*
வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 – 10 என்பதற்குப் பதிலாக 9 – 10.45 என்று நீண்டாலும் தொடர்ந்து பார்க்க என்னை இறுத்தியது. மிக நன்றாக இருந்த ஒரு நிகழ்ச்சி.
கல்விக் கடனுக்கு அலைந்த மாணவர்கள் ஒரு புறம்; கல்விக்கடன் தரும் வங்கி அதிகாரிகள் என்று ஒரு புறம். நான் முதல் இருபது நிமிடங்கள் பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் மாணவர்கள் தங்கள் சோகங்களைக் கொட்டித் தீர்த்திருப்பார்கள் போலும். மாணவர்கள் என்ன பேசினார்களோ தெரியவில்லை; ஆனால் நான் பார்க்கும்போது பேசிய வங்கி அதிகாரிகள் யாரும் உருப்படியாகப் பேசியதாகத் தெரியவில்லை.
மிக ஏழைக்குடும்பத்து மாணவி தன் பொறியியல் படிப்புக்குக் கடன் கிடைக்காத சோகத்தைச் சொல்லும்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். தனக்கு கடன் கிடைக்காததைப் பற்றிப் பேசும்போது ஒரு வங்கி அதிகாரி சட்டென்று, நாளைக்கே இந்த பெண்ணுக்குக் கடன் தருகிறேன் என்று சொன்ன பிறகு, அந்தக் குழந்தை அழுது பேசியது மனதைத் தொட்டது. நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் அந்த வங்கி அதிகாரிக்கு ஒரு தொலைப்பெட்டி பரிசளித்த போது நிச்சயமாக அவர் அந்த தொலைப்பெட்டியைக்கூட அந்த பெண்ணுக்கே கொடுத்து விடுவார் என்று நினைத்தேன். மனுஷன் அதையும் தாண்டி விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை தன் வங்கி மூலம் ஏதாவது ஒரு அநாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பிற்கு கொடுக்கப் போவதாகக் கூறினார். நன்றாக இருந்தது. அந்த அதிகாரிக்கு என் வணக்கங்கள்.
அதேபோல் பாலுமகேந்திரா என்ற மாணவனுக்கும் 4 லட்ச ரூபாய் கடன் தொகையை அனுமதித்தார் இன்னொரு வங்கி அதிகார். ஒரு break முடிந்து வந்ததும் கோபிநாத் அந்த மாணவன் ஏதோ சொல்ல விரும்புவதாகக் கூறி அழைத்தார். அந்த மாணவன் தான் கடனுக்காக அலைந்து கிடைக்காமல் போனதால் இவ்வருட படிப்பு படிக்க முடியாது போயிற்று. அந்தக் கடனை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு ஏழை மாணவனுக்கு அவர் பரிந்துரைக்க வங்கி அதிகாரி அந்தப் புதிய மாணவனுக்குக் கடனைத் தர சம்மதித்தார். தனக்கு வந்த கடனை அடுத்த மாணவனுக்கு – அந்த மாணவனை இந்த நிகழ்ச்சியில்தான் முதலில் சந்தித்துள்ளான்; break சமயத்தில் வேறு எந்த ஏழை மாணவனுக்கு உதவி தேவை என்று கேட்டறிந்து, அதன்பின் தனக்குக் கிடைத்ததை அடுத்த மாணவனுக்குத் தந்த அந்த மாணவன் … simply great!
He humbled me.
முக்கிய விருந்தாளியாக வந்ததில் மாணவர்கள் தரப்பில் பேசிய ஒரு வழக்குரைஞர் பேசியது கொஞ்சமேயாயினும் மிகத் தெளிவாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவர் கருத்துக்கு வங்கி அதிகாரிகளோ மற்ற விருந்தினரோ பதில் கொடுக்க முடியாதபடி தன் கருத்தைத் தந்த அந்தப் பெண்மணியும் பாராட்டப் பட வேண்டியவரே.
கோபிநாத் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளில் பல எனக்குப் பிடிக்கும். இன்று கோபிநாத் was on the top! Hats off to him. Emotional ஆன விஷயங்களை மிக ஆழமாக மனதில் பதியும்படி பேசி இந்த நிகழ்ச்சியை மிக அழகாகக் கையாண்டார். நிச்சயமாக இதை வங்கி அதிகாரிகள் பார்த்திருந்தால் சென்ற சில மாதங்களில் அவர்கள் மறுத்த சில கல்விக் கடன் பத்திரங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
வாழ்க .. வளர்க .. நீயா .. நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.
விஜய் டிவிக்கும் என் வாழ்த்துக்கள்.

11 comments:
நானும் பார்த்தேன்.
ரியாலிட்டி ஷோக்களில் இந்த மாதிரி 'ஜிம்மிக்ஸ்' நடக்கும் என்ற புரிதல் இருந்தாலும், சில நல்ல விஷயங்கள் நடந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
நான் பார்க்கலை.
கலைஞர் டிவியில் கூத்தடிக்கும் ரெண்டு மெகா மகா நடிகைகளின் நிகழ்ச்சியை விட இது மேல்.பார்வையாளர்களைப் பேசவிடாமல் செய்யும் அவர்களைக் காட்டிலும் ,இயல்பாக பேச வைக்கும் கோபிநாத் டாப்பு நிகழ்ச்சியைப் போலவே.
இன்னொன்னு கவனிச்சிரிக்கீங்களா தருமி சார்.எந்தவொரு புதுமாதிரியான நிகழ்ச்சியும் விஜய் டிவி தான் தொடங்கி வைக்கும்.அப்புறம் எல்லா சேனல்லேயும் ஈ அடிச்சான் காபிதான்.
மாற்றம் வந்தால் சரி!
//புதுமாதிரியான நிகழ்ச்சியும் விஜய் டிவி தான் தொடங்கி வைக்கும்.//
அதுனாலதான் இப்படி சொன்னேன்://விஜய் டிவிக்கும் என் வாழ்த்துக்கள்.//
வால்ஸ்,
நிறைய மாற்றங்கள் நம் சமூகத்தில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. வேகம் பத்தலை.
நன்றி கணேஷ், ஸ்ரீ.
Since I had too much to say on this topic, inga vala valanu ezhudama oru posta en blogla ezhuditen - http://sowmyagopal.blogspot.com/2009/12/lakshmi-irundha-dhaan-saraswatiya.html
நன்றி SG.
சார்...வணக்கம்..!
என்ன ஒரு ஒற்றுமை..!
நானும் இதைப்பத்தி கொஞ்சம் (கொஞ்சம் இல்ல..ரொம்ப) விரிவாவே பதிவா போட்டிருக்கேன்.
http://surekaa.blogspot.com/2009/12/blog-post_20.html
நல்லா இருக்கீங்களா?
Indha nighazchiyan mudhal pagudhiyai naan paarthen.. idhuponra nigazhchi niraya varavedum nam tholai kaatchigalalil. kelvi ketAAL dhaan niraya vishayangal sariyaga nadakum!
Vaazhga Indhiyaa!
Post a Comment