Friday, November 19, 2010

457. நம் கண்ணைத் திறக்க நமக்கு ஓர் உரைகல் தேவை

*

இப்பதிவில்  shanawazkhan, G u l a m, Haja என்ற மூவர் கொடுத்துள்ள சில விவாதங்களுக்குப் பதில் கூற ஆரம்பித்து, அது நீளமாக அமைந்ததால் அதை ஒரு தனியிடுகையாக என் பதிவில் இடுகிறேன். அவர்கள் விவாதங்களை நீல வண்ணத்தில் கொடுத்துள்ளேன்.
I
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (shanawazkhan)

நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளீர்கள். ஒரு மனைவியோடு இருப்பவன் பல பெண்களோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். அதைத் தடுக்க 4 மனைவிகள் !!!!!!!!!!!!!! - நல்ல தத்துவம்.

எனக்குத் தெரிந்த ஆண்கள் - இஸ்லாமியரையும் சேர்த்து - ஒரு பொண்டாட்டிக்காரங்கதான். நீங்க சொல்றது அதில் யாருக்கும் பொருத்தமில்லை. நீங்கள் யாரை நினைத்து இப்படி சொன்னீர்களோ! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிறீர்களோ?

//பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், ... இதுப் போன்ற அவல நிலை தோன்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கூறிய செய்தி தான் இந்த 4 திருமணம்.// _ Haja

அடுத்த நச் தத்துவம். நீங்க சொல்ற மாதிரி 4 திருமணம் பண்ற பசங்க நிச்சயமா அதோடு நிக்க மாட்டாங்க. அரபு நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வந்து, சில நாட்களுக்குத் திருமணம் செஞ்சு பொண்ணுகளை விட்டுட்டு போனதாக சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. உங்க மதத்தில் அந்த மாதிரி திருமணத்திற்கு ஏதோ ஒரு பெயர் இருப்பதாகப்  படித்தேன். (பெயர் என்ன?) அவங்க ஊர்ல நாலு இருந்தும் பத்தலைன்னு இங்க வந்தாங்க அவங்க. அவுத்து உட்டுட்டா, மேய்ற மாடு அப்படித்தான் எங்க வேணும்னாலும் எபப்டி வேணும்னாலும் மேயும்.

நீங்க சொன்னது என்ன philosophy-ன்னு எனக்கு தெரியவில்லை. பொதுவாக எல்லா ஆண்களையும் கீழ்த்தரத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.

இதைவிடவும் இன்னொரு பொன் முத்து சொல்லியிருக்கீங்க: //விபச்சாரத்தையும், சீன்ன வீடு பிரச்சனைக்கும் அடியோடு ஒழிக்க ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துங்கள்.// (குலாம்.)
நீங்க சொல்றது உண்மையாக இருந்தால் முஸ்லீம் நாடுகளில் விபச்சாரம் என்பதே இல்லையா? முற்றாக ஒழிந்து விட்டதா? நடைமுறை அப்படியில்லையே.

இப்படி 4 பொண்டாட்டி இருந்துட்டா அவனவன் நல்லவனா, அல்லாவுக்குப் பிடிச்சவனா இருந்துருவான். இல்லைன்னா அவன் விபச்சாரத்திற்குப் போய்விடுவான். ஒரு பொண்டாட்டி வச்சிருக்கிறதால்தான் விபச்சாரமும், சின்ன வீடும் -- பயங்கரமான கருத்துக்கள் ............. 

கீதாச்சாரம் அப்டின்னு ஒண்ணு அச்சடிச்சி ரூம்ல மாட்டியிருப்பாங்க. இதையும் அப்படி செய்யலாம். அத்தனை சத்தான முத்துக்கள் இவை. AIDS-க்கு பாதுகாவலா ஆணுறை பயன்படுத்துங்கள் என்பதற்கு ஏகோபித்த கோபக்குரலில் மறுப்பு கொடுக்கும் நீங்கள், இப்படி விபச்சாரத்தை ஒழிக்க ஒரு புது வழியை உங்கள் மார்க்கத்தின் மூலம் கொடுப்பது நன்றாக உள்ளது. நாலு வச்சிருக்கவன்தான் சார், ஏற்கெனவே சொன்ன மாதிரி, அவுத்த உட்ட மாடு மாதிரி எங்கெல்லாமோ போவான். நீங்க என்னடான்னா, வீட்ல நாலு இருந்தா மனுசன் ஒழுங்கா ஆகிடுவான் அப்டின்றீங்க ... அப்பதான் சார், நிலைமை பல காரணங்களால் ரொம்ப மோசமாயிரும். விளக்கமெல்லாம் இங்கே எதற்கு .....

