Thursday, May 13, 2010

392. ஜாதீயம்

*

ஆரம்பமாகப் போகும் மக்கள் கணக்கெடுப்பில் சாதியையும் சேர்த்து கணக்கிடுவதா வேண்டாமா என்பது பற்றி எனக்கு இதுவரை ஒருமுடிவான கருத்து இல்லை.
கொஞ்சம் குழப்படிதான். எனக்குக் குழப்படின்னா என்ன பண்றது? அதான் உங்ககிட்ட வந்துட்டேன். சாதியைச் சேர்க்கணுமா, வேண்டாமா? சேர்த்தால் என்ன தகராறு? சேர்க்காவிட்டால் என்ன குழப்பம்?

(ஓரளவு எனக்கு ஒரு பதில் உண்டுதான்; அதை உங்கள் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாமேன்னுதான் இப்பதிவு)

* * * * *

அதோடு இன்னொரு interesting விசயம்.(interesting - இதுக்கு சரியான ஒரு தமிழ்ச்சொல்லை பல நாட்களாக நானும் கேட்டுக்கொண்டேதானிருக்கிறேன். யாரும் உதவவில்லை இதுவரை. அதனால்தான் இப்பதிவு எழுதத் தோன்றியது. அதென்னங்க என் ராசி ... நான் இது மாதிரி உதவி கேட்டால் கைகொடுப்பார் யாருமில்லை!! :(

அந்த interesting-கான விசயம் என்னன்னு கேட்டீங்கன்னா, இன்று காலை இந்து செய்தித்தாளில் ஆசிரியருக்கான கடிதப் பகுதியில் ஒரு கடிதம்:

"சாதிகளை மக்கள் கணக்கெடுப்பில் சேர்த்தால் நம் நாட்டின் ஒற்றுமை கெட்டிடுமாம். சாதி, மதம், அது இது எல்லாமே நம் நாட்டு சட்டத்தின் முன்னால் எல்லாம் ஒன்றுதானாம். சாதி நம் சமூகத்தின் அவலமாம். அது எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் நாட்டுக்கு நல்லதாம்.ஆனால் இதுவரை இடப்பங்கிட்டு முறையினால் இந்த சாதி வேறுபாடுகளை அரசு வளர்த்து வருகிறதாம். இதனால் 'முன்னேறிய சாதியினர்' மிகவும் பின் தள்ளப்படுகிறார்களாம்."

இக்கடிதத்தில் உள்ள நல்ல / கெட்ட விஷயங்களைப் பற்றிக் கூற இப்பதிவை எழுதத் தோன்றவில்லை. ஆனால் இப்படியெல்லாம் எழுதிய அந்த வாசகர் தன் பெயரை எழுதும் போது "நாயர்" என்று சாதிப்பெயரைச் சேர்த்து தன் பெயரை எழுதியதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.

 So, it is just sharing a joke that I enjoyed with you all ........... 


அக்கடிதம் பார்க்க:
http://www.hindu.com/2010/05/12/stories/2010051250821001.htm


20 comments:

உமர் | Umar said...

Interesting - ரசிப்பிற்குரிய, சுவாரசியமான

(பரவாயில்லை ரகத்திலாவது சொல்லி இருக்கேனா?)

--
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவ்வாறு இருந்தால் நான் சாதி மறுப்பாளர் என்று கூறலாம் என்றிருக்கிறேன்.

வவ்வால் said...

Jathi katchikal ovondrum sollum ennikail vaithu parthal tamil nadu makkal thogai 20 kodi varum, unmai therinjukavathu jathi vari kankeduppu thevainu thonuthu.iit ponravatril ellam innum velai vaipil,ida othukkitin padi pani niyamanam seyapadave illai.nayar pola nattula niraya aatkal irukkanga,avanga pozhaipai kaapathikanume.

Aasanukke interestingla doubta "aarvathai" thoonduthe!

குறும்பன் said...

interesting - ஆர்வம் ஈட்டக்கூடியதாக, ஆர்வம் கொள்ளும் முறையில்\வகையில், ஆர்வமூட்டும் வகையில்,

ஆர்வம், நாட்டம், ஈடுபாடு, அக்கறை - எதை வேண்டுமானாலும் புழங்கலாம்.

