Thursday, May 05, 2005

13. நீதித்துறை...

கொன்ன பாவம் தின்னா தீரும் என்ற நம் தமிழ் பழமொழி எப்படி அந்த டில்லி நீதிபதி மாலிக் அவர்களுக்குத் தெரிந்தது; அப்படியே அதை ஏற்றுக்கொண்டு, கற்பழித்தவனே கல்யாணம் பண்ணிக்கொண்டால் தப்பெல்லாம் சரியாகிவிடும் என்ற தீர்ப்புக்கு ஏறக்குறைய வந்து விட்டாரே. நல்லவேளை கடைசியிலாவது நல்ல தீர்ப்பு வந்தது.

நம்முடைய நீதித்துறையும் மற்ற சமூகத்தூண்கள் போலவேதான் இருக்கிறது. இதுதான் நம் நாட்டின் பரிதாபத்திற்குரிய நிலை. நீதிக்கு விலை உண்டு; நீதிபதிகளுக்கும்தான். நீதித்துறை முழுவதுமாக கெடுவதற்கு முன் நல்ல சமூகமாற்றம் ஏதாவது ஏற்பட்டால் நல்லது. ஏற்படுமா...?

டான்சி வழக்கில் வந்த தீர்ப்பைப் படிக்கும்போதுகூட ஏதோ பாதிரியார் கோவிலில் பேசுவாரே அது மாதிரி இருந்ததேயொழிய தீர்ப்பு மாதிரியா இருந்தது? ஏதோ பம்மாத்து வேலைமாதிரிதானே இருந்தது.
நம் மக்களும் தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பதில்லை. கற்பழித்தபாவிகளைக்கூட தண்டிக்கக்கூடாது என்று யேசு, புத்தர், காந்தி போன்ற மகான்களாக தீடீரென்று மாறி விடுகிறார்கள். சமீபத்தில் நடந்த கொல்கத்தா கற்பழிப்பு வழக்கில் அப்படித் தானே. கொலையையும் மன்னிக்கலாம்; ஆனால் கற்பழிப்பை... அதுவும் இணங்காத பெண்ணின் கண்ணைப்பறித்தவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். அவனுக்கெல்லாம் ஈவு இரக்கம் தேவையா என்ன...?

4 comments:

சுட்டுவிரல் said...

//அதுவும் இணங்காத பெண்ணின் கண்ணைப்பறித்தவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். அவனுக்கெல்லாம் ஈவு இரக்கம் தேவையா என்ன...? //

கண்ணைப் பறித்தது என்பது கற்பைப் பறித்தது என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதுசரி, அந்தப் பெண்ணுடன் இரத்த சம்பந்தமோ மத்த சம்பந்தமோ இல்லாத நமக்கே இப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணுடைய மன நிலையில் இருந்து யோசித்து குற்றவாளிக்கு கடும்தண்டனைத் தர பரிந்துரைப்பவர்களுக்கு கற்காலத்தவர்கள் என்று பட்டம் தானே கிடைக்கிறது- அது பற்றி என்ன சொல்றீங்க?

சுட்டுவிரல் said...

அந்தக் கொடியவன் கண்ணையும் தான் பறித்திருக்கிறான் என்று அறிகிறேன்.

எனவே, என் முந்தைய பின்னூட்டத்தையே இன்னும் வலிமையாகச் சொல்கிறேன்.

கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கக்கூடாது.

Sri Rangan said...

கற்பு-கற்பற்ற நிலை,இவையெல்லாம் பெண்ணையொடுக்கும் கருத்தியல் மேலாதிக்கம்.இது ஆணாதிக்க உளவியலின் ஊக்கவுறவு நிநை;த ஒடுக்குமுறை.சமூகஞ்சாhந்து இவை பண்ணும் கொடுமை நமது சமுதாயத்தை உருப்படவிடுவதில்லை.இதை பாரதியார் மிகவும் காட்டமாகச் சாடியுள்ளார்.கற்பழிப்பென்பதை பாலியற்பலத்தகாரம்-வல்லுறவு என்று பின் மொழியியலாளர்கள் உரையாடுகிறார்கள்.இது நியாயமானது தர்மி.ஏனெனில் கற்பு என்பதைக் காட்டியே ஒரு பெண்ணை உளத்தாலும்-உடலாலும் கேவலப் படுத்துவதை பின்மனிதநேயவாதிகள் எதிர்க்கிறார்கள்.கூடவே பெண்ணிலைவாதிகளும்.அடுத்து மனதுக்கு விரும்பாத ஒரு வன்கொடுமையாளனால் பெண்ணொருத்தி வல்லுறவுக்குள்ளாகும்போது,அவனையே திருமணஞ் செய்துகொள்ளத் தீர்ப்பளிப்பதுகூட நமது பாரம்பரிய பெண்ணொடுக்குமுறையைக் காப்பாற்றிக்கொள்ளவெடுக்கும் முயற்சியே.இங்கு நீதிபதியின் தூய்மைவாத மனது, ஆணாத்திக்கத்தின் மறுவார்ப்பாகும்.எனவே இந்தத் தீர்ப்பும் எதிர்க்கப்பட்டு,வல்லுறவுக்குரிய தண்டனையை பாதிக்கப் பட்ட பெண்ணின் விருப்பின்படி தீர்ப்பிடவேண்டும்.கூடவே பாதிக்கப் பட்ட பெண்ணை சமூகத்தில் கௌரவமாகச் செயற்படவும் கூடவே அவள் மீளவும் தனது வாழ்வைத் தனது விருப்பின்படி தேர்வுசெய்து வாழக்கூடிய அமைப்பு முறைமைகளே இனிமேற் காலத்துக்குத் தேவை. பாலியல் வல்லுறவு பற்றி எனது பதிவிலுள்ள'நியூஸ்லாந்து நாடுகடத்தல் பாலியல்...' எனும் கட்டுரையைப்பார்க்கவும்.www.srisagajan.blogspot.comஅன்புடன்
ஸ்ரீரங்கன்

தருமி said...

தனி மனிதனின் தவறுகூட எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், இது போன்ற வழக்குகளில் ஏற்படும் காலதாமதம், குற்றவாளிக்காக வரும் பரிந்துரைகள், அதையெல்லாம் விட நமது 'நீதியரசர்கள்' காண்பிக்கும் மெத்தெனம் இவைகளே பெரிய உறுத்தல்களாக உள்ளன.

திரு.ஸ்ரீஇரங்கன்,

//அவள் பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்ட நிகழ்வுடன் தனது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை இணைத்திருக்கிறாள், சிறுமி,இவ்வளவு காரணங்களும் கூட அவளைக்காக்கவில்லை//

context புரியாததால் ஏதும் அதிகமாகக்கூற இயலவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது..நீங்கள் கூறுவதுபோல் இது "ஆணாதிக்க உளவியலின் ஊக்கவுறவு நிநை;த ஒடுக்குமுறை" என்பதை முழுமையாக ஆமோதிக்கிறேன்.

Post a Comment