.
.
கொசுறு: 1
இந்த கொசுறுவிற்கு கீழேயுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.
ரோட்டுல நடக்க உடுங்க, சாமிகளா..
எங்க ஊரு நல்ல ஊரு...
விவேக்தான் உதவிக்கு வரணும்...
நித்தம் நித்தம் நான் அனுபவிக்கிறதை வேற எங்க போய் கொட்டித் தீர்த்துக்க முடியும், சொல்லுங்க... அதான் இங்கன வந்திட்டேன்.
எங்க ஊர்ல பாத்திமா பெண்கள் கல்லூரியிலிருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை இருக்கே அதுவரைக்கும் ஒரு ரோடு போகும். சென்னைக்கு கிருஷ்ணாம் பேட்டைன்னா என்னன்னு எல்லோருக்கும் தெரியும்; சென்னைக்கு கண்ணம்மா பேட்டை மாதிரி எங்க ஊரு மதுரையில 'தத்தனேரி'ன்னா எல்லாருக்கும் தெரியும். அந்த தத்தனேரி இந்த ரோட்டின் நடு செண்டரில் இருக்கு. இந்த தத்தனேரியிலிருந்து தேவர் சிலை வரை உள்ள ஏரியா செல்லூர். topography புரிஞ்சிதா? இப்பகுதியில் ஒரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். என் தலைவிதி நித்தம் 4 - 6 தடவை அந்த தத்தனேரியைக் கிராஸ் பண்ணியாகணும். (கிராஸ் பண்ணிதான போற; நேர அங்கேயேவா போய்ட்ட? - அப்டின்னெல்லாம் கேக்கப் படாது.) அடக்கமெல்லாம் நம்மள பண்ணப்படாது; இது மாதிரி எரிக்கத்தான் வேணும் அப்டின்னெல்லாம் நினைச்சுக்கிட்டு, நம்ம இங்க வரும் போது எப்படி இருக்கும் (அப்ப உயிரோடு இருக்கிறவங்களுக்குத்தான்..) யாரு யாரு வருவாங்க; என்னென்ன பேசுவாங்க; பாவம், அவங்க, நல்லதா பேசுறதுக்கு எதுனாச்சும் அவங்களுக்கு இருக்குமா; பாய்ண்ட்ஸ் கொடுத்திருக்கமா? அப்டின்னெல்லாம் சுகமா கற்பனை பண்ணிக்கிட்டு போறதுதான் வழக்கம். ஆனா, பல நாளு இந்த மாதிரியெல்லாம் சுதந்திரமா கற்பனையெல்லாம் பண்ண முடியாதபடி சில விஷயம் நடக்கும் பாருங்க..அதுவும் தத்தனேரி - செல்லூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் அந்த விஷயங்களைப் பத்தி சொல்லத்தான் வந்தேன்.
பழுத்த பழம் செத்தா கல்யாணச் சாவு அப்டின்னு நம்ம ஊர்ல அந்த மாதிரி சாவையே பல மக்கள் ஒரு விழா மாதிரி கொண்டாடுவாங்க..அதெல்லாம் சரிதான். கொண்டாட்டத்தை வீட்டுக்குள்ள - அட்லீஸ்ட், தெருவுல வச்சிக்கிட்டா நான் இங்க வந்து ஏன் பிலாக்கணம் பாடப் போறேன். சரி...பெருசா பாடையெல்லாம் ஜோரா கட்டுங்க...மேளதாளத்தோட தூக்கிட்டுப் போங்க...அட, அதுக்காக உங்க வீட்டு இழவ ரோட்டுல போற எல்லாரு மேலயும் எதுக்கு ஏத்தணும்னு தெரியலையே.சமீபத்தில நடந்த ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்றேன்; கேளுங்க.
இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னால..காலையில எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் போற நேரம். இவங்க குரூப் ஒண்ணு வருது. வழக்கம்போல பேயாட்டம் போட்டுக்கிட்டு மொதல்ல ஒரு 'வாட்டர்' கூட்டம். தடுக்கிறதுக்கோ,அடக்கி வைக்கவோ சில சமயங்களில் இந்த மாதிரி குரூப்புகளோடு நல்ல மனுசங்க நாலஞ்சு பேரு வர்ரது உண்டு. அன்னைக்கி அப்படி ஒரு புண்ணியாத்மா யாரும் வரலை. வழியில் உயிரைக் கைல பிடிச்சிக்கிட்டு மனுச சனம் ஒதுங்கி நிக்குது. பாடையில இருக்கிற பூவையெல்லாம் பிச்சி கூட்டத்தை நோக்கி எறிஞ்சிக்கிட்டு வாராங்க. எனக்கு சைடுல ஒருத்தரு அவரு மகளை பைக்ல பின்னால உக்கார வச்சிக்கிட்டு நிக்கிறாரு..காலேஜுக்கு பொண்ண கொண்டு விடப் போறது மாதிரி இருக்கு. நம்ம ஆளுங்களுக்கு மூடாய் போச்சு..ஒரு மாலை.. பாதி பூ.. பாதி நாறு..எடுத்து அந்தப் பொண்ணு மேல எறியறான் ஒருத்தன்.. பாவம், பொண்ணு மேல போய் நச்சுன்னு மூஞ்சில விழுது...அந்த நாய் - sorry, அந்த boy - சிரிக்கிறான். இது பத்தாதுன்னு ரெண்டு பசங்க - அந்தக் கூட்டத்த சேந்த கேசுகள்தான்.. பைக்ல வித்த காமிக்க ஆரம்பிச்சிட்டான்...என் வண்டிக்கு நேர, அது என்ன.. கார்ட்டிங்கா இல்ல வீலிங்கா..அது மாதிரி ஏதோ கோணக்க மாணக்க பண்ண, வண்டி என் வண்டிக்கு நேர வர்ரது மாதிரி இருந்தது.. சரி..இன்னைக்கு நம்ம மாட்னோம்டான்னு நினச்சேன்.. நல்ல வேளை ..**** வண்டியிலிருந்து விழுந்ததுகள்.சந்தோஷமா இருந்திச்சி (இப்படியெல்லாம் அடுத்தவன் உழுறது பாத்து சிரிக்கப் படாதோ? மனுசத்தனம் இல்லாம பேசப்படாதோ..?) ஆனா ஒண்ணும் அடி படலை..கொஞ்சம் வருத்தம்தான்.
நாலஞ்சு மாசத்துக்கு முந்தி ஒரு தடவை... இந்த மாதிரி ஒரு இழவு ஊர்வலம்.. சிவனேன்னு ஓரத்தில நின்னுக்கிட்டு இருக்கேன். இவங்க போடற மாலைக்குப் பயந்து கண்ணாடிய ஏத்தி உட்ருந்தேன். எதிர்த்தாற் போல் வந்த ஊர்வலத் தலைவர்களில் ஒரு சுள்ளான்; இருவது வயசுகூட இருக்காது. நான் கண்ணாடிய ஏத்தி உட்டது பாத்துட்டான். அது அவனுக்குப் பிடிக்கலை. டேய்! கண்ணாடிய ஏத்திக்கிட்டுதான் வருவீகளோ அப்டின்னு கத்திக்கிட்டு பானட்ல ஓங்கி அடிக்க வந்தான். நம்ம வண்டிதான் சோப்பு டப்பாவாச்சே; வேகமா ஒரு வேப்பங்காய் விழுந்தாலும் 'டொக்' விழுகிற டப்பா. அவன் அடிக்கிற அடியில அப்படியே பள்ளம் விழுகப் போகுது; டிங்கரிங், பெயிண்டிங் அப்டின்னு அஞ்சு பத்து செலவாகப் போகுதுன்னு நினச்சிக்கிட்டேன். நல்ல வேளை ஒரு ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன்; அவர்தான் அந்தக் கூட்டத்துக்கு கண்ட்ரோலர் போலும். சடார்னு அவன இழுத்துட்டுப் போய்ட்டார். பெரிய மனசு பண்ணி, பொழச்சுப் போ அப்டின்னு அந்த ** சொல்லிட்டு போயிரிச்சி. அப்பாடான்னு எனக்கும் ஆச்சு. அந்த வழியே அடுத்த அரைமணி நேரத்தில திரும்பி நான் வந்துகிட்டு இருக்கும்போது அதே குரூப் இப்ப எல்லா வேலையும் முடிச்சிட்டுத் திரும்பி வந்துகிட்டு இருந்தது. இப்போ ஒரே கூட்டமா வரலை. அஞ்சாறு பேரா வந்துகிட்டு இருந்தாங்க. அதில அந்தப் பயலும் ஒண்ணு. ஆனா இப்போ பூனக்குட்டி மாதிரி அலம்பல் இல்லாம ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தான். அரை மணி நேரத்துக்கு முந்தி இவந்தான் அப்படி ஆடினான்னு சொன்னாக்கூட நம்ப முடியாது; அப்படி ஒரு நல்ல பிள்ளையாய் அந்த **.
இன்னொரு வகை வீர திலகங்கள் இந்தக் கூட்டத்தில உண்டு. சரவெடி போடுவாங்க.. சரி, ஒழியுது.. ஓரத்தில நின்னு பொறுத்திருந்து போயிடலாம். சில நாய்ங்க -ச்சீ..பாய்ஸுங்க - லஷ்மி வெடியா, யானை வெடியா..? அத கையில வச்சிக்கிட்டு பத்த வச்சி கூட்டத்துக்குள்ள எறிஞ்சி ஒரு தடவ பாத்தேன். என்ன கெக்கலிப்பு அப்போ!
