Saturday, September 20, 2008

269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்

*

கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ் தாருங்களேன் இதற்கு.

இரண்டுக்கும்தான் எவ்வளவு வேற்றுமை! முதலாவது நமக்கு வரும் தலைவலி மாதிரி. தலைவலி தீரும்வரை நாம் சகித்து கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. அதைப் போல் மதசகிப்புத் தன்மை என்பது பெருமைக்குரிய விசயம் கிடையாது. பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்தவனையும் அவன் மதத்தையும் சகிப்பது என்பதில் என்ன பொருளோ பெருமையோ உண்டு? religious acceptance-ல் நான் என் நண்பனை மட்டுமல்ல, அவனது மதத்தையும் மதிக்க வேண்டும். அதுவே உண்மையான மனிதநேயம். நண்பர்கள் வீட்டுக்கோ, அவனது கோவிலுக்கு அவர்களோடோ செல்லும்போது நான் கோவிலுக்கு வெளியே நின்று கொள்கிறேன் என்பதைவிடவும் நான் அவனோடு உள்ளே சென்று அவன் அங்கு நடைபெறும் விசயங்களில் அவனோடு பங்கு பெற்றுவிடுவதால் என் மதநம்பிக்கைகளை விட்டு விட்டேன் என்றா பொருள். என்னோடு மாதா கோயிலுக்குள் வந்து என் பக்கத்தில் அவனும் அமர்ந்துகொண்டு, சத்தமில்லாமல் என்னோடு மெல்ல பேசும்போது அதை அவன் என் வழிபாட்டு நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் மரியாதை, அதை அவன் என்பொருட்டு கொடுக்கிறான் என்னும்போது அதில் நான் மனிதநேயத்தைத்தான் பார்க்கிறேன்.

சின்ன வயதில் நடந்த சில தவறுகளே இப்போது இப்படியெல்லாம் மனதில் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன். கிறித்துவனாகப் பிறந்தாலும் அம்மா வழியில் அம்மாவைத்தவிர மற்றவர்கள் இன்று வரை இந்துக்களாகவே இருக்கிறார்கள். சிறுவயதில் ஊருக்குச் செல்லும் சில வேளைகளில் அம்மா வீட்டில் ஏதாவது பூசை நடந்தால் நான் விலகி வெளியே தனித்து நிற்பது மட்டுமல்ல, படைக்கப்பட்ட பொருட்கள் எதையும் தொடவும் மாட்டேன். அதற்கு "அது பேய்க்குப் படைக்கப்பட்ட பொருட்கள்; ஆகவே அதைத் தொடவும் மாட்டேன்" என்று கூறுவதுண்டு. ஏனென்றால் அப்படித்தான் எனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அதனாலேயே தாத்தா, பாட்டி, மாமா எல்லோரும் என் கண்முன்பாகவே படைக்கப்படப் போகும் பொருட்களில் எனக்கென்று பூசைக்கு முன்பே தனியாக எடுத்து வைப்பதுமில்லாமல், என்னிடம் அதைக் காண்பித்து உறுதி செய்துகொள்வார்கள். இல்லாவிட்டால் நான் சாப்பிடாமலிருந்து விடுவேனே என்ற பயம்.

கண்திறந்த பிறகு, இப்போது புரிகிறது நான் செய்தது எவ்வளவு கேவலம் என்று. பின்னாளில் நம்பிக்கையாளனாக இருந்த போதும் அந்தத் தவறை செய்ததில்லை. சூழிலியல் கற்பித்ததால் மாணவர்களோடு பல வருடங்கள் பல இடங்களுக்குச் சென்றிருந்த போதும் ராமேஸ்வரம் அடிக்கடி போன ஊர். கோவிலுக்குள் செல்வது என்பது என்னைப் பொறுத்தவரை கோவிலைப் பார்க்க. அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதே போல் கோவிலை விட்டு வெளியே வந்ததும் ஒருமுறை மாணவர்கள் கொடுத்த கோவில் பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டேன். அன்று இரவு அதுவே ஒரு தர்க்கத்துக்கு வழி பிறப்பித்தது. கிறித்துவ மாணவன் அது தவறல்லவா என்று கேட்டான். நம்புபவருக்கு அது பிரசாதம்; மற்றவருக்கு அது வெறும் லட்டு அல்லது ஏதோ ஒன்று. நம்புவருக்கு அது கடவுள் முன்னால் படைக்கப் பட்ட பொருள்; எனக்கு அப்படியேதுமில்லை. Ladu remains a ladu for me but for a believer it changes to prasadam. அவ்வளவே என்றேன். கேள்வி கேட்ட மாணவனுக்கு அது திருப்தி தராது; ஏனெனில் அவன் கண்களை அவன் இன்னும் திறக்கவில்லை என்பது என் நினைப்பு; அது என் நிலைப்பாடு; அவ்வளவே.

அதேபோல் திருச்செந்தூர் சென்றபோது அரசியல் காரணங்களுக்காக, தடபுடலான மரியாதை கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். அவர்கள் எனக்குத் தலையில் தரித்த பட்டத்தினாலும், தலையில் கவிழ்த்து எடுத்த மகுடமும் என்னையோ என் மத நம்பிக்கைகளையோ எப்படி பாதிக்கும். மாணவன் பிரசாதமாக எனக்குக் கொடுத்தது எனக்கு வெறும் லட்டு என்பது எப்படியோ அதேதான் இங்கும்.

இவைகள் எல்லாம் என் நம்பிக்கைகளை உள்ளிருத்திக் கொண்டு என்னைச் சார்ந்தோரின் மகிழ்ச்சிக்காக நான் செய்வது. இது மனிதநேயத்தின் ஒரு சிறு வெளிப்பாடு. லட்டு கொடுக்கும் நண்பனுக்கும் தெரியும் நான் அதை பிரசாதமாக இல்லாது வெறும் தின்பண்டமாகத்தான் கருதுவேன் என்பது. ஆனால், அதைவிட்டு நான் அதை ஏற்க மறுத்தால் நான் என்னை அவனிடமிருந்து கடவுள் பெயரால் விலக்கிக் கொள்வதால் நிச்சயமாக மனத்தில் ஒரு உறுத்தலைத்தான் அது தரும்.

ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும். ஏனெனில் மதங்களைப் பற்றிய நம்பிக்கைகளெல்லாமே கற்பிக்கப்பட்டு மனதுக்குள் இறுகிப் போன விசயங்கள். இறுகிப் போன இந்த விசயங்களை நியாயப்படுத்தவென்றே தங்கள் தங்கள் புத்தகங்களிலிருந்து பொருந்துமோ பொருந்தாதோ ஏதோ ஒரு "வார்த்தை"யை வைத்துக் கொண்டு அடம் பிடிப்பார்கள். அடுத்தவர் சொல்லி மாறிவிடவா போகிறது. தானாகக் கண் திறந்து பார்த்தாலல்லவா முடியும். கற்றுக் கொடுத்ததை விட்டு விலகிவிடா வண்ணம் இருக்க நம்பிக்கை என்ற blinkers (குதிரைக்குப் போடுவது. அதற்குத் தமிழ்??) இருக்கவே இருக்கிறது. இதெல்லாம் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற கதைதான்.

உதாரணமாக, பிரிவினைக் கிறித்துவர்களில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதில்லை; ஆனால் கத்தோலிக்க கிறித்துவர்கள் வைத்துக் கொள்வார்கள். இதற்குக் காரணம் கேட்டால் சிலுவை போடும் இடம் என்று ஒரு சப்பைக் காரணம் சொல்வார்கள். பிரிவினைக்காரர்களைப் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்றாலே ஏதோ சின்னத்தம்பியில் மஞ்சள் தண்ணீருக்கு மனோரமாவுக்கு வரும் ஆவேசம் போல் வந்துவிடும். இதைப் பற்றி நான் விரிவாக எழுதியதைப் படிக்க இங்கே போகலாம்.

இஸ்லாமியர்களிலும் கேரளாவில் முழுமையான ஒரு இந்துப் பண்டிகையான ஓணத்தைக் அங்குள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும்போது நம் தமிழ் இஸ்லாமியர்கள் பொங்கலைக் கூட ஒரு இந்துப் பண்டிகையாகவே பார்ப்பதுண்டு. அப்போதென்ன கேரள இஸ்லாமியர்கள் நல்ல இஸ்லாமியர்கள் இல்லையா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரு இஸ்லாமியர்களும் சமூகத்தாலும், குடும்பத்தாலும் தங்களுக்குக் கற்பிக்கப் பட்ட விசயங்களை அப்படியே தொடர்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்ன ஒரு விசயம்தான். இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

கிறித்துவமும், இஸ்லாமும் இரண்டிலிருந்து நான்கைந்து தலைமுறைக்கு முந்திய நம் தாத்தா-பாட்டி காலத்தில் வந்தது. மதம் மாறிய நம் தாத்தாவும் பாட்டியும் மதங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பெரும் ஒப்பீடு செய்து மாறியிருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. பாவம் அவர்களுக்கு அந்த அளவுக்கு ஏது படிப்பறிவு. ஏதேதோ சமூகக் காரணங்களை வைத்து மதம் மாறியிருக்க வேண்டும். அந்தக் குடும்பங்களில் பிறந்ததாலேயே பலரும் அப்படியே அதை வாழ்க்கை முறையாக நம் நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம். அதிலிருந்து வெளியே வருவதென்பது ஏறக்குறைய நடக்காத ஒரு விஷயம். மதங்களின் பிடிப்பு அப்படி. பல பயமுறுத்தல்கள்; பல மூளைச் சலவைகள் ... ஆனால் வெளியே வர முடியும். அதாவது என் தாத்தா ஒரு மதத்தில் இணைந்தார்; நான் விரும்பினால் அதை உதறி விட்டு வெளியே வர முடியும். ஆக மதம் ஒரு சட்டை. வேண்டுமென்றால், பிடித்தால் போட்டுக் கொள்ளலாம்; இல்லையேல் போடாமல் இருக்கலாம்; மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். என் உயிருக்கும் மேலானதாக அல்லவா நான் நினைக்கிறேன் என்பவர்களுக்கு - அதுவும் ஒரு கற்பிதம்தான். நானிருந்த மதத்தில் என் இளம் வயதில் கடவுளுக்காக நீ உயிர் விட்டால் நீ ஒரு வேத சாட்சியாகிறாய். உனக்கு direct ticket மோட்சம்தான் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். (நல்ல வேளை, இப்போதெல்லாம் அந்த அளவு மோசமாக aggressive வேதபாடம் (catechism) இப்போதுள்ள பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை!!)


இப்படி மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றைப் பிடித்துக் கொண்டு மனிதநேயத்தைப் புறந்தள்ளுவது எந்த அளவு சரி - இப்பொருளில் அந்தக் காலத்தில் கவிஜ என்பதாக ஒன்றை எழுதியிருந்தேன். மீண்டும் இங்கே அது: (தலைவிதி வாசித்தவர்கள்கூட மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள்!)

பாம்புகள்கூட தங்கள்
தோல்களையே
சட்டைகளாக உரித்துப் போடுகின்றன.

ஏன் இந்த
மனிதர்கள் மட்டும்
தங்கள் சட்டைகளையே
தோல்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.


ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும்.


ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... !!!


*

தலைப்புக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன பொருத்தமென்று கேட்க மாட்டீர்களென நினைக்கின்றேன்.


*

115 comments:

உண்மைத்தமிழன் said...

//ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும்.
ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... !!!//

அப்பாடா.. என்ன எழுதுவது என்று யோசித்தபடியே மவுஸை இறக்கிக் கொண்டு வந்தேன்.. தாங்களே உதவி செய்துவிட்டீர்கள்..

வாழ்க பேராசிரியர்..

Thekkikattan|தெகா said...

Religious Acceptance = மத ஏற்றுணர்வு (பக்குவம்). இன்னமும் சின்னதா பண்ணலாம்... ஆனா, யோசிக்கணுமே :).

//அம்மா வீட்டில் ஏதாவது பூசை நடந்தால் நான் விலகி வெளியே தனித்து நிற்பது மட்டுமல்ல, படைக்கப்பட்ட பொருட்கள் எதையும் தொடவும் மாட்டேன். அதற்கு "அது பேய்க்குப் படைக்கப்பட்ட பொருட்கள்; ஆகவே அதைத் தொடவும் மாட்டேன்" என்று கூறுவதுண்டு. //

எதிர் தரப்பில் எவ்வளவு பக்குவமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது, உங்களின் மீது பாட்டி(அம்மா) வீட்டிலிருந்தவர்களுக்கு வந்த கோபத்தை விட, அப்பா வீட்டினரின் மீது வந்த கோபம்தான் அதிகமாக இருந்திருக்கும்.

நம்மூரில் இது கொஞ்சம் அதிகமாகவே "நஞ்சூட்டுதல்" நடைபெறுகிறது என நினைக்கிறேன். நான் அந்த சூழலில் இருந்த வரையிலும், இன்றும் "மத ஏற்றுணர்வு" இருப்பதால் நம்ம பொடியனுக்கு அந்த நஞ்சூட்டுதல் அதனைத் தொடர்ந்து அவன் போட்டிருக்கும் சட்டையே "தோலாக" மாறி பின்னால் கிழித்து எடுக்க விட வேண்டிய நிலையிலில்லை... எல்லாம் நீங்க சொன்ன ... "கண்திறப்பு" நிகழ்வே காரணம் அது தானே நிகழ வேண்டும்.

அருமையான பதிவு! இது போன்ற பதிவுகள் இன்னமும் நிறைய வேண்டும், இன்றைய கால கட்டத்தில்.

விஜய் ஆனந்த் said...

கடவுளை நம்புவோர்க்கு மாதா கோவிலில் கொடுத்தாலும், அம்மன் கோவிலில் கொடுத்தாலும் பிரசாதம் பிரசாதம்தானே!!!

மதச் சகிப்புத்தன்மையை விட மத ஒப்புமைதான் நமக்குத்தேவை...

// ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும். //


நானும் ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... ரிப்பீட்டேய் ... !!!

// தலைப்புக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன பொருத்தமென்று கேட்க மாட்டீர்களென நினைக்கின்றேன் //

கண்டிப்பா!!!

Sridhar V said...

தருமி அவர்களுக்கு,

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சல்மான்கான் பிடித்த பிள்ளையாருக்கும், தர்க்காவில் மந்திரிக்கப் போகும் சர்வ மதத்தினவருக்கும் இது போல பற்ப்பல மனிதர்களுக்கும் மதம் என்பது வெவ்வேறு பரிமாணத்தில் தெரிவதுதான். உங்கள் கண்கள் திறந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இங்கே எல்லார் கண்ணும் திறந்துதான் இருக்கின்றன. பார்க்கும் காட்சிகள்தான் வெவ்வேறு.

மதம் என்பது ஒரு வாழ்க்கைமுறை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அது ஒரு கட்டாய வழிமுறை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். தன் வளர்ச்சிக்கு இந்த மதச்சடங்குகள் உதவும் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள்.

நான் அவதானித்த ஒரு விசயம் என்னவென்றால், மனிதர்கள் பெரும்பாலும் எல்லாச் செயல்களிலும் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்கிறார்கள். மதம் மற்றும் அரசியல் சார்பு நிலை வரும்போது எந்தவித இணக்கமும் இல்லாத முழு விசுவாசியாக மாறிவிடுகிறார்கள். அடுத்தவர்களை தூஷிக்கும் அளவிற்கு.

சிறப்பான பதிவு. நன்றி.

தருமி said...

ரத்தினச் சுருக்கமான பின்னூட்டமிட வசதியாகிப் போச்சு அப்டின்றீங்க .. நல்லது

நன்றி

தருமி said...

