Thursday, March 11, 2010

382. ஒரு பாகிஸ்தானியரின் கனவு ...

*

இந்து தினசரியில் சென்ற 7-ம் தேதி open pageல் வந்த ஒரு கட்டுரையைத் தமிழ்ப்படுத்தி ஒரு பதிவாகப் போட ஆசைப்பட்டேன். ஆனால் வழக்கமான சோம்பேறித்தனம். விட்டு விட்டேன். ஆனால் அதன் பின் அக்கட்டுரைக்காக வந்த சில 'பின்னூட்டங்கள்' -comments in Letters to the Editor -நம்மள மாதிரி 'brights' (Richard Dawkin சொல்ற மாதிரி ... ) உலகத்துல நிறைய பேரு இருக்காங்கன்னு
சேதி சொன்னது.  அத உங்க எல்லார்ட்டயும் பகுந்து கொள்ளணும்ற ஆசையில் வந்தது இப்பதிவு.  அந்த மாதிரி ஒண்ணு ரெண்டு கடிதத்தில் வந்த சிலதை மேற்கோளாக சிலவற்றைத் தருகிறேன். ஆனால்,அதோடு பாக்கிஸ்தான் - கராச்சியிலிருந்து J.Salahudin Mirza என்பவர் எழுதிய கடிதத்தின் ஒரு சில பகுதிகளையாவது இங்கே தரவும் ஒரு ஆசை ...


K.Gopakumar Menon:  கட்டுரையின் ஒரு பகுதியை மீண்டும் எழுதுகிறார்;

JONATHAN SWIFT:

நம்மிடையே மதங்களுக்கென்னவோ குறைச்சலில்லை. அவைகளெல்லாமே நாம் நம்மை ஒருவருக்கொருவர் விரோதித்துக் கொள்ளவே உதவுகின்றன; அவை நம்மை ஒருவருக்கொருவர் நண்பர்களாக்கிக் கொள்ள விடுவதேயில்லை.

C.C.COLTON:

மதங்களுக்காக மனிதர்கள் நித்தமும் யுத்தம்தான். அவர்கள் நிறைய எழுதுவார்கள்;  சண்டையிட்டுக் கொள்வார்கள்; அந்த மதங்களுக்காகச் செத்துத் தொலைவார்கள். ஆனால் அந்த மதங்கள் சொல்வது போல் வாழ்வதுதான் கிடையாது.


MANOHAR ALEMBATH:

பகுத்தறிவு முதல் நிலைப்படுத்தப்பட்டால் நிச்சயம் மதங்கள் ஓரத்தில் ஒதுங்கிவிடும்.

J. SALAHUDIN MIRZA, KARACHI:

 இஸ்லாமிய அடிப்படைவாதம் எனக்கு ஒவ்வாத ஒன்று.  இந்த அடிப்படைவாதம் மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ள  இந்துத்துவாவுடன் வேரூன்றுமானால் பாகிஸ்தானில் அதன் விளைவுளும், தாக்கங்களும் எந்த அளவு இருக்கும். நானும் என்னைப் போன்ற சிலரும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில் ஓரிடத்தை வேண்டுமென்று கேட்டுப் பெற்று, அதில் எந்த வித மதங்களையும் வெளிக்காட்டாத  ஒரு சின்ன நாட்டைஅமைக்க வேண்டும். அந்த 'நாட்டு' மக்கள் எந்த வித மதங்களயும் சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர்களின் நம்பிக்கைகளும், வழிபாடுகளும் அவர்கள் வீட்டுக்குள் மட்டுமே. வீடுகளுக்கு வெளியே அங்கே எந்த மதமும் கிடையாது. மசூதிகளோ, தேவாலயங்களோ, கோயில்களோ எதுவும் கிடையாது. மக்களின் பெயர்கள் கூட எந்த மதச்சார்பில்லாததாக இருக்க வேண்டும். (இதைவிட அந்த நாடு "மதங்களே இல்லாத நாடாக" இருக்கவேண்டுமென்பது என் கனவாக இருக்கிறது.)

