Wednesday, November 16, 2005

106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) - பின் குறிப்பு

8 M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???Post Date :Friday, Apr 29th, 2005 at 4:15 pmஇது ஒரு மறு பதிப்பு. அதோடு இப்போது ஒரு பின் குறிப்பு இணைக்கிறேன். இது “காலத்தின் கட்டாயம்”:-) சினிமா = பொழுதுபோக்கு - இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை. அந்த பெரிய மனுஷன் M.G.R. ஒரு பத்து இருபது வருஷமா தமிழ் சினிமா முன்னேறாதபடி பார்த்துக்கிட்டார். ஏதோ அவரால முடிஞ்சது! சினிமான்னா கதை வேணும்னு யார் சொன்னதுன்னு கேட்டவர்.
ஏதோ…அவருக்குப் பிறகு கொஞ்சம் தலையைத் தூக்கலாம்னு தமிழ்த்திரையுலகம் நினைத்தது. வந்தாரையா நம்ம சூப்பர் ஸ்டார். நல்ல மனுஷன். M.G.R. மாதிரி இல்லாம நல்லாகூட நடிக்கக்கூடிய ஆளுதான்(புவனா ஒரு கேள்விக்குறி; முள்ளும் மலரும்;ஆறிலிருந்து அறுபது வரை…). ஆனா நம்ம மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமா? ஒரே ஸ்டைல் மயந்தான், போங்க. நானும் கையை ஆட்டி ஆட்டி பார்க்கிறேன்.. சத்தமே வரமாட்டேங்குது… (நான் ஒரு தடவை சொன்னா…). துண்டை தோளில் சுற்றி சுற்றி போட்றேன்… அப்பவும் சத்தமே வர மாட்டேங்குது! சரி, கதை, அதில் கொஞ்சம் லாஜிக், சண்டை, அதில் கொஞ்சம் sense, இப்படி ஏதும் இல்லாமலேயே தலைவர் காலம் போயிருச்சி… (past tense-ல் சொல்லலாமா? அல்லது இன்னும் 2 வருஷம் கழிச்சி வரப்போற படத்துக்குப் பிறகுதான் சொல்லணுமா?
அடுத்தக் கட்டத்துக்கு வருவோம். சரி, இனி தமிழ்த்திரை எழுந்துவிடும் என்ற நினைப்பில் இருக்கும்போது வந்தாரையா அடுத்த வாத்தியார். வரிசையா ஹிட்ஸ். அதுவும் வழக்கமான நம்ம மசாலா படங்கள். logic இல்லாத, anti-gravitational டிஷ்யும் டிஷ்யும் படங்கள். புதிதாக எதுவும் முயற்சிகூட செய்துவிட மாட்டேன் என்ற நல்ல முடிவில் நம் இளைய தளபதி மிக மிக உறுதியாக இருக்கிறார். ஒரு தியாகம்தான். இனி இந்த தலைவர் தன் பங்குக்கு எத்தனை வருஷங்களைக் கெடுக்கப்போகிறாறோ…..ம்ஹும் … சாபக்கேடுதான், போங்க!
நமக்கு மட்டும் ஏங்க இப்படி…?
============== ======================== ===============
இப்போ பின்குறிப்பு:
இது ஒரு பரிமாண வளர்ச்சியைக் கோடு போட்டுக்காட்டும் ஒரு முயற்சி. சும்மா சொல்லக்கூடாதுங்க இந்த தருமியை; வாய்க்கு சீனிதான் போடணும். சிவகாசி படமெல்லாம் வர்ரதுக்கு முந்தியே எழுதிய இந்த பதிவில் சொன்னதின் நிரூபணம் இதோ, சிவகாசியில நடந்திருச்சி. என்னன்னு கேக்றீங்களா?
விவசாயின்னு ஒரு படம்; நம்ம பொ.ம.செ.(வேற ஒண்ணும் இல்ல - பொன்மனச் செல்வர்தான்) படிச்சி விவசாயி;அவரு மேல லவ்ஸ் உட்றது கே.ஆர்.விஜயா. (எப்பவுமே அப்டிதானே, தலைவிக்குத்தான் தலைவரு மேல ஒரு ‘இது’ வரும்; never vice versa!) அதில் ஒரு பாட்டு: “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை…” இது just ஒரு example தான். அங்கங்க, அப்பப்ப இது மாதிரி அட்வைஸ்களை பொம்பளைகளுக்கு வாத்தியார் அள்ளி விடுவார், அல்லது அள்ளிவிடறது மாதிரி சீன்கள் கட்டாயம் செட் பண்ணிடுவாங்க. அவரு அப்படி சொன்னதுதான் தாமதம்; நம்ம ஹீரோயின்கள் - சரோஜா தேவி, ஜெயலலிதா, விஜயா,etc..etc.. - அடுத்த சீன்ல பயங்கரமா ஒரு பட்டுச் சேலை, ஒரு கூடைப் பூ வச்சி அப்டி ஒரு நட நடப்பாங்க பாருங்க..இங்க இருந்து விசிலு பறக்கும். இப்படியாக எல்லாத்துக்கும், எப்போவும், சிறப்பா பொம்பளைங்களுக்கு அட்வைஸ் பறக்கும் எல்லா படத்திலும்.
அடுத்தது வந்தாரு நம்ம சூப்பர் ஸ்டார். இவரும் அவர் பங்குக்கு பல படங்கள்ல ஒரே அட்வைஸ் மயம் தான். ரொம்ப கோபப் பட்ற பொம்பளைபத்தியெல்லாம் நெறைய சொல்லுவார். மன்னன் படத்தில் வர்ர தலைவி நாட்டின் முதல் இடத்தில இருக்கிற தொழிலதிபர். ஆனா நம்ம தலைவர் முன்னால ஜுஜுபியா ஆயிருவாங்க. அந்த படத்தில கடைசி சீன்ல, தலைவர் வேலைக்கு -அதே கடைநிலைத் தொழிலாளியாகத்தான் - போவார்; அந்த அம்மா அவருக்கு டிஃபன் பாக்ஸில் சோறு கொடுத்து அனுப்பிட்டு வீட்லேயே இருந்திருவாங்க; ஏன்னா, பொம்பிளயோட “இடம்” அதுதானே! இந்தப் பெண்ணடிமைத் தனத்திற்கும் தியேட்டர்ல முதல் வரிசை மட்டுமல்லாமல், கடைசி வரிசையிலிருந்தும் விசில் வரும். ஆக, சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். லெவலுக்கு பரிணாம வளர்ச்சிக்கு வந்துட்டாரா? ஆனா, நம் சினிமா அபிமானிகளின் பரிணாமம் அதைவிட ஒரு ஸ்டெப் முன்னேறி விட்டது. எப்டின்னு கேட்டீங்கன்னா, எம்.ஜி.ஆர். பீரியட்ல பொதுவா முதல் வரிசைக்காரர்கள்தான் விசிலடித்ததாக ஒரு ஐதீகம்; ஆனா, இப்போ அமெரிக்கா, ஜப்பான் தியேட்டர்லயும் கடைசி வரிசையிலிருந்துதான் ரொம்ப விசிலாமே - அப்படி ஒரு பரிணாம வளர்ச்சி நம்ம மக்களிடம்; நல்லா இருக்கில்ல?