//இதில் சமுகத்திற்கு என்ன பிரச்சனை ஐயா?// -(குலாம்)

இப்படி ஒரு அணுகுண்டு. நாலு மனைவி வச்சிக்கிட்டா சமூகத்திற்கு என்ன பிரச்சனை என்று எளிதாகக் கேட்டு விட்டீர்கள்!  அடக் கடவுளே!!

மதம் எப்படி மனுஷங்களை ஆட்டுவிக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு பெரிய அத்தாட்சி ஏது? நிஜமாகவே இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி உங்க மனசாட்சி உங்களை அவிழ்த்து விட்டது??!!  நம் சமூகக் கட்டுப்பாடு என்று ஒன்றுள்ளது. அது உங்களுக்குத் தேவையில்லை; குரான் தான் எங்களுக்கு எல்லாம் என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் விவாதம்.  தனி மனித ஒழுங்கு, loyalty to your spouse, -- இப்படி பல நல்ல காரியங்கள் நீங்கள் சொல்லும் பல தாரத்தால் அழிந்தொழிந்தல்லவா போய்விடும். நிஜமாகவே உங்களுக்கு ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற கருத்து தவறாகத்தான் உள்ளதா?

ஆளுக்கு நாலுன்னு வச்சிக்கிட்டா ... கடவுளே! நினச்சி பார்க்கவே பயமா இருக்கே. நீங்க ரொம்ப லைட்டா சொல்லிட்டீங்க ...

முகமது காலத்தில் நிறைய சண்டைகள்; சச்சரவுகள்; போர்க்களங்கள். நிறைய ஆண்கள் இறந்து போயிருப்பார்கள். பெண்கள் அதிகமாக வாழ்வில்லாமல் இருந்திருப்பார்கள். ஆண் நான்கு பெண்களை - அதை ஏன் முகமது நாலு என்று வைத்தாரென்று தெரியவில்லை;  - திருமணம் செய்து கொள்ளலாம் என்று முகமது கூறினார் என்றால் அதில் தவறேதும் இல்லை. ஒரு சமூகக் காரணியாக அதை ஒரு சமூக கடமையாகக் கூட நினைத்து ஒப்புக் கொள்ளலாம். அந்தக் காலத்திற்கு அது ஒரு சரியான தீர்வு என்று கொள்ளலாம். ஆனால் அன்று சொன்னது அல்லாவே சொன்னார் என்பதுவும், அதுவும் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு அமைப்பு இது என்பதுவும், கடவுளே இப்படிச் சொன்னார் என்பது கேலிக்குரியவையே ஒழிய வேறொன்றுமில்லை.

அதிலும் எல்லோருக்கும் 4; எனக்கு மட்டும் அந்தக் கணக்கில்லை என்கிறார் உங்கள் முகமது. ஏனென்று கேட்டால் அல்லாவே உத்தரவு கொடுத்துட்டார் என்கிறீர்கள். நான் இதைப் பற்றி சொன்னதைத் திரும்பவும் சொல்கிறேன். அல்லா எனக்கு மட்டும் இந்த exemption கொடுத்திருக்கிறார் என்றால் அது ஒரு குற்றவாளியே தனக்கு சாதகமான சாட்சியாக வாக்குமூலம் கொடுப்பது போலல்லவா உள்ளது.

அடுத்து, எதற்காக முகமதுவிற்கு அந்த exemption? ஆயிஷா என்ற  சின்ன பிள்ளையைக் கல்யாணம் செய்வது அரசியலுக்காக என்பீர்கள்; ஜேனாப் - வளர்ப்பு மகன் தன் மனைவியை தலாக் சொல்லிவிட்டால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; ஏனெனில் வளர்ப்பு மகனை உண்மையான மகனாக நினைக்கக்கூடாது என்று காட்டுவதற்காக இந்த திருமணம் என்ற காரணம்; ஜுவேரியா என்ற தன்னிடம் தோற்ற எதிரியின் மனைவியைப் பேரம் பேசி முகமது திருமணம் செய்வது ..
... இதெல்லாம் என்ன சமூக / தனி மனித நாகரீகமோ; நியாயமோ?! தெரியவில்லை.

========================================================
II
ஆண்களுக்கு சுவனத்தில் என்னென்னவோ காத்திருக்கிறது என்று குரானில் சொல்லியுள்ளதே; ஏன் பெண்ணுக்குச் சொல்லவில்லை; பெண்ணுக்கு சுவனத்தில் என்ன கிடைக்கும் என்று கேட்டிருந்தேன்.

