Monday, June 04, 2012

573. கிறித்துவம்


கிறித்துவம் 16-ம் நூற்றாண்டில் கத்தோலிக்கம், பிரிவினைச் சபை என்று இரண்டாகப் பிரிந்தன. ஆனாலும் அதற்கு முன்பேயே கிறித்துவம் பல பிரிவுகளாகவும் இயங்கி, ஒன்றோடு ஒன்று இயைந்தும் வந்துள்ளன. ஆனால் 16-ம் நூற்றாண்டு ஏற்பட்ட பிரிவு இம் மதத்தை இரு தனிக்கூறுகளாகப் பிளந்தன - கத்தோலிக்கம் & பிரிவினையாளர்கள் (protestants) என்று பிளவு பட்டன. தலைமைகளும் பிரிந்தன. வேறு பல வேறுபாடுகளும் கிளைத்தெழுந்து இரு 'அணிகளும்' இனியும் ஒன்றாக இணையாது என்ற நிலைக்கு வந்துள்ளன. ஏனெனில் அடிப்படையில் சில முரண்பாடுகள் .. வேற்றுக் கருத்துகள்...   கத்தோலிக்கத்தில் புனிதர்கள் (saints), மேரியன்னை, ஏசு, பிதா என்று வகை வகையாகக் கும்பிடுவார்கள். ஆனால் பேச்சளவில் மட்டும் புனிதர்களையும், மேரியையும் கும்பிடுவதில்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனாலும் தனிப்பட்ட புனிதர்கள், மேரியன்னை மேல் மிகுந்த பக்தி கொண்டோர் அதிகம். கடவுளை மூன்று  ஆட்களாக, ஆனால் ஒரே தெய்வமாகக் கருதும் ஒரு விநோதம் உண்டு. Holy Trinity என்பார்கள். இதை யாரும் விளக்க முடியாது. இஸ்லாமில்விதிவிளக்கப்பட முடியாதது என்பார்கள். அது போல், புனித அகுஸ்தினார் போன்ற புனிதர்களின் பெயரைச் சொல்லி, இதை மனித மூளையினால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தேவ ரகசியம் என்று சொல்லித் தப்பிப்பதுண்டு.


இந்த Holy Trinity-ல் கத்தோலிக்க மரபில் ஏசுவிற்குத்தான் முதலிடம். பரிசுத்த ஆவி எனப்படும் Holy Ghost பிரிவினைச் சபைக்காரர்கள் முக்கிய இடம் கொடுத்த பின் கத்தோலிக்கர்களும் இப்போது ஏறத்தாழ இருபது முப்பது ஆண்டுகளாக அவர்களும் சிறப்பிடம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். பொதுவாக, கடவுள், கர்த்தர் போன்ற வார்த்தைகளுக்கு ஏசு மட்டுமே உரித்தானவராகத்தானிருந்தார். இப்போது கொஞ்சம் வேறுபாடுகள் வந்துள்ளன. பரிசுத்த ஆவிக்கும் கத்தோலிக்கத்தில் இப்போது தனிச் சிறப்பும் சேர்ந்துள்ளது. 


இப்பத்தியில் நான் கூறியிருப்பது எல்லாமே இத்தனை ஆண்டுகளாகக் கத்தோலிக்கத்தைப் பின்பற்றிய எனது அனுபவத்தின் மேல் கூறப்பட்டவையே. எனது சிறுவயதில் பரிசுத்த ஆவிக்கு ஜெபங்களில் அதிக சிறப்பிடம் இருந்ததில்லை. பிரிவினைக்காரர்கள் தாங்கள் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் தான் நான் அதிகமாக இந்த பரிசுத்த ஆவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது கத்தோலிக்கரும் பரிசுத்த ஆவிக்கு சிறப்பிடம் கொடுக்க ஆரம்பித்ததை கடந்த 30 ஆண்டுகளில் தான் அதிகம் பார்க்கிறேன்.


பிரிவினைக்காரர்கள் புனிதர்களின் பெயர்களை வைத்துக்கொள்வது, புனிதர்களில் பெயர்களில் ஆலயங்களைக் கட்டுவது இதோடு சரி. அவர்கள் மேல் தனிப்பட்ட ஜெபங்களோ, நம்பிக்கைகளோ வைப்பதில்லை. அதே போல் மரியன்னை மீது கத்தோலிக்கர் வைத்துள்ள ஈடுபாடு இங்கில்லை. ஏசுவின் அன்னை என்பதோடு அவர்கள் மரியாதை நின்றுவிடும். அவரை நோக்கி ஜெபங்கள் ஏதும் செய்யும் பழக்கம் கிடையாது. பிரிவினைக்காரர்களுக்கு சுதனும் (அதாவது, ஏசுவும்) பரிசுத்த ஆவியும் மிக முக்கியமானவர்கள். நாட்கள் ஆக ஆக என் வாழ்வில் நான் பார்த்தது என்னவெனில், பிரிவினைக்காரர்களுக்குப் பரிசுத்த ஆவி மேல் அதிக பக்தியும் நம்பிக்கையும் உண்டு. இவர்களது சத்தமானகோஷத்தால் ஈர்க்கப்பட்ட கத்தோலிக்கரும் பரிசுத்த ஆவி மேல் இப்போது அதிக ஈடுபாட்டைக் காண்பிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.


