Monday, October 10, 2005

90. சினிமாவும், விமர்சனக்காரர்களும்…

*
*

நம்ம தமிழ்ப்படங்கள் ஏனிப்படி இருக்கின்றன என்ற அங்கலாய்ப்பு நிறைய பேருக்கு இருக்கோ என்னவொ, எனக்குண்டு. நம் தமிழ்ப் படங்களை இரண்டே வகையாய் பிரிக்கலாம்; இரண்டுமே படங்கள் எடுக்கும்ஆட்களின் sincerity பற்றியது. முதல் வகை: புத்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாவது லாஜிக்கோடு எடுக்கப்படும், அல்லது எடுக்க முயற்சிக்கப்படும் சீரியஸ் படங்கள். இரண்டாவது வகை: முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்கள். இதில் கசப்பான உண்மையென்றால், எம்.ஜி.ஆர்., அதற்குப் பிறகு ரஜினி (அவரின் முதல் காலகட்டப் படங்கள் தவிர), இப்போது விஜய் என்ற “சகாப்தங்களின்” படங்கள் எல்லாமே இந்த இரண்டாம் வகையில்தான் வருகின்றன. என்ன எடுத்தாலும், கதையென்று ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும், லாஜிக் என்பதின் அறிகுறிகூட இல்லாவிட்டாலும் இவர்களின் ‘முகங்களுக்காகவே’ படங்கள் ஓடுவது மக்களின் முட்டாள்தனம்தான். ஆனாலும், மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று இயக்குனர்கள் சொல்வது அவர்களது இயலாமையை மறைத்துக் கொள்ள அவர்களே வைக்கும் ஒரு விவாதம்.
வீணை செய்யும் ஒரு கலைஞனால் வீணைதான் செய்ய முடியும். அகப்பைக்கு நல்ல டிமாண்ட் இருக்குன்னு சொல்லி மாதத்திற்கு ஒரு வீணை செய்யும் அவனால் தினத்திற்கு நாப்பது அகப்பைகள் செய்ய முயன்றாலும் முடியாது; செய்யவும் மாட்டான். பிரச்சனை என்னவென்றால் நம்மிடம் இருப்பதெல்லாம் அகப்பைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள்தான்; வீணை ஆக்கும் கலைஞர்கள் அல்ல. ஒரு அடூர் கோபாலகிருஷ்ணனை ஜனரஞ்சகமாக ஒரு ‘ஆக்ஷன் மூவி ‘ எடுக்கச் சொல்லுங்களேன். அந்தப் ‘புலிகள்’ புல்லைத் தின்பதில்லை.


கொடுக்கும் காசுக்கு டைரக்டர் சொல்வதைச் செய்து விட்டுப் போகிறவர்கள் நடிகர்கள். சிவாஜி கணேசனையும் சேர்த்து (with due apologies to my favourite Sivaji ) நம்மூர் நடிகர்களுக்கென்று தனி புத்திசாலித்தனம் ஏதும் இல்லையென்பதே உண்மை - கமல், நாசர் போன்றவர்களைத் தவிர. அப்படி இருந்திருந்தால் சிவாஜி சிகப்புக் கலர்ல விக் வச்சு நடிப்பாரா? இல்லை, ஓட்டைப் பல்லுடன் இருபது வயது கல்லூரிக் கதநாயகனாக வந்திருப்பாரா? மார்லன் பிராண்டோவின் ‘On the water front’ என்ற அவருக்கு ஆஸ்கார் வாங்கித் தந்த படத்தை இதுவரை இருமுறை பார்த்தபோதும் இது மாதிரி என்ன, இதைவிட நம் நடிகர் திலகத்தால் சிறப்பாக நடிக்க முடியாதா என்ன என்ற நினைப்பு உடனே வரும். ஆனால் அவர் துரதிருஷ்டம் இங்கே பிறந்து, குடத்தில் இட்ட விளக்காகிவிட்டாரே என்று வருந்துவேன்.


