Friday, September 09, 2011

528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம்”

*

யார் சொன்னது தொலைக்காட்சியில் நீள்தொடர்கள் பார்ப்பது தப்பு என்று. எவ்வளவு அறிவு பூர்வமான காட்சி ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். ‘தங்கம்’ அப்டின்னு ஒரு சீரியல். விஜயகுமார் தன்  மகள் கூட போட்ட சண்டையிலிருந்து கையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு நடிப்பாரே அந்த சீரியல்தான். அதில் வரும் வில்லன் தன்னை சிவாஜியின் தத்துப்புத்திரன் மாதிரி நடிப்பாரே அதே சீரியல்தான். கதாநாயகனும் கதாநாயகியும் I.A.S., TNPSC I GROUP-ல் தேர்வாகி, சொந்த ஊரிலேயே கலெக்டரும், உதவி கலெக்டராகவும் இருப்பாங்களே .. அதே சீரியல்தான்.

8.30-க்கு U.S. OPEN நடக்குமே பார்த்து விடலாமேன்னு உட்கார்ந்தா அங்கே தடிமாடுகள் சண்டை போடுமே அந்த WWW நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மாற்றி மாற்றி channel மேயும் போது தங்கம் வந்தது. அறிவுப்பசிக்கு நல்ல தீனி போட்டது. அதாவது எல்லை அம்மன் .. எல்லை அம்மன் என்று ஒரு தெய்வம். திராவிட தெய்வம். ஏன்னா நல்லா கருப்பா மூக்கும் முழியுமா இருந்தது. அதுக்கு முன்னால் ஒரு சீன். ஒரு பெண் எல்லை அம்மன் மேல் மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுகிறாள். அடுத்து நம்ம கலெக்டர் அய்யா பூசுறார். உதவி கலெக்டரம்மாவும், அவுக அப்பா கையில் கட்டோடு நம்ம வி.குமாரய்யாவும் விட்னெஸ் பண்றாங்க. தத்துவம் என்னன்னு தங்க்ஸ் கிட்ட கேட்டேன். யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் அப்டின்னாங்க. சரி என்ன ஆகுதுன்னு பர்த்ருவோம்னு உக்காந்தேன். ஒருவேளை அம்மன் தலையில இருந்து ஒரு பூ கீழே விழுந்து கலெக்கடரய்யாவைக் காப்பாதிருமோன்னு பார்த்தான்; பூ விழவில்லை.  அடுத்து, அந்த வில்லியம்மா மிளகாய் பூசும்போது தட்டு கீழே விழுந்து காட்டிக் கொடுத்துருமோன்னு பார்த்தேன்; நடக்கவில்லை. பயங்கர சஸ்பென்ஸ். இதில எனக்கு இன்னும் ஒரு பயம்.... எங்கே தங்க்ஸ் நம்மளையும் எல்லை அம்மனிடம் கூட்டிட்டு போய்டுவாங்களோன்னு நினச்சி பயந்துகிட்டு இருந்தேன்.  நல்ல வேளைன்னு தோணுச்சி ... ஏன்னா எல்லை அம்மன் ஒண்ணுமே கண்டுக்கலை. சரி .. சீரியல் டைரடக்கர் ஒரு நல்ல பகுத்தறிவுவாதக் கொள்கையைக் கொண்டு வந்துட்டார்  கடவுள் இப்படியெல்லாம் டபக்குன்னு வந்து ரிசல்ட் சொல்லாது அப்டின்னு புரட்சிகரமா சொல்லப் போறார்னு நினச்சேன். ஆனா டைரடக்கர் கதையில் ஒரு ட்விஸ்ட் கொடுத்துர்ரார்.   நம்ம நாட்டைமை வி.குமார் ஒரு எக்ஸ்ட்ரா ரூல் கொண்டு வந்திர்ரார். பாவம் போல மீசை வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்த பூசாரியைப் பார்த்து ஒரு கட்டளை கொடுக்கிறார். ( ஒரு பூசாரிக்குப் பதில் அங்கே ஒரு ஆரிய சாமியார் நின்னுக்கிட்டு இருந்தா அப்படியெல்லாம் நாட்டாமை ஒரு கட்டளை கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு சாமி  இருந்தால் அவர் சொல்றதை மக்கள் எல்லோரும் கேட்டுக்குவாங்க .. இல்ல?  இங்கே நாட்டாமை சொல்றதை பூசாரி உடனே கேட்டுக்கிறார்.) கேட்டுக்கிட்ட பூசாரி ஒரு சோலோ பெர்மான்ஸ் கொடுக்கிறார். சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார். அதென்னவோ தினகரன் கூப்பிட்டா ஜீசஸ் வந்திர்ரார். (நான் பொய்யெல்லாம் சொல்லலை ... வேணும்னா இந்தப் பதிவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.  ) அதே மாதிரி இங்கேயும் பூசாரி கூப்பிட்டதும் எல்லையம்மன் அவரிடம் இறங்கி வந்திருது. எல்லையம்மனுக்கு யார் பொய் சொல்றாங்க .. யாரு உண்மை சொல்றாங்கன்னு உடனே டிசைட் பண்ண முடியவில்லை; பாவம்!  டிசைட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் வேண்டியதிருந்திருக்கு. அதைப் பூசாரிட்ட சொல்லிட்டு ‘ஆறு மாசம்’ டைம் கேட்டுட்டு, படக்குன்னு சாமி மேலே போய்ருது; பூசாரி சடார்னு தரையில உழுந்திர்ரார். (இதுக்குத்தான் தினகரன் நல்ல சோபாவில் உக்காந்திருக்கார் போலும்! கீழே விழுந்தாலும் அடி படாதே.)

