Wednesday, March 19, 2008

253. எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"...தொடர்கதை

இதற்கு முந்திய பதிவில் எங்க ஊரு காவல்துறையின் "Smart sys" என்ற முதல் முயற்சி பற்றி பெருமையாக நான் எழுதிய போது பலரும் அவநம்பிக்கையோடு பின்னூட்டமிட்டார்கள். அதில் கடைசியாக பதிவர் அரவிந்தன், //நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.// என்று எழுதியிருந்தார். அவர் வாயில் சர்க்கரைதான் போடணும்.

செம காமெடிதான் பண்ணிட்டேன் !!
என்ன நடந்திச்சின்னா ....

1.sms அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிப் போச்சு . ஆனா, சொன்ன விஷயம் இதுவரை கண்டுகொள்ளப் படவேயில்லை.

2. அவர்கள் கொடுத்த reference எண்ணை அவர்கள் சொன்னது போல் அதே எண்ணுக்கு நேற்று இரவு அனுப்பினேன். Necessary action is in process என்ற அதே பல்லவி மறுபடி வந்தது.

3. அதோடு விட்டு விடலாமாவென நினைத்தேன்; இருந்தும் என்ன ஆகிறது என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் இப்படி ஒரு sms கொடுத்தேன்:

Automated messaging & answering system is working fine. Nothing more we can expect, I suppose. So sad. இப்படி அனுப்பிய sms-க்கு ன் பழைய பல்லவியான Your message has been received and necessary action is being initiated…...blah…blah என்று வந்தது. புதிதாக இதற்கொரு reference எண்ணும் வந்தது!

4. மறுபடி அந்த reference எண்ணை அனுப்பினேன். பழையபடி - Necessary action is in process என்ற அதே பல்லவி…

5. பொறுமை இழந்து அடுத்து கொடுத்த sms: I’m sorry. Intha vilaiyattukku nan varalai.

6. என்ன ஆச்சரியம். இதுவரை human touch ஏதுமில்லாமல் இருந்த மறுமுனையில் இருந்து உயிர்ப்புடன் ஒரு தொலைபேசி அழைப்பு. பேச ஆரம்பித்ததுமே யார் நீங்கள் என்ற விசாரணை. ஏன் இப்படி ஒரு sms என்ற கேள்வி. அவர் சொன்னதே சொன்னார். நான் அனுப்பிய கோரிக்கை மதுரை நகர் காவல்துறை தொடர்புடையதாம். இவர்களோ மதுரை புறநகர்க்காரர்களாம். என் கோரிக்கையை அனுப்பிவிட்டோம். அவ்வளவுதான் செய்ய முடியும் என்றார். இந்த சேதியையாவது சொல்லாமல் வெறுமனே Automated message அனுப்புவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று நான் கூற, இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அவர்கூற 10-15 நிமிடங்கள் பேசினோம். இப்படி நீண்ட நேரம் பேசுவதற்குப் பதிலாக, reference எண் ஒருவரிடமிருந்து வரும்போது அவரனுப்பிய கோரிக்கையையும், அதற்கு எடுத்த நடவடிக்கை பற்றியும் தகவல் தெரிந்துகொண்டு இதுபோல் நேரடியாக ஓரிரு நிமிடம் பேசினால் கூட போதும்; அதுதான் பயன் என்று நான் சொன்னது அவருக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை.

நான் அனுப்பிய கடைசி sms அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அது இந்த அளவாவது வேலை செய்தது எனக்குப் பிடித்தது! அதோடு வெறும் Automated message மட்டுமே என்றில்லாமல் சிலர் பொறுப்போடு வேலை செய்வது அறிந்ததால் கொஞ்சம் சந்தோஷமே!
பலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதால் நன்றி சொல்லி பல குறுஞ்செய்திகள் வருவதாகவும் சொன்னார். நல்லதே நடக்கட்டும்...

சுபம் !

19 comments:

வடுவூர் குமார் said...

என்னங்க ஐயா? சுபம் என்று போட்டுவிட்டீர்களே!! :-)

பாச மலர் / Paasa Malar said...

என்னத்த சொல்றது..

//பலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதால் நன்றி சொல்லி பல குறுஞ்செய்திகள் வருவதாகவும் சொன்னார். நல்லதே நடக்கட்டும்...//

இந்த அளவுக்காவது இருக்கிறதே..