பழைய ஏற்பாட்டில்பிதாவிற்குத்தான் முக்கிய இடம். புதிய ஏற்பாட்டில் ஏசுவிற்கே முக்கிய இடம். சில இடங்களில் மட்டும் பரிசுத்த ஆவிபற்றிப் பேசப்படும். ஆனால் இதையும் தாண்டி யெஹோவாஎன்றோரு சின்ன அமைப்பும் உண்டு. இவர்கள் யூத வழி போல், பிதாவை மட்டுமே கடவுளாகக் கொள்பவர்கள். இவர்களிடம் சுதன், பரிசுத்த ஆவி இருவருக்கும் இடமில்லை!
 ‘யெஹோவாக்காரகளும், பெந்தகோஸ்தே சபையினரும் மதத் தீவிரவாதிகள் என்பது என் கணிப்பு. பெந்தகோஸ்தே சபையினர் பரிசுத்த ஆவி மேல் அதிக நம்பிக்கையுள்ளவர்கள். அதோடு இதிலும் சிலர் தாங்கள் நோய்வாய்ப்பட்டாலும் மருந்து ஏதும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சாமி கொடுத்ததை சாமியே எடுக்கட்டுமே என்ற நம்பிக்கை. நோய்வாய்ப்பட்ட சிலரைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்,. வலி நீங்குவதற்குக் கூட இவர்கள் மருந்து ஏதும் எடுக்க மாட்டார்கள்.  புண்ணைக் கொடுத்தவர் மருந்தையும் கொடுத்திருக்கிறாரே என்றாலும் பிடிவாதமாக ம்ருந்தை ஒதுக்கி விடுவார்கள். உடைகளிலும் தனித்து விளங்குவார்கள். பாரதி ராஜா ஸ்டைலில் புனிதப் புறாக்கள் மாதிரி உடை! இவர்களைப் பார்க்கும்போது  சிரிக்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்! 


யெகோவா சபைக்காரர்கள் ஏறத்தாழ இஸ்லாமியமும் யூதமும் சேர்ந்த ஒரு கலவை மாதிரி போலும். ஏக இறைத் தத்துவம் - அதாவது பிதாவை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். Holy Trinity தத்துவம் இங்கு கிடையாது. ஆனால் பிதாவிடம்/கடவுளிடம் போவது ஏசுவின் வழியாக மட்டும். ஏசு சொன்னது போல் அவரே பிதாவிடம் போகும் வழி. பரிசுத்த ஆவி ஒரு கடவுளாக or at least part of Trinity or part of a god ஆக மதிப்பிடப்படுவதில்லை. It is just an 'energy' and not an entity.


இவர்களிடம் ஒரு வினோதம்! ரத்தத்தின் மேல் இவர்களுக்கு ஒரு பகைமை! மாம்சத்தை அதன் உயிரான ரத்தத்தோடே புசிக்க வேண்டாம். (ஆதி.9: 3,4) ‘உங்களில் ஒருவனும் ரத்தம் புசிக்க வேண்டாம். (லேவி: 17:11,12) இவர்கள் எந்த நிலையிலும் ரத்த தானத்திற்கு எதிரானவர்கள். எந்த நிலையிலும் ரத்த தானம் கொடுப்பதை, பெறுவதை மறுக்கிறார்கள். (இதற்கு அறிவியல் விளக்கமும் அவர்கள் தருகிறார்கள்!!)ம்மொத்தம் 75 லட்சம் பேர் இதில் இருப்பதாகக் கூறினார்கள்.
Seventh Day Adventists (SDA) என்றொரு குழுவும் உண்டு. இவர்களும் பெந்தகோஸ்தே மாதிரி ஆட்கள் தான். ஆனால் இவர்கள் குழு ஆரம்பித்த வரலாறு கொஞ்சம் (எனக்கு) வேடிக்கையாக உள்ளது.