இதில அந்த ரோட்ல இருக்கிற ரயில்வே கிராஸிங்கல எப்பவும் ஒண்ணு ரெண்டு போலீஸ்காரங்க நிப்பாங்க. அவங்க ஏதாவது சொல்லணுமே! ஹு.. ஹும்.. ம்ம் ..கண்டுக்கிறதேயில்லை. ஏதோ அவங்களும் அந்தக் கூட்டத்து சொந்தபந்தம் மாதிரி எமொஷனலா இழவு காத்திருவாங்க. அவங்கள சொல்லியும் குத்தமில்ல.. நமக்கில்ல அறிவு வேணும். எல்லாத்துக்கும் போலீஸ்காரவுங்களா குச்சிய தூக்கிக் கிட்டு வருவாங்க?
நான் சொல்ற இந்த ரோட்டுல இன்னொரு விசேஷம் என்னன்னா, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ராட்சச போஸ்டர்கள் - flex boards - இருக்கும். கல்யாணம், காது குத்து, வீடு திறப்பு, இப்படின்னு எதுக்கும் ஒரு போஸ்டர். அதிலெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. நல்லா இருக்கும்; பொம்பிளையாளெல்லாம் கழுத்து மறைய நகை நட்டு...(அதப் பார்த்ததும் கந்துவட்டின்னு மனசுல ஒரு எண்ணம் வர்ரதையும் சொல்லியாகணும். அது சரியோ தப்போ தெரியாது.) ஆம்பிளைங்க கொடுக்கிற போஸ், அந்த செல்போன் பேசிக்கிட்டே கொடுக்கிற போஸ் எல்லாம் நல்லா ரசிக்கலாம். என்ன, சில சமயம் பொண்ணு மாப்பிள்ளைய பாத்தா பெத்தவங்க மாதிரி தெரியும். அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, பாத்து ரசிக்கலாம்.
ஆனால் என்ன, நடிகர் விவேக் இதெல்லாம் நல்லது இல்லை; இதுக்கு ஏதாவது அரசாங்கம் செய்ய முடியுமான்னு தீபாவளியப்போ சன் டி.வி.யில கலைஞரிடம் விசனப்பட்டு கேட்டார்.அதனால அவர கூப்பிட்டு, இந்த போஸ்டர் சமாச்சாரம் எல்லாம் எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். இந்த இழவு சமாச்சாரத்தை நீங்கதான் கொஞ்சம் மக்கள்ட்ட சொல்லி "அவரவர் இழவு அவரவருக்கு" என்ற ஒரு நல்ல philosophy -யைச் சொல்லி இந்த மக்களை நீங்கதான் திருத்தணும்னு கேக்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.
விவேக் சொன்னா கேப்பாங்க; என்னதான் இருந்தாலும் நம்ம சொந்தக்காரர் சொல்றார்னு ஒரு மரியாதை இருக்காதா,என்ன?
.
.
கொசுறு: 2
இந்த ரோட்டின் ஒரு முனையில் பாத்திமா பெண்கள் கல்லூரி இருக்கிறது. இதன் பக்கத்தில் ஒரு traffic island - மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம். சிக்கலான போக்குவரத்து உள்ள பகுதி. கொஞ்ச வருஷத்துக்கு முந்தி எந்த ஒழுங்கு முறையும் சரிப்படுத்தாத நிலை இருந்தது. பாவம், ஒரு சின்ன வயது வாலிபர்; புதிதாக வாங்கிய பைக்கில் அந்த இடத்திலேயே விபத்தில் இறந்தார். அந்த விபத்திற்குப் பின் போலீசார் அந்த இடத்தில் போக்குவரத்தைச் ஒழுங்கு படுத்தினார்கள். அதிலிருந்து இதுவரை நன்றாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை கொஞ்சம் சீர் செய்தார்கள். islands-க்கு நடுவில் இடம் விரிவாக்கப் பட்டது. எல்லாம் செய்தார்கள். ஆனால் sign boards எதுவும் கிடையாது. போலீஸ் எதுவும் கிடையாது. இப்போது நம்ம ஊரு வழக்கமான free for all -தான். யார் யாருக்கு எந்த வழி பிடிக்குதோ அந்தப் பக்கம் போய்க்கொள்ளலாம்.எப்போது மற்றொரு விபத்து நடக்குமோ தெரியாது. போக்குவரத்து காவலர்களும் அதற்காகத்தான் காத்திருக்கிறார்களோ என்னவோ. விபத்து என்று ஒன்று நடந்தால்தான் மறுபடி ஒழுங்கான விதிமுறைகளும்,sign boards-களும் வைத்து நடைமுறைப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். எங்களில் யார் தலையில் அந்த ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறானோ; யாருக்குத் தெரியும்?