இலவசக்கொத்தனார் said...

அங்கேயும் திட்டிப் பதிவு போட்டாத்தான் பாக்கறாங்க போல!! பேசாம அவங்களையும் இங்க சேர்த்து விட்டுடுங்க. :)

துளசி கோபால் said...

நல்லவேளை மங்களம் னு போடாம சுபம் போட்டது நல்லாத்தான் இருக்கு.
இனி எல்லாம் சுபமே!

வேளராசி said...

தருமி,ரயில் இன்னும் வரலீங்களே.

தென்றல் said...

ம்ம்ம்... ;(

நீங்க அவ்வளவு சீக்கிரம் விட்டுருவீங்களா என்ன....ஐயா

Deputy Inspector General of Police (Madurai Range) K. Jayanth Murali அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீங்கதான...? ;)

வோட்டாண்டி said...

"உங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சா ?" னு நீங்க குறுஞ்செய்தி அனுப்புங்க
"Necessary action is in process "
correcta reply வரும்.

நீங்க தப்பான கேள்விய கேட்டா எப்படி...?
என்ன professor மாதிரி கேள்வி கேட்டு மாணவர்கள் மாதிரி policea madakidalamnu paattheengala?? அவங்க TNPSC/UPSC கேள்விக்கு பதில் எழுதி செலக்ட் ஆனவங்க professor sir...
நீங்க விளையாட்டுக்கு வரலை என்ன விட்ருங்கனு சொன்ன அப்பறம் போன் பண்ணி இருகாங்கன என்ன அர்த்தம்.. அவங்களுக்கு கூட விளையாட ஆளு இல்லை பாவம்.. சின்ன பசங்க ஆசை படறாங்க பாவம் கொஞ்ச நாள் அவங்க விளையாட்டுக்கு company குடுங்களேன்..
பி.கு : என்னை வச்சி காமெடி கிமிடி பண்ணலையேனு அப்பாவியா கேட்டுறாதீங்க.. சந்தேகமா இல்லாம நான் காமெடி தான் பண்றேன்..

அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் விட்டு தள்ளுங்க...

Aravindhan said...

ஏடாகூடமா எதாவது கேள்வி இல்ல பிரச்சனைய அனுப்புனா தான் மதிப்பாங்களோ
ஒண்ணு பண்ணலாம்
மதுரை காவல்துறையினரை நமது குருஞ்செய்திக்கு பதிலளிக்கவைக்க 100 வழிகள் அப்படின்னு எல்லாருமா உக்காந்து யோசிச்சு ஒரு blog போடலாம்
அடுத்த electionla நீங்க மதுரைல நின்னா அமோக வெற்றி உங்களுக்கு தான்

தருமி said...

வடுவூர் குமார்,

வேறென்னங்க பண்றது?


பாசமலர்,

//இந்த அளவுக்காவது இருக்கிறதே..//
எனக்கும் அப்படித்தான் ஒரு சின்ன சந்தோஷம்.



துளசி கோபால்,

//இனி எல்லாம் சுபமே!// - அப்டீன்றீங்க ...?

தருமி said...

கொத்ஸ்,
//அவங்களையும் இங்க சேர்த்து விட்டுடுங்க. :)//

நம்ம கதைகளைப் பார்த்து பயந்திட மாட்டாங்களா?


வேளராசி,
//ரயில் இன்னும் வரலீங்களே.//

உங்க பேருதான் புரியலைன்னா உங்க பின்னூட்டமும் புரியமாட்டேங்குதே! கொஞ்சம் 'கோனார் நோட்ஸ்' போடுங்களேன். ப்ளீஸ்!

தருமி said...

தென்றல்,

இம்புட்டு விவரம் கொடுக்கிற ஆளு அந்த Deputy Inspector General of Police (Madurai Range) K. Jayanth Murali -வின் மயில் ஐடியும் கொடுத்திட்டீங்கன்னா, மயில் தட்டி விட்டுருவோம்ல.

தருமி said...

வோ(ஓ)ட்டாண்டி,
ஆனாலும் உங்களுக்கு செம குசும்புதாங்க.

அரவிந்தன்,
இப்படியெல்லாம் ஷார்ட்கட் இருக்கா? உங்களுக்கு நல்ல எதிர்காலம்தான்.