ஆக தெய்வம் நின்னு கொல்லும் என்கிற தத்துவத்தைக் காண்பிக்கத்தான் இந்த டைரடக்கர் இந்த சீனை எடுத்திருப்பார் போலும்.

ரிசல்ட் என்னாகுமோன்னு தெரிஞ்சிக்க ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும். அப்ப சாமி உண்மையைச் சொல்லிடும்னு நினைக்கிறேன் .... பாத்துட்டு உங்ககிட்ட வந்து சொல்றேன்.


*
எனக்குப் பிடிக்காத Andy Murray முதல் செட்ல 3 : 4 அப்டின்னு டவுன்ல நிக்கிறார்.

*
17 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா!!!!!!!!!!!
இது நம்பிக்கை.அதுவும் அறிவியல்,தத்துவ ரீதியான் நம்பிக்கை.
பாருங்கள்
/யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் /

ஆஹா அறிவியல்!!!!!!!!
பொய் சொல்லுபவர்களை எளிதாக கண்டுபிடிக்கும் முறை!!!!!!!

Lie detector
_____________

/சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார்./
இது ஏன் எனில் தத்துவம்!!!!!!!!
ஆடத் தெரியாத கடவுளை ஏற்க முடியாது: தத்துவ அறிஞர் நீட்சே

/என்னாகுமோன்னு ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும்/

நீங்க ஐன்ஸ்டின் சார்பியல் தத்துவப் படி யோசிக்கணும்.உங்களுக்கு ஆறு மாதம் எனில் தொலைக்காட்சி தொடரில் உள்ளவர்களுக்கு எவ்வளவு காலம்?
அதனால் இது பொருந்தாது.

ஹா ஹா ஹா மதத்தில் அறிவியல் என்று நிரூபித்து விட்டோம்லே!!!!!!!!!

என்ன செய்வது ச‌கவாசம்.நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்!!!!!!!!!

நன்றி

Philosophy Prabhakaran said...

நீங்கள் எல்லா மதங்களையும் பாரபட்சம் பார்க்காமல் பிரித்து மேய்வது உங்கள் மீதான மதிப்பை கூட்டுகிறது...

SURYAJEEVA said...

நெடுந்தொடர் பார்க்கும் தண்டனைக்கு நான் உள்ளாகுவது இல்லை என்பதால் கருத்து சொல்ல முடியவில்லை.. ஆமா அந்த தண்டனை உங்களுக்கு ஏன் கிடைச்சுது?

தருமி said...

//நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்!!!!!!!!!//

நெலம ...!

தருமி said...

நன்றி Philosophy Prabhakaran

தருமி said...

suryajeeva
சீரியல் பார்க்காம இருக்கீங்களா? எப்படிங்க அது? சீரியல் பார்க்கிறது திருமணம் மாதிரி - unavoidable evil - இல்லியா? வீட்லேயும் பார்க்க மாட்டாங்களோ ..?

அ. வேல்முருகன் said...

எந்த சாமி நேரில் வரும் என்று நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை தரிசனம் கிடைக்க வில்லை. சொள்ளமாட சாமி ஆட்டு ரத்தம் குடிக்கையில் சாராய வாசனையும் சேர்ந்து வரும்.