எல்லா சமயங்களும் நல்லவைதான்; எல்லாமே அமைதியைத்தான் போதிக்கின்றன.  ஆனால் நம்பிக்கையாளர்கள் மட்டும் குறுகிய மனத்துடையோராக, ஒரு சார்புநிலைக்காரர்களாக இருக்கிறார்கள். மற்ற எந்தக் காரணங்களையும் தாண்டி, மதங்களுக்காகவே பல மனித உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன. எனக்குப் புரியாத ஒரு விஷயம்:  
எப்படி மனிதர்கள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மையானது; உலகத்தில் உள்ள மற்ற எல்லோரின்  நம்பிக்கைகளும் தவறானதாக இருக்கும் என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், மதக் கோட்பாடுகள் எல்லாமே இப்போது மட்டுமல்ல எப்போதும் வெறும் ஆதாரமில்லாத நம்பிக்கைகளே.


இந்தப் பாகிஸ்தானியரின் இவ்வித எண்ணங்கள் எல்லாமே வெறும் தீவிரமான கனவுகளே. ஆனாலும் இந்தக் கனவுகளுக்குப் பின்னால் அதன் காரணமாக இருக்கும்  மதத் தீவிரவாதத்தின் கொடூரம் நாம் அறியாததா ....?


இன்று - 12-3-10 - S.Fareed Ahmed, Chennai- யிலிருந்து மதங்களிலிருந்து மட்டுமே மனித குலம் ஈவு, இரக்கம், அன்பு, பாசம், தர்மம், மரியாதையளித்தல், உதவுதல் போன்ற நற்குணங்களைப் பெற்றான். மதங்கள் இல்லாவிடில் மனிதன் கட்டுப்பாடற்ற அநியாயக்காரனாக ஆகிவிடுவான் என்கிறார். 

ஆனால், .C. Masthan, Chennai- யிலிருந்து ஒரு மேற்கோளிடுகிறார்: 
Abraham Lincoln: "நான் நல்லவைகளைச் செய்யும் போது மனது நிறைகிறது; தவறுகளைச் செய்யும் போது மனம் தடுமாறுகிறது. இதுவே என் மதம்."Date:07/03/2010 URL: http://www.thehindu.com/thehindu/op/2010/03/07/stories/2010030750021400.htmRELEGATE RELIGION

JEMILA SAMERIN
For thousands of years, religion has been a dominant force in human society. History does not record anywhere and at any time of a religion that has any rational basis. The greatest vicissitude of things among men is the vicissitude of sects and religions. All religions, with their gods, demigods, prophets, messiahs and saints, are the product of the fancy and credulity of men who had not reached the full development and complete possession of their intellectual powers. They focus on specific supernatural, metaphysical, and moral claims about reality (the cosmos and human nature) which resulted in a set of religious laws, ethics, and a particular lifestyle. We have enough religion to make us hate, but not enough to make us love one another.

Record of exploitations

Religion encompasses ancestral or cultural traditions, writings, history, and mythology, as well as personal faith and religious experience. Religious persecution down the ages has been done under what is claimed to be the command of God. God is always associated with those things that we do not understand. Criticism of religion is discouraged and stifled. It remains socially unacceptable to point out the main objections which sceptics and freethinkers have about religion.

History is replete with recorded abuses and savageries of organised religion when it comes to power. Live burials, beatings, burnings, cannibalism, buying and selling of human beings, and the chopping off of heads, hands, feet, ears and plucking out of eyes all fill the pages of the Holy Books. Human sacrifices to appease the gods. The Crusades. The Inquisition. The suppression and the execution of millions of women. Pogroms against Jews. The Holocaust. Jonestown, Guyana.

Believers are indoctrinated to ignore the bloody history of religion, and to pay effusive lip service to belief in God and God's holy representatives on earth. Ordained ministers and priests are “men of God,” “God's holy instruments,” a race apart, anointed. It is no wonder that these men who wish to misuse power and betray trust are in a unique position to do so. Newspapers are full of reports of financial exploitation, sexual transgressions, the criminal and sexual abuse of children, and women by these ordained men.