//ஆணை இங்கு முன்னிருத்தி சொல்கிறானே தவிர பெண்ணிற்கு அஃது கிடையாது என்று சொல்லவில்லை.//- G u l a m

ஓ! பெண்ணிற்கு 'அஃது உண்டு' என்கிறீர்களா? நல்லது. அந்த 'அஃது' என்னென்ன என்றுதானே கேட்கிறேன். ஏன் அதை சொல்லவே மாட்டேங்றீங்க? ..... ஆண்களுக்கு சுவனத்தில் என்னவென்று தெரியும். நிறைய இருக்கு. அதுபோல் பெண்களுக்கு என்ன? குலாம் வேறு இப்படி சொல்லியிருக்கிறார்: //அல்லாஹ் நாடினால் இது குறித்து மேலதிக விளக்கம் தருகிறேன்// G u l a m

இப்போதைக்கு நானும் நாடுகிறேன்.

---------------------------------------------------------------------------------------
III




1.***Sin of Khalwa  - ஒரு ஆணோடு ஒரு பெண் தனித்து இருந்தால் பாவம். அந்த பாவத்தை மாற்ற பெத்த பிள்ளைக்கு ஒரு தாய் முலைப்பால் குடுக்குறது மாதிரி அந்த ஆணுக்கு அந்த பெண் தாய்ப் பால் கொடுத்துட்டா அவன் கூட தனியா இருக்கலாம் என்பது எப்படிப்பட்ட தத்துவம்! (இது என்ன ஹத்தீஸ்- strong /weak - என்று தெரியவில்லை; ??)

2.***லாய்லாஹ் - ஆண்களுக்கு கன்னி கழியாத பெண்கள் (55:56-57, 56:7-40) பையன்கள் (52:24, 56:17) சுவனத்தில் நிறைய தரப்படும்.

3. ***4 மனைவி + போனசாக அடிமைகள் - இவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள் அப்டின்ற "தேவ வாக்கு"

4. ****எல்லாத்துக்கும் 4 மனைவி வரை லைசன்ஸ்; ஆனால் முகமதுவிற்கு மட்டும் நிறைய - எல்லா வயதிலும். அதிலும் வளர்ப்பு மகன் மனைவியை -ஜேனாப்- தன் மனைவியாக்கிக் கொண்டது; 9 வயதுப் பெண்ணை -ஆயிஷா- மனைவியாக்கியது; போரில் தோற்ற தலைவனின் மனைவியை -ஜுவேரியா - தனதாக்கியது ... இந்தக் கதைகள்.

5. **** உங்கள் மதத்தை மறுப்பவர்களுக்கான தண்டனைகள்:


 //உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0// - Arun

இந்த மதத்தீவிரம் எப்படி "கடவுளாலேயே" கொடுக்கப்பட்டிருக்க முடியும்?

என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண். 

-- நான் இதுவரை இருபது தடவையாவது பின்னூட்டங்களில் சொல்லியிருப்பேன். மேலே சொன்னவைகளை இஸ்லாமில் இல்லாத உங்கள் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி, அவைகளுக்கு அவர்கள் எவ்வாறு react செய்வார்கள் என்று பாருங்கள் என்று சொல்லியுள்ளேன்.

இதிலும் ஒரு பிரச்சனை. இஸ்லாம் மத தொடர்பான பதிவர்கள் யாரும் இஸ்லாமைத் தவிர வேறு எதுவும் எழுதுவதில்லை. ஒரு பிரபல பதிவரைக்கூட ஒரு தொடர் பதிவில் வரவேற்றேன். அவருக்கு இஸ்லாமைத் தவிர ஏதும் எழுதமாட்டாரென்பது அப்போது தெரிந்தது. எல்லோரும் நன்றாக 'மத ஊழியம்' செய்கிறீர்கள். சரி .. ஆனால் இதுவரை நீங்கள் எழுதியவைகளில் இஸ்லாமிய பதிவர்களைத் தவிர வேறு யாரும் வந்து, 'ஆஹா! நீங்கள் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்' என்று கூறியதை நான் பார்க்கவிலை. அதோடு, என்னோடு இன்னும் வால்ஸ், கல்வெட்டு, The Analyst போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அதிகமாக வந்து உங்கள் பதிவுகளில் கருத்துக்களைப் பகிருவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும், அதில் ஒன்று - என்ன சொன்னாலும் இவர்கள் எங்கே கேட்கப்போகிறார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆகவே நீங்கள் இஸ்லாமியரைத் தவிர வேறு யாரையும் நண்பர்களாக அண்டுவதில்லை என்றே நினைக்கிறேன். பாவம் .. எப்படி நீங்கள் நண்பர்களைத் தேடி இதையெல்லாம் சொல்ல முடியும்?!