William Miller என்பவரே 1831-ல் இக்குழுவை ஆரம்பித்தவர். இவர் மார்ச் 21, 1843 -லிருந்து மார்ச் 21, 1844-க்குள் இந்த உலகம் முடிவுக்கு வரும் என்றார். இன்னொரு முக்கிய நபர் Ellen G. White. சிறு வயதிலேயே தலையில் அடிபட்டுச் சிரமப்பட்டவர்.தனக்கு கடவுளின் தரிசனம் கிடைத்ததாகவும் அதன் மூலம் கிடைத்த செய்திகளையும் அளித்துள்ளார். அவருக்குக் கிடைத்த தரிசனம்தலையில் பட்ட அடியால் கிடைத்த post-traumatic experience என்று கருதப்படுகிறது. இந்த இருவரும் வளர்த்த குழு இன்று Seventh Day Adventists (SDA) என்றிருக்கிறது.


கிறித்துவத்தில் கடந்த நூற்றாண்டில் நடந்த இரு பெரும் தற்கொலைகள் பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் மட்டுமின்றி அச்சத்தையும்அருவருப்பையும், கவலையையும் தருகின்றன.
HEAVEN GATE என்றொரு குழு Marshall Applewhite 1970-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு U.F.O. RELIGION. இவர் தனக்கும் ஏசுவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று கூறி வந்துள்ளார். மார்ச் 26, 1997 தேதியில் 39 நபர்கள் இவர்களது இடத்தில் தற்கொலை செய்து மடிந்துள்ளார்கள்.


The People's Temple என்ற பெயரில் இன்னொரு பெரும் குழு. James Warren (Jim) Jones - இதன் தலைவர். இங்கிருந்து வேறொரு கிரகத்திற்குப் போவதாக அவர்களது நம்பிக்கை. காவல் துறை இவர்களது தங்குமிடத்தில் மொத்தம் 914 : 638 பெரியவர்கள் & 276 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததைக் கண்டு பிடித்தது.

 
இவ்வாறு பல வகையில் பகுக்கப்பட்ட கிறித்துவத்தில் இப்போதோ மத வளர்ச்சி என்ற பெயரில் மூலைக்கொரு சபையும், முக்குக்கு ஒரு சபையும் கிளர்ந்துள்ளன. முன்பு ஏதாவது கொள்கை அடிப்படையின் பெயரில் சபைகள் பிரிந்தன. ஆனால் இப்போது 'மத வளர்ப்பு' ஒரு தொழிலாக முன்னேறி விட்டது. தனி நபர்கள் தங்கள் தங்கள் சபையை உருவாக்குகிறார்கள். ஒரு மாடி வீட்டின் மூலையில் நாலைந்து பேருடன் ஒரு சபை ஆரம்பிக்கப்படும். கூட்டம் பெருகும். Public address system ஒன்று வாங்குவார்கள். இன்னும் கூட்டம். காணிக்கையும் சேரும். சபை ஆரம்பித்த 'குரு' முதலில் தனக்கொரு நல்ல வீடு கட்டிக் கொண்டு. அதன்பின் சேரும் காணிக்கையில் பக்கத்திலேயே ஒரு shed கட்டி அதில் தன் ஜெபக்கூட்டங்களை நடத்துவது தான் இப்போதைய வழமை. அதன் பின் அந்த shed வளர்ந்து .. கிளைப்பது .. குருவின் ரீச்சைப் பொறுத்தது. so many business tactics. MNCக்கள் தோற்றுவிடும். இப்போது இவை export & import என்று பெரும் தொழில் வளர்ச்சி கண்டுள்ளன. 


மலை வாழ் மக்கள் என்றெல்லாம் போய்ஊழியம்செய்கிறார்கள். ஊழியத்தோடுநின்றால் பரவாயில்லை; “பிரதி பலனாகமத மாற்றங்கள் நடக்கின்றது. நான் நம்பிக்கையோடு இருந்த காலத்தில் என்னிடம் நன்கொடை வசூலிக்க வந்தவரைப் பார்த்த போது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தது.ஏனெனில் எங்கோ தமிழ் நாட்டில் பிறந்த இவர் seven sisters எனும் கிழக்கு மாநிலங்களின் ஒன்றில் காடு மேடு என்று பாராமல், அறிவியல் தொடாத இடத்தில் உள்ள மக்களுக்குஊழியம்செய்கிறார். என்ன செய்வீர்கள் என்றேன். SOAP, SOUP & SOUL என்றார். அப்படியென்றால் என்ன என்றேன். SOAP - சுகாதாரம் கற்றுத் தருகிறோம்; தடுப்பூசி கொடுக்கிறோம். SOUP - நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம். SOUL - எங்கள் மதத்தைக் கற்றுத் தருகிறோம் என்றார். 


