கடைசிப்பகுதி என நபி (அவர் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்) எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
//

சுல்தான் சொல்வதைப் பார்த்தால் நபி அவர்கள் சொல்வதற்கு நேரெதிராக செயல்படுவதுதான் ஈமானின் முதலும் கடைசியுமான பகுதிகள் என்ற முடிவோடு இஸ்லாமியர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

எள்ளலுக்கு மன்னிக்கவும்.

Post a Comment