Monday, April 26, 2010

389. சீக்கிரம் கண்டு பிடிங்க'ய்யா ....

*
நம்மைத் தவிரவும் வேறு உயிரினங்கள் நம் பிரபஞ்சத்தில் உள்ளதா என்று பல்லாண்டுகளாகவே அறிவியலாளர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் அளித்துள்ள பதில்:

நிச்சயமாக உயிரினங்கள் கட்டாயம் இருக்கும்.
 அவைகள் நம்மைப் போல கோள்களில் மட்டுமல்ல, நட்சத்திரங்களில், கோள்களுக்கு நடுவிலுள்ள வெற்றிடங்களில்கூட இருக்கக்கூடும்;  100 பில்லியன்  நட்சத்திரக் கூட்டங்கள்; ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் நட்சத்திரங்கள்  -- இத்தகைய சூழலில் நம் உலகம் மட்டுமே உயிரினங்களைக் கொண்டிருக்கும் என்பது சரியான கருத்தாக இருக்க முடியாது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருக்கும் அவ்வகை உயிரினங்கள் நமக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். நம் உலகத்துக் கணிமப் பொருட்களுக்காக அவர்கள் நமக்குக் கெடுதி விளைவிக்கலாம் என்றும் சொல்கிறார்.

இதோ இன்று - ஏப்ரல் 26, 2010 - இந்துவில் வந்த செய்தி:Aliens exist: Hawking


‘Might raid Earth for its resources'
Stephen HawkingLondon: Do aliens exist? They do, but humans should try to avoid any contact with them — at least, that's what one of the world's leading physicists, Stephen Hawking, claims.

The suggestions, that the extraterrestrials are almost certain to exist, come in a new documentary series for the Discovery channel, in which Dr. Hawking will set out his latest thinking on some of the universe's greatest mysteries.


Alien life, he will suggest, is almost certain to exist in many other parts of the universe — not just in planets, but perhaps in the centre of stars or even floating in interplanetary space, T he Sunday Times reported.

His logic on aliens is unusually simple. The universe, he points out, has 100 billion galaxies, each containing hundreds of millions of stars. In such a big place, Earth is unlikely to be the only planet where life has evolved.

“To my mathematical brain, the numbers alone make thinking about aliens perfectly rational. The real challenge is to work out what aliens might actually be like,” the 68-year-old was quoted as saying.

The answer, Dr. Hawking suggests, is that most of it will be the equivalent of microbes or simple animals — the sort of life that has dominated Earth for most of its history.
One scene in his documentary shows shoals of fluorescent animals living under thick ice on Europa, one of Jupiter's moons, while another shows flying yellow predators prey on two-legged herbivores.

Such scenes are speculative, but Dr. Hawking uses them to lead on to a serious point — that a few life forms could be intelligent and pose a threat.

He believes that contact with such a species could be devastating for humanity, and suggests that aliens might raid Earth for its resources and then move on: “We only have to look at ourselves to see how intelligent life might develop into something we wouldn't want to meet.

“I imagine they might exist in massive ships, having used up all the resources from their home planet. Such advanced aliens would perhaps become nomads, looking to conquer and colonise whatever planets they can reach.” — PTI*


17 comments:

ப.கந்தசாமி said...

கடவுள் இருக்கிறார்- உண்மையா, பொய்யா? இந்தக்கேள்விக்கு நேரடியான பதில் சொல்லமுடியாது. அது போல இந்தக்கருத்துக்கும் உண்டு, இல்லை என்று பதில் சொல்லமுடியாது.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அந்த நாள் வந்தே தீரும் தருய் சார்! என்னுடைய பதிவையும் சென்றுப் பாருங்களேன்.
http://prabanjapriyan.blogspot.com/2010/04/blog-post_27.html

Thekkikattan|தெகா said...

தருமி, இத்தனை கோடான கோடி நட்சத்திரங்களும், அதனை சுற்றி அமைந்த கோள்களையும் கருத்தில் கொண்டால், எனக்கு சந்தேகமே இல்லை பூமியை ஒத்த பல கிரகங்கள் இருந்தே ஆகவேண்டும் என்பதில்.