எனக்கு ஒரு கேள்வி. வயத்துக்கு இல்லாதது கிட்ட நல்லது பண்ணினால் போற இடத்துக்கு நல்ல புண்ணியம்தான். ஆனால் அந்த மனுசங்க மனசு மாறி கிறித்துவத்திற்கு மாறுவது என்பது அவர்களுக்குக் கிடைக்கும் உணவுக்கும், மருந்துக்கும் தானே?  விவாதித்து, தங்களது பழைய மத வழக்குகளை விட இந்த மதத்தில் பெரிய தத்துவங்கள், உண்மைகள், வரலாறுகள் இருக்கின்றன என்று பார்த்தா மதம் மாறுகிறார்கள். சோறு கண்ட இடம் சொர்க்கம் தானே அவர்களுக்கு! இதை அவரிடம் கேட்டேன். ஆக  நீங்கள் பணம் செலவு செய்து, பணத்தை விடவும் வேறு எதையும் விட பெரிதான ஆன்மாவை வாங்கி விடுகிறீர்கள். இது சின்னப் பிள்ளையிடம் மிட்டாய் கொடுத்து அதன் கழுத்திலிருக்கும் தங்க செயினை ஏமாற்றி வாங்குவது போல் தானேஎன்று  கேட்டேன். உங்கள் நன்கொடையே வேண்டாமென்றுசொன்னார். மனசு கேக்காமல் இதையெல்லாம் பேசுவதற்கு முன் நான் நினைத்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். கடவுளோ, மதமோ ஏதோ ஒன்றை வைத்து இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்ற நினைப்பில் அதைக் கொடுத்தேன்.


இது மாதிரி கஷ்டப்பட்டு மதம் மாற்றுவோர் ஒரு பக்கம் என்றால் இருந்த இடத்திலிருந்தே பெரும் ஊழியம்செய்வோர் பெரிய புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  யார் கேட்டாலும் கடவுளுக்குக் காது கேட்கணும். கடவுளுக்கு மட்டும் selective ears இருக்கிறதா என்ன? ஆனால் கிறித்துவர்களில் பெரும்பான்மையோர் அவர் ஜெபித்தால் நடக்கும்; இவர் கேட்டால் சாமி கொடுக்கும்என்ற தவறான நம்பிக்கைகளோடு இருக்கிறார்கள். பிரசங்கிகளுக்கு இது நிறைய வசதியாகி விட்டது. என் பிள்ளை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் நான் என் பிள்ளைகளுக்காக கடவுளிடம் வேண்டினால் அது சரி; ஆனால் காசு கொடுத்து ஒரு பிரசங்கியை ஜெபம் செய்யச் சொல்கிறார்கள். உங்களுக்குத் தலைவலி. நீங்க சாமிட்ட கேளுங்க. எதுக்கு Xக்கும்  Yக்கும் காசு கொடுத்து, உங்க தலைவலிக்கு  அந்த ஆளிடம் போய் ஜெபிக்க சொல்றீங்க? எப்படியோ கிறித்துவ நம்பிக்கையாளர்களின் இந்த weakness-யைப் பயன்படுத்துகிறார்கள் இந்தப் பிரசங்கிகள். அவர்களில் காட்டில் இப்போவெல்லாம் ஜோன்னு எப்பவும் மழைதான்!  shedகள் எல்லாம் இப்போது வளர்ந்து மாட மாளிகைகள் ஆகி விட்டன. தினந்தோறும் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ... இதில் நம்பிக்கையுள்ளவர்களின் முட்டாள்தனத்திற்கு (gullibility) இன்னொரு சின்ன உதாரணம்: இந்தப் பிரசங்கிகள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் இந்தப் பிரசங்கிகள் எவ்வளவு கேவலமான குரலில் பாடினாலும் ரொம்ப மகிழ்ச்சியோடு அந்த ஒலிநாடாக்கள், குறுந்தகடுகளை வாங்கி ஆஹா .. என்னே பாடல்!என்று வாங்கி அதைக் கேட்பதைப் பார்க்கும்போது நம்பிக்கைகளுக்கு கண்ணில்லை என்பதோடு இல்லாமல் .. காதும் இல்லையென்றுதான் தோன்றுகிறது. 

-----------
எனக்குப் பதில் தெரியாத ஒரு கேள்வி. பதிலிருப்போர் விளக்கவும்.

http://pagadhu.blogspot.in/2012/07/blog-post.html என்ற பதிவில் சொல்லப்பட்டவை:

//“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//

//இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//

இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?


25 comments:

Vetirmagal said...

என்னெல்லமோ செஞ்சு காலத்த தான் எல்லாரும் கழிச்சாங்களே தவிர மனித தன்மை மேம்படணும்கிறத பத்தி யாரும் அதிக கவலைப்ப்படவில்லை என்று தோன்றுகிறது!

Anonymous said...

நண்பரே நெத்தியடி . நீங்கள் சொன்ன பல விடயங்களை ஆமோதிக்கின்றேன். குறிப்பாக ஒலிநாடா விடயம் ... ! ஹிஹி .. என்னக் கொடுமையாக பாடுவார்கள் தெரியுமா ?

DEVAPRIYA said...

ஒரு நல்ல பதிவு.