எந்தக் கேள்விக்கும் நீங்கள் எப்போதும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிடுவீர்கள்: '1400 வருஷக் கதை & எல்லாவற்றிற்கும் இஸ்லாமில் பதில் உண்டு'. அதோடு நான் சொல்வதெல்லாம், 1400 வருஷக்கதையை மனுக்குலத்திற்கே சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு, பிற சமய நண்பர்கள் ஒரு நாலு பேரிடம் சொல்லி அவர்களின் பதிலையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணைத் திறக்க நம் கருத்துக்களுக்கு உரைகல் தேவை. அதைத்தான் செய்யச் சொல்கிறேன். மற்றவர்களுக்கு உங்கள் மதம் எந்த உணர்வுகளை எழுப்புகிறது என்று உங்களுக்கும் கொஞ்சமாவது தெரிய வேண்டாமா? முயற்சி செய்யுங்களேன் ஒரு முறையாவது. நான் சொல்லியுள்ள அந்த ஐந்தை மட்டும் சொல்லுங்களேன். அது போதும். அதை விட்டு விட்டு குரானை ஒரு முறை வாசியுங்கள்; பதில் கிடைத்து விடும் என்ற வேலை எதற்கு? கேட்ட, வாசித்த கொஞ்ச பகுதியிலேயே எக்குத் தப்பான கேள்விகள்;

முழுவதையும் வாசித்தால் ....???


*

19 comments:

சீனு said...

// //உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0
//

http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TOZjiUh6EsI/AAAAAAAAA2c/vGOJN2CT1S8/s1600/beheadvi-vi.jpg

துளசி கோபால் said...

நாலு பொம்பளைங்க அடிச்சுக்கிட்டுச் சண்டை போடும்போது அதுக்கு நாட்டாமை செஞ்சே ஓய்ஞ்சுருவார் அந்த ஆள்.

சக்களத்திச் சண்டையில் வேற யாரும் தலையிடக்கூடாது பாருங்க:-))))

அப்புறம் வெளியே எங்கே போய்............. என்னத்தை மேய்வது!!!!!!!!!

உமர் | Umar said...

தங்கள் மதத்தில் எவ்வித குறைகளுமே கிடையாது என்று சிறு வயதிலிருந்தே மூளையில் உறையவைத்து வளர்க்கப்பட்டவர்கள். முன்வைக்கப்படும் விமர்சனம் சரியானதா, ஏற்புடையதா என்றெல்லாம் ஆராயும் அளவுக்கு சிந்தனைத் திறன் அற்றவர்கள்.

இவர்களைப் போன்று மத ஊழியம் செய்பவர்களைத் தவிர, மற்றவர்கள் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

இஸ்லாத்தைத் துறக்கும் இளைஞர்களும் இன்று பெருகி வருகின்றனர். அதுவே ஒரு ஆரோக்கியமான மாற்றம்தான்.

எங்கள் குடும்பத்தில் இன்னொருவரும் முழுமையான இறை மறுப்பாளராக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

கல்வெட்டு said...

.

பேராசான்,
இது ஒரு மாயச் சூழல். மத, சாதி, கட்சி இன்னபிற அமைப்புகளில் நேர்ந்துவிடப்பட்டவர்களிடம் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை.

:-((((

எனது பதிவில் இருந்து சில...

ஒரு பெண் தனக்கு இரத்த உறவு இல்லாத ஒரு வயதுக்கு வந்த ஆடவனுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சில ஹதீஸ்கள் சொல்கிறது. சவூதி அறிஞர்கள் பெண்கள் ட்ரைவருடன் காரில் செல்ல கட்டுப்பாடு விதிக்கும் வழிகள் இந்த ஹதீஸ்களில் சொல்லப்படும் விசயங்களாகவே உள்ளது. :-(((

* சிலர் வழக்கம் போல இது உண்மையான ஹதீஸ் அல்ல எனலாம்.

* சிலர் இது சரியான மொழிபெயர்ப்பு இல்லை எனலாம்.

எது எப்படியோ இப்படியும் சிலவகைகள் உள்ளது என்பது மறுக்க முடியாதது.

இதில் உள்ளதி உங்கள் பதிவில் நான் பின்னூட்டமாக எழுதினால் சிலர் எழுதும் 18+ க்கும் உங்களின் பதிவிற்கும் வித்தியாசம் இருக்காது. எனவே சுட்டியுடன் முடித்துக் கொள்கிறேன்.

‍‍==========================
Sahih Muslim - 08) Marriage

http://iknowledge.islamicnature.com/hadith/scholar/muslim/book/008/

Hadith 3424

Hadith 3425

Hadith 3426

---------------------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍

நான் சொல்லியுள்ள தளம் மிகச் சிறந்த ஒரு அரபி அறிஞரால் மொழிபெயர்க்கப்பட்டது.

