Sunday, April 10, 2011

492. கல்மாதி .. ஆ.ராசா ... ஹஸாரே ... எல்லோருக்கும் மிக்க நன்றி

*

எப்போதும் நம்பர் 2 என்ற நிலையில் இருந்த அமைச்சர் நெடுஞ்செழியன் ஒரு முறை பொதுக்கூட்டம் ஒன்றில் வெளிப்படையாக ஒன்று கூறினார்.
அப்போது அவர் அதிமுகவில் இரண்டாமிடத்தில் அமைச்சர். அவர் மீதும், ‘மம்மி’ மீதும் அடுத்து வந்த திமுக அரசு சில ஊழல் வழக்குகளைப் போட்டிருந்தது. அப்போதுதான் அரசு வழக்கை எதிர்க்க புத்தம் புது உத்திகளை நமது அமைச்சர்கள் கையாள ஆரம்பித்திருந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு நெஞ்சு வலி வரும்; மருத்துவ மனைக்குப் போய் விடுவார்கள்.  அத்தனை வழக்கு விவகாரங்களையும் தமிழில் கேட்பார்கள். வழக்கு என்னவென்றே தெரியாமல் போய்விடும். இப்படியாக வழக்குகள் இழுத்துக் கொண்டே போகும். அதை வைத்து நெடுஞ்செழியன், ‘ இந்த வழக்குகளையெல்லாம் எப்படி இழுத்துக் கொண்டே போகணும்னு எங்களுக்குத் தெரியும். இப்படியே இழுத்துக்கொண்டு போனால் அடுத்த எங்க ஆட்சி வந்திரும். அப்போ வழக்கை ஒண்ணும் இல்லாம ஆக்கிருவோம். அதையும் தாண்டியும் வழக்குகள் போய்க்கிட்டே இருக்கும். இழுக்குற இழுவையில் யார் மேல கேஸ் போட்டாங்களோ அவங்க ஆயிசே முடிஞ்சிரும்’ அப்டின்னார். பொன்னான வார்த்தைகள். அவர் கதை கூட அப்படித்தான் முடிஞ்சிது. அவர் கேஸ் முடியிறதுக்குள்ள அவர் முடிஞ்சி போய் அதனால் கேஸும் முடிஞ்சி போச்சு. போபர்ஸ் கேசும் அப்படியே. standard statement ஒண்ணு வச்சிருப்பாங்க: ‘சட்டம் அதன் வேலையை செய்யும்’ அப்டின்னு சொல்லிக்கிட்டு கை கழுவி விடுவாங்க.

இதுதான் நம்ம ஊர்ல உள்ள ஊழல் வழக்குகள்.அப்படியே வழக்கு முடிஞ்சாலும், நம்ம தலைவருக்கு இசகு பிசகா தீர்ப்பு வந்தால் நாம அப்படியே ஒரு பஸ்ஸை எரிச்சிருவோம். எத்தனை பேர் செத்தால் நமக்கென்ன? பத்திரிகை அலுவலகமே எரிஞ்சு மூணுபேரு செத்தாங்க. நிறைய காட்சிகள் வீடியோவில் வந்தது. காவல் துறை அதிகாரி ஓரமா நின்னு வேடிக்கை பார்த்ததுகூட வீடியோவில் இருக்கும். ஆனால் வழக்கு ஒண்ணும் ஆகாது. அடிச்சிக்க்ட்டவங்க மாமா, மாப்ளேன்னு ஒண்ணா நிப்பாங்க; செத்தவன் செத்தததுதான்.

இப்படியே நிறைய பார்த்துப் பழகிட்டோம். ஊழல் இல்லா அரசியல்வாதி, அதிகாரிகளைப் பார்த்தா நாமே அவர்களை ’பாவம்போல்’ பார்க்கப் பழகிட்டோம். இதுதான் விதி அப்டின்னு ஒரு நியாயப்படுத்துதல். நம்மால் என்ன பண்ண முடியும் அப்டின்ற ஒரு ஆதங்கம். காலம் முடிஞ்சி போன குழந்தைகளுக்கான மருந்தை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கிய மனசாட்சி கொஞ்சமும் இல்லாத I.A.S. அதிகாரிகள் சம்பாதித்த பணத்தோடு ஓய்வு பெற்ற காட்சிகள் நம் நாட்டில் நடந்தது. நாமும் எல்லாமும் மரத்துப் போய் ’இதுதான் இன்றைய நடைமுறை’ என்ற தத்துவத்தோடு இருந்து வந்தோம் பல காலமாக.