சரியா சொல்லி இருக்கேனா?

கணக்கெடுப்பில் சாதியை கண்டிப்பாக சேர்க்கணும்.

சில சாதிகள் அதிகப்படியான சலுகைகளை அனுபவிக்கின்றனவா என்பது இதன் மூலம் தான் தெரியும்.
இடஒதுக்கீடு முறையினால் குறிப்பிட்ட சாதி கல்வி\வேலைகளில் எவ்வாறு முன்னேறி\பின்னேறி உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

நாயர் கருத்துக்கு பதில் வேண்டுமா?

நேசமித்ரன் said...

சுவாரஸ்யமான இடுகை

கல்வெட்டு said...

.


1. ஜாதி என்ற ஒன்று சமூகத்தில் இருந்தால் அது பதிவு செய்யப்பட வேண்டும்.

2. ஜாதி கணக்கெடுப்பு வேண்டால் என்றால், சமூகத்தில் ஜாதி என்ற ஒன்று அழிந்ததாக இருக்க வேண்டும்.

3. இருக்கும் ஒன்றை கணக்கெடுப்பது அவசியம். அதை எப்படி எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது அடுத்த கேள்வி.

4. சாதி என்பது ஒரு நோய் என்று கொண்டால் அந்த நோய் உள்ளவர்கள் யார் எத்தனை பேர் என்று அறியப்படவேண்டும்.

5. ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்லும் நாய்கள்தான் இன்னமும் கிண்டுவில் வடகலை, எச்சிக்கலை ,நாடார் கிறித்துவ நாடார், சைவப் பிள்ளை , 'வன்னியர் - தாய் முதலியார் ஆனால் உட்பிரிவு ஓகே' என்று விளம்பரம் கொடுப்பதில் முன்னனியில் உள்ளார்கள்.

6. இந்துமதம் என்பது வர்ண தர்மம்.அதன் அடிப்படை பிறப்புவழி வந்த வர்ணம். வர்ணதர்மத்தை எரித்துவிட்டு அவனவன் சாதிய அடையாளங்களை விட்டுவிட்டால் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை?

7. ஆனால், சாமிக்கு மணியாட்டும் வேலைக்கு எல்லா மனுசனும் போகலாம் அரசு சட்டம் ஏன் போடவேண்டிய நிலை ஏன்? ஏன் என்றால் சாதியைக் காட்டி தடுக்கப்பட்டு இருந்தார்கள்.

8. இயல்பு வாழ்க்கையில் சாதி இல்லாத போது கணக்கெடுக்க வேண்டிய தேவை இல்லை.

9.தமிழ்நாட்டில் "பனிக்கரடி" எத்தனை என்று கணக்கெடுக்கத்தேவை இல்லை. ஆனால் "ஆர்க்டிக்கில்" அது தேவை. ஏன் என்றால் அங்கே "பனிக்கரடி" இருக்கிறது. உள்ளதை எந்த அளவில் உள்ளது என்று அவசியம் ஒரு அரசு அறிய வேண்டும்.

10. கண்டதேவியில் தேர் இழுக்கவும், திண்டுக்கல் அருகே வாயில் பீயை ஊற்றவும், சிதம்பரத்தில் பாடவும், இன்னும் பின்னோக்கினால் விருதுநகரில் முலைவரி கட்டவும், சாமிக்கு மணியாட்டவும் ,கிண்டுவில் ஜாதிவாரி திருமண விளம்பரத்திற்கும் சாதியின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.


தினந்தோரும் நடக்கும் இயல்பு வாழ்க்கையில் எல்லாம் சாதி வேண்டும் இந்த நாய்களுக்கு. ஆனால் எத்தனை நாய்கள் இப்படி உள்ளன என்று கணக்கு எடுக்கக்கூடாதாம்.

* அரசு கணக்கெடுக்கட்டும்.

* எந்த சாதியிலும் இல்லை என்று சாதியை உதறியவர்கள் , சாதி "Not Applicable" என்று சொல்லிவிடுங்கள்.

* அரசு கட்டாயப்படுத்தவில்லை யாரையும்.