Havelock Ellis wrote: “In all countries, religion or superstition is closely related with crime.” Religious doctrine encourages power inequities toward women and children, and such inequities invariably lead to abuse. “The primary epiphenomena of any religion's foundation are the production and flourishment of hypocrisy, megalomania and psychopathy, and the first casualties of a religion's establishment are the intentions of its founder.”- Emily Brontë.

It is reason not imagination, that determines what is probable and what is not. A man's ethical behaviour should be based effectually on sympathy, education, and social ties and needs; no religious basis is necessary.
We no longer need to be threatened with eternal torture or tempted by eternal bliss in order to form a civilised society.

Man would indeed be in a poor way if he had to be restrained by fear of punishment and hope of reward after death. Like dandruff, most people do have a religion and spend time and money on it and seem to derive considerable pleasure from fiddling with it.

© Copyright 2000 - 2009 The Hindu

33 comments:

ராஜ நடராஜன் said...

//MANOHAR ALEMBATH:

பகுத்தறிவு முதல் நிலைப்படுத்தப்பட்டால் நிச்சயம் மதங்கள் ஓரத்தில் ஒதுங்கிவிடும்.//

ஓட்டும் துண்டும் முதலில்

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டத்துக்கு இப்ப சின்னதா ஜால்ரா!

தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்.மதமும்,இறைக்கொள்கையும் ஒன்றோடுன்று பின்னி பிணைந்த காரணத்தாலும் பல நூற்றாண்டுகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரே காரணத்தாலும் மதம் தனது வேர்களை உலகில் வேரூன்றி விட்டது.பகுத்தறிவு மக்கள் விகிதாச்சாரம் உலகில் அதிகமாகவும் மதவாத கலாச்சார மக்கள் தொகை குறைவும் எனும் நிலையை எப்படிக் கொண்டு வருவது?இந்த நூற்றாண்டின் இணையம் ஒருவேளை அதை சாதிக்கலாம்.அதுவும் மாற்றங்களுக்கான விதையை மட்டுமே 21ம் நூற்றாண்டு துவ முடியும்.

ராஜ நடராஜன் said...

பாகிஸ்தானியரின் கனவு உங்க மாதிரி கண்ணோட்டமுள்ளவர்களின் பார்வையில் வந்திருக்கிறது.அடிப்படைவாதிகள் கண்ணூல பட்டிருந்து அந்த மனுசன் கொஞ்சம் முகம் தெரிஞ்சிருந்த ஆளா இருந்திருந்தா இன்னேரம் பத்வாதான்.

வால்பையன் said...

என் கனவும் அப்படி தான் இருக்கிறது!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஆனாலும் இந்தக் கனவுகளுக்குப் பின்னால் அதன் காரணமாக இருக்கும் மதத் தீவிரவாதத்தின் கொடூரம் நாம் அறியாததா ....?//

என் பேரன் காலத்தில் வேண்டுமானால் சாத்தியப் படலாம்.

வால்பையன் said...

//தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்.//

எந்தெந்த நாடுகள் என தெரிந்து கொள்ளலாமா?

Gurusamy Thangavel said...

//ஆனால் வழக்கமான சோம்பேறித்தனம். விட்டு விட்டேன்.//

நீங்களே இப்படி சொன்னால் அப்புறம் நானெல்லாம் எங்கே போவது.

NO said...

