Sunday, December 09, 2007

244. என் பாலியல் கல்வியில் பால பாடம்

இப்பதிவு ஒரு மறுபதிவு - என் ஆங்கில வலைப்பூவிலிருந்து எடுக்கப் பட்டு இங்கு பதிவிடுகிறேன்.

செக்ஸ் என்றாலேயே முகஞ்சுழித்து அருவருப்பென ஒதுங்கும், அல்லது ஒதுங்குவது போல் நடிக்கும் நபர்களே நம்மில் அதிகம். செக்ஸ் கல்வி நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற பேச்சு பரவலாக நம் சமூகத்தில் இப்போது பேசப்படுகிறது. அதைக்கேட்டதுமே எல்லா கடவுளர்களையும் துணைக்கு அழைத்து 'ஐயோ! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா?' என்ற பிலாக்கணங்கள் பல இடத்திலிருந்து கேட்க ஆரம்பித்து விட்டன.

செக்ஸ் என்றதுமே புணரும் இரண்டு உருவங்கள் அவர்கள் மனத்தில் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன என்றே நினைக்கிறேன். இல்லையெனில் ஏனிந்த அருவருப்பு. குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி என்றதுமே ஏதோ வாத்சாயயனிரின் புத்தகம்தான் அவர்களூக்கெல்லாம் பாட நூலாக இருக்குப் போவது போல் மிரண்டு அச்சமும் அருவருப்பும் தெரிவிக்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கு good touch, bad touch என்று சொல்லித்தருவது அவசியம் இன்றைய சமூகத்தில். அதில் ஆரம்பித்து அவர்கள் வயதுக்கேற்றவாறு பாலியலைக் கல்வியாகத் தருவதில் என்ன தவறோ! நாம் பெற்ற பெண் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கு வரும்முன்பே மாதவிடாய், அதனோடு சேர்ந்த பிரச்சனைகளைச் சொல்லி அவர்களை அந்த புதிய நிலைக்குத் தயார் படுத்தவேண்டுமல்லவா? அதுவும் - அல்லது அதுதான் - அந்த வயதுக்குரிய பாலியல் கல்வி. வளரும் குழந்தையின் ஒவ்வொரு கால கட்டத்துக்கும் ஏற்றவாறு செக்ஸ் பற்றி அவர்களுக்குக் கற்றுத் தருவதே சரி.

இன்னும் சொல்லப் போனால் எந்த வயதிலும் பாலியல் அறிவு எல்லோருக்கும் இருந்து விடுவதாகச் சொல்லி விட முடியாது. என் நண்பர் இரண்டு குழந்தைகளின் தகப்பனாக ஆன பின்பும்கூட பெண்களுக்கும் orgasm இருக்குமென்பதைத் தெரியாதிருந்ததும், foreplay பற்றியும் அதிகம் தெரியாதிருந்ததும் மிக ஆச்சரியமாக இருந்தது. அவர் நடிக்கிறாரோ என்றுகூட நினைத்தேன். ஆனால் அவர் உண்மையிலேயே அவை பற்றிய முழுமையான விவரம் தெரியாதவராகவே இருந்தார் என்பது புரிந்தது. இதில் யாரையும் உடனே குறை கூறிடவும் முடியாது. நாம் வளர்ந்த வளர்ப்பு அப்படி. மூடி மூடி வைத்து, இல்லாத மர்மங்களைப் பொதிந்து வைத்து, செக்ஸை ஒரு அருவருப்பான அசிங்கமான விஷயமாக வைத்திருப்பதில் மதங்களுக்கு என்றுமே ஒரு தனியிடம் உண்டு. அதைத்தான் ஓஷோ 'செக்ஸ் என்பதே ஒரு தவறான விஷயம் என்பதாகவும், வறுமையையை கடவுளுக்குப் பிடித்ததாகக் காட்டுவதும் எல்லா மதங்களின் கூட்டுக் கொள்கை' என்று கூறி அவைகளை மறுக்கிறார்.

நாம் ஒவ்வொருவருமே நம் இளைய வயதில் செக்ஸ் பற்றி விநோதமான கருத்துக்களைக் கொண்டிருந்திருப்போம். இன்று திரும்பிப் பார்க்கையில் அவைகள் நமக்கே வேடிக்கையாகத் தோன்றும். அப்படி நான் சிறு வயதில் கொண்டிருந்த ஒரு தவறான, வேடிக்கையான விஷயம் பற்றி ஆங்கில வலைப்பூவில் எழுதிய ஒரு பதிவு:

MY EARLY SEX EDUCATION


In our days we did not have as much worldly knowledge as the modern day kids have. I think every present day kid of eight years is exposed to much ‘sex’ than what an adolescent was exposed in our days, thanks to the media. In a way it is good to know proper things in a proper way at the appropriate times.

