Saturday, July 15, 2006

165. சாதிகள் இருக்குதடி பாப்பா..2

‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஜூலை மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக முக்கியமாக உங்களைச் சேரவேண்டுமாய் நான் நினைப்பதைத் தனித்தனிப் பதிவாக பதிக்க எண்ணி, அதன் முதல் பதிவாக அக்கட்டுரையின் முடிவுரையை சில கூடுதல்களோடு முதலில் இங்கு தருகிறேன்.

VI. ஆறாம் பகுதி

முடிவுரை:

ப்ராமணர்களை ‘வந்தேறிகள்’ என்கிறார்கள் ஒரு பிரிவினர்; இன்று human genomics பற்றிய ஆராய்ச்சிகளின் மேற்கோள்களோடு “நாம்’ அனைவரும் ஒரே RACE என்கிறார்கள். (ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்? )இன்னொரு பிரிவினர். ஆனால், “திராவிட, ஆரிய பிரிவு என்பது கருத்தியல் ரீதியாக, சமூக ரிதியாக இருப்பதை” மறுக்க முடியாது - (போனபார்ட்) “Sharing a haplotype/genotype with other populations in the world doesn’t mean that your forefather(s) and the other population’s forefather(s) (don’t get it mixed up with the primordial archetype here, we’re talking about ‘modern man’ are/were 100% genetically identical.-( சன்னாசி)- இது போன்ற மாற்றுக்கருத்துக்களும் உண்டு.

இப்படி இரு வேறு கருத்துக்கள் இருப்பினும், நம் ஒவ்வொரு சாதியின் ‘gene pool’ ஒன்றும் water tight compartments இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் வாழும் எந்த உயிரினங்களுக்குள்ளும் (different communities of the same species) genetic exchange நடந்தே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மை. There are no biological barriers - free flow of genetic exchanges should have been the norm. இங்கே என்னதான் சாதிப் பிரிவினைகள் என்ற கோடுகள் போட்டு மக்களைப் பிரித்து வைத்திருந்தாலும் , பாலுணர்வுக்கு ஏது வரைமுறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குறிய gene pool 100% purity-யோடு இருக்க சாத்தியமேயில்லை. 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன என்பதை விடவும், அதன் பின் நடந்திருக்கக் கூடிய இனக் கலப்பு - genetical outbreeding (இங்கு outbreeding என்பது species விட்டு species என்ற பொருளில் இல்லை; caste மாறி caste என்ற பொருளில் கொள்க.) நம் எல்லோரையும் ஒரே genetic pool-யைச் சேர்ந்தவர்களாக ஆக்கியுள்ளது என்பதே இன்றைய human genomics பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுக்குக் காரணமாக இருக்க முடியும்.

நடுவில் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினரை ‘முற்படுத்திய’ வரலாறு வேறு உண்டு. இப்படி வழியில் எவ்வளவோ!

aryan invasion is a myth என்று சொல்பவர்களுக்கு: வந்தேறிகள் என்று அழைக்கப்படும் போது வருந்திய, கோபமுற்ற முற்படுத்திக் கொண்டோர் இப்போது DNA கூற்றினை உண்மையென ஒத்துக்கொள்கிறார்களா? ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்களா? அப்படியாயின், சானாதன தர்ம நம்பிக்கையைக் கை கழுவுகிறார்களா? வர்ணாச்சிரம் என்று ஒன்றுமில்லை; ‘ஏற்றத் தாழ்வு சொல்லல் பாவம்’ என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? ப்ரம்மனின் பல்வேறு anatomical parts-களிலிருந்து ஜாதிகள் உருவாகின என்ற தத்துவங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுமா?

ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? விளக்குமாறே உன் கதி; உன் தொழில் என்ற தள்ளப்பட்டு சமூகத்தின் கடைசியில் நிற்கும் ஒருவருக்கும், ஒதுக்கீட்டிற்கு எதிராகப் ‘போராளி’யாய் இன்று தெருவில் விளக்குமாறோடு நிற்பவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேருமே சொந்தக்காரர்கள்தானே! அண்ணன்-தம்பிகளோ, மாப்’ள-மச்சான்களோதானே!

