Thursday, February 24, 2011

480. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் ... 12

*

நீத்திஷ் குமார் அவர் மாநிலத்தில் ஒரு சட்டம் போட்டிருக்காராம். ஜூ.வி.யில் பார்த்தேன்.
தன் மாநிலத்தில் ஊழலில் அகப்பட்டவர்களின் பெயரிலோ, அண்மை உறவினர் பெயரிலோ புதிய சொத்துக்கள் இருப்பின் அவை கையகப்படுத்தப்படும் என்ற சட்டமாம் அது. கேட்கவே இன்பத் தேனெல்லாம் பாயுதே காதெல்லாம்!

நாடு முழுமைக்கும் இப்படி ஒரு சட்டம் வந்து, அது உண்மையிலேயே ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்ற வழக்கமான ‘நடைமுறை’ மாறி முறையாக நடந்தால் நமக்கு ”Tahirir கனவு” வரவா போகிறது?


* * * *

சி.பி.ஐ. மீது நம் மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை! நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மக்களிடம் எனக்கு ஒரு கேள்வி: இதுவரை சி.பி.ஐ. ஏதாவது ஒரு வழக்கில் வென்று ஏதாவது ஒரு அரசியல்வியாதிக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறதா? அந்தக் காலத்தில் நான்  எழுதியதை வாசித்துப் பாருங்களேன்.

*                              *                              *

யுவன் ராஜா இசை நிகழ்ச்சி நன்றாகத்தான் இருந்தது. எஸ்.பி.பி. வராதது ஒரு முக்கிய குறை. எடிட்டிங், compering இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். இளையராஜா மிக சந்தோஷமாகக் காட்டிக் கொண்டார்; வழக்கத்திற்கு அது விரோதமாக இருந்ததால் ரொம்ப வித்தியாசமா இருந்தது.

விஜய் தொலைபேசி சூப்பர் சிங்கரில் வென்ற அஜேஷ் பாட ஆரம்பித்ததும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து அமோக கைதட்டு; ஆரவாரம். எந்த வேறு பாடகருக்கும் அத்தனை மரியாதை, வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் அஜேஷ் ரொம்ப பிடிக்கும். ஏன் அவருக்கு திரையுலகில் அதிக வாய்ப்பில்லை?

*                                  *                                 *

காரின் முன் கண்ணாடியில் நம் மத அடையாள வசனங்களைக் போடுவது நம்மூரில் ஒரு பெரிய பழக்கம் / வியாதி. மற்ற நாடுகளில் இந்த வழக்கம் உண்டா?

இப்படி மதங்களை wearing on your sleeve எதற்கு? இப்படியெல்லாம் எழுதி வச்சாதான் கடவுள் காப்பாத்துவார் அப்டின்னா காருக்குள்ள நம்ம கண்ணில படுற மாதிரி dash board-ல கூட ஒட்டிக்கலாம். ஆனால் வெளியே ஒட்டுனாதான் கடவுள் கண்ணுக்குத் தெரியுமா? நான் இந்த மதத்தவன் என்று காட்டிக்கொள்ள இந்த ஏற்பாடா? அது தெரிந்து யாருக்கு என்ன ஆகப்போகுது? அல்லது கடவுளின் வார்த்தைகளை உலகுக்கெல்லாம் தெரிவிக்கவா? இதை வாசித்ததும் மக்கள் உடனே உங்கள் மதத்துக்கு மாறி விடுவார்களா?  இந்த வசனங்களுக்கெல்லாம் நான் ஒவ்வொரு அர்த்தம் நினைப்பதுண்டு. முக்கியமா GOD'S GIFT அப்டின்னு போட்டா என்ன அர்த்தம் தெரியுமா? கோவில் உண்டியலை உடைச்சி அதுல வாங்குன வண்டின்னு அர்த்தம்! வேறெப்படி கடவுள் உங்களுக்கு GIFT கொடுக்க முடியும்?

இந்த ‘வியாதி ’ கிறித்துவர்கள் மத்தியில் மிக அதிகம். கார் வாங்குவதற்கு முன் ஸ்டிக்கர் வாங்கிருவாங்க போலும்!

*                                        *                            *

இன்னொரு முக்கியமான விஷயம். ரொம்ப நாளா எழுதணும்னு நினச்சி .. தள்ளிப் போட்ட விஷயம். நக்சலைட்டுகள் பற்றியது. ஏழை பாழைகளுக்கு உதவும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. அதோடு சமுதாயத்தில் நடக்கிற அயோக்கியத்தனமான சாதி வெறி, அரசியல் ஊழல் இந்த இரண்டையும் எதிர்த்து நடக்கும் ஒரு அமைப்பு என்பது என் எண்ணம்; அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.