I still remember how not only I but all guys of my age in those days never had any chance to know about ‘the secrets of sex’. There was no chance to see or to read or to hear anything about sex. It was all hush-hush thing among close friends. So it was mostly like the characters in the story of an elephant and four blind men. One blind leading another blind led only to more confusion. Especially puberty of girls was a great enigma for us. Talking about that brought goose pimples and we were thrilled to share our information with others. I got most of the gossip about sex from my rural friends, especially during my summer visits to my native village. Each one had his own theory about sex, puberty, menstruation, masturbation etc. We were totally a confused lot. This confusion made sex more and more a mystery and we had no chance to know about it. This made sex more enigmatic and mysterious and we always talked about these matters only with our very close friends. So naturally since we had our references from fellows of our own age, it was mostly like one blind leading another blind from one dark spot to another dark spot! We were very stupid. Hot discussion on the nature of genitals of the opposite sex happened often. There were times when we were not sure how a baby would come into this world. To make matters worse comparing a cow and a woman especially in the matter of their anatomy and mode of delivery was common. This state of affairs even continued to very late period of our adolescence. Such was our ignorance in those days!

I had a cousin. His father and my father were first cousins, and they had the very same name and worked in the same school. To avoid confusion people used to call my periyappa as senior so-and-so (periya ..) and my appa was known as junior so-and-so (chinna ..). Like our fathers we also had the same first name. He was just two years senior to me. But he played the role my ‘friend-philosopher-guide’. He was the one who was unraveling the mysteries of sex to me. His house was on my way to school and church, the two places around which my early life was revolving. So I used to go to his house on my way to school or church and then we would go together. He came out with so many newer things about anything and everything. I very submissively accepted all his ‘doctrines’. Never questioned them. Except the one time when he was explaining the ‘dirtiest thing’.


Whenever he came out with anything he used to always show an air of superiority which was quite right since I was too wet behind my ears for my age and what all he said were ‘scriptures’ to me. I never dared to question his statements. But one day on our way back from school he started giving me extraordinary information on sex. He told me with the same and usual air of superiority what a married man and wife would do in private to get a child. My God! It sounded so obscene and dirty that I thought there could not be an iota of truth in what he said. I said I did not believe what he said just then. He majestically told me that was the truth and nothing but truth. I kept silent for some time mulling over on what he said. I was simply flabbergasted by this unbelievable and dirty thing. For a few moments we were walking in silence.

Then I asked my cousin: “Then … er.. how about my father and mother?”

“Well, it has to be so”, he shot the answer without a moment of hesitation. He was very cool answering my question.

Few more moments of silence. I was still trying to digest what he had said. But I could not. A flash came and I asked him: “In that case, how about your father and mother?”

This time he took some moments. Hesitated a bit. But came out with an affirmative answer. But this time it was not as authoritative as it was for the previous question.

Still I could not believe it. Our own parents. This much dirty. Oh! No, I thought. I did not believe it and wanted to prove him utterly wrong.

My next question was very much pointed and poignant too. I asked him: “If it is so, is it the same way between Mother Mary and St. Joseph?”

He was thrown off balance by this question. Clean bowled. He was dumbfounded now. I was happy that I could at last nail him down to his utter lies. How could such a dirty act be true? Could any decent human being, leave alone the divine persons, do such nasty things?


I was waiting with batted breath for his answer. This time he did not have the guts to say yes.

40 comments:

துளசி கோபால் said...

என்ன பொருத்தம் பார்த்தீங்களா!!!!!!

இந்தப் பதிவு போட்ட நாள் டிசம்பர் 8.

தேவமாதா கருவுற்ற தினம்.
இப்படித்தான் கேலண்டரில் போட்டுருக்கு.

நானும் தாளைக் கிழிக்கும்போது நினைச்சேன்....23 நாளில் பிள்ளைன்னு.

அப்படியே மனசில் வந்துபோனது மற்ற சில மதக் கடவுளர்களின் பிறப்பும்

G.Ragavan said...

தருமிசார்...இதுல என்ன பெரச்சனை தெரியுமா? வீட்டுவீட்டுக்கு பசிக்குச் சோறு பொங்கித் திங்குற மாதிரித்தான் கிசிக்குப் பிரியாணி. வீட்டுல என்ன சமையல்னு பேசிக்கிறாங்க கூச்சமில்லாம. அதுல எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. இதுல..பேசனும்னு கூடத் தேவையில்லை. ஆனா எல்லாம் தெரிஞ்சிக்கிறப்படாதா. என்னவோ போங்க. அத தப்பு தப்புன்னு சொல்லி ஒதுக்கி வெக்கிறதே தப்புன்னு நெனைக்கிறேன். நம்மூர்ல புனிதபிம்பங்கள் சாஸ்தியாகிப் போயி....இந்த விசயம் நாஸ்தியாகிப் போச்சு. நம்மூர்ல அஞ்சரைக்குள்ள வண்டி ஓடுற தேட்டர்ல வர்ர கூட்டத்தப் பாத்தாலே தெரியும்...அவங்க வாழ்க்கைல கூடல் திருப்தியின்மையால கஷ்டப்படுறது.

யாத்ரீகன் said...

>>>>ெக்ஸ் என்றதுமே புணரும் இரண்டு உருவங்கள் அவர்கள் மனத்தில் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன என்றே நினைக்கிறேன். இல்லையெனில் ஏனிந்த அருவருப்பு.<<<<<<<

உண்மை !!! மக்களிடம் உண்மை எடுத்துச்செல்ல வேண்டிய மீடியாவோ மக்களிடம் இதே பிம்பத்தை உருவாக்கவே பாடுபடுகின்றது ..