பழைய ஏற்பாடு என்னும் யூதர்கள் புராணக் கதைகளில் வரவேண்டிய கிறிஸ்து என்பதே இல்லை.
அவ்வப்போது அடிமைப் பட்டபோது, பெரிய ராஜா தாவீது பரம்பரை வீரன் எதிரியை வீழ்த்துவான் என்றதை அதீதமாக அர்த்தப்படுத்திய மூட நம்பிக்கையே -உலகம் அழியும் அதற்குமுன் கிறிஸ்து என்னும் மூட நம்பிக்கை.

கிறிஸ்து, இறுதி தூதர் மேசியா என்பவை பழைய ஏற்பாட்டில் இல்லை.
http://devapriyaji.activeboard.com/t49443203/topic-49443203/
இன்று 25000க்கும் அதிகமான பிரிவுகள் கிறிஸ்துவத்தில்.

உலகம் அழியும் என யூத-கிறிஸ்துவ-இஸ்லாமில் தோன்றிய பல இறுதிக் கிறிஸ்துக்கள்
http://newindian.activeboard.com/t48858757/christs-many-world-ending/

Unknown said...

நல்ல பதிவு நண்பரே முட்டாள்கள் இருக்கும் வரை மூடநம்பிக்கை பிரச்சாரம் தொடரும்.அதில் மூழ்கும் மூடர்களின் எண்ணிக்கையும் தொடரும்...

இனியவன்...

suvanappiriyan said...

சகோ இக்பால் செல்வன்!

//நண்பரே நெத்தியடி . நீங்கள் சொன்ன பல விடயங்களை ஆமோதிக்கின்றேன். குறிப்பாக ஒலிநாடா விடயம் ... ! ஹிஹி .. என்னக் கொடுமையாக பாடுவார்கள் தெரியுமா ? //

உடல்நிலை சரியாகி விட்டதா? வழக்கம் போல் பதிவுகளை எதிர் பார்க்கலாம். வாரம் இரண்டு பதிவு கொடுங்கள். உடம்பை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

தருமி said...

தேவப்பிரியா
உங்களுடைய தொடர்பு கிடைக்குமானால் நன்று. முடிந்தால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

சார்வாகன் said...

அருமையான பதிவு,
நாம் பள்ளிப் படிப்பு அனைத்துமே ரோமன் கத்தோலிக்கப் பள்ளி என்பதால் அது பற்றி நன்கு தெரியும்.இந்து மதம் ரோமன் கத்தோலிக்கம் இடையே அதிகம் வித்தியாசம் இருப்பதாக நினைஅப்பது இல்லை.

நல்லொழுக்கப் பாடம் எடுத்த ஒரு பாதிரியின் வேத புத்தக ஞானம்[மத ஒப்பீட்டு ஆய்வில் முனைவர் பட்டம்] வியப்பு ஏற்படுத்தியது. அவர் கூறுவதை சரி பார்க்க கொடுக்கப்பட்ட மத புத்த்கத்தை சரி பார்த்தே நம் ஆய்வு தொடங்கியது.
ரோம அரசன் கான்ஸ்டன்டைனின் புராதன மதம்+கிறித்த்வ கொள்கை இரண்டும் பெற்றெடுத்த குழந்தைதான் இம்மத பிரிவு.

அரசன் சாலமனுக்கு முந்திய வரலாற்றுக்கு ஆதாரம் இல்லை எனவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இயேசு எனப‌வரும் இருந்திருபாரா என்வே சந்தேகம் எழுகிறது.

மற்றாபடி இதர பிரிவுகள் எல்லாம் மதத்தை புனிதப் படுத்துகிறேன் என்று கிளம்ப்பிய கூட்டம்.மத பிரச்சாரம்,மத மாற்ரம் எல்லாம் கல்லா கட்டும் விளம்பர தொழில்.

எந்த மதம் ,பிரிவு ஆக இருந்தாலும் அவற்றுருக்கு ஆதாம் இல்லை என்பதை உணர்ந்து மதத்தின் பொருந்தா செயல்களை வரலாற்றுத் தவறுகளை ஒத்துக்கொண்டு எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ஆவண செய்ய வேஎண்டும் என்பதே நம் கருத்து.

நன்றி

அ. வேல்முருகன் said...

இன்றும் பால் தினகரன், தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஜெபிக்கிறார். தேர்வில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ, இவர் சாம்பாதிக்கிறார். கட்டிடங்களாக வாங்கி குவிக்கிறார்.

கிருத்துவத்தில் கத்தோலிக்கம் என்பது ஒரு பிரிவும், புரோட்டஸ்டன்ட்தான் ஆயிரக்கணக்கான குழு என்றும் கேள்விப்பட்டேன். இதில் புரோட்டஸ்டன்ட் பற்றி மிகவும் விளக்கியுள்ளீர். கத்தோலிக்கம் ஒரே ஒரு கோஷ்டிதானே

கத்தோலிக்கம், போப் என்று வாழ்ந்த இங்கிலாந்து தேசம், நாடு பிடிக்கும் ஆசையில் ஒரே நாளில் புரோட்டஸ்டன்டாக மாறிய வரலாறும் உண்டு.