//அப்பா வீட்டினரின் மீது வந்த கோபம்தான் அதிகமாக இருந்திருக்கும்.//

அவர்களுக்கு அந்த மாதிரி எந்த கோபமும் "வேதக்காரர்கள்" மேல் வந்ததாக நினைவில்லை. அதுதான் "இந்துக்காரர்கள்" மேல் எனக்குள்ள மரியாதை.

மத ஏற்றுணர்வு என்பதை விடவும் விஜய் ஆனந்த் சொல்லியுள்ள மத ஒப்புமை நன்றாக இருக்கிறதல்லவா?

நன்றி

தருமி said...

விஜய் ஆனந்த்
மதஒப்புமை - நன்றாக இருக்கிறது. வேறு யாரும் இதைவிடவும் நல்ல வார்த்தை கொடுக்காவிடில் இனி இந்தச் சொல்லிப் பயன்படுத்துவேன். நன்றி

//கடவுளை நம்புவோர்க்கு மாதா கோவிலில் கொடுத்தாலும், அம்மன் கோவிலில் கொடுத்தாலும் பிரசாதம் பிரசாதம்தானே!!!//

என்ன நீங்க ... கடவுளர்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் என் கடவுள், உஙன் கடவுள் என்றெல்லாம் பேதம் இருக்கிறதே. உங்க பிரசாதம் எனக்கு உவ்வே அல்லவா?!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..
உங்கள் பாட்டி் குடும்பத்தினரின் செயல் அழகு...

G.Ragavan said...

தருமி சார்... ஒரு வாட்டி பேசிருக்கோம். நம்மள்ளாம் பெரும்பான்மையானவங்க. ஒரே மாதிரித்தான் சிந்திப்போம். இதுவும் அப்பிடித்தான். எந்த மதத்துக்காரங்களா இருந்தா என்ன... நல்லாருந்துன்னா சாப்புட வேண்டியதுதானே. மதுரைல டி.ஆர்.வோ காலனீல பக்கத்து வீட்டு பாய் கோழி மீன் வாத்துன்னு விதவிதமாச் செய்வாங்க... நல்லா சாப்டிருக்கேன். தூத்துடீல கிருத்துவ நண்பர்கள் வீட்டுல கிருத்துமஸ் விருந்தும் உண்டிருக்கேன். மதமாய்யா பெருசு. மனுசந்தான் பெருசு.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சரி. எனக்கிருக்கே. இங்க ஐரோப்பாவுல டூர் போறப்போ அங்குள்ள தேவாலயங்கள்ள போய் இறைவனைத் தரிசனம் பண்ணீட்டுதான் இருக்கேன். எங்கயிருந்தா என்னய்யா... எல்லாம் ஒன்னுதான்.

இத ரொம்பப் பேரு சொல்லீட்டுத்தான் இருக்காங்க. கேக்குறாப்புல தெரியலையேய்யா! :(

தருமி said...

Sridhar Narayanan,

//இங்கே எல்லார் கண்ணும் திறந்துதான் இருக்கின்றன.//

அப்டியா சொல்றீங்க. காணும் காட்சியை வைத்துதான் நம்ம கண்கள் திறந்திருக்கா இல்லை யாரோ காண்பிச்சதைத்தான் நிஜமான ஒரே காட்சின்னு நினச்சிக்கிட்டு இருக்கோமா அப்டின்றதை வச்சுத்தான் அதைச் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.

//மதம் மற்றும் அரசியல் சார்பு நிலை வரும்போது எந்தவித இணக்கமும் இல்லாத முழு விசுவாசியாக மாறிவிடுகிறார்கள். அடுத்தவர்களை தூஷிக்கும் அளவிற்கு.//

நூத்துல ஒரு வார்த்தை...

தருமி said...

முத்துலெட்சுமி-கயல்விழி,
எனக்குத்தான் அத நினக்கிறப்போ வெக்கமா ஆகிடுது.

தருமி said...

ஜிரா,

//அங்குள்ள தேவாலயங்கள்ள போய் இறைவனைத் தரிசனம் பண்ணீட்டுதான் இருக்கேன். //

எங்க தெய்வம், ஒரே தெய்வம், அதுவே உண்மையான தெய்வம் - அப்டின்னு சொல்றவங்க இதை ஒத்துக்கமாட்டாங்கல்ல. எப்படி அடுத்த மதக் கடவுளை நீங்களும் கடவுள் எனலாம்; அதிலிருந்தே தெரியலையா உங்க தெய்வங்கள் பொய், தப்பு அப்டின்னு -- இப்படில்லா அவுக சொல்லுவாக!!

//மதமாய்யா பெருசு. மனுசந்தான் பெருசு.//

அம்புட்டுதான். இதத்தான் நானும் சொல்லுதேன். இதோடு எல்லாம் முடிஞ்சிருச்சி.

ஆனா தெய்வம் நம்மள படச்சது எதுக்குன்னா தன்னை மட்டும் கும்பிடறதுக்காக அப்டின்னு சொல்றாகளே ..

புருனோ Bruno said...

பொங்களை கொண்டாடுகிறார்களோ இல்லையோ கரிநாளை அனைவரும் தான் கொண்டாடுகிறார்கள் :)

ramachandranusha(உஷா) said...

தருமி! ஒண்ணுக்கு நாலு முறை படித்தேன். "இதைப் பற்றி பேசி
எந்த பயனும் இல்லை" சிறுவயதில் இருந்தே கடவுளிடம் வேண்டியதே இல்லை. சிலர் என் காதுபடவே சொல்லியிருக்கிறார்கள், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் சாமி இல்லை என்று நாத்தீகவாதம் பேசுகிறேன் எந்த பூஜை புனஸ்காரமும் செய்வதில்லை என்று .
பிரச்சனை இல்லாத மனித ஜென்மம் எது? என்னை தூக்கிக் கொண்டு போய் மியூசியமில் வைத்து விடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது :-)
என் பிள்ளைகளிடம் இந்த பதிவைப் படித்ததும் கேட்டேன் பரிட்சை போன்ற பயம் ஏற்படும்
போது, சாமியை நினைக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா என்று?
கல்லூரியில் படிக்கும் பெண் முற்றிலும் இல்லை என்றாள். பன்னிரண்டாவது படிக்கும் மகன்
முன்பெல்லாம் பொதுவாய் நல்லா எழுத வேண்டும் என்று பிராத்தித்துக் கொள்ளுவேன். இப்பொழுது
எல்லாம் இல்லைவே இல்லை என்றான். சக மனிதர்களை மதித்தல், தன்னம்பிக்கை,எளிமை,
சுய கட்டுபாடு, ஒழுக்கம், முடிந்தவரையில் பிறருக்கு உதவுவது இவைகளை எல்லாம் கற்று தந்திருக்கிறேன் என்ற திருப்தி போதும் எனக்கு நாத்தீகம் என்பது நம்பிக்கையாளர்களை நக்கல் அடிப்பது இல்லை. நம்பிக்கைகளை கேள்வி கேட்பது. அதில் பெரியார் தோற்று போனாறோ? இதை பேச ஆரம்பித்தால் முடியாது.

தருமி said...

ramachandranusha(உஷா),

உங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் பிள்ளைகளைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

உங்களுக்கு எப்படி இது இளம் வயதிலிருந்தே சாத்தியமானது? எப்படி, ஏன் ஆரம்பமானது?

//எனக்கு நாத்தீகம் என்பது நம்பிக்கையாளர்களை நக்கல் அடிப்பது இல்லை. நம்பிக்கைகளை கேள்வி கேட்பது. //

நான் நக்கல் அடிப்பதில்லை; ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கைகளையும் தங்கள் கருத்து/நம்பிக்கை மட்டுமே உயர்ந்தது என்பதைப் பார்த்து கொஞ்சம் எரிச்சல்படுவதுண்டு என்று ஒப்புக் கொள்கிறேன்.

//பெரியார் தோற்று போனாறோ?//

பெரியார் என்ன பெர்ட்ரண்ட் ரஸ்ஸலிலிருந்து பலரும் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம். நம்பிக்கையாளர்கள் வெறித்தனமான நம்பிக்கையாளர்களாக இருப்பதும் தொடர்கிறது. அது இன்னொரு பக்கம்.

two sides of the same coin!

தருமி said...

ramachandranusha(உஷா),

//நாத்தீகம் என்பது நம்பிக்கையாளர்களை நக்கல் அடிப்பது இல்லை. நம்பிக்கைகளை கேள்வி கேட்பது.//

நானும் கேள்விகள் கேட்டுத்தான் பார்க்கிறேன்; பதில்கள்தான் கிடைப்பதில்லை.

எழில் said...

அன்புள்ள தருமி

நீண்ட கட்டுரை, உங்கள் உணர்வை எழுதியிருக்கிறீர்கள். தற்போது நாத்திகராக இருந்தாலும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்.

நாத்திகராக இல்லாமலிருந்தாலும் மற்றவர்களது மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் இந்துக்கள்.

ஆனால் ஒரு மதத்தை பரப்பவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் மதத்தை உயர்த்தி காட்டவேண்டும் என்பதற்காக மற்றவர்கள் கும்பிடுவது சாத்தான், அல்லது மற்றவர்கள் வெறொரு முறையில் கும்பிடுவது கடவுளுக்கு பிடிக்காது என்றும் சொல்லி தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அதன் சித்திரத்தை நன்கு அளித்துள்ளீர்கள்.

ஆனால், இந்துமதத்தை திட்டினால்தான் தனக்கு முற்போக்கு பட்டம் கிடைக்கும் என்று இருக்கும் ஒரு சூழ்நிலையில் கட்டுப்பாடோடு அப்படிப்பட்ட வார்த்தைகளை எழுதாததற்காக நன்றி தெரிவிக்கிறேன். இதே கட்டுரையை ஒரு இந்து எழுதியிருந்தால், இதே போல பாராட்டுகள் வந்திருக்காது என்றும் கருதுகிறேன். சிந்தித்து பாருங்கள்.

மற்றவர்கள் கும்பிடுவது சாத்தான், அல்லது மற்றவர்கள் கும்பிடும் முறை கடவுளுக்கு பிடிக்கவில்லை என்ற கருதுகோளே மற்றவர்கள் மீதான வன்முறையின் நியாயமாக ஆகிவிடுகிறது. அதுவே அவர்களை கொன்றால் அது கடவுளுக்கு பிடித்தமானதுதான் என்று ஆகிவிடுகிறது. இதுவே மற்றவர்கள் மீதான வன்முறையின் அடித்தளம்.

இவ்வாறு ஆரம்பிக்கும் வன்முறை, கொல்லப்படுபவர்கள் மத்தியில் ( எப்படிப்பட்ட சாத்வீகமான கொள்கை கொண்டவர்களாக இருந்தாலும்) ஒரு எதிர்வினையை உருவாக்கி தொலைத்துவிடுகிறது.

வருத்தத்துடன்
எழில்

தருமி said...

நன்றி புரூனோ..

கோவி.கண்ணன் said...

//. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ் தாருங்களேன் இதற்கு.//

மத நம்பிக்கைகளுக்கு மதிப்புக் கொடுப்பது அல்லது ஒப்புக் கொள்வது

கோவி.கண்ணன் said...

பொதுவாக இந்துக்களுக்கு (இந்துத்துவாக்கள் தவிர்த்து) பிற மத வழிபாடுகளை மதிக்கும் பழக்கமும், அதில் கலந்து கொள்ளும் பழக்கமும் உண்டு, அதற்கு நல்ல உதாரணம் எங்கள் ஊரில் இருக்கும் வேளாங்கன்னி மற்றும் நாகூர் வழிபாட்டுத்தளங்களில் கூடும் இந்துக்களின் கூட்டம். கிறித்துவர்களும் சரி இஸ்லாமியர்களும் சரி இந்து வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அது இந்தியாவில் தோன்றிய சமய நம்பிக்கை என்ற அளவுக்காக அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

அப்படி நடந்திருந்தால் இந்துக்களில் மதவாத இயக்கம் தோன்றி இருக்கவே இருக்காது. ஐரோப்பியரின், அரபுக்களின் மதங்களை விட இந்திய சமயம் தாழ்ந்தது அல்ல. மூட நம்பிக்கைகள் உண்டு அது மதங்களுக்கே பொதுவாக உள்ளது.

தனிமனிதரின் நம்பிக்கைதான் மதக் கொள்கைகள், தனிமனிதரை மதிப்பது போல் அவர்களின் கொள்கைகளை ஏற்காவிட்டாலும் எதிர்க்காமல் இருந்தால் சமூக நல்லிணக்கம் இருக்கும். மூடநம்பிக்கைகள் அடுத்த மதத்தில் மட்டுமே இருப்பதாக மதநம்பிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். என்ன செய்வது தன்னுடைய உயர்வைக் அடுத்தவனைத் தாழ்த்துவதால் தான் நிலைக்கிறது என்கிற மன நிலைதான்.

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

வோட்டாண்டி said...

நல்ல பதிவு
ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
சின்ன பசங்கள உக்கார
சொல்லி மொட்டை அடிச்சு கதற கதற காது குத்தி அழுவ உடுரான்களே அது religious tolerancea illa religious acceptancea?

child right activists இப்ப மட்டும் காண போய்டுவாங்க

Robin said...

//மற்றவர்கள் கும்பிடுவது சாத்தான், அல்லது மற்றவர்கள் கும்பிடும் முறை கடவுளுக்கு பிடிக்கவில்லை என்ற கருதுகோளே மற்றவர்கள் மீதான வன்முறையின் நியாயமாக ஆகிவிடுகிறது. அதுவே அவர்களை கொன்றால் அது கடவுளுக்கு பிடித்தமானதுதான் என்று ஆகிவிடுகிறது. இதுவே மற்றவர்கள் மீதான வன்முறையின் அடித்தளம்.
// தவறான புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்ட கருத்து. தற்போது ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் வன்முறையில் இறங்கியிருப்பவர்கள் இந்துக்களே. ஒருகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற நிலையில் அனைவருக்கும் கல்வி அளித்தவர்கள் கிறிஸ்த்தவர்களே என்பதை மறக்க வேண்டாம். இன்றும்கூட கிறிஸ்த்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் இடங்களில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.

தருமி said...

எழில்,
//நீண்ட கட்டுரை,//

அடடா! அம்புட்டு நீளமாயிப் போச்சா!!

//இந்துமதத்தை திட்டினால்தான் தனக்கு முற்போக்கு பட்டம் கிடைக்கும் என்று இருக்கும் ஒரு சூழ்நிலையில் ..//

திட்டப் படவேண்டிய பஜ்ரங் தள், சிவ்சேனா, இன்னும் அதுபோன்ற அரைவேக்காட்டு இந்துமதப் போர்வையில் திரிபவர்களைப் பற்றி இப்பதிவில் எழுத தேவையில்லை அல்லவா?

மதம் என்பது personal என்பதை எப்போது தாண்டி வந்து, சமூக அவலங்களுக்குக் காரணிகளாக ஆகின்றனவோ அப்போதெல்லாம் அவைகளை - எம்மதமாயினும் - எதிர்ப்பதுதானே சரி. ஆனால் இப்பதிவில் அதற்குரிய காரணமேதுமில்லை.

//...எதிர்வினையை உருவாக்கி தொலைத்துவிடுகிறது.//

புரிகிறது. ஆனாலும், உங்களைப் போன்றோர் அந்நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது என் வேண்டுகோள்.

Robin said...

//ஆனால் ஒரு மதத்தை பரப்பவேண்டும் என்று நினைப்பவர்கள்..//மதம் என்பது தனக்குள் அடக்கிக் கொள்வதற்கு அல்ல. தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்பது போல் தன் மதத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே செய்வர். அதை ஏற்பதோ ஏற்க்காததோ அவரவர் விருப்பம். தற்ப்போது நடக்கும வன்முறைகளுக்கு மதம் காரணம் அல்ல: அரசியலே காரணம். மதம் என்பது தனிப்பட்ட மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு ஏற்பட்டது. மற்றவர்களை அழிப்பதற்காக அல்ல.