தென்றல் said...

/இதில் யாரையும் உடனே குறை கூறிடவும் முடியாது. நாம் வளர்ந்த வளர்ப்பு அப்படி. /

உங்கள் தலைமுறையிலிருந்து எங்கள் தலைமுறை வரை 'இந்த வளர்ப்பு' ஒரே மாதிரிதானோ...?!

இலவசக்கொத்தனார் said...

ஆக, ஆங்கிலம் படிக்க வரமாட்டோமுன்னு சொன்னதினால இங்க எடுத்துப் போட்டுட்டீங்க. ஆனா இங்கயும் ஆங்கிலம் ஆரம்பிச்ச உடனே நிறுத்திட்டோமில்ல! :))

//அதைக்கேட்டதுமே எல்லா கடவுளர்களையும் துணைக்கு அழைத்து 'ஐயோ! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா?' என்ற பிலாக்கணங்கள் பல இடத்திலிருந்து கேட்க ஆரம்பித்து விட்டன.//

என்னமோ கடவுள் நம்பிக்கை இருக்கும் ஆட்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி என்ன இது ஸ்டேட்மெண்ட். இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மெண்டல்கள் எல்லா இடத்திலும்தான் இருக்காங்க.

வடுவூர் குமார் said...

நம் காலத்தில் அப்படித்தான்.
என் "வயது" காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு.
விடுமுறைக்கு நாகையில் இருந்து மும்பாய் போனபோது ஒரு கடையில் இருந்த நேப்கின்னை பார்த்து என் உறவினரிடம் கேட்ட போது..அவர் முதலில் முழிக்க,பிறகு அரை குறையாக விளக்க முயல, மண்டையில் பல்ப் எரிய ஆரம்பித்தது,
:-))

தருமி said...

துளசி,
//என்ன பொருத்தம் பார்த்தீங்களா!!!!!!
//

:)

//நானும் தாளைக் கிழிக்கும்போது நினைச்சேன்....23 நாளில் பிள்ளைன்னு.
//

:))

தருமி said...

தென்றல்,
//உங்கள் தலைமுறையிலிருந்து எங்கள் தலைமுறை வரை 'இந்த வளர்ப்பு' ஒரே மாதிரிதானோ...?!//

அதைவிடவும், இன்னும் வரும் தலைமுறைகளுமே அப்படியேதான் வளரணும்னு சொல்றாங்க நிறைய பேரு!

தருமி said...

ஜிரா,
"கிசி" - இது நல்லா இருக்கே!

//புனிதபிம்பங்கள் சாஸ்தியாகிப் போயி....இந்த விசயம் நாஸ்தியாகிப் போச்சு//

ரொம்ப ரொம்ப சரி...

தருமி said...

யாத்ரீகன்,
நீங்கள் சொல்லும் மீடியாக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

தருமி said...

கொத்ஸ்,

//இங்கயும் ஆங்கிலம் ஆரம்பிச்ச உடனே நிறுத்திட்டோமில்ல! :))//

நாங்க நம்பணுமாக்கும்??!! ஆனாலும் - என்ன கொடுமை இது, கொத்ஸ்?! :)

//இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மெண்டல்கள் எல்லா இடத்திலும்தான் இருக்காங்க//

இல்லைன்னு தோணுது கொத்ஸ். ஜிரா சொன்னது மாதிரியான "புனித பிம்பங்கள்" நாத்திகர்கள் மத்தியில் ரொம்பவே குறையாகத்தானிருக்கும்னு நினைக்கிறேன்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

வடுவூர்குமார்,
இப்போ டிவி விளம்பரங்கள் நிறைய கேள்விகளை எழுப்பும். என் 6 வயது பேரனுக்கு இது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அது என்பதுவரை (கற்றுக் கொடுக்கப்பட்டு) தெரிந்திருக்கிறது.

ஆனால் என் பதின்ம வயதுகளில் கிராமங்களின் ஒடைக்காடுகளில் நான் பார்த்த அந்த துணிகள் விளைவித்த உணர்வுகள் இன்னும் நினைவிலிருக்கின்றன.

மங்கை said...

///என் நண்பர் இரண்டு குழந்தைகளின் தகப்பனாக ஆன பின்பும்கூட.....தெரியாதவராகவே இருந்தார் என்பது புரிந்தது///

தருமி ஐயா...

இதற்கு ஒரு காரணம் பெண்களிடம் இது போல எதிர்பார்ப்பு இருக்க கூடாது என்று நம் சமுதாயம் கற்றுக் கொடுக்கும் பாடம்...இன்னொன்னு நம் பெண்களே..இன்றும் கூட.. இது போல தங்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக பேச முடிவதில்லை..பயம்..கூச்சம், தயக்கம்..கணவனாக இருந்தாலும் கூட என்ன நினைப்பாரோ என்ற தயக்கம்...

பாலியல் கல்வியின் அவசியத்தை பற்றி நீங்க எடுத்து சொன்னது எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு தருமி ஐயா
கோவையில நானும் என்னுடன் பணி புரிந்த ஒரு மருத்துவரும் ஒரு ஆராய்ச்சி செய்தோம்..பாலியல் கல்வியின் தேவைப் பற்றி...அப்ப கோவையிலும் கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள தனியார், அரசு பள்ளிகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு questionairre தயாரித்தோம்..