வவ்வால் said...

பரவாயில்லையே தைரியமான காரியம் தான் செஞ்சிருக்கிங்க! அதாவது விடாம முயற்சி செய்து பதில் வாங்கிட்டிங்களே!

நான் இப்படி 100 க்கு நாலைந்து தடவை முயற்சி செய்தவுடன் என் முகவரி ,என்னைப்பற்றிலாம் விசாரிச்சு ஒரு மிரட்டல் ரேஞ்சில போய்ட்டாங்க!

இது நடந்தது பொல்லாதவன் படம் பார்க்க போனப்போது,

பொல்லாதவன் படம் A சான்று படம் அதுக்கு சின்னப்பசங்கள் எல்லாம் தியேட்டரில் விட்டு இருந்தாங்க , தியேட்டர் கவுண்டரில் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லைனு போர்ட் வேர போட்டு இருக்கான், அதான் 100க்கு போன் பண்ணேன், கடைசில என்னையே ஆப்பு வைக்கப்பார்த்தாங்க! தியேட்டர் காரனுக்கே என்னைப்போட்டுக்கொடுத்தா என்னாவுறது :-))

வவ்வால் said...

தருமி ,

எதுக்கும் உஷாரா இருங்க, அப்புறம் வண்டில போறப்போ ஏன் ஹெட் லைட் ல கருப்பு பொட்டு வைக்கலை ரேஞ்சில் உங்களை மடக்குவாங்க, கேட்டா நீங்க தானே sms அனுப்பி கொடைச்சல் கொடுத்த பார்ட்டி , ரூல்ஸ் ஒழுங்கா ஃபாலோவ் பண்ணத்தெரியாதா என்பார்கள்! :-))

பொதுவா காவல்துறையினருக்கு அவர்களை கேள்விக்கேட்டலே பிடிக்காது!

✪சிந்தாநதி said...

மதுரை டிஐஜி மின்னஞ்சல்

digmadur@sancharnet.in

தொலைபேசி எண் 0452 - 253 1317

தென்றல் said...

/மயில் ஐடியும் கொடுத்திட்டீங்கன்னா, மயில் தட்டி விட்டுருவோம்ல.
/

ஹி...ஹி.... தெரிஞ்சியிருந்தா குடுத்திருப்பேனே...

நன்றி, சிந்தாநதி!

வவ்வால்,

அப்படிபார்த்தா.. சின்னபசங்க ஒரு தமிழ் படத்தையும் பார்க்க கூடாதே.. ;)

/பொல்லாதவன் படம் A சான்று படம் /

நல்ல வேள ... 'சிவாஜி' படத்துக்கு நீங்க இப்படி பண்ணலை.. ;(

தருமி said...

முதலமைச்சரின் தனிப்பிரிவு
தலமைச் செயலகம், சென்னை-600 009
ஒப்புகை கடிதம்

அன்புடையீர்,
தாங்கள் மாண்புகிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் அளித்த மனு / முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்த மனு / சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அளித்த மனு முதலமைச்சரின் தனிப்பிரிவின் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது மனு தக்க நடவடிக்கையின் பொருட்டு உரிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
------------------
Petition No: F / 40178
23.2.2008
Grievance: SUGGESTIONS REG. TRAFFIC REGULATION IN THE AREA NERA MADURAI - REG
Forwarded to:
Distric Officers,
Commr. of Police (in dist)

Sd
For special Officer
------------------

இக்கடிதம் நேற்று 22, மார்ச் எனக்குக் கிடைக்கப் பெற்றது.

நான் நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஏதும் அனுப்பவில்லை. எந்தக் கடிதம் இங்கு அனுப்பப்பட்டதென்பதும் தெரியவில்லை. அனேகமாக, மத்திய அரசின் Dept of Grievances-க்கு ஜனவரியில் அனுப்பிய கடிதம் இங்க அனுப்பப்பட்டிருக்கலாமென நினைக்கிறேன்.

Glad wheels are moving...

துளசி கோபால் said...

good on you !

Aravindhan said...

உடனே சந்தோஷமா ??
பாத்து சார் உங்க பேர்ல யாரவது அசிங்க அசிங்கமா நாக்க புடிங்கிக்கிற மாறி கேள்வி கேட்டு எதாவது அனுப்பிருக்க போறாங்க
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க

Post a Comment