அடுத்து நம்ம ஈனா.தானா. (அதாங்க, இளைய தளபதி - அது சரி,மூத்த தளபதி யாருங்க?)அவர் இதுவரை பொம்பளைங்களுக்கு எந்த அட்வைஸும் கொடுத்ததாகத் தெரியவில்லை. இப்போ அவரும் ‘வயசுக்கு வந்திட்டாராம்’! அதனால, அவரும் ஆரம்பிச்சிட்டார்..! அஸினுக்கு அட்வைஸ் கொடுக்கிற சீனைப் பாத்துட்டு அப்டியே ‘இதாய்ட்டேன்’! தமிழர்களுக்கு அடுத்த ஒரு தலைவரின் உதயம்னா சும்மாவா? அப்டியே, நெக்குரிகிட்டேன்.
ஆக நம் தலைவர்கள் சினிமாவை மட்டுமல்லாமல் நம்ம நாட்டையும் இப்படி உண்டு இல்லைன்னு பண்றதுக்கு நாம என்ன புண்ணியம் பண்ணியிருக்கணும்னு நினச்சி எனக்கு கண்ணீரே வந்திரிச்சி…ஆமா, உங்களுக்கு…?
Nov 16 2005 10:30 pm சினிமா edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 11 பரிந்துரைகள்)
ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
76 Responses
இளவஞ்சி Says: after publication. e -->November 17th, 2005 at 12:37 am e
அது ஒரு சோகக்கதைன்னேன்! தருமி சார்… என்னத்துக்கு படத்துக்கு போனோம்னு ஆகிருச்சு! அதுவும் நீங்க சொல்லற அட்வைசு சீன்.. கன்னறாவி…
இராமநாதன் Says: after publication. e -->November 17th, 2005 at 1:34 am e
பெரீய்ய்யப்பா,பின்னூட்டத்துல உத வாங்கணும்னு தலையில எழுதியிருந்தா அத அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாதுங்கறது சரியாத்தான் இருக்கு!
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 17th, 2005 at 1:58 am e
//விவசாயின்னு ஒரு படம்; நம்ம பொ.ம.செ.(வேற ஒண்ணும் இல்ல - பொன்மனச் செல்வர்தான்)//“பொன்மனச் செம்மல்” இப்படி செல்வர் ஆக்கிட்டிங்களே! செல்வி இருக்கிறதாலே செல்வர் ஞாபகமோ!
//நம் சினிமா அபிமானிகளின் பரிணாமம் அதைவிட ஒரு ஸ்டெப் முன்னேறி விட்டது. எப்டின்னு கேட்டீங்கன்னா, எம்.ஜி.ஆர். பீரியட்ல பொதுவா முதல் வரிசைக்காரர்கள்தான் விசிலடித்ததாக ஒரு ஐதீகம்; ஆனா, இப்போ அமெரிக்கா, ஜப்பான் தியேட்டர்லயும் கடைசி வரிசையிலிருந்துதான் ரொம்ப விசிலாமே - அப்படி ஒரு பரிணாம வளர்ச்சி நம்ம மக்களிடம்; நல்லா இருக்கில்ல?//
பின்ன சிலுக்குவார்பட்டி பழக்கம் சிகாகோ வந்தாலும் வுடுமா?
Rajan Says: after publication. e -->November 17th, 2005 at 2:14 am e
Pombalaiyaa latchanamaa podavaik kattuSumma puru purunnu kizhingi pora trouvusara vittu
Pombala sirichaa pochu pugayilai virichaa aachi …
the above were some other famous MGR songs advising girls on what to wear and how to behave. All tamil heroes from MGR, Shivaji, Jaishankar, Sivakumar to latest Vijay they were never tired of showing women their correct place in society. I must be having lot of tolerance and patience to watch Vijay movies and all.
AnbudanRajan
துளசி கோபால் Says: after publication. e -->November 17th, 2005 at 3:12 am e
தருமி,
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்பநாளா இருக்கு. யாராம் இந்த மூத்த தளபதி?
கண்ணீர் வருதுன்னு சொன்னீங்களே, அது ஆனந்தக்கண்ணீர்தானே?:-))
ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண வந்துர்றாங்கப்பா, சினிமாவுலேயும்,நிஜ வாழ்க்கையிலேயும்.எப்பத்தான் ஆண்குலம் திருந்தப்போகுதோ?
kirukan Says: after publication. e -->November 17th, 2005 at 4:34 am e
Dharumi, It is clear from this post that this menace has been passing from generation to generation and adapting like a virus.
Atleast this generation has to find a vaccine.
குமரன் Says: after publication. e -->November 17th, 2005 at 4:58 am e
அப்படி போடுங்க தலைவரே. நல்ல ஆராய்ச்சி. நம்ம கருத்தை அப்படியே புட்டுப்புட்டு வச்சிட்டீங்க. ஈனா தானா ஆனாலும் ஓவராத்தான் சிவகாசியில அலட்டிகறார்ப்பா…எங்க போயி நிக்கப் போகுதோ இதெல்லாம்…
padma arvind Says: after publication. e -->November 17th, 2005 at 5:41 am e
தருமிஇத்தன அட்வைஸ் பண்ணியும் புரிய மாட்டேங்குதே;(
வசந்தன் Says: after publication. e -->November 17th, 2005 at 6:27 am e
இளைய தளபதியும் முன்பே தொடங்கிவிட்டாரென்றே நினைக்கிறேன்.“பிரியமானவளே” யில் சிம்ரனுடன் நடக்கும் உரையாடல் ரொம்ப பிரபலமாச்சே. இன்னும் நிறைய இருக்கு.
கடிதம் கிடைத்தது.நன்றி.
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 8:24 am e
இதுல கொடுமை என்னனா இப்படி பெண்களை அடிமையா இருக்க சொல்லி அட்வைஸ் பண்ணும் நடிகர்களுக்குத்தான் பெண்கள் ஆதரவும் அதிகம்.
துளசி கோபால் Says: after publication. e -->November 17th, 2005 at 9:47 am e
ஏம்ப்பா, யாராவது சொல்லுங்களேன் அந்த ‘மூத்த’ தளபதி யாருன்னு.
மண்டை காயுதேப்பா….
MUTHU Says: after publication. e -->November 17th, 2005 at 9:52 am e
ANTHA ANDAVANNAE NINAICHALLUM NAMMALA KAAPAATHA MUDIYATHUUUU
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 10:09 am e
துளசியக்கா,தளபதி ரஜினி!இளைய தளபதி விஜய்!
இதிலிருந்து என்ன புரியுது?
விஜய் தான் இளைய ரஜினி- னு சொல்ல வர்றாங்க.சரியா?