அன்பான நண்பர் திரு தருமி,

லூவிஸ் வுல்பெர்ட் (Lewis Wolpert) அவர்களின் lecture ஒன்றை கேட்டேன். சொன்ன ஒரு ஒரு முக்கிய விடயம், "Religion is there to stay" என்பதுதான்! ரிச்சர்ட் டாவ்கின்ஸ் அவர்களின் நிலையை வுல்பெர்ட் ஆதரித்தாலும் (irreligious and secular humanism) மதத்தை மற்றும் நம்பிக்கையை தள்ளி வைப்பது என்பது முடியவே முடியாது என்பது அவரின் வாதம்! டாவ்கின்சும் கண்டிப்பாக மதம் மற்றும் கடுவுளின் மனிதன் மேல் உள்ள இரும்புப்பிடியை மறுக்கவில்லை என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!! அதை மீற முடியும் என்பது அவரின் நிலை. கிட்டத்தட்ட அது உண்மையும் கூட! ஆனால் பாருங்கள், To get a grasp on evolution by natural selection and its precise effects என்பதே நல்ல படிப்பறிவுள்ள பலருக்கே முடிவதில்லை! அப்படி இருக்கும் பொது, அதாவது நாத்திகத்திற்கு ஒரு intelectual and scientific basis கொடுக்காமல் கடுவுள் இருக்க முடியாது என்ற பாயிண்ட் இல் மட்டுமே நிற்பவர்கள், சில காலங்களில் மடங்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் போக ஆரம்பித்து விடுவார்கள்! நண்பர் திரு வால் பையன் போன்றவர்கள் இந்த இந்த நிலைக்கு வரக்கூடும் என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிகிறேன் :-))))))))). சொல்ல வருவது என்னவென்றால், brights's கள் ஆசைப்பட்டாலும் திரு சலாஹுதீன் மிஸ்ரா எழுதியது இப்போதைக்கு நடவாத காரியம்!!!

The meme of religion is quite powerfull and it helps --- "itself"!!!

நன்றி

வால்பையன் said...

//சில காலங்களில் மடங்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் போக ஆரம்பித்து விடுவார்கள்! நண்பர் திரு வால் பையன் போன்றவர்கள் இந்த இந்த நிலைக்கு வரக்கூடும் என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிகிறேன்//

நல்ல ஜோசியம் பாக்குறிங்க!

தருமி said...

இன்று - 12-3-10 - S.Fareed Ahmed, Chennai- யிலிருந்து மதங்களிலிருந்து மட்டுமே மனித குலம் ஈவு, இரக்கம், அன்பு, பாசம், தர்மம், மரியாதையளித்தல், உதவுதல் போன்ற நற்குணங்களைப் பெற்றான். மதங்கள் இல்லாவிடில் மனிதன் கட்டுப்பாடற்ற அநியாயக்காரனாக ஆகிவிடுவான் என்கிறார்.ஆனால், .C. Masthan, Chennai- யிலிருந்து ஒரு மேற்கோளிடுகிறார்:

Abraham Lincoln: "நான் நல்லவைகளைச் செய்யும் போது மனது நிறைகிறது; தவறுகளைச் செய்யும் போது மனம் தடுமாறுகிறது. இதுவே என் மதம்."

தருமி said...

ஓட்டுக்கும் துண்டுக்கும் இங்கு எந்த வேலையுமில்லை.

//தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்//
இஸ்லாமிய நாடுகளே பெரும்பாலும் மதம் வேரூன்றிய நாடுகள். அவைகள் எல்லாம் நீங்கள் சொல்லும் முன்னிலையில் உள்ளனவா?

//அந்த மனுசன் கொஞ்சம் முகம் தெரிஞ்சிருந்த ஆளா இருந்திருந்தா இன்னேரம் பத்வாதான்.//

பாவம்தான். ஏதோ .. இந்தியப் பத்திரிகைக்குத்தானே என்று துணிந்து எழுதியிருக்கப் போகிறார். பாவம்தான் :(

தருமி said...

வால்ஸ்,
ஸ்ரீ (நம் தாத்தா காலத்தில் இருப்பது மாதிரிதான் உங்கள் பேரப் பிள்ளைகள் காலத்திலும் இருக்கும்.)
தங்ஸ் (ரொம்ப நாளாச்சு .. பார்த்து.. படிச்சி. ஏன் அசினை இப்படி அழ உடுறீங்க?!)