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இது ‘சாதிப்புத்தி’ என்று ஒவ்வொரு சாதிக்கும் சில ‘பண்பு நலன்களை’ (??!!)க் கூறுவதுண்டு. இன்று அந்த மாதிரியான பேச்சு ஒருவாறு குறைந்து வந்து கொண்டிருந்தது. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் நம்மை மறுபடியும் 50-60 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு போய்விட்டது.¼br /> இன்னும் 2000-3000 ஆண்டுக்கதைகள் எதற்கு? கடந்த 50-100 ஆண்டுகளில் எல்லோருக்கும் பொதுவான வசதி வாய்ப்புகளைப் பெரு வாரியாக ஒரு சிலர் அடைந்து விட்டனர். சாதியின் பெயரில், சாதி உயர்வு சொல்லி அதனால் வந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே கிடைத்து வந்திருக்கிறது. சாதிப் பிரிவினைகளை மட்டுமே வைத்து வந்த வாய்ப்புகள் அவை. வேறு எந்த காரணமுமில்லை. திறமை நம் எல்லோருக்கும் உண்டு. இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும். ஏற்கெனவே பலன்களை corner செய்துகொண்டவர்கள்தான் இதற்காக முதலில் நேசக்கரம் நீட்ட வேண்டும்; இனியாவது எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும் முன்னேற்றினால்தான் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே முறையானது; மனிதத்தனமானது என்ற உணர்வு வரவேண்டும். வருமா..?

B.C., S.C., S.T., - இவர்களுக்கு ஒரு வார்த்தை:

சமூக நீதி கிடைக்கப் பெறுவதற்குரிய வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். (இதுவரை சமூக நீதி என்ற பெயரில் நடந்துவந்துள்ள போராடங்களையும், பித்தலாட்டங்களையும் பற்றிப் பிறகு பார்ப்போம்.) பலருக்கும் இட ஒதுக்கீடு, அதனைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கல்வி, வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது; அதனை ஒட்டி நடக்கும் போராட்டங்கள் யாருக்காகவோ, எதற்காகவோ நடப்பது போல் பலரும் இருப்பதாகவே படுகிறது. புரிந்து கொள்வதும், புரியாதவருக்குப் புரிய வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கட்டாயத் தேவை.

புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் - இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும்.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jul 15 2006 03:32 pm Uncategorized
20 Responses
தருமி Says:
July 15th, 2006 at 6:40 pm
சன்னாசி, போனபார்ட்,
உங்களின் கருத்துக்களை இக்கட்டுரையில் மேற்கோளிட்டுள்ளேன்.உங்களுக்கு ஏதும் எதிர்ப்பு இருக்காதென்றே எண்ணுகிறேன். சரியாக உங்கள் கருத்துக்களைப் பயன் படுத்தியுள்ளேனா என்று பார்த்துச் சொல்லுங்கள்.
நன்றி.

கோவி.கண்ணன் Says:
July 15th, 2006 at 7:40 pm
இந்தியர்கள் ஒரே நிறத்திலும், தோற்றத்திலும் இல்லாதது இந்தியாவின் துரதிர்ஷ்டம். இன்றைய வாழ்வியல் இக்கட்டில் சாதிகள் இல்லை, ஆரியர் இல்லை, திராவிடர் இல்லை என்று சொல்வது வெறும் வார்த்தை மட்டும்தான்.ஆனால் உள்ளுக்குள் அனைவரும் தன் குலம் உயர்ந்தது என்ற மாயையில் தான் இருக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு வேலைச் செல்கிறவர்கள் கூட எல்லாவித பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் மற்றும் எல்லாவற்றையும் இந்தியாவில் விட்டுச் சென்றாலும் சாதியை மட்டும் விடுவதேயில்லை. எத்தனையோ வெளிநாட்டுக் கலச்சாராங்களையும் வாழ்வியலையும் பார்கிறவர்கள் பெண் தேடும் போது மட்டும் தன் சாதியாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். இந்தியர்களுக்கு சாதி உணர்வு ஜீன்களிலேயே அடங்கியிருக்கிறது.

