Monday, March 07, 2011

485. சில உலக சினிமாக்கள் ... 3 -- பயணம்

*

சில உலக சினிமாக்கள் என்ற தலைப்பில் ‘பயணம்’ எப்படி வருகிறது என்று ஒரு கேள்வி வருமாயின், அதற்கான பதில்: அப்படத்தில் இருக்கும் ‘உலகத் தரம்’.



----- . ---- (fill up the blanks) போன்ற முட்டாள்தனமான, குப்பைத்தனமான படங்களுக்கு வண்டி வண்டியாக பதிவுலகத்தில் திறனாய்வு செய்துள்ளோம். ஆனால் நல்ல படங்கள் வரும்போது பொதுவாக திறனாய்வு எழுதும் பலரும் மெத்தனமாகவோ, மெளனமாகவோ ஆகிப் போவது போல் எனக்குத் தோன்றுகிறது. இது சரிதானா? ப்யணத்தைப் பற்றி பதிவுகளில் அதிகமாக ஏதும் நான் வாசிக்கவில்லை. என் கண்ணில் படவில்லையா ... இல்லை .. மக்கள் அதிகமாக அதுபற்றி எழுதவில்லையா என்று தெரியவில்லை.

எழுத்து காண்பிக்கும்போது டாப் ஆங்கிள் ஷாட்டுகள். ஒரே குழப்பமாக, அவசரமாக சென்னை வீதிகள் காண்பிக்கப்பட்டு கண்கள் அலைக்கழிக்கப்பட்டு ... என்னடா இது அப்டின்னு நினைக்க ஆரம்பித்த பிறகு ...ஒரு நல்ல படம் விரிகின்றது.

ஒரு காதல், ஒரு குத்துப் பாட்டு, 50 பேரோடு ஒரு டூயட் பாட்டு, காமெடி ட்ராக், அமானுஷ்ய கதாநாயகன், anti-gravitational fight sequences, படா செண்டிமெண்ட், ஒரு flash back - தமிழ்ப்படங்களுக்கு உரித்தான் இவை இல்லாமல் ஒரு படத்தை கொஞ்சம் யோசித்து எடுத்தால் அது நிச்சயம் ஒரு நல்ல படம்தான். அது எளிதாக உலக தரத்தைத் தொட்டு விடுகிறது. நல்ல சான்று: பயணம். நாம் யாருக்கும் குறைச்சலில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு படம். பாட்டு வேண்டாமென நினைத்துக் கொண்டே இருக்கிறோம்; ஆனால் மக்கள் விரும்புவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம் என்று உலக நாயகனும், நம்மூர் திரைப்பட ’மெகா குரு’வும் ஒரு பேட்டியில் கூறியிருந்ததைப் பார்த்த போது கொஞ்சமல்ல நிறையவே எரிச்சலாக இருந்தது. இதோ இப்போது மூன்று படங்கள் -- பயணம் (டைட்டில் பாட்டு மட்டும்), ந,நி, நாய்கள் (இசையே இல்லையாமே!), யுத்தம் செய் (ம.க.கு.பா. வியாதி) மஞ்சள் கலர் குத்துப் பாட்டு வியாதி இல்லாமல் இருந்திருந்தால் அந்த படத்தின் தரமும் கூடியிருக்கும் -- வந்திருக்கின்றன. பயணத்தில் பாட்டு இல்லாததும், மரத்தை சுற்றி நாயகனும் நாயகியும் ஓடாமல் இருந்திருந்தும் படம் நல்ல படமென்ற தரத்தோடு நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தாவது அந்த ‘மெகா’ மனிதர்கள் மாறினால் நன்றாக இருக்கும். (ஆனால் மாற மட்டார்கள் என்பதும் நன்கு தெரியும்.)

இது மாதிரியான படங்களில் “ஓட்டைகள்” இல்லாமல் படம் எடுப்பதற்கு புத்தி நிறைய வேண்டும்.(இயக்குனர் யோசித்து லாஜிக்கலான திரைக்கதை ஓட்டை இல்லாமல் அமைக்க வேண்டும்.) இந்தப் படத்தில் பெரிய ஓட்டைகள் ஏதுமில்லை. பணிப்பெண் மூலமாக செய்தி வருவது, அதை பயணிகள் எல்லோரும் ஒன்றுபோல் புரிந்து கொள்வது, ரகசிய சீட்டு காலுக்கடியில் விழுந்தும் அதை காலணியோடு ஒட்டிக்கொண்டு போவது - இதெல்லாம் கொஞ்சம் ட்ராமாட்டிக் என்றாலும் மன்னித்து விடலாம். மற்றபடி எனக்கு இப்படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள் ஏதும் இல்லை. அதுவே படத்தின் தரத்தை மிகக் கூட்டி விடுகிறது.