நன்றி

தருமி said...

no,
உங்களுக்கு ரொம்ப நன்றி. அப்பப்போ சில பெயர்களைச் சொல்கிறீர்கள், நானும் அவர்களை யாரென்று கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக நீங்கள் சொன்ன god is not great வாங்கி வாசித்து விட்டேன். அடுத்து வரும் பதிவுகளில் அதில் ஒரு அத்தியாயமிருக்கும்; இந்த உதவிகளுக்கு நன்றி.

முதல் முறையாக நீங்கள் சொல்வது நான் முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். //மதங்களின் நோக்கம் என்ன?// என்ற என் கேள்விக்கு நானே ஒரு பதிலைச் சொல்லியுள்ளேன். அதன்படி பார்க்கும்போது மதங்களற்ற மானிடச் சமூகம் என்பது ஒரு கனவுதான்; கானல் நீர்தான்.

நீங்கள் சொல்லும் //intellectual and scientific basis கொடுக்காமல் கடவுள் இருக்க முடியாது என்ற பாயிண்ட் இல் மட்டுமே நிற்பவர்கள்// என்பதில் வால்ஸ் வரவில்லையென்று நினைக்கிறேன். அவரது பரிணாமக் கொள்கைப் பதிவை வாசியுங்களேன்.

NO said...

அன்பான நண்பர் திரு தருமி,

பதிலுக்கு நன்றி!

நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன்! உங்களின் புரிதலுக்கு மேலும் வலு சேர்க்கும் ஒன்றினை நீங்கள் கண்டிப்பாக படித்திட வேண்டும்!
அது, Professor Daniel C Dennet (Head of cognitive Neuro science, Tufts university, californis) அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள். ஒன்று Darwin's dangerous Idea மற்றொன்று Breaking the spell: Religion as a Natural phenomenon. இதில் இரண்டாவதாக கூறியது, மத கடவுள் நம்பிக்கையின் ஆதாரங்களை பரிணாம வளர்ச்சியின் மூலம்
விளக்குகிறார்! மிக ஆழ்ந்த விவாதங்களும் விளக்கங்களும் எடுத்த்ரைக்கப்படுகின்றன! மேலும் இந்த புத்தகத்தை Dawkins review செய்து பாராட்டியிருக்கிறார்.

Cognitive Neuroscience, Neuro psychology போன்ற field கள் மிக விரைவாக வளர்ந்து வருகின்றன. What earlier was the area of only the philosophers have slowly been taken over by scientists, who with reasearch and evidence have been able to make major advances on how we think and what role the brain plays in forming the concepts of who we are and what God is!

மேலும் நிறைய இருக்கிறது! என் வாதம், நாத்திகம் பேசும் பலர் (அதுவும் இணையதளத்தில்) இதைபற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு பேசுவதில்லை!
கண்டபடி கோபமாக சத்தம் போடுவதால் , நாத்திகத்தின் மேல் பலருக்கு வெறுப்புதான் வருகிறது!

Prof. Daniel Dennet அருமையாக சொன்னார் - One of the greatest tragedy's is the hijacking of morality by religion என்று!

Of course, நண்பர் திரு வால்பையனை நான் கண்டபடி பேசுபவர் லிஸ்டில் சேர்க்கவில்லை (ஆனாலும் மத விடயங்களில் அப்பபோ அவர் அந்த மாதிரி ஆகிறார்), இருந்தாலும் அப்படி தங்கள் தர்கங்களை அமைத்தால் -- " One of the greatest tragedy's for Atheism in India is the hijacking of this concept by such unthinking and agenda seekers" என்று சொல்லவேண்டி வரும்!

முக்கியமான ஒன்று, நான் இனைய தளங்களில் பார்த்தவரை மிக அருமையாக, ஞாயமாக, தரம் கெடாமல், ஆதாரங்களுடன், நிதானமாக நாத்திகத்தை தூக்கி
பேசுபவர் யாரென்றால், அது நீங்கள் தான்!