இப்படி நல்ல எண்ணத்தில் உருவாகும் அமைப்பு ஏன் தேவையில்லாமல் பல உயிர்களை அநியாயமாகக் கொன்று விடுகிறது? என்னிடம் கேட்டால் காவல் நிலையங்களை உடைத்தல்; அங்குள்ள பாவப்பட்ட காவலாளிகளைக் கொல்லுதல் போன்றில்லாமல். பெரிய ஊழல் ஆட்களிடம் தங்கள் கைவரிசையக் காட்டலாமே என்று தோன்றும். அந்த ஆட்கள் பயங்கர பாதுகாப்போடு இருந்தாலும் அவர்களில் அல்லக்கைகளைப் பதம் பார்த்து விட்டு ... அடுத்தது நீதான் என்று ஊழல்காரர்களை நோக்கி கையை நீட்டினாலே நாடு கொஞ்சூண்டாவது திருந்தாதா? நக்சலைட்டுகள் மேல் மக்களிடையே மரியாதை வராதா?  -- இப்படி பல நாட்களாக ஒரு கேள்வி மனதுக்குள். விடை தெரிந்தவர்கள் அறிவூட்டுங்கள்.

*                                            *                                                *

ப்ரு காப்பிக்கு வரும் ஒரு விளம்பரப்படம் பார்த்திருப்பீங்களே! அதில் கல்யாணத்திற்கு முன் காபி போடத்தெரியாத ஒரு பெண் வரும். கணவர் ‘அழகான பெண்’ என்றதும் அந்தப் பெண் / மாடல் ஒரு சிரிப்பு சிரிக்குமே ... கடவுளே!
எப்படி அழகுணர்ச்சியே இல்லாமல் இப்படி ஒரு மாடலைப் போட்டு விளம்பரம் எடுத்தார்கள் என்பது எனக்குள் எழும் கேள்வி.

நம்ம சின்னத் திரை இயக்குனர்களுக்கும் இந்த அழகுணர்ச்சி ரொம்பவே கம்மி போலும். சில ’சகிக்க முடியாத’ முகங்களைத் தங்கள் சீரியலில் போட்டு ரொம்பவே இம்சைப் படுத்துகிறார்கள். தாயே ”மீனாட்சி” ... நீதான் காப்பாத்தணும்!

*                                                *                                          *
16 comments:

ஆனந்தி.. said...

//நீத்திஷ் குமார் அவர் மாநிலத்தில் ஒரு சட்டம் போட்டிருக்காராம். ஜூ.வி.யில் பார்த்தேன்.
தன் மாநிலத்தில் ஊழலில் அகப்பட்டவர்களின் பெயரிலோ, அண்மை உறவினர் பெயரிலோ புதிய சொத்துக்கள் இருப்பின் அவை கையகப்படுத்தப்படும் என்ற சட்டமாம் அது. கேட்கவே இன்பத் தேனெல்லாம் பாயுதே காதெல்லாம்//

ஹீ..ஹீ..இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா என்ன??

//சி.பி.ஐ. மீது நம் மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை! நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மக்களிடம் எனக்கு ஒரு கேள்வி: இதுவரை சி.பி.ஐ. ஏதாவது ஒரு வழக்கில் வென்று ஏதாவது ஒரு அரசியல்வியாதிக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறதா?//

நம்ம நாட்டில் சி.பி.ஐ அப்படிங்கிற போஸ்ட் ஒரு டுபுக்கு போஸ்ட் சார்...:))


//யுவன் ராஜா இசை நிகழ்ச்சி நன்றாகத்தான் இருந்தது. எஸ்.பி.பி. வராதது ஒரு முக்கிய குறை. எடிட்டிங், compering இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். இளையராஜா மிக சந்தோஷமாகக் காட்டிக் கொண்டார்; வழக்கத்திற்கு அது விரோதமாக இருந்ததால் ரொம்ப வித்தியாசமா இருந்தது.//

அற்புதமான இளையராஜாவை இன்னும் நல்லா பயன்படுத்திருக்கலாம்...என்னவோ கொஞ்சம் ஏமாற்றம் தான் தருமி சார்...ராஜா சார் காகவே வெயிட் பண்ணி பார்த்துட்டு இருந்தேன்..அந்த ஆங்கில பாடலில் இருந்து கொஞ்சம் ஏமாற்றம் தான்...ரிஹெர்சல் சரியா பண்ணலையான்னு தெரியல...:((

//எப்படி அழகுணர்ச்சியே இல்லாமல் இப்படி ஒரு மாடலைப் போட்டு விளம்பரம் எடுத்தார்கள் என்பது எனக்குள் எழும் கேள்வி. //

ஹ ஹ...என்னவோ முதலில் எனக்கும் பிடிக்கலை..பட் பார்க்க பார்க்க அதுவும் பிடிச்சு தான் போச்சு...:)))

Indian said...

//இந்த ‘வியாதி ’ கிறித்துவர்கள் மத்தியில் மிக அதிகம். கார் வாங்குவதற்கு முன் ஸ்டிக்கர் வாங்கிருவாங்க போலும்!//

நான் ரசித்த வாசகம் ஒன்று, "My master is a jewish carpenter".

Robin said...

//இந்த ‘வியாதி ’ கிறித்துவர்கள் மத்தியில் மிக அதிகம்//

இந்த 'வியாதி' இங்கிலாந்து நாத்திகர்களுக்கும் உண்டாம்.

சீனு said...