தருமி said...

கோவி,
//விஜய் ஆனந்த் சொல்லியுள்ள மத ஒப்புமை நன்றாக இருக்கிறதல்லவா?//

இதைப் பார்க்கவில்லையோ?


//பொதுவாக இந்துக்களுக்கு (இந்துத்துவாக்கள் தவிர்த்து) பிற மத வழிபாடுகளை மதிக்கும் பழக்கமும், அதில் கலந்து கொள்ளும் பழக்கமும் உண்டு, //

இதை இந்துக்கள் எல்லோருக்கும் உள்ள பொதுப் பண்பு. ஆனால் அதை ஏகத்துவம் பேசும் "நாங்களெலாம்" என்ன சொல்லுவோம் தெரியுமா? அவங்க சாமி மேல அவங்களுக்கு முழு நம்பிக்கையில்லை; அதனாலேயே இப்படி எல்லா சாமியையும் கும்புடுறாங்க. அதோடு ஏகத்துவ ஆட்களுக்கு மற்ற மதங்களைப் பற்றிய கருத்து எப்படிப் பட்டது என்பதுதான் தெரியுமே!

நீங்கள் இந்துக்களிடம் பாசிட்டிவாகச் சொல்வது ஏகத்துவக்காரர்களால் மிக மிக நெகட்டிவாகத்தான் பார்க்கப்படுகிறது.

தருமி said...

ராபின்,
உங்கள் பல கருத்துக்களையும் எதிர்க்கவேண்டியதுள்ளது.
1. //தற்ப்போது நடக்கும வன்முறைகளுக்கு மதம் காரணம் அல்ல: அரசியலே காரணம்.//

அரசியல் மட்டுமல்ல; மதமும் காரணம். (காண்க: உம்மைத் தொகை)

2.//மதம் என்பது தனக்குள் அடக்கிக் கொள்வதற்கு அல்ல. தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்பது போல் தன் மதத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே செய்வர். //

நீங்கள் சொல்லும் proselytizing எனக்கு ஏற்புடைத்தது இல்லை. ஆனால் நீங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு கிறித்துவனும் அதை மறுப்பீர்கள் என்பதும் நன்கு தெரியும். ஏனெனில், "நீங்கள் நாலா திசையும் போய் பிரசங்கியுங்கள்" என்று உங்கள் வேதநூல் கூறுகிறதே; பின் எப்படி ஒரு "நல்ல கிறித்துவனால்" 'மற்றவர்களுக்கு அறிவிக்காமல்' இருக்க முடியும்?

ஆனால் என்னைப் பொறுத்தவரை மதம் ஒரு தனிமனித ஒழுக்கத்துக்கானது; ஒரு பெர்சனலான காரியம். அதை நீங்கள் அறிவிக்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனைகள். அதற்கான வரலாற்று உதாரணங்கள்: சிலுவை யுத்தங்கள், early roman and other later pogroms, இன்றும் செர்பியா, ireland போன்ற நாடுகளில் நடந்த, நடக்கும், நடக்கப் போகின்ற யுத்தங்கள்.
இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் நடுவே நடக்கும் யுத்தத்திற்கு எண்ணெய் மட்டும்தானா காரணம் - மத துவேஷம்.

ஏன் எல்லா கிறிஸ்துவர்களும் அன்னை தெரஸா போல் வெறும் தொண்டோடு நின்றால் என்ன? மத மாற்றம் ஏன்? (அவர்களாகத்தான் மாறுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்)
"three S - Soup, Soap, Soul" - concept தெரியுமல்லவா? அவ்வளவு உயர்வான Soul-யை Soup, Soap கொடுத்து வாங்குவது சரியா - அது குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து கழுத்திலிருக்கும் தங்கச் சங்கிலியை வாங்குவதுபோல் தெரிகிறது.

எனக்குப் பிடிக்காத விவிலிய வார்த்தைகள் "நீங்கள் நாலா திசையும் போய் பிரசங்கியுங்கள்".
ஆனால் மிகவும் பிடித்தது: "உன் அயலான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறாயோ அதை அவனுக்கு நீ செய்துவிடு".

அன்னை தெரஸா இந்த இரண்டாவது தத்துவத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்கள் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துப்படி //"தன் மதத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே செய்வர்" //
ஒரு இஸ்லாமியர் உங்கள் ஏசுவின் பிறப்பை ஒரு சாதாரண மனிதப் பிறப்புதான் என்றால்,
அவர் சிலுவையில் மரணிக்கவுமில்லை; மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை;
ஏசு மனிதன்தான், கடவுளுடைய குமாரனுமில்லை;
அவர் கர்த்தருமில்லை இப்படியெல்லாம் மேடை போட்டோ, உங்கள் சர்ச்சுகளின் முன்னால் நின்று tract கொடுத்தாலோ எப்படி அதை எடுத்துக் கொள்வீர்கள்?

நிச்சயம் மதம் என்பது தனக்குள் அடக்கிக் கொள்வதற்கு மட்டுமேயானது.

Robin said...

//நீங்கள் சொல்லும் proselytizing எனக்கு ஏற்புடைத்தது இல்லை. ஆனால் நீங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு கிறித்துவனும் அதை மறுப்பீர்கள் என்பதும் நன்கு தெரியும். ஏனெனில், "நீங்கள் நாலா திசையும் போய் பிரசங்கியுங்கள்" என்று உங்கள் வேதநூல் கூறுகிறதே; பின் எப்படி ஒரு "நல்ல கிறித்துவனால்" 'மற்றவர்களுக்கு அறிவிக்காமல்' இருக்க முடியும்?
ஆனால் என்னைப் பொறுத்தவரை மதம் ஒரு தனிமனித ஒழுக்கத்துக்கானது; ஒரு பெர்சனலான காரியம். அதை நீங்கள் அறிவிக்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனைகள்.// இதில் ஒரு முரண்பாடு இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? மதம் என்பது தனிமனித ஒழுக்கத்துக்கானது என்பதை ஒப்புக் கொள்ளும் நீங்கள் அதை அறிவிக்க ஆரம்பிக்கும்போது பிரச்சனை எனவே அறிவிப்பது தவறு என்பது போல் எழுதியுள்ளீர்கள். நீங்கள் சுட்டிக்காட்டிய சிலுவை போர்கள் போப்பின் அதிகார வெறியினால் ஏற்பட்டதே தவிர ஏசு நாதர் இப்படி போர் செய்து நாடுகளை பிடிக்க சொன்னார். அதனால் தான் சிலுவை போர் ஏற்பட்டது என்று உங்களால் சொல்ல முடியுமா? சிலுவை போர் ஏற்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் பைபிள் படிக்க அனுமதிக்க படவில்லை. எனென்றால் அன்றைய போப்புகள் கிறிஸ்தவத்தை பின்பற்றவில்லை. ஆனால் கிறிஸ்தவன் என்ற வேஷத்தை வைத்து மக்களிடம் அதிகாரம் செலுத்தினார்கள். அதிகாரம் என்றாலே அரசியல் வந்து விடுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை. சிலுவை போர்களோ நீங்கள் சுட்டிகாட்டிய மாற்ற போர்களோ கிறிஸ்தவத்தால் ஏற்பட்டதல்ல. தற்போது அமெரிக்கவிற்கும் சில இஸ்லாமிய நாடுகளுக்கும ஏற்பட்டுள்ள போரில் சவூதி அரேபியா அமேரிக்கா பக்கம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

Robin said...

//ஏன் எல்லா கிறிஸ்துவர்களும் அன்னை தெரஸா போல் வெறும் தொண்டோடு நின்றால் என்ன? மத மாற்றம் ஏன்? // அன்னை தெரசாவால் யாரும் மதம் மாறவில்லை என்கிறீர்களா? தவறான எண்ணம். மத மாற்றம் என்? மதம் மாறினால் தான் ஒருவன் அந்த மதத்தை ஒழுங்காக பின்பற்ற முடியும். ஒரு இந்துவால் கண்டிப்பாக கிறிஸ்தவத்தை முழுமையாக பின்பற்ற முடியாது.

Robin said...

//ஒரு இஸ்லாமியர் உங்கள் ஏசுவின் பிறப்பை ஒரு சாதாரண மனிதப் பிறப்புதான் என்றால்,அவர் சிலுவையில் மரணிக்கவுமில்லை; மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை;ஏசு மனிதன்தான், கடவுளுடைய குமாரனுமில்லை;
அவர் கர்த்தருமில்லை இப்படியெல்லாம் மேடை போட்டோ
உங்கள் சர்ச்சுகளின் முன்னால் நின்று tract கொடுத்தாலோ எப்படி அதை எடுத்துக் கொள்வீர்கள்? // நான் எப்படி ஏசுநாதரை இறை மைந்தன் என்று நம்புகிறேனோ, அதைப்போல் இஸ்லாமியர்கள் அவரை இறை தூதர்களில் சிறந்தவர் என்றும், பெரும்பாலான இந்துக்கள் ஒரு அவதாரம் அல்லது ஒரு துறவி என்றும் நம்புகிறார்கள். நானா யாரையும் நான் நம்புவது போல் நீங்களும் நம்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதைப் போல மாற்றுக் கருத்து உள்ளவர்களை கொலை வெறியுடன் தாக்கவோ அல்லது உயிரோடு எரிக்கவோ செய்ய மாட்டேன். சொல்லப் போனால் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பெரும்பாலானோர் இந்துக்களே. நான் மத நம்பிக்கையையும் தனிப்பட்ட நட்பையும் சேர்த்து குழப்பிக் கொள்வதில்லை.

Robin said...

//ஒரு இஸ்லாமியர் உங்கள் ஏசுவின் பிறப்பை ஒரு சாதாரண மனிதப் பிறப்புதான் என்றால்,அவர் சிலுவையில் மரணிக்கவுமில்லை; மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை;ஏசு மனிதன்தான், கடவுளுடைய குமாரனுமில்லை;
அவர் கர்த்தருமில்லை இப்படியெல்லாம் மேடை போட்டோ
உங்கள் சர்ச்சுகளின் முன்னால் நின்று tract கொடுத்தாலோ எப்படி அதை எடுத்துக் கொள்வீர்கள்? // நான் எப்படி ஏசுநாதரை இறை மைந்தன் என்று நம்புகிறேனோ, அதைப்போல் இஸ்லாமியர்கள் அவரை இறை தூதர்களில் சிறந்தவர் என்றும், பெரும்பாலான இந்துக்கள் ஒரு அவதாரம் அல்லது ஒரு துறவி என்றும் நம்புகிறார்கள். நானா யாரையும் நான் நம்புவது போல் நீங்களும் நம்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதைப் போல மாற்றுக் கருத்து உள்ளவர்களை கொலை வெறியுடன் தாக்கவோ அல்லது உயிரோடு எரிக்கவோ செய்ய மாட்டேன். சொல்லப் போனால் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பெரும்பாலானோர் இந்துக்களே. நான் மத நம்பிக்கையையும் தனிப்பட்ட நட்பையும் சேர்த்து குழப்பிக் கொள்வதில்லை.

Robin said...

//அவர்களாகத்தான் மாறுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்// கீழ்கண்ட செய்தியை படிக்கவும்
INTROSPECTION respects no ideology. Even the best efforts of the RSS and the VHP can’t stop a change of heart. Vijay Pradhan, 35, is hiding in Raikia. For eight years, Vijay Pradhan says, he was an active RSS worker. He worked with Saraswati and conducted several reconversions. He also trained many RSS workers in the art of reconverting Christians to Hinduism. “I taught people what I was taught. That I must serve the country by fighting the Muslim and Christian religions, which are foreign to us. Our culture had to be saved. Then, one day a young pastor told me about Jesus. I was surprised at his courage in accosting me, but I was curious. This man told me that I could have eternal life with Jesus,” says Pradhan.

The one-time RSS worker says he was confused after this encounter. “I began searching for Jesus because I was intrigued by what I was told about him. On January 26, 1994, I challenged the creator. I asked why there are so many religions if there is one creator. I said whoever you are, I need to know you by name. I threatened that I would turn atheist if the Creator didn’t show himself. I couldn’t sleep at night. At 4.30 am, as I was getting ready for yoga, I saw a human-like figure. There was plenty of light. A voice said, ‘I am the one you are looking for,’” says Pradhan.

He says his thought process changed after this. He began spreading the gospel and going to church. “The RSS workers came to me and asked me why I had converted. They asked me how much money I was given. I used to ask people the same things. But I wasn’t paid. The RSS searched for me. I had to hide in the jungles. As long as there is trouble, I will hide,” he says.

Pradhan says only those who are called by Jesus are the true converts. “Only the attraction of God can make them that. Hindus become Christians, they are never made into Christians. The reconversions by the VHP and the RSS are false. They are conducting a political war in the name of God.”
source: www.tehelka.com

Robin said...

//"three S - Soup, Soap, Soul" - concept தெரியுமல்லவா? அவ்வளவு உயர்வான Soul-யை Soup, Soap கொடுத்து வாங்குவது சரியா - அது குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து கழுத்திலிருக்கும் தங்கச் சங்கிலியை வாங்குவதுபோல் தெரிகிறது. // இது வர்த்தகம் அல்ல. தன் உயிரையும் துச்சமாக நினைத்து செய்யும் இறைப்பணி. இரண்டையும் ஒப்பிட்டு கொச்சைப்படுத்த வேண்டாம்.

Robin said...

உங்களுடைய கருத்துக்களை படிக்கும்போது இயேசுநாதர் கூறியது போல வழிதவறிய ஆடு போல் தோன்றுகிறீர்கள். திரும்பவும் மந்தைக்கு திரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

புருனோ Bruno said...

//சொல்லி மொட்டை அடிச்சு கதற கதற காது குத்தி அழுவ உடுரான்களே//

வேளாங்கன்னி கோயிலில், புளியம்பட்டி கோயிலில் கூட இது உண்டு.

காது குத்துவது இந்து பழக்கமா, தமிழர் பழக்கமா தெரியவில்லை

ஆனால் கத்தோலிக்கர்கள் அதை கடைபிடிக்கிறார்கள்

புருனோ Bruno said...

//ஒருகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற நிலையில் அனைவருக்கும் கல்வி அளித்தவர்கள் கிறிஸ்த்தவர்களே என்பதை மறக்க வேண்டாம். இன்றும்கூட கிறிஸ்த்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் இடங்களில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்//

உண்மை தான். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் நல்ல உதாரணம்.

அதே போல் இன்னொரு விஷயம். இந்த கல்வி நிலையங்களில் மற்ற மதத்தவர்களுக்கு மதபோதனை கிடையாது

சுஜாதாவையும், கலாமையும் அவர்கள் பி.யூ.சி படித்த கல்லூரியில் யாரும் மதம் மாற்றவில்லையே. (சர்.சி.வி.ராமன் கூட அந்த கல்லூரி தானே)

தருமி said...

//சிலுவை போர்கள் போப்பின் அதிகார வெறியினால் ஏற்பட்டதே தவிர ஏசு நாதர் இப்படி போர் செய்து நாடுகளை பிடிக்க சொன்னார்.//

ஒசாமாவை அல்லாவா வந்து இரட்டைக்கோபுரத்தை உடைக்கச் சொன்னார். all in gods' name...அவ்வளவுதான். அந்த 'என் கடவுளுக்காகச் செய்கிறேன்' என்ற எண்ணத்தை மதங்கள்தான் தருகின்றன!


//ஒரு இந்துவால் கண்டிப்பாக கிறிஸ்தவத்தை முழுமையாக பின்பற்ற முடியாது.//

எதற்காக ஓர் இந்து கிறித்துவத்தைப் பின்பற்றணும் அப்டிங்கிறீங்க?


//Pradhan says ...//
dozen for a dime...