என் கருத்து இது … தாழ்ந்தவராக கருத்தப்பட்டவர்கள் கூட தாங்களும் உயர்ந்தவர் என்று ஒரு மாயையில் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக தாங்களும் எல்லோரைப் போலவே சமமானவர்கள் என்று நினைத்தாலே போதும். உயர்வு ஒன்றை எதையாவது நினைத்துக் கொண்டிருந்தால் சமண்பாடுகள் எப்போதும் சாத்தியம் அல்ல.

உயர்ந்தவர்கள் என்பதற்காக சமூக அந்தஸ்து எதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

சாதிகள் ஒளிக்கப்படவேண்டுமெனில் அது திருமணங்கள் மூலம்தான் ஒழிக்கப்பட முடியும் அதற்கு நூற்றாண்டுகள் ஆகலாம்.

TheKa Says:
July 16th, 2006 at 12:57 am
“வந்தேறிகள்” என்பது மனித பரிணாமச் சுழற்சியில் ஒன்றுமே கிடையாது. ஹோமோ எரெக்டஸ் என்ற மனித குரங்கு இனம் புது இடங்களுக்கு வலசை போகமல் இருந்திருந்தால், அதற்கு அடுத்த மனித இனமாக தோன்றிய ஹோமோ சாபியன்ஸ் என்ற இந்த தற்கால மனிதன் தேன்றி இருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்காது.

“விலங்குகள்” உலகில் எந்த ஒரு இனமும் தன்னை இயற்கையின் நடைமுறை சேர்காப்பு (inclusion) சுழற்சியில் தற்காத்து அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டுமெனில், ஒரு சில தேவையில்லாத தகவைமைப்புகளை, பண்புகளை இழந்தோ அல்லது பெருக்கிக்கொண்டோ அடுத்த பரிணாமச் பயணத்தில் பயணித்தே ஆக வேண்டும்.

இந்த கூற்று அப்படியாக இருக்கையில் ஒரு தனிப்பட்ட இனம் தழைக்கவேண்டுமெனில் இயற்கை மீண்டும் அத் தனிப்பட்ட இன பிரஜைகளிடுடேயே கூட தறம் வாய்ந்த மரபுப் பண்புகளை பெரும் வண்ணமும் அவைகளை தனது அடுத்த சந்ததியினர்களுக்கு கடத்தி விடவும் சில பல முறைகளில் அந்த யுக்தியை இயற்கை நடத்த வாய்பளிக்கிறது.

உதாரணமாக, விலங்குகளுக்கிடையே இனப்பெருக்கத்தினை முன்னிட்டோ அல்லது தனது குடும்பத்தை யார் வழி நடத்தி (Alpha male) செல்வது என்பதற்கென நடக்கும் சண்டைகள் (குரங்கு வகைகள், மான்…), கிட்டத்தட்ட எல்லா வகை இனங்களுக்கும் இது போன்ற இயற்கை தேர்ந்தெடுப்பு இயற்கையாகவே நடந்தேறுகிறது. கிடைக்கும் நன்மை, தனது அடுத்த சந்ததி மிக்க திறமைகளை கொண்ட ஆரோக்கியமான, இயற்கை எதிப்புகளை சந்திக்க திறன் மிக்க ஒரு இனம்.

இதற்கு மாறாக இப்பொழுது மனித இனத்தில் இந்த சாதிகள் அடிப்படையில் நடந்தேறும் இனப்பெருக்க யுக்தி, இயற்கைக்கு புறம்பான யுக்தியாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய நேரிடும் பொழுது அங்கே நிகழ்வுறுவது “தன் சாதிப் பெருக்கம்” இதனை ஆங்கிலத்தில் Inbreeding என்று அழைக்கிறார்கள். இதன் மூலமாக மரபணுக்களில் எந்த ஒரு சிறப்பு புற பண்புகளும் அடுத்த தலைமுறைக்கு இணைக்கப்படுவதில்லையாதலால், பிறக்கும் சந்ததிகளும், ஒரு நல்ல ஆரோக்கியமற்ற, உடல் மற்றும் புத்தி சார்ந்த தேக்கம் நிகழ்ந்து விடுகிறது.