யுவனோட நிகழ்ச்சி எனக்கு பிடிக்கவேயில்லை. ரொம்ப ஓவரா பிலிம். டென்னிஸ் ஸ்டார் ரேஞ்சுக்கு பந்துல ஆட்டோகிராப் போட்டு இவரு பேட்டுல அடிப்பாராம், அவங்க 'ஃபேன்ஸ்' கேட்ச் புடிக்கனுமாம்.

அப்புறம் வந்த ஆடியன்ஸ் எல்லாம் கைய கூட தட்டல. என்னாம் ரீஜன்ட் போல...நம்மள மாதிரி இல்ல :)

//கார் வாங்குவதற்கு முன் ஸ்டிக்கர் வாங்கிருவாங்க போலும்!//

:))

நீங்க சொல்றது உண்மை தான். என் ப்ரெண்டு ஒரு கிரிஸ்டியன். அவன் ஒரு பைக் வாங்கினான். கொஞ்ச நாள் பிறகு திடீரென்று அவன் பைக்குல ஸ்டிக்கர். நாங்களும் என்ன ஏதுனு கேக்கல. (இதுக்கெல்லாம் ஏன்னா கேக்க முடியும்?) அவனே சொன்னான். ஊருக்கு போயிருந்தானாம். அவனோட அண்ணன் திட்டினாராம், ஏன் ஸ்டிக்கர் ஒட்டலைன்னு...அதனால ஒட்டிட்டானாம்.

தருமி said...

ஆனந்தி,
//பார்க்க பார்க்க அதுவும் பிடிச்சு தான் போச்சு...:)))//

’மீனாட்சி’ பார்த்தீங்களா?

நீங்க சொல்ற மாதிரி பழைய பதிவொன்றில் எப்படி ‘அசிங்கமான’ ஆளுக எல்லோரும் பார்க்க பார்க்க அழகா மாறிடுறாங்கன்னு எழுதியிருந்தேன். நல்ல சான்று: ராதிகா !

தருமி said...

சீனு,
//ரொம்ப ஓவரா பிலிம். //

பிலிமே ஓவரா ஆக்குறதுக்குத்தானே!

தருமி said...

இந்தியன்,

//"My master is a jewish carpenter".//

இதுல இதுவேற ஒரு குழப்பம்! மாஸ்டர் ஆசாரியா (carpenter) இல்லை யாதவரா (shepherd) என்பது என் கேள்வி!!

தருமி said...

ராபின்,
//இந்த 'வியாதி' இங்கிலாந்து நாத்திகர்களுக்கும் உண்டாம்.//

நான் வாசித்ததில் பல பேருந்துகளில் காசு கொடுத்து பெரிய பேனர்களை நாத்திகர்கள் வைப்பதாக நினைவு; தங்கள் கார்களிலுமா? அப்படியாயின் நல்ல ரெண்டு சாம்பிள் கொடுங்களேன் .. வச்சுக்கலாமான்னு பார்க்கிறேன்!!

சீனு said...

// ரெண்டு சாம்பிள் கொடுங்களேன் .. வச்சுக்கலாமான்னு பார்க்கிறேன்!!//

http://freshpics.blogspot.com/2007/06/jesus-car.html

சீனு said...

/////
// ரெண்டு சாம்பிள் கொடுங்களேன் .. வச்சுக்கலாமான்னு பார்க்கிறேன்!!//

http://freshpics.blogspot.com/2007/06/jesus-car.html
/////

தருமி சார். நீங்க இதான கேட்டீங்க? இல்லை, நான் தப்பா அனுப்பிட்டேனா?

ஆனந்தி.. said...

//’மீனாட்சி’ பார்த்தீங்களா?//

நம்ம ஊரு மீனாட்சியம்மன் மட்டும் தான் பார்த்திருக்கேன் தருமி சார்:-)

தருமி said...

ஆனந்தி,
‘அந்த’மீனாட்சி பாருங்க. கண்’கொல்லும்’ காட்சி!

தருமி said...

//நீங்க இதான கேட்டீங்க? இல்லை, நான் தப்பா அனுப்பிட்டேனா?//

சீனு,

BORN OK
THE FIRST TIME!

JESUS WAS NOT WHITE!

CHURCHES EAT SOULS

nellai ram said...

kerla Ex.Minister balakrishnan,

nellai ram said...

Kerla Ex.Minister Balakrishnan

Radheyan said...

//நீத்திஷ் குமார் அவர் மாநிலத்தில் ஒரு சட்டம் போட்டிருக்காராம். ஜூ.வி.யில் பார்த்தேன்.
தன் மாநிலத்தில் ஊழலில் அகப்பட்டவர்களின் பெயரிலோ, அண்மை உறவினர் பெயரிலோ புதிய சொத்துக்கள் இருப்பின் அவை கையகப்படுத்தப்படும் என்ற சட்டமாம் அது. கேட்கவே இன்பத் தேனெல்லாம் பாயுதே காதெல்லாம்//

எங்களுக்கு தெரியாதா? இந்தியாவுல ஏன் சொத்து வாங்குறோம்? ஸ்விஸ் வங்கில கணக்கு ஆரம்பிச்சுடுவோம்ல?

Post a Comment