Sunday, August 23, 2015

855. அன்பு மணியை முதல்வராக்கி ....

*

                  அன்பு மணியை முதல்வராக்கி ....

தலித்துகள் இல்லாத தமிழகம்

                                                               ஒன்றை உருவாக்குவோமா ...?

A promise ends in a riot


JIHADI COLLECTION ... என்ற தலைப்பில் மதத்தீவிரவாதத்திற்கு எதிராக சில பதிவுகளைத் தொடர்ந்து போட்டு வருகிறேன். இதைவிட மோசமான சாதித் தீவிரவாதத்திற்கு எதிராகவும் கட்டாயம் இது போன்ற பதிவுகள் இட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

"சாதித் தீவிரவாதத் தொகுப்பு" என்ற தலைப்பின் கீழ் சில பதிவுகளையும் தொடர்ந்து போட வேண்டிய கட்டாயம் நேர்ந்தத்திற்காக வருந்துகிறேன்.


இன்று இந்துவில் வந்த ஒரு செய்தியிலிருந்து சில "மணித் துளிகள்" .....

சமாதானப் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த ஆண்டு காவல்துறையின் பாதுகாப்புடன் விழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பத்து மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர் தலித்துகளை விழா நடத்த விட மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர்.

வெண்ணிலா என்ற தலித் பெண்மணி எங்கள் உடைமைகளை அழித்தொழிப்பதே அவர்களது நோக்கம். காவல் துறையும்,சரியான நேரத்தில் வந்த மழையும் தான் எங்களை இந்த அளவாவது காப்பாற்றியது.

கலகம் நடந்த சனிக்கிழமை மாலை ராமதாஸின் பா.ம.க. கூட்டம் ஒன்று  கள்ளக்குறிச்சியில்  நடந்து முடிந்தது. அதிலிருந்து  200க்கும் அதிகமான (சிலர் 500 என்கிறார்கள்) முரட்டுக் கும்பல் ஒன்று எங்களைத் தாக்கியது.

பெண்கள் தங்கள் சேலைகளில் கற்களை கட்டி எடுத்துக் கொண்டு, வீட்டு மாடிகளிலிருந்து எங்களை நோக்கி கற்களை எரிந்தார்கள். அதே நேரத்தில் ஆண்கள் எங்களைத் தாக்கினார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 

காவல் துறை அதிகாரி தாங்கள் பெரும் கூட்டத்தால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். 

ஏழு குடிசைகள் முழுவதுமாக எரிக்கப்பட்டன. கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை இழந்தார்கள்.

கோவில் விழா மட்டுமல்ல இதற்குரிய காரணம்; தலித்துகள் மீதான வன்னியர்களின் சாதிய வெறியும், சாதிய அடக்கு முறையும் தான் காரணம். 

எரிக்கப்பட்ட வீடுகளில் முதன் முதல் எரிக்கப்பட்ட வீடு வேறு கிராமத்தின் வன்னியர் பெண்ணை மணந்த ஒரு தலித்தின் வீடு.

சோலையம்மா என்ற தலித் பெண்மணி, "இங்கு வாழ்வதுஎன்பது மிகவும் சிரமம்" என்றார். அதோடு. எப்படி சாமியின் தேரைக்கூட எரிக்க அவர்களால் முடிந்தது என்று வேதனையும், ஆச்சரியமும் கலந்து கேட்கிறார்.

வன்னியர் குல "வீரப் பெண்மணிகள்" பலர் தலித்துகள் தங்கள் வீதி வழியே தேரை இழுக்க அனுமதிக்கவே மாட்டோம் என்றனர்.

தையல் நாயகி என்ற இன்னொரு வன்னிய வீரப் பெண்மணி, "எவ்வளவு தைரியம் இந்த தலித்துகளுக்கு! எங்கள் உடலில் ஓடும் ரத்தம் உங்கள் ரத்தத்திலிருந்து வித்தியாசமாகவா இருக்கிறது என்று தைரியமாகக் கேட்கிறார்கள்" என்கிறார். 

*

தங்களில் பலரையும் காவல் துறை கைது செய்து விட்டதாக வன்னியர் குறை சொல்லுகிறார்கள். 