ஆக மண், பொன், பணம் என்றால் எப்படி வேண்டுமானாலும் மனிதன் மாறிக் கொள்கிறான்

அந்த வரலாறு தொடர்கிறது

G.Ragavan said...

நம்பிக்கைன்னு தலையில் உக்காந்துட்டா அதை யாரும் ஒன்னும் பண்ண முடியாது. என்னையும் சேத்துதான்.

இப்ப என்ன பிரச்சனைன்னா... இப்ப மட்டுமல்ல.. எப்பவுமே...

எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்பதுதான்.

மனிதர்களுக்கு வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் துன்பம் வருகிறது. எந்த மருந்தைச் சாப்பிட்டால் நோய் சரியாகும் என்பது தேடிப் போவது போல் தேடித்தேடி வழிபடுகிறார்கள்.

அதனால்தான் இன்றைய மனிதபுனிதர்களின் மீது நம்பிக்கை வருகிறது. நித்தியானந்தாவைப் பாருங்கள்.. இன்னும் அவர் மதுரை ஆதீனமாகத்தானே தொடர்கிறார். யாரால் என்ன செய்ய முடிகிறது!

shakiribnu said...

அன்புள்ள தருமி,
முகம்மதுவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதாரம் கூட இயேசுவுக்கு கிடையாது.
இயேசு இருந்த ஆதாரமே கிடையாது என்பதை விட இயேசு ஒரு mythological figure என்பதற்கு ஆதாரமே அதிகம். மேலும் இயேசு பிறந்ததாக சொல்லப்படும் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே இயேசு மதம் இருந்திருக்கிறது. அதன் வழியில் வருபவரே பவுல் அடிகள். பவுல் எந்த இடத்திலும் இயேசுவின் வரலாற்றையோ, அல்லது இயேசுவின் போதனையையோ கூறுவதில்லை என்பது மட்டுமல்ல, தெரிந்ததாகக் கூட காட்டிகொள்வதில்லை என்பது எல்லா கிறிஸ்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிய பிரச்னை.

இந்த வீடியோவையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=MvleOBYTrDE

shakiribnu said...

http://www.youtube.com/watch?v=QDDs8HgOZ4o&feature=related

exodus நடந்ததற்கு ஆதாரமே கிடையாது

shakiribnu said...

எகிப்திலிருந்து யூதர்கள் என்ற இனம் வெளியே போனதையோ, அல்லது யூதர்களின் கோவில் இடித்த கதையை சொல்லும் இயேசு புராணத்தை பற்றியோ ...இதனைப் பற்றியெல்லாம் ஏன் தமிழர்கள் கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம் :-))

பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..:-))

Unknown said...

/இந்தப் பிரசங்கிகள் எவ்வளவு கேவலமான குரலில் பாடினாலும் ரொம்ப மகிழ்ச்சியோடு அந்த ஒலிநாடாக்கள், குறுந்தகடுகளை வாங்கி ‘ஆஹா .. என்னே பாடல்!’ என்று வாங்கி அதைக் கேட்பதைப் பார்க்கும்போது நம்பிக்கைகளுக்கு கண்ணில்லை என்பதோடு இல்லாமல் .. காதும் இல்லையென்றுதான் தோன்றுகிறது.
/

:)

Unknown said...

/எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்பதுதான்.

மனிதர்களுக்கு வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் துன்பம் வருகிறது. எந்த மருந்தைச் சாப்பிட்டால் நோய் சரியாகும் என்பது தேடிப் போவது போல் தேடித்தேடி வழிபடுகிறார்கள்./

Unmai

Rex Arul said...

@kekkepikkuni Twitterல் கேட்டுக்கொண்டதற்கிணங்க (https://twitter.com/kekkepikkuni/status/211964744754671617) என் சிறிய பின்னூட்டம் to add more to factual accuracy.

16-ஆம் நூற்றாண்டில் பிளவு படுவதற்கு முன்னர் கத்தோலிக்க பிளவில் தலையாய பிளவு 10-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. அன்று முதல் இன்று வரை பிளவு பட்டே உள்ளது.Orthodox என்ற பிரிவு உருவாக காரணமாக இருந்தது, The Great Schism என்று வர்ணிக்கப்பட்டது. தொன்று தொட்டே ரோமாபுரிக்கும் (மேற்கு கத்தோலிக்க தலைமை) கான்ஸ்ட்டேன்டிநோப்பிலுக்கும்(துருக்கி நாட்டின் இன்றைய இஸ்தான்புல், கிழக்கு கத்தோலிக்க தலைமை)ஒரு பனிப்போர் நிலவியது.