துளசி கோபால் Says: after publication. e -->November 17th, 2005 at 10:20 am e
ஜோ,
சிம்பு லிட்டில் சூப்பர் இஷ்ட்டார்னு போட்டா அப்ப அது பிக் சூப்பர் ரஜினின்னு இல்லையா?
அதேன் ஒரே ஆளுக்கு ரெண்டுபேர் வாரிசா?
இன்னும் மண்டையைக் காயவைக்கறாங்களே.
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 10:30 am e
துளசியக்கா,ரஜினியா பார்த்து கொடுத்தா அவர் ஒருத்தருக்கு மட்டும் தான் கொடுக்க முடியும் .தானாவே தனக்கு கொடுத்துகிறவங்க கிட்ட இதுக்கெல்லாம் காப்பி ரைட் கேக்க முடியுமா?
நாளைக்கே ஒரு வலைப்பதிவர் ‘வலைப்பதிவுலக இளைய துளசி’ -ன்னு போட்டுக்குறார் .இன்னொருத்தர் ‘வலைப்பதிவுலக இரண்டாம் துளசி’ -ன்னு போட்டுகிறார்ன்னு வச்சுகுவோம் .நீங்க என்ன செய்ய முடியும் ? நிறைய பேர் மோதுரது உங்களுக்கு பெருமை தானே?ஹி ..ஹி
Snegethy Says: after publication. e -->November 17th, 2005 at 10:42 am e
Enaku ippathan angatham enda enna endu nallave villangithu
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:06 am e
இளவஞ்சி,ஏதோ, நாம் பெற்ற இன்பம்… அதுவரை சந்தோஷமே!
என்ன ராம்ஸ்,“பின்னூட்டத்துல உத வாங்கணும்னு தலையில எழுதியிருந்தா…”// - நாம பதிவாளர்கள் எல்லோரும் அப்படியா பழகுறோம்..இதல்லாம் சும்மா அப்டியே தட்டி விட்டுட்டுப் போறதுதான..
வெளிகண்ட நாதர்,““பொன்மனச் செம்மல்” இப்படி செல்வர் ஆக்கிட்டிங்களே…” // - இந்தப் பட்டமே நமக்குப் பிடிக்காதது…அதனால மனசுல நிக்கல போலும். எப்படியாயினும், திருத்தியமைக்கு நன்றி
ஷ்ரேயா Says: after publication. e -->November 17th, 2005 at 11:14 am e
எனக்கு>> விஜய்யோட சேர்த்து விசயகாந்து, அசித்து, “விரல்” சிம்பு, (இந்த வரிசையிலே (பழைய படங்களென்றால் சேர்றதும் புதுப்படமென்றால் விலகுறதுமா ரஸ்னிகாந்தும்) - இவர்கள் என்னை “உடற்பயிற்சி” செய்ய வைக்கிறவர்கள். விளங்கல்லயா? இவர்கள் படமென்றால் நான் ஆளை விட்டாக் காணுமென்று ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன்.
உலகத்திலே logic என்கிறதொன்று இருக்கிறதென்றும், இந்த “பெண்கள்-இப்படித்தான்-இருக்கவேண்டும்” அறிவுரைகள் படத்தை “ஊத்திக்கொள்ள″ வைக்கும் என்றும் யாராவது எங்கட தமிழ்த்திரையுலக ஜீவன்களுக்கு எடுத்துச் சொன்னால் நலம்! :rofl:
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:16 am e
ராஜன்,“All tamil heroes from MGR, Shivaji, Jaishankar, Sivakumar to latest Vijay they were never tired of showing women their correct place in society.”.. // - i dont agree. Other than M.G.R., Rajini, and Vijay in their respective periods other actors were never so seriouly sermonising in our films.
of the two songs you mentioned , which film has the first song? i dont think i am familiar with that one.
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:17 am e
துளசி,“எனக்கும் இந்த சந்தேகம் ரொம்பநாளா இருக்கு. யாராம் இந்த மூத்த தளபதி?” // உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துவைக்க நம்ம ‘தளபதி’ய அனுப்பிவைக்கிறேன்.
‘கண்ணீர் வருதுன்னு சொன்னீங்களே, அது ஆனந்தக்கண்ணீர்தானே?:-))” // - பின்னே, வேற என்ன..?
“ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண வந்துர்றாங்கப்பா, சினிமாவுலேயும்,நிஜ வாழ்க்கையிலேயும்.எப்பத்தான் ஆண்குலம் திருந்தப்போகுதோ? ” // சான்ஸ் கிடச்சா, சந்தடி சாக்கில கோபால்ஜியைத் திட்டிடறதா…இது ஒண்ணும் நல்லா இல்ல!!
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:33 am e
கிறுக்கன் (சாமி, வேற புனைப்பேருகிடைக்கலையா, உங்கள எப்படி ‘விளிக்கிறது’ன்னே தெரிய மாட்டேங்குதுல்லா..?)“Atleast this generation has to find a vaccine. ” ஆனாலும் நீங்க ரொம்பத்தான் optimistic-ஆக இருக்கீங்க! keepthis statement ready to pass it on to your grandchildren !! நம்ம எல்லாம் அவ்வளவு ஈசியா திருந்திட்ற ஜென்மங்களா…இந்த ஜாதி விஷயம் பாத்தீங்களா..ஏதாவது கொஞ்சமாவது மாறியிருக்கா..என் லைஃப்லேயே முந்திக்கு இப்ப கூடிதான் போச்சு…ம்..ம்ம்..என்னத்த சொல்றது…?
குமரன்,“எங்க போயி நிக்கப் போகுதோ இதெல்லாம்… ” // - முந்தினதில சொன்னதுதான், குமரன்..
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:44 am e
ஜோ,(இந்தமாதிரி)நடிகர்களுக்குத்தான் பெண்கள் ஆதரவும் அதிகம். // இதுக்கு அவங்கதான் பதில் சொல்லணும்…ஏன்னு..!!
ஜோ, சிலருக்கு ஒரு புது அகராதியே போடணும் போல இருக்கில்ல…அவுங்க பாட்டுக்கு நாட்டை விட்டு decades கணக்கா வெளியே போயிடறாங்களா… நாட்டு நடப்பே தெரிய மாட்டேங்குது. இல்ல?
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:46 am e
பத்மா,“இத்தன அட்வைஸ் பண்ணியும் புரிய மாட்டேங்குதே;( ..” // - உங்களுக்குத்தான் புரியலை, பத்மா! ஏற்கெனவே சொல்லியிருக்காங்கல்லா..one who advices is a fool, so also one who does not heed to that-ன்னு! மாத்தி மாத்தி சொல்லிக்க வேண்டியதுதான்.
வசந்தன்,அப்போ நம்ம ஈனா.தானா. அப்பவே மூனா.தானா.வா (மூத்த தளபதி) ஆகிவிட்டாரோ..தெரியாமப் போச்சு, போங்க..!