எல்லாமே சூரியனின் வெப்பம் பெரும் நிலையைக் கொண்டுதான் உயிரனங்களின் தோற்றமும், மறைவும் என்று கொண்டால், கணக்கு போட்டு பார்த்தா அதெல்லாம் மிகச் சரியா நம்ம பூமி இருக்கிற தொலைவில பல கோள்கள் தங்களின் இருப்பை ஊர்ஜிதப் படுத்திக் கிட்டு செமையா உயிரின பெருக்கத்திற்கு துணை நிற்குமின்னு எனக்குத் தோணுதப்போய்ய்...

தருமி said...

டாக்டர்,
நீங்க சொல்ற ரெண்டும் வேற வேற .. ஒண்ணு மனசு சம்பந்தப்பட்டது ... நம்பிக்கை அது இதுன்னு. இன்னொண்ணு மூளை சம்பந்தமானது. இருக்கும் அப்டின்றது ஒரு காரண காரியங்களோடு இருக்கிற ஒரு hypothesis. it is yet to be proved. people talk about the 'chances'.

தருமி said...

M.S.E.R.K.,
பதிவு பார்த்தேன். படங்கள்தான் முழுசா இன்னும் பார்க்கலை.

நல்ல பதிவுக்கு நன்றி

தருமி said...

தெக்ஸ்,

ஆனாலும் S.E.T.I. ஆரம்பிச்சி இத்தனை வருஷம் ஆகிப் போச்சேன்னு ஒரு கவலை ..!

வால்பையன் said...

உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கு!, அவர்கள் நம்மை விட அட்வான்ஸாகவும் இருக்கலாம்!

அரசூரான் said...

சற்றுமுன் கிடைத்த தகவல்...

வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றனவாம், அவை(ர்)கள் பூமியில் ஒரு (மனித) உயிரினம் இருக்குன்னு தெரிஞ்சி ரொம்ப பயந்து போயி இருக்காங்களாம்.

Anna said...

Interesting readings: http://scienceblogs.com/pharyngula/2010/04/hawkings_aliens.php

கோவி.கண்ணன் said...

//இத்தகைய சூழலில் நம் உலகம் மட்டுமே உயிரினங்களைக் கொண்டிருக்கும் என்பது சரியான கருத்தாக இருக்க முடியாது.//

தருமி சார், அவரு சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஏலியன் இருப்பதை நீங்களும் நம்புகிறீர்கள். ஏலியனின் சக்திகள் இவை என்று தற்போதைக்கு தியரிகள் எதுவும் கிடையாது. நம்ம மக்கள் 'அதை' கடவுள் என்றும் சக்திகள் இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

உங்களது ஏலியன் ஊகம், அவர்களது கடவுள் நம்பிக்கை. ஊகமும் நம்பிக்கையும் ஒரு புள்ளியில் சந்திக்கத்தான் செய்கிறது.

ஏலியன் கடவுள் வாழ்க.
:)

தருமி said...

analyst,

//Biology is definitely not Hawking's strength. Maybe his other episodes on time travel and cosmology will be more thoughtful and interesting.//

இதையும் பார்த்தேன் ...... !!

மதுரை சரவணன் said...

பூமியைப்போல ஒத்த குணமுடைய கோள்கள் உள்ளனவா.., என்ற ஆராய்ச்சி இன்னும் முடிவடையாத போது ...வேற்று கிரக உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் எனக்கு தோன்றுகிறது. என் குழந்தை அடிக்கடி சொல்வது உண்டு, அப்பா பொய் பேசினா, தப்பு செய்தா, ஏசு வேறு உலகத்தில இருந்து நமல்ல சாப்பிட (கொல்ல) ஆள அனுப்புவாராம்....அதுபோல் கற்பனையாக கூட இருக்கலாம். இல்லை உண்மையிலே நம் மீது நம்பிக்கை இழந்து , கடவுள் ஆவலை, ஏவளை யும் படைத்தது போல் வேற்று கிரகம் படைக்கலாம். எதோ என்னால முடிச்ச குழப்பம்.