இப்போதுள்ள நடிகர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்கலாம்தான். புது வித கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று ‘நல்ல′ தீர்மானம் மேற்கொண்டுள்ள விஜயைத்தவிர இப்போதுள்ள நடிகர்கள் - ஓரளவு புதுக் கதைகளில் ஆர்வம் காண்பிக்கத்தான் செய்கிறார்கள். புதுக் கருத்துக்களோடோ, புதுக் கதைகளோடோ டைரக்டர்கள்தான் வருவதில்லை. Established directors என்று, சரியோ தப்போ பெயர் வாங்கி விட்ட மணிரத்தினத்தின் படத்திலும் ரெண்டு டப்பா பாட்டு, டான்ஸ் இருக்கின்றதென்றால் அவரை எப்படி பெரிய இயக்குனர் என்று அழைக்கிறார்களோ, தெரியவில்லை. இன்னும் ஒரு பாட்டு இல்லாத படத்தை எடுக்கத் தயங்கி, அதைப்பற்றிப் பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறவர்தானே அவர்.

டைரக்டர்கள் அப்படி;நடிகர்கள் இப்படி;படம் பார்க்கும் மக்கள் எப்படி?
கட்டபொம்மன் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ‘இதே படத்தில மட்டும் நம்ம வாத்தியார் நடிச்சிருந்தா, தூக்கில போட்டுட விட்டுருப்பாரா?’-ன்னு தியேட்டரைவிட்டு வெளியே வரும் கும்பலில் ஒரு 30-35 வருஷத்திற்கு முன்பு ஒரு குரல். இப்போது காதல் படம் பார்த்துவிட்டு வரும்போது, ‘படம் நல்லாத்தான் இருக்கு; ஆனா ஒரு டூயட் பாட்டாவது இருந்திருக்கலாம்’ என ஒரு விமர்சனம்!


அப்படியானால் மக்கள் சினிமாவைப் பொறுத்தவரை மாறவேயில்லை என்றுதானே பொருள். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம்: நாயகி தண்ணீருக்குள் -முழங்கால் ஆழம்தான் - விழுந்துவிடுவாள்; குதிரையில் நாயகன் பாட்டுப் பாடிக்கொண்டே வருவார்; கதாநாயகியைத் தொட்டுத் தூக்கிவிடுவார்; ஆஹா, என்னைத் தொட்டுவிட்டீர்கள்; ஆகவே நீங்கள்தான் இனி என் பிராணநாதன் என்று சொல்லி, ‘நாதா’ என்பார் நாயகி. நமது நாயகரும் உடனேயே, ஆ என் நாதி…என்று ஒரு பாட்டு எடுத்துவிடுவார். - இது அன்றைக்கு. நடுவில் கொஞ்ச நாள், கதாநாயகன் அதே மாதிரி வருவார் - ஒரே ஒரு வித்தியாசம் - காரில் வருவார்…வந்து கொண்டே இருப்பார். இந்தப் பக்கம் இடுப்பில் குடத்துடன் தனியாகக் காட்டுக்குள் அங்கிருக்கிற (காகிதப்)பூ ஒன்று விடாமல் பறித்துப் போட்டுகொண்டே நாயகி பாட்டுப் பாடி வருவார். தலைவரின் கார் ரேடியேட்டர் சூடாகி நின்று விடும்; டால்டா டப்பாவுடன் கதாநாயகர் காட்டுக்குள் நுழைவார்; தலைவனும் தலைவியும் பார்த்துக் கொள்வார்கள்; தலைவர் உடனேயே அத்தானாகி விடுவார்; ரேடியேட்டரும், கதாநாயகியின் வயிரும் நிறைந்துவிடும். கடைசியில் ‘சுபம்’தான்! இப்போது, காலேஜ், கம்ப்யூட்டர் கிளாஸ், இவர் கனவில் அவர், அவர் கனவில் இவர், கடைசியில் கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தலைவர் அங்கு ஒரு ஸ்டண்ட் போட, கதாநாயகி எங்கிருந்தோ பாட, ரிசீவர் இல்லாமலே தலைவருக்கு அந்தப் பாட்டு கேட்க இருவரும் மைல் கணக்கில் ஓடி வந்து, மூச்சு வாங்கிக்கொண்டே அருகருகில் சிறிது நேரம் நின்று நம்மைச் சோதித்துவிட்டு, அதற்குப் பிறகு சடாரென ஈருயிரும் ஓருயிராக ஆகி நம்மை சிலிர்க்க வைத்துவிடுவார்கள்.