//தன் உயிரையும் துச்சமாக நினைத்து செய்யும் இறைப்பணி.// that is equal to : "proselytizing"

//திரும்பவும் மந்தைக்கு திரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.//
ஆமென்...

தருமி said...

//தன் உயிரையும் துச்சமாக நினைத்து செய்யும் இறைப்பணி.//

இறைவனுக்கு எதற்கு நமது பணி??!!

தருமி said...

புரூனோ,
//காது குத்துவது இந்து பழக்கமா, தமிழர் பழக்கமா தெரியவில்லை//
இந்திய பழக்கம் அப்டின்னு நினைக்கிறேன். இந்தியாவில் எல்லா பெண்களும் காது, மூக்கு, (தீபா வெங்கட் மாதிரி காது முழுசும்...) குத்திக்கிறாங்கல்ல...

//ஆனால் கத்தோலிக்கர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் //

கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல எல்லா கிறித்துவர்களும் (pentecost தவிர என்று நினைக்கிறேன்) முஸ்லீம்களும் இதில் அடக்கம். இல்லையா? இது ஒரு நாடு தழுவிய விஷயம்.

வோட்டாண்டி said...

//இந்திய பழக்கம் அப்டின்னு நினைக்கிறேன். இந்தியாவில் எல்லா பெண்களும் காது, மூக்கு, (தீபா வெங்கட் மாதிரி காது முழுசும்...) குத்திக்கிறாங்கல்ல...//

இப்படி இவன் ஆரம்பிச்சான் அவன் அரம்பிசானு சொல்லியே சின்ன பசங்கள அழுவ உடறீங்களே..சரி அப்ப "காது குத்து தடை சட்டம்" ஒன்னு கொண்டு வந்து. 18 வயசுக்கு அப்பறம் விருப்பம் இருந்தா (சொந்தமா) எங்க வேணாலும் குத்திக்கலாம்(தொப்புள் உட்பட) அப்படின்னு சட்டம் கொண்டு வந்துரலாமா ?
ச்சே ஆம்லேட்டு, பம்பரம் matter எல்லாம் supera காட்னவங்க இந்த mattera மட்டும் எப்படி மிஸ் பண்ணாங்க?

//(தீபா வெங்கட் மாதிரி காது முழுசும்...)

தருமி சார் அப்படியே அவங்க அங்கயும் குத்திருகாங்களானு கேட்டு சொல்லுங்களேன்

தருமி said...

வோட்டாண்டி,

//தருமி சார் அப்படியே அவங்க அங்கயும் குத்திருகாங்களானு கேட்டு சொல்லுங்களேன் //

எங்க என்ன ஏது அப்டின்னு ஒண்ணும் கேட்க மாட்டேன். ஏன்னா, அபிஅப்பா கோவிச்சுக்குவார்...

வோட்டாண்டி said...

அட நான் அங்கனு சொன்னது மூக்க.. மூக்கு குத்திருகாங்களானு கேட்டா ஏன் அபி அப்பா கோவிச்சுக்குவார்...
நீங்க வேற ஏதோ நினைகிறீங்க போல இருக்கே தருமி சார்

தருமி said...

நான் வர்லப்பா இந்த விளையாட்டுக்கு. இப்ப பாருங்க .. அபிஅப்பா வந்து உங்கள (உங்கள மட்டும்தான்; நானில்லை..) எப்படி கும்மப் போறார்னு பாருங்க ...

குடுகுடுப்பை said...

//இறைவனுக்கு எதற்கு நமது பணி??!!//

இதுதான் அனைவரும் அறியவேண்டிய செய்தி.

ஜோ/Joe said...

வாத்தியாரே,
கண்ணில் படாததால் தாமதமாக வந்திருக்கிறேன்.

என்னத்த சொல்ல .பதிவின் ஒவ்வொரு வரியையும் ஒப்புக்கொள்வதை தவிர.

ஆனால் பின்னூட்டங்களில் நீங்கள் சொன்ன சில கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது ..இன்ஷா அல்லா அப்புறம் சொல்கிறேன்.

G.Ragavan said...

// Blogger தருமி said...

ஜிரா,

//அங்குள்ள தேவாலயங்கள்ள போய் இறைவனைத் தரிசனம் பண்ணீட்டுதான் இருக்கேன். //

எங்க தெய்வம், ஒரே தெய்வம், அதுவே உண்மையான தெய்வம் - அப்டின்னு சொல்றவங்க இதை ஒத்துக்கமாட்டாங்கல்ல. எப்படி அடுத்த மதக் கடவுளை நீங்களும் கடவுள் எனலாம்; அதிலிருந்தே தெரியலையா உங்க தெய்வங்கள் பொய், தப்பு அப்டின்னு -- இப்படில்லா அவுக சொல்லுவாக!! //

சொல்லீட்டுப் போகட்டுமேய்யா. அதுனால நமக்கு ஆனது இல்லைன்னு ஆயிருமா. இப்ப...அக்கா இருக்கு. தங்கச்சி இருக்கு. அக்கா வீட்டுக்குப் போனாலும் நல்ல சோறு கெடைக்கும். தங்கச்சி வீட்டுக்குப் போனாலும் நல்ல சோறு கெடைக்கும். அக்கா வீட்டுலயே கெடைக்குதேன்னு அங்க மட்டுமே தின்னுக்கிட்டிருக்கமா? இல்லைல்ல..பாசமுள்ள தங்கச்சி வீட்டுலயும் போய்க் கைய நனைக்கிறோம்ல. அது உரிமைய்யா...இவுக யாரு குடுக்குறது. எங்கும் நிறைந்தவன் கடவுள்னு எல்லா மதமும் சொல்லுது. அப்ப கோயில்ல இருக்குற ஆண்டவன்...சர்ச்சுலயும் புல்லுலையும் பூண்டுலையும் கூடத்தானய்யா இருக்கான். டீவில படந்தெரியுது. ஆகையினால டீவில மட்டுந்தான் கரண்டு இருக்குன்னு சொல்றவகள ஒன்னும் பண்ண முடியாது. கண்டுக்காம விட்டுற வேண்டியதுதான்.

// //மதமாய்யா பெருசு. மனுசந்தான் பெருசு.//

அம்புட்டுதான். இதத்தான் நானும் சொல்லுதேன். இதோடு எல்லாம் முடிஞ்சிருச்சி.

ஆனா தெய்வம் நம்மள படச்சது எதுக்குன்னா தன்னை மட்டும் கும்பிடறதுக்காக அப்டின்னு சொல்றாகளே ..// //

ஆமா... நம்ம கும்புடுலைன்னுதான் சாமி சந்நியாசம் போகுதோ. சாமி என்ன ஆண்டையா.... போற வார வேலைக்காரனெல்லாம் கும்புடுறேஞ் சாமின்னு சொல்றதுக்கு. அன்புய்யா அன்பு. அது எல்லாத்தையும் ஏத்துக்குறும். மனுசப்பயகளுக்குத்தான் அந்த மனப்பாங்கு கெடையாது.

ஆமா... ஒங்க வீட்டுல கிருஸ்மஸ்க்கு விருந்து இருக்கும்ல. கறி கோழி இருக்கும்ல... எப்பன்னு சொல்லுங்க...ஒரு கைக்கு நானும் வாரேன். :) மதுரப்பக்கம் சாப்ட்டு நாளாச்சு. ஆனாலும் எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. உண்மையிலேயே நிறைவேறலை இதுவரைக்கும். முஸ்லீம்க கல்யாணத்துல கறிப்பிரியாணி பிரமாதமா இருக்குமாம். அதச் சாப்டதில்லைய்யா... :(

தருமி said...

ஜிரா,

//அக்கா இருக்கு. தங்கச்சி இருக்கு//

இங்கதான உதைக்குது. இப்ப ரெண்டு சொல்றீக. அப்புறம் முப்பத்தி முக்கோடி என்பீக. நாங்கல்லாம் ஏகத்துவக்காரர்களா இல்லையா; நீங்க சொல்லுறத ஒத்துக்குவோமா?

//எப்பன்னு சொல்லுங்க...ஒரு கைக்கு நானும் வாரேன். ://

எப்போன்னாலும் வாங்க; வர்ர அன்னைக்கி கிறிஸ்துமஸா ஆக்கிருவோம். அம்புடுதான ..

//முஸ்லீம்க கல்யாணத்துல கறிப்பிரியாணி பிரமாதமா இருக்குமாம். அதச் சாப்டதில்லைய்யா... :(//

அட பிரியாணியை உடுங்க. அதுக்கு ஊத்துவாக பாருங்க ஒரு தாள்ஸா .. எம்புட்டு பிரியாணி சாப்பிட்டாலும் அப்படியே சும்மா இழுக்கும்ல ...

தருமி said...

குடுகுடுப்பையாரே,

ஜிரா கூட நம்ம கட்சிதான். அவரு சொல்றாரு: //சாமி என்ன ஆண்டையா.... போற வார வேலைக்காரனெல்லாம் கும்புடுறேஞ் சாமின்னு சொல்றதுக்கு//

தருமி said...

வாங்க ஜோ!

அப்பாடா ரெண்டுபேரும் எப்பவும் ஒரேமாதிரி யோசிச்சா போரடிச்சிருமில்ல; அதான் வேற கருத்து சொல்ல ஒரு சான்ஸ் கொடுத்திருக்கேன்.

வாங்க ... எதிர்பார்த்திருக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

நல்லா எழுதி இருக்கீங்க!!

//ஆனால் ஒன்று, இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும்.//

:))

தென்றல் said...

ஐயா,

நல்ல பதிவு! பதிவின் 'சாரம்சம்'த்தை ஒப்புக் கொள்கிறேன்!

/எனக்குப் பிடிக்காத விவிலிய வார்த்தைகள் "நீங்கள் நாலா திசையும் போய் பிரசங்கியுங்கள்"./

ஏன் அப்படி பைபிளில சொல்லிருக்கணும்? 'மத மாத்துக்குங்க'னு சொல்லலை. 'போய் பிரசங்கியுங்கள்' னா உனக்கு தெரிந்த 'நல்ல' விசயத்தை நாலு பேருக்கு போய் சொல்லு கிற நோக்கமா.. என்ன காரணமா இருக்கும்? உங்களுக்கு பிடிக்காத .. இந்த விவிலிய வார்த்தைகள் தவறாக கற்பிக்கப்பட்டுள்ளதா?

/இறைவனுக்கு எதற்கு நமது பணி??!!/
ராபின் மறுமொழிக்கு 'சீரியசான' பதிலை எதிர்பார்த்தேன். ஏமாற்றம்.

ramachandranusha(உஷா) அவர்களின் மறுமொழி எளிமை...! உங்கள் பதிவைப் போல...

அபி அப்பா said...

நான் தான் 50 வது கமெண்ட்டை போட்டேன் என நாளை இஸ்டரி சொல்லட்டும்.

பதிவு நல்லா இருக்கு பேராசிரியரே! கடைசியிலே ரிப்பீட்டேய் போட்டு எங்க வேலைய குறைச்சுட்டீங்க அய்யா! என்னை கேட்டா மதம் பிடிப்பதை விட மதம் பிடிப்பது ரொம்ப ஆபத்துன்னு தான் சொல்லுவேன்!!

அபி அப்பா said...

//இந்தியாவில் எல்லா பெண்களும் காது, மூக்கு, (தீபா வெங்கட் மாதிரி காது முழுசும்...) குத்திக்கிறாங்கல்ல...///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னா சாரே நம்மை வம்புக்கு இழுக்கறீங்க:-))

அபி அப்பா said...

//வோட்டாண்டி,

//தருமி சார் அப்படியே அவங்க அங்கயும் குத்திருகாங்களானு கேட்டு சொல்லுங்களேன் //

எங்க என்ன ஏது அப்டின்னு ஒண்ணும் கேட்க மாட்டேன். ஏன்னா, அபிஅப்பா கோவிச்சுக்குவார்...
//

ஆகா தேரை இழுத்து தெருவிலே விட்டுட்டீங்களே அய்யா!!!

சரி இந்த விஷயத்துக்காக மான நஷ்ட வழக்கு போடனும்ன்னா வோட்டாண்டி மேலெ போடனுமா, அய்யா தங்கள் மேலெ கேஸ் போடனுமா? புரியவில்லை தயவு செஞ்சு விளக்கவும்!:-))

அபி அப்பா said...

//அட நான் அங்கனு சொன்னது மூக்க.. மூக்கு குத்திருகாங்களானு கேட்டா ஏன் அபி அப்பா கோவிச்சுக்குவார்...
நீங்க வேற ஏதோ நினைகிறீங்க போல இருக்கே தருமி சார்//

வோட்டாண்டி! கொமட்டுல குத்துவேன்! இதில விளக்கம் வேறயா! நல்லா இருங்க சாமீ!!:-))

ramachandranusha(உஷா) said...

தருமி ஐயா! ஜிரா பேச்சை நம்பாதீங்க. பையன் வெளிநாட்டுல நாக்கு செத்துக்கெடக்கான் போல,
சாப்பாட்டில் கடவுளை காண்கிறான்
:-)

அபி அப்பா said...

//நான் வர்லப்பா இந்த விளையாட்டுக்கு. இப்ப பாருங்க .. அபிஅப்பா வந்து உங்கள (உங்கள மட்டும்தான்; நானில்லை..) எப்படி கும்மப் போறார்னு பாருங்க ...//
அது சரி, பேராசிரியரே! ரொம்ப நல்லா இருக்கு பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது!!:-))

தருமி said...

அபிஅப்பா,
//பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு...//

அட, நல்லா இருக்கே. நான் எங்கங்க கிள்ளினேன். அது உங்க பாடு வோட்டாண்டி பாடு. என்ன உடுங்க'ப்பா ..

தருமி said...

கொத்ஸ்,
நன்னி

தருமி said...

தென்றல்,

நல்ல விஷயத்தை சொல்றது பற்றி சொல்லலை. தன் மதத்தைப் பரப்ப வேண்டும் என்கிற நினைப்புதானே நம் சமூகக் குழப்பங்களுக்குக் காரணம்.

இறைப்பணி பற்றி இரு ஆபிரகாமிய மதங்களில் சொல்லப்படும் விசயம் எனக்குச் சரியாகப் படுவதில்லை.

தன்னை அறிந்து தன்னை சேவிக்க / ஆராதிக்க / கும்பிடத்தான் மனிதனைக் கடவுள் படைத்தார் என்பதுவும், ஒரு பக்கம் நரகம் இன்னொரு பக்கம் சுவனம் வைத்துக்கொண்டு, கையில் கணக்குப் புத்தகத்தோடு கடவுள் கடைசியில் (Judgment day / doom's day..) உட்கார்ந்திருப்பார் என்பதுவும் எனக்குப் பிடிபடுவதில்லை. இதில் முதலில் சொன்ன விசயம்தான் இறைப்பணி என்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜிரா அழகாக அதைச் சொல்லிவிட்டார்: //சாமி என்ன ஆண்டையா.... போற வார வேலைக்காரனெல்லாம் கும்புடுறேஞ் சாமின்னு சொல்றதுக்கு//

இப்படியே போகுது என் புத்தி ...

தருமி said...

ramachandranusha(உஷா),

அந்த மனுசன் பேசி எனக்குப் பசியையும் ஆசையும் சேர்த்து உண்டு பண்ணிட்டாரே...

வால்பையன் said...

//இதைப் பற்றிப் பேசுவதாலெல்லாம் எந்த பயனும் இல்லை என்பதுவும் தெரியும்.//

எனது நிலைப்பாடும் இப்படி தான் ஆகிவிட்டது.


நல்ல பதிவு, ஆழமான கருத்துக்கள்

தருமி said...

நன்னி வால்பையா ....

மங்கை said...