….. To be Contd

TheKa Says:
July 16th, 2006 at 12:59 am
…Part II

இது போன்ற மரபணு தேக்க நிலையின் இறுதி கட்ட வாழ்வு எப்படியிருக்கும் என்பதனை ஒரு பாலூட்டிகளில் நடதிய ஆராய்ச்சியின் பொழுது கண்டெடுத்த உண்மைகளை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ஒரு மூன்று வித அளவுகோலுடன் உள்ள மழைக்காடுகளில் இந்த ஆராய்ச்சி நடத்தப் பட்டது. ஒன்று, இயற்கையான மனித நடமாட்டம் இல்லாத மிகப் பெரும் நீண்ட காடு அதனை ஆங்கிலத்தில் Main Land என்பார்கள், இரண்டாவது, அது போன்ற மெயின் லாண்டிலிருந்து உடைந்த சிறு பெரும் காடு (Fragmented Landscape) சுற்றிலும் தேயிலை தோட்டத்தால் துண்டிக்கப்பட்டு, மூன்றாவது, இரண்டாவது வகை காட்டை விட இன்னும் அளவில் சிறியது அது போன்றே பண்புகளுடன்.

இப்பொழுது மரபணுச் சோதனை ஒரு குறிப்பிட்ட எலி வகை தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்த்தப் பட்டது, முதல் வகை காட்டில் அதாவது மெயின் லாண்டில் எந்த தங்கு தடையுமின்றி இனப்பெருக்க ஓட்டத்திற்கான வழிமுறைகள் இருந்ததால் between individuals, அங்கு உள்ள சந்ததிகளின் நோய் எதிர்புத்தன்மை, குட்டி ஈனும் பொழுது குட்டிகளின் சாவு எண்ணிக்கை எல்லாம் குறைந்தே காணப்பட்டது.

மாறாக இரண்டாவது காட்டில் மெயின் லாண்டின் சூழ்நிலைக்கு எதிர் மரையாக காண நேர்ந்தது. ஆனால் மூன்றாவது வகை காட்டில் அந்த இன எலியே காணப்படவில்லை. காரணம் ஆராயப்படும் பொழுது, இனப் பெருக்க inbreeding ஒன்றே முதல் காரணியாக கண்டறியப்பட்டது. உணவு சார்ந்த பற்றாக்குறை இருந்த போதிலும்.

இந்த தன் இனச் சேர்க்கையால் (inbreeding), ஒரு சில குறிப்பிட்ட நோய் தாக்கும் பட்சத்தில் அந்த இனமே அழிந்து போகும் அபாயம், மரபணு டைவர்சிடி இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நிலையில் நடந்திருக்கலாம் என கண்டறியப்பட்டதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்திய இளைஞர்களை தன் இயற்கை சார்ந்த திறமைகளின் மூலம் தனது பார்ட்னர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்தால் நாமும் ஒலிம்பிக், உலக கால்பந்து போட்டி போன்ற உலகப் போட்டிகளில் கலந்து கொண்டிருப்போமோ

kpd Says:
July 16th, 2006 at 5:07 am
/*
எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும் முன்னேற்றினால்தான் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது
*/
சரியான கருத்து… மற்ற அனைத்து சமூக காரணிகளை புறம் வைத்து, நாளைய ஒருமித்த தேசிய நலன் அல்லது குறுகிய சுயநலன் அடிப்படையில் பார்த்தால் கூட, மற்றவர்கள் சிறிதாவது முன்னேறினால் தான் நாளைய தேசிய/நமது நலன் பாதுகாப்புறும் என்பது அடிப்படை.

எனவே சமூக/தேசிய/சுயம் ஆகிய அனைத்து நலன்களுக்கும் இந்த ஒதுக்கீடு ஒரு கருவியாக பயன்படும். போகும் காலத்தில் கருவியில் ஏற்படும் பழுதுகளை நீக்கிடும் விவாதங்களே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
Thx.

தருமி Says:
July 16th, 2006 at 11:33 am
கோவி.கண்ணன்,
//உயர்ந்தவர்கள் என்பதற்காக சமூக அந்தஸ்து எதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை …//

அப்படியா சொல்கிறீர்கள்?
உயரந்தவர்கள்- தாழ்ந்தவர்கள்; அந்தந்த அந்தஸ்துக்கு ஏற்ற வேலைகள் என்றில்லையா என்ன?

