Sunday, November 14, 2010

455.பரிணாமம் ... 3

*
னைய பதிவுகள்:

இது மூன்றாவது இடுகை


முதலில், ஏற்கெனவே பதிந்த  இரு இடுகைகளிலும் சொன்னவைகளையும், அதிலுள்ள பதிலில்லா கேள்விகளையும் மீண்டும் பார்த்துக் கொள்ளலாமா?

முதல் இடுகை - முகவுரை மட்டும்.

இரண்டாம் இடுகை:  கடவுள் படைத்திருந்தால் எப்படி சில இனங்கள் அழியும். (Extinction).  அப்படி அழிவதாயிருந்தால் கடவுளின் ஆற்றல் என்ன ஆச்சு?

-----------------------------

 Vestigial organs = not fully developed organs in mature animals

பல உயிரினங்களில் சில தேவையற்ற அல்லது பயனற்ற உறுப்புகள் காணப்ப்டுவதுண்டு. மனிதனில் எளிதாக எல்லோருக்கும் புரியும் அத்தகைய ஓர் உறுப்பு - குடல்வால் - appendix. 

மனிதர்களிடம் இவ்வுறுப்பு 'உபகாரம் இல்லாமல் உபத்திரமாகத்தான் உள்ளது'.  ஏனைய தாவர உண்ணிகளில் இது மிக முக்கியமான உறுப்பாகச் செயல்படுகிறது. செல்லுலோஸை செரிக்க இந்த உறுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனாலேயே அந்த உயிரினங்களில் அவைகள் பெரியதாகவும் அமைந்திருக்கும். மனிதர்களுக்கு இவ்வுறுப்பு தேவையில்லை. ஆனால் முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சியில் மனிதர்களிடமும் பயனேதுமின்றி - தொல்லை தரும் ஒரு உறுப்பாக - இன்னும் உள்ளது. 

இதுபோன்று ஏறத்தாழ நூறு உறுப்புகள் போல் மனிதனிடம் உள்ளதாக பட்டியல் போட்டுள்ளார்கள். அவைகளில் சில  - nictitating membrane - பல முதுகெலும்பிகளின் கண்களில் இது ஒரு ஒளிபுகக்கூடிய  சவ்வாகக் கண்களின் மூன்றாவது 'இமை'யாக உள்ளன. பறவைகளில் முழு வளர்ச்சியுடன் உள்ளன. கண்ணின் பாதுகாபிற்காக உள்ள இந்த  அமைப்பு பாலூட்டிகளில் மிகச்சிறியதாக, கண்ணின் ஓரத்தில் இருக்கும் அமைப்பாக சுருங்கியுள்ளன. பாலூட்டிகளில் இந்த அமைப்புக்கு ஏதும் முக்கிய வேலையோ முக்கியத்துவமோ கிடையாது. இருப்பதற்குரிய காரணம் - முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சியில் பாலூட்டிகளிடம் தக்கவைக்கப்பட்டுள்ளது. 

காது மடலுக்குரிய தசை நார்கள் மூலம் பல உயிரினங்கள் தங்கள் காது மடல்களை ஒலியை உள்வாங்க அசைக்க, திருப்ப முடியும். மனிதர்களிடமும் இந்த தசை நார்கள் உள்ளன. ஆனால் அவைகள் முழு ஆற்றலோடு இல்லாமல் வெறுமனே உள்ளன.சிலருக்கு மட்டும் புறச்செவியை அசைக்க முடியும்.
இதன் காரணம் - முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மனிதனிடமும் நீட்புடையது. 

வால் மனிதனுக்கும் உண்டு; வெளியேகூட சிலருக்கு சிறிது தெரியலாம். ஆனால் எல்லா மனிதர்களின் எலும்புக்கூடுகளில் வாலுக்குரிய எலும்புகள் உள்ளன. காரணம்: - முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மூலமாக மனிதனிடமும் பின் தங்கிவிட்டது. 

கடைசியாக நமது wisdom tooth. நமக்கு வயதான பிறகு வெளிக்கிளம்பும் இப்பற்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சிலருக்கு இப்பற்கள் வெளிவருவதும் முழுமையாக நடப்பதில்லை. இவைகளும் 'உபகாரத்திற்குப் பதில் உபத்திரவத்திற்குத்தான்' காரணமாக உள்ளன. பரிணாம வளர்ச்சியில் மனிதனிடம் அடுத்ததாகக் காணாமல் போகக்கூடிய உறுப்பாக இது இருக்கலாம். இப்போது இருப்பதற்கான காரணம் - முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மூலமாக இன்னுமும் மனிதனிடமும் உள்ளன. 