அதன் தன்மையை அறிய....

1. இந்த தளம் http://iknowledge.islamicnature.com தனது அரபி -> ஆங்கில மொழிபெயர்ப்பை சரிபார்த்தலுக்கு ஆதரமாக இன்னொரு தளத்தை "http://Tanzil.info" சுட்டுகிறது. பார்க்க‌ http://iknowledge.islamicnature.com/credits.php

2. இந்த http://tanzil.info/ தளமானது Hamid Zarrabi-Zadeh என்பவரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது

3. Hamid Zarrabi-Zadeh இவரைப் பற்றி அறிய இந்த தளத்தில் http://tanzil.info/ இடது பக்க மேல் பகுதியில் "about" என்ற பொத்தானை அமுக்கினால் வரும் பகுதியில் இருந்து அறிந்து கொள்ளலாம்

4. "Hamid Zarrabi" பற்றியும் இந்த Tanzil புராஜெக்ட் பற்றியும் மேலும் அறிய நேரடிச் சுட்டிகள்
http://cg.scs.carleton.ca/~zarrabi/
http://tanzil.info/wiki/Tanzil_Project


*

RMD said...

ஒரு செயலை செய்பவர்கள்தான் அத்ற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
எனக்கு தெரிந்த இஸ்லாமியர்களில் 99% ஒருமனைவியோடு குடும்பம் குழந்தைகள் என்று வாழ்ந்து வருபவர்கள். விதி விலக்குகள் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு

இந்த பல தார மணத்தை ஆதரிப்பவர்கள் பல தார மணம் செய்தவ‌ர்களாக இருந்தால் அதன் நன்மைகளை கூறுவார்களாயின் நன்று.

உன் மத புத்தகத்தில் இது எழுதி இருக்கிறது அனுமதிக்கப் பட்டு உள்ளது என்று சாதாரண மக்களை தவறான வழியில் நடத்துவது மதவாதிகளே.

இந்த ஹதிதை பாருங்கள் முகமது தன் மருமகன் அலி இன்னொரு திருமணம் செய்ய முன்றதும் அதனை தடுக்க என் மகளை விலக்கி விட்டு அதனை செய் என்று கூறுகிறார்.இதனால் தன் மகள் பாத்திமா வேதனை படுவார் என்று கூட கூறுகிறார்.

5230. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை என் வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள்.

இதையெல்லாம் உதாரணமாக எடுக்கக் கூடாதா?.

தருமி said...

கும்மி, கல்வெட்டு,

கல்வெட்டு குறிப்பிட்ட மூன்று ஹதீஸ்களும் ஒரே விதயத்தை தானே பேசுகின்றன?

இதே போல பல ஹதீஸுகளில் ஒரே விசயம் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வது போல் உள்ளதே. ஏன்?

கல்வெட்டு said...

பேராசான்,,
நிச்சயம் தெரியவில்லை. :-((

இவை எல்லாம் ஒருவர் சொன்ன /பார்த்த/அனுபவ உரைடால்கள் பலரால் தொகுக்கப்பட்டது. இடியாப்பச் சிக்கல் நிறைந்தது. ஏதோ முன்னோர்கள் அப்படி இருந்திருக்காங்க என்று விட வேண்டியதுதான். இவை எல்லாவற்றையும் தகவலாகவும் ,வரலாற்று ஆவணமாகவும் பார்க்கலாம்.

புனிதம் தேடி முன்னோர்கள் சொன்னதையே இப்பவும் செய்கிறேன் (இறைவனின் சொல் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் என்ற ரேஞ்சில்) என்றால் அசிங்கமாகத்தன் இருக்கும்.

குஜராத் பக்கம் சமணச் சாமிகள் ரோட்டில் அம்மணமாக ஊர்வலம் போவதும், பல பெண்கள் அவர்களுடன் செல்வதும் கொண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சூரத்தில் பகலில் மெயின் ரோட்டிலேயே இப்படி நடக்கும்.

.

உமர் | Umar said...

//இதே போல பல ஹதீஸுகளில் ஒரே விசயம் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வது போல் உள்ளதே. ஏன்? //

ஹதீஸ்கள், முகம்மது இறந்து இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகே தொகுக்கப்பட்டன. அத்தகைய காலகட்டத்தில் தொகுப்பாசிரியருக்கும், முகம்மதிற்கும் இடையில் பல தலைமுறையினர் (6 அல்லது 7 - (சில மூன்று கால் நண்பர்களுக்காக : ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள்)) வாழ்ந்து, செவிவழியாக அவை கூறப்பட்டு வந்துள்ளன. ஒரே விஷயம், பல்வேறு குடும்பங்களின் உறுப்பினர்களாலும் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு கூறப்பட்டு வந்துள்ளன.