*

இத்தனை சாதி வெறியர்களைப் பார்க்கும் போது நிச்சயமாக இதே போன்ற சோகமான நிகழ்வுகள் இன்னொரு நாளில் ... இன்னொரு இடத்தில் ... கட்டாயம் நடக்குமென்று தான் தோன்றுகிறது. அழியாமல் ஆழமாக சாதிவெறி மனதில் ஊறிக் கிடக்கிறது.


10 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு தொடர்கதையே. இவ்வாறான நிகழ்வுகளை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. தமிழ்மணம்+1

துளசி கோபால் said...

//தையல் நாயகி என்ற இன்னொரு வன்னிய வீரப் பெண்மணி, "எவ்வளவு தைரியம் இந்த தலித்துகளுக்கு! எங்கள் உடலில் ஓடும் ரத்தம் உங்கள் ரத்தத்திலிருந்து வித்தியாசமாகவா இருக்கிறது என்று தைரியமாகக் கேட்கிறார்கள்" என்கிறார். //

ஙே.......... இல்லைன்னு அவுங்களே சம்மதிக்கும்போது எதுக்கு இந்த வெறியாட்டம்?

ராஜ நடராஜன் said...

சசி தரூர் பின்னூட்டம் போடப்போய் இங்கே வந்து மாட்டிக்கொண்டேன். ராமதாஸ் மரம் வெட்டும் காலத்திலிருந்து தொடரும் அடாவடித்தனம் இன்று தேர் மீது வேர் ஊன்றுகிறது.

அன்புமணி முதல்வராகி தமிழகம் இன்னும் அவதிபடட்டும்.சிறு நெருப்பில் சிகரெட்டை அணைத்து விட்டு பெரும் நெருப்பை பத்த வைக்கும் பாவிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

என்று தணியும் எங்கள் சாதியின் மோகம்

வேதனை வேதனை ஐயா
தம+1

மின் வாசகம் said...

அன்புமணி புதுச்சேரிக்குத் தானே முதலவராக முயற்சிக்கின்றார்? ஆமாவா, இல்லையா? ஒரே குழப்பமாக இருக்கிறது. எல்லா ஓபிசி சமூகமும் ஏன் ஒரே சமூகமாக ஆள்வெட்டி, அளவெட்டி, சேய், மரவெட்டி எதோ ஒரு வெட்டி சமூகம் என பெயர் மாற்றம் செய்து ஒன்றிணையக் கூடாது?!

D. Samuel Lawrence said...

அன்று மரத்தை வெட்டியவர்கள் இன்று மனிதர்களை எரித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதுதான் மாற்றம் முன்னேற்றம் !
வரலாற்றுக் குப்பையில் தூக்கி எறியப்படவேண்டியவர்கள் எல்லாம் அரியணையில் உட்கார்ந்து ஆட்சி செய்ய ஆசைப்படுகிறார்கள். சாட்டை எங்கே 1

வேகநரி said...

மதத்தீவிரவாதத்திற்கு எதிரான உங்க பதிவுகள் போல், சாதி வெறிக்கு எதிரான பதிவும் அருமை. அவர்களுக்கு தமிழக முதல்வராக வரவும் ஆசையாம்!

Nirmal said...

அவன் அவன் செவ்வாய் கிரகத்துக்கு, பில்லியன் கிலோ மீட்டர் அப்பால இருக்கிற எரிக்கல்லுக்கு செயற்கை கோள் விடுறான், இங்க கவர்ன்மெண்ட் ரோட்ல நிம்மதியா தேர் விட முடியல. பெரியாரா எப்ப வேணா கோட் பண்ணலாம் போல

alwin said...

இந்த சாதி மோகம் ஏன்தானோ???

சார்லஸ் said...

அட ஏன் சார் கேட்கிறீங்க ... இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்த பிறகும் அம்மாவை கொண்டு வருவதற்கு இப்போதும் நாலு பேராவது தயாராத்தான் இருப்பான் . அன்பு மணியைப் பற்றி யார் யோசிக்கப் போறாங்க ? அவங்க சாதியைச் சார்ந்தவங்களே நிறைய பேர் ஓட்டுப் போட மாட்டாங்க.

Post a Comment