தருமி ஐயா

உங்க பதிவை படிச்சது ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருது...வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஆசிரியர்..(அவரும்..:-))... தீவிர நாத்திகவாதி... ஆனா ஸ்வீட் பிரியர்.. பெருமாள் வோவில் சக்கரைப் பொங்கல் னா அவருக்கு உயிர்.. கேட்டு வாங்கி சாப்பிடுவார்.. வெளியே தின்னையில் உக்கார்ந்துட்டு.. நான் கோவிலுக்கு போய்ட்டு வரும் போது..என்னை தாண்டி நீ போயிடுவியானு பொங்கலை அவருக்கு படைக்க வச்சுடுவார்.. எல்லாரும் திட்டுவாங்க.. படிக்குறது ராமாயணம் இடிக்குறது பெருமாள் கோவில்னு.. அவர் கண்டுக்க மாட்டார்... A sweet is Sweet is Sweet னு சொல்லுவார்..

கிருஸ்துமஸ்க்கு கேக்கும், ரம்ஜானுக்கு பிரியாணியும் பகிர்ந்து கொள்ளும் அளவில் தான் இருக்கு நமக்கு சகிப்புத் தன்மை....

தருமி said...

தப்பா சொல்றீங்க, மங்கை!

//கிருஸ்துமஸ்க்கு கேக்கும், ரம்ஜானுக்கு பிரியாணியும் பகிர்ந்து கொள்ளும் அளவில் தான் இருக்கு நமக்கு சகிப்புத் தன்மை....//


அப்படி பகிர்ந்து கொள்ளும் அளவில் கூட நாம் இல்லை என்பதுதான் உண்மை நிலை. இல்லையா? நடுவில்தான் எத்தனை காரணங்கள்..???

தருமி said...

மங்கை,
பரவாயில்லையே .. உங்களுக்கு எப்போதுமே "நல்ல" ஆசிரியர்களின் தொடர்பு கிடைத்து வருகிறதே :-)

வாசகன் said...

திரு.தருமி அவர்களே..

நட்புறவு, இணக்கம் என்பது வேறு.
கொள்கைகளை விட்டுக்கொடுப்பது என்பது வேறு.

இப்ப உதாரணத்துக்கு லல்லு வீட்டு கல்யாணத்துக்கு அத்துவானி வர்றாருன்னா..அது நட்பு-பாராட்டறது,
ஆனா, அவர்கட்சியோட செயற்குழுவுக்கு அதே நட்ப காரணமா காட்டி வருவாரா..ன்னா வரமாட்டாரு..(அவிங்களும் விடமாட்டாய்ங்க, இவரும் வரமாட்டாரு)

மிஸ்டர் A ங்கறவர் எல்லா கட்சியோட கூட்டத்துலயும் கலந்துக்கறவர்னு வைங்க.. அவருக்குன்னு ஒரு கொள்க இல்லே.. கேட்டாய்க்கா, கொள்கையற்றிருப்பதே என்கொள்கைன்னு இந்துமதம் கணக்கா எடுத்துவிடுறாரு.

இன்னொருத்தரு..மிஸ்டர் B கம்யூனிஸ்ட் கட்சிக்காரருன்னு வைங்க.. அவரு கம்யூனிஸ்ட் கூட்டத்துல மட்டுந்தேன் கலந்துக்குவாரு..
அவரிட்ட போய்..

"அங்கெ பாருங்க, மிஸ்டர் A எல்லா கூட்டத்துக்கும் வர்றாரில்ல.. உங்களால மட்டும் பிஜேபி கூட்டத்துல ஏங் கலந்துக்க முடியறதில்ல" ன்னு கேட்டா என்னா சொல்வாரு?

" மிஸ்டர் A என் கூடப் பொறந்தவ்ருதேன், அதுக்காக அவரு மாதிரிதான் நானும் இருக்கணும்னு சொல்றது என்னா ஞாயம். அவரோட நான் நல்ல உறவுமுறையோட இருக்கறது வேற, கொள்கையோட இருக்கறது வேற" னு சொல்வாரில்லயா...
அது மாதிரி தான் இதுவும்.

குழப்பம் என்னான்னா, கொள்கைய வளர்க்குறேன்னு உறவ முறிச்சிக்கிறாங்களே அவிங்கள பார்த்துப்புட்டு எல்லாரையும் தப்பாவெ நெனச்சிக்கிறோம், அம்புட்டு தான்

உங்க கொள்கையில் நீங்க உறுதியா இரிங்க, என்கொள்கையில் நான் உறுதியா இரிய்க்கேன், நம் நட்பும் ஸ்ட்ராங்கா இரிக்கட்டும்' னு சொல்லணும்கறது தான் சரி.

தப்பா சொல்லிருந்தா சுட்டிக்காட்டுங்கண்ணா

SurveySan said...

எனது கஸின் ஒரு கிருத்தவரை தான் திருமணம் பண்ணியிருக்காரு.
ரெண்டு பேருக்கும், பெரிய மத ஈடுபாடெல்லாம் கிடையாது.

அவங்க பசங்களும், 'கடவுளா? அப்படீன்னா?'ன்னுதான் கேக்கறாங்க.

நீங்க எப்படி? உங்க வாரிசுகள், மதத்துக்கு உள்ளயா வெளீலயா?


மத-acceptance சொன்னீங்களே, அதுதான் கண்டிப்பா வேணும்.
மதமே இல்லாமல் இருப்பது, ஒரு dry lifeஆ இல்லியா?
பண்டிகை எல்லாம் கொண்டாடாம, வருஷம் முழுக்க ஒரே மாதிரி இருந்தா, நல்லாவா இருக்கும்?

பொறந்தநாள் கொண்டாடிக்கலாம், ஆனா, ஊரே சேந்து கொண்டாடுவது, ஒரு ஜாலியான விஷயம் இல்லையா?

நம்ம தீபாவளி,பொங்கல் மாதிரி நிகழ்வுகள் ஒரு பெரிய ப்ளஸ்!

மத-acceptanceக்கு தேவை மீடியாக்களின் பொறுப்பான பணி.

அமெரிக்கால, கறுப்பர்கள் இனத்தின் மேல் ஒரு பெரிய வெறுப்பையும் பயத்தையும் உண்டு பண்ணி வச்சிருக்கு இந்த மீடியா.

அதே மாதிரி, நம்மாளுங்களும், சின்ன சின்ன விஷயத்தையும் ஊதிப் பெருசாக்கி, ஊரை ரணகளப் படுத்தியிருக்காங்க.

மத-Acceptance is the way, and I already practice it ;)
(இதுக்கு ஒரு பட்ட போட்டு, எல்லார் பக்கத்திலும் வச்சிக்கலாம் :))

தருமி said...

வாசகன்,
//தப்பா சொல்லிருந்தா சுட்டிக்காட்டுங்கண்ணா//

அண்ணா நீங்க சொல்லவந்தது முழுசா புரிஞ்சாதானே'ண்ணா சரியா தப்பான்னு சொல்ல முடியுங்க'ண்ணா!

//கொள்கைய வளர்க்குறேன்னு உறவ முறிச்சிக்கிறாங்களே அவிங்கள பார்த்துப்புட்டு ...//

அவிங்கன்னா யாருங்கண்ணா? சொல்ல வந்ததை கொஞ்சம் தெளிவா சொல்லப்படாதா'ண்ணா .

//கொள்கையற்றிருப்பதே என்கொள்கைன்னு இந்துமதம் கணக்கா எடுத்துவிடுறாரு.//

இந்த sarcasm இங்க என் பதிவில தேவையா'ண்ணா? இந்துமதத்தைப் பத்தி உங்களுக்கு முழுசா தெரியுமாங்க'ண்ணா?

பைத்தியக்கார ஆசுபத்திரியில் இருக்கிறவனுக்கு வெளியே இருக்கிறவனெல்லாம் பைத்தியமா தோணுமாமுங்க'ண்ணா. vice versa-வும் இருக்குங்க'ண்ணா.

நாம எல்லோருமே எப்பவுமே நாம வெளியே இருக்கிறதா நினச்சிக்கிட்டு மத்தவங்க மட்டும் உள்ளே இருக்கிறதா நினச்சிக்கிறோமுங்க'ண்ணா. அதாங்க'ண்ணா உங்க பிரச்சனைன்னு நினைக்கிறேங்க'ண்ணா.

சரியாங்க'ண்ணா .. தப்பா சொல்லிருந்தா சுட்டிக்காட்டுங்கண்ணா

தருமி said...

சர்வேசன்,

//நீங்க எப்படி? உங்க வாரிசுகள், மதத்துக்கு உள்ளயா வெளீலயா?//

வாரிசுகளும், தங்கமணியும் ரொம்பவே "உள்ளே"! வாரிசுகள் வளரும்போது 'எனக்குள் வளர்ந்த' கேள்விகளையோ அதற்கு எனக்குக் கிடைத்த பதில்களையோ அவர்களோடு விவாதித்ததில்லை. வளர்ந்த பின் இப்போது விவாதித்ததால் என்னை அவர்கள் வழிக்கு, அதாவது என் பழைய வழிக்கு, என்னை வரச் சொல்லி வற்புறுத்துவதில்லை. என் வழி எனக்கு; அவர்கள் வழி அவர்களுக்கு.

தங்கமணி சர்ச்சுக்குப் போகணும்னா அவங்களுக்கு முன்னாலேயே நான் புறப்பட்டு விடுவேன் ட்ரைவராக. கையில் ஏதோ ஒரு புத்தகம் அல்லது sunday hindu magazine எடுத்துட்டுப் போய் கோவில் வளாகத்தில் ஒரு மூலையில் ....

//மதமே இல்லாமல் இருப்பது, ஒரு dry lifeஆ இல்லியா? ... ஊரே சேந்து கொண்டாடுவது, ஒரு ஜாலியான விஷயம் இல்லையா?//

அதது அனுபவிச்சிப் பார்த்தாதான் தெரியும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. நான் "பக்திமானாக" இருந்திட்டு இப்ப இப்படி இருக்கேன். நிச்சயமா நீங்க சொல்ற dry life இல்லை. என்னங்க.. கிறிஸ்மஸ் அப்டின்னா ராத்திரியோ காலங்கார்த்தாலேயோ ஒரு மணி நேரம் சர்ச். அப்புறம் வீட்ல எல்லாருமா ஒண்ணா இருக்கிறது; சந்தோஷமா கலகலன்னு இருக்கிறது; சாப்பிடறது -- இதுக்கெல்லாம் சாமி எதுக்கு? இப்பவே கிறிஸ்மஸ் பத்தி பேச ஆரம்பிச்சாச்சு... பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் எல்லோரும் ஒண்ணா இருப்போமே அதுக்காகத்தான் ... அதுதானே விழா. இந்த சந்தோஷம் வருஷம் ஒரு முறைதான் அப்டின்றதாலே ரொம்ப சந்தோஷம். எப்போடா கிறிஸ்மஸ் வரும் அப்டீன்னு நானும்தான் காத்திருக்கிறேன்.

//மத-Acceptance is the way, and I already practice it ;)//

சந்தோஷம்; நல்லது. வாழ்க .. இந்த tribe வளர்க ...
மத-Acceptance = மத ஒப்புமை (விஜய் ஆனந்த் சொன்னது) பிடிக்கலையா?

ஆனா என் கேசு கொஞ்சம் அதையும் தாண்டிப் போயிரிச்சி. எம்மதமும் சம்மதம் என்ற நிலை தாண்டி, எம்மதமும் சம்மதமில்லை என்று ஆகிப் போச்சு. ... முத்திப் போச்சு (நீங்க எதைப் போட்டும் fill up the blank பண்ணிக்கிறதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!!)

SurveySan said...

///கிறிஸ்மஸ் அப்டின்னா ராத்திரியோ காலங்கார்த்தாலேயோ ஒரு மணி நேரம் சர்ச். அப்புறம் வீட்ல எல்லாருமா ஒண்ணா இருக்கிறது; சந்தோஷமா கலகலன்னு இருக்கிறது; சாப்பிடறது -- இதுக்கெல்லாம் சாமி எதுக்கு?////

சாமி இருக்கரவங்க இருக்கர வரைக்கும்தான் இந்த மாதிரி 'இனிமையான' கிருஸ்த்மஸ் எல்லாம் இருக்கும்.

எல்லாருமே நாத்தீகனா இருந்தா, இப்படி எல்லாம் எதுக்காக கூடுவாங்கன்னூ நெனைக்கறீங்க?
தலைவர் பிறந்தநாளுக்கா?

சாமிதாங்க, எல்லாத்தியும் கட்டி இழுக்கர சக்தி ;)

தருமி said...

//சாமிதாங்க, எல்லாத்தியும் கட்டி இழுக்கர சக்தி ;)//

இல்லீங்க மங்கை .. டிசம்பர்ல கிறிஸ்துமஸ் கட்டி இழுத்துருது. ஆனா கோடை விடுமுறை ...? அப்போ என்ன பண்டிகை ...? ஆனாலும் அதுவும் கட்டி இழுக்குதே..

வோட்டாண்டி said...

//சாமிதாங்க, எல்லாத்தியும் கட்டி இழுக்கர சக்தி ;)//
புது வருடம் கொண்டாடுரப்ப எந்த கருமமும் இழுக்குறது இல்லை.
//எல்லாருமே நாத்தீகனா இருந்தா, இப்படி எல்லாம் எதுக்காக கூடுவாங்கன்னூ நெனைக்கறீங்க?
பண்டிகையே இல்லன்னு வைங்க தினம் தினம் கொண்டாட்டம் தான்..
வார கடைசி ஆனா சரக்கு தான்.. இப்ப தான் எனக்கு பிரச்சனையே.. இன்னக்கி வெள்ளி கிழமை கோழி தின்ன மாட்டேன்(கிழமைக்கும் கோழிக்கும் என்ன சம்பந்தம்!!) இன்னக்கி நான் விரதம் சரக்க அடிக்க மாட்டேனு சில பேர் எஸ்கேப்..

தருமி said...

வோட்டாண்டி,
சரக்கு பத்தியெல்லாம் பேசுறீக .. ம்ம்..ம்

தருமி said...

சர்வேசன்,மங்கை

ரெண்டுபேரும் மன்னிக்கணும். பெயரை மாத்திப் போட்டுட்டேன் முந்திய பின்னூட்டத்தில்.

வாசகன் said...

//சரியாங்க'ண்ணா .. தப்பா சொல்லிருந்தா சுட்டிக்காட்டுங்கண்ணா//

திரு.தருமி அவர்களே

உங்கட வயச உத்தேசிச்சி நான் ஒருதடவ அண்ணான்னு விளிச்சதுக்கு அதயே பலதடவ ரிப்பீட்டி காமடியாக்கிக்கிட்டீங்க.... சரி பரவால்ல.

///உங்க கொள்கையில் நீங்க உறுதியா இரிங்க, என்கொள்கையில் நான் உறுதியா இரிய்க்கேன், நம் நட்பும் ஸ்ட்ராங்கா இரிக்கட்டும்' னு சொல்லணும்கறது தான் சரி.//

இதுல என்ன தப்பிருக்கு, இத வெளக்கத்தான் அத்வானி-லல்லு உதாரணம் சொன்னேன். வூட்டுல நடக்கற கண்ணாலத்துக்கு கூப்டுக்கலாம், கட்சி செயற்குழுவுக்கு கூப்ட தேவயில்ல.

ராபின் சொல்வது போல மத நம்பிக்கையையும் தனிப்பட்ட நட்பையும் போட்டு கொழப்பிக்க வேண்டியதில்ல.


//கொள்கைய வளர்க்குறேன்னு உறவ முறிச்சிக்கிறாங்களே அவிங்கள பார்த்துப்புட்டு ...//

அவிங்கன்னா யாருங்கண்ணா? சொல்ல வந்ததை கொஞ்சம் தெளிவா சொல்லப்படாதா'ண்ணா .//

அவிங்கதான் எல்லா எடத்துலயும் நெறஞ்சிருக்காங்களே.. இது புரியலங்கறது தான் புரியல.