உதாரணத்திற்கு, முகம்மதின் நண்பர் A என்று ஒருவர்; B என்று ஒருவர். முகம்மது ஒரு கல்லின் மீது நின்று தனது வலது கையை உயர்த்தி ஒருவரைச் சுட்டி ஒரு விஷயம் சொல்லுகின்றார். அங்கு நடைபெற்ற விஷயத்தை A, தனது மகன் A1 இடமும், தனது நண்பர் X இடமும் கூறுகின்றார். அதே விஷயத்தை, B தனது மகன் B1 இடம் கூறுகின்றார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு A1 தனது மகன் A2 விடம் அதனை கூற, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அது செல்கின்றது. A2 -> A3 -> A4 -> A5 -> A6. இதேபோல் X இடம் கூறப்பட்ட தகவல் பல்வேறு நபர்களுக்கும் வழிவழியாக சொல்லப்பட்டு, Y இடம் வந்து சேர்கின்றது. B1 இடம் கூறப்பட்ட தகவல், B7 இடம் வந்து சேர்கின்றது.

புகாரி ஹதீஸ்களை தொகுப்பதற்காக A6, Y, B7 ஆகிய மூவரையும் சந்திக்கின்றார். A6 முகம்மது கல்லின் மீது நின்று கையை உயர்த்தி, பேசிய விஷயத்தை குறிப்பிடுகின்றார். B7 வலது கையை உயர்த்தி பேசிய விஷயத்தைக் குறிப்பிடுகின்றார். Y முகம்மது கூறியதைக் குறிப்பிடுகின்றார்.

மூன்று நபர்களும் கூறியது ஒரே விஷயம்தான் என்றாலும், அது அப்படியே மூன்று ஹதீஸ்களாகப் பதியப்படுகின்றது. செவிவழியாக சொல்லப்பட்டு வந்த விஷயங்கள் என்பதால், ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரிலும் சில வார்த்தைகள் கூடவோ, குறையவோ இடம்பெறும்.

உமர் | Umar said...

//இதே போல பல ஹதீஸுகளில் ஒரே விசயம் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வது போல் உள்ளதே. ஏன்? //

ஹதீஸ்கள், முகம்மது இறந்து இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகே தொகுக்கப்பட்டன. அத்தகைய காலகட்டத்தில் தொகுப்பாசிரியருக்கும், முகம்மதிற்கும் இடையில் பல தலைமுறையினர் (6 அல்லது 7 - (சில மூன்று கால் நண்பர்களுக்காக : ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள்)) வாழ்ந்து, செவிவழியாக அவை கூறப்பட்டு வந்துள்ளன. ஒரே விஷயம், பல்வேறு குடும்பங்களின் உறுப்பினர்களாலும் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு கூறப்பட்டு வந்துள்ளன.

உதாரணத்திற்கு, முகம்மதின் நண்பர் A என்று ஒருவர்; B என்று ஒருவர். முகம்மது ஒரு கல்லின் மீது நின்று தனது வலது கையை உயர்த்தி ஒருவரைச் சுட்டி ஒரு விஷயம் சொல்லுகின்றார். அங்கு நடைபெற்ற விஷயத்தை A, தனது மகன் A1 இடமும், தனது நண்பர் X இடமும் கூறுகின்றார். அதே விஷயத்தை, B தனது மகன் B1 இடம் கூறுகின்றார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு A1 தனது மகன் A2 விடம் அதனை கூற, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அது செல்கின்றது. A2 -> A3 -> A4 -> A5 -> A6. இதேபோல் X இடம் கூறப்பட்ட தகவல் பல்வேறு நபர்களுக்கும் வழிவழியாக சொல்லப்பட்டு, Y இடம் வந்து சேர்கின்றது. B1 இடம் கூறப்பட்ட தகவல், B7 இடம் வந்து சேர்கின்றது.

புகாரி ஹதீஸ்களை தொகுப்பதற்காக A6, Y, B7 ஆகிய மூவரையும் சந்திக்கின்றார். A6 முகம்மது கல்லின் மீது நின்று கையை உயர்த்தி, பேசிய விஷயத்தை குறிப்பிடுகின்றார். B7 வலது கையை உயர்த்தி பேசிய விஷயத்தைக் குறிப்பிடுகின்றார். Y முகம்மது கூறியதைக் குறிப்பிடுகின்றார்.

மூன்று நபர்களும் கூறியது ஒரே விஷயம்தான் என்றாலும், அது அப்படியே மூன்று ஹதீஸ்களாகப் பதியப்படுகின்றது. செவிவழியாக சொல்லப்பட்டு வந்த விஷயங்கள் என்பதால், ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரிலும் சில வார்த்தைகள் கூடவோ, குறையவோ இடம்பெறும்.