ஸ்விஸ் வங்கிகளில் லட்சக்கணக்கான கோடிகளில் நம் நாட்டுப் பணம் தூங்குதாம். அதைவைத்து பல ஆண்டுகளுக்கு பல திட்டங்கள் நிறைவேற்றலாம். எத்தனையோ ஆண்டுகளுக்கு வரியில்லாமல் நம் நாட்டு பட்ஜெட்டை திட்டமிடலாம் என்றார்கள். ஆனால் அதை எடுக்க எந்த கட்சியும் மெனக் கெடவுமில்லை. நாமும் அதையும் வழக்கம் போல் ஏற்றுக் கொண்டோம்.

ஆனாலும் இந்த மாதிரி மரத்துப் போன மனசுக்குக் கூட ஒரு பெரிய ஷாக் சமீபத்தில் வந்தது. Commonwealth Games - CWG - நெருங்கி வந்தது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்பது போல் நெருங்கி வந்த போது கட்டிய இடங்கள் இடிந்தன. ஊடகங்கள் பல படங்களை வெளியிட்டன. நமது நாடே ஒரு அழுக்கு நாடு என்ற முறையில் நமக்கே பழகியிருந்தாலும், நமக்கும் அதிர்ச்சி தரக்கூடிய அளவு மோசமான நிலை. அதே போல் செய்த செலவு மற்ற நாடுகளில் நடந்த இந்த போட்டிக்கு ஆன செலவுகளை விட மிக மிகப் பல மடங்கு அதிகமாக செலவு செய்யப்பட்டிருந்தது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. கேவலமாக உலகத்துக்கு முன் நம் நாடு நின்றது மரத்துப் போன நமக்கும் கூட அதிக அதிர்ச்சியளித்தது. அதிர்ச்சியளித்த கல்மாடி & கோ- விற்கு நம் நன்றி.

அடுத்து வந்தது ஆள் முழுங்கி 2G ஊழல். நடந்த ஊழலை எழுதிப் பார்க்கக்கூட நமக்குத் தெரியவில்லை. எத்தனை பூஜ்யங்கள் போடணும்னு தெரியவில்லை. இதிலும் உள்ள கொடூரம் .. பாகிஸ்தான், சீனா நாட்டு அதிகார மையங்களுக்கு நெருங்கிய கம்பெனிகளுக்கே நம் தொலைபேசித் தொடர்புகளைத் தாரை வார்த்திருக்கிறோம். இரட்டைச் சதி. காசு அடிக்கும்போது இந்த ‘தர்மங்களை’யாவது பாவி மனுஷங்க பார்த்திருக்கலாம். யார் காசு கொடுத்தாலும் இப்படியா தாழ் போட்டுக் கொள்வார்கள் . அரசியல்வாதிக்குத் தான் எந்த அச்சம் கூச்சம் இல்லாவிட்டாலும் கூடவே இருந்து ஒத்து ஊதும் நம் அதிகாரிகளுக்குமா இந்த தவறு புரியவில்லை? யாரை சொல்லி நோவது? இந்த அளவு நம் தொலைபேசித் தொடர்புகளை அயல்நாட்டினருக்கு அடகு வைத்த பின்னும், எந்த அரசும், எந்த துறையும் ஏதும் செய்ததாக நினைவில்லை. எல்லோருக்கும் அவரவர் வேலை தான் முக்கியம் போலும். நாமும் எப்போதும் போல் அமைதி காத்தோம். ஆனால் மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்தது இந்த 2G ஊழல். இதற்கு நம்ம ஆளு ஆ.ராசாவிற்கு மிக்க நன்றி.

மரத்துப் போன மனசு வச்சிருக்கிற நமக்கே இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பின்னும் அரசியலில் எந்தப் பெரும் மாற்றமும் நடப்பதாகத் தெரியவில்லை. இதுவும் அடுத்த ஒரு ஊழல் ..”இதுவும் கடந்து போகும்” என்ற தத்துவம்தான் நமக்கு மீதி என்ற நிலையில் இருந்த போது நடந்த பெரும் அதிசயம் அன்னா ஹஸாரே ... அவருக்குப் பின்னும் பெரும் மக்கள் திரள். நம் நாட்டு மக்களைப் போன்ற பொறுமைசாலிகள் உலகில் எங்கேனும் உளரோ என்ற கேள்வியைத் தூர தூக்கி எறிந்து அவர் பின்னால் பலரும் நின்றது ஒரு பெரிய, புதிய இந்திய அதிசயம்.