முத்து,இப்படி தலைவர் சொன்னத அவருக்கே திருப்பி கொடுக்றீங்களே..:-)
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 11:46 am e
தருமி, கொஞ்சம் மாத்தி சிந்திச்சி பாருங்க. எழுதுறவங்க, நடிக்கிறவங்க, பார்க்கிற கும்பல்( பெரும்பாலும்) அத்தனையும் ஆண்வர்க்கம். எங்களுக்கு இந்த டயலாக் வெறும் காமடி. ஆனா ஆண்களுக்கு வாழ்க்கையில் தங்களால் முடியாததை திரையில சொல்லி மனச தேத்திகிறாங்கன்னு நெனச்சிக்கீங்களேன். படாவதி சீரியல் வசனங்கள், கேட்டு என் கணவர் சொன்ன விளக்கம் இது.அய்யயோ! சிநேகிதி இருக்காங்களா
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:55 am e
சினேகிதி,அப்பாடா:-)அப்படி என்ன உங்களைப் பார்த்து உஷாவுக்கு ஷாக் அடிக்கிது??
சாஃப்ட்வேர் மக்களே,இங்க பாருங்க, தருமிக்கு ஒரு சந்தேகம் வெகு நாளா..இப்ப சினேகிதி, அவுங்க தோஸ்த்தி உஷா இவங்க பின்னூட்டத்தில ஸ்மைலி நல்லா தெரியுது. ஆனா நான் இப்படி போட்டா ” ” ஸ்மைலி ஒண்ணும் தெரியமாட்டேங்குது. ஏன்..ஏன்..ஏன்? ரொம்ப நாளா மண்ட காயுற விஷயம் எனக்கு இது…யாராவது என்னைத் தூக்கி விடுங்களேன்..
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 12:02 pm e
//எங்களுக்கு இந்த டயலாக் வெறும் காமடி. //உஷா,உங்களுக்கு இது வெறும் காமெடியா இருக்கலாம் .நீங்க ரொம்ப சிறுபான்மை.ஆனா இதை சீரியஸா பாக்குற பெண்கள் தான் நம்ம சமுதாயத்துல அதிகம்.நம்ம வாத்தியாருக்கு பெண்கள் ஆதரவு தான் உங்களுக்கு தெரியுமே ?வாத்தியாராவது சினிமால உள்ள ஒரு கேரக்டர் கிட்ட சொல்லுற மாதிரி மறைமுகமா சொல்லுவார் .ஆனா நம்ம சூப்பர் ஸ்டார் விசுக்கு..விசுக்கு சத்ததோட நம்ம கிட்ட நேரடியாவே சொல்லுவார் .
//நாட்டு நடப்பே தெரிய மாட்டேங்குது. இல்ல? //தருமி,மனசுக்குள்ள நினச்சுகிட்டு நம்ம துளசியக்கா பிழைச்சு போகட்டும்-னு சொல்லாம விட்டேன் .நீங்க போட்டு தாக்கிட்டீங்க .ஹி..ஹி
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:05 pm e
ஷ்ரேயா,உங்கள் ஓட்டம் விரைவில் நிற்குமா என்ன..? எனக்கு அந்த நம்பிக்கையில்லை. உங்கள் ஓட்டம் ஒரு ‘தீராத ஓட்டம்’தான்!
எம்.ஜி.ஆர். அமைச்சரானதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..? ஏதோ இரண்டில ஒண்ணாவது பொழச்சிடும்னு நம்பினேன். ரெண்டுமே தேறலையே!
நான் அப்போ இருந்த மாதிரியே நீங்களும் ‘மொடாக்கா’ இருக்கீங்களே..பின்ன என்ன..”“பெண்கள்-இப்படித்தான்-இருக்கவேண்டும்” அறிவுரைகள் படத்தை “ஊத்திக்கொள்ள″ வைக்கும்…” - இப்படி ஒரு மூட நம்பிக்கையோடு இருக்கீங்க…திருந்துங்க.. இந்த மாதிரி பேசுற தலைகளோட படம்தானங்க பிச்சுக்கிட்டு போகுது…
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:08 pm e
ஐயோ இது என்ன இப்படி போட்டா இப்ப ஸ்மைலி தெரியுது…என்ன மந்திரமோ, மாயமோ தெரியலையே…:-)
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:09 pm e
என்ன மந்திரமோ, மாயமோ தெரியலையே…:-)என்ன மந்திரமோ, மாயமோ தெரியலையே -இப்ப தெரியமாட்டேங்குது…என்னப்பா, நடக்குது இங்கே..?
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:12 pm e
உஷா,:-(ஜோ கட்சிதான் நானும்.. இப்ப என்ன சொல்றீங்க ! நானும் ஸ்மைலியா போட்டுப் பாக்க்றேன். சிலது வருது..சிலது .. ம்ஹூம்..என்ன மாயமோ…
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 12:17 pm e
அது சரி, தமாஷாய் நினைக்கும் கூட்டம் பெரியதுதான் என்று நான் சொன்னாலும், சிரீயசாய் எடுத்துக் கொள்ளும் கும்பலே தியேட்டரில் படம் பார்க்கின்றன, ஓட்டும் போடுகின்றன சரியா ஜோ, தருமி!
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:21 pm e
test for smilies மற்ற ஸ்மைலிகளுக்கு என்ன symbols போடணும்..?
குமரன் Says: after publication. e -->November 17th, 2005 at 5:00 pm e
:-)
Snegethy Says: after publication. e -->November 17th, 2005 at 6:34 pm e
santhadi sakila ennai mandai kaya vaikringa 2 perum enna.
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 6:44 pm e
சிநேகிதி, இப்பத்தான் பார்த்தேன். சின்னதா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு. அய்! சிநேகிதி இருக்காங்களா என்பதை அய்யயோ சிநேகிதி இருக்காங்களான்னு அடிச்சிட்டேன். ஆக, நீங்க எக்ஸ்ட்ராவாக இருக்கும் ‘யயோ” வை தூக்கிடுங்க. சரியா ))))
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 6:45 pm e
சிநேகிதி, இப்பத்தான் பார்த்தேன். சின்னதா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு. அய்! சிநேகிதி இருக்காங்களா என்பதை அய்யயோசிநேகிதி இருக்காங்களான்னு அடிச்சிட்டேன். ஆக, நீங்க எக்ஸ்ட்ராவாக இருக்கும் ‘யயோ” வை தூக்கிடுங்க. சரியா ))))
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 6:52 pm e
ஏங்க சினேகிதி,உங்க சினேகிதி உஷா:-( சொல்றத நம்புறீங்க..?
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 8:12 pm e
விளையாடாதீங்க தருமி! சிநேகிதி நா சொன்னா நம்புவாங்க. இல்லையா சிநேகிதி?லேசான பயத்துடன்,உஷா
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 9:22 pm e
ஆனாலும் சினேகிதி, நீங்க ரொம்பவே பாவங்க! எனக்கே இவ்வளவு கஷ்டமாயிருக்கே…உங்களுக்கு எப்படியிருக்கும்?