நன்றி

ஒரு கொசுறு - Sam Harris எழுதிய End of Faith புத்தகத்தையும் கிடைத்தால் படியுங்கள்! அபாரமான தர்கங்கள் நிறைந்தது (அவரும் ஒரு cognitive Neuroscience துறையை சேர்ந்தவர், ரிச்சர்ட் டாகின்சின் நண்பர்)

ராஜ நடராஜன் said...

//தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்.//
//எந்தெந்த நாடுகள் என தெரிந்து கொள்ளலாமா?//

வாலு!திரும்ப வந்தது தப்பா போச்சு போல இருக்குதே:)

முதலில் எந்தெந்த நாடுகள் பகுத்தறிவில் முன்னணி வகிக்கிறது என்று கணக்கை நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா பதில் சொல்ல எளிதாக இருக்கும்.நான் சொல்ல வந்தது உலகம் பூரா ஏதாவது ஒரு விதத்தில் மதத்தின் ஆளுமை இருக்கிறதென்பதே.

ராஜ நடராஜன் said...

//இஸ்லாமிய நாடுகளே பெரும்பாலும் மதம் வேரூன்றிய நாடுகள். அவைகள் எல்லாம் நீங்கள் சொல்லும் முன்னிலையில் உள்ளனவா?//

நீங்களும் வால்பையன் கூடவா?நான் சொல்ல வந்ததே மதம் வேரூன்றிய நாடுகளே(இந்தியா,மேற்கத்திய,வளைகுடா,இஸ்ரேல் இன்னபிற) அதிகம் அளவீடுகள் வித்தியாசப் பட்டிருந்தாலும்.பகுத்தறிவுக்கான ஒரு நாடு....அது ஏன் ஒரு தொலைக்காட்சி கூட இதுவரை என்கண்ணில் படவில்லை.

ராஜ நடராஜன் said...

//மேலும் நிறைய இருக்கிறது! என் வாதம், நாத்திகம் பேசும் பலர் (அதுவும் இணையதளத்தில்) இதைபற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு பேசுவதில்லை!
கண்டபடி கோபமாக சத்தம் போடுவதால் , நாத்திகத்தின் மேல் பலருக்கு வெறுப்புதான் வருகிறது!//

தமிழகத்தைப் பொறுத்த வரையில் மதம்,நாத்திகம் குறித்த ஒரு விழிப்புணர்ச்சி தோன்றியிருக்கலாம் பெரியாரிஸம் காரணமாக.ஆனால் பெரியாருக்குப் பின்னான நாத்திகம் அதன் சரியான எல்லையை தொடமுடியாமலேயே பயணிக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

/பாகிஸ்தானியரின் கனவு உங்க மாதிரி கண்ணோட்டமுள்ளவர்களின் பார்வையில் வந்திருக்கிறது.அடிப்படைவாதிகள் கண்ணூல பட்டிருந்து அந்த மனுசன் கொஞ்சம் முகம் தெரிஞ்சிருந்த ஆளா இருந்திருந்தா இன்னேரம் பத்வாதான்.

//

ஹா..ஹா..ஹா..
நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.உண்மைதான் :)

NO said...

Mr. Dharumi,

Not sure if this is true. But read somewhere that the self proclaimed non-believer and absolute atheist (i have seen him saying so) Mr Periyardasan has become a Muslim. Looks like he wants to call himself Abdullah or something!!

I stand vindicated!!

தருமி said...

//Not sure if this is true.//
yes, it is true; refer: http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_13.html

//I stand vindicated!!//

yes ... INSHA ALLAH !!

தருமி said...

//கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்//

தெரியாதே .. great!

//குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது.//

அங்க போனதும் சும்மா அடிச்சில்லா சொல்றார்!! எப்படி அங்க போனதும் அது தெரிஞ்சிது? இதுக்காகவாவது நானும் ஒரு தடவையாவது //வூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்திற்கு// போகணும் போல இருக்கே!

NO said...