அரசு ஆணையாக இத்திட்டம் வந்து விட்டது. 5 + 5 என்றும் முடிவாகிவிட்டது. பல ஆண்டுகளாகத் தூங்கிய திட்டம் எழுந்து உட்கார்ந்துள்ளது. ஆனாலும் எல்லாம் முடிந்து விடவில்லை. 33% பெண்களுக்கு என்று ஒரு திட்டம் .. பல ஆண்டுகளாகத் தூக்கம். அவ்வப்போது முகத்தில் நீரடிப்பது போல் மத்திய அரசு அதைப் பற்றிப் பேசும் .. பின் வழக்கமான தூக்கம். அடுத்த தேர்தல் வரும்போது அதைப் பற்றி மீண்டும் பேசுவார்கள். இதே போல் இத்திட்டமும் இருக்குமா? சட்டதிட்டங்கள் இடுவார்கள்; ஆனால் அது மத்திய அரசால் ஆணையாக்க நம் அரசியல்வாதிகள் விடுவார்களா? எல்லா M.P. களுக்கும் சம்பள உயர்வென்றால் சில நிமிடத்துளிகளில் அந்த சட்டம் ஏற்கப்பட்டு, ஆணையாகி விடும்; ஆனால் இந்தச் சட்டத்திற்கு இந்த விதி உண்டா? இல்லை.. மேலும் பல போராட்டங்கள் மூலமாகத்தான் இத்திட்டம் கொண்டு வரப் படுமா? தெரியவில்லை. எனினும் இப்படி ஒரு உணர்வை இந்திய மக்கள் மனதில் தோன்றக் காரணமான அன்னா ஹஸாரேக்கு  நன்றி.

நமத்துப் போன வெடியில் முதல் திரியை அவர் வைத்து விட்டார்.  இனியாவது நாமும் இப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, நினைத்ததைச் சாதிக்க தைரியம் கொள்ள வேண்டும்.  இச்சட்டம் நடக்கும் .. நடக்க வைக்க வேண்டும். இதையாவது நாம் செய்வோமா?




9 comments:

ராஜ நடராஜன் said...

தருமி ஐயா!ஹசாரே வடமாநிலங்களுக்கும்,தமிழகத்தில் உங்களை மாதிரி இண்ட்லெக்சுவலுக்கு மட்டுமே தெரிந்தவர் எனபதை தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள் மூடி மறைப்பிலும்,ஊழல்களை பின் தள்ளி விட்ட வடிவேலின் பிரச்சாரத்திலும் வெளிப்படுகிறது.

இலவசக் கணினிகளாவது இணையத்தையும்,மக்களையும் இணைக்குமா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஆகஸ்ட் 15 தெரியும்.

Thekkikattan|தெகா said...

ஸ்விஸ் வங்கிகளில் லட்சக்கணக்கான கோடிகளில் நம் நாட்டுப் பணம் தூங்குதாம். //

சமீபத்திய கணக்குப்படி 1.4 ட்ரில்லியன் டாலர்ஸாம். அடே எஞ்சாமீயோவ்! இதெல்லாம் எப்ப ஊருக்கு கொண்டாந்து படிச்சிட்டு வெளிய வர்ற பூரா பயலுகளுக்கும் வேல கொடுக்கப் போறாய்ங்க.

இருங்க அன்னா ஹஸாரே சம்பந்தமா தனி பின்னூட்டத்தில வாரேன்.

Thekkikattan|தெகா said...

நம்ம தேசத்தை ஒரு மரம் என்று வைத்துக் கொண்டால் அதில் வேரிலிருந்து உச்சாணிக் கொம்பு வரைக்கும் நீக்கமற நிரைந்திருக்கிறது, ஊழலும் லஞ்சமும்.

இந்த நவீன இந்தியன் தாத்தாவிற்கு பின்னால் கூடிய கூட்டம் வித்தியாசமானது. அவர்கள் சேலத்தில் உள்ள அங்கம்மாள் காலனி மக்களைப் போன்றவர்களிடத்திலிருந்து மிக தூரத்தில் துண்டாக வாழ்ந்து வருபவர்கள். எப்பொழுதாவது பூமியில் கால் பதித்து இங்கும் என்ன நடக்கிறது என்று கவனம் செலுத்த முற்படும் இந்த கூட்டத்திற்கு முறையான தகவலை இந்தியன் தாத்தா கூடுதல் தகவலாக கொடுத்திருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

நான்கு நாட்கள் தேசிய ஊடகங்களின் கவரேஜ் உடன் இருந்தவருக்கு இந்த மேலோட்டமாக செய்தி மேயும் இளைஞர்களுக்கு எத்தனையோ விசயங்களை எடுத்து கூறி இருக்கலாமே. உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா வெறும் வாட்ச்மேன் வேல பார்த்ததிற்கு கிடைச்ச டிப்ஸ்தான் அந்த ஊழல் பணம். அதே சமயத்தில் அந்த ஓப்பந்தத்தை பெற தெரிந்தே ஊக்குவித்த டாடா, மிட்டல், அம்பானிகளும் அதனை விட பெரிய திருடர்கள் என்று ஏன் மக்களுக்கு தெரிய படுத்தவில்லை? இது வெகுஜன் ஊடகங்கள் அப்பட்டமாக மக்களுக்கு தெரியபடுத்தாத விசயம்தானே??