பள்ளி தலைமை பெரும்பாலான பள்ளிகளில் தயக்கமே காண்பித்தனர்... ஒரு பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியை என்னிடம் கோபப்பாட்டார்..
நீங்களே சொல்லி குடுத்துடுவீங்க போல இருக்குன்னு.. எனக்கு ஒரு வெறி வந்துடுச்சு..:-))

சரி இந்த பாலியல் கல்வி இவர்களுக்கு எவ்வளவு தேவைன்னு நிரூபணம் செய்துட்டா மற்ற பள்ளியிலும் இதை தொடர நீங்க அனுமதி வாங்கி கொடுப்பீங்களான்னு கேட்டேன்..அவர் என்ன நினைத்தாரோ சரின்னு சொல்லிட்டார்.. ஒரு வகுப்ப மட்டும் எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒதுக்குங்க அப்படீன்னேன்...ஒன்பாதாம் வகுப்பு குழந்தைகளை கேட்டு வாங்கிட்டேன்..
ஒரு நாள் பயிற்சியின் இறுதியில் ஒரு காலி பெட்டியை அவர்களின் முன் வைத்து அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா அதை எழுதி அந்த பெட்டியில் போட சொல்லி சொன்னேன், பெயரொ மாணவர் யார் என்ற விவரமோ எழுத தேவையில்லை என்றும் கூறிவிட்டேன்
ஆசிரியர்களோ, பள்ளியில் இருக்கும் மற்ற எவரோ அந்த அறையில் இல்லை... 45 பேர் கொண்ட அந்த கூட்டத்தில்.. 43 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது...

அந்த கேள்விகளுக்கு விடை அளித்து விட்டு தலைமை ஆசிரியரை மட்டும் கூப்டு மாணவிகள் கேட்ட கேள்விகளை காண்பித்தேன்.. அசந்து விட்டார்..ஐயோ இது என்ன இது எல்லாம் கேட்டு இருக்காங்க.. இவங்களுக்கு இது கேட்கனும்னு எப்படி தோனுது முதல்ல..அவசியம் என்னன்னு அடுக்கடுக்கா கேள்விகள்..

அவர்கள் கேட்ட கேள்விகள்..13 வயது பெண்கள்
1) whcih is the safe period to have sex?
2) What if one has sex during her periods?
3) How safe is if a woman has sex with another woman?
4) Will mastubation affect pregancy in future?
5) Is there a condo mfor woman? if so how to use it?

These are just samples...இது மாதிரி 43 கேள்விகள்...இது பார்த்துட்டு அந்த தலைமை ஆசிரியர் அவசியதை புரிந்தி கொண்டார்.. நாம விடை சொல்லைன்னா..இவங்க இதற்கு விடை தேட வேற ஏதாவது source தேடி போயிடுவாங்கன்னு தெரிஞ்சது அவருக்கு...

ஆஹா ரொம்ப பெருசா போயிடுச்சே
இன்னும் சொல்ல வேண்டியிருக்கு.
இன்னொரு முறை சொல்றேன் தருமி சார்

தருமி said...

மங்கை,
நீங்கள் நடத்திய அந்த வகுப்பின் மாணவிகள் கேட்ட கேள்விகள் நானே எதிர்பார்க்காததுதான். உங்கள் பணியில் நீங்கள் கண்ட மற்ற விஷயங்களையும்,
//இன்னும் சொல்ல வேண்டியிருக்கு.// என்று நீங்கள் சொன்னவை பற்றியும் கட்டாயம் எழுதுங்கள்.

பாலியல் கல்வி பற்றிய தவறான கருத்துக்கள் வைத்திருப்பவர்களும் கண் விழிக்க, புரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

நானும் பார்க்கிறேன். பல முறை என் பதிவுகளில் நான் சொல்லும் கருத்துக்களையும் விடவும் பின்னூட்டத்தில் செறிந்த கருத்துக்கள் வந்து சேர்கின்றன.

மிக்க நன்றி.

G.Ragavan said...

// தருமி said...
ஜிரா,
"கிசி" - இது நல்லா இருக்கே! //

தருமி சார். இது கி.ராவோடது. ஜிராவோடதில்லை. அவருடைய ஏதோ ஒரு கட்டுரைல கிசிங்குற சொல்லைப் பயன்படுத்தீருந்தாரு. எப்பவோ படிச்சது. இதெல்லாம் மண்டைல நல்லா நிக்குமே. அதான். :)

மருத புல்லட் பாண்டி said...

பெருசு வயசாச்சுன்ன இப்படி தான் தோனும்மா

மருத புல்லட் பாண்டி said...

பெருசு வயசாச்சுன்ன இப்படி தான் தோனும்மா

குசும்பன் said...

///ஒதுங்குவது போல் நடிக்கும் நபர்களே நம்மில் அதிகம். //

100ல் 99.9999 பேர் இப்படி நடிப்பவர்கள் தான்.