இதுபோல் நீண்ட ஒரு பட்டியலை மற்றைய உயிரினங்களிலும் தரமுடியும். ஆனால் மேலே சொன்னது மனிதனுக்கு மட்டுமானது. இதுவே பரிணாமம் கட்டுக்கதை என்று நம்பும்  இறைநம்பிக்கையாளர்களுக்கு போதுமென நினைக்கிறேன். 

"We have indeed created man in the 'best of moulds'." (Qur'an 95:4) என்று குரான் சொல்கிறது. (1.அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! 2.சினாய் மலையின் மீதும். 3.மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக! 4. திண்ணமாக, நாம் மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம்.) 

இந்த மேற்கோளில் இரண்டு கேள்விகள்.

1.  'best of moulds' என்கிறீர்கள்;மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம் - என்கிறீர்கள். பின் மனிதனின் உடம்பில் ஏன் இத்தனை தேவையற்ற உறுப்புகள் ?

2. ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக .. -. கடவுள் after all தன் படைப்பான மனிதனுக்குச் சொல்லும் ஒரு விஷயத்திற்கு 'கடவுள் இத்தனை சத்தியம் பண்ணணுமா? ஆச்சரியமான அல்லா ... 









23 comments:

ராஜவம்சம் said...

அய்யா கடைசியில் கேட்ட கேள்வியில் முதல் கேள்வி பதிவுக்கு உட்பட்டது

மற்றொன்று பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது.


வில்லியம் பார்க்கர் என்னும் அறிஞர் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்வதில் ஆர்வமுடையவர். ஆனால் அவருடைய ஆய்வு அவரையறியாமலேயே குடல்வால் பற்றிய ஆய்விற்கு இட்டுச்சென்றது.

உணவை செரிக்கும் வேலையை சிறுகுடல் செய்யும்போது, குடல்வால் வெறுமனே அந்த இடத்தில் உட்கார்ந்திருப்பதாக அவர் நினைக்கவில்லை. மனித உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றுள் நன்மை செய்பவையும் தீமை செய்பவையும் உண்டு. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது.

நன்மை செய்யும் பாக்டீரியாக்களை செழிக்கச்செய்வதுகூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சமம். இவ்வாறு செழிப்படைந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உயிர்ப்படலங்களாக குடல்வாலின் சுவர்களை ஆக்கிரமித்துக்கொண்டு தீமை செய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும் அரணாக செயல்படுகிறது. குடல்வால் எனும் உறுப்பு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என்பதும், தீமைசெய்யும் பாக்டீரியாக்கள் உடலை தாக்கும்போது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வெளிப்பட்டு உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது என்பதும் வில்லியம் பார்க்கரின் கருத்தாகும்.

ஏழ்மையான, வளர்ச்சியடையாத நாடுகளில் பசி, போதுமான மருந்துகள் இன்மை, சுகாதாரமற்ற குடிநீர், வயிற்றுப்போக்கு இவையெல்லாம் சாதாரணம். இங்கு வாழும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இயற்கையான பாதுகாப்பு சாதனமாக குடல்வால் இருக்கிறது என்கிறார் வில்லியம் பார்க்கர். குடல்வால் அழற்சி நோய் பெரும்பாலும் வளர்ச்சியடைந்த நாட்டு மக்களைத்தான் பாதிக்கிறது.

அதாவது சுத்தமான குடிநீர், கிருமிகள் அகற்றப்பட்ட மருத்துவமனைகள், தரமான மருத்துவ வசதி பெற்றுள்ள மக்களிடம் குடல்வால் அழற்சி நோய் அதிகமாக காணப்படுகிறது. இயற்கையின் படைப்பில் குடல்வால் ஆட்டிற்குத்தாடியைப்போல ஒரு அநாவசிய உறுப்பு அல்ல. வெகுகாலத்திற்கு முன்பாக காடுகளில் சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்த நம்முடைய மூதாதையர்களுக்கு இந்த குடல்வால் ஒரு பாதுகாப்பு சாதனமாக இருந்தது என்பதே உண்மை.

தருமி said...

//மற்றொன்று பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது.//

அடடே! அம்புட்டு சுத்தமெல்லாம் எதுக்குங்க. அதுக்கும் ஒரு பதில் சொல்லிட்டு போய்டலாமே. மாட்டீங்களா? எனக்கு ஒரு சந்தேகம்; கேட்டேன்.