தருமி said...

சரவணன்,

//எதோ என்னால முடிச்ச குழப்பம்.//

ஆமா ... நானும் சரவண பெருமான்தான் வருவார்னு உங்க பிள்ளை சொல்லும்னு நினச்சேன். அதுவும் ஏசுவைத்தான் கூப்பிடுது (எந்த பள்ளி?)

//வாய்ப்புகள் குறைவாகத்தான் எனக்கு தோன்றுகிறது. //

எனக்கு நிறைய என்று தோன்றுகிறது. உங்க பரிணாமம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் Eric von Daniken என்பவரைப் பற்றி ஏதும் சொன்னது நினைவிலிருக்கிறதா?

வால்பையன் said...

//உண்மையிலே நம் மீது நம்பிக்கை இழந்து , கடவுள் ஆவலை, ஏவளை யும் படைத்தது போல் வேற்று கிரகம் படைக்கலாம். எதோ என்னால முடிச்ச குழப்பம்.//

படைப்புவாத கொள்கையில் இந்த விசயத்தை அனுகுகிறீர்கள், ஒரு சிறிய விளக்கம்!

பூமியின் மேல் நேர்ந்த அதிபயங்கர மோதலின் காரணமாக புகை மண்டலம் பூமியை மூடி, சூரிய ஒளி வராமல் செய்தது, எரிமலை வாயில்களால் நிரம்பியிருந்த பூமி குளிர்ந்து இருக்கியது, புகைமூட்டத்தில் ஆக்சிசன், ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ஒன்றினைந்து முதல் நீர் உருவாகியது, பல மூலகூறுகள் சேர்ந்து பெருமழை உருவாகியது, புகை மூட்டம் அடங்கிய பின், மீண்டும் ஒளியின் துணையுடன் முதல் நீர் தாவரம் உருவாகியது!

இது நடக்க சாத்தியகூறுகள் இருக்கிற எந்த கிரகத்திலும் உயிர் இருக்கும்! நமக்கு அட்வான்ஸா, பேக்வேர்ட்ஸா என்பது தான் தெரியாது!

பல லட்சம் நட்சத்திரங்கள்(சூரியன்கள்) இருக்கும் பிரபஞ்சத்தில் இதே போல் ஒரு மோதல் நடந்திருக்க 0.00001% கூட வாய்ப்பில்லையா!?, இருக்கும், அதை பார்க்கும் தூரத்தில் நாம் இல்லாமல் இருக்கலாம்!

Paleo God said...

மனிதர்களும் ஆறறிவும் இல்லாது அவை சுபிட்சமாயும் இருக்கக்கூடும்.

(தயவு செய்து கண்டுபிடிக்காதீங்கய்யா)

:))

வவ்வால் said...

Hi,sir, good post.100% chances are there in aliens existance in space.coz comparing age of solar system to our universe.universe is older one. Age of universe-13.5 billion yrs.solar system-4.5 to 5.26 billion yrs only.so there are many solar like mature star system exist in space and life orgin and evolution may happend there. alredy in 1977, in search of aliens a space probe named voyager2 sent by nasa .now it gone beyond solar system (100 light hrs away from earth),still sends signal to us. To convey humen msg to aliens voyager2 carries a dvd like gold plate with some msg writen in all major langs,that includs tamil and sanskrit,also clasical musics like bethovan,mozart,and indian clasical music.

அராகன் said...

எல்லாவற்றுக்கும் விஞ்ஞானம் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது .மனவியல் நிபுணர் என்ற போர்வையில் இந்த வைத்தியர்கள் செய்யும் கொடுமையை பாருங்கள் .
http://www.youtube.com/watch?v=ExPxawBa2Ao&feature=related இது விஞ்ஞானமா இதைவிட மதரீதியான தியானம் சிறந்தது என்பேன். விஞ்ஞானமோ சமயமோ மனம் பத்திரம் ஐயா.

Post a Comment