கோவி.கண்ணன் Says:
July 16th, 2006 at 12:04 pm
//அப்படியா சொல்கிறீர்கள்?
உயரந்தவர்கள்- தாழ்ந்தவர்கள்; அந்தந்த அந்தஸ்துக்கு ஏற்ற வேலைகள் என்றில்லையா என்ன? //

அதிக வருமானம் உள்ள குலத்தொழில்கள் மட்டுமே தற்பொழுது சந்ததிகள் மூலம் விரும்பி செய்யப் பட்டுவருகிறது.
மற்ற குலத்தொழில்கள் வறுமையின் காரணமாகவும் வேறு தொழில் தெரியாததாலும் தொடர்கிறது.

அந்தஸ்துக்கு ஏற்ற வேலை என்று எதுவும் இல்லை. படிப்புக்கு ஏற்ற வேலை உண்டு என்று சொல்லலாம்.

உண்மையை சொல்லுங்கள் ‘தாங்கள் உயர்ந்தவர்கள்’ என்று சொல்பவர்களுக்கு நீங்கள் கும்பிடு போடுகிறீர்களா ?

ஆனால் முன்பு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, செருப்பை கழட்டிக் கொண்டு ஓரமாக நின்று கும்பிட வேண்டும் என்ற ஒரு எதிர்பார்பு இருந்தது. இன்று அது இல்லை.

இந்த நிலை இன்று இருப்பதற்கு யார்காரணம் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களின் பெரும்தன்மையா ?

தாங்கள் இறங்கிவந்தது எப்படி என்று தெரிந்தும், உண்மையை ஒப்புக்கொள்ளும் பண்பட்ட மனம் இன்றும் இல்லை என்பது, அவர்கள் சமூக மாற்றம் கொண்டுவந்தவர்களுக்கு எதிராக முழங்குவதிலிருந்தும் அவதூறு பேசுவதிலிருந்தும் தெரியவரும் நிதர்சன உண்மை.

சின்னக்கடப்பாரை Says:
July 17th, 2006 at 11:25 am
அரசாங்கத்துக்கு lobby செய்பவர்கள் அனைவரும் மேல்தட்டு, படிப்பில் உயர்ந்த, பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கின்ற டாகூர்களும், ராஜ்புட்களும். அவர்களை போன்ற “ஏழைகளுக்கா” தெரியாது BC, SC, ST, படும் வேதனைகள்?

அரசியல்வாதிகளை விட கேவலமான கோமாளிகள் இவர்கள்.

அசுரன் Says:
July 17th, 2006 at 7:13 pm
ஆரிய திராவிட பிரிவு பற்றி பிறருக்கு சொல்லி அவர்கள் அப்படி ஒரு பிரிவு இன்றும் இருக்கிறதா என்று திருப்பிக் கேட்டால் பின்வரும் விவரத்தை சொல்லுவது வழக்கம். அதாவது ஒரு ஆரியன் அல்லது திராவிடன் என்று உயிரியல் ரீதியாக பிரிக்க நினைத்தால் இன்று முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் பல்லாயிரமாண்டு ஒரே நிலப்பரப்பில் இருப்பதின் விளைவு அப்படி ஒரு பிரிவினை இருப்பதை எந்த அளவு விட்டு வைத்திருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் அப்படி ஒரு வெறுப்புடன் நிலை நிறுத்தப்பட்ட பண்பாட்டு அடக்குமுறைகள் பல்லாயிரம் வருடங்களாக தொடர்வதை யாராலும் மறுக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு எனது பெயர்(அசுரன்). சுர பானம் அருந்தாதவன் அசுரன்.

அது இங்கிருந்த திராவிடன் என்று அறியப்பட்ட தோல்வியுற்ற ஒரு சமூக பிரிவுதான்.

நீங்கள் சொல்லுவது போல் சட்டத்தை மீறிய உயிரியல் கலப்பு நிகழ்ந்ந்துள்ளன. வேறு சில காரணங்களும் உள்ளன.