RMD said...

நண்பர் ராஜவம்சம் சொன்னவுடன் வில்லியம் பார்க்கரின் ஆராய்ச்சி கட்டுரையை இணையத்தில் தெடிப் பிடித்தேன். அதில் அந்த முழுக்கட்டுர்ரையுமே வெளியிட்டு இருந்தார்கள்.
அந்த ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுரையை இங்கே தருகிறேன்.
Bollinger, R.R., Barbas, A.S., Bush, E.L., Lin, S.S. & Parker. W. (2007) Biofilms in the large bowel suggest an apparent function of the human vermiform appendix. J. Theoretical Biology. 249: 826-831. PDF

This is the link

http://sciences.surgery.duke.edu/wysiwyg/downloads/BillSection1SecondInsert.pdf



5.The human appendix: useless in the face of modern medicine and sanitation practices?
1.If indeed the appendix has an important function, the fact that the human appendix is frequently removed during surgery might be of concern.
ஒருவேளை குடல் வாலானது முக்கியமான பணியை செய்து கொண்டு இருக்குமானால்,அதனை அறுவை சிகிச்சை செயவது கவனத்துக்குரியதாகும்.
2.However, to the extent that the primary function of the appendix is the one proposed herein, it might be argued that the human appendix is not important in industrialized countries with modern medical care and sanitation practices.
இந்த குடல்வாலின் பணியானது இந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது போல் இருக்கும் என்று கொண்டால் கூட ,நல்ல மருத்துவ வசதி உள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில் குடல் வால் தேவையில்லாதது என்றும் கூற முடியும்.
3. The identification of a potential function for the human appendix well suited to its location and architecture lends credence to the idea that the structure is not a vestige, but rather is derived for a specific function, consistent with conclusions drawn from evaluation of a comparative analysis of primate anatomy (Scott, 1980).
However, absolute proof of such a function may be difficult to obtain since the unique nature of the human appendix may preclude the use of animals to study the issue. Further, it is anticipated that the biological function of the appendix may be observed only under conditions in which modern medical care and sanitation practices are absent, adding difficulty to any potential studies aimed at demonstrating directly the role of the appendix in humans.

இந்த குடல் வாலில் உள்ள பாக்டீரியா உள்ளதாக இங்கு கூறப்படும் கருத்து இதற்கு முன்னால் நடந்த ஆய்வுகளுடன் ஒத்து போகிறது.(ஸ்காட் 1980)

இருந்தாலும் இக்கருத்தானது முற்றும் முழுதாக சரியானது,ஐயப்பாட்டுக்கு இடமிலலாத்து என்று மிருகங்களின் குடல் வால் பற்றிய ஆராய்ச்சியின் பிறகே கூற முடியும்.

நவீன மருத்துவ வசதிகள் இல்லாத இடத்தில் மட்டுமே இந்த குடல்வாலின் பயன் பாட்டினை குறித்த முழுமையான ஆராய்ச்சி செய்ய முடியும்
ஆக சத்தியமாக ,இது ஒரு கருத்தாக்கம் மட்டுமே

RMD said...

வில்லியம் பார்க்கரின் ஆராய்ச்சி கட்டுரையை இணையத்தில் தெடிப் பிடித்தேன். அதில் அந்த முழுக்கட்டுர்ரையுமே வெளியிட்டு இருந்தார்கள்.
அந்த ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுரையை இங்கே தருகிறேன்.

This is the link

http://sciences.surgery.duke.edu/wysiwyg/downloads/BillSection1SecondInsert.pdf

5.The human appendix: useless in the face of modern medicine and sanitation practices?
1.If indeed the appendix has an important function, the fact that the human appendix is frequently removed during surgery might be of concern.
ஒருவேளை குடல் வாலானது முக்கியமான பணியை செய்து கொண்டு இருக்குமானால்,அதனை அறுவை சிகிச்சை செயவது கவனத்துக்குரியதாகும்.

RMD said...