கொசுறு: 3
இந்த ரோட்டில் ஐந்தாறு இடங்களில் road divider - ஆக காலி பீப்பாய்கள் வைக்கப் பட்டுள்ளன. keep left அப்டிங்கிற அடிப்படை சாலை விதியை எல்லோரும் மதிக்கவேண்டுமென்றுதான் இந்த பீப்பாய்கள் ரோட்டின் 'நடு செண்டரில்' வைக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆனால் நம் மஹா ஜனங்களில் மிகப் பெரும்பான்மையர் அப்படி நினைப்பதில்லை போலும். யாரும் - போலீஸ் வாகனங்கள் உட்பட - இதை லட்சியம் பண்ணுவதாகத் தெரியவில்லை. இதுவரை இரு முறை போலீஸ் வாகன ஓட்டிகளிடமும், பலமுறை மற்ற வாகன ஓட்டுனர்களிடமும் சண்டை போட்டிருக்கிறேன் - எந்த வித பயனுமின்றி! அதில் என்ன அவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை. keep left என்ற விதியை மீறுகிறோம் என்பதைத் தவிரவும் அவர்களுக்கு இதிலெந்த வித பயனும் இல்லை; இருந்தும் பலரும் அதை 'தவறாது' செய்வதைப் பார்க்கும்போது, விதியை மீறும் "சுகத்துக்காகவே" நம் மக்கள் அப்படி செய்வதாகத்தான் தோன்றுகிறது. Is it a sort of adventurism? விதியை மீறுகிறோம் என்பதில் நம் மக்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்து விட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
கொசுறு: 4
சாலையை இடது, வலது என்று பிரித்து வைக்கத் தான் இந்த பீப்பாய்கள் இருக்கின்றன என்ற நினைப்பில் இன்னும் இருக்கிறேன். ஆனால் இந்த பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தான் சரியாக பஸ் ஸ்டாப்புகளும் அனேகமாக உள்ளன. அரசு பேருந்துகள் சரியாக இந்த பீப்பாய்கள் இருக்கும் இடத்தில் நின்று, முழுமையாக ஒரு பக்க சாலையை அடைத்து விடுகின்றன. எனக்குள்ள பல நாள் சந்தேகங்கள் - இந்த பேருந்துகளின் ஓட்டுனர்களுக்கு சாலையை முழுவதாக மறித்து வாகனத்தை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்குமே என்ற நினைவு எப்படி வராமல் போகும்?அவர்களூம் வழிமறித்து யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் எரிச்சல் படத்தானே செய்வார்கள். பின் எப்படி அவர்களுக்கு 'தங்களின் முதுகு' தெரியாமல் போகிறது? ஆச்சரியமாகததான் இருக்கிறது. அட, பீப்பாய் இருக்கும் இடத்திலிருந்து சிறிது முன்னேயோ, பின்னேயோ இந்த பஸ் நிறுத்தங்களை வைக்க வேண்டுமென்ற எண்ணம் கூட இந்த போக்கு வரத்து அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதென்ன?
யாரைத்தான் நொந்து கொள்வது? - பஸ் நிறுத்தங்களை சரியான இடங்களில் வைக்காமல் இருக்கும் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளா? இல்லை, இடத்திற்கு ஏற்றாற் போல் வாகனங்களை முன்னேயோ பின்னேயோ நிறுத்த மனமில்லாத அரசு போக்குவரத்து வாகன ஓட்டிகளா, இந்த பீப்பாய்கள் வைக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் இஷ்டத்திற்கு வண்டிகளை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளா - யாரைத்தான் நொந்து கொள்வது...?

29 comments:
//விதியை மீறும் "சுகத்துக்காகவே" நம் மக்கள் அப்படி செய்வதாகத்தான் தோன்றுகிறது.//
மிகச்சரி .சென்னையிலிருந்த போது அண்ணா நகர் போன்ற வளர்ச்சியடைந்த பகுதிகளிலேயே நான் பார்த்தது..குப்பையை எடுத்துக்கொண்டு மாநகராட்சி வைத்துள்ள குப்பை தொட்டி வரை வந்து ,வேண்டுமென்றே தொட்டிக்கு வெளியே கொட்டி விட்டு செல்வதை பார்த்திருக்கிறேன் .சுதந்திரம் தனக்கு கொடுத்திருக்கும் திமிரும் ,பொது விதியை நான் மதிக்காமல் எவ்வளவு திறமைசாலி நான் ,இதனால் என்னை எவனும் எதுவும் செய்துவிட முடியுமா என்ன என்கிற ஆணவமும் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன்.