மொழி படத்திலேயே ராதா மோகனின் நகைச்சுவை மிக நன்றாக இருந்தன. இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் என்றாலும் நல்ல நகைச்சுவை படம் பூராவும் பரவியிருந்தது. ஆஹா .. அந்த shining star-ம் பக்கத்து சீட் பாலாஜியும் நல்ல ஜோக்குகள். சினிமா ஸ்டார்களை ’போட்டுப் பார்த்தது’ நன்றாக இருந்தது. ஆனால் கடைசி சீனில் shining star தீவிரவாதியுடன் சண்டை போடுவது ஒரு காம்ப்ரமைஸ் என்றே நினைக்கிறேன்; இல்லாமல் இருந்திருக்கலாம்!

spelling mistakes-களோடு பெயர்களை எழுத வைக்கும் ந்யூமராலிஜிஸ்ட், அவருடன் சண்டை போடும் நல்ல மனுஷன் ... அவர்கள் டூயலும் நன்றாக இருந்தது.

யூசுப் கான் பிடிபடும்போதே அவனை ஏன்  கமாண்டோக்கள் உடனே சுட்டுக் கொல்லவில்லை என்பது எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி. பின்னால் நடக்கும் விளைவுகளைப் பார்க்கும் போது அந்தக் கேள்வியின் நியாயம் புரிகின்றது. (கசாப், அப்சல் - இவர்கள் இன்னும் சிறையில். சீக்கிரம் கதையை முடிங்க’ப்பா.  இல்லைன்னா அவன்களுக்கும் ஒரு  ‘பயணம்’ வந்து விடலாம்.)

வசனங்களும் short & sweet. மதவெறியர்களைத் தவிர மற்றவர்கள் எம்மதத்தினராக இருந்தாலும் மனிதப் பண்போடு இருப்பதைக் காண்பிக்கும்போது மனிதமே முக்கியம் என்பது புரிகிறது. ஒரு சின்னக் குழந்தையின் மன இயல்பு மனிதத்திற்கே ஒரு சான்றாகத் தெரிகின்றது. அக்குழந்தைக்கு தன் மொழி பேசும் நெருக்கமான மனிதனை விடவும் மனித நேயம் உள்ள  மருத்துவர்களே மனதில் உயர்ந்து நிற்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண் நடிகரும் ஒரு நாள் தாடி, மூன்றாம் நாள் தாடி, ஐந்தாம் நாள் தாடிகளோடு சரியாக வருவது ஒரு புதிய நல்ல விஷயம். சில ஆங்கிலப்படங்களில் கூட இந்த உன்னிப்பான கவனம் இல்லாமல் பார்த்ததுண்டு.

அரசியல்வாதிகளை புடம் போடுவது நன்றாகவே அமைந்துள்ளன. நாட்டை விட, மக்களை விட வரப்போகும் தேர்தல்தான் முக்கியம் என்ற அவர்கள் கொள்கை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நல்ல படம். ராதா மோகன், பிரகாஷ்ராஜ், இருவருக்கும் நன்றி.

*   *    *

பிடித்த தமிழ் இயக்குனர் யாரென்றால் இதுவ்ரை, ‘பாலா’ என்பதாகத்தான் பதில் இருந்து வந்தது. இனி ராதா மோகனின் பெயரும் சேர்ந்தே வரும். அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் -- இது தொடருட்டும். (பிரகாஷ் ராஜின் முதல் தயாரிப்பும் எனக்குப் பிடித்தது. அதுவும் வழக்கமான தமிழ் சினிமா விஷயங்கள் இல்லாத நல்ல படம். ஆனால் தலைப்பு, இயக்குனர் எல்லாம் மறந்து போச்சு. நினைவில் நிற்பவர்கள் தகவல்கள் தரலாமே.)

*    *    *

திரையரங்கில் ஓரளவு நல்ல கூட்டம். 85 ரூபாய் அனுமதி முடிந்து போயிருந்தது. அடுத்தது  ரூபாய் 65.
படம் முடிந்து வெளியே வர, வண்டியை எடுக்க  20 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது.
திரையரங்கில் இது ஒரு புது அனுபவம்.
நாலைந்து நாள் முன்பு ’யுத்தம் செய்’ பார்க்கப் போனபோது 25 ஆட்கள் மட்டும் திரையரங்கில்.

*    *    *






7 comments:

தமிழ் உதயம் said...

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வந்த முதல், நீங்கள் குறிப்பிடம் திரைப்படம் "நாம்". முற்றிலும் புதுமுகங்களே. மிக சிறந்த வெற்றி பெறாத படம்.

ஜெய்சக்திராமன் said...

அருமையான விமர்சனம் அய்யா... ரொம்ப சின்ன விஷயங்களையும் உன்னிப்பா கவனிச்சு எழுதியிருக்கீங்க... (உ.ம்: நடிகர்களின் தாடி...)

Senthil said...

Thanks for yr gud review!!!

senthil, doha

அமர பாரதி said...

தருமி சார், நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நிக்கோலஸ் கேஜ் நடித்த CONAIR படம் பார்த்தீர்களா? எனக்கு மிகவும் பிடித்த படம். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

தருமி said...

தமிழ் உதயம்,
இயக்குனர் யாரென்று பார்க்கணும். தகவலுக்கு நன்றி

தருமி said...

ஜெய்சக்திராமன்,
செந்தில்,
.......... நன்றி

தருமி said...

அமரபாரதி]
கேஜ் பிடிக்கும். இந்தப் படம் பார்த்தை நினைவில்லை. கா.பா.விடம் சொல்லி பார்த்து விடு(வோம்)வேன்.

Post a Comment