இப்படி படம் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையுமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முடிந்தாலும் A1, அதாவது accused 1 யார் தெரியுமா? சினிமா விமர்சகர்கள். இவர்களில் இரண்டு வகை. முதல் வகை - அக்கிரா குரோசோவாவில் ஆரம்பித்து, வாய்க்குள்ளும் நம் காதுக்குள்ளும் நுழையாத பெயர்களாகத் தேடிப் பிடித்துப் பொறுக்கி எடுத்து, (நான் மட்டும் அவங்களுக்கு கொறஞ்சவனா என்ன..?) !பெலினி, கைஸ்லொவ்ஸ்க்கி, டர்கோவ்ஸ்க்கி,டாரன்ரினோ (-இந்தப் பேருக போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா…?) நமக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியாதபடி இன்னும் சர்ரியலிஸ்ம், நியோ சரிரியலிஸ்ம், எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ம்….இப்படி கொஞ்சம் - கொஞ்சமென்ன கொஞ்சம், நிறையவே போட்டு - கடைசியில ஒரே ‘மசாலா’ வாடை மட்டும் அடிக்கும்; சரக்கு என்னென்ன தெரியாமலே போய்டும். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று சொல்லட்டுமா..?


அரவிந்தனின் ‘சிதம்பரம்’ ஒரு நல்ல படம். மலையாளப் படம். இண்டர்வெல்லில் வெளியே நின்றப்போ, பக்கத்தில் நின்றவர் ஒரு தோழமையோடு, இது என்னங்க படம், இப்படி இருக்கு என்க, அதில் உள்ள சில நல்ல விதயங்ளை எடுத்துச் சொன்னதும், ‘ஓ, படம்னா இப்படியெல்லாம் பார்க்கணுமோ’ என்று நல்ல படியாகச் சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு விமர்சனம் வாசித்தேன். என்னென்னமோ எல்லாமே என் தலைக்கு மேலே போச்சு. அதிலும் கடைசியாக, தான் செய்த தவற்றினால் ஏற்பட்ட மன உளைச்சலில் தேசாந்திரியாகத் திரியும் நாயகன் (கோபி) சிதம்பரம் கோவில் முன்னால் நாயகியைப் (ஸ்மித்தா பட்டேல் ?) பார்த்து…’அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்புகிறான். காமிரா அப்படியே கோவில் கோபுரத்தைக் கீழிருந்து மேல்வரை காண்பித்து, வானத்தில் போய் முடியும். இந்த சீன் நன்றாகவே இருந்தது. ஆனால் விமர்சனக் கர்த்தா அந்தக் கோபுரத்தைக் காண்பிப்பது phallic symbol என்றும்…symbolism… அது..இதுன்னு எழுதியிருந்தார். இந்த ‘இட்டுக் கட்டுகள்’ கொஞ்சம் அதிக பட்சமாக எனக்குத் தோன்றியது.


இன்னொரு வகை விமர்சனங்கள் நம் தமிழ் ஊடகங்களில் வருபவை. டி,வி.க்காரர்களை ஒன்றும் சொல்லவும் முடியாது. அவர்கள் சினிமாத் துறையினறைத் தான் நம்பி காலம் தள்ளுகிறார்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினாக்கலாமா? செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறார்கள் அவர்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அதிலும் விஜய் டி.வி.-யில் ‘மதன் திரைப்பார்வை’ என்று ஒரு நிகழ்ச்சி வருகிறதே; சரி, இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். அவர் எவ்வளவு ‘காலிக்குடம்’ என்பது அதில்தான் தெரிந்தது. பாவம், நல்ல கார்ட்டூனிஸ்ட்!