ஓசோ ஒருவர் மட்டுமே செக்ஸை பற்றி சரியான புரிதல் இருந்தவர்.
அவரின் காத்திலிருந்து கடவுளுக்கு புத்தகத்தை படித்தால் பல விசயம் புரியும்!

சுரேகா.. said...

அழகா சொல்லியிருக்கீங்க சார்..

எனக்கும் இந்தமாதிரி மோசமான
கோணங்களெல்லாம் சொல்லித்தரப்பட்டிருந்தது.
அதில் மிகவும் முக்கியமாய்
என் நண்பன் ஒருவன்..

ஆணும் பெண்ணும் டயர் பஞ்சர் ஒட்டும் சொல்யூஷனை உடல் முழுதும் தடவிக்கிட்டு இரவு முழுவதும் ஒட்டிக்கிடந்தா
குழந்தை நிச்சயம்னு சொல்ல..

வீட்டில் அப்பா நிஜமாவே சைக்கிள் பஞ்சர் ஒட்ட வைத்திருந்த டன்லப் சொல்யூஷன் அதுக்குத்தானோன்னு பல நாள் பயந்திருக்கேன்.

கண்டிப்பா நம்ம சந்ததிகள் இந்த துன்பம் அனுபவிக்க கூடாது.

ஒரு வருங்கால இயக்குநரின் கவிதை..

"அனைவரும் கலவி செய்வார்கள்
என்று அறிந்தபோது
அதிர்ந்தேபோனேன்."

அப்புறம் எங்க வீட்டுக்கும் வந்து போங்க.!

(நாம் நேரில் சந்தித்திருக்கிறோம்...)

Doctor Bruno said...
This comment has been removed by a blog administrator.
Doctor Bruno said...
This comment has been removed by a blog administrator.
Doctor Bruno said...
This comment has been removed by a blog administrator.
விமலா said...

தருமி,

எங்க தலைமுறையைவிட, இப்பொழுது வ(ள)ரும் தலைமுறைகள் எவ்வளவோ பரவாயில்லை... ..குறிப்பாக நகரத்தில் இருக்கும் பிள்ளைகள்...

/இந்தப் பதிவு போட்ட நாள் டிசம்பர் 8.

தேவமாதா கருவுற்ற தினம்.
இப்படித்தான் கேலண்டரில் போட்டுருக்கு.

நானும் தாளைக் கிழிக்கும்போது நினைச்சேன்....23 நாளில் பிள்ளைன்னு
//
துளசி கோபால் சொன்னதுக்கு ஒரு சிறு விளக்கம்...


டிசம்பர் 8 தேவமாதாவின் தாய்(அன்னம்மாள் St.Anne), தேவமாதாவை கருவுற்ற தினம்(Immaculate conception of mary).

(கத்தோலிக்க) திருச்சபை இதை கொண்டாட காரணம் (கடவுளின் மகனை பெற்றெடுக்க போகும்) தேவமாதா பாவம் ஏதும் இல்லாமல் பிறந்து வளர்ந்தார் என்பதை குறிக்கும் விதமாகத்தான்.

கடவுளின் மகனை மாதா கருவுற்று பெற்றெடுப்பாள் என தேவதூதர் மாதாவுக்கு அறிவித்த நாள் மார்ச் 25.
[The feast of the Incarnation of Christ, also known as The Annunciation, is celebrated on 25 March, nine months before Christmas Day.]

தருமி said...

hi doc,

a virgin mother, indeed!!

i would not have believed this had it not been from anybody other than a doc!

but dont single out that poor guy!

it appears that the couple is MADE FOR EACH OTHER.

Thekkikattan|தெகா said...

it appears that the couple is MADE FOR EACH OTHER.//

You guys are both happened to be very funny :-)))

துளசி கோபால் said...

எனக்கிது புதுத் தகவல்.

நன்றி விமலா.

குவீன் & குவீன் மதர் போல.இல்லை?

Unknown said...

வந்துட்டேன் வாத்தியாரே :-)))

*** முக்கியம்: நான் சொல்லி இருக்கும் தகவல்களை அப்படியே வெளியிட தயங்கினால் எடிட் செய்யாமல் ரிஜெக்ட் செய்து விடுங்கள்.

காமம் , கலாச்சாரம் பற்றி ஒரு நாள் விரிவாக எழுத் உள்ளேன் அப்போது நானே எனது பதில் வெளிடுகிறேன்.

***

**
பாலியல் கல்வியை யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் நதி/ரிஷி மூலங்கள் புரியும். இந்தியாவில் அடித்துக் கொள்ளும் இந்துத்துவாவும்,இஸ்லாமும் ஒத்துப்போகும் ஒரே கருத்து பள்ளியில் பாலியல் கல்வி எதிர்ப்பு. அதே போல் வாடிகன் என்ற உலக நிறுவனம் பெண்ணுக்கு கருப்பைச் சுதந்திரம் கூடாது என்று கூவுகிறது.

பெண்ணுக்கு பாலியல் கல்வியும், அவளுக்கு ஏற்படும் உச்சநிலை பற்றியும் ஒரு தெளிவு பிறந்துவிட்டால்
குருகனுக்கு ஏன் இரண்டு பொண்டாட்டி, முகமதுக்கு எப்படி பல மனைவியர், இயேசுவைப் பெற்றும் ஏன் மேரி "கன்னி மேரி" என்று வலிந்து அழைக்க வேண்டும் என்ற கேள்வி முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும்.