Thekkikattan|தெகா said...

இது ஒரு மாயச் சூழல். மத, சாதி, கட்சி இன்னபிற அமைப்புகளில் நேர்ந்துவிடப்பட்டவர்களிடம் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை.//

தருமி, இப்படியாகத்தான் எனக்கும் தோணச் செய்கிறது. இருப்பினும் உங்க விடா முயற்சியை என்னவென்று சொல்லுவது.

இருங்க படிச்சிட்டு வாரேன்... ஒரே நேரத்தில நாலா... அய்யோ சாமீ, அந்தாளு கடவுளுடோய் :)

yasir said...

தருமி அய்யா,
//நம் கண்ணைத்திறக்க நம் கருத்துக்களுக்கு உரைகல் தேவை//

தலைப்பே அற்புதம் அய்யா. கடவுள்,மதம்,இறைவேதம்(?)போன்ற கண்மூடித்தனமான அடிப்படை நம்பிக்கைகளை சிறுவதிலிருந்தே பதியப்படும் மூளைப்பதிவு. ஆகவே அதை மறுக்க மதரீதியாக மரணதண்டணை மற்றும் மதமுறிவு பயம். மறுமை என்கிற பயம்,சொர்க்கம் என்கிற பேராசை,பிரார்த்தனை+பலியிடல்+தர்மம் என்கிற கையூட்டு,நரகம் என்கிற எதிர்கால தண்டணை போன்ற கடவுள் ரீதியான பயம். இவைகளைக் கடந்து இவர்களால் வெளியேறுதல் என்பது இயலாத காரியம். குர் ஆனைப் படிக்கும் போதே ஒருவித மூளைச்சலவையால் அதைத் தொடுவது முதல் படித்துக்கொண்டிருக்கும் போதும் படித்து முடித்த போதும் சரி அதே சலவையால் பாதிக்கப்பட்டு மயக்கமுறுவதால் இவர்களின் சிந்தனை தாழிடப்படுகிறது. இது ஏன் எப்படி? என்ற கேள்வி தவிர்க்கப்பட்டு அவர்களாகவே முன் வந்து அது அப்படித்தான் என விடை தேடிக்கொள்கிறார்கள். கேள்வியே இங்கு பாவகாரியமாக மாறி இவர்களை முடக்கிவிடுகிறது. எனவே மத நம்பிக்கையாளர்களுக்கு உரைகல் அவசியம் தேவையே,ஆனால் மத வெறியர்களுக்கு?????

மங்கை said...

how unfortunate...mmmm

பெண்ணை அடிமையாக்க என்ன என்ன சாக்கு போக்கு கொல்லனுமோ...ஜஸ்டிஃபிகேஷன் குடுக்கனுமோ எல்லாம் குடுக்கப்படுது..

//நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளீர்கள்//

ம்ம்ம் ஆமாம்...

நானும் இப்படியும் இருக்குமான்னு தேடிப் பார்த்து ஒரு தளத்துல மெலே சொன்ன விஷ்யத்தை படிச்சேன்.. islamtommorow சைட்ல.. பெண்களுக்கான உரிமைகள் பற்றிய ஒரு நீண்ட லிஸ்ட் போட்டிருக்காங்களே அதை ஏன் சொல்லாம விட்டாங்க...

அது மட்டுமில்ல இஸ்லாம் இப்படி ஒரு வழக்கத்தை அனுமதித்தாலும், ஒரு தாரத்துடனே வாழ்வதே சாத்தியம் (வாழ்கிறோம்) என்றும் அவங்களே சொல்லி இருக்காங்களே

yasir said...

//நீங்கள் அநியாயம் செய்யாமலிருக்கச் சுலபமான முறையாகும்//

ஒரு ஆண் அநியாயம் செய்யாமலிருக்க பலதாரம் முறை, அதுவே ஒரு பெண் அநியாயம் செய்யாமலிருக்க என்ன ஏற்பாடு? தரையை பார்த்து நடக்க வேண்டியதுதானா? ஆண்‍ பெண் சமம் எனக் கருதும் எவரும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தத்துவமே சிறந்தது பொருத்தமானது.

yasir said...