அடுத்தது நமது பத்திரிகைகள். இதிலும் இரண்டு வகைகள். சிறு பத்திரிகைகள் - இவை யாருக்கும் புரியாத மொழியில் technical jargons எவ்வளவு போட முடியுமோ அவ்வளவு போட்டு, சமயம், சாதி, வர்க்கப் போராட்டம் என்று ஏதேதோ எழுதி ஒரு குழப்பு குழப்பி விடுவது அந்த ரகம். ஜன ரஞ்சகப் பத்திரிகைகள் வாசகர்களைத் தரை மட்ட ரசிகர்கள் என்ற நினைப்பிலேயே எழுதப்படும் குப்பைகள். நான் கொஞ்சம் வாசிக்கும் ஆனந்த விகடன் கல்லூரிகளில் உள்ள சில ஆசிரியர்கள் மதிப்பெண்கள் போடுவது போல மார்க் போடுகிறார்கள். குறைவாகப் போட்டால்தானே மாணவன் என்ன இது என்று ஒருவேளை ஏதாவது கேட்கக்கூடும். எல்லோருக்கும் அள்ளிப் போட்டுவிட்டால் எல்லோருக்கும் பிடித்த ‘நல்ல வாத்தியாராக’ இருக்கலாமே, அது மாதிரி என்ன குப்பையாக இருந்தாலும் 35-40 என்று போட்டு, நல்ல படமாக இருந்தாலும் 49 என்று போட்டு விட்டால் சரியாப் போச்சு என்ற தத்துவம்!


புதுப்படங்கள் வருவதற்கு முன்பு படத்தோடு தொடர்புள்ளவர்கள் அதைப் பற்றி சொல்வதை கேட்டிருப்போம். அது நமது அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது பேசுவது போலவே இருக்கும். ஓட்டுக்கேட்டு வருபவன் எல்லா சாராருக்கும் தொண்டாற்றப் போவதாக உறுதிமொழிகளை - சூடத்தில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக - அள்ளித் தெளிப்பார்கள்.அதைப் போலவே, இந்த படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமே இருக்கும். நகைச்சுவை,மனசதொட்ற சென்டிமெண்ட்ஸ், ஆக்ஷன், இப்படி எல்லாமே இருக்கும் என்பாங்க.