**
சமணத்தில் ஏன் நிர்வாணம் ஒரு துறவு அம்சமாக உள்ளது,புத்தம் ஏன் ஆசையை ஒழித்தலை "முதல் ஆசையாக" வைத்துள்ளது என்பது போன்றவைகளுடன் சமீபத்திய லயோலா துப்பட்டா மேட்டரையும் சேர்த்தால் கலாச்சாரமும்,மதமும் பெண்ணின் உடல் அரசியலை வைத்து வயிறு வளர்ப்பது தெரியவரும்.

**

Masturbation ஒரு வியாதி/கொலைக்குற்றம் என்று சொல்லி சிட்டுக்குருவி இலேகியம் விற்கும் கூட்டம் குறைந்தால் நல்லது. நரம்புத் தளர்ச்சி என்று சொத்தை வாதங்களை வைத்து இளைஞர்களை பல வியபாரிகள் பயமுறுத்துகிறார்கள்.

வாலிப மற்றும் வயோதிக அன்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை...

http://sexualityandu.ca

***

வயிற்றில் பீயுடனும்,மூத்திரத்துடனும்,குசுவிடனும் கோவிலுக்கு வரலாம் ஆனால் பெண்கள் நாப்கின் உடன் வரக்கூடாது என்று சொல்லும் உலகை காக்கும் கடவுள்கள் இருக்கும் நாடு இது இங்கே
காமம் சொல்லிக் கொடுக்கப்படமாட்டாது.

ஆனால் ஒரு காலத்தில் இதே இந்தியாவில் கோவில்கள் எப்படி படம் வரைந்து பாகங்களைக் குறித்து மக்களுக்கு அனடாமியில் உதவின என்பதற்கு கீழே உள்ளபடம் ஒரு சான்று. (அலுவலகத்தில் இதை பார்த்து உங்கள் வேலை போனால் நான் பொறுப்பல்ல)

http://www.andrewhammel.com/ham%20vr%20sexy%20sculpture.jpg

தருமி said...

கல்வெட்டு,
//நான் சொல்லி இருக்கும் தகவல்களை அப்படியே வெளியிட தயங்கினால் எடிட் செய்யாமல் ரிஜெக்ட் செய்து விடுங்கள்.//

Ha! what an insult??!!

அப்படி என்ன நீங்கள் புதிதாக / வெளியிட தயங்கும்படியாக எழுதியிருக்கிறீர்கள்?

let us call a spade a spade (one of my commandments!!)

Unknown said...

// Ha! what an insult??!! //

:-)))

எவ்வளவுதான் நாம் இணையம் கத்தரிக்காய் என்று வளர்ந்துவிட்டாலும் இன்னும் சில விசயங்களை பேசவே பயப்படுகிறோம் அல்லது தவிர்க்கிறோம்.

நான் எனது பதிவில் சொன்னால் அதன் சாதக/பாதகங்கள் எனக்கு மட்டுமே. எனது கருத்தாக நீங்கள் வெளியிடும் பட்சத்தில் எனது பாவங்கள் உங்களையும் சேர வாய்ப்பு உள்ளது. :-)) அதனால் சொன்னேன்.

அதுவும் அந்த andrew இணையப்படம் காரணமாக.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியான இவரின் பார்வையில் பதிந்த இந்திய தடங்களை இங்கே பார்க்கலாம். http://www.andrewhammel.com/india.htm

தருமி said...

கல்வெட்டு,
//எனது பாவங்கள் உங்களையும் சேர வாய்ப்பு உள்ளது. :-)) //

புரியுது. but it is all in the game of blogging! அதோடு இந்த விஷயத்துக்கு எதிர்கருத்துக்களே கிடையாதுங்க (?) - இதுவரைக்கும். அப்டின்னா என்ன தெரியுது சொல்லுங்க.

நீங்க குடுத்த லின்க் ரொம்ப நல்லா இருக்கு. நம்ம ஊரு லாரிகள், பெண்களின் உடையணியும் பழக்கம் - மட்டும் வாசித்தே பிடித்து விட்டது. மீதியையும் வாசித்து விடுகிறேன்.

தருமி said...

கல்வெட்டு
கொடுத்த லின்க் முழுவதும் வாசிச்சேன். நல்லா இருக்கு.

மக்களே வாசியுங்க.........

சாலிசம்பர் said...

//சமணத்தில் ஏன் நிர்வாணம் ஒரு துறவு அம்சமாக உள்ளது,புத்தம் ஏன் ஆசையை ஒழித்தலை "முதல் ஆசையாக" வைத்துள்ளது என்பது போன்றவைகளுடன் சமீபத்திய லயோலா துப்பட்டா மேட்டரையும் சேர்த்தால் கலாச்சாரமும்,மதமும் பெண்ணின் உடல் அரசியலை வைத்து வயிறு வளர்ப்பது தெரியவரும்.//

கல்வெட்டு
புரியவில்லை,தயவு செய்து விளக்கவும்.நிர்வாண நிலை அடைவது இருவருக்கும் பொதுவானது தானே?