//அப்படியாயின், சானாதன தர்ம நம்பிக்கையைக் கை கழுவுகிறார்களா? வர்ணாச்சிரம் என்று ஒன்றுமில்லை; ஏற்றத் தாழ்வு சொல்லல் பாவம் என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? ப்ரம்மனின் பல்வேறு anatomical parts-களிலிருந்து ஜாதிகள் உருவாகின என்ற தத்துவங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுமா?//

மனிதன் பிறப்பால் வேறுபட்ட குண நலனுடன் பிறக்கிறான் என்ற விசயத்தை பார்ப்பனிய பயங்கரவாதிகளால் விட்டொழிக்க முடியாது.

ஆனால் உண்மை என்னவெனில் பிறக்கும் மனிதரில் ஏற்றத்தாழ்வான நிலை இருக்க காரணம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வும், பல்லாயிரம் வருடங்கள் நிலைத்திருக்கும் அந்த சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு விட்டுச் சென்றுள்ள மரபு ரீதியான தொடர்ச்சிகளுமே.

ஒரு பொதுவுடைமை சமுதாயாத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்படும் பொழுது ஒன்றிரண்டு(அல்லது மூன்று, நான்கு) தலைமுறைகளில் மனிதரிடையே அப்படிப்பட்ட பிறப்பின் அடிப்ப்டையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அழிந்துபோகும்.

இது போன்றெல்லாம் சிந்திக்க அவர்களுக்கு தெரியாது. பிற்போக்குவாதிகள்,
“5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வேதத்தில் எல்லாம் சொல்லியிருக்கிறது என்று கங்கை கரையில் இருந்து பிதற்றும் ஐந்துக்கள்” என்று புதுமைபித்தனால் விமர்சிக்கப்பட்ட அவர்கள் வேறு விதமாக சிந்தித்தால்தான் நாம் ஆச்சரியப் படவேண்டும்.

அவர்களது பதிவுகளை பாருங்கள் எதையாவத் வாந்தி எடுத்திருப்பார்கள். வாந்தி எடுத்த அவர்களால் ஒரு சில அடிப்படை கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல இயலாமல் நம்மீது அவதூறு கிளப்புவார்கள்.

அந்த மாதிரி ஆட்களின் தளத்தில் சென்று விவாதம் செய்யக்கூடாது. மாறாக நமது மாற்றுக் கருத்தை நமது ஆதரவு தளங்களில் பதிவிட்டு அதன் மூலம் அவர்களின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்.

//புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் - இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும். //

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

நல்ல பதிவு…இடஓதுக்கீடு பற்றிய பகுதி அதீத கவனம் எடுத்து படித்தால்தான் தங்களது நிலைப்பாடு புரிய வருகிறது(ஒருவேளை அவசரமான எழுதினீர்களோ?).

நன்றி,
அசுரன்

கோவி கண்ணன்,
சாதிகள் பொருளாதார, காலாச்சார ரீதியாக கிராமப்புறங்களில் வேறூண்றியுள்ளது அது வெறுமனே திருமணம் என்ற ஒன்றின் மூலம் அழிந்துவிடாது.

asuran Says:
July 18th, 2006 at 9:24 pm
தருமி,

எனக்கு தனிமடலில் கேட்டிருந்த, எனது விமர்சனம் பற்றிய ஒரு சிறு விளக்கம்.

அது வேறு ஒன்றும் இல்லை எப்பொழுதுமே முதலில் பதிவுகளை ஒரு கழுகு பார்வை பார்ப்பது வழக்கம். அது போல தங்களது பதிவை பார்த்த பொழுது நீங்கள் இடஓதுக்கீடை மறுத்து எழுதியது போல் தோன்றியது. பிறகு இரண்டாம் முறை தங்களது பதிவு பற்றிய எனது கருத்தை முடிவு செய்வதற்காக படித்த பொழுதுதான் நீங்கள் அந்த பகுதியை மற்றவர்களுக்கான அறிவுரையாக கூறியது புலப்பட்டது.

அதனால்தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டவாறு “சிறிது கவனம் எடுத்து படிக்க வேண்டியதாக இருந்தது’ என்று குறிப்பிட்டேன்.

மற்றபடி இடஓதுக்கீட்டை நடுத்தர வர்க்கம் ஆதரிக்காதது பற்றிய தங்களது மனவியல் ஆய்வு முடிவு மிகச் சரியான ஒரு பார்வை. இதையே நீங்கள் ஒரு விரிவான பதிவாக வெளியிட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மேல்நிலையாக்கம் அடைந்த வலைப்பூ பிரிவினருக்கு ஒரு நல்ல செய்தியாக சென்றடைந்திருக்கும்.