இப்படி ‘மசாலா’ படங்களாக என்னும் எத்தனை கால்த்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அதுபோல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப்படங்களிலும் இருக்க
………….’மனிதனின்’ பின்னூட்டத்தால் ஏற்பட்ட தடங்கல்………..பின் தொடர்கிறேன்.
Oct 10 2005 07:25 am சினிமா and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
5 Responses
ஜோ Says: after publication. e -->October 10th, 2005 at 7:42 am e
தருமி,சுவாரஸ்யமான பதிவு.வழக்கம் போல அலசி எடுத்துருக்கீங்க.
இராமநாதன் Says: after publication. e -->October 10th, 2005 at 7:54 am e
//‘இதே படத்தில மட்டும் நம்ம வாத்தியார் நடிச்சிருந்தா, தூக்கில போட்டுட விட்டுருப்பாரா?’-ன்னு //ஹி ஹி.. கண்டிப்பா வரலாற்ற மாத்தினாலும் மாத்தலாம், வாத்தியார தூக்குல போடமுடியுமா?
ரொம்ப நிஹிலிஸ்டிக்காக எழுதிருக்கீங்க..
விளம்பரம் இல்லாமல் எப்படி–நேரமிருந்தால் இதப் பாருங்க..
jafarulla Says: after publication. e -->October 10th, 2005 at 2:51 pm e
Cinema today should be tied to the truth rather than logic . . . The rhythm of life is not made up of one steady beat; it is, instead, a rhythm that is sometimes fast, sometimes slow . . . There are times when it appears almost static . . . I think that through these pauses, through this attempt to adhere to a definite reality — spiritual, internal, even moral — there springs forth what today is more and more coming to be known as modern cinema, that, a cinema which is not so much concerned with externals as it is with those forces that move us to act in a certain way and not in another.
–Director Michelangelo Antonioni
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 8:05 pm e
தருமி, நல்ல பதிவு.உந்த இயக்குநர்களினதும் படம் சம்பந்தமான கூட்டத்தினதும் தொல்லை தாங்க முடியாதது.ஒவ்வொரு முறையும் இது வரை பார்க்காத ‘இவரை’ இதில் பார்ப்பீர்கள் எண்டு குரல் விடுறானுகள்.பாத்தா, அதே ஆள்தான். சிலவேளை அதே வசனங்கள், அதே கதை, அதேநடை, எல்லாம் அதேதான்.இன்றுவரை, காய்கறிச்சந்தையிலும் பாத்திரக்கடைகளிலும் சண்டைபிடிப்பதிலிருந்தும், ஐம்பது பேர் அருவாளோடு துரத்தும் சண்டைகளிலிருந்தும் மீளவேயில்லை.அடிவாங்கிச் செத்துப்போனான் எண்டு இருக்கிற நேரத்தில கடவுள்களின்ர முகங்கள் கொஞ்சத்தைக்காட்டிப்போட்டு நாயகன் எழும்பி அடிப்பாரே ஒரு அடி. விசில் பறக்கும்.போதாததுக்கு, நகைச்சுவைக்கெண்டு தனிய ஒராளோ ஒரு கூட்டமோ வைத்துக்கொள்வது.முக்கியமாக இசையமைப்பாளரின் திறமை பாடல்களில் மட்டும் வைத்து மதிப்பிடுவது, இசையமைப்பாளரின் வேலை 5 பாடல்களுக்கு இசையமைப்பதுதான் என்ற அளவில்தான் இன்னும் புரிதல் உண்டு.
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 8:11 pm e
இன்னொன்று.நடிகை ரேவதி, இந்தியில் ஒரு படத்தை இயக்கினார்.அது எயிட்ஸ் நோய் தொற்றிக்கொண்ட நாயகனைப்பற்றிய கதை. அது குறித்து பி.பி.சி. தமிழோசை ரேவதியைச் செவ்விகண்டது.செவ்வியில் “கொமர்ஷியல் படங்களுக்கிடையில் நல்லதொரு கதையம்சம் கொண்ட வித்தியாசமான படமொன்றைத் தரமுன்வந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்” என்று சொன்னதுதான் தாமதம்.‘இல்லையில்லை. இது கொமர்ஷியல் படம்தான். இதிலும் காதல் இருக்கு. பாட்டிருக்கு” என்று விழுந்தடித்துச் சொன்னார் ரேவதி.தம் படத்தைப் பாதுகாக்கிற அவசரம் தெரிந்தது அப்பதிலில். இதுதான் இன்றைய நிலை. நல்ல முயற்சியாளரைக் கூட என்னமாய்ப் பயப்படுத்தி வைத்துள்ளது இந்த மசாலாத்துறை.

2 comments:

Anonymous said...

Thamizh pada vimarsakarkalai vimarsirppathai naan vimarsithaal ennai adikka varuveerkal.so, I'll just leave a comment.

Reading Tamil in net is Great.Continue ur good work.

துளசி கோபால் said...

பழைய பதிவு இப்ப எப்படி மீண்டும் உயிரா வந்துச்சுன்னு தெரியலை. ஆனா இந்த ஒன்னரை
வருசத்தில் எதுவுமே மாறலை. எல்லாம் அப்படிக்கு அப்படியே!

படம் வெளி வர்றதுக்கு முன்னாலே இண்ட்டர்வியூ பத்திரிக்கையிலே வரும் பாருங்க,
அதுலே 'படம் ரொம்ப நல்லா வந்துருக்கு' ன்னு சம்பந்தப்பட்டவர் சொல்வார்:-)))))

Post a Comment