//கொள்கையற்றிருப்பதே என்கொள்கைன்னு இந்துமதம் கணக்கா எடுத்துவிடுறாரு.//

//இந்த sarcasm இங்க என் பதிவில தேவையா'ண்ணா? ////


இந்துமதக்காரவய்ங்க தான் நாத்திகரும் இந்து தேன்'னு சொல்லிட்டிருக்காய்ங்க இல்லியா, அதவெச்சு சொன்னேனுங்கண்ணா

///இந்துமதத்தைப் பத்தி உங்களுக்கு முழுசா தெரியுமாங்க'ண்ணா?///

எனக்குத் தெரியாது தான், உங்களுக்கு?

அதே மாதிரி மத்த மதத்த பத்தியும் கேட்டுக்கலாம் - பரஸ்பரம், இல்லீங்களா!

அரகுறையா தெரிஞ்சதால தான பதிவு பின்னூட்டம்னு எல்லாரும் பிலிமு ஓட்டினிக்கிறோம்,
முழுசா தெரிஞ்சிக்கிட்டோம்னு வைங்க, இந்த விவாதம், வீண்வாதம்லாம் வேஸ்ட்டுன்னு ஆயிறாது?:-))

Thekkikattan|தெகா said...

சர்வேயரே,

//சாமி இருக்கரவங்க இருக்கர வரைக்கும்தான் இந்த மாதிரி 'இனிமையான' கிருஸ்த்மஸ் எல்லாம் இருக்கும்.//

இங்க அமெரிக்காவில(நம்மூர்ல) க்ரிஸ்துமஸ் கொண்டாடுற அத்தனை பேரும் சர்ச்சுக்கு போறவங்கன்னு நீங்க நினைச்சிட்டு இருக்கீங்களா, அப்போ?

அப்படி நினைச்சிட்டு இருந்தா எண்ணத்தை மாத்தீக்கங்க. நிறைய பேருக்கு இட்ஸ் அனதர் ஹாலிடே, லைக் தாங்க்ஸ் கிவிங், ஹாலோவீன்... அவ்வளவே :).

என்னப் பொருத்த வரை பண்டிகை நாட்கள் என்றால் உறவு முறைகளுடனும், நண்பர்களுடனும் கூடி மகிழ்வதற்கான ஒரு நாள்... அதுவும் நம்மூர் மாதிரி காஞ்ச பய ஊரா இருந்தா அதுவும் முடியாது... :(.

தருமி said...

கொத்ஸ்,

அதே ..... !

தருமி said...

வாசகன்,

//கொள்கையற்றிருப்பதே என்கொள்கைன்னு இந்துமதம் கணக்கா எடுத்துவிடுறாரு.//
//இந்த sarcasm இங்க என் பதிவில தேவையா'ண்ணா? ////
இந்துமதக்காரவய்ங்க தான் நாத்திகரும் இந்து தேன்'னு சொல்லிட்டிருக்காய்ங்க இல்லியா, அதவெச்சு சொன்னேனுங்கண்ணா//

இதை வைத்துதான் நண்பரே ///இந்துமதத்தைப் பத்தி உங்களுக்கு முழுசா தெரியுமாங்க'ண்ணா?/// என்று கேட்டேன். அப்படி யாரு சொன்னாங்க? அப்படியே சொல்லியிருந்தாலும் அது தவறல்லவா. நான் நாத்திகன்தான். அதனால் நான் இந்துவாகி விடுகிறேனா? என்ன லாஜிக் இது?

இந்திய தத்துவங்களில் இறைமறுப்புக்கும் இடமுண்டுதான். கபில என்பவரின் தத்துவத்தை வைத்தே கெளதம புத்தர்கூட தன் கொள்கைகளை ஏற்படுத்தினார் எனவும், அந்த கபில மதங்கள் கற்பிக்கும் creation என்பதை மறுத்தவர்; அவருக்கு இந்து மதத்தில் இடமுண்டு என்பதும் உண்மையே. ஆஜீவகம் என்று ஒரு கருத்தும் இந்து மதத்தில் உண்டென்கிறார்கள். அது ஓரளவு agnostic கருத்து என்பதாக அறிகிறேன்.

பொதுவாகவே இறைமறுப்பு இந்து மதத்தில் பேசப்படும் ஒன்றுதான் என்பதாலேயே எல்லா இறைமறுப்பாளர்களும் இந்துக்கள் என்றீர்களே அதுதவறு.


//கொள்கையற்றிருப்பதே என்கொள்கைன்னு இந்துமதம் கணக்கா எடுத்துவிடுறாரு.//

நீங்கள் ஒரு மத நம்பிக்கையாளர். உங்கள் மதத்தைப் பற்றி சிறிது தீண்டினாலோ, சீண்டினாலோ எவ்வளவு கோபப்படுகிறீர்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு இன்னொரு மதத்தை மட்டமாகப் பேச என்ன உரிமையுள்ளது? அவரவருக்கு அவரவர் நம்பிக்கைகளும், கடவுளர்களும், வழிபாட்டு முறைகளும் சிறந்தவைகள்தானே. ஒருவேளை உங்களைப் போல் அவைகளை உயிருக்கும் மேலாய் அவர்கள் நினைக்காமல் இருக்கலாம்; ஆனாலும் அடுத்த மதத்தை இப்படி எள்ளுவது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவது போல்தான். தவறு. அதைச் சுட்டிக்காட்டியே அந்தப் பின்னூட்டம்.


//அரகுறையா தெரிஞ்சதால தான பதிவு பின்னூட்டம்னு எல்லாரும் பிலிமு ஓட்டினிக்கிறோம்//

நம் பதிவர்கள் parlance-ல் இதற்குப் பெயர் பொதுப்புத்தி என்று நினைக்கிறேன்.

வோட்டாண்டி said...

நம்ப ஹிந்து மத காரங்களுக்கு religious tolerance ரொம்ப கம்மி. நவராத்திரின்னு சொல்லி மெஸ்சுல கோழி கரிய நிறுத்திட்டாங்க. ஆஹா உனக்கு வேண்டாம்ன நீ கோழி தின்னாத.. அத உட்டுட்டு எவனுமே கோழி தின்ன கூடாதுன்னு சொன்ன என்ன அர்த்தம்னு கேட்டா அவங்க religious sentiments affect பண்ணுதாம். ஏன்டா கோழியும் முட்டையும் தின்னாம இங்க வயுறு affect ஆகி எரியுதேனு சொன்னா adjust பண்ணிக்கோன்னு சொல்றானுங்க. அட ரம்ஜான் அப்ப முஸ்லீம் எல்லாம் விரதம் இருப்பாங்க அப்பா மொத்தமா மெச்ச மூடி நீங்க adjust பண்ணுங்கடான்னு சொன்னா மோடிக்கும் அத்வானிகும் எவனோ போன் போடறான்..
அட இத உடுங்க.. இவனுங்க எல்லாருமே கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் leg piecekum liverukum பாயாகும் அடிதடில இறங்குனவங்க. திடீர்னு கோழி மேல பாசம் பிச்சிக்கிட்டு வந்துருச்சு. கோழிக்கு இன்னக்கி சாவு இல்ல நவராத்திரி முடிஞ்சா உடனே சாவு..என்னக்கி செத்தா என்ன?
ஆனா மாடோட பாலுல(ரத்தம் தான பாலு) boost,bournvita,horlicks சக்கரை எல்லாத்தையும் கலந்து குடிப்பாங்க.. இது என்னடா நியாயம்னு கேட்டா ஒரே பதில் "religion says". உங்க charactera கடைசி வரைக்கும் என்னால புரிஞ்சிக்கவே முடில.. இவனுங்கள திருத்த பெரியார் பட்ட சிரமங்களை நெனச்சி ஒரு நாள் அவர் சமாதி முன்னாடி பொய் நின்னு "OOOOOO"nu அழுது வரலாம்னு இருக்கேன்.

தருமி said...

//நவராத்திரின்னு சொல்லி மெஸ்சுல கோழி கரிய நிறுத்திட்டாங்க. //

ரொம்பத்தான் கோழி மேல் ஆசை போல ..

எதுக்கும் ரம்ஜானுக்கு ரியாத்தில ஹோட்டல் எல்லாம் பகல்ல திறந்திருக்குமான்னு கேட்டு சொல்லுங்க.

//ஒரு நாள் அவர் சமாதி முன்னாடி பொய் நின்னு "OOOOOO"nu அழுது வரலாம்னு இருக்கேன்.//

ரொம்பத்தான் சென்டியா ஆயிட்டீங்க. சரி,, அழுவுறதுன்னு முடிவெடுத்தாச்சு...அதை ஏன் இன்கிலிபீசுல 000-ன்னு அழுவுறீங்க ..? ஓஓஓஓஓன்னு தமிழ்ல அழுவுறது?

//ஒரே பதில் "religion says".//

இதுக்கு அப்பீல் ஏதும் இருக்கா என்ன? :(

Unknown said...

நமக்கு ஒரு விஷயம் புரிந்த பின்னால் தான் , அதை பற்றிய நம்பிக்கை அல்லது நம்மிக்கைஇன்மை ஏற்படும். நம்பிக்கை இன்மை ஏற்பட்ட பின் அதை பற்றி பேசுவதால் என்ன பலன் ?

அமிழ்தினி

Unknown said...

நாத்தீகம் என்பது நம்பிக்கையாளர்களை நக்கல் அடிப்பது இல்லை. நம்பிக்கைகளை கேள்வி கேட்பது - என்று ஒரு குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஏக்த்துவம் - திரித்துவம்- ஏகப்பட்டத்துவம் எல்லாமே ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்’ என்று உங்களின் ’எதுவுமில்லாத்துவம்’ கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அனைத்து மதங்களும் மூடநம்பிக்கைகளை கொண்டது என்று கூறுவது மதங்கள் பற்றிய அறியாமையையே காட்டுகிறது. உதரணமாக பிறப்பின் அடைப்படையில் உயர்வு-தாழ்வு பாராட்டும் ஒரு மதமும் - அதை முற்றிலும் எதிர்க்கும் மற்றொரு மதமும் ஒன்று என்று கூறுவது சரியா? எம் மதமும் சம்மதம் என்று எதுகை மோனைக்காக கூறிவிட்டு, எச்சாதியும் - என் சாதிக் கொப்பாகாது என்று நடைமுறையில் பேணப்படும் ஒரு மதமும் - சாதியத்தை அடியோடு எதிர்த்த மதமும் ஒன்றா? பாவிகளை இரட்சிப்பதாக சொனதை நம்பி மதம்மாறியவர்களெல்லாம் - தாய் மதத்திற்கு திரும்பும்போது - 1981ல் ‘ரஹமத் நகரான’ மீனாட்சிபுரம் இன்னும் ‘ரஹமத் நகராக’ இருப்பது ஏன்? பகுததாய்ந்து பதில் சொல்லுங்கள்.

உதாரணமாக, நாத்திக தந்தை பெரியார் - மதத்தில் காணப்படும் நக்கல் அடிக்கவேண்டிய விசயங்களை-மூடநம்பிக்கைகளை நக்கல் அடித்து, கேள்வி கேட்க வேண்டிய விசயங்களை தைரியமாக கேட்டு, உலக நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வை எந்த மதமாவது முன்மொழிந்திருந்தால் அதை உங்களைப் போன்ற நாத்திகர்களே எதிர்த்தாலும் - தயங்காமல் துணிவுடன் எடுத்துரைத்தார். சமூக சீர்திருத்தம், சட்ட திருத்தம் போன்றவைகளை செய்தும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை தாண்டவமாடுகிறது, அவைகளை ஒழிக்க - தீண்டாமையை மத உரிமையாக கருதிய உயர்சாதி சக்திகளை எதிர்த்து - அடக்கி வைக்க அவர் ஆயுதமாக கையிலெடுத்தது நீங்கள் பேசும் நாத்திகம் மட்டுமல்ல - ‘ஏகத்துவமும்தான்’.

உங்களைப்போல பொத்தாம் பொதுவாக எல்லா மதததையும் ஒரே மாதிரி அளவுகோள் கொண்டு அளக்காமல், மதங்களை பகுத்தறிவோடு ஆராய்ந்து-ஒப்பீடு செய்து தீயவைகளை சுட்டிக்காட்டி, நல்லவைகளை பிறருக்கு எடுத்து கூறினார் அதனால் தான் அனேக விஷயங்களில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் மேன்மையுடையது என்றார். சட்டமும்-சமூக சீர்திருத்தமும் ஒழிக்க முடியாத தீண்டாமையை இஸ்லாம் ஒழிக்கும் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு உறுதியோடு சிபாரிசு செய்தார்

பெரியார் ஒரு உண்மையான சிந்தனையாளர், அவரைப் போலவே, மத நம்பிக்கைகளை நேர்மையாக பகுத்தாய்ந்து கேள்வி கேளுங்கள்.
பதில் கிடைக்கும்.

தருமி said...

அமிழ்தினி,

//...பின் அதை பற்றி பேசுவதால் என்ன பலன் ?//

academic interest

தருமி said...

அல்லா பிச்சை,
//...உங்களின் ’எதுவுமில்லாத்துவம்’ கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. //

பரவாயில்லை. எல்லாத்தையும் எல்லாரும் ஏத்துகொள்ளணும் என்றெல்லாம் ஏதுமில்லை.

//அனைத்து மதங்களும் மூடநம்பிக்கைகளை கொண்டது என்று கூறுவது மதங்கள் பற்றிய அறியாமையையே காட்டுகிறது. //

அதாவது எல்லாமதங்கள் - இஸ்லாம் மதம் = மூடநம்பிக்கைகள் கொண்டது என்று கூறினால் இஸ்லாமியருக்கு உவப்பாயிருக்கலாம். இதே கணக்கு மற்ற மதத்தினருக்கும் இருக்கலாம். என் கணக்கு எல்லா மதத்திலும் நல்லவைகளும் இருப்பதுபோல் (மதங்களில் அப்படியும் சில இல்லாவிட்டால் என்னாவது ..?)மூடநம்பிக்கைகளும் உள்ளன என்பது என் கட்சி.

தருமி said...

அல்லா பிச்சை,

//பிறப்பின் அடைப்படையில் உயர்வு-தாழ்வு பாராட்டும் ஒரு மதமும் - அதை முற்றிலும் எதிர்க்கும் மற்றொரு மதமும் ஒன்று என்று கூறுவது சரியா? //

ஐயா, இஸ்லாமியர்கள் எல்லோரும் இந்த ஒரு பாய்ண்டை அடிக்கடி பேசுகிறீர்கள். ஷியா, சுன்னி வித்தியாசங்கள் அடிதடிகள், இன்னும் சில பிரிவுகள் இதையெல்லாம் மறந்து விடுவோம் இப்போதைக்கு.

இஸ்லாமில் நீங்கள் சொல்வதுபோல் சாதி வேற்றுமை இல்லாமல் இருப்பது ரொம்ப பெரிய விசயமாக எனக்குப் படுவதில்லை. காரணம் எந்த ஒரு மதமும் அது ஆரம்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கலாச்சாரத்தைத்தான் சார்ந்து இருக்கும். இங்கே சாதி வேற்றுமைகள் இருந்து இந்து மதம் வளர்ந்து, அல்லது இந்துமதம் வளர்ந்து சாதிகளையும் வளர்த்திருக்கலாம். எப்படியோ சாதி இங்கு ஒரு சமூகப் பிரச்சனை. இந்த மண்ணிற்கு உரியதாகப் போனது.

வெளியிலிருந்து வந்த ஒரு மதத்தில் அந்த வேறு பாடுகள் இல்லாமலிருப்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. அதைப் பார்த்து பெரியதாக அதிசயப்பட ஏதுமில்லை என்பதே என் கருத்து.