Unknown said...

//புரியவில்லை,தயவு செய்து விளக்கவும்.நிர்வாண நிலை அடைவது இருவருக்கும் பொதுவானது தானே?//

ஜாலிஜம்பர்,

சமணம் சொல்லும் நிர்வாணம் என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை.

"ஆசையே துன்பத்துற்கு காரணம்" என்று ஆசையே வேண்டாம் என்ற புத்தத்தின் நிலை "ஆசையை விட்டொழிக்கும் ஆசையை" முதன்மைப்படுத்துகிறது.

அடிப்படையில் "ஆசையைத் துறக்கத்ச் சொல்லும் ஆசையை" முதல் ஆசையாக புத்த மதம் வரித்துக் கொண்டது.

"0" எனபதும் ஒரு எண் என்பது புத்தனுக்கு தெரியவில்லையோ?

அதேபோல்தான் சமணம் சொல்லும் நிர்வாணமும் தவறாகவே (அல்லது இரண்டு அர்த்தங்களில்) புரிந்து கொள்ளப்படுகிறது.

சமணம் சொல்லும் நிர்வாணத்தை நீங்கள் முக்தி(ஞானம்) போன்ற மாயைகளுடன் தொடர்பு படுத்த வேண்டாம்.

சமணம் சொல்லும் நிர்வாணம், முக்தி(ஞானம்) என்றால் கிறித்துவம் அதையே பரலோக இராஜ்ஜியம் என்றும், இஸ்லாம் அதையே சுவனம் என்றும் சொல்வதாகக் கருதலாம் சரியா?

இறை நிலை அடைதல் அல்லது இறைவனை அடைதல் என்ற அர்த்ததில் சமணம் , நிர்வாணத்தைச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

எது எப்படியோ , இங்கே நான் சமணத்தின் "நிர்வாணம்" என்று அடையாளம் காட்டுவது உடல் சார்ந்த நிர்வாணம். அம்மணம்.

அடிப்படையில் சமணம் பார்ப்பனீய வேத மறுப்பாக சனாதனத்திற்குத் எதிராக இருந்தாலும், அங்கேயும் பெண்ணின் உடல்மீதான அடக்குமுறை இருக்கிறது.

பெண்ணுடலின் நிர்வாணம்/அம்மணம் அனுமதிக்கப்படவில்லை.

ஒரு ஆண் சமணச்சாமியார் அம்மணமாக ரோட்டில் செல்ல அவரைச் சுற்றிப் பெண்கள் செல்வது குஜராத்தின் தெருக்களில் காணக்கிடைக்கும் காட்சி. ஒரு பெண்ணை அம்மணமாக வைத்து ஆண்கள் புடைசூழ அழைத்துச் செல்ல ஏன் சமணம் முயலவில்லை?

அது அவர்கள் பழக்கம்/பண்பாடு என்று சும்மா இருக்க முடியாது. ஏன் என்றால் அவர்கள் உங்கள முன்னால் கடந்து போகிறார்கள். உங்களின்மீதும் ஒரு உளவியல் சார்ந்த வன்முறையை ஏவுகிறார்கள்.

ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி வைத்துக் கொள்ளுவதும் , ஒரு ஆண் அம்மணமாக பல பெண்களின் மத்தியில் உலா வருதல் இரண்டும் ஒன்றாகவே படுகிறது எனக்கு. (மதம் சாராத அம்மண கடல் கரையோரங்களில் இருபாலருக்கும் சம உரிமை என்பதறிக)

அம்மணமாக் இருப்பவர் சாமியாரக இருந்தாலும் , அவரைப் பார்ப்பவர்கள் சாதாரணப் பெண்களே. துறவிகள் அல்ல.

ஒரு ஆணின் அம்மணத்தை பெண்களை கொண்டாடவைக்கப்படலாம்(கற்பிதங்கள்), ஆனால் அதே சமயத்தில் அது பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது.

***

சமணத்தில் அம்மண உரிமை ஆணுக்கு மட்டும்தான். இங்கேயும் பெண்ணின் உடல் அரசியல்.

***

டிஸ்கி:
சமணம் பற்றி நான் எல்லாம் அறிந்து / படித்துச் சொல்லவில்லை. பார்த்ததை/அனுபவித்ததை அப்படியே கேள்வியாக்குகிறேன்.

அங்கு பெண்ணின் அம்மணமும் பொதுவில் கொண்டாடப்படுகிறது என்றால் எனது கருத்தை விலக்கிக் கொள்கிறேன்.
**

உடலைக் கொண்டாடாமல் அதை ஒடுக்க நினைத்துதான் சமணம் தோற்றதிற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

காமம் இயற்கை அதை கடவுளுக்காக அடக்க முடியாது. மனிதன் சமுதாயமாக வாழும் இடத்தில் காமம் நெறிப்படுத்தப்படவேண்டுமே தவிர அடக்கப்படக்கூடாது.

***

சமணம் அம்மணம் பற்றி சில விசயங்களைத் தொடும் சுகுணாதிவாகரின் ஒரு பதிவு...
http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_23.html

Unknown said...