Thekkikattan|தெகா said...

எனவே விசயம் அப்படியாக இருக்கும் பொழுது ஊழலின் வேர்களைத் தேடுவோம். இது போன்ற தொழில் அதிபர்கள் காலம் காலமாக இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு ஆற்றிவருபவர்கள் அவர்களுக்கென்றும் பொறுப்பு கிடையாதா?

அன்னா, நோயின் மூலத்தையும் விளக்கி இருக்க வேண்டும், க்ரிக்கெட் ஸ்கோரிலியே மோட்சத்தை காணும் இளைஞர்களுக்கு மத்தியில் இத்தனை கவனத்தை பெற்றவர் என்ற பெருமைக்கு இடையில். A man with such a caliber, honesty, integrity has a bigger chance to reach wider and touch human souls. Thereby, I do expect he should be well informed pretty much more on, what is actually going on in and around the country.

இங்கு அவரை வைத்து நமது அரசியல் பெருச்சாலிகள் குளிர் காய்கிறதோ என்ற சிறிய/பெரிய வருத்தம்.

ப.கந்தசாமி said...

நாங்க எல்லாம் யாரு? கடப்பாரையையே முழுங்கிட்டு ஏப்பம் உடுவோமில்ல. இதெல்லாம் ஜுஜூபி. இதப்போல எத்தன பேரப் பாத்தாச்சு?

saarvaakan said...

அன்ன ஹசாரே உண்ணவிரதம் இருந்து லோக்பால் சட்டத்தில் சில சாரம்சங்களை சேர்க்க ,அந்த அமைப்பு குழுவில் சிலர் இடம் பெறுவது என்பதை சாதித்தர்ர் என்று கொள்ளலாம்.

அவருக்கு கிடைத்த ஊடகங்களின் ஆதரவு இது போன்ற எல்லாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

நமது அரசியல்வாதிகளின் ஊழலுக்கு ,இது பயன் தருமா இல்லையா என்பதை செயல்முறையில்தான் பார்க்க வேண்டும்.

ஆனந்தி.. said...

//நமத்துப் போன வெடியில் முதல் திரியை அவர் வைத்து விட்டார்.//
அப்போ...அந்த வெடிய புஸ் ஆக்கிடுவாங்க...அல்லது அந்த வெடியவே பத்த வச்சவங்களுக்கு திருப்பி விட்ருவாங்க...பார்ப்போம்...:)))

suvanappiriyan said...

//உண்மையான மக்கள் போராட்டம் வெடிக்கக்கூடிய சமயங்களில் போலியாய் ஒரு போராட்டத்தை நடத்துவார்கள். பின் அந்த போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளும். உடனே மக்களுக்கு எல்லா உரிமையும் கிடைத்துவிட்டதாக மற்ற பகுதிகளில் உள்ள மக்களை நம்பவைத்துவிட்டு பிரச்சினையில் சிக்கும் மக்களை அம்போ என விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதுதான் பெரும்பான்மை Non governmental Organisationகளுடைய பிரதான வேலை. இவர்களால் ஏமாற்றப்பட்டோ, அல்லது இவர்களுடன் சேர்ந்தோ அன்னா ஹஜாரே போன்றவர்கள் அவ்வப்போது உதிப்பார்கள். இந்தமுறை காங்கிரசு, தான் இழந்த மானத்தை மீட்க, அன்னா ஹஜாரேவை ஊறுகாய் ஆக்கியுள்ளது! இவர்கள் வாங்கிய கூலிக்கும் அதிகமாக வேலையைப் பார்த்துவிடுவதால் 11 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரொம் ஷர்மீளா போன்ற உண்மையான போராளிகள் மக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.//

//அப்துல் கலாம் எப்படி பாஜகவிற்கு பயன்பட்டாரோ, அதேபோல் காங்கிரசுக்கு ஒரு அன்னா ஹஜாரே.//

ஒரு வலைப்பூவில் படித்தது.

Post a Comment