ரொம்ப வருத்தத்துடன்……தருமி
Mathy Kandasamy Says: after publication. e -->November 17th, 2005 at 9:40 pm e
//சினிமா = பொழுதுபோக்கு - இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை.//
ரொம்ப சரியாச் சொல்லிருக்கீங்க. அதிலயும் பாருங்க, நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப்பார்க்கிற ஆசாமிங்களே * படம்னா “கண்மணி”ங்களா மாறிடறாங்க..
—-மக்களே ரொம்ப அரட்டை அடிக்கிறாப்ல இருக்கு.
வீட்டில சொல்லிக்குடுக்கப்போறேன்.
-மதி
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 10:15 pm e
மதி ,இந்த ஸ்மைலி உங்க வேலையா? ஐயா, நல்லா இருக்கே…
சினேகிதி, உஷா, இங்கே சிலருக்கு காதில இருந்து புகையாமே …ஏங்க?
Rajan Says: after publication. e -->November 19th, 2005 at 7:55 am e
Dear Dharumi
I dont remember the name of the movies where those songs belog to. Both were famous songs once upon a time. The first one may be from Pattikaattup Ponnaiyaa or something. Does name matter for MGR films? All MGR films are just MGR films, same plot, same story, same everything, same unsahikkapable movies. From the success of the films by the likes of Vijay, I dont think even the next Tamil generation has changed a bit. No hopes. Read my review on the movie Kaazhcha. If you get the DVD in Madurai, please see it. It will give an antidote for seeing films like Maja or Sivakasi.
RegardsRajan
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 10:52 am e
‘’இந்தப் பட்டமே நமக்குப் பிடிக்காதது…'’
தருமி அவர்களே!!
அப்படியா !! அப்ப கணேசனுக்கு கொடுத்த ‘சிவாஜி’ என்ற பட்டம் ? (எதுக்கும் போட்டுக்கிறேன் )
suresh penathal Says: after publication. e -->November 19th, 2005 at 1:14 pm e

varutha paakkareen!
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 2:29 pm e
தாஸு,context புரியலையே!
சுரேஷ்,வருது ..வருது …ஸ்மைலிகள் வருது…வருது
-L-L-D-a-s-u--- Says: after publication. e -->November 19th, 2005 at 2:35 pm e
இளைய தளபதி , பொன்மன செம்மல் என பட்டங்களை கேலி செய்யும் நீங்கள் , ‘சிவாஜி’ எனும் பட்டத்தையும் (கணேசனுக்கு ஈ வே ராமசாமி கொடுத்த பட்டம்தானே ‘சிவாஜி’) கிண்டல் பண்ணுவீர்களா? :
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 2:59 pm e
தாஸு,
இ.த. - எந்தவிதப் பொருளாவது இருக்கிறதா இதில்?
பொ.ம.செ. - அவரை எப்படிப் பார்க்கிறோமே அந்த persepctives -யைப் பொறுத்து இந்தப் பட்டம். எனக்கு அது வெறும் வேடிக்கை; அவரது அபிமானிகளுக்கோ அது உண்மை. எல்லோரும் ஒத்துக்கொள்ளும் பட்டமல்ல அது.
சிவாஜி - இதைப்பட்டமென்று நினைக்கவில்லை; இரண்டு கணேசன்கள். வேறுபடுத்திக் காட்ட ஒருவர் ஜெமினி ஆனார்; இன்னொருவர் சிவாஜி ஆனார் - ஒரு காரண இடுகுறிப்பெயர்!
நடிகர் திலகம் - இதுதான் அவருக்குச் சரியான பட்டம். என்னைப் பொறுத்தவரை மகாகவி,கவிஞர், நடிகையர் திலகம் போன்ற பட்டங்கள் எவ்வளவு சரியோ அதே மாதிரி நடிகர் திலகம் என்ற பட்டம் சரியே; பொறுத்தமே.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 3:26 pm e
தருமி அவர்களே
வேறுபடுத்திக் காட்ட இனிஷியல் பயன்படுத்துவது போதும் என்று நினைக்கிறேன் . பட்டம் கொடுப்பது சினிமா மற்றும் திராவிட கலாச்சாரமாகிவிட்டது … இதில் வி.சி.கணேசனுக்கு மட்டும் விலக்கு அளிப்பதை ஒத்துக்கொள்ளமுடியவில்லை .
நடிகர் திலகம் - அவரை எப்படிப் பார்க்கிறோமே அந்த persepctives - -யைப் பொறுத்து இந்தப் பட்டம். எனக்கு அது வெறும் வேடிக்கை . உங்களுக்கோ அது உண்மை. எல்லோரும் ஒத்துக்கொள்ளும் பட்டமல்ல அது.
சிவாஜி : இதுவும் ஈ.வே.ரா எனும் திராவிட தலைவர் கொடுத்த பட்டமே .. இது வழக்கம்போல திரும்ப திரும்ப உச்சரிக்கப்பட்டு, சிவாஜி என்பது ஒரு பட்டமே என்பது மூடிமறைக்கப்பட்டு விட்டது . இது அவர் சார்ந்தோரின் புத்திசாலித்தனம்தான் .

தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 3:47 pm e
தாஸ்,“பட்டம் கொடுப்பது சினிமா மற்றும் திராவிட கலாச்சாரமாகிவிட்டது ..” //
- மகாத்மா, இரும்பு மனிதர், Mr. Clean …இப்படிப் பட்டங்கள் கொடுத்தது திராவிட கலாசாரமா? ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா - என்றது திராவிட கலாசாரமா?…எல்லோரும் ஒத்துக்கொள்ளும் பட்டமல்ல அது.//சரி, ஒத்துக்கறேன்.… அவர் சார்ந்தோரின் புத்திசாலித்தனம்தான் // - சார்ந்தோர் யார்? திராவிடக் கழகக்காரர்கள் / சிவாஜி ரசிகர்கள்..
(உங்களுக்குத் திராவிட கழகங்கள் மேல் ஒட்டுமொத்த வெறுப்பா? “சிவாஜி” மீது வெறுப்பா?
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 3:48 pm e
அப்படியே பட்டத்து ராசா வையும் பாருங்கள்
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 4:04 pm e
மகாத்மா என்ற பட்டத்தை காந்தி வெறுத்தார் என படித்திருக்கிறேன் . அவர் சுயசரிதையில் ‘மோகன் தாஸ்…’ என்ற பெயரைத்தவிர அவர் பட்டங்களை சேர்க்கவில்லை .. ( ராம்கி சரிதானே . இது தவறான தகவல் என்றால் பட்டம் விஷய்த்தில் அவரும் புனிதரல்ல) . ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது . கருணநிதி எழுதும் கட்டுரைகளிலெல்லாம் என்ன உள்ளது . சினிமாக்காரர்களின் பெயர் பலகைகளை பாருங்கள் .. கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் கேப்டன் என்றும் . தளபதி என்றும் ..