2.However, to the extent that the primary function of the appendix is the one proposed herein, it might be argued that the human appendix is not important in industrialized countries with modern medical care and sanitation practices.
இந்த குடல்வாலின் பணியானது இந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது போல் இருக்கும் என்று கொண்டால் கூட ,நல்ல மருத்துவ வசதி உள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில் குடல் வால் தேவையில்லாதது என்றும் கூற முடியும்.
3. The identification of a potential function for the human appendix well suited to its location and architecture lends credence to the idea that the structure is not a vestige, but rather is derived for a specific function, consistent with conclusions drawn from evaluation of a comparative analysis of primate anatomy (Scott, 1980).
However, absolute proof of such a function may be difficult to obtain since the unique nature of the human appendix may preclude the use of animals to study the issue. Further, it is anticipated that the biological function of the appendix may be observed only under conditions in which modern medical care and sanitation practices are absent, adding difficulty to any potential studies aimed at demonstrating directly the role of the appendix in humans.
இந்த குடல் வாலில் உள்ள பாக்டீரியா உள்ளதாக இங்கு கூறப்படும் கருத்து இதற்கு முன்னால் நடந்த ஆய்வுகளுடன் ஒத்து போகிறது.(ஸ்காட் 1980)
இருந்தாலும் இக்கருத்தானது முற்றும் முழுதாக சரியானது,ஐயப்பாட்டுக்கு இடமிலலாத்து என்று மிருகங்களின் குடல் வால் பற்றிய ஆராய்ச்சியின் பிறகே கூற முடியும்.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத இடத்தில் மட்டுமே இந்த குடல்வாலின் பயன் பாட்டினை குறித்த முழுமையான ஆராய்ச்சி செய்ய முடியும்.

ஆக சத்தியமாக ,இது ஒரு கருத்தாக்கம் மட்டுமே

தருமி said...

RMS Danaraj,

மிக்க நன்றி.
உங்கள் பின்னூட்டத்தில் உள்ள ஒரு பகுதியை மட்டும் இங்கு மீண்டும் இடுகிறேன் - அதன் முக்கியத்துவம் குறித்து.

இந்த குடல்வாலின் பணியானது இந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது போல் இருக்கும் என்று கொண்டால் கூட ,நல்ல மருத்துவ வசதி உள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில் குடல் வால் தேவையில்லாதது என்றும் கூற முடியும்.

மதுரை சரவணன் said...

சூடான விவாதம் .. தேவையில்லாமல் தேவையில்லாத உறுப்புகள் குறித்து உங்களிடம் பேசி உண்மையாய் இருக்கும் உறுப்பான வாயைக் கொடுத்து மாட்டீக்க விரும்பவில்லை. ஆனாலும் கடவுள் உள்ளார் என்று நான் சொன்னாலும் நீங்கள் சொல்லுவது எல்லாம் சரியெனவேப் படுகிறது.கடவுள் உள்ளார் என்பதை விட அதிகம் தன்னை தான் ஆராய்வது ஆன்மிகம் எனப்படுகிறது...

Anna said...

Dharumi Sir,

Just a suggestion - It might be more clearer if you made the definition of Vetigial organs more inclusive.

Vestigiality describes homologous characters of organisms that have seemingly lost all or most of their original function in a species through evolution (from wikipedia).

Appendix இன் original function Dharumi sir கூறியபடி, "ஏனைய தாவர உண்ணிகளில் இது மிக முக்கியமான உறுப்பாகச் செயல்படுகிறது. செல்லுலோஸை செரிக்க இந்த உறுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது."

ஆனால் மனிதர்களில் இச் செயலை அது செய்யவில்லை, செய்யும் capability உம் இல்லை. பல‌ மனிதர்களில் வேறுபடும் அளவுகளிலும் சில மனிதர்களில் இல்லாமலும் இருக்கிறது.

மனிதர்களில் இவ்வங்கத்திற்கு ஏதாவது துணைச்செயல்கள் இருக்க சாத்தியமுண்டா? உண்டு.

What they propose in the article is very interesting.

அவர்கள் விட்ட ஒரே பிழை. vestigial organs இன் definition இல் தான், at least in their media release.

This site has some excellent info on the vestigiality of Appendix.

தருமி said...

ராஜவம்சம்,
உங்கள் தொடுப்புக்கு நன்றி. முழுவதும் வாசித்து விட்டேன். அதற்குரிய சரியான பதிலாக The Analyst கொடுத்த விளக்கமும், தொடுப்பும் அமைகின்றன. இரண்டையும் வாசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாக வாசித்து விடுவீர்கள். ஆனால் மற்றவர்களுக்காக அப்பதிவில் உள்ள சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்கு தருகிறேன்.


speculative arguments against vestiges based upon their possible functions completely miss the point.

there is no evidence from any mammal suggesting that the hominoid vermiform appendix performs functions above and beyond those of the lymphoid-rich caeca of other primates and mammals that lack distinct appendixes.

over a century of medical evidence has firmly shown that the removal of the human appendix after infancy has no obvious ill effects (apart from surgical complications, Williams and Myers 1994)

an enormous amount of medical research has centered on the human appendix, but to date the specific function of the appendix, if any, is still unclear and controversial in human physiology (Williams and Myers 1994, pp. 5, 26-29).

