Monday, July 25, 2005

34. ரிட்டையர் ஆன மாமாக்கள்...

பத்ரி தனது பதிவில் "கோஷ்டிகானம் பாட "Letters to the Editor" ரிடையர் ஆன மாமாக்கள், தி ஹிந்து எடிட்டோரியல் எழுதும் கூட்டத்தவர்" - என்று பெரும் போடாகப் போட்டிருக்கிறார். ஒருவேளை 'armchair critics" என்பதன் தமிழாக்கமாக அது இருக்குமோ? நானும்கூடதான் எனது retirement-க்கு முன்பே The Hindu-"Letters to the Editor"-க்கு எழுதிப்பார்த்தேன். ஆனால் நான் retire ஆனது அவர்களுக்கு எப்படி தெரிந்ததோ இப்போது பதிப்பாகும் விழுக்காடு அதிகமாக ஆகிவிட்டது. நான் என்ன செய்ய?

சமீபத்தில் இங்கிலாந்தில் கௌரவப்பட்டம் பெற்ற நம் மன்மோகன் சிங் பேச்சுக்குப் பலத்த எதிர்ப்புகள் இருந்தது; இன்னும் இருந்துவருகிறது. ஆனால், எனக்கு என்னவோ அவர் நம் மதிப்பைவிட்டுக் கொடுக்காமல் பேசியதாகத்தான் தெரிகிறது - பத்ரிக்குப் போலவே -("விருப்பு வெறுப்புகளன்றி, பிரிட்டிஷ் ஆட்சியின் நல்லவை, கெட்டவை என்று சீர்தூக்கிப் பார்த்து சரியாகவே சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்"- பத்ரி) .

ஆகவேதான் இப்படி ஒரு ஆங்கிலப் பதிவைச் செய்தேன்.

அதோடு மட்டுமின்றி அவர் அமெரிக்கா செல்லும் முன்பே கொடுத்த பேட்டியில் சொன்ன சேதிகளுக்காக நான் பாராட்டி எழுதிய கடிதம் The Hindu - Letters to the Editor"-ல் 12.07.2005 அன்று கீழ்க்கண்டவாறு வெளியாயிற்று.

Dr. Singh's assertion that India is neither a client state nor a supplicant (July 10) is commendable. When he declined international aid in the wake of the tsunami, heated argument on whether his action was right or wrong followed. Some argued that he was overplaying the self-reliance card. But India is being held up as an example for the way it handled the post-tsunami work. The Prime Minister has done our country proud.

G. Sam George,
Chennai

ஆங்கிலேயர்கள் மீதான என் தனிப்பட்ட வெறுப்பை இங்கேபதிவு செய்துள்ளேன். ஆனால், அதில் நான் சொல்லியுள்ள என் ஐயத்திற்கு எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

4 comments:

Badri Seshadri said...

உங்களை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை:-) பொதுவாக எந்த value addition-உம் இல்லாமல் "kudos to", "you are absolutely correct" போன்ற usual வலைப்பதிவுப் பின்னூட்டங்கள் போலான letters to the editor வேலைகளைச் செய்வது ரிட்டயர் ஆனவர்கள் என்ற ஒரு வகைமாதிரியாகச் சித்திரித்துவிட்டேன். அவ்வளவே.

தருமி said...

"உங்களை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை:-) "

அது தெரியாதா என்ன?

Alex Pandian said...

Letters to the Editor"-ல் 12.10.2005 ???

12th October 2005 ?
or 10th Dec 2005 ?

Both seems to be a bit away :-))

தருமி said...

அலெக்ஸ் பாண்டியன்,
தவறைத்திருத்தி விடுகிறேன்.
நன்றி.

Post a Comment