இன்னொன்று "மாப்ளே! சல்லுன்னு புகுந்து போனேன்..பாரு" -கிற மாதிரி அதை ஒரு பெருமையாக பேசுபவர்களை கண்டால் எனக்கு எரிச்சல் தான் வரும் .அதை சொல்பவர் பெருமைப்படும் படி ஆமோதிக்கிறவர்களும் ,இந்த வயசுல இப்படித் தான் இருக்கும்-ன்னு சப்பை கட்டு கட்டுறவங்களும் தான் இது மாதிரி பொறுப்பின்மை வளர்வதுக்கு காரணம்.
//அத கையில வச்சிக்கிட்டு பத்த வச்சி கூட்டத்துக்குள்ள எறிஞ்சி ஒரு தடவ பாத்தேன். என்ன கெக்கலிப்பு அப்போ!
//
எவ்வளவு மேட்டரையும் கொசுறுன்னு சொல்றீங்களே தருமி..ஹ்ம்ம்..நல்ல பதிவு
பிணத்தின் மேலே இருக்கும் பூவை எறிந்தால் இறந்தவர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவராகவோ இல்லை ஏதேனும் பரவக்கூடிய கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறந்திருந்தாலோ பரவ வாய்ப்பு அதிகம். இதை எல்லாம் பொதுநலத்துறை காவல் துறை கண்டு கொள்வதில்லையா?
//எங்க ஊரு நல்ல ஊரு...//
பின்னே இல்லய்யா?????
ஜோ,
சிங்கையைப் பற்றி நிறைய சொல்றாங்களே அது மாதிரி நம்ம ஊரும் வர என்ன செய்றது?
அங்க கடினமான சட்டங்களும் அவைகளை நடைமுறைப் படுத்தும் வகையிலும்தான் அதை நிறைவேற்றினார்கள் என்று நினைக்கிறேன். இல்லையா?
கார்த்திகேயன்,
முதல் முறையாக வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி.
பத்மா,
என்ன இவ்வளவு naiveஆக இருக்கிறீர்கள் :)
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்...ஓ!தள்ளி இருக்கிறீர்கள் அல்லவா?
எந்த துரையும், துறையும் பக்கத்தில் நெருங்க முடியுமா என்ன? :(
சிங்கை போல் ஆவதற்கு முதலில் நிறைய காவலர்கள் வேண்டும் ஐயா. கடுமையான சட்டங்களும் அதனை நடைமுறைப்படுத்தலும் தேவையான காவலர்கள் இருந்தால் தான் நடக்கும். அதற்கு மேல் ஊழல் என்ற ஒன்று வேறு இருக்கிறது. இப்படி வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு சொல்ல வருத்தமாகத் தான் இருக்கிறது. வந்து நீயும் இறங்கி சரி செய்யலாமே என்று கேட்கும் மனச்சாட்சிக்கு பதில் இல்லை என்னிடம்.
It is indeed a surprise that Peace is prevalent in India. That is not because of Police force; in spite of the Police force.
kumaran,
//ஊழல் என்ற ஒன்று வேறு இருக்கிறது//
இதற்கு ஒரு பதிலோடு அடுத்த பதிவில் சந்திப்போமா?
:(((
//சென்னைக்கு கிருஷ்ணாம் பேட்டைன்னா என்னன்னு எல்லோருக்கும் தெரியும்; அதேபோலதான் எங்க ஊரு மதுரையில 'தத்தனேரி'ன்னா எல்லாருக்கும் தெரியும். //
தருமிசார்,
சென்னைக்கு கண்ணம்மா பேட்டைதானே? கிருஷ்ணாம் பேட்டைன்னும் இருக்கா?
சாவுக்கு சரக்கு வுட்டுட்டு ஆடுறதுகள் 90% கட்சி மீட்டிங்குகள்ல அன் அபீஷியல் செக்யூரிட்டி கார்டுகள் எனவே இவனுங்கதான் போலிஸூக்கே போலீஸ்.
பாவம் செக்யூரிட்டிக்கு சைக்கிளில் டபுள் பேரல் துப்பாக்கியோட ஏட்டு வந்தாலும் என்ன செய்வார்? அவர் மீது எறியப்படும் எளவு பூப்பந்திலிருந்து அவரைக் காக்கவே ப்ஃரண்ட்லி "வாட்டர்" கார்ட்ஸ் தேவைப்படும்
ஹரிஹரன்,
//சென்னைக்கு கண்ணம்மா பேட்டைதானே? //
அட்டா, தப்பா சொல்லிட்டேனா..? மாத்திடவா? மாத்றதுக்கு முந்தி யாராவது கன்பர்ம் பண்ணுங்க'பா!!