FYI:

சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html

ஜாதி என்ன? - பிரபு இராஜதுரை
http://marchoflaw.blogspot.com/2007/06/blog-post_16.html


தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’. இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.
.


**

தருமி,
இவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிர்ப்புக் காட்டுவதன் உண்மையான நோக்கம். சாதி ஒழிய வேண்டும் என்றல்ல.

அப்படி நினைத்தால் இந்துக்கள் கொழுத்த வேண்டியது வர்ணம் பேசும் வேதங்களையும், வர்ணத்தில் உட்கார்ந்து இருக்கும் மடங்களையும்தான்.

இவர்களின் நோக்கம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மட்டுமே.

வர்ணத்தைப் பயன்படுத்தி மனிதனை மதம் கேவலப்படுத்தும் போது, அப்படி கேவலப்பட்டவர்களை எப்படி அடையாளப்படுத்துவது? அந்த வர்ணம் சொன்ன வழியிலேயேதான் தேடிக் காணமுடியும்.

இட ஒதுக்கீடு பொருளாதாரத்தை உயர்த்தினாலும் இன்னும் சாதியக் கொடுமைகள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு மக்கள் ஒவ்வொருவரும் முயல வேண்டும்.

.

ரவி said...

interesting - சுவாரஸ்யம்

சங்கதி ? மேட்டர் ? செய்தி ? சுவையான செய்தி ?

செந்தில் நாதன் Senthil Nathan said...

'சுவாரசியமான' பதிவு... :-)

வால்பையன் said...

சாதி வாரியா கணக்கெடுத்து கொள்ளட்டும், ஆனா நான் சாதியில்லாதவன் என சொல்ல அனுமதியளித்தால் போதும்!

வால்பையன் said...

//சாதி என்பது ஒரு நோய் என்று கொண்டால் அந்த நோய் உள்ளவர்கள் யார் எத்தனை பேர் என்று அறியப்படவேண்டும்.//


இந்த பாயிண்ட் நல்லாயிருக்கே!
இங்க எத்தனை பேர் நோயாளிகள்ன்னு தெரிஞ்சிக்க நானும் ஆர்வமா இருக்கேன்!

Unknown said...

சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு

கோவி.கண்ணன் said...

1. இட ஒதுக்கீடுக்கு எதிராக இட ஒதுக்கீடு உற்பத்தி திரனை குறைக்கிறது, திறமையற்றவர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்று தவறான தகவல் கிளப்பப்பட்டது
2. முற்பட்ட வகுப்பினரிடையே ஏழைகள் இல்லையா ? அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது ? என்பது போன்ற கருத்துகள் வந்தது
3. இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவன் சந்ததிகளுக்கு இட ஒதுக்கீடு கேட்கலாமா ? கிரிமிலேயரை புகுத்தலாமே ? என்ற கருத்து தற்போது நடைமுறையில் இருக்கிறது.

இவையெலலம் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பு பரிணாமங்கள் மட்டுமே.

இந்தக் கேள்விகளை இட ஒதுக்கீட்டில் படித்தவர்களும் கூட புத்திசாலி ஆனதாகக் காட்டிக் கொண்டு பொதுப் புத்தியில் இணைந்திருக்கிறோம் என்ற உணர்வே இன்றி கேட்பார்கள்.

*********

இட ஒதுக்கீடு என்று சொல்லுவது தவறு இடப் பங்கிடு என்றே குறிக்க வேண்டும் என்று தாங்கள் ஒரு இடுகையை எழுதினீர்கள், நன்றி, இந்தப் பின்னூட்டத்தை எழுதும் போது அவை நினைவுக்கு வராததால் நானும் இட ஒதுக்கீடு என்றே எழுதி விட்டேன்.

*****

சாதி வாரி கணக்கெடுப்புகள் முக்கியம் ஏனென்றால் இன்னின்ன சாதியில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிவதுடன் அவர்களில் எவ்வளவு விழுக்காடு கல்வி பொருளாதரா அளவில் முன்னேறி இருக்கிறார்கள் என்று அறிந்து இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த முடியும். அது மட்டுமின்றி இட ஒதுக்கீட்டால் சமூகம் பயனடைந்திருக்கிறது என்று காட்டவும் முடியும்.