கிறித்துவத்தில் இந்த சாதிவேற்றுமைகள் இருக்கிறது. அதற்கு நான் காரணமாக நினைப்பது - மதம் பரப்ப வந்தவர்கள் ரொம்பவும் முன்பே இங்கே வந்த போது சாதியைத் தாண்டினால் தங்கள் மதத்தைப் பரப்ப முடியாது என்பதாலேயே அதைக் கண்டு கொள்ளாமலும் வளைந்து கொடுத்தும் சாதியை மதத்திற்குள்ளும் அனுமதித்துவிட்டார்கள். நீங்கள் சொல்வதுபோல் எங்கள் "நூலும்" சாதி வேற்றுமை பற்றியெல்லாம் பேசுவதில்லை என்றுவேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

இரண்டு ஆபிரஹாமிய மதங்கள் இந்த மண்ணுக்கு வந்த காலவேற்றுமையே ஒன்று சாதியோடு புதைந்து கிடப்பதும், மற்றொன்று சாதியிலிருந்து விலகி நிற்பதற்கான காரணங்கள்.

தருமி said...

அல்லா பிச்சை,

பெரியாரை இந்த அளவு புகழ்ந்தேற்றுவது எனக்கும் சந்தோஷமே!

ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அவர் ஒரேயடியாக இஸ்லாம் பக்கம் சாய்ந்து நின்றதாக எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இப்போது அதைத் தேடி எடுக்க முடியாது. பெரியாரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் உதவினால் நல்லது.

Unknown said...

அல்லா பிச்சை,

பெரியாரை இந்த அளவு புகழ்ந்தேற்றுவது எனக்கும் சந்தோஷமே!

ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அவர் ஒரேயடியாக இஸ்லாம் பக்கம் சாய்ந்து நின்றதாக எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இப்போது அதைத் தேடி எடுக்க முடியாது. பெரியாரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் உதவினால் நல்லது.

அய்யா தருமி,
இணையத்தில் நிரம்பிக்கிடக்கும் தந்தை பெரியாரின் கருத்துக்களையே தேட இயலாத உங்களால் - இஸ்லாம் பற்றி ’பொத்தாம் பொதுவான’ கருத்தைத்தான் தர இயலும்.

நீங்கள் தேடும் கட்டுரைகள் இதுவா?

http://www.keetru.com/rebel/periyar/12.php

http://www.keetru.com/rebel/periyar/10.php


அல்லா பிச்சை,

பெரியாரை இந்த அளவு புகழ்ந்தேற்றுவது எனக்கும் சந்தோஷமே!

ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அவர் ஒரேயடியாக இஸ்லாம் பக்கம் சாய்ந்து நின்றதாக எனக்குத் தெரியவில்லை. - தருமி

அய்யா தருமி,
நான் பெரியார் ஒரேயடியாக இஸ்லாம் பக்கம் சாய்ந்து நின்றதாக பின்னூட்டத்தில் குறிப்பிடவேயில்லை. உங்களைப் போல ஒரேயடியாக ’சாடி’ நிற்கவில்லை என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்..மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்..

Unknown said...

ஐயா, இஸ்லாமியர்கள் எல்லோரும் இந்த ஒரு பாய்ண்டை அடிக்கடி பேசுகிறீர்கள். - தருமி

இந்தியாவில் புரையோடி - பெரும்பான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கிய சாதியம், பகுத்தறிவாதியான உங்களுக்கு ‘ஒரு’ பாய்ண்ட்டாக மட்டும் தெரிவது, மலைப்பை தருகிறது.


ஷியா, சுன்னி வித்தியாசங்கள் அடிதடிகள், இன்னும் சில பிரிவுகள் இதையெல்லாம் மறந்து விடுவோம் இப்போதைக்கு.- தருமி

இந்த ’வித்தியசங்களை’ பற்றி உங்களின் மேலதிக புரிதலுக்கு ’சுட்டிகள்’ தேவையென்றால் தயங்காமல் சொல்லுங்கள்.
நேரம் கிடைக்கும்போது தருகிறேன்.

வெளியிலிருந்து வந்த ஒரு மதத்தில் அந்த வேறு பாடுகள் இல்லாமலிருப்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. அதைப் பார்த்து பெரியதாக அதிசயப்பட ஏதுமில்லை என்பதே என் கருத்து. - தருமி

அய்யா தருமி,
மதம் மட்டும்தானே வெளியிலிருந்து வந்தது - மாறிய மக்களெல்லாம் வெளியிலிருந்து வரவில்லையே? ‘மண்ணின் மைந்தர்களான’ நம்மவர்கள்தானே அவர்கள். ’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்களே - அந்த ’சாதிப்பழக்கம்’ ஏன் ‘தொப்பி’ போட்டதும் தொடரவில்லை..?

தருமி said...

அல்லா பிச்சை,
மிக்க நன்றி அய்யா .. இப்படி தடாரென்று எடுத்துத் தந்துவிட்டீர்களே!
முதல் பாராவே ரொம்ப நல்லா இருக்குதய்யா ..
//இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.//

Unknown said...

கிறித்துவத்தில் இந்த சாதிவேற்றுமைகள் இருக்கிறது. அதற்கு நான் காரணமாக நினைப்பது - மதம் பரப்ப வந்தவர்கள் ரொம்பவும் முன்பே இங்கே வந்த போது சாதியைத் தாண்டினால் தங்கள் மதத்தைப் பரப்ப முடியாது என்பதாலேயே அதைக் கண்டு கொள்ளாமலும் வளைந்து கொடுத்தும் சாதியை மதத்திற்குள்ளும் அனுமதித்துவிட்டார்கள் - தருமி

கிறித்துவம் இங்கு வருவதற்கு முன்பே - இஸ்லாம் வந்துவிட்டது என்றே நிணைக்கிறேன், அவ்வாறு வந்தும் நீங்கள் சொல்கிற மாதிரி ‘கண்டு கொள்ளாமலும் வளைந்து கொடுத்தும் சாதியை மதத்திற்குள்ளும் அனுமதித்து’ மதம் பரப்பாமல் அதை எதிர்த்து இஸ்லாம் எப்படி வளர்ந்தது.. (வாளால் என்று கூறி - இந்த உரையாடலை ‘கத்தரித்து’ விடாதீர்கள்)

Unknown said...

அல்லா பிச்சை,
மிக்க நன்றி அய்யா .. இப்படி தடாரென்று எடுத்துத் தந்துவிட்டீர்களே!
முதல் பாராவே ரொம்ப நல்லா இருக்குதய்யா ..தருமி

அய்யா, தயவு செய்து ‘நுனிப்புல்’ மேயாதீர்கள் - அடுத்தடுத்த பத்திகளையும் படியுங்கள்.

தருமி said...

//இஸ்லாம் பற்றி ’பொத்தாம் பொதுவான’ கருத்தைத்தான் தர இயலும்.//

அப்படியா சொல்கிறீர்கள்? இல்லையென்றே நினைக்கிறேன். பாருங்களேன் நானும் pointed கேள்விகளாகத்தான் சில வைத்தேன். முதல் நாலைந்து கேள்விகளுக்குப் பதில்கள் தரப்பட்டன... அதன்பின் என் கேள்விகள் இன்னும் அனாதைகளாகத்தான் நிற்கின்றன. அதோடு இன்னொரு கேள்வியும் கூட: எல்லாவற்றையும் பற்றிச் சொல்லியுள்ளதாக நீங்கள் சொல்லும் உங்கள் குரானில் //குரானில் திருநங்கைகளைப் பற்றிய தகவல் ஏதுமுண்டா?
கடவுளே எல்லாவற்றையும் படைத்து அருள் பாலிப்பவன் என்றால் திருநங்கைகளை இவ்வாறாகப் படைத்தது யார்? ஏன்? கடவுளின் படைப்பின் குறைபாடுதான் காரணமா?
// என்றும் கேட்டிருந்தேனே..

மோஸேயிலிருந்து வந்த ஒவ்வொரு நபியின் சட்ட திட்டங்களும் கடவுளிடமிருந்து - அல்லாவிடமிருந்து - வந்திருந்தும் முகமதுவின் குரானைத் தவிர மற்றவைகள் ஏன் திருத்தப்படவும், குறைக்கப்படவும், மாற்றப் படவும் உள்ளாயின...?

ஈசா கொடுத்த வார்த்தைகள்: கொலை செய்யாதே
முகமது: கொலைக்கு எதிராகவும், குழப்பத்தை உண்டுபண்ணுபவர்களுக்கு எதிராகவும் தவிர கொலை செய்யாதே.

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, இறுதி ஏற்பாடு (குரான) இவைகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள்- மனிதக் கரங்கள் திருத்தாதயையும் சேர்த்து ...

இப்படிப் பல பல கேள்விகள்; அவைகள் எல்லாமுமேவா "பொத்தாம் பொதுவான கேள்விகள்" என்கிறீர்கள்??

Unknown said...

வெளியிலிருந்து வந்த ஒரு மதத்தில் அந்த (சாதி) வேறு பாடுகள் இல்லாமலிருப்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. அதைப் பார்த்து பெரியதாக அதிசயப்பட ஏதுமில்லை என்பதே என் கருத்து - தருமி

அய்யா, வெளியிலிருந்து வந்த ’மற்ற’ மதத்தால் சாதி பிரச்சினையை கண்டுகொள்ளாமல், வளைந்தும், நெளிந்தும், படுத்தும் தங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு - நம்பி வந்தவர்களை நடு ஆற்றில் விட்டபோது, இஸ்லாம் சாதித்து கட்டியது - உங்களுக்கு அதிசயமாக தெரியாதது எனக்கு ஆச்சரியமாக தெரிகிறது.

அரசியல் சட்டம், சமூக சீர்திருத்தம் சாதிக்க முடியாத ‘சாதி’ ஒழிப்பை - இஸ்லாம் ஒழித்து கட்டியது - உங்களுக்கு அதிசயமாக தெரியாதது எனக்கு ஆச்சரியமாக தெரிகிறது.

Unknown said...

தருமி அய்யா,
என்னுடைய பின்னூட்டத்தில் ‘
அய்யா, தயவு செய்து ‘நுனிப்புல்’ மேயாதீர்கள் - அடுத்தடுத்த பத்திகளையும் படியுங்கள். என்ற வாகிகியங்களின் ஒரு திருத்தம் - ‘நுனிப்புல்’ மேயாதீர்கள்’ என்ற வார்த்தைகளை தயவு செய்து நீக்கிவிடுங்கள்.

’தயவு செய்து அடுத்தடுத்த பத்திகளையும் படியுங்கள்’ என்று வாசித்துக் கொள்ளுங்கள்.

தவறான வார்த்தை உபயோகத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்..PLEASE..

அருண்மொழி said...

நல்ல கட்டுரை. ஆனால் இதை சொல்லி என்ன பயன். இப்போது இருக்கும் நிலையில் யாரும் திருந்தபோவது இல்லை. நாயகன் பட வசனம் போல் "அவனை நிறுத்து சொல். நான் நிறுத்துகிறேன்" என்று பேச ஆரம்பித்து விடுவர்.

மத ஒப்புமை, சகிப்புதன்மை என்பது தமிழகத்தில் நிறைய இருந்தது. ஆனால் இந்துத்துவ வியாதிகள் பெருகிய பின் படிப்படியாக குறைந்து வருகின்றது. எனக்கு ஏற்பட்ட ஒரு உதாரணம். நான் ஒரு atheist.என் நண்பர்களிள் பலர் பக்தி சிங்கங்கள். ஒரு சிலர் கிறிஸ்துவர்கள், ஒருவர் முஸ்லிம். எங்கள் ஊர் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்று cricket விளையாடிய காலம் ஒன்று உண்டு. நண்பரின் தந்தை உபயதில் தூக்கு சட்டி வழிய பிரசாதம் வாங்கி சாப்பிடுவோம். தீடீர் என்று ஒரு நாள் சிலர் (எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர்கள்தான்) எங்களிடம் வந்து நீங்கள் வந்து விளையாடுங்கள் ஆனால் அவர்கள் வந்து இங்கே விளையாட கூடாது என்று வசனம் பேசினர். காரணம் இது இந்து கோவில் பிற மதத்தினர் இங்கே வரக்கூடாது. பிறகு பெரும் தகராறு மூண்டது. முடிவில் யாருமே அங்கு விளையாட செல்வது இல்லை.

பெரியாரை பற்றி இங்கே சில பின்னூட்டங்கள். எனக்கு தெரிந்த வரையில் பெரியார் மனிதர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று நினைத்தார். ஒருவன் தாழ்ந்தவன். ஒருவன் உயர்ந்தவன் என்று சொல்லப்படுவதை தீவிரமாக கண்டித்தார். இந்த ஏற்றத்தாழ்விற்கு காரணம் இந்து மதம், புராணம், வேதம் என்பதால் அதை எதிர்த்தார். அதை தாங்கி பிடித்த பாப்பான்களை எதிர்த்தார். ஆனால் பலர் இந்த மூல காரணத்தை வசதியாக மறைத்து விட்டு பெரியார் சாமி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் என்று கூட்டாடு போடுகின்றனர். பெரியார் கடவுள் இல்லை என்பதோடு நிறுத்தவில்லை. "கடவுளை மற; மனிதனை நினை" என்றார்.

"நமக்கும் கடவுளை பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேன்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அனேக தடவைகளில் வெளியிடு இருக்கிறோம். அதுவும், பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டு வந்து குறுக்கே போட்டு விட்டதால்தான் நாம் அதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய, உண்மையில் கடவுளையும் மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவே இல்லை." - பெரியார் (குடிஅரசு 1949).

தருமி said...

/அய்யா, தயவு செய்து ‘நுனிப்புல்’ மேயாதீர்கள் - அடுத்தடுத்த பத்திகளையும் படியுங்கள்.//

படித்தேனய்யா. நீங்கள் தந்ததில் முதல் லின்க் முழுமையும் இதே கருத்துதான் அப்பதிவு முழுதும். மீதியையும் கட்டாயம் வாசிப்பேன்.

ஆனாலும் முதல் பாராவின் இந்த ஒரு கருத்தில் நீங்கள் சொல்லிய வாதம் உடைகிறது.

அதோடு, சாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும்; ஆகவே அந்த / இந்த மதத்திற்கு வாருங்கள் என்றழைப்பதோ, சொல்வதோ எனக்கு ஏற்புடைத்ததல்ல. சட்டை தருகிறேன்; கல்வி தருகிறேன். என் மதத்திற்கு வாருங்கள் என்று சொல்வது எந்த அளவு தவறோ அதே அளவு இதுவும் தவறு. எங்க சாமி நல்ல சாமி; வந்திரு அப்டின்னாலாவது பரவாயில்லை. அதைவிட்டு விட்டு சாதி ஒழியும் என்பதோ, உனக்குக் கல்வி தருகிறேன் என்பதோ சரியல்ல - என்னைப் பொறுத்தவரை.

இன்னொன்றும் உதாரணமாக பாருங்களேன். உங்கள் மதத்தில் நான் நினைக்கும் ஒரு பிரச்சனை - உள்ளே நுழைந்த ஒருவருக்கு அதற்குப் பின் அது பிடிக்காமல் போனால் (எல்லா மதங்களிலும் நடக்கக்கூடியதுதான் இது) வெளியே வரவே முடியாது; வரவும் கூடாது என்பதே ஒரு வன்முறைதானே.

தருமி said...

மன்னிக்கணும் அல்லாபிச்சை ..

//‘நுனிப்புல்’ மேயாதீர்கள்’ என்ற வார்த்தைகளை தயவு செய்து நீக்கிவிடுங்கள். // இதை வாசிப்பதற்கு முன்பே அதை ஏற்றி விட்டேன்.