அதே போல, 30-வருடங்களாய் தான் கத்தோலிக்கர்களுக்கு தேவ ஆவி மீது அக்கறை வந்திருப்பதாக நீங்கள் கூறும் நீங்கள், அதற்கு மற்ற பிரிவுகளின் counterbalance strategyக்காக இருக்கும் என்று கூறுவதை ஏற்க முழுவதுகாக முடியவில்லை. வரலாறை பாருங்கள். 1960களில் கத்தோலிக்க திருச்சபையில் அடித்த புயல் இரண்டாம் வத்திகான் கவுன்சிலாக உருவம் எடுத்தது. அதில் போப்பாண்டவர் 23ஆம் ஜான் அவர்கள், தேவ ஆவியின் வழிப்படி திருச்சபை மக்களின் திருச்சபையாக இருக்கட்டும் என்று liberalization agendaவை ஆரம்பிக்க, அங்கிருந்து கத்தோலிக்கர்களின் புதிய தேவ ஆவி அக்கறை புதுப்பிக்கப்படுகிறது.

naanjil said...

எல்லா சமயங்களும் இல்லாத ஒன்றை வைத்துதானே தொழில் நடத்தி வருகிறார்கள். மக்களே கடவுள்; ஏனெனில் மனிதர்கள்தானே கடவுளைப் படைத்தார்கள்.

hariharan said...

அருமையான பதிவு

Unknown said...

தருமி ஐயா, உங்கள் பதிவுகளை நெடுநாளாய்ப் படித்து வருவதால், இந்த பதிவை கொஞ்சம் மார்கெடிங்க் செய்தேன் ட்விட்டரில்:-) நல்ல பதிவு, நன்றி.

ரெக்ஸ் அருள், ட்விட்டரில் உங்கள் எதிர்வினைகளை வேண்டுகோளுக்கிணங்க இங்கும் பதிந்தமைக்கும் விவரங்களுக்கும் நன்றி!!

ஷகிர் இப்னு, விடியோ சுட்டிக்கு நன்றி. //முகம்மதுவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதாரம் கூட இயேசுவுக்கு கிடையாது// அதென்ன கொஞ்ச நஞ்ச ஆதாரம்? நான் நம்பிக்கை மிகுந்தவள். ஆத்திகம், நாத்திகம், அன்புடைமை எல்லாவற்றையும் மதிக்க வேண்டுமென நம்புபவள். மத்தவங்களை குறைக்க வேண்டாமே!

தருமி said...

//16-ஆம் நூற்றாண்டில் பிளவு படுவதற்கு முன்னர் கத்தோலிக்க பிளவில் தலையாய பிளவு 10-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது.//

Rex Arul ,
மதம் பிறந்த காலத்தில் இருந்தே பிளவு பட்டுத்தான் இருந்திருக்கிறது என்பதை எனது The Gnostic Gospels பதிவுகளில் தெளிவாகத் தெரிகிறது.

தருமி said...

Anuja Kekkepikkuni,

//உங்கள் பதிவுகளை நெடுநாளாய்ப் படித்து வருவதால்,...//

ஓ!அப்டி ஒண்ணு இருக்கோ? நன்றி.

//இந்த பதிவை கொஞ்சம் மார்கெடிங்க் செய்தேன் ட்விட்டரில்:-) //

தேடிப்பார்த்தேன் ..கிடைக்கவில்லை.

Unknown said...

//உங்கள் பதிவுகளை நெடுநாளாய்ப் படித்து வருவதால், இந்த பதிவை கொஞ்சம் மார்கெடிங்க் செய்தேன் ட்விட்டரில்:-) // நான் இப்பிடி சொன்னதுக்கு ஒரு உள்ளர்த்தமும் கிடையாது. நான் பதிவுகளிலிருந்து ட்விட்டருக்கு போய் விட்டபடியால், ட்விட்டரில் இருப்பவர்களூம் படிக்கட்டுமேன்னு மார்கெட்டிங் செய்தேன்.

//தேடிப்பார்த்தேன் ..கிடைக்கவில்லை.// திரு. ரெக்ஸ் அருள் மேலேயே சுட்டி கொடுத்திருக்கிறாரே. அதையே தட்டும்சுட்டியா (clickable): https://twitter.com/kekkepikkuni/status/211964744754671617

Sorry for the inconvenience and I am sure I wont repeat this mistake.

ராஜ நடராஜன் said...