நேற்று கூட மயிலை இரயில் நிலையம் அருகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஊர்வலம் வந்தனர். ஆம் கரகம், அலகு குத்தி, வாயில், முதுகில்,கையில் என துளையிட்டு தங்களை வருத்தி கடவுளை தேடுகின்றனர்.

தருமி said...

வேல்முருகன்,
அலகு குத்துவது, நெருப்பில் நடப்பது பார்த்திருக்கிறேன். என்ன உளவியலோ தெரியவில்லை. பார்க்கவே பயங்கரம் ... அம்புட்டு பக்தி!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆறுமாசம் டைம் வேணுமாமா.. ம்.. விசாரணைக்கமிசன் வைப்பாங்களோ..
சீரியலில் ஆறுமாசம்ன்னா நிஜத்துலயும் ஆறுமாசமா.. என்ன நீங்க அவங்க கணக்கு புரியாம இருக்க்கீங்க :)

தருமி said...

முத்துலெட்சுமி/muthuletchumi,

//விசாரணைக்கமிசன் வைப்பாங்களோ..//

2Gக்கு C.B.I., TRAI, CWG இப்படி என்னென்னமோ சொல்லி ஒரு கழுத்தறுப்பு நடக்குதே அதே மாதிரியா ...?

//சீரியலில் ஆறுமாசம்ன்னா நிஜத்துலயும் ஆறுமாசமா.//

அதான ... அது இன்னும் 5 ஆண்டுகழித்து வரலாமோ?

Anonymous said...

டைட்டில்-ஐ பார்த்தவுடன், நான் கூட யார் அந்த பகுத்தறியும் பகலவன் டைரக்டர் என்று யோசித்தேன். அப்படியும் அமைந்தால் எந்த சேனல்னு யோசித்தேன். கடைசீல கவுதுடீன்களே.

naren said...

சார்,

கொஞ்சம் நைட் பதினொறு மணிக்கு மேல் தொலைக்காட்சிகளிலெல்லாம் என்ன காட்டுகிறார்க்ள் என்பதை பார்க்கவும்.

இப்பொழுது இந்த கிராம பூசாரிகளையெல்லாம் இந்த ஆரிய சாமியார்கள் தங்கள் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். வருடா வருடம் அவர்கள் நடத்தும் மாநாடு பிரசித்தம். ”தாத்தா”வே போன வருடத்தில் அவர்கள் செய்த மணியோசையில் கலங்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எல்லை அம்மன் அருளால் உங்களுக்கு பிடிக்காத andy murray டவுன் இருந்தார் என்பதும் கவனிக்கதக்க விஷயம். u.s. open ல் யார் வெற்றிப் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறு எல்லை அம்மனிடம் வேண்டி நேர்த்தி கடன் செலுத்துங்கள்.

Anonymous said...

உங்கள் அனைவரின் மீதும் ஐம்பதாயிரம் ஒளிவருட தொலைவில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக (என்ன அந்த சாந்தியும் சமாதானமும் உங்களிடம் வந்து சேர்வதற்கு கொஞ்சம் நேரமாகும்)

கார்பன் கூட்டாளி பதிவர் தோண்டித்தோண்டி எடுத்த அல்லாஹ்வின் அருமை பெருமைகளை விளக்கி நானும் ஒரு ஆதரவு பதிவு எழுதியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க கோருகிறேன்
அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி


யா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

I strongly object these programs.Instead of bringing away from the darkness these types of programs add fuel to the fire.And the worst part of it is that the villager, who asserts that Gods are under his control tells 101 cock and bull stories.The pujari goes to to extent of threatening everyone in the name of god . All the villagers enjoy such idiocy as they have lot of leisure time and nothing else to do.I have been to villages and try to educate them but they try to outwit me and want to prove that they are right.Can't change them at all.
karthik+amma

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

தருமி said...

sivamjothi28

எங்கள் ஊரிலுள்ள சத்ய சபை பற்றி எனக்கு ஒரு அனுபவம் உண்டு. ஒரு வேளை அதைக்கூட ஒரு பதிவாகப் போடலாம் - விரைவில். போட்டால் தகவல் கொடுக்கிறேன்.

தருமி said...

//I strongly object these programs.Instead of bringing away from the darkness these types of programs add fuel to the fire//

கேள்வி கேட்க யாருமில்லை. முட்டாள்தனம் கொடிகட்டிப் பிறக்கிறது.

Post a Comment