Using this incorrect and nonevolutionary definition, it is logical to conclude that a structure is not vestigial if its function is discovered.

The human appendix has lost a major and previously essential function, namely cellulose digestion. Though during primate evolution it has decreased in size to a mere rudiment, the appendix retains a structure that was originally specifically adapted for housing bacteria and extending the time course of digestion.

For these reasons the human vermiform appendix is vestigial, regardless of whether or not the human appendix functions in the development of the immune system.

ஆகவே இரண்டாவது கேள்வியோடு முதல் கேள்வியும் பதிலை எதிர்பார்த்து நிற்கின்றன .........

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

விளக்கங்களுக்கும், தொடுப்பிற்கும் மிக்க நன்றி, The Analyst

கோவி.கண்ணன் said...

மலர்களின், பறவைகளின் சுண்டி இழுக்கும் நிறங்கள் பற்றி பரிணாமம் என்ன சொல்கிறது ? நிறங்களை அமைத்துக் கொண்டது, அதுவும் ஒரு பரிணாமம் என்று சொல்ல முடியுமா ? தனக்கேற்ற வண்ணம் இதுதான் என்று எந்த ஒரு செடியும் முடிவு செய்து கொள்ள பரிணாமத்தில் என்ன வழி உள்ளது ?

Anna said...

"மலர்களின், பறவைகளின் சுண்டி இழுக்கும் நிறங்கள் பற்றி பரிணாமம் என்ன சொல்கிறது ? நிறங்களை அமைத்துக் கொண்டது, அதுவும் ஒரு பரிணாமம் என்று சொல்ல முடியுமா ? தனக்கேற்ற வண்ணம் இதுதான் என்று எந்த ஒரு செடியும் முடிவு செய்து கொள்ள பரிணாமத்தில் என்ன வழி உள்ளது ?"

மலர்களின் தற்போதைய நிறங்களுக்கு முக்கிய காரணம், selective breeding, மனிதர்களால் அல்ல, பூச்சிகளாலும் பறவைகளாலும்.

மலர்களின் மகரந்தங்களை ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு காவிச்சென்று அவற்றின் sexual reproduction ன் success க்கு பூச்சிகளும் சில பறவைகளும் மிக முக்கிய காரணமாகின்றன. இச்சேவைக்கு பூக்கள் கொடுக்கும் விலை தேன். எந்தப் பூக்களையும் அதன் தேனையும் பிடிக்கிறதோ அவைகளில் போய்த் தேன் குடிக்கும் போது பூச்சிகளிலோ பறவைகளிலோ ஒட்டிக்கொள்ளும் மகரந்தங்கள் அவர்களோடு பயணித்து
அவை அதே வகை பூக்களில் வேறு தாவரத்தில் தேன் குடிக்கும் போது அப்பூக்களைக் கருக்க்ட்டுவதால் அந்த இனத்தாவரத்தின் reproductive success, which leads to those particular plants 'naturally selected' due to their reproductive fitness. பூச்சிகள் எவ்வ‌ளவோ ஆயிரமாயிரம் ஆண்டுகள் இயற்கையாக செய்து கொண்டிருந்ததை இப்போ மனிதர்களும் எமக்கு வேண்டிய மாதிரி selective breeding ஆல் மெருகூட்டிக்கொண்டு வருகிறோம். இப்போதிருக்கும் பூத்தாவரங்களின் மூதாதையர்கள் எவ்வளவோ வித்தியாசமானவர்கள். நாம் எப்படி ஓநாய்களிலிருந்து நாய்களை உருவாக்கினோமோ அவ்வாறே தான் இதுவும்.

அநேகமான பறவைகளின் characteristics ம் mate ஜ attract பண்ணி இனப்பெருக்க success ஜக் கூட்டுவதற்கே.

Thekkikattan|தெகா said...