ஹரிஹரன்,
மாத்திட்டேங்க.
நன்றி
என்னங்க இது? இங்கே ரெண்டாம்பேருக்குத் தெரியாம சாவு போயிருது.
ஒரு டண்டணக்கா உண்டா? ஒரு பாடை உண்டா? ஒரு பொரி பூவுன்னு எதாச்சும் உண்டா? ஹூம்.....
ரெண்டு நாளா எப்பவும் பார்க்கற பாட்டியைக் காணமேன்னு யோசிச்சா, முந்தா நேத்து ராத்திரி ஆம்புலன்ஸ்
வீட்டுவாசலில் நின்னுச்சுன்னு அடுத்த வீட்டம்மா சொல்றாங்க. சாயந்திரம் அந்தப்பக்கம் வாக் போனா, பாட்டியோட
மகனோ யாரோ வீட்டுலே இருந்து சாமான் எதையோ எடுத்து வண்டியிலே நிரப்பிக்கிட்டு இருக்கார்.
பாட்டி போயிட்டங்களாம்(-:
//இந்த ரோட்டின் ஒரு முனையில் பாத்திமா பெண்கள் கல்லூரி இருக்கிறது.இதன் பக்கத்தில் ஒரு traffic island - மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம். சிக்கலான போக்குவரத்து உள்ள பகுதி. islands-க்கு நடுவில் இடம் விரிவாக்கப் பட்டது. ஆனால் sign boards எதுவும் கிடையாது. போலீஸ் எதுவும் கிடையாது. இப்போது நம்ம ஊரு வழக்கமான free for all -தான். //
தருமிசார்,
வீரமாமுனிவர் சிலைகருகே எப்பவும் Might is Right என்று வீரம்காட்டி நிரூபணம் தினசரி செய்கிறார்கள்! சிலை இருக்கிறதா இன்னமும்?
கொசுறுகளின் தோரணமாக இருந்தாலும் அறிவைப் பயன்படுத்தாத மனிதர்களையும் துறைகளையும் பட்டியலிட்டு விட்டீர்கள். இதில் மதுரை மட்டுமே 'பெருமை' கொள்ள முடியாது. தமிழ்நாடு முழுவதுமே இத்தகைய தத்தனேரிகள் உள்ளன. பீப்பாய்களை சொல்கிறீர்களே, சென்னையில் மேம்பாலங்களே traffic engineering ஆய்வு இன்றி கட்டப் படுகின்றன.
கூட்டமாக இருக்கும்போது இயலாதவரை துன்புறுத்தி மகிழ்வது சவ ஊர்வலங்களில் மட்டுமில்லை, கட்சி ஊர்வலங்களிலும் உண்டு. ஒரு அழகான காரின் மேல் கீறிக்கொண்டு செல்வது எத்தனை இன்பம் :(
ம்ம்.. சொல்லிக் கொண்டே போகலாம். என்னதான் தீர்வு ? அடக்குமுறை ஆட்சிதான் நமக்குச் சரியோ ?
அது என்ன "நடு செண்டர்" :-))) என்ன இருந்தாலும் நம்ம ஊர்ப் பாசையெ விட்டுக் கொடுக்க முடியுமாங்கிறீங்களா?
எவ்வளவு சந்தோஷமா வாழ்க்கையை celebrate பண்ணி வாழ்றாங்க, உங்களுக்கு வயசாகிப் பூச்சுங்க :-P
ஒரு தடவை வெள்ளைக்காரர் ஒருத்தரை கூட்டிட்டு வந்திருந்தேன், அவருக்கு கார் ஒண்ண வாடகைக்கு எடுத்து தானே ஓட்டணுமின்னு சொல்லிக்கிட்டு வந்தார். ஏர் போர்ட்ல போயி, நாங்க கூட்டியாரப் போனோம், அவருக்கு முதல் முறை வேற அமெரிக்காவுக்கு வெளியே. பிறகு என்ன சொல்லவா வேணும், நம்ம டிரைவர் ஸ்டீரியங்கை பழைய படத்தில சுத்தி சுத்தி ஓட்டுவாங்கலே அது மாதிரி ஓட்டுறதைப் பார்த்துட்டு, யப்பா சாமீ நான் ஆட்டத்துக்கு வரலைன்னு அப்பீட் ஆகி கிட்டார் :-)
பயம்ம்மாத்தான் இருக்கு... ஆனா, இந்தியாவில கார் ஓட்டறதுக்கு ஒரு சிறப்பு தகுதி இருக்கணும், அது நமக்கு கிடையாது சத்தியமா, அதினால மரியாதையா பின்னாடி குந்திகிடறது தான் புத்திசாலித்தனமின்னு நினைக்கிறேன் :-
துளசி,
என்னதான் வருடக்கணக்கா வெளிநாட்டிலிருந்தாலும் அந்த 'டண்டணக்கா'வை மறக்க முடியவில்லை போலும்..