நன்றி சார்,

லின்க்கை பார்த்தேன். உண்மைதான் போலிருக்கு!
அதைவிட வேடிக்கை, அந்த லிங்கில் சொல்லப்பட்டிருக்கும் இன்னுமொரு விடயம்! பெரியார்தாசனை , கடுவுள் மன்னிக்கட்டும் என்றுவேறு போட்டிருக்கிறது! மன்னிப்பு, அவரின் கடந்தகால நடத்தைக்க்காம், அதாவது அவர் நாத்திகத்தை கடைப்பிடித்த்தர்க்காம்!! இது எப்படி இருக்கு??? அவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கு! என்ன, இன்னும் கொஞ்ச நாட்களில் முஸ்லிம் முன்னேற்ற கழகம், போன்ற இயக்கங்களில்
பிரசாரத்தில் முன்னிறுத்தப்படுவார்! மேலும், எப்படியிருன்தவன் இப்படி ஆயிட்டான் பாரு என்ற பிரசார முரசுக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்! இன்னும் கொஞ்சம் முயன்றால் இந்த கட்சிகள் சார்பில் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப்படுவார்!

ஆகமொத்தம் அவர் கடைப்பிடித்த விதண்டாவாத, பிரச்சார, அறிவியலற்ற நாத்திகத்திற்கு சரியான பரிசு!!! But I can assure you that he is not the last and neither was he the first. All those closet theists are waiting to come out and I know fully well when this is going to happen in a big way. Having said that I was just wondering if you could also come up with the answer as to when this will happen and what will release these guys? (I have worked on this angel for some time now and I think I have an answer).

நன்றி

தருமி said...

//I have worked on this angle for some time now and I think I have an answer).//

awaiting to know that .......

NO said...

Sir,

I will write in detail on this once I get time.
However for people of your intellect just a clue will do and based on which you can make out why it will turnout so.

The answer is: The end of "K" era!

(I maybe wrong but so farI could see, the legacy of atheism in T.N, including the pseudo and the spurious varieties (which forms the bulk of it by the way) will be isolated and will be dissolved after this event)

தருமி said...

//The end of "K" era!//

i differ.

//...will be dissolved after this event)//

i differ.

நான் பேசும் நாத்திகம் என்னுள் இருந்து வளர்ந்தது. அதற்கு K / P / ? எதுவும் காரணமில்லை.

தருமி said...

//I will write in detail on this once I get time.//

wish you get time soon.

NO said...

Sir,

When I say atheism i am not at all talking about you and some similar people that I know! That has been arrived at after some sound footing.
I am talking strictly about the emotional atheism that is the norm for most of the people we see in T.N today!

Unknown said...

//எப்படி அங்க போனதும் அது தெரிஞ்சிது? //

அது எப்படிய்யா, அங்க போனதும்தான் அவருக்கு தெரிஞ்சிதுன்னு சொல்றே ? அதுல அப்படி எழுதியிருக்கா ? திரும்பவும் உன் அறிவு எப்படிப்பட்டதுன்னு புரூவ் பண்றீயே

குடுகுடுப்பை said...

நானும் நோ சொல்லும் பல விசயத்தில் உடன்படுகிறேன்.
திராவிடம் சார்ந்த நாத்திகம், கொஞ்சம் கொஞ்சமாக மடியும் என்றே நானும் கருதுகிறேன்.

இங்கே பேசும் நாத்திகமே ஒரு வாரிசு சார் மதம் பொன்றது, அந்த மதத்தில் நானும் ஒரு அறைகுறை.

இணையத்தளத்தில் தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே இவைகள் தாண்டிய நாத்திகர்களாக உணர்கிறேன்.

வால்பையன் said...

//இணையத்தளத்தில் தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே இவைகள் தாண்டிய நாத்திகர்களாக உணர்கிறேன். //

உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியை அளிக்கிறது

தருமி said...

//தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே ...//

analyst,கையேடு ....

ப.கந்தசாமி said...

நல்ல மனிதரின் நல்ல சிந்தனைகள். வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தருமி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இரசிகை said...

nalla sinthanaikal........!

Post a Comment