அநேகமான பறவைகளின் characteristics ம் mate ஜ attract பண்ணி இனப்பெருக்க success ஜக் கூட்டுவதற்கே///

இதையும் சேர்த்துக்கோங்க அப்படியே - அதன் அடிப்படையிலிமே தாவர இனங்களில் பழங்களின், காய்களின் மணமும்; பூக்களில் வண்ண வண்ணமுமாக. சுருக்கிச் சொல்வதனால் தன்னை அவைகள் இனப்பெருக்கத்திற்கென மார்க்கெட்டிங் செய்து கொள்வதற்காக பரிணாம வாயிலாக தேர்ந்தெடுத்துக் கொண்ட குணயியல்பு என்றே கூறலாம் :-)

யூஸ்ஃபுல்லானா கட்டுரை...

suneel krishnan said...

பரிணாமம் குறித்த மூன்று தொகுதிகளையும் வாசித்தேன் ,மேலும் சிந்திக்க பல புதிய வாயில்கள் திறக்க பட்டுள்ளது

ரிஷபன்Meena said...

சும்மா பொழுது போக்குக்கு கடவுள் மறுப்பு என்று எழுதாமல் தீர்க்கமாக அதை ஆராய்ந்து எழுதுவதால் உங்களின் பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர இயலாது.

கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை இரண்டுமே இரு வேறு பாதைகள் எதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.

கடவுள் என்ற உருவாக்கம் மனிதர்களை மனது ரீதியாக ஒரு கட்டுக்குள் வைக்கிறது என்று நம்புகிறவன் என்றாலும் கூட, பூசி மொழுகி உங்களை அலுப்புக்குள்ளாக்க விரும்பவில்லை.

yasir said...

தேவையற்ற குடல்வால் உறுப்பை கடவுள்(?) படைத்து விட்டு, அவன் படைத்ததை தேவையில்லை என ஆணின் பிறப்புறுப்பின் நுணித்தோலை மனிதனால் நீக்கம் செய்யும் முறை மட்டும் ஏனோ? அது தேவையில்லை எனில் அதை நீக்கியே படைத்திருக்கலாமே? என்ன தேவைக்காக அதை படைத்தான்? எதற்காக நீக்கவேண்டும்? நியாயமான காரணம் என்றாலும் அந்த நியாயம் ஏன் படைத்தவனுக்கு தெரியவில்லை?

Unknown said...

மறுமொழி நீளவே தனி பதிவாக இட்டுள்ளேன்.

அர்த்தமுள்ள உறுப்புகளும் ஆதாரமில்லாத கேள்விகளும் - பரிணாமம்: http://carbonfriend.blogspot.com/2010/11/blog-post.html

ராஜரத்தினம் said...

எனக்கு கூட நிறைய கேள்விகள் உண்டு.
1. முகத்தில் முடி ஏன்? ( இத்தனை முறை மழித்தும் கூட பல தலைமுறைகளாக)

2. அக்குள் முடி இன்னும் ஏன்?

3. நமக்கு இன்னும் பல வியாதிகளுக்கு உடம்பு பரிணாம தத்துவத்தின் படி எதிர்ப்பு சக்தி வரவில்லையே?

4.உள்ளங்கால் சதை அத்தனை உறுதியாக இல்லையே?

தருமி said...

இப்பதிவிற்குப் பதிலாக கார்பன் கூட்டாளி ஒரு தனி பதில் பதிவு போட்டுள்ளார். அப்பதிவிற்குப் பதிலாக The Analyst ஒரு பதிலளித்துள்ளார். அப்பதிவை இங்கே காண்க ....

Dr.Dolittle said...

சார் பதிவை இப்பொழுதுதான் படித்தேன், சூப்பர் , பரிணாமம் பற்றி எளிதாக விளக்கி இருந்தீர்கள், தாங்கள் கூறியது போல பழங்கால குதிரைகளுக்கு மூன்று குளம்புகள் இருந்தன ( அவற்றின் சொந்தங்களான tapir , rhino போன்றவற்றுக்கும் இப்போதும் மூன்று குளம்புகள் தான் ), தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் , மேலும் evalution கருத்துக்கு வலு சேர்க்க , பாம்பின் செவி அமைப்பு (http://beta.revealedsingularity.net/article.php?art=mammal_ear ), nephron னின் embryology (ontogeny recaptulates phylogeny தியரி ) , salamander , பாம்பு போன்றவற்றின் தொடர்புகள் ,நாய் டால்பின் னின் தொடர்பு போன்றவற்றையும் எழுதுங்கள் .

Dr.Dolittle said...

அய்யா சகோதர கார்பன் கூட்டாளியின் மற்றொரு கேவிக்கு பதில் ளித்து உள்ளேன் , படித்து பாருங்கள்
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_03.html

Post a Comment