FYI:
சமணமும் கோவணமும் http://kalvetu.blogspot.com/2006/09/blog-post.html

சாலிசம்பர் said...

கல்வெட்டு,
நிர்வாணம் என்பதை முக்தி நிலையாகத் தான் புரிந்து கொள்கிறேன்.புத்தர்,மகாவீரர் போதனைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இல்லாமல் இருந்திருக்காது என்று தான் கருதமுடிகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்று மதங்களின் வரலாறு தெரிந்த யாராவது தான் சொல்ல வேண்டும்.

இப்போது சமண மதம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்.அதனால் பிராமண மதத்தின் பாதிப்பு , பெண்களை தாழ்த்துவது, அதில் இருக்கத்தானே செய்யும்.

Thekkikattan|தெகா said...

தருமி,

பலூன் மாமா கொடுத்த லிங்கில் சென்று நானும் படித்தேன்... போயிட்டே இருக்கு.

அதில் இந்தியாவில் கார் ஓட்டுவதற்கான முன் எச்சரிக்கையாக அமெரிக்கா மக்களுக்கு அந்த அரசாங்கம் கொடுத்திருக்கும் விழிப்புணர்வு உதாரணங்களை படித்தீர்களா... சில நேரத்தில் அதனை படிக்கும் பொழுது சிரிப்பு அடங்கவில்லை.

நன்றி, பலூன்!

வவ்வால் said...

கல்வெட்டு,

//பாலியல் கல்வியை யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் நதி/ரிஷி மூலங்கள் புரியும். இந்தியாவில் அடித்துக் கொள்ளும் இந்துத்துவாவும்,இஸ்லாமும் ஒத்துப்போகும் ஒரே கருத்து பள்ளியில் பாலியல் கல்வி எதிர்ப்பு. அதே போல் வாடிகன் என்ற உலக நிறுவனம் பெண்ணுக்கு கருப்பைச் சுதந்திரம் கூடாது என்று கூவுகிறது.//

நல்லாத்தான் சொல்லி இருக்கிங்க, ஆனால் பெரும்பாண்மை மனோபாவம் என்று ஒன்று உள்ளது.

சரியோ தவறோ பெரும்பாண்மை (அதிகாரம் என்றும் கொள்ளலாம்)கிடைப்பதே உண்மையாக உலகில் சித்தரிக்கப்படுகிறது.

நாகரீக உலகில் இருக்கும் மேலை நாடுகளிலும் மிஷனரி பொசிஷன் என்று உடல் உறவிற்கென வகுத்தார்கள் என்பது தெரியுமோ?

எனவே மேலை நாடுகளில் போதிக்கப்படும் ஒன்று இங்கே பாவமாக கருதப்படுகிறது என்று சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை.

அவர் அவர்கள் மண் சார்ந்து வறையறுத்துக்கொள்கிறார்கள்.வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் தோல் வெளுப்பின் மீது அத்தனைக்கர்வம் இருப்பது போல.


ஏசு கிருத்துவின் பேரால் விடுதலைப்போரை முன்னெடுத்து சென்ற ஜோன் ஆப் ஆர்க்கையும், கிருத்துவ மதத்தின் பின் சென்ற, செல்லும் ஆங்கில அரசு தான் கொன்றது என்பதை நினைவில் கொள்க!

எனவே காரண காரியங்கள் தான் கொள்கையை விட இங்கே முன்னிற்கின்றன.

சமணத்தின் நிர்வாணம் பற்றி தனியே பேசலாம்!

Unknown said...

திரு. தருமி, மிகத் தேவையான பதிவு. ஆனால், இப்போதுள்ள இளையர்களும், தவறான சோர்சைத் தானே நாடிச் செல்கிறார்கள், பாலியல் பற்றி அறிந்து கொள்ள? இணையமும் மற்ற ஊடகங்களும், பாலியல் பற்றி 'அதிர்ச்சி வைத்தியம்' கொடுக்கின்றனவே தவிர, எது நல்லது எது கெட்டது என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லித் தருவதில்லை. பள்ளிகள்தான் இந்தமாதிரிக் கல்விக்கு தகுந்த இடம். நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

திரு. பலூன் மாமா,
//வயிற்றில் பீயுடனும்,மூத்திரத்துடனும்,குசுவிடனும் கோவிலுக்கு வரலாம் ஆனால் பெண்கள் நாப்கின் உடன் வரக்கூடாது என்று சொல்லும் உலகை காக்கும் கடவுள்கள் இருக்கும் நாடு இது//

நடு மண்டையில் நச் :) உங்கள் பல கருத்துகள் ரொம்ப நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்!

சகோதரி மங்கை,

அந்த மாணவிகள் கேட்டக் கேள்விகள் கொஞ்சம் 'அடடே' ரகம்தான்! இன்னும் அடிப்படைக் கேள்விகளோடு நிறைய மாணவ/மாணவிகள் உள்ளனர். உங்கள் சேவை மிகச் சிறப்பானது!

Unknown said...

அப்புறம், இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தக் கிளையன்ட்டில் வேலை பார்க்கும் உத்தேசம் உள்ளதால், நீங்கள் அளித்த லின்க்குகளைப் பார்க்கவில்லை!!!
விரைவில்...

Post a Comment