நானும் வி.சி.கணேசனின் நடிப்பை ரசிப்பவன் தான் , (எ.கா . தேவர் மகன் , முதல் மரியாதை) .. ஆனாலும் பட்ட பெயர் விஷயத்தில் அவரும் மற்றவரைப் போல ஒரு மட்டைதான் .
சார்ந்தோர் : அவர் , அவர் படங்களின் தயாரிப்பாளர் , இயக்குனர் , ரசிக கண்மணி தலைவர்கள் ,..
சங்கரய்யா Says: after publication. e -->November 19th, 2005 at 5:28 pm e
ஆளாளுக்கு தளபதி யாருன்னு கேள்வி…
விசயி யங்கா கீராரா அதால இளைய தள, கொஞ்சம் வயசானா அவரே தளபதி
குழலி Says: after publication. e -->November 19th, 2005 at 6:20 pm e
இணையதள தளபதி எல்.எல்.தாசு வாழ்க வாழ்க, தமிழ்மண நக்கீரர் எல்.எல்.தாசு வாழ்க, பட்டம் விரும்பா மாமேதை எல்.எல்.தாசு வாழ்க வாழ்க….
Snegethy Says: after publication. e -->November 19th, 2005 at 6:53 pm e
yeppa oru naal oorila illa endal en peyarai intha illu illuthrukinga 2 perum enna.dharumi aiya nan nambanum enduthan pola Usha 2 tharam pinnotam poturukira.
ahh ahh nan paavamthan shrumi aiya.ama yaruku காதில இருந்து புகை??
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 7:38 pm e
சினிமா நாடக கலைஞர்கள் பல பேர் அவர்களை அடையாளம் காட்டிய படங்கள்,பாத்திரங்கள் பெயர் கொண்டு அழைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல .வெண்ணிற ஆடை மூர்த்தி ,வெண்ணிற ஆடை நிர்மலா,படாபட் ஜெயலட்சுமி ,வியட்நாம் வீடு சுந்தரம் ,மேஜர் சுந்தர்ராஜன் ,குலதெய்வம் ராஜகோபால் ,மகாநதி சோபனா ,தளபதி தினேஷ் இவையெல்லாம் அப்படிப்பட்டவை தான்.
அது சரி .”ஆசிய ஜோதி” நேரு ,”இரும்பு மனிதர்” பட்டேல் இதெல்லாம் கலைஞர் கொடுத்த பட்டங்களோ?
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 7:43 pm e
‘நடிகர் திலகம்’ என்றால் அதற்கு முழுத்தகுதியும் பொருத்தமும் உடையவர் “சிவாஜி” கணேசன் ஒருவரே.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 8:05 pm e
ஜோ ..
பின்னுட்டத்திற்கு நன்றி ..விருப்பமிருந்தால் கருத்துக்கு மட்டும் மாற்றுக் கருத்துக்கூறவும் . எனக்கு நேரம் இருந்தால் அதற்கு கருத்துக் கூற முனைவேன் . இந்த முன்னுரையோடு எனது கருத்து கீழே ..
கணேசன் பைத்தியமாக மிக சிறப்பாக நடித்திருந்தால் (அவர் நன்றாகவே நடித்திருப்பார் ) ‘பைத்திய கணேசன்’ என்றா அழைத்திருப்பார்கள் ? ‘சேது’வில் விக்ரம் மிக தத்ரூபமாக பைத்தியமாக நடித்திருப்பார் அவரை ஏன் ‘பைத்திய’ விக்ரம் என்றழைக்கவில்லை ?
ஆசிய சோதி முதற்கொண்டு எல்லாம் சொறிந்துவிடுகிற வேலை !! அதை மற்றவர்கள் ரசிப்பதுதான் புரியவில்லை ..ஆனாலும் பட்டத்து ராசா மாதிரி யாரும் பட்டங்களை அவுத்து விட்டதில்லை!! பட்டங்கள் சூட்டியதை பெருமையாக சொல்லித்திருந்ததில்லை !! வெட்கமேயின்றி தன் ‘பட்டபெயரை’ தான் எழுதும் கதைகளில் போட்டுத்திரிந்ததில்லை .
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 8:16 pm e
//பாத்திரங்கள் பெயர் கொண்டு அழைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல//
ஜோக்கே அதுதான் . அதிலும் மேஜர் சுந்தரராஜன், கேப்டன் விஜய்காந்த் போன்ற பட்டங்கள் ..
//இணையதள தளபதி//
குழலி ,
பிரபலமான ஒரு தமிழ் வலைத்தளத்தில், ஒருவரின் பெயரை ‘இணையதளபதி’ XXX என்றே குறிப்பிடுவார்கள் .. சீழ் எங்கு வரை பீடித்துள்ளது பாருங்கள் ..
ramachandran usha Says: after publication. e -->November 19th, 2005 at 8:21 pm e
//பிரபலமான ஒரு தமிழ் வலைத்தளத்தில், ஒருவரின் பெயரை ‘இணையதளபதி’ XXX என்றே குறிப்பிடுவார்கள் .. சீழ் எங்கு வரை பீடித்துள்ளது பாருங்கள்//
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 8:38 pm e
//கணேசன் பைத்தியமாக மிக சிறப்பாக நடித்திருந்தால் (அவர் நன்றாகவே நடித்திருப்பார் ) ‘பைத்திய கணேசன்’ என்றா அழைத்திருப்பார்கள் ?//
இருக்கலாம் .காக்கா ராதாகிருஷ்ணன் கிட்ட தட்ட அப்படித் தான் .கலைஞரைப் போல தந்தைப் பெரியார் பட்டங்கள் வழங்குபவரல்ல .அநேகமாக அவர் பட்டம் வழங்கியது கணேசனுக்கு மட்டும் தான் என நினைக்கிறேன் (வெங்காயம் etc எல்லாம் பட்டங்களில் சேத்தி இல்லை) .அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் எம்.ஜி.ஆர் (அப்போது அவர் சினிமா நடிகர்) நடிக்க இருந்து கடைசி நேரத்தில் மறுத்து விட ,வேறு வழியின்றி கணேசனை நடிக்க வைக்க ,நாடகம் ,சினிமா இவற்றை விரும்பாத பெரியார் அண்ணாவுக்காக வேண்டா வெறுப்போடு நாடகத்துக்கு தலைமை தாங்க வந்தார் .புதிய பையன் ஒருவன் சிவாஜியாக அற்புதமாக நடித்தது அவரை கவர்ந்தது .நாடக முடிவில் அவனை மேடைக்கு அழைத்து பேரைக் கேட்க ,’கணேசன்’ என்று சொல்லப்பட ,’தம்பி சிவாஜியாவே மாறிட்ட மாதிரி நடித்தார் .சிவாஜி கணேசன் -னு கூப்பிட்டா கூட தப்பில்லை’-னு சொல்ல அந்த பெயர் நிலைத்தது.
‘நடிகர் திலகம்’ என்ற பெயர் வந்ததற்குக் கூட ஒரு கதை இருக்கு .தேவையென்றால் சொல்லுகிறேன் .