அதாவது இடஓதுக்கீடு எதிர்ப்பில் பார்ப்பினிய/மேல்சாதி வெறியும்/திமிரும், நடுத்தர வர்க்க குட்டி முதலாளித்துவ ஜனநாயக உணர்வும் என்ற இரண்டு அடிப்படை இருப்பதைப் பற்றி ஒரு விரிவான பதிவு இடலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் இப்படி ஒரு கட்டுரை எழுதுவது பற்றி மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.

நன்றி,
அசுரன்.

asuran Says:
July 18th, 2006 at 9:31 pm
TheKa உயிரியல் ரீதியாக சாதி வெறியை அடிக்கிறார்…..

நல்ல கூட்டணிதான் நமக்கு கிடைத்திருக்கிறது ))) அவருக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றி,
அசுரன்.

தருமி Says:
July 19th, 2006 at 1:44 pm
கோவி. கண்ணன்,
ஒப்புக்கொள்கிறேன்.

சின்னக் கடப்பாரை,
நன்றி

தருமி Says:
July 19th, 2006 at 1:47 pm
அசுரன்,
இது ஒரு முழுக்கட்டுரையின் முடிவுரை. அதை முதலில் தந்துள்ளேன். அதனால் கூட அந்தத் தோற்ற மயக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

சோம்பேறி பையன் Says:
July 20th, 2006 at 4:53 pm
// ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? //

நல்ல வரிகள்.. இக்கட்டுரை திசைகள் இதழில் வந்ததாக தெரிவித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் !!

Sivabalan V Says:
July 20th, 2006 at 7:29 pm
தருமி சார்,

அருமையான பதிவு.

தெகாவின் விளக்கம் அருமை.

பதிவுக்கு மிக்க நன்றி.

தருமி Says:
July 20th, 2006 at 8:50 pm
சோம்பேறி பையன், சிவபாலன்,
இருவருக்கும் மிக்க நன்றி.

கமல் Says:
July 21st, 2006 at 5:13 pm
தருமி சார்,

வழக்கம் போலவே நல்லதொரு பதிவு. ஆனால், கடைசி இரண்டு பத்திகளில் அழுத்தம் போதவில்லை என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்காத பிற்படுத்தப்பட்டவர்கள் கண்டனத்துக்குரியவர்கள்தான்.

இன்று இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பிற்படுத்தப்பட்டவர்கள், தங்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதே சாதி மாணவனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட்டான். தன்னை விடக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்ட சாதி மாணவனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட்டான். ஆனால் தான் மட்டும் மருத்துவம் கிடைக்காமல் பொறியியல் படிக்க வேண்டியதாகப் போய்விட்டதே! இதற்குக் காரணம் இட ஒதுக்கீட்டால்தானே! என்று கூறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் மறந்து விட்டது அல்லது புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், தன்னைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதே சாதி மாணவனுக்கும் மருத்துவம் கிடைத்திருக்காது. தாழ்த்தப்பட்ட சாதி மாணவனுக்கும் மருத்துவம் என்ன? பொறியியல் கூடக் கிடைத்திருக்காது என்பதுதான்.

அப்படியானால், ஒருவரின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துத்தான் மற்றவர் மேலே வரவேண்டுமா என்கிறார்கள்.

அவசியமில்லை. வட்ட வடிவமான ஒரு மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடக்கும்போது, உள் வட்டத்தில் இருப்பவரை விட, வெளி வட்டத்தில் இருப்பவர் சற்று முன்னே இருந்துதான் ஓட்டத்தை ஆரம்பிப்பார். அதற்காக அதை அவருக்குக் கிடைத்த சலுகை என்று கூறிவிட முடியுமா? சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்குத் தரும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இப்படி மதிப்பெண் சலுகை தந்து அனுமதிப்பதன் மூலம் தரம் குறைந்து விடாதா? என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் பணம் கொடுத்துச் சேரும் பணக்கார மாணவர்களால் குறையாத தரம், இதனால் குறைந்து விடாது என்பதுதான் பதில்.