தருமி அய்யா!ஜாயிற்று கிழமை பிரார்த்தனை,கிறுஸ்மஸ் கேரல்,,பெரிய வெள்ளி,ஓலைக்குருத்து பண்டிகை,மிஷினரியென எல்லாம் அடக்கமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.என்றைக்கு பெந்தகொஸ்துகள் கூடாரங்கள் அமைத்தார்களோ,தினகரன் சுவிசேச கூட்டமென காது கேளாதவர்ளும்,கண் பார்வையில்லாதவர்களும் ஊமைகளும் பேசுகிறார்கள் என்ற பிரச்சாரம் துவங்கியது அப்பொழுதே கிறுஸ்தவம் அதன் இயல்பை இழந்து விட்டது.இன்றைக்கு தேவ ஊழியர்கள் பெருகி கிறுஸ்தவமே காணிக்கை வியாபரமாகி விட்டது பரிதாபத்திற்குரியது.

இரண்டாம் ஷோ பார்த்துட்டு வரும் போது ஆடும் ஆலமரத்திற்கு பயந்து கல்லை ஒன்றை யாரோ நட்டு வைத்து பத்திக்குச்சு பத்த வைக்க லீவில் போகும் போது ஆலமர மாரியாத்தாவுக்கு பூஜையே நடக்கிறது.ஒரு பஸ்ஸில் பயணம் செய்த அத்தனை பேரும் விபத்தில் இறந்து போக கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கும் அப்பால் யாரோ ஒரு பக்திமானால் முனியாண்டி கோயில் புதிதாக பிறந்து விட்டது.

இவற்றுக்கும் அப்பால் மக்களின் மனநிலைகள் பற்றி ஆராய்ந்தால் வாழ்க்கை பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் போது ஏதாவது ஒரு பற்றுக்கோல் தேவைப்படுகிறது.வருடம் முழுவதும்தான் தண்ணி போடுறேமே கொஞ்சம் மாற்றமாக இருக்கட்டுமே அய்யப்பன் சாமியாகி விடுகிறார்கள்.மாரியாத்தாவோ,மேரியாத்தாவோ தமது பிரச்சினைகளை கேட்கிறார்கள் என்று பிரார்த்தனை செய்யும் போதும் தான் மட்டுமல்ல தன்னை சார்ந்த பெரும் கூட்டம் இருக்கிறது என்கிற போது இன்னும் மனரீதியாக வலிமையடைகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இவற்றுக்கு மாற்றாக நாத்திக கருப்பு உடை மட்டும் அணிந்து கொண்டு பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு அரசியல் லாபங்கள் மட்டுமே மூலதனம் என்ற புதிய புத்தகம் எழுதியவர்களையும் நோக்கும் போது சுயசிந்தனைக்கான வாய்ப்புக்களும் இல்லாமல் கால சூழலுக்கு தகுந்தமாதிரி கிடைப்பதை பற்றிக்கொண்ட வாழ்க்கை பயணமே நிகழ்கிறது.

இதோ!இந்த பதிவுக்கே மார்க்கெட்டிங் நடக்குது!யார் கண்டா!பின் நாளில் தருமி சாமியார்ன்னு இன்னும் கொஞ்சம் கூட்டம் பதிவுலகில் சேர்ந்தாலும் சேர்ந்து விடும்:)

ராஜ நடராஜன் said...

எங்கள் நிறுவனத்தில் ஒரு எகிப்திய கிறுஸ்துவ பெண்மணி பணி புரிகிறார்.கொஞ்சம் அரபி குணம் நிறைய யூத குணம் கொண்டவர்.உலகமே டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்தார்ன்னா அந்தம்மா ஜனவரி 7ம் தேதி வாக்கில் கொண்டாடும்.பெரிய வெள்ளிக்கிழமையும் அது போலவே.இவர் எகிப்திய ஆர்தோடக்ஸ் கிறுஸ்தவராக இருக்கலாம.

நிறுவனர் கதை இன்னும் சுவராசியம். லெபனான் நாட்டில் Druz என்ற இனத்தை சார்ந்தவர்.காசேதான் கடவுளப்பா எனும் சொந்த கொள்கையோடு எந்த இஸ்லாமிய,கிறுஸ்துவ வழிபாடுகளையும் பின்பற்றுவதில்லை.

தருமி said...

ராஜ நடராஜன்,
உங்க நிறுவனத்தில் ஒரு எகிப்திய பெண்மணி, அடுத்து நிர்வாகி இவங்க பத்தி சொல்லிட்டீங்க. எனக்குத் தெரிஞ்ச ஆளு ஒருத்தர் - ராஜ நடராஜன் - வேலை பார்க்கிறாரு. அவரு என்ன செய்றாரு?

தருமி said...

எனக்குப் பதில் தெரியாத ஒரு கேள்வி. பதிலிருப்போர் விளக்கவும்.http://pagadhu.blogspot.in/2012/07/blog-post.html என்ற பதிவில் சொல்லப்பட்டவை:

//“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//

//இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//

இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?

Post a Comment