ஆனாலும் இதிலென்ன தவறு? நுனிப்புல் ஓர் உவமையாகச் சொல்லப்பட்டது; அதைத் தொடர்ந்து "மேயாதீர்கள்" என்று சொல்வது முற்றிலும் சரிதானே; அதுவும் ஒரு உவமை. சரிதானே? (இந்த உவமை, உவமேயம் இந்த இரண்டும் அந்தக் காலத்திலேயே தகராறு !!)

நிச்சயமாக அதில் தவறில்லை; நானும் வாசித்தபோது அப்படியேதும் உணரவில்லை.

விடுங்க, பாய்! :-)

தருமி said...

அருண்மொழி,
மிக்க நன்றி ஒரு நல்ல பின்னூட்டமிட்டமைக்கு.

//மத ஒப்புமை, சகிப்புதன்மை என்பது தமிழகத்தில் நிறைய இருந்தது. ஆனால் இந்துத்துவ வியாதிகள் பெருகிய பின் படிப்படியாக குறைந்து வருகின்றது. //

மிகவும் சரி. அதிலும் எது இந்து மதம்; யார் யார் இந்துக்கள் என்ற கேள்வியும், எந்த இந்துக்கள் எந்த இந்துக்களை வளைத்துப் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதும் மார்க்ஸ் சொல்லும் exploitation என்ற பொருளியல் தத்துவம்தான் நினைவுக்கு வருகிறது.

என்னைப் பொருத்தவரை பெரும்பான்மை "இந்துக்கள்" ப்ராமணீய இந்துவத்திலிருந்து விலகி நிற்பவர்களே. என் பதிவில் நான் முன்பே ஒருமுறை சொல்லியுள்ளேன்: கிராமங்களில் இருக்கும் என் இந்து உறவினர்கள் வீட்டில் இந்துக் கடவுளர்களின் படங்கள் இருப்பதேயில்லை. ஒருவேளை இருந்தால் முருகன் -தமிழ்க்கடவுள் - படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். மற்ற சாமிகள் அவர்களுக்குத் தெரியாதோ .. இல்லை, முக்கியமில்லையோ. அந்தப் படங்களைப் பார்த்ததில்லை இன்றுவரை,. இவர்களையும் கர்சேவாக்களாக ஆக்குவது நம் எல்லோருக்கும், நாட்டுக்கும் நல்லதேயில்லை; ஆனால் அதுதான் நடந்தேறுகிறது.

தருமி said...

//கடவுளை மற; மனிதனை நினை"//

மிக பிடித்த வார்த்தைகள்; பெரியார் கொள்கைகளின் சாராம்சமே இதுதான்.

Unknown said...

விடுங்க, பாய்! :-) தருமி

தருமி அய்யா, புரிதலுக்கு மிக்க நன்றி :))


இன்னொன்றும் உதாரணமாக பாருங்களேன். உங்கள் மதத்தில் நான் நினைக்கும் ஒரு பிரச்சனை - உள்ளே நுழைந்த ஒருவருக்கு அதற்குப் பின் அது பிடிக்காமல் போனால் (எல்லா மதங்களிலும் நடக்கக்கூடியதுதான் இது) வெளியே வரவே முடியாது; வரவும் கூடாது என்பதே ஒரு வன்முறைதானே. - தருமி

தமிழக பிரபலங்கள் குஷ்பூ மற்றும் நக்மா வந்திருக்கிறார்களே :))
அப்படி எதுவும் மதக்கட்டுப்பாடுகள் இல்லை அய்யா.(இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்)

தருமி said...

அல்லா பிச்சை,

"துணிந்து" வெளியே வருபவர்களைப் பற்றிச் சொல்லவில்லை. அதை உங்கள் மதம் அனுமதிக்கிறதில்லையல்லவா அதைச் சொல்கிறேன்.

வோட்டாண்டி said...

இஸ்லாமில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்த படுவதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

தருமி said...

//உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.//

//நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.//

//அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும்.//

//மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.//


//பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா?//

அல்லா பிச்சை,

இந்த மேற்கோள்கள் - நீங்கள் கொடுத்த பதிவுகளில் இஸ்லாமியத்தின் சமுக நீதி பற்றிப் பேசியுள்ளாரே ஒழிய எங்காவது இஸ்லாம் உண்மையான மதம் ஆகவே அங்க போங்கள் / வாருங்கள் என்று ஏதேனும் சொல்லியுள்ளாரா?

சமூக நிதிக்காக அந்த மதத்திற்குச் செல்லுங்கள் (அவருக்கு அந்த மாற்றம் தேவையில்லை) என்றாரேயொழிய மதத்தின் மேன்மை கருதி சொல்லவில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளதே (மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை;)

தருமி said...

//உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.//

//நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.//

//அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும்.//

//மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.//


//பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா?//

அல்லா பிச்சை,

இந்த மேற்கோள்கள் - நீங்கள் கொடுத்த பதிவுகளில் இஸ்லாமியத்தின் சமுக நீதி பற்றிப் பேசியுள்ளாரே ஒழிய எங்காவது இஸ்லாம் உண்மையான மதம் ஆகவே அங்க போங்கள் / வாருங்கள் என்று ஏதேனும் சொல்லியுள்ளாரா?

சமூக நிதிக்காக அந்த மதத்திற்குச் செல்லுங்கள் (அவருக்கு அந்த மாற்றம் தேவையில்லை) என்றாரேயொழிய மதத்தின் மேன்மை கருதி சொல்லவில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளதே (மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை;)

தருமி said...

ஹலோ ... ஹலோ...
மைக் டெஸ்ட்டிங் .. மைக் டெஸ்ட்டிங் ..
ஒண், டூ, த்ரீ... ஒண், டூ, த்ரீ...
மைக் டெஸ்ட்டிங் ..

*** *** இந்தக் கூட்டத்தில் இருந்தால் தயவு செய்து மேடைக்கு வரவும்..

Unknown said...

வந்துட்டேன்யா..வந்துட்டேன்..

மைக்க போட்ட நீங்க அல்லாபிச்சை எங்க போனீங்கன்னு குரல் கொடுத்திருக்கலமே? அத விட்டுட்டு தமிழ் பட கதாநாயகன் மாதிரி ‘யாராவது இந்தக்கூட்டத்தில் இருக்கிறீங்களான்னு’ அவசரப்பட்டு ’சவுண்ட்’ வுட்டுட்டீங்களே.

இந்த மேற்கோள்கள் - நீங்கள் கொடுத்த பதிவுகளில் இஸ்லாமியத்தின் சமுக நீதி பற்றிப் பேசியுள்ளாரே ஒழிய எங்காவது இஸ்லாம் உண்மையான மதம் ஆகவே அங்க போங்கள் / வாருங்கள் என்று ஏதேனும் சொல்லியுள்ளாரா?
-தருமி

சமூக நிதிக்காக அந்த மதத்திற்குச் செல்லுங்கள் (அவருக்கு அந்த மாற்றம் தேவையில்லை) என்றாரேயொழிய மதத்தின் மேன்மை கருதி சொல்லவில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளதே (மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை;) -தருமி

அய்யா தருமி,
சமூக நீதியை அடிப்படையாக கொண்ட மதம், சமூக நீதியை அடியோடு எதிர்க்கும் மதம், வலியுறுத்தப்பட்ட சமூக நீதியைக் கூட ’வலிந்து’ கூறாது, நீங்க சொன்ன மாதிரி, நெளிந்து-குனிந்து நீக்கு-போக்காக நடந்துகொண்ட மதம். இவற்றை ஒரே தட்டில் வைத்து மதிப்பிடாதீர்கள் - தந்தைப் பெரியார் அவ்வாறு செய்யவில்லை என்பதுதான் என் வாதத்தின் மையக்கருத்து.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடிப்படைக் காரணங்களில் மிக முக்கிய்மானது, மூட நம்பிக்கைகளை வளர்த்து, பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பித்து, ‘சமூக நீதி’க்கு சமாதி கட்ட ’மதங்கள்’ உறுதுனையாக இருக்கிறது என்பதுவும் தான்.

மனிதன் வாழ பகுத்தறிவு மட்டும் போதும் என்றிருந்தால் பெரியாரும் அவரின் தொண்டர்களும் - சமூக நீதி - சாதி ஒழிப்புப் பற்றி பேச - இன்னமும் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமென்ன?.

மதத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்ட சமூக நீதி ‘மறுப்பேதுமின்றி’ ஏற்றுக் கொள்ள்ப்பட்ட போது - அதை எதிர்க்க அவரின் அறிதலுக்குட்பட்ட எந்த ’ஆயுதமும்’ உதவாத போது ’இஸ்லாம்’ என்ற மார்க்கம் மட்டுமே பயன்பட்டது என்று தந்தை பெரியாரே கூறி-பதிவு செய்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

பெரியாரின் கனவை ‘ நிறைவேற்றி யதாக’ கூறி ’சமூக நீதி காத்த ‘வீரர்’ - ’வீராங்கனை’ என்று அவார்டு (award) அளித்து ஆனந்தப்படுகிற நீங்கள், சாதி ஒழிக்க - சமூக நீதி வலியுறுத்த, பெரியாரின் கையில் ’sword’ ஆக ‘இஸ்லாம்’ இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்?.

’அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் ************ இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.’ என்று பெரியார் சொல்லியிருக்கிறாரே அதை படித்தீர்களா?

நாம் இருவரும் உரையாடும் இந்த வினாடி வரை - சமூக நீதிக்கான போராட்டம் தொடர்ந்து வரும்போது - பல நூற்றண்டுகளுக்கு முன்பே சமூக நீதியை இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தியதற்காக, ‘பகுத்தறிவு’ போற்றும் ’தருமி அய்யா’ பரந்த மனப்பானமை துறந்து, உளப்பூர்வமாகவும் - உணர்வு புர்வமாகவும் இல்லா விட்டாலும் ‘சடங்குக்காக வேனும்’ ஒரே ஒரு பாராட்டு வார்த்தை கூறமுடியாத ’கருமி அய்யா’வாக இருப்பது ஏன்?

பகுத்தறிவு போற்றினால் மட்டும் பகுத்தறிவுவாதியாகிவிட முடியாது, ’போற்றுவது போற்றி தூற்றுவதும் தூற்றும்’ துணிவு மனப்பான்மை வேண்டும் - அய்யாவுக்கு இருந்தது போல..

மோட்சம் அடைவதற்காக என்று ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவ பெரியார் சொல்லவில்லை - அவர் அவ்வாறு சொன்னதாக நானும் கூறவில்லை.
ஆனால் மனிதக்கழிவுகளாக கருதப்பட்ட தீண்டத்தகாதவர்கள் மானமுள்ள ‘மனிதனாக’ வாழ வேண்டுமானால் - இஸ்லாத்திற்குத்தான் போக வேண்டும் என்று பெரியாரால் வலியுறுத்த இஸ்லாமிய கோட்பாடுகள் காரணமாக இருந்ததை - மறந்துவிடாதீர்கள், என்று சுட்டியிருக்கிறேன்.

இஸ்லாம் உண்மையான மதம் ஆகவே அங்க போங்கள் / வாருங்கள் என்று பெரியார் சொல்லியிருக்கிறாரா என்று கேட்டிருந்தீர்கள். ’ஆதித் திராவிடர்களை அவர், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் அவர் மீது கோபித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் ’ஒருவேளை’ சொல்லியிருக்கலாமோ..என்னவோ....
அவ்வாறு சொல்லாமல் விட்டதுதான் மிகவும் சரியாகப்படுகிறது எனக்கு, அதனால்தானே மத வியாபாரிகளுக்கும் -ஆதிக்கச் சக்திகளுக்கும் - மனித நேய எதிரிகளுக்கு இன்றும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்..

அய்யா தருமி, சமூக நீதியை அடிப்படையாக கொண்ட மதம், சமூக நீதியை அடியோடு எதிர்க்கும் மதம், வலியுறுத்தப்பட்ட சமூக நீதியைக் கூட ’வலிந்து’கூறாது, நீங்க சொன்ன மாதிரி, நெளிந்து-குனிந்து நீக்கு-போக்காக நடந்துகொண்ட மதம். இவற்றை ஒரே தட்டில் வைத்து மதிப்பிடாதீர்கள் - தந்தைப் பெரியார் அவ்வாறு செய்யவில்லை என்பதுதான் என் வாதத்தின் மையக்கருத்து.

(அய்யா, பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு என்ற தமிழனின் தலையெழுத்துக்கு நானும் விதிவிலக்கல்ல..அதனால் பனியின் நிமித்தமாக நாடோடிய நான் - தற்போது ‘தீவோட’(தீவுக்கு ஓட) ஆயத்தம் செய்வதால் - தஙகளுடனான உரையாடலில் கவனம் செலுத்த சிறிது தாமதிக்கலாம்..அதனால், ஆளக்கானோமே அப்படின்னு அவசரப்பட்டு மைக் செட்டு, சோடாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்துவிடாதீர்கள்)

Unknown said...

அய்யா,
தங்களின் பிற வினாக்களுக்கு வருகிற ஞாயிறன்று (12/10/08) விடையளிக்கிறேன்..

தோழமையுடன்

Muthu said...

ஆரம்பிச்சுட்டீங்களாய்யா? ..நடத்துங்க நடத்துங்க ( சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்)

தருமி said...

//முத்து தமிழினி said...
ஆரம்பிச்சுட்டீங்களாய்யா? ..நடத்துங்க நடத்துங்க ( சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும்)//

நிப்பாட்டியிருந்தாதானய்யா இப்போ ஆரம்பிக்கிறதுக்கு .. ? அது அதுபாட்ல போய்ட்டு இருக்கு .. இப்போகூட வெய்ட்டிங்தான் :-(

thiru said...

ஓரமா நின்று நானும் கேட்டுக்கிறேன்! :)

தருமி said...

திரு,
//திரு said...
ஓரமா நின்று நானும் கேட்டுக்கிறேன்! :)//

அட எதுக்கு திரு, சும்மா 'நடு சென்டர்ல' நின்னு கேட்டுக்க வேண்டியதுதானே!

ராஜ நடராஜன் said...

தருமி ஐயா! வணக்கம்.அழகான பதிவு. இன்னொரு பெரியார் கண்முன்னே நிற்கிற மாதிரி தெரியுது.சாருக்கான் இப்படித்தான் இரண்டு பண்டிகையும் கொண்டாடுறார்ன்னு எங்கோ அவர் பேட்டியில் கேட்டதாக ஞாபகம்.

வல்லிசிம்ஹன் said...

//ஆனால் என்னைப் பொறுத்தவரை மதம் ஒரு தனிமனித ஒழுக்கத்துக்கானது; ஒரு பெர்சனலான காரியம். அதை நீங்கள் அறிவிக்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனைகள். அதற்கான வரலாற்று உதாரணங்கள்: சிலுவை யுத்தங்கள், early roman and other later pogroms, இன்றும் செர்பியா, ireland போன்ற நாடுகளில் நடந்த, நடக்கும், நடக்கப் போகின்ற யுத்தங்கள்.
இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் நடுவே நடக்கும் யுத்தத்திற்கு எண்ணெய் மட்டும்தானா காரணம் - மத துவேஷம்//

அருமையாக எழுதி இருக்கிறீர்கள் தருமி.
தெளிந்த சிந்தனையோடு மதங்களை அணுகலாம். மனிதர்களை நேசிக்கலாம்.

நன்றி.

தருமி said...

ராஜ நடராஜன்,

//இரண்டு பண்டிகையும் கொண்டாடுறார்ன்னு எங்கோ அவர் பேட்டியில் கேட்டதாக ஞாபகம்.//

அந்த பேட்டியும் அதைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களுக்காகவும்தான் இப்பதிவு இடப்பட்டது.

தருமி said...

நன்றி வல்லி சிம்ஹன்.

Post a Comment