//உண்மையை சொல்லுங்கள் ‘தாங்கள் உயர்ந்தவர்கள்’ என்று சொல்பவர்களுக்கு நீங்கள் கும்பிடு போடுகிறீர்களா ?//

கோவி.கண்ணன்,

நாம் சொல்வதில்லை. ஆனால், இன்னும் கோயில்களில் ‘சாமி, இங்கே கொஞ்சம் விபூதி கொடுங்க!’ என்று கேட்கிறார்களே! இல்லாவிட்டால், விபூதி கிடைக்குமா? விபூதிக்குக் கிடைக்கும் மரியாதை தன் சக மனிதனிடம் இல்லையே?

இட ஒதுக்கீட்டைப் பற்றி நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்த போது, ‘இட ஒதுக்கீடு இருந்தால், கலப்புத் திருமணத்தால் கூடச் சாதியை ஒழிக்க முடியாது’ என்றார். எப்படி? என்று கேட்டதற்கு, பின்வரும் பதிலைக் கூறினார்.

‘இரண்டு வேறு சாதிகளைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தை எந்த சாதியைச் சேர்ந்தது? அதை முடிவு செய்பவர்கள் யார்? பெற்றோர்கள்தானே? சாதி வரிசையில் கீழே இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சலுகை இருந்தால், எந்த சாதியைத் தேர்வு செய்வார்கள்? குறைந்த அந்தஸ்து உள்ள சாதியைத்தானே! ஆனால் வளர்க்கும்போது எந்த சாதி அடிப்படையில் வளர்ப்பார்கள்? இவர்களை யாருடைய குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளதோ அல்லது யாருடைய குடும்பம் பொருளாதாரத்தில் உயர்ந்ததோ, அந்த சாதியின் மனநிலையில்தானே? ஆக, எல்லாருக்கும் மனதளவில் ஒரு சாதி, ஏட்டளவில் இன்னொரு சாதி என்றிருந்தால், சாதி எப்படி ஒழியும்?’

இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

நன்றி
கமல்

தருமி Says:
July 21st, 2006 at 9:27 pm
கமல்,
நன்றி.
நீங்கள் சொன்ன குறை - ஒருவேளை இது முழுப்பதிவினொரு பாகம், அதுவும் முடிவுரையை வேண்டுமென்றே முதலில் தந்துள்ளேனே அதனால்தானே என்னவோ. நீங்கள் சொல்லும் தரம்பற்றி முழுக்கட்டுரை பதியும்போது காணுங்கள்.

பொன்ஸ் Says:
July 21st, 2006 at 9:30 pm
கமல்,
உங்க கேள்வி சரிதாங்க.. ஆனால், இந்தப் பின்னூட்டத்திலயே இன்னும் ஒரு க்ளூவும் கொடுத்திருக்கீங்க..

இட ஒதுக்கீடு இருப்பதால், அதற்கு வசதியான ஜாதியில் பிள்ளையைப் பதிவு செய்பவர்கள், இன்னொரு ஜாதிக்கு ஏற்ற மாதிரி வளர்ப்பது என்றால், அப்போ இட ஒதுக்கீட்டை ஒழித்தால் மட்டும் ஜாதி வேற்றுமை ஒழிந்துவிடுமா என்ன? ..

கமல் Says:
August 21st, 2006 at 7:40 pm
//அப்போ இட ஒதுக்கீட்டை ஒழித்தால் மட்டும் ஜாதி வேற்றுமை ஒழிந்துவிடுமா என்ன?//

ஒழியாதுன்னுதாங்க நானும் சொல்றேன். ஆனால், இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் சாதிச் சான்றிதழே தேவையில்லை. அதனால் காலப்போக்கில் மறைந்து விடும் என்கிறார் நண்பர்.

அப்படியென்றால், வெள்ளைக்காரன் வந்த பிறகு வந்ததுதானே இந்த சான்றிதழ் விவகாரமெல்லாம்? அதற்கு முன் ஏன் ஜாதி இருந்தது? அப்படீன்னு கேட்டேன். இப்போ அவர் யோசிச்சிட்டிருக்கார்.

இப்படியே புலி வாலைப் பிடித்த நாயர் கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நன்றி
கமல்

No comments:

Post a Comment