பட்டங்கள் தேவையில்லையென்பதே என் நிலையும் .ஆனால் அது அர்த்ததோடு இருந்தால் ஒன்றும் தவறில்லை . ‘புரட்சி தமிழன்’ சத்தியராஜ் என்று ஒரு பட்டம் .இதற்கு என்ன அர்த்தம் .தமிழர்களிலேயே புரட்சி பண்ணியது சத்தியராஜ் ஒருவர் தான் என்று அர்த்தம் .இது அபத்தம் ! ‘புரட்சிக் கலைஞர்’ ,இது ‘புரட்சி தலைவர்’ ,கலைஞர்’ ரெண்டையும் சேர்த்து ஒரு காம்பினேசன் இதுவரை யாரும் வைக்கல்ல ,அதுனால நம்ம எடுத்துக்குவோம்-னு எடுத்துக்குறது .’உலக நாயகன்’ கமல் ..என்ன இவர் உலகத்துக்கே நாயகனா? இது K.S.ரவிக்குமார் கமலுக்கு பண்ணின அபத்தம் ..ஆனா ‘நடிகர் திலகம்’ அப்படின்னா ,நடிகர்களில் முதன்மையானவர் அப்படின்னு அர்த்தம் .இதுக்கு சிவாஜியத்தவிர பொருத்தமானவர் யாரும் இல்லைன்னு சிவாஜிய பிடிக்காதவங்களே ஒத்துக்குவாங்க .நீங்க விதி விலக்கா இருக்கலாம் .காந்தி ஒண்ணும் மகாத்மா இல்லைன்னு சொல்ல கொஞ்ச பேர் இருப்பாங்க .அதுனால அவரை நாடு அப்படி கூப்பிடாம இருக்குமா?
காந்தி அவரை மகாத்மான்னு அவரே அவருடைய சுயசரிதத்துல கூப்பிடல்லன்னு ஒரு உலக மகா கருத்தை சொல்லியிருக்கீங்க ..சிவாஜி சுய சரிதையில கூட அவர் தன்னை சிவாஜின்னோ ,நடிகர் திலகம் -ன்னோ கூப்பிட்டுக்கல்ல .பல இடத்துல தன்னை ‘முட்டா பய’-ன்னு சொல்லியிருக்கார் .அவ்வலவு தான்.
கலைஞர் பட்டம் கொடுப்பது குறித்து உங்கள் கருத்து எனக்கு உடன்பாடே .தானே தன் தலையில மண் அள்ளி போட்டுகுறது கலைஞர் ராசி .இப்போ ஜெயலலிதாவுக்கு ‘புரட்சித் தலைவி’ பட்டம் வருவதற்கும் அவர் தான் காரணம் .எம்.ஜி.ஆருக்கு ‘புரட்சி நடிகர்’ பட்டம் கொடுத்தது அவர் தான் .அது ‘புரட்சி தலைவர்’ ஆகி இப்போ ‘புரட்சி தலைவி’ல வந்து நிக்குது .வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 8:55 pm e
//. சுய சரிதையில கூட அவர் தன்னை சிவாஜின்னோ ,நடிகர் திலகம் -ன்னோ கூப்பிட்டுக்கல்ல //
அவரது பெயர் திரையில் என்னவென்று இருந்தது என்று சொல்லமுடியுமா? அது தயாரிப்பாளர் (அ) இயக்குனரின் முடிவு என கூறவேண்டாம் ..
//’நடிகர் திலகம்’ அப்படின்னா ,நடிகர்களில் முதன்மையானவர் அப்படின்னு அர்த்தம்//
இவர்தான் முதன்மையானவர் என்பதற்கு என்ன அளவுகோல் .. இதுவரை வேண்டுமானால் , இவர் முதன்மையான நடிகராக இருக்கலாம் .. இனிமேல் ஒருவர் இவரை விட நன்றாக நடித்தால் .. அப்போது ‘ நடிகர் திலகம்’ எனும் பட்டம் கணேசனுக்கு பொருந்தாதே ..
‘கவிப்பேரசர்’ என்ன ‘கவியரசரை’ விட பெரிய கவிஞரா? இதெல்லாம் ஜோக்காக தெரியவில்லை .
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:03 pm e
//’தம்பி சிவாஜியாவே மாறிட்ட மாதிரி நடித்தார் .சிவாஜி கணேசன் -னு கூப்பிட்டா கூட தப்பில்லை’-னு சொல்ல அந்த பெயர் நிலைத்தது..//
ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ..யாராவது உங்களின் ‘ப்ரோக்ராம்’ பார்த்து .. Stroustrup போல ப்ரோக்ராம் எழுதியுள்ளீர்கள் என பாராட்டினால் உடனே உங்கள் பெயரை ‘Stroustrup ஜோ’ என்றா கூறிக்கொள்வீர்கள் ?
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 9:04 pm e
சினேகிதி,“nan nambanum enduthan pola Usha 2 tharam pinnotam poturukira.” // திருப்பி திருப்பி சொன்னாலும் பொய் உண்மையாயிருமா, என்ன?
ama yaruku காதில இருந்து புகை?? //தேடுங்கள் கண்டடைவீர்கள்…
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:05 pm e
//அது தயாரிப்பாளர் (அ) இயக்குனரின் முடிவு என கூறவேண்டாம் ..//சரி கூறல்ல.
//இவர்தான் முதன்மையானவர் என்பதற்கு என்ன அளவுகோல்//ஒரு அளவு கோலும் கிடையாது .நீங்கள் வெண்டுமென்றால் விஜயையோ ,அஜித்தையோ ‘நடிகர் திலகம்’ என்று கூப்பிட்டு கொள்ளலாம் .அது உங்கள் விருப்பம்.எல்லாம் கருத்து சுதந்திரம் தானே.
//இனிமேல் ஒருவர் இவரை விட நன்றாக நடித்தால் //அது உங்க அளவுகோலைப் பொறுத்தது.தாராளமா உங்க அளவுகோலை வைத்து அளந்து கொள்ளவும்.
//‘கவிப்பேரசர்’ என்ன ‘கவியரசரை’ விட பெரிய கவிஞரா? //அதை ஏற்றுக் கொண்டவர் யாரிடமாவது போய் கேட்கவும்.
//இதெல்லாம் ஜோக்காக தெரியவில்லை . //‘நடிகர் திலகம்’ தவிர நீங்க சொன்ன எல்லா பட்டங்களும் எனக்கும் ஜோக்கா தான் தெரியுது .உங்களுக்கு எவை எவை ஜோக்குண்ணு உங்க அளவுகோல் வச்சு தான் முடிவு பண்ணனும்.நான் என் அளவு கோல் வச்சு பண்ணிக்குறேன்.