ஹரிஹரன்,
நீங்க சொன்ன சிலையும் இருக்கு; அதோடு, நீங்கள் சொன்ன நிரூபணம் தொடருகிறது.
மணியன்,
'பார்த்து' நாளாச்சு!
//சென்னையில் மேம்பாலங்களே traffic engineering ஆய்வு இன்றி கட்டப் படுகின்றன//
மதுரையின் மிகப் பழைய மேம்பாலம் ஆல்பர்ட் பாலம். 100 வருஷ நிலைப்புக்குக் கட்டியது still going strong. இந்தப் பாலத்தின் அகலம் கூட இல்லாமல்தான் இப்போதைய பாலங்கள் எல்லாமே கட்டப்படுகின்றன. அத்தகைய பாலங்களுக்கு நான் வைத்துள்ள பெயர்: கோவணப் பாலங்கள் :)
தெக்ஸ்,
//எவ்வளவு சந்தோஷமா வாழ்க்கையை celebrate பண்ணி வாழ்றாங்க,..//
நான் வேண்டாங்கலையே! உங்க வீட்டுக்குள்ள வச்சுக்கங்கன்னு தான சொல்றேன்.
//அதினால மரியாதையா பின்னாடி குந்திகிடறது தான் புத்திசாலித்தனமின்னு நினைக்கிறேன் //
என்னென்னமோ பெருசா காட்டுக்குள்ள போனேன் அப்டி இப்டின்னு சொல்றீங்க..எங்க ஊருக்குள்ள கார் ஓட்டுற தகிரியம் இல்ல.. என்ன நீங்க..? adventure-ஏ பிடிக்காதா? ஹும்..
என்ன தெகாவை இப்டி சொல்லிடீக? அட்வென்சர் பிடிக்காமலா என்னை எல்லாம் வந்து பாத்துட்டுப் போனாரு? நாங்க பாத்தப்ப பதிவுக பத்தியே பேசலை. நாலஞ்சு பேரு அவரு சொன்னாரு. உங்க பேரு, சிவபாலன் பேரு, பொன்ஸ் பேரு, அம்புட்டுத்தேன். மத்தபடி அவரப் பத்தி நானும் என்னைப் பத்தி அவரும் தெரிஞ்சுக்கிறதுலேயே வாங்குன சிக்கன் கறியும் தந்தூரி சிக்கனும் தீர்ந்துப் போச்சு. வீட்டுக்குக் கொண்டு போக தனியா பார்சல் வாங்குனேன்.
அட! ரெண்டு பேரும் சந்திச்சிக்கிட்டாச்சா? சொல்லவேயில்ல...
அந்த 'பதிவர் சந்திப்பு' பற்றி பதிவு ஏதும் போடுறதா ரெண்டு பேருக்கும் எண்ணம் ஏதும் இல்லியா?
ஹா...ஹா...ஹா, என்ன குமரன் பதிவுகளைப் பத்தி பேசியிருக்கலாம்தான், நமக்கு short term memory lapseங்கோ. உங்கள பாத்த குஷியிலும், ஓசி சிக்கன் டிக்காவும் சொக்க வைச்சுடுத்து.
ரெண்டாவது, இன்னொரு பதிவரைத்தான் முதல் முதலில் சந்தித்தேன். அவரு போட்ட போட்டில் வாயை இனிமே திறக்கக் கூடாதுங்கிற ரேஞ்சுக்கு போயிடுச்சு :-))
ஹம், என்ன தருமி சந்திப்பு பத்தி பதிவு போடணுமா...? அட நீங்க வேற சும்மா இருங்க, சொந்தக் கதை சோகக் கதையெல்லாம் தண்டோரப் போட்டு சொல்லிக் கிட்டு திரிய முடியுமா :-))
rightல வர்றவனுக்கு முன்னுரிமை. இது மட்டும்தான் இங்க கடிபிடிக்கிற rule.
Majic Roundabout
another picture of hemel roundabout
Swindon-லதான் முதல்ல இந்தமாதிரி ரவுண்டபௌட் போட்டாலும் அதவிட கஷ்டமானது எங்களோடதுன்னு நாங்க பெருமையடுச்சுக்குவோம்.
இன்னோண்ணு
13 ரோடுகள் சந்திக்கும் arc de triumph in paris is also very fammous for good driving.