துளசி கோபால் said...

சுவையான என்ரு சொல்லலாம்.

சாதி மறுப்பாளர்ன்னு போட்டு புதுசா ஒரு சாதி வந்துரும்போல இருக்கே.

சாதியைக் கணக்கு எடுக்கணுமுன்னா அப்புறம் அது எங்கே ஒழியப்போகுது?

நாயர் ன்னு சொன்னதுக்கு ஏன் சிரிப்பு?

சென்னையில் தெருக்களில் சாதிப்பெயரை நீக்கியவர்கள் டாக்டர் நாயர் ரோடை அப்படியே விட்டுட்டாங்க. அவுங்க வரையில் அது சாதி இல்லை(யாம்):-)))))

Sabarinathan Arthanari said...

//இப்படியெல்லாம் எழுதிய அந்த வாசகர் தன் பெயரை எழுதும் போது "நாயர்" என்று சாதிப்பெயரைச் சேர்த்து தன் பெயரை எழுதியதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. //

கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை. நேற்று சென்னை உயர் நீதி மன்றமும் இதை உறுதி செய்துள்ளது.

இது எந்த பிரிவு மக்கள் நாட்டின் எந்த பகுதியில் பின் தங்கி இருக்கின்றனர் என்பதையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியது என்ன என்பதையும் நமக்கு சுட்டி காட்டும்.


இது நாட்டில் ஒரு புரட்சியை உருவாக்கினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

நல்லதே நடுக்கும் என்று நினைக்கிறேன்.

தருமி said...

//இட ஒதுக்கீடு என்று சொல்லுவது தவறு இடப் பங்கிடு என்றே குறிக்க வேண்டும் //

நன்றி கோவிக்ஸ்

தருமி said...

interestingஆன மொழிபெயர்ப்புகளுக்கு நன்றி.

கல்வெட்டு,
மிக்க நன்றி.

hariharan said...

சாதியை மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்தவேண்டும். அரசு அளித்து வந்த இடஒதுக்கீடு (பங்கீடு) முறையில் எந்த சாதிகள் முன்னேறியிருக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம். முன்னேறிய சாதிகளை பட்டியலிருந்து நீக்கி பொதுப்பிரிவில் கொண்டுவரலாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் bc,obc,sc,st என்ற பட்டியல் உள்ளது, மக்கள் தொகை கண்க்கெடுப்பின் மூலம் எந்த சாதிகள் பட்டியலிருந்து நீக்கவேண்டும் என்பதை அரசு வாக்குவங்கிஅரசியல், சாதிக்கட்சிகள், இவற்றிற்கு அப்பாற்பட்டு அடிபணியாமல் அந்த வேலையை செய்தால் உண்மையிலேயே பிந்தங்கிய பிரிவினருக்கு வெளிச்சம் கிடைக்கும்

இராம.கி said...

interesting விசயம் = விருப்பூட்டும் விதயம்; விருப்பு = interest

tamil said...

NSS -Nair Srvice Society in Kerala has been fighting against the reservation for socially and educationally advanced sections in Kerala.Christians and Muslims are enjoying reservation benefits in Kerala but Nairs are not. Caste details in census should be used to decide who is entitled for reservation.The OBC list should be pruned and over the years the reservation % should be reduced to just 5% or 7%.

செல்வநாயகி said...

நல்ல இடுகை. பேராசிரியருக்கு நன்றி.

கல்வெட்டு மற்றும் இராம.கி ஐயா ஆகியோரின் பின்னூட்டங்களுக்கும்.

வோட்டாண்டி said...

போன வருட தேர்தல் நடக்கும் போது ரெண்டு மூணு மூதேவிகள் காங்கிரசும் பா.ஜா.கா வும் சேந்து போட்டியிட்டு regional parties கு கும்மி அடிக்கணும்னு கடுதாசி எழுதி இருந்தாங்க.. அதோட அந்த பக்கம் e-கடுதாசி போடுறத நிப்பாட்டிட்டேன்
நடுல லெட்டர் screening பண்றவரு மாறிடார்னு கேள்வி பட்டேன். ஆனா தரத்துல ஒரு முன்னேற்றமும் இல்ல

Post a Comment