அய்யா தருமி அவர்களுக்கு,
//ஆயிஷா என்ற சின்னப்பிள்ளையைக் கல்யாணம் செய்வது அரசியலுக்காக என்பீர்கள்//

அரசியலுக்காகவோ,அன்புக்காகவோ எதுவானாலும் அது அவரவர்களின் சொந்த விருப்பம் அதில் நாம் தலையிடத்தேவையில்லை. அது ஒரு தனி மனிதனாக இருக்கும் வரையில். ஆனால்,கடவுள் தனக்கு ஒரு தூதரை நியமித்த பிறகு தவறு நடக்க அனுமதியளித்த விதம் தவறான அனுகுமுறையாகும். அதன் பிறகு அதாவது மணமுடித்த பிறகு தடைவிதிக்க கட்டளைபிறப்பித்த விதம் அதைவிட தவறானது. முகம்மது நபி ஓர் முன்னுதாரணம் என்பதற்காகவாவது ஆயிஷாவை அவர் மணமுடிக்காமல் மகளாக ஏற்க கட்டளைபிறப்பித்திருந்தால் அனைத்தும் அறிந்தவன் என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும். தவறுகளை முளையிலேயே கிள்ளி எறியாதவன் கடவுளா?

ரோஸ்விக் said...

//கண்ணைத் திறக்க நம் கருத்துக்களுக்கு உரைகல் தேவை//

இதை செயல்படுத்தும் பக்குவம் இன்னும் பலருக்கு வரவில்லை.
சுய ஆய்வு என்பது கூட பலர் செய்துகொள்வதில்லை. தாம் செய்வது சரியென்றும், அதே சரி எனச் சொல்பவர்களை மட்டுமே நண்பர்களாகவும் ஏற்றுக்கொள்ளும் உலகம் தான் இது.
பகுத்து அறி என்பதற்கு அந்த வெண்தாடி வேந்தரையும், கருப்புச்சட்டை கயவர்களையும் மட்டுமே உருவகப்படுத்திக் கொண்டு நிதர்சனங்களை உதாசீனப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

ராஜரத்தினம் said...

//அதிலும் எல்லோருக்கும் 4; எனக்கு மட்டும் அந்தக் கணக்கில்லை என்கிறார் உங்கள் முகமது. ஏனென்று கேட்டால் அல்லாவே உத்தரவு கொடுத்துட்டார்//

அது மட்டுமல்ல. பெண் அடிமை பற்றி பேசுவதாக சொல்லும்போது விதவை மறுமணம் பேசுவார்கள். ஆனால் அது கூட முகமதின் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மனைவியர்கள் மறுமணம் செய்யகூடாதாம்.அதுவும் அல்லா சொல்லிவிட்டாராம்.

குடுகுடுப்பை said...

கும்மி said...
தங்கள் மதத்தில் எவ்வித குறைகளுமே கிடையாது என்று சிறு வயதிலிருந்தே மூளையில் உறையவைத்து வளர்க்கப்பட்டவர்கள். முன்வைக்கப்படும் விமர்சனம் சரியானதா, ஏற்புடையதா என்றெல்லாம் ஆராயும் அளவுக்கு சிந்தனைத் திறன் அற்றவர்கள்.

இவர்களைப் போன்று மத ஊழியம் செய்பவர்களைத் தவிர, மற்றவர்கள் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

இஸ்லாத்தைத் துறக்கும் இளைஞர்களும் இன்று பெருகி வருகின்றனர். அதுவே ஒரு ஆரோக்கியமான மாற்றம்தான்.

எங்கள் குடும்பத்தில் இன்னொருவரும் முழுமையான இறை மறுப்பாளராக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
//
ஆச்சர்யம். எந்த ஒரு மாற்றமும் உள்ளிருந்துதான் வரவேண்டும். கடவுள் மதம் இல்லாமல் வாழும் மனிதர்கள் மிகக்குறைவே. சூபிஸம் போன்ற ஆன்மீக(என் புரிதல்) வழியில் சென்றால் கூட அது பெரிய மாற்றம்தான்.

கோவி.கண்ணன் said...

//அதிலும் எல்லோருக்கும் 4; எனக்கு மட்டும் அந்தக் கணக்கில்லை என்கிறார் உங்கள் முகமது. ஏனென்று கேட்டால் அல்லாவே உத்தரவு கொடுத்துட்டார் என்கிறீர்கள்//

மூன்று மனைவிகளுக்கும் ஒரே நேரத்தில் மாதவிலக்கு வந்தால் என்ன செய்வது என்பதற்காக நாலாவது ஆப்சன் கொடுக்கப்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//இதுவரை நீங்கள் எழுதியவைகளில் இஸ்லாமிய பதிவர்களைத் தவிர வேறு யாரும் வந்து, 'ஆஹா! நீங்கள் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்' என்று கூறியதை நான் பார்க்கவிலை//

பொதுவாகவே அனைத்து மதவாதப் பதிவுகளுக்கு இப்படியான வரவேற்பு தான் கிடைக்கிறது

Post a Comment