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:11 pm e
//ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ..யாராவது உங்களின் ‘ப்ரோக்ராம்’ பார்த்து .. Stroustrup போல ப்ரோக்ராம் எழுதியுள்ளீர்கள் என பாராட்டினால் உடனே உங்கள் பெயரை ‘Stroustrup ஜோ’ என்றா கூறிக்கொள்வீர்கள் ? //
நீங்க வலைப்பதிவுலகுல லாடு லபக்கு தாஸ் தானே?எல்லோரும் உங்கள அப்படித்தானே கூப்புடுறாங்க .உங்க உண்மையான பெயர் எனக்கு தெரியும்ணாலும் நானும் லாடு லபக்கு தாஸ்-ன்னு தான் கூப்பிட்டுடிருக்கேன்.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:16 pm e
இது என்ன என் பட்டப்பெயரா? இணையத்தில் என் identity மறைக்க பயன்படும் ஒரு புனைப்பெயர் . குழலி , தருமி , முகமூடி , பெயரிலி போல .
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:19 pm e
//அது தயாரிப்பாளர் (அ) இயக்குனரின் முடிவு என கூறவேண்டாம் ..//சரி கூறல்ல.
//இவர்தான் முதன்மையானவர் என்பதற்கு என்ன அளவுகோல்//ஒரு அளவு கோலும் கிடையாது .நீங்கள் வெண்டுமென்றால் விஜயையோ ,அஜித்தையோ ‘நடிகர் திலகம்’ என்று கூப்பிட்டு கொள்ளலாம் .அது உங்கள் விருப்பம்.எல்லாம் கருத்து சுதந்திரம் தானே.
//இனிமேல் ஒருவர் இவரை விட நன்றாக நடித்தால் //அது உங்க அளவுகோலைப் பொறுத்தது.தாராளமா உங்க அளவுகோலை வைத்து அளந்து கொள்ளவும்.
//‘கவிப்பேரசர்’ என்ன ‘கவியரசரை’ விட பெரிய கவிஞரா? //அதை ஏற்றுக் கொண்டவர் யாரிடமாவது போய் கேட்கவும்.
//இதெல்லாம் ஜோக்காக தெரியவில்லை . //‘நடிகர் திலகம்’ தவிர நீங்க சொன்ன எல்லா பட்டங்களும் எனக்கும் ஜோக்கா தான் தெரியுது .உங்களுக்கு எவை எவை ஜோக்குண்ணு உங்க அளவுகோல் வச்சு தான் முடிவு பண்ணனும்.நான் என் அளவு கோல் வச்சு பண்ணிக்குறேன்.
//
முழு வாதமும் அருமை
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:20 pm e
//இது என்ன என் பட்டப்பெயரா? இணையத்தில் என் identity மறைக்க பயன்படும் ஒரு புனைப்பெயர் . குழலி , தருமி , முகமூடி , பெயரிலி போல . //ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ?எனக்கு அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:23 pm e
புனைப்பெயருக்கும் பட்டப்பெயருக்குமுள்ள வித்தியாசம் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா? ஆச்சரியம்தான் ..
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:28 pm e
//ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ?எனக்கு அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. //
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:30 pm e
//புனைப்பெயருக்கும் பட்டப்பெயருக்குமுள்ள வித்தியாசம் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா? ஆச்சரியம்தான் .. //தெரியுமையா..’வெண்ணிற ஆடை’மூர்த்தி என்ன பட்டப் பெயரா? அவர் முதன் முதலில் நடித்த படத்தின் பெயர் .’குலதெய்வம்’ ராஜகோபால் கூட அப்படித்தான் .அதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் .’சிவாஜி’ என்பது கணேசனை உலகுக்கு முதலில் அறிய வைத்த காதாபாத்திரத்தின் பெயர் .மற்றபடி ‘சிவாஜி’ போன்ற மாமன்னன் கணேசன் என்ற அர்த்ததில் வைக்கப்படவில்லை.
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 9:38 pm e
Ll Dasu,
இதுவரை வேண்டுமானால் , இவர் முதன்மையான நடிகராக இருக்கலாம் .. // Thank you. அவ்வளவுதான் வேணும்.
இதே மாதிரி, அந்த முண்டாசுக்காரனுக்கு ‘மகாகவி’ன்னு பேரு வச்சிருக்கோம். அதனால, இனிமே யாருமே அவனை ‘முந்த’ முடியாதுன்னா பொருள்?
இன்னைக்கி இது உண்மைன்னு நினைக்கிறதை வைத்து வைக்கப்படும் பட்டங்களில் எல்லாமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; சில மட்டுமே காலத்துக்கும் நிலைத்து நிற்கிறது - மகாகவி, நடிகர் திலகம், Nature Poet - Wordsworth) மாதிரி. என்னடா, ஆங்கிலத்தை உள்ள இழுக்கிறானேன்னு பாக்றீங்களா? இது திராவிடப் பாரம்பரியம் ஒன்றும் இல்லை. பிடிச்சவங்களை ஏத்தி வைக்கிறது மனித குணம். அதில் நிலைச்சு சிக்கிறது கொஞ்சமே. நாம் மட்டுமா Father of Nation-ன்னு காந்திஜியைச் சொல்றோம். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ஃபாதர்தான். அதுக்காக, ‘மதர்’ எங்கேன்னு கேட்டுகிட்டா இருக்க முடியும்! அப்படி கேட்க ஆரம்பிச்சா, ஆங்கிலத்தில் சொல்ற ஒரு idiom சொல்லணும். hair-splitting exercise..
அதே மாதிரி, உண்மையைச் சொல்லுங்க…உண்மையோ பொய்யோ, உங்கள் ஒருத்தரு கொஞ்சம் ‘ஓஹோ’ன்னு சொன்னா, அல்லது உங்கள் பதிவுக்கு ‘கொன்னுட்டீங்க’ன்னு ஒரு பின்னூட்டம் வந்தால் at least அந்த வினாடியில் மனசு கொஞ்சம் மேல போய் வரலை! ஒருவேளை அப்படி எல்லாம் எனக்குக் கிடையாதுன்னு சொன்னா, ” தலீவா , நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல″ன்னு சொல்லி …. அப்பீட்.
LLDasu Says: after publication. e -->November 19th, 2005 at 9:40 pm e
//தெரியுமையா..//
அப்படின்னா .. குட் நைட்டுங்க.. ..
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 10:42 pm e
குமரன், ராஜன், சுரேஷ்(வந்திருச்சி போல), சங்கரய்யா,குழலி,
அனைவருக்கும் நன்றி
துளசி கோபால் Says: after publication. e -->November 22nd, 2005 at 1:20 am e
??:
இதுவரை நடந்த விவாதங்களைப் படித்தபிறகு
இது ஒரு சோதனை.
தருமி Says: after publication. e -->November 22nd, 2005 at 4:45 pm e
துளசி,என்னங்க இது
எத ‘சோதனை’ங்கிறீங்க?

1 comment:

ஜோதிஜி said...

குறிப்பிட்டு வைத்திருந்த முக்கிய தளங்களில் உங்களுடையதும் ஒன்று. முழுமையாக பார்த்து வருகின்றேன்.

Post a Comment