மக்கள் பயப்படறது insurance-க்கு. இங்கள்லாம் driver-க்கு இன்ஸ்யூரன்ஸ். ஒருவாட்டி தப்பு பண்ணிட்டா அடுத்த தடவ ப்ரிமியம் ஏறும். ஒரு வருசம் முழுக்க தப்பு பண்ணலன்னா ப்ரிமியம் குறையும். கடந்த எத்தன வருசமா தொடர்ந்து தப்பு பண்ணலங்கிறத பொறுத்து இன்ஸ்யூரன்ஸ் குறைவா இருக்கும். நாலுவருசம் தப்பு பண்ணாம இருந்துட்டு ஒரு தப்பு பண்ணினா, புதுசா ஆரம்ப்பிக்கணும்.ஒரு ஆக்சிடெண்ட் நடந்தா இன்ஸ்யூரன்ஸ் காரன் வந்து எப்படி எங்க கார்ல அடிங்கிறத வைச்சு யாரோட தப்புன்னு கண்டுபிடிப்பாங்க (. ரெண்டு காரோட இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகளும் பிரச்சினையை தீர்த்துக்க சண்ட போட்டுக்குவாங்க, அதுனால பொதுமக்கள் சண்ட கிடையாது. ஆக்சிடண்ட் நடந்தா இறங்கி (மறந்துகூட சாரி சொல்லக்கூடாது.) இன்ஸ்யூரன்ஸ் விபரங்கள எக்சேஞ்ச் பண்ணிக்கிட்டு அமைதியா திரும்பி வந்து நம்மளோட கம்பெனிக்கு தெரியப்படுதிட்டு ரெக்கவரி சர்வீஸுக்கு தெரியப்படுத்தி கார எடுத்துட்டுப் போகச்சொல்லிட்டு, நம்ம வேலயப் பார்க்கப் போயிடணும். நம்ம இன்ஸ்யூரன்ஸ்ல எந்த அளவுக்கு கவர் வாங்கியிருக்கோமே அதப்பொறுத்து வேற கார் அவய்ங்களே தருவாய்ங்க. இல்லேன்னா பஸ்ஸ புடிச்சு போய்க்கினே இருக்கவேண்டியதுதான்.
உங்க magical roundabout படம் பார்த்தாலும் ஒண்ணுமே புரியலை. தலதான் சுத்துது...
//இப்ப எல்லா வேலையும் முடிச்சிட்டுத் திரும்பி வந்துகிட்டு இருந்தது. இப்போ ஒரே கூட்டமா வரலை. அஞ்சாறு பேரா வந்துகிட்டு இருந்தாங்க. அதில அந்தப் பயலும் ஒண்ணு. ஆனா இப்போ பூனக்குட்டி மாதிரி அலம்பல் இல்லாம ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தான். அரை மணி நேரத்துக்கு முந்தி இவந்தான் அப்படி ஆடினான்னு சொன்னாக்கூட நம்ப முடியாது; அப்படி ஒரு நல்ல பிள்ளையாய் அந்த **./////
படித்தேன் ரசித்தேன் ஐயா
அருமையான நடை , உணர்வுகளை நகைச்சுவையின் வழியே எழுதியிருப்பது இன்னும் சிறப்பு
அன்புள்ள தருமி,
நான் வாஅரம் இருமுறையாவது புதிதாகக் கட்டின தத்தனேரி மேம்பாலம் வழியாக கோரிப்பாளையம் செல்வதுண்டு. அப்போதெல்லாம் அந்தப் பாலத்தில் கடக்கும் போது ஏற்படும் முடை நாற்றம் மூக்கைத் துளைக்கும். அப்போது தோன்றிய கவிதை:
சமரசம் உலாவும் இடம்!
மாலை நேரம்,
தத்தனேரி ரயில்வே மேம்பாலம்,
காற்றினிலே வரும் முடை நாற்றம்,
அருகினிலே,
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடம்!
அன்புள்ள தருமி,
நேற்று மாலையில் நான் தல்லாகுளம் சத்குரு சங்கீத சமாஜத்திற்கு ஒரு குரலிசை கச்சேரி கேட்க சென்றிருந்தேன். ஸ்ரீ விஸ்ணுதேவ் நம்பூதிரி என்ற இளம் வாலிபர் நன்றாய்ப் பாடிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணி. திடீரென்று பத்து நிமிடம் இடைவிடாத பட்டாசு வெடிச்சத்தம். வெளியில் வந்து பார்த்தால் அடுத்திருந்த ராஜம் ஹாலில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி. அதற்குத்தான் அந்த ஆர்ப்பாட்டமான வெடிகள். போகுவரத்து ஸ்தம்பித்து தெருவெங்கும் வெடி வெடித்து கிழிந்து சிதறிய காகிதக் குப்பைகள். சுற்றுச்சூழல் பற்றி யாருக்கும